Saturday, May 25, 2019


இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (4)


இந்தியாவிற்கு அபாய எச்சரிக்கை, தமிழ்நாட்டில் இருந்து?



'இந்திய விடுதலைக்குப் பின், 1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தே, தனித்து இந்திய விடுதலைக்கு எதிரான ஒரு வலுவான 'சிக்னல்' வெளிப்பட்டது.' என்பதையும்;

'காங்கிரசை எதிர்த்து, 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையாளர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு,  'அமைச்சர்' பதவி வழங்கி, சட்டசபையில் 'பெரும்பான்மை'(?) பலம் பெற்று, காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது; ராஜாஜியின் 'தனிப்பெரும் சாதனையாக'(?); சுயலாப அரசியலில், கொள்கைகள் 'சருகாகும்' போக்கிற்கு, 'பிள்ளையார் சுழி' போட்டு; பின் அதே ராஜாஜியின் 'சாதனை தொடர்ச்சியாக'(?), 1967இல், தேசியக்கட்சிகளை 'வால்களாக்கிய', 1967 ஆட்சி மாற்றத்திற்கு 'அஸ்திவாரமாக'.'  என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' (Nation Building)  சிதைவுக்குள்ளாகியுள்ளதா? அதற்கு 'அதிக' பங்களித்தது, .வெ.ராவா? ராஜாஜியா?’; http://tamilsdirection.blogspot.com/2016/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

1952 தேர்தல் வெளிப்படுத்திய 'சிக்னல்களை' விட, 2019 பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் எல்லாம், தமிழ்நாட்டின் எதிர்காலம் தொடர்பானஆழமான சிக்னல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. அது தொடர்பான விவாதத்தில், தேர்தல் முடிவுகள் தொடர்பான எனது கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாகவும், தவறாகவும் வெளிப்பட்டுள்ள? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

April 2, 2019; கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு., ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து, பா.. தலைமையிலான கூட்டணி 2 இடங்களை தமிழ்நாட்டில் வென்றது; தி.மு. ஒரு இடத்திலும் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவு வெற்றிக்கு காரணமான மோடி இந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார்? என்பதானது வரும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மூலம் வெளிவரும். அடுத்து மோடி தான் பிரதமர் ஆவார் என்பதும் எனது கணிப்பாகும்.’

கடந்த இரண்டு வருடங்களாகவே மீண்டும் மோடி ஆட்சியைத் தொடர்வார்; என்று நான் கணித்து, அதனை வெளிப்படுத்தியும் வந்துள்ளேன்.

பணநீக்கம், GST, ஆதார் தொடர்பான அலைக்கழிப்புகள் தொடர்பான கோபங்களுக்கு இந்திய அளவில் மோடிக்கு எதிரானகுவியம் (Focus- நம்பகத்தன்மையுள்ள தலைவர்) வெளிப்படும் வாய்ப்பினை, ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற (immature) அணுகுமுறையானது கெடுத்து வந்ததை உணர்ந்தே, மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று எனது பதிவுகளிலும், நண்பர்களிடமும் தெரிவித்து வந்தேன். ஆனாலும் இந்த அளவுக்கு, மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

அது போலவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில், தி.மு...,தி.மு. துணையின்றி, பா.. தலைமையிலான கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு மோடிக்கு சாதகமாக இருந்த செல்வாக்கானது, அடுத்து வந்த தேர்தல் முடிவுகளில் டெபாசீட்டுடன் முதலில் தோற்று, பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடமும் தோற்கும் அளவுக்கு, மோடி மீதான கோபமானது எவ்வாறு வளந்து வந்தது என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

