Monday, June 10, 2019


இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (5)
 

அகில இந்திய பா..-வின் 'அடையாள அரசியல்' வெற்றியில், தமிழ்நாடு இடம் பெறாதது ஏன்?



கடந்த பாராளுமன்ற தேர்தலில், மோடியைப் பிரதமராக முன் நிறுத்தி, எவ்வாறு பா.. பிரமிக்க வைக்கும் வகையில் வெற்றி பெற்றது?

என்பது தொடர்பான ஆய்வுகளில், கீழ்வரும் விடையானது எனது கவனத்தை ஈர்த்தது.

உலக அளவில் 'அடையாள அரசியல்' (Identity Politics) பெற்று வரும் எழுச்சி காரணமாக;

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி போன்று உலக அளவில் உள்ள பெரிய கட்சிகள் எல்லாம் தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் போக்குகள் வெளிப்பட்டு வருகின்றன. (The fundamental issue facing the Congress and old-fashioned big tent parties across the globe is the rise of identity politics)

இந்தியாவில் பா.. வின் வெற்றியானது, அதிகார வெற்றி மட்டுமல்ல; கருத்துப் போரிலும் பெற்ற வெற்றியாகும்.( The BJP won not only the battle for power but also the battle of ideas.)

வட்டார, மொழி, சாதி, மத அடையாள அடிப்படைகளில் அரசியல் அமைப்புகள் வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து வலுவிழக்கும் போக்கிற்கு உள்ளானது. (The consistent deterioration of the Congress vote over the past three decades has gone hand in hand with the rise of political formations based on regional, linguistic, caste and religious identities.)

ஆனாலும் 'இந்து' அடையாளத்தில் வாக்குகளை குவியமாக்கும் போக்கிற்கும், அதற்கு போட்டியாக, 'இந்து' என்ற அடையாளத்திற்குள் வந்த குறிப்பிட்ட சாதி மக்களைக் குவியமாக்கும் போக்கிற்கும் இடையிலான மோதலானது, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றி வந்தது. வி.பி.சிங் பிரதமராகி, இரண்டாவது போக்கினை ஊக்குவித்ததானது, முதல் போக்கில் பயணித்த பா>. வின் வளர்ச்சிக்கு தடையாக வெளிப்பட்டது. முஸ்லீம் 'வாக்கு வங்கி' இருப்பதாகக் கருதி, முஸ்லீம்கள் மீது வெறுப்பையும் பொறாமையிலானகோபத்தையும் தொடர்ந்து பா..  வெளிப்படுத்தி வந்தது. (What kept the Congress in play was two forms of competing identity politics breaking out in the same period, one seeking to consolidate Hindu votes while the other undercut it by appealing to particular communities within the Hindu fold. In VP Singh’s short term as prime minister, he consciously used the second form of identity politics to counter the first, with particular success in Uttar Pradesh and Bihar. The Bharatiya Janata Party, stymied in its efforts, spoke incessantly of the purported Muslim vote-bank with a mixture of hatred and envy.)

Amartya Sen not only underestimated the popularity of the Sangh Parivar’s idea of nationhood, but also overlooked the shift that has occurred in Left-wing thought in India, paralleling the American Democratic party’s gravitation towards identity politics. The syncretic nationalist idea of India has gradually been abandoned by the Left-wing intelligentsia over the course of the past decade.’; ‘Global currents: The crisis facing the Congress goes beyond the Gandhi dynasty’; https://scroll.in/article/926008/opinion-the-crisis-facing-the-congress-goes-beyond-the-gandhi-dynasty

2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில், மோடியும் அமித்ஸா-வும், சம்ஜவாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் செல்வாக்கில் இருந்து, இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளில் கணிசமானவர்களை எவ்வாறு தமது செல்வாக்கிற்குள் கொண்டு வந்தனர்? என்பதையும் மேற்குறிப்பிட்ட கட்டுரையானது விளக்கியுள்ளது.

அந்த போக்கில், பிரதமர் நேருவால் அவமதிக்கப்பட்ட அம்பேத்காரையும் ஆர்.எஸ்.எஸும், பா..கவும் போற்றத் தொடங்கினார்கள்.

அதாவது இந்துக்களில் உள்ள சாதி அடையாள அரசியல் சமுக செயல்நுட்பத்தினைப் புரிந்து கொண்டு, தமது செயல்முறைகளில் உரிய மாற்றங்களுடன் பயணித்து, கேரளா உள்ளிட்டு, இந்தியா முழுவதிலும் தமது வளர்ச்சியை, பா.. கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபித்துள்ளது.

