Wednesday, May 1, 2019

அரசியல் பரமபதத்தில்(4):



துக்ளக் உள்ளிட்ட அனைத்து தேர்தல் முடிவு கணிப்புகளுக்கும் மாறான, எனது கணிப்பு எந்த அடிப்படையில்?



வரும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கரையப் போகும் திராவிடக் கட்சி? தொடர்பான எனது ஆய்வினை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

இந்திய விடுதலைக்குப் பின், தமிழ்நாட்டின் அரசியல் திசையை வெளிப்படுத்திய முக்கியத்துவமானது, 1952, 1967, 1973 (திண்டுக்கல் இடைத் தேர்தல்), 2014 (பாராளுமன்றம்), 2018 (ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்) வரிசையில் இடம் பெறும் வகையில்;


தமிழ்நாட்டின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் வகையில் நடந்து முடிந்த 2019 பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படும், என்பது எனது கருத்தாகும். எனவே தேர்தல் முடிவுகள் தொடர்பான சரியான கணிப்பிற்கு, தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட தேர்தல்களின் முடிவுகள் வெளிப்படுத்திய 'சிக்னல்களும்' முக்கிய இடம் பெற வேண்டியவையாகும்.


இந்திய விடுதலைக்குப் பின் 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத்துக்க நாளாகஅறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் .வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதாவது ஜெயலலிதா மறைவிற்குப் பின் அரங்கேறிய கூவத்தூர் பாணிக்கு, தமிழ்நாட்டில் பிள்ளையார் சுழி போட்டதே, காங்கிரஸ் எனும் தேசியக்கட்சியாகும்.’ 
(‘1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததா?’; http://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html)

கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு, சுயலாப அரசியல் கணக்குகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், ராஜாஜியின் சீடராக 'திராவிட எதிர்ப்பில்' பயணித்த .பொ.சியின் கட்சியும் தி.மு. தலைமையில் 'வெட்கக்கேடான கூட்டணி' அமைத்து, 1967 ‍ இல், தி.மு. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டில் 1967 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. ஆட்சியின் பண்பிலும், சமூகத்தின் பண்பிலும் ஆழமான மாற்றங்களுக்கான துவக்கமாகவும், 'அந்த' ஆட்சி மாற்றம் இருந்தது

சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் .வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார்.  அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டகாங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது; நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி 'பெரியார்' புகழ் பாடும் அளவுக்கு (https://rightlog.in/2019/04/rahul-gandhi-periyar-01/ )

1969இல் முதல்வர் அண்ணாவின் மறைவிற்குப் பின், அதே ராஜாஜியின் ஆதரவுடன், அதே பாணியில் தி.மு. எம்.எல்.ஏக்களை 'வளைத்து', கட்சியில் நெடுஞ்செழியனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்த கருணாநிதி முதல்வரானார். இன்று தமிழ்நாட்டில் உள்ள தேசிய, திராவிடக் கட்சிகளின் மாநில, மாவட்ட தலைவர்கள் எல்லாம், கட்சியில் 'தம்மை வலுவாக்கிக் கொள்ள', 'அந்த' பாணியில் பயணிக்கும் விளைவிற்கு, அது 'பிள்ளையார் சுழி' ஆனது.

தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு. ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில்,  காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு,  பல போராட்டங்கள் மூலம், தி.மு. எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,  அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும்,  .தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில்,  .தி.மு. முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு. மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு. எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு. எதிர்ப்பு அரசியல்'  என்பது, ...தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில் ஆட்சிக்கு வர முடியாமல் இருந்த தி.மு., 1989இல் அவர் மறைவிற்குப்பின் ஏற்பட்ட அவரது கட்சியின் பிளவின் காரணமாக ஆட்சிக்கு வர முடிந்தது. பின் பிளந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின் ஆட்சியை இழந்தது. பின் எம்.ஜி.ஆர் பயணித்த திசையில் இருந்து ஜெயலலிதா தடம் புரண்டு, தி.மு.கவின் குடும்ப அரசியலை விட மோசமான சசிகலா குடும்ப அரசியலுக்கு இடம் கொடுத்தார். மீண்டும் தி.மு. ஆட்சியைப் பிடிக்க அது காரணமானது.