January 8, 2018 : ' பண நீக்கம்' மூலம் வந்த துயரங்களை, மோடி ஊழலை ஒழிப்பார் என்று நம்பி பொறுத்துக் கொண்டவர்கள் எல்லாம், மோடி ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான டெலிபோன் கேபிள் இணைப்புகளை துணிச்சலுடன் பூமியில் புதைத்து, நீண்ட காலம் அரசை முட்டாளாக்கியது உள்ளிட்டமெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம் அடுத்து அடுத்து விடுதலை ஆகி வருவதானதும், மீனவர் பிரச்சினையை மோடி தீர்ப்பார் என்ற நம்பிக்கையும் சீர் குலைந்து வருவதும், ஜெயலலிதாவின் மர்ம மரணம் விளைவித்த கோபத்துடன் சேர்ந்து, தமிழக பா..கவை உச்சத்தில் (maximum) வெறுப்பவர்கள் ( அவர்களில் பலர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், தேர்தல் முடிந்தும் மோடியின் ஆதரவாளர்களாக பயணித்தவர்கள்) எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக  பா..-வானது, இனி வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும்.‘ 

தமிழ்நாட்டில் 1969க்குப்பின் கட்சியை குடும்பத்திற்கு அடிமையாக்கி, 'அறிவியல் ஊழல்' திசையில் பயணித்த முதல்வர் கருணாநிதி அளவுக்கு, தமிழ்நாட்டு மக்களின் கோபத்துக்கு உள்ளான தலைவர்கள் வேறு யாரும் இல்லை; பக்தவச்சலம் உட்பட. 'அந்த' கோபமே, எம்.ஜி.ஆர் .தி.மு.-வை ஆரம்பித்து, அவர் சாகும் வரை, கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆகாமல் தடுத்து வந்தது.

ஆனால் 'அந்த' கோபத்தை விட, மிகவும் வலிமையான கோபமானது, தமிழக பா.. மீதும், மோடி மீதும், தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

சசிகலா படத்தினைத் தவிர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியில், சுதாரிக்காமல், தமிழ்நாடெங்கும் சசிகலா படத்தினை சுவரோட்டிகளிலும், பேனர்களிலும் இடம் பெறச் செய்து பயணித்ததால், தினகரன் சறுக்குவதையும் முன்கூட்டியே கணித்து, அதனையும் வெளிப்படுத்தியுள்ளேன்.

August 10, 2018; தினகரன்  ஆர்.கே.நகர் பாணியிலிருந்து தடம் புரண்டு, தமிழ்நாடெங்கும் பேனர்களில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதால், வெற்றி வாய்ப்பானது, ஆளும் கட்சியான...தி.மு.கவுக்கே அதிகம் உள்ளது; என்பதும் எனது கணிப்பாகும்.

May 19, 2019: ‘துக்ளக் உள்ளிட்ட அனைத்து கணிப்புகளுக்கும் மாறாக, பாராளுமன்ற தொகுதிகளில் ...தி.மு. அதிகமாகவும், சட்டமன்ற தொகுதிகளில் மிக அதிகமாகவும் வெற்றி பெற ஏன் வாய்ப்புள்ளது? என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியுள்ளேன். எனவே ..,தி.மு. ஆட்சியை இழப்பதற்கு வாய்ப்பில்லை.’

'குட்கா' ஊழலில் சிக்கிய அமைச்சர், கட்சியானது பொதுமக்களிடம் அசிங்கப்படக்கூடாது, என்று 'நாடகமாகக் கூட பதவி விலகாதது; சிலைக்கடத்தல் விசாரணையில் ஆளுங்கட்சி தமது பேரைக் கெடுத்துக் கொண்டது; போன்றவற்றைத் தவிர,

பலமணி நேர மின்வெட்டு, சினிமா தயாரிப்பு போன்ற அதிக லாப வாய்ப்புள்ள தொழில்களில குறுக்கீடு, தனியார் சொத்து அபகரிப்பு போன்று சசிகலா செல்வாக்கில் இருந்த ...தி.மு. ஆட்சியிலும், கருணாநிதி குடும்ப செல்வாக்கில் சிறைபட்ட தி.மு. ஆட்சியிலும் வெளிப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்றி, அந்தந்த ஆட்சிகளில் இருந்த பிற பொதுவான ஊழல் குற்றச்சாட்டுகளுடன், ...தி.மு. ஆட்சியானது நடைபெறுகிறது;

என்ற அடிப்படையிலேயே கீழ்வருமாறு தேர்தல் முடிவுகளை நான் கணித்தேன்.