In the elections of 2014 and 2019, Narendra Modi and Amit Shah checkmated caste-based outfits like the Samajwadi Party and Bahujan Samaj Party by attracting non-Yadav OBCs and non-Jatav Dalits to the BJP’s majoritarian nationalism, fulfilling the party’s long-standing dream of creating a Hindu vote bank across the nation. Even in a state like Kerala where it did badly in terms of seats won, the BJP received a higher percentage of votes than the Congress managed in Uttar Pradesh and Bihar. According to a post-poll survey by The Hindu and CSDS-Lokniti, 52% of Hindu upper caste voters, 44% of Hindu OBC citizens, 34% of Hindu Dalits and 44% of Hindu adivasis voted for the BJP in the 2019 general election. This contrasts with the 8% of Muslims, 11% of Christians and 11% of Sikhs who cast their vote in favour of Modi.; https://scroll.in/article/926008/opinion-the-crisis-facing-the-congress-goes-beyond-the-gandhi-dynasty )

அம்பேத்காரைப் போலவே, .வெ.ரா-வையும் அங்கீகரித்து, தாய்மொழிவழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணுகுமுறையானது, மேலே குறிப்பிட்ட அகில இந்திய பா..க-வின் அடையாள அரசியல் வெற்றியை தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்த துணைபுரிய வல்லதாகும்.

Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?

Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  


‘RSS joint general secretary Dr Manmohan Vaidya on 17-05-2018, Thursday expressed confidence that the Sangh would able to strengthen its base in Tamil Nadu, explaining that there is much in common between Periyar’s Dravidian principles and the RSS ideology, as both advocate equality in society without caste and communal differences and class distinctions.’ ; https://indiainteracts.wordpress.com/2018/05/19/evrs-hindutwa-or-hindutwa-of-periyar-rsss-comparison-of-ideologies-of-periyar-and-hindutwa/ & பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், .வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’- http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html

மேலே குறிப்பிட்ட அகில இந்திய பா..-வின் அடையாள அரசியல் வெற்றியை தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டுமானால்;

அம்பேத்காரை அங்கீகரித்தது போல, .வெ.ரா, அண்ணா ஆகியோரின் சுயலாப நோக்கற்ற தியாகங்களை அங்கிகரிப்பதோடு, இந்தியாவிலேயே தனித்துவமான 'தமிழ், தமிழர்' அடையாள அரசியலை, 'திராவிடர், திராவிட' அடையாளச் சிதைவுகளில் இருந்தும் மீட்கும் வகையிலான, 'அடையாள அரசியலை' செயல்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு முன்னெடுக்காமல், பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில், தமிழக பா..க-வானது, எவ்வாறு 'அரசியல் தற்கொலைப் போக்கில் பயணித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை (Soft Power) வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது? பிரிவினை சமரசப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தொடங்கி, வளர்ந்து, இன்று 'வற்றி' வரும் தீக்குளிப்புகள்/தற்கொலைகள் மூலமாக, எவ்வாறு 'அந்த' மென்சக்தியும் வற்றி வருகிறது? ஆதாய அரசியலில் அந்த மென்சக்தியானது நீர்த்துப் போன போக்கில், அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது?’
 (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html )

மேற்குறிப்பிட்ட காங்கிரஸ் பாணியை விட இன்னும் மோசமாகவே தமிழக பா.. பயணித்து வருகிறதா? என்ற கேள்வியைத் தமிழக தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையானது தமிழ்நாட்டிற்கு பாதகமான திசையில் காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் பயணித்தைப் போலவே, மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. கீழ்வரும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக, தமிழ்நாட்டினை இந்தியாவிலிருந்து துண்டிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாகஉரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

நாகசாமியின் தமிழ் தொடர்பானநிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது.  (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். (‘இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை, தமிழ்நாட்டில் இருந்து?’; https://tamilsdirection.blogspot.com/2019/05/4-1952.html)

மேற்குறிப்பிட்ட 'தமிழ்/தமிழர் அடையாள அழிப்பு' குற்றச்சாட்டிற்கு மோடி அரசு உள்ளானதும், அது தொடர்பான கோபத்தினை தணிக்கும் வகையில், குறிப்பாக கீழடி தொல்பொருள் ஆய்வுகளில், தமிழக அரசின் பங்களிப்பு பாராட்டுதற்குரியதாக இருந்தது. ஆனாலும் பா..கவுடன் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்ததால், அதற்கான பலன்களை அறுவடை செய்ய முடியாமல் போனது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவருவதற்கு முன், கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.