பின் 2011இல் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து துரத்தி, அவரையும், நடராஜனையும், மற்ற அவரது 12 உறவினர்களையும் ...தி.மு. கட்சியில் இருந்தும் துரத்தினார். கட்சித் தொண்டர்கள் அதனைப் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். (https://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece) பின் சசிகலா ஜெயலலிதாவிடம் மன்னிப்பு மடல் கொடுத்து சேர்ந்தார். ஆனால் நடராஜன் உள்ளிட்ட மற்ற உறவினர்களின் நீக்கம் தொடரும், என முதல்வர் ஜெயலலிதா அற்வித்தார். (https://www.news18.com/news/india/sasikala-back-at-poes-garden-461612.html)

அந்த பின்னணியும் 2014 (பாராளுமன்றம் தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வில் முக்கிய இடம் பெறத்தக்கதாகும்.

2014 பாராளுமன்ற தேர்தலில் தான், தி.மு., ...தி.மு. கூட்டணியின்றி ஒரு தேசியக்கட்சி, அதுவும் பா.., ஒரு இடத்திலும், பா.. கூட்டணியில் இடம் பெற்ற பா.. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஆனால் தி.மு. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மீதமிருந்த 37 தொகுதிகளிலும் ...தி.மு. வெற்றி பெற்றது. அதாவது இந்தியா முழுவதும் வீசிய மோடி அலை, 'அந்த' அளவுக்கு தான் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், தமிழ்நாட்டின் அரசியல் எந்த திசையில் பயணிக்கும்? என்பது தொடர்பான, கீழ்வரும் 'சிக்னல்', 2018 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு மூலமாக வெளிப்பட்டது.

ஜெயலலிதாவின் 'மர்மமான' மரணம் காரணமாகவும், அதன்பின் தமிழ்நாட்டின் ஆன்மீக சம்பிரதாயங்களை மிதித்து, கேலிக்கூத்தாக நடந்த இறுதி சடங்கின் காரணமாகவும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், குறிப்பாக சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவும், மத்தியில் ஆளும் பா..கவும் எந்த அளவுக்கு நம்பிக்கையின்மையை, ஊடக செல்வாக்கில் சிக்காத பெரும்பான்மை வாக்காளர்களிடம் இழந்து வருகின்றன? என்பதன் தொடக்க சிக்னலே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவாகும்.

அதிலும் ' பண நீக்கம்' மூலம் வந்த துயரங்களை, மோடி ஊழலை ஒழிப்பார் என்று நம்பி பொறுத்துக் கொண்டவர்கள் எல்லாம், மோடி ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான டெலிபோன் கேபிள் இணைப்புகளை துணிச்சலுடன் பூமியில் புதைத்து, நீண்ட காலம் அரசை முட்டாளாக்கியது உள்ளிட்டமெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம் அடுத்து அடுத்து விடுதலை ஆகி வருவதானதும், மீனவர் பிரச்சினையை மோடி தீர்ப்பார் என்ற நம்பிக்கையும் சீர் குலைந்து வருவதும், ஜெயலலிதாவின் மர்ம மரணம் விளைவித்த கோபத்துடன் சேர்ந்து, தமிழக பா..கவை உச்சத்தில் (maximum) வெறுப்பவர்கள் (அவர்களில் பலர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், தேர்தல் முடிந்தும் மோடியின் ஆதரவாளர்களாக பயணித்தவர்கள்) எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இனிவரும் தேர்தல்களிலும் பணக்கஷ்டத்தில் வாழ்பவர்கள் எல்லாம் அதிக பணம் தரும் நபருக்கும், பணத்தேவை இல்லாதவர்கள் எல்லாம் 'நோட்டாவிற்கும்' தான் வாக்களிப்பார்கள்; ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடியவர்கள் என்று செயல்பூர்வமாக நிரூபிக்கும் கட்சியானது அரசியல் வானில் வெளிப்படும் வரை; அது ரஜினியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும்.

