Monday, May 20, 2019


ந‌டிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (10)


தமிழருவி மணியன் அறிவிப்பினை ஆராய்ந்தால்,  


            ரஜினியின் கட்சி கானல் நீரா?



'தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய .தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார் தி.மு.., .தி.மு..வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு..,.தி.மு..வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்துவைக்கமாட்டார். அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின்ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார்.' -  காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் ; https://www.dailythanthi.com/News/State/2019/05/19020841/TamilaruviManiyanInterview.vpf

.தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வந்த மறுநிமிடமே ஸ்டாலின் முதல்வர் ஆவார். தி.மு. ஆட்சியில் நிச்சயமாக ரஜினி தனது கட்சியை துவங்க மாட்டார். என்ன காரணத்தால், தற்போது நடந்து வரும் ...தி.மு. ஆட்சியில் தமது கட்சியைத் துவங்க ரஜினி தயங்கினாரோ, 'அந்த' காரணங்கள் தி.மு. ஆட்சியில் இன்னும் வலுவாகி விடும்.

தமிழ்நாட்டில் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே அடிமட்டத்தில் மக்களுடன் தொடர்புடைய வலைப்பின்னல் இருக்கிறது. 'அந்த' வலைப்பின்னலைத் தாண்டி, எந்த கிராமத்திலும் புதிதாக ஒரு கட்சி வேர் பிடிக்க வேண்டுமானால், 'அந்த' மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்று, தமது 'வலிமையை' நிரூபித்தாக வேண்டும். 1967க்குப் பின், அந்த வலைப்பின்னலானது எவ்வாறு உருவானது? என்ற சமூக செயல்நுட்பத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

இப்போதுள்ள கட்சியாக இருந்தாலும், புதிதாக தொடங்கப்படும், கட்சியாக இருந்தாலும், அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும், சமூகசெயல்நுட்பம் பின்வருமாறு.

1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ்,காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூடஅது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற  முடியாது. அந்த வலைபின்னலை, கட்சிக்குள் தடைகளின்றி,  'முழு அதிகாரத்துடன்'  செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின், ...தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? குடும்பத்துக்குள் தடைகளுடன் செயல்பட்டு, ஆனாலும் 2016 தேர்தலில் 'சாதனை' வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்குப் பின், தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? என்ற கேள்விகள்,  அந்த வலைப்பின்னலானது, மரண வாயிலில் நிற்பதை, குறிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ 
(‘அரசியல் வெளி (Political Space) காலியாகிவிட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?’; http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html)

தமிழ்நாட்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு. கட்சிக்காரர்களுக்கும், ...தி.மு. கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘சமூகஆற்றல்களில் (Social Energy) தி.மு.க-விற்கும், ...தி.முக-விற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா?’; http://tamilsdirection.blogspot.com/2017/04/ )

இதில் வினோதம் என்னவென்றால், வெளிநாட்டு தொடர்புகளுடன் 'தமிழ்நாட்டில் மனித உரிமை வீரர்களாக' வலம் வந்தவர்களில் எவராவது, 'அந்தந்த பகுதி' அரசியல் கொள்ளையர்களையோ, அவர்களின் ஊழலையோ, எதிர்த்தார்களா? என்று ஆர்வமுடையவர்கள் ஆராய்ந்து அதிர்ச்சி அல்லது வியப்பு அடையலாம்.

'சுமார் 15 வருடங்களுக்கு முன், இன்று தமிழ்நாட்டில் மேக்ரோஉலகில், மனித உரிமைப் போராளியாக போற்றப்படும் ஒரு பேராசிரியர் பணியாற்றிய கல்லூரியிலிருந்து மாற்றல் பெற்று, நான் பணியாற்றி வந்த கல்லூரியில் சேர்ந்த ஒரு பேராசிரியரிடம் அந்த போராளி பேராசிரியரைப் பற்றி விசாரித்தேன்.