தமிழ்நாட்டில் பா..கவின் வளர்ச்சிக்கான தடைகளாகவே எச்.ராஜாவும், அவரின் அறிவுபூர்வ ஆதரவாளர்களும் வெளிப்பட்டு வருவார்கள்.

எச்.ராஜா .வெ.ரா-வையும், அண்ணாவையும் இழிவுபடுத்திய ஒலி, ஒளிப்பதிவுகளை அவர் போட்டியிட்ட தொகுதியில் கிராமந்தோறும் பரப்பியிருந்தால், எச்.ராஜாவின் தோல்வி உறுதியாகியிருக்கும் என்பது எனது கணிப்பாகும்
(‘'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (3);.வெ.ரா அவசர சிகிச்சைப் பிரிவில்; காப்பாற்றப் போவது எச்.ராஜாவா? திராவிடர் தளமா?’; http://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

பணநீக்கம், ஜி.எஸ்.டி, ஆதார் இணைப்பு அலைச்சல் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்த போதும், பாராளுமன்ற தேர்தலில் பா..க-வின் வெற்றிக்கான காரணங்களில் கீழ்வருவது முக்கிய இடம் பெற்றுள்ளது.

மக்கள் உணரும் வகையில், என்னென்ன நலன் திட்டங்கள் மோடியின் ஆட்சியில் செயல்பூர்வமாக வெளிப்பட்டன? என்ற பட்டியலை 'தமிழக அரசியல்'(பக்கம் 44 -46, 05-06-2019) இதழ் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் முதல் முறையாக மேற்குறிப்பிட்ட நலத்திட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய, அந்தந்த மாநில பா..கவினர் எந்த அளவுக்கு தொண்டாற்றினார்களோ, 'அந்த' அளவுக்கு பா.. தேர்தல் கணிப்புக்களை எல்லாம் பொய்ப்பித்து வெற்றியை ஈட்டியது.

ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், லேப் டாப் மட்டுமின்றி, திருமணத்திற்கான உதவியில் தொடங்கி, கர்ப்பமானது முதல் குழந்தை பிறந்து வளர்ந்து, பள்ளியில் சேர்ந்து +2 முடிக்கும் வரையில், மருத்துவ உதவி, பண உதவி, இலவச சீருடை, புத்தகம் , சைக்கிள், லேப்டாப் என்று நீண்ட பட்டியலான உதவிகளை 'அம்மா' ஆட்சியில் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

கூடுதலாக மோடி ஆட்சியில் வெளிப்பட்ட மேற்குறிப்பிட்ட பலன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்கு சென்றடைந்தன? அதற்கு தமிழக பா..கவினர் எந்த அளவுக்கு பங்களித்தார்கள்? இலவச கழிவறை உள்ளிட்ட பலன்கள் மக்களை சென்றடைவதில், அந்தந்த ஊரில் உள்ள ...தி.மு.கவினர் எந்த அளவுக்கு பங்களித்து, அதற்கான பாராட்டைப் பெற்றார்கள்ஸ்டெர்லைட், எண்ணெய் கிணறு, எட்டுவழிச்சாலை போன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே என்.ஜி.ஓக்கள் மோடி எதிர்ப்பில் போராட்டங்களை எந்த எதிர்ப்புமின்றி தூண்டுவதற்கு துணையாக, மைக்ரோ உலகத்தில் தொண்டாற்றாமல், சொகுசாக தமிழக பா..-வினர் (விதி விலக்குகள் தவிர்த்து) பயணித்தார்களா? அப்பிரச்சினைகளில் தி.மு.க-வின் பங்களிப்பு வெளிவராமல் பார்த்துக் கொண்டு, அப்போராட்டங்களில் தி.மு. தலைவர்கள் குளிர் காய்ந்தார்களா, 'திராவிட' யோக்கியர்களின் துணையோடுஎன்பதும் ஆய்விற்குரியதாகும்

'திராவிட' யோக்கியர்கள் எல்லாம் தமது நேர்மை வழிகாட்டிகளை (Ethical Compass) அவ்வப்போது திருத்தி(?), 'வாழ்வியல் புத்திசாலிகளாக'(?) சாகும் வரை தமது சொத்து, வசதி, வாய்ப்புகளுக்கு எந்த 'சேதாரமும்' இல்லாமல், வளர்ந்து வாழும் போக்கும்;