'..,தி.மு. ஆட்சியை இழப்பதற்கு வாய்ப்பில்லை' என்ற எனது கணிப்பு சரி என்னும் அளவுக்கு, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தி.மு.கவை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்றதற்கும், பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் படு தோல்வி அடைந்ததற்கும், ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி, பா.‌.வுடன்   கூட்டு சேர்ந்து, மோடி எதிர்ப்பு அலையில் தாமாகவே சிக்கிக்கொண்டது முக்கிய காரணமாகும். அது மட்டுமல்ல, ...தி.முகவை கடுமையான சொற்களுடன் எதிர்த்த பா..கவுடன் கூட்டு சேர்ந்ததும், இரண்டு கட்சிகளுக்குமே பாதகமானது.

அதில் நகைச்சுவைப் போக்காக, ‘விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கும் தி.மு. அணி வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது;’ என்பதையும் முன்கூட்டியே (April 30, 2019 ) வெளிப்படுத்தியுள்ளேன்

எவ்வாறு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  ஆகியோரின் தேர்தல் வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதைப் போலவே;

அண்ணா, கருணாநிதி ஆகியோர் தலைமைகளில் தி.மு.  பெற்றதேர்தல் வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, பாராளுமன்ற தேர்தலில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளார்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, 2017 டிசம்பரில் தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, தினகரன் பெற்ற வெற்றியானது, கடந்த தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் டெபாசீட் இழக்கும் தோல்வியில் முடிந்தது. அப்போது டெபாசீட் இழந்த, தி.மு. வானது அண்ணா, கருணாநிதி பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், இது போன்ற எதிர்பாராதபிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்; மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைப் போலவே. ஜல்லிக்கட்டு ஆதரவுப் போக்கில் வெளிப்பட்ட சமூக விசைகள் (Social Forces) எல்லாம் 'நோட்டா' பக்கம் போகாமல், தி.மு.கவின் 'பிரமிப்பூட்டும்' வெற்றிக்கு உதவியிருந்தால், தி.மு.க எம்.பிக்கள் எந்த வேகத்தில், 'சுயநல அறுவடையில்' தீவிரம் காட்டுகிறார்களோ, 'அதே வேகத்தில் அந்த சமூக விசைகள்' தி.மு.கவின் 'வெற்றிப் பட்டத்தினை', சமூக வானில் இருந்து  பிரமிக்க வைக்கும் வகையிலேயே விழச் செய்யும்.

மத்தியில் பா.. ஆட்சியே தொடர்வதால், தமது வெற்றிக்கான 'பலன்களை' அறுவடை செய்ய முடியாத தோல்வியாகவும், 'அந்த; வெற்றியானது வெளிப்பட்டுள்ளது.  

1980களில் தி.மு. எம்.பியாக டெல்லி சென்ற லட்சுமணன், துணை சபாநாயகராகி, பின் அந்த பதவியைக் காப்பாற்ற தி.மு.கவிலிருந்து விலகினார்

எனவே எந்த மாநிலக்கட்சி சார்பாக டெல்லி செல்லும் எம்.பிக்களில் 'புத்திசாலிகள்'(?), 'அந்த' மாநிலக்கட்சிக்கே திருகு வலியாகும் ஆபத்தும் இருக்கிறது. அது போன்ற திருகுவலி வாய்ப்புகளில் இருந்து, ...தி.மு. தற்போது தப்பித்துள்ளது.

March 20, 2019 வெளிப்படுத்திய கீழ்வரும் கணிப்பானது, எந்த அளவுக்கு சரியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது? என்பதானது, அந்தந்த கட்சிகளின் தலைமைக்கேத் தெரியும்.

இரண்டு கட்சிகளில் எந்த கட்சி கூட்டணியும் அமோக வெற்றி பெற்றாலும், அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளுமே மேற்கண்ட இரண்டு பிரிவினரிடம் சிறைபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகும் வாய்ப்பும் இருக்கிறது.’ (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

...தி.மு. கூட்டணியின்றி தனித்து பா.. போட்டியிட்டிருந்தால், தேர்தல் முடிவுகளில் அது நோட்டா கட்சியாகவே வெளிப்பட்டிருக்கும். அதற்கான காரணங்களை ஆராயாமல், வாக்காளர்கள் மீது, அக்கட்சியின் தலைவர்கள் குறை சொல்லும் வரை, 'அந்த' திசையிலேயே தமிழக பா.. பயணித்தாக வேண்டும்.