'அவர் கல்லூரியிலும் சரி, வெளியிலும் சரி, அந்த பகுதியில் வாழும் செல்வாக்கானவர்கள் சம்பந்தப்பட்ட அநீதிகளை எதிர்க்கும் 'முட்டாளாக'(?) வாழாமல்,

'யாரை எதிர்த்தால், அதிக பாதிப்பின்றி வெற்றியும் பாராட்டும் பெறலாம், என்று ' புத்திசாலித்தனமாக' கணக்கிட்டு 'போராடி' புகழ் பெற்றவர்' என்று சற்று வெறுப்புடன் கூறினார்.' 
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

மேற்குறிப்பிட்ட மனித உரிமை வீரர்களைப் போல, தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கொள்ளையர்களை உரசாமல், அவர்களின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் மத்திய அல்லது மாநில அரசினை எதிர்த்து, 'அந்தந்த' கிராம மக்களிடையே ஆதரவு திரட்ட முடியும். அதாவது செல்வாக்கான உள்ளூர் அரசியல் கொள்ளையர் அனுமதிக்கும் சமூக வெளியில் (Social Space) தான், மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கும் மனித உரிமை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் தி.மு. அல்லது அ...தி.மு.க-வுக்கு மாற்றாக தம்மை முன்னிறுத்தும் எந்த கட்சிக்கும்;

மேற்குறிப்பிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் செயல்படுவதைப் போல செயல்பட, இரண்டு கட்சிகளின் 'அந்தந்த கிராம அதிகார பீடம்' அனுமதிக்காது. அதே நேரத்தில், தொடர்ந்து, 'அந்த' மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்று செல்வாக்குடன் யார் வளர்ந்தாலும், அவர்களை 'அந்த' அதிகார பீடங்கள் அனுசரித்தே வாழும்
(http://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_2.html )

அதனை கீழ்வரும் உதாரணம் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்


மேற்குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தில்,  தி.மு. மத்திய ஆட்சியில் பங்கேற்ற காலத்திலும், மாநில ஆட்சியைக் கைப்பற்றிய காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய சலுகைகள் எல்லாம்,  அந்த ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எவ்வளவு பங்களித்தது? என்பதை கீழே உள்ள குறிப்பில் காணலாம்.

விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் செயல்பட உதவிய ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் தண்டிக்குமாறு எவராவது கோரிக்கை எழுப்பினார்களா? இனியாவது எழுப்புவார்களா?

அவ்வாறு தண்டிக்கப்படவில்லையென்றால்;

சரியான கழிவு நீக்கல் தொழில்நுட்ப செலவுகளை குறைத்து, ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, சுற்றுப்புற சூழலை சீரழித்தஸ்டெர்லைட் பாணியில், தமிழ்நாட்டில்  செயல்பட்டு வரும் அனைத்து ஆலைகளையும் மூடி, லட்சகணக்கானோர் வேலை இழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது.

அந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டிய ஒரே நபரான ரஜினியை ஏளனம் செய்து இழிவுபடுத்துவதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கான வாய்ப்பினையும் கெடுக்கும் பெரும் அபாயமாகும்

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு முன், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்த போது, அந்த ஆலையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தி.மு.க-வின் பங்களிப்பினை விளக்க முற்பட்டிருந்தால், அந்த போராட்டமானது, துப்பாக்கி சூட்டில் உயிர்கள் பலியாகும் அளவுக்கு, பெரிய போராட்டமாக வளர்ந்திருக்குமா?  அந்த பகுதியில் உள்ள தி.மு. வலைப்பின்னல் மூலமாக, துவக்கத்திலேயே, அந்த போராட்டமானது, சீர்குலைந்து பிசி பிசுத்திருக்குமா? 'அந்த' சூட்சமம் தெரியாமல், ரஜினியைக் கட்சி ஆரம்பிக்குமாறு தூண்டி வரும் தமிழருவி மணியன் உள்ளிட்டவர்களின் ஆலோசனையில், அந்த போராட்டத்திற்குப் பின் ரஜினி தூத்துக்குடிக்கு சென்று, மருத்துவமனையில் அரங்கேற்றப்பட்ட நாடகம் மூலமாக அவமதிக்கப்பட்டாரா? என்ற கேள்விகளை ஆராயாமல், ரஜினி தமது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய முடியுமா
(http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

மேற்குறிப்பிட்ட பின்னணியில், ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் கிராமங்களில் வேர் பிடிக்கும் முயற்சிகளோடு புதிய கட்சியை ஆரம்பிப்பதானது, தி.மு. ஆட்சியை விட, ...தி.மு. ஆட்சியில் தான் சாத்தியத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும்..