1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, அதன்  தொடர்விளைவாக, உணர்ச்சிபூர்வ போக்கில் 1965 முதல் இன்றுவரை தீக்குளித்து மாண்ட, படித்த காலத்தில் கல்வியை தொலைத்து, 'போராட்டங்கள்' மூலமாக தமது வாழ்வையும் கெடுத்துக் கொண்டஇளைஞர்கள் எல்லாம், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படிக்கத் தொடங்கிய, கிராம/ஏழை,நடுத்தர  'கூறற்ற அப்பாவி' பெற்றோர்களின் குழந்தைகளாக‌ 'சீரழிந்த' போக்கும்;

'ஒரே திராவிடர்/திராவிட சீரழிவின்' இரண்டு பக்கங்களாகும்.’ 

'தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக  பா..-வானது, இனி வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும்.‘ 
(August 27, 2018 http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

நடந்து முடிந்துள்ள தேர்தலில், அடுத்தகொள்ளைக்கான முதலீடாகக் கருதி, ஏற்கனவே கொள்ளையடித்த பணமானது 'பல வழிகளில்' தண்ணீராக செலவழிக்கப்பட்டதானது, தி.மு. அணி, ...தி.மு. அணி, தினகரன் அணி ஆகிய மூன்று அணிகளிலுமே வெளிப்பட்டதை ஊடகங்களும், தேர்தல் கமிசன் நடவடிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன.

ஆனால் கடந்த பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்கு, 'அந்த' ஆர்.கே.நகர் பாணியே காரணமானது;

என்று முடிவு செய்தால், ...தி.மு. அணியும், தினகரன் அணியும் 'யோக்கிய கட்சிகளாகவே' வெளிப்படுவார்கள்; பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த 'தில்லு முல்லு கட்சி தி.மு.' என்று விளக்கம் கொடுத்ததும் நிரூபிக்கப்பட்டதாகி விடும்.

'அந்த' ஆர்.கே.நகர் பாணியில் மேற்குறிப்பிட்ட மூன்று அணிகளுமே தேர்தலைச் சந்தித்திருந்த பின்னணியில்;

கூடுதலான காரணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம், 'அந்த' வெற்றிகளின் பின்னணியை அறிய முடியும். அத்தகைய ஆய்வின் மூலமே, மேற்குறிப்பிட்ட காரணங்கள் வெளிப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் காங்கிரசுக்குக் கிடைத்த 'போனஸ்' எம்.பிக்களின் எண்ணிக்கையைக்  கழித்தால், காங்கிரஸ் கட்சியின் உண்மையான பலம் தெரியும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் திசையில் இந்தியா பயணித்தால், வலிமைப் பெறப் போவது மாநிலக்கட்சிகளே ஆகும். அவ்வாறு தேசியக்கட்சிகள் பலகீனமாகி, மாநிலக்கட்சிகளின் வலிமையில் மத்திய அரசு பயணிக்க நேரிடும். அந்த திசையில் இந்தியா பயணிக்கத் தொடங்கினால், அது சோவியத் ஒன்றியம் பிரிந்ததை விட, இன்னும் வேகமாக, இந்தியா சிதறும் விளைவில் முடியும். (http://tamilsdirection.blogspot.com/2019/05/4-1952.html )

மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும், பா.. ஆண்டாலும், இந்தியாவையே ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் மென்சக்தி வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது; என்பதும்;

காஷ்மீரில் பிரிவினைக்காகவெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட வலிமையானது, தமிழ்நாட்டில் பிரிவினைக்காக வளர்ந்து, இன்று 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான' மென்சக்தி (Soft Power) என்பதும், கடந்த பாராளுமன்ற தேர்தலில், 'அறிவியல் ஊழல்' புகழ் தி.மு. பெற்ற வெற்றியின் முலமாக‌, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில்பிரிவினைக் கோரிக்கையை ஆதரித்துப் பேசியவர்கள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்து, அவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டு வருகிறார்களா?