எனது கணிப்புக்கு மாறாக, தி.மு. ஆதரவில் போட்டியிட்ட காங்கிரசுடன், ...தி.மு. ஆதரவுடன் போட்டியிட்ட பா.. நேரடியாக போட்டியிட்டு, பெரும் வித்தியாசத்தில் தோற்றதன் மூலமாக, எந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளான கட்சியாக இருக்கிறது? தனித்து போட்டியிருந்தால் ...தி.மு. அதிக பாராளுமன்ற தொகுதிகளையும், சட்ட மன்ற தொகுதிகளையும் வென்றிருக்குமா? என்ற கேள்வி எழும் அளவுக்கு, கூட்டணியை பலகீனமாக்கும் நோட்டா கட்சியாக பா.. ஆகி விட்டதா?

கடந்த பாராளுமன்ற தேர்தலில், திராவிடக்கட்சிகளின் துணையின்றி ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பா.., அது போல இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தால், நோட்டாவிடம் தோற்றிருக்கும், என்பதும் எனது கணிப்பாகும்.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்குக் கிடைத்த 'போனஸ்' எம்.பிக்களின் எண்ணிக்கையைக்  கழித்தால், காங்கிரஸ் கட்சியின் உண்மையான பலம் தெரியும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் திசையில் இந்தியா பயணித்தால், வலிமைப் பெறப் போவது மாநிலக்கட்சிகளே ஆகும். அவ்வாறு தேசியக்கட்சிகள் பலகீனமாகி, மாநிலக்கட்சிகளின் வலிமையில் மத்திய அரசு பயணிக்க நேரிடும். அந்த திசையில் இந்தியா பயணிக்கத் தொடங்கினால், அது சோவியத் ஒன்றியம் பிரிந்ததை விட, இன்னும் வேகமாக, இந்தியா சிதறும் விளைவில் முடியும்.

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான',  'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, தமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு-  சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக இருக்கும். இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். இந்துத்வா முகாமில் அதற்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், எதிர்ப்பாக இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். 'அந்த' இன்னொரு இந்துத்வா பிரிவினரும், 'பெரியார் கட்சிகள்' உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பாளர்களும், ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும் கெடுத்து, தேச கட்டுமானத்தை சீர் குலைத்து வரும் திசையில், 'ஒன்றாக' பயணிக்கிறார்கள்; என்பதும் எனது 'அறிதல்' (Observation) ஆகும்.

வரலாற்றில் நடைமுறையில் உண்மைகளை புறக்கணித்து, 'உணர்ச்சிபூர்வ ற்பனைகளில்' பயணிக்கும் எந்த போக்கும், எதிரானவிளைவுகளை சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது

“What you think is what you get...no matter how absurd. And then, reality imposes itself, and you get something else altogether, often the exact opposite of what you wanted.

Reality doesn't care what you think. Thoughts hardly matter. Reality happens whether you want it or not. Nobody threatens his weatherman when the temperature falls; everyone knows it's not his fault.” : 

சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி சரியான பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் அளவுக்கு  கேள்வி எழுப்பப்பட்டது;

என்பது தொடர்பான செய்தி வருமாறு:

இந்தியாவில் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என்று குடும்ப ஆட்சி நடைபெற்றபோது, உலக அளவில் மிகவும் குறைவாக இருந்த தனிநபர் வருமானமானது, அந்த ஆட்சி நீங்கிய பின் அதிகமாகியிருக்கிறதே. அது பற்றி ராகுல் காந்தியின் கருத்தினைக் கேள்வியாக எழுப்பியபோது, அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, சரியாக பதில் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார்

அது போல துபாயில் ஒரு சிறுமி கேட்ட கேள்விக்கு, சரியாக பதில் சொல்ல முடியாமல், ராகுல் காந்தி தடுமாறிய செய்தியும் வெளிவந்துள்ளது

'பணநீக்க நடவடிக்கை', 'ஜி.எஸ்.டி', 'ஆதார் கார்டு வாங்குதல் மற்றும் வங்கி,  பான் கார்ட், ஃபோன் இணைப்பு' போன்றவை மூலம், மோடி ஆட்சியில் குடிமக்கள் அவதியுற்றது போல, இதற்கு முன் எந்த ஆட்சியிலும் அவதிப்பட்டதில்லை' என்று என்னிடம் கருத்து தெரிவித்த எனது நண்பர்;

மேலே குறிப்பிட்ட துபாய் செய்தியையும் கூறினார்.