துக்ளக் உள்ளிட்ட அனைத்து கணிப்புகளுக்கும் மாறாக, பாராளுமன்ற தொகுதிகளில் ...தி.மு. அதிகமாகவும், சட்டமன்ற தொகுதிகளில் மிக அதிகமாகவும் வெற்றி பெற ஏன் வாய்ப்புள்ளது? என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

எனவே ..,தி.மு.க ஆட்சியை இழப்பதற்கு வாய்ப்பில்லை.

"தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய .தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்" என்று தமிழருவி மணியன் அறிவித்திருப்பதானது;

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது.

எனது கணிப்புக்கு மாறாக, ...தி.மு. தோற்று,  பிரமிக்கும் வகையில் தி.மு. வெற்றி பெற்றால், பின் தி.மு. ஆட்சியில் அமர்வது நிச்சயமாகி விடும். அதன்பின் தி.மு. ஆட்சியை எதிர்த்து, புதுக்கட்சி  தி.மு.கவின் நேரடி அல்லது மறைமுக ஒப்புதலின்றி தாக்குப்பிடிக்க  முடியாது. அதிலும் சசிகலா குடும்பக் கட்சியின் ஆதரவோடு, தி.மு. ஆட்சியைப் பிடித்தால்:

1996 தேர்தலுக்கு முன் ரஜினி எச்சரித்தபடி, 'கடவுள் நினைத்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது'. எனவே தமிழருவி மணியன் அறிவித்துள்ளது தான், ரஜினியின் நிலைப்பாடு என்றால், 'ரஜினியின் கட்சி கானல் நீராகவே முடியும்' என்பது எனது கணிப்பாகும்.

கனிவான சமூக சூழலில், நடக்கும் சமூக மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க உதவும் சமூகவியல் கருத்தாக்கமானது, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆகும்……… எனது ஆய்வுகள் மூலம், 'பெரியார்' .வெ.ராவின், தமிழரின் 'ஆணி வேர்கள்' தொடர்பான தவறான நிலைப்பாடுகளை திருத்திக் கொண்டு, எனது வழியில்,  காமராஜரை .வெ.ரா ஆதரித்தது போல், 2005 முதல், மோடி ஆதரவு போக்கில், எந்த 'பெரியார்' கட்சியாவது பயணித்திருந்தால்;

இன்று 'சமூக நியுக்கிலியேசன்' போக்கில், அஸ்ஸாமைப் போல, தமிழ்நாட்டிலும் அக்கட்சியானது, தாய்மொழிவழிக் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான நிபந்தனைகளுடன்;

பா..கவுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.

அதற்கான வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட சூழலில்;

அதற்கான சமூக நியுக்கிலியேசன் நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில் நுழைந்தாக வேண்டும்.

அது ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.’ 
(‘தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation); ரஜினி மூலமாகவா? அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலமாகவா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2017/06/4-socialnucleation-signals-on-growth.html)

மேற்குறிப்பிட்ட வலைப்பின்னல் தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, ரஜினி தமது கட்சியைத் துவங்கினால், 'புத்திசாலி அரசியல் கொள்ளையர்கள்' அதை முன்கூட்டியே 'நுகர்ந்து', தமது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் ..மன்றம் வேர் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்; பேரம் பேசி தமது கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிப்பார்கள்; வாய்ப்பு கிடைத்தால், ரஜினிக்கு 'வாலாட்டி', ரஜினியின் கட்சிக்குள் நுழைந்து, செல்வாக்கு பெறும் போக்கில்.. 

அத்தகைய சூழலில், ஒப்பிட்டளவில் மதிக்கத்தக்க அடிமட்டத் தொண்டர்கள் அதிகமுள்ள ...தி.மு. கட்சியானது, எம்.ஜி.ஆர் பாணியில், ஜெயலலிதாவின் துணிச்சலுடன் பயணித்தால், தமிழ்நாட்டை குடும்ப ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டு, மீட்சியை நோக்கி தமிழ்நாடு பயணிப்பது சாத்தியமாகும்..

வரும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் பிரமிக்கும் வகையில் ...தி.மு.கவிற்கு சாதகமானால், 'அந்த' திசையில் அந்தக் கட்சி பயணிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)


The Origins of Tamil Classical Music’ Organized by the Centre for Singapore Tamil Culture  



The complimentary dimensions of Tamil & Sanskrit are referred in the above talk.  