தமிழ்நாட்டில் தி.மு. அமைச்சர்கள் ஆட்சியை இழப்பதற்கு முன், 'பிரிவினை கோரிக்கையை' முன்னெடுப்போம், என்று எச்சரித்த போது, அவர்கள் மீது, அந்த சட்டம் பாய்வதற்கு ஏன் பயந்தது? அதற்குப் பின்னும், காங்கிரசும், பா.. வும் மத்திய அரசில் தி.மு.கவை இடம் பெறச் செய்தது, தேச துரோகமாகாதா? இந்திய விடுதலைக்குப் பின் நடந்த தேர்தல் முதல், கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை, 'அந்த' மென்சக்தியின் வலிமையில், திராவிடக் கட்சிகளுக்கு வாலாக அல்லது பாரமாக தேசியக் கட்சிகள் எல்லாம் பயணிக்கின்றனவா?

1857 முதல் இந்திய விடுதலைப் போருக்கு முன், தமிழ்நாட்டில் வேலூரில் வெடித்த போருக்கு உரிய முக்கியத்துவம் இன்று வரை கிடைத்ததா?

என்பது போன்ற கேள்விகளின் அடிப்படையில்;

தற்போது அமைந்துள்ள மோடியின் ஆட்சியானது, நேருவின் குடும்ப ஆட்சியால் சீர்குலைந்த தேசக்கட்டுமானத்தினை மீட்கக் கிடைத்த கடைசியான அரிய வாய்ப்பு என்பது எனது கருத்தாகும்.

அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா?
(‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress)

என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்;

'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டஎதிர்பாராதபிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்; மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் போலவே

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, 2017 டிசம்பரில் தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, தினகரன் பெற்ற வெற்றியானது, 2019 தேர்தலில் டெபாசீட் இழந்த கட்சியாக, தினகரன் கட்சியானது தோல்வியைத் தழுவும் விளைவில் முடிந்துள்ளது.. 2017இல் டெபாசீட் இழந்த தி.மு.‍-வானது, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அண்ணா தலைமைகளில் பெற்ற வெற்றிகளை எல்லாம் ஓரங் கட்டி, 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஸ்டாலின் தலைமையில் ஈட்டியுள்ளது; சென்னை மெரினா ஜல்லிக்கட்டு காற்றானது, ஸ்டெர்லைட், எண்ணேய் கிணறு, எட்டுவழிச்சாலை என்று இன்னும் பலவாக தமிழ்நாடெங்கும் அரசியல் சூறைக்காற்றாக வீசிய போக்கில், ஒட்டிக் கொண்ட தி.மு. வின் 'புத்திசாலித்தனத்துக்கும்', '...தி.மு. பா.. கூட்டணியானது, 'அந்த' பிரச்சினைகளில் தி.மு. பங்களித்து 'பலன்கள்' பெற்றதை இருட்டில் நீடிக்க துணை போன 'ஏமாளித்தனத்திற்கும், வரலாற்று சாட்சியங்களாக.(‘இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை, தமிழ்நாட்டில் இருந்து?’; https://tamilsdirection.blogspot.com/2019/05/4-1952.html)

தமிழ்நாட்டிற்கான 'தமிழ் அடையாள அரசியல்' திசையில், ஊசலாட்டமின்றி பயணித்து;

ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், மோடி அரசு தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும்; ஏற்கனவே 'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகியிருக்காது. அதற்கு மாறாக, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கின் வெளிப்பாடாக.

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்
(November 11, 2017- ‘தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி?‘;
http://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html )  

குறிப்பு:


கடந்த பாராளுமன்ற தேர்தலில், சீமான் கட்சியும், கமல்ஹாசன் கட்சியும் மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தினை முன்னெடுத்தார்கள். எனவே அந்த 2 கட்சிகளின் வாக்குகளையும், தி.மு. வின் வாக்குகளோடு சேர்த்து, எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் மோடி எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது? என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும். சில குறிப்பிட்ட தொகுதிகளில் சில கட்சிகளுக்கு செல்வாக்கு உண்டு; அது போல சில வாக்காளர்களுக்கும் தனி செல்வாக்கு உண்டு; என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் எதிரெதிர் அணிகளில் பேரம் பேசிய பேரைக் கெடுத்துக் கொண்டதால், பா..கவும், விஜயகாந்த் கட்சியும் அதிக வேறுபாட்டில் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
   L= Lakh votes difference in defeat;
Party
Below 1L
Near &
1L
Near &
2L
Near &
3L
Near &
4L
Near &
5L
6L
Near &
7L
AIADMK
1

4
10
1
3


BJP


1
1
3



DDMK



1
1

2

PMK

1
2

2

1
1
PT


1





VASAN TMC




1




  

No comments:

Post a Comment