திருமங்கலம் ஃபார்முலாவை வெற்றி பெற செய்த அதே வாக்காளர்கள் தான், அந்த ஃபார்முலாவை நம்பி பயணித்த தி.மு.கவை அடுத்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்கள்;

என்பதும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்
(‘தி.மு., பா.. தோல்விகளுக்கான 'மீடியா செயல்நுட்பம்'?’; http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

எனவே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், நோட்டா வாக்குகளின் எண்ணிக்கையானது, ஆதாய அரசியலை முன்னிறுத்தி பயணிக்கும் 'கட்சிகளின்' எதிர்காலத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கும், என்பது எனது கணிப்பாகும்.

...தி.மு. ஆதரவு வாக்குகளை விட, தி.மு. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு வாக்குகளே ஒப்பீட்டளவில் அதிகமாக விலை போகும், என்பதையும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு உணர்த்தியது. நானறிந்த வரையில், கிராமப்புறங்களிலும், நகர்ப்புற சாமான்யர்கள் மத்தியிலும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் எல்லாம், ஓபிஎஸ்-ஈபிஸ் இணைந்துள்ள கட்சியின் விசுவாசிகளாகவே தொடர்கிறார்கள். பணத்திற்கு விலை போகாத, தி.மு. ஆதரவு விசுவாசிகள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். தொகுதி வாக்காளர்களில் அத்தகையோரின் சதவீதம் மிகவும் குறைவாகும்.

தமிழ்நாட்டில் மனித உறவுகளிலும், உரையாடல்களிலும் 'லாபநட்ட கள்வர் கணக்கு' ஆதிக்கம் செலுத்தி வருவதால்;

கருத்துக்கணிப்பில் கேள்வி கேட்பவருக்கு என்ன லாபம்? எந்த பதில் சொன்னால் தனக்கு லாபம் அல்லது பாதிப்பு இருக்காது? என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்னே தான் பதிலே வெளிப்படும்.

தமிழ்நாட்டு சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் 2011 மற்றும் 2016 முதல் கடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரை, துக்ளக் தவிர்த்த, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம்,  பெரும்பாலும்  தி.மு. வை நம்ப வைத்து ஏமாற்றிய கணிப்புகளாக முடிந்ததற்கு, அதுவே காரணமாக இருந்தால் வியப்பில்லை

ஆனால் நடந்து முடிந்த தேர்தல்களில், தி.மு. அணியே பெரும் வெற்றி பெறும் என்று மற்ற கருத்துக்கணிப்புகளைப் போலவே, துக்ளக்கும் இந்த முறை வெளியிட்டிருக்கிறது. கூடுதலாக, துக்ளக் (30‍-04-2019) இதழில், மூத்த பத்திரிக்கையாளர்களான ஜி.சி.சேகர் (அவுட்லுக்) 'தி.மு.. அணி 25 முதல் 28 தொகுதிகளில் வெல்வதற்கும், .தி.மு.. அணி 11 தொகுதிகள் முதல் 14 வரை வெல்லும்' என்றும், 'தராசு' ஷ்யாம் 'தி.மு.. அணி 25 தொகுதிகளுக்குக் குறையாமல் வெல்லும் நிலை உள்ளது. .தி.மு.. 3 முதல் 5 தொகுதிகளிலும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5 முதல் 8 தொகுதிகளிலும் வெல்லக் கூடும்' என்றும், டி.ராமகிருஷ்ணன்: (THE HINDU) 'இந்த முறை .தி.மு.. கூட்டணி 12 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.' என்றும், ரங்கராஜ் பாண்டே (‘சாணக்யாசமூக வலைத்தள நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி) '.தி.மு.. அணிக்கு மொத்தமாக 12 முதல் 14 தொகுதிகளும், தி.மு.. அணிக்கு 25 முதல் 27 தொகுதிகளும் கிடைக்கலாம்' என்றும் கணித்துள்ளனர்.

நான் மேற்குறிப்பிட்ட கணிப்புகளில் இருந்து, மேலே குறிப்பிட்ட காரணங்களாலும், கீழ்வரும் காரணங்களாலும் மாறுபடுகிறேன்.