உலகில் உள்ள தூதரகங்களில், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பத்தில், இந்திய தூதரகங்களின் செயல்பாடுகள் மிகவும் கீழாக இருந்தது;

மோடியின் ஆட்சியில் தான், அந்த செயல்பாடுகள் வளர்ந்து, உலகில் இந்தியர்களை மதிக்கும் நிலை உருவாகியுள்ளது;

என்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலமாக நான் கேள்விப்பட்ட கருத்தினை அவரிடம் சொன்னேன்.

'வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி தோற்றால், நிலையற்ற ஆட்சிகள் மூலமாக, இந்தியா பின்னேறும்' என்று ' chairman of Larsen and Toubro (L&T) Anil Manibhai Naik ' கருத்து தெரிவித்துள்ளார்

மோடி ஆட்சியின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்தாக்கும் வகையில், மத்திய அரசின் முக்கிய துறைகளில் 'கறுப்பு ஆடுகள்' செல்வாக்கு செலுத்தி வருவதை, சுப்பிரமணியசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே மோடி தோற்பது என்பதானது, அந்த கறுப்பு ஆடுகள் மற்றும் ஊழல் திமிங்கலங்களின் செல்வாக்கில் இந்தியா மீள்வதற்கு வழியின்றி சிக்கும் விளைவில் முடியும் ஆபத்தும் இருக்கிறது.

இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது? பிரிவினை சமரசப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தொடங்கி, வளர்ந்து, இன்று 'வற்றி' வரும் தீக்குளிப்புகள்/தற்கொலைகள் மூலமாக, எவ்வாறு 'அந்த' மென்சக்தியும் வற்றி வருகிறது? ஆதாய அரசியலில் அந்த மென்சக்தியானது நீர்த்துப் போன போக்கில், அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது?’ 

மேற்குறிப்பிட்ட காங்கிரஸ் பாணியை விட இன்னும் மோசமாகவே தமிழக பா.. பயணித்து வருகிறதா? என்ற கேள்வியைத் தமிழக தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையானது தமிழ்நாட்டிற்கு பாதகமான திசையில் காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் பயணித்தைப் போலவே, மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. கீழ்வரும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக, தமிழ்நாட்டினை இந்தியாவிலிருந்து துண்டிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது

இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாகஉரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

நாகசாமியின் தமிழ் தொடர்பான‌ நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது

அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்

சரியான தேசக்கட்டுமான திசையில் பயணிக்காத காரணத்தால், சோவியத் ஒன்றியமானது சிதறலுக்கு உள்ளானதா? அவ்வாறு பிரிந்த தனிநாடுகளின் நிலைமைகள் எல்லாம், அடுப்பில் சூடான எண்ணைச் சட்டியிலிருந்து, அடுப்பின் நெருப்புக்குள் தப்பி விழுந்து, சீரழிந்த கதையாகி வருகிறதா?
(‘The collapse of the USSR and the illusion of progress’; https://www.opendemocracy.net/od-russia/john-weeks/collapse-of-ussr-and-illusion-of-progress)

என்ற ஆராய்ச்சியில், இந்திய ஒற்றுமை அபிமானிகளும், பிரிவினை அபிமானிகளும் அறிவுபூர்வமாக விவாதிப்பதிலும், தமிழ்நாடானது முன்னுதாரணமாக இருக்க வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும்; தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதால். 
(‘தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கான முயற்சியும், இந்தியாவிற்கே முன்னுதாரணமான தேசக்கட்டுமானத் திசையும்’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html )

No comments:

Post a Comment