 குறிப்பு:

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக துக்ளக் (31.05.2018) இதழில் வெளிவந்த கட்டுரைகள் எனது கவனத்தை ஈர்த்தன.

ஜெயலலிதா ஆட்சியில் 1995இல் 'மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரம் தள்ளி தொழிற்சாலை அமைய, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவாக, சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான மதிப்பீடு செய்தே ஆக வேண்டும் என்று .தி.மு.. அரசு உத்தரவிட்டது. 14.10.1996 - ல் தி.மு.. அரசுதான், .தி.மு.. அரசு - மே 1995-ல் விதித்த விதிகளை ஒதுக்கி, மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தூரத்துக்குள் தொழிற்சாலை அமைய TNPCB மூலம் அனுமதி அளித்தது.' முதல் கோணல் இங்கு தான் தொடங்கியது. 1997 முதலே ஸ்டெர்லைட் கழிவுகள் காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் ஆலை செயல்பாட்டின் குறைபாடுகள் வெளிவரத் தொடங்கின.

அது முதல் ஆலை செயல்பட நீதிமன்றங்கள் தடை விதித்ததிலும், பின் தடையை நீக்கியதிலும்;

சென்னை உயர் நீதிமன்றம்,சுற்றுச்சூழல் விவகாரங்களை ஆய்வு செய்யும்நீரி’ (NEERI)) அமைப்பை, ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு செய்யக் கூறியதிலும், ஆய்வு செய்ய ஸ்டெர்லைட், நீரிக்கு ரூ.1.27 கோடி கட்டணம் கொடுத்ததும், 40,000 டன் செப்பு தயாரிக்க முதலில் அனுமதி கொடுத்து செயல்பட்ட போதே, நோய் பாதிப்புகள் வெளிப்பட தொடங்கியிருந்தும், பின்பு 4 லட்சம் டன் செப்பு தயாரிக்கும் ராட்சத நிறுவனமாக்கி, அதன் சுற்றுச்சூழல் மாசுபடும் சக்தியை 10 மடங்கு தமிழகத்தில் தி.மு..வும், டெல்லியில் தி.மு.. பங்கு பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்தான் அதிகமாக்கியதும்;

நோய் பாதிப்புகள் பன்மடங்காகி, மக்களின் கோப வெள்ளம் சுனாமியாகியது எவ்வாறு?

என்ற உண்மையை அறிய, 28 ஆண்டு ஸ்டெர்லைட் அரசியல் சரித்திரத்தை திரும்பப் பார்த்தால்தான் விளங்கும்.

ஆனால் ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்த ட்சிகளின் தலைவர்கள் எவராவது ('பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு), தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட்டின் 28 வருட வரலாற்றில், மேலே குறிப்பிட்டவாறு கடும்பாதிப்புகளை ஏற்படுத்தி ஆலை செயல்படுவதற்கு, அரசு துறைகளிலும், கட்சிகளிலும் ஒத்துழைத்து 'பலன்கள்' அனுபவித்த குற்றவாளிகளை உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்;

என்று கோரிக்கை எழுப்பியதாகதெரியவில்லை.

மாறாக 'மோடி எதிர்ப்பு' என்ற குவியத்தில் முன்னெடுத்து, வன்முறையில் பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்து, பல உயிர்களை காவு வாங்கியதானது, சமூக விரோத சக்திகளின் ஊடுறுவலுக்கான முன் தடயமானது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நிய சக்திகள் பற்றிய கீழ்வரும் செய்திக்கு முறையான மறுப்பு வெளிவந்ததாக தெரியவில்லை.

எல்லா பிரச்சினைகளையும் அரசியல் நோக்கில், அதுவும் ஏற்கனவே முடிவு செய்து கொண்டு விட்ட காழ்ப்புணர்ச்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது என்பதானநமது தனி அடையாள நோய் அரங்கேறியதா? என்ற ஆய்வுக்கான நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டுவது அரிது. தகர்ப்பது எளிது. அது போல சமூகத்தில் ஆக்கபூர்வமாக எதையும் உருவாக்குவது அரிது. 'முற்போக்கு, புரட்சி'  என்ற பெயரில் அதனை சீர்குலைப்பது எளிது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/ )            

No comments:

Post a Comment