இரண்டு அணிகளிலுமே ஆர்.கே.நகர் பாணியில் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை ஊடகங்களும், தேர்தல் 'பறக்கும் படை' கைப்பற்றிய 'பணம், தங்கம் உள்ளிட்ட இன்னும் பல பொருள்களும்' உணர்த்தியுள்ளன. கடந்த தேர்தலில் அவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றை ஊழல் வழிகளில் மீட்ட அனுபவம் உள்ளவர்களுக்கு, அதே பாணியில் இந்த முறை மீட்கும் துணிச்சல் இருந்தாலும் வியப்பில்லை. ஏற்கனவே கைப்பற்றபட்டவை எல்லாம், யார், யாருக்கு எந்த சான்றுகளின் அடிப்படையில் திருப்பித்தரப்பட்டன? என்பவை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளிவந்து, அவற்றில் 'போலியான' சான்றுகள் பற்றி தெரிவிப்பதற்கு அனுமதித்து, உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றிய நம்பிக்கை பொதுமக்களுக்கு வரும் வரை, 'அந்த' துணிச்சலானது தொடரும்; ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் பெற்ற வெற்றியில் தேர்தல் கமிசனின் மதிப்பானது கேள்விக்குறியாகி விட்ட சூழலில்;
(https://www.bbc.com/tamil/india-42474522 )

தமிழ்நாட்டில் 'அம்மா'வின் வாக்கு வங்கி, ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டணி தலைமைக்குக் கிட்டியிருக்கிறது

தமிழ்நாட்டில் பொதுவாக‌ அ.இ.அ.தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது தி.மு.கவை விட வலிமையானதாகும்; (http://tamilsdirection.blogspot.com/2017/04/

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடம் பெறாத சசிகலா படத்துடன் தினகரன் கட்சியானது பிரச்சாரம் மேற்கொண்ட சூழலில்;

என்ற அடிப்படையில், மேலே குறிப்பிட்ட துக்ளக் உள்ளிட்ட அனைத்து கணிப்புகளுக்கும் மாறாக, பாராளுமன்ற தொகுதிகளில் ...தி.மு. அதிகமாகவும், சட்டமன்ற தொகுதிகளில் மிக அதிகமாகவும் வெற்றி பெற வாய்ப்புள்ளது;

இரு அணி கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்கும் தி.மு., ...தி.மு. வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்புள்ளது;

காங்கிரஸ் பாஜக நேரடியாக மோதும் தொகுதிகளில் பா.. வெற்றி பெற வாய்ப்புள்ளது;

விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கும் தி.மு. அணி வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது;

என்பதும் எனது கணிப்பாகும். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி 'ஃபார்முலாவை' முழுமையாக 'சாதித்த' 'மிக சில' வேட்பாளர்கள் வெற்றி பெறுவதும் நிச்சயமாகும்.

இந்திய விடுதலைக்கு முன், பிரிவினை நோக்கில் தமிழ்நாட்டில் வலிமையாக வளர்ந்த மென் சக்தியிடம், 1952 பொதுத்தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சியானது, அந்த தோல்வியைச் சரியான தேசக்கட்டுமான (Nation Building) திசையில் எதிர்கொள்ளாமல், சுயநல சந்தர்ப்பவாதம் வழியில் முதலில் எதிர்கொண்டு, பின் 1967க்குப் பின், 'திராவிட' ஊழலை அந்த சந்தர்ப்பவாத அரசியல் பேரத்திற்குப் பயன்படுத்தி, இன்று இந்தியாவையே தமிழ்நாட்டின் 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் விளைவில் முடிந்துள்ளது; 'திராவிட' ஊழல் குற்றவாளிகள் எல்லாம், 'தம்மால் முடியவில்லையே' என்று வெட்கப்படும் அளவுக்கு, தமிழ்நாட்டில் 'தேசிய' ஊழல் குற்றவாளிகள் வெளிப்படுவதற்கும், அதுவே காரணமானது

இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை(Soft Power) வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது? பிரிவினை சமரசப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தொடங்கி, வளர்ந்து, இன்று (தி.மு.க/தமிழ் அமைப்புகளின் 'பிரபலங்கள்' எவர் குடும்பத்திலிருந்தும் 'பங்களிப்பற்ற') 'வற்றி' வரும் தீக்குளிப்புகள்/தற்கொலைகள் மூலமாக, எவ்வாறு 'அந்த' மென்சக்தியும் வற்றி வருகிறது? ஆதாய அரசியலில் அந்த மென்சக்தியானது நீர்த்துப் போன போக்கில், அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது?’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா?

எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.. உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)

No comments:

Post a Comment