Wednesday, May 29, 2019


கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? (2)      


தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பில் கமல்ஹாசன் விதூசகனா?





"எல்லோரும் மறந்திருந்த கோட்ஸேவை, கமல்ஹாஸன்ஹிந்து தீவிரவாதிஎன்றதன் மூலம் எல்லோருக்கும் நினைவுபடுத்தி விட்டார். சரி, கோட்ஸே காந்தியை ஏன் கொன்றான்?" என்ற கேள்விக்கான விளக்கமானது, துக்ளக் (28-05-2019) இதழில் வெளிவந்துள்ளது. அதற்கு ஏதும் மறுப்பு வருமானால், அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வமுடன் உள்ளேன்.

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே." கமல்ஹாசன்


கோட்சே செய்தது அரசியல் கொலை. எனவே ஆங்கிலத்தில் கோட்சேயை 'அசாசின்' (Assassin) என்று தான் குறிப்பிட முடியும். (Assassin: a person who murders an important person for political or religious reasons.; https://www.google.com/search?ei=30HfXLK9KpTGvQSi5rR4&q=assassin&oq=assasin&gs_l=psy-ab.1.5.0i67l2j0i10l8.2557.9055..12323...0.0..0.205.1447.20j1j1......0....1..gws-wiz.....0..0j0i131i67j0i131j0i3.rgjyl3GEfKI)

ஆங்கிலத்தில் 'Assassin' என்ற சொல்லிற்கு ஒத்த பொருள் (synonyms) உள்ள சொற்கள் வருமாறு:

synonyms:     murderer, killer, executioner, gunman, butcher, slaughterer, liquidator, exterminator, terminator; informal hitman, contract man, hired gun; informal button man; literary slayer; dated homicide

மேற்குறிப்பிட்ட வரிசையில் 'தீவிரவாதி' (Terrorist) இடம் பெறவில்லை. எனவே கோட்சேயை தீவிரவாதி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதானது, அவரின் அறியாமையைக் காட்டுகிறது.

'தீவிரவாதி' என்ற சொல்லின் பொருளுக்கு உதாரணம் அடுத்து வருகிறது.

1974இல் யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடானது, இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா  அரசின் அடக்குமுறைக்கு உள்ளானது. சிறிமாவோ பண்டாரநாயகா அதரவுப் போக்கில்,அந்த மாநாட்டிற்கு எதிர்ப்பாக பயணித்தவர் அன்றைய யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா. அதற்காக அவரைச் சுட்டுக் கொன்று, தலைமறைவானவர் தான் பிரபாகரன். கோட்சேயைப் போல, பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பின்றி கொலை செய்து விட்டு, எதிர்ப்பின்றி கைதாகி, நீதிமன்றத்தில் தமது கொலைக்கான காரணத்தை விளக்கி, தூக்கு தண்டனையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவில்லை பிரபாகரன்.

‘In 1975, after becoming heavily involved in the Tamil movement, he carried out the first major political assassination by a Tamil group, killing the mayor of Jaffna, Alfred Duraiappah, by shooting him at point-blank range when he was about to enter the Hindu temple at Ponnaalai. The assassination was in response to the 1974 Tamil conference incident, for which the Tamil radicals had blamed Duraiappah,[30] because he backed the then ruling Sri Lanka Freedom Party.’ (https://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran )

எனவே பிரபாகரனை 'தீவிரவாதி' (Terrorist) என்று குறிப்பிடுவதற்கு நியாயம் இருக்கிறது. அவ்வாறு குறிப்பிடும்போது கூட, 'ஒரு கிறித்துவ மேயரைக் கொன்ற, இந்து தீவிரவாதி பிரபாகரன்' என்று சம்பந்தப்பட்டவர்களின் மதங்களைக் குறிப்பிடுவதானது அநாகரீகமான விசமத்தனமாகும். ஏனெனில், அந்த அணுகுமுறையானது, கொலைக்குள்ள்ளானவரின் கிறித்துவ அபிமானிகள் மத்தியில், கொலை செய்தவரின் இந்து அடையாளத்தில் உள்ள மக்கள் மீது பகைமையைத் தூண்டுவதாக அமையும்.

கோட்சேயின் நீதிமன்ற வாக்குமூலத்தினை கமல்ஹாசன் படித்திருக்கிறாரா? என்ற சந்தேகத்தையும் கமல்ஹாசன் எழுப்பியுள்ளார். ஒரே மாதிரித் தவறைப் புரிந்திருந்தாலும், காந்தி 'அந்த' தவறைப் புரிந்த இந்துக்களைக் கண்டித்தது போல, 'அந்த' தவறைப் புரிந்த முஸ்லீம்களைக் கண்டிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, காந்தியின் பாரபட்ச அணுகுமுறையானது, முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு சாதகமாகி விட்டதை உரிய சான்றுகளுடன் கோட்சே விளக்கியுள்ளார்.

“One of the conditions imposed by Gandhi for his breaking of the fast unto death related to the mosques in Delhi occupied by the Hindu refugees. But when Hindus in Pakistan were subjected to violent attacks he did not so much as utter a single word to protest and censure the Pakistan Government or the Muslims concerned. Gandhi was shrewd enough to know that while undertaking a fast unto death, had he imposed for its break some condition on the Muslims in Pakistan , there would have been found hardly any Muslims who could have shown some grief if the fast had ended in his death.” -Godse 

பிரபாகரனின் மேற்குறிப்பிட்ட கொலையை நியாயப்படுத்தியதை, விடுதலைப்புலிகள் வெளியிட்ட நூல்களில் படிக்கலாம். அதைப் படித்து விட்டு, கோட்சேயின் நீதிமன்ற வாக்குமூலத்தைப் படிப்பதை, நான் பரிந்துரைக்கிறேன். இரண்டு கொலைகளுமே தவறானவை என்றாலும், பிரபாகரன் செய்த கொலைக்கான நியாயங்களை விட, கூடுதல் நியாயங்கள் கோட்சேயின் வாக்குமூலத்தில் இருக்கின்றன, என்பதே எனது ஆய்வு முடிவாகும். ஆர்வமுள்ளவர்கள் இரண்டையும் படித்து, எனது ஆய்வு முடிவினை மறுத்து கீழே பதிவிடலாம்.

கமல்ஹாசனை தமிழ்நாட்டு பிரபாகரனாகக் கருதி, கமல்ஹாசன் படத்தினையும், பிரபாகரன் படத்தினையும் அருகருகே அச்சிட்ட சுவரொட்டிகளை, கமல்ஹாசன் ரசிகர்கள் திருச்சி நகரம் முழுவதும் ஒட்டிய செய்தியும் வெளிவந்துள்ளது. அது சரியென்றால், கமல்ஹாசன் ஒரு தீவிரவாதியாக பயணிக்கத் தொடங்கி விட்டாரா? என்ற கேள்வியை எழுப்பவதும் தவறாகுமா

(‘Viduthalai Chiruthaigal Katchi leader (VCK) Thol Thirumavalavan, whose followers used to equate him with Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran, has a strong competitor in actor Kamal Haasan now. The fans of the ‘Ulaganayagan’ has added one more title - Kalaiyulaga Porali (Warrior in artistic arena) - for him. To provide an effect to the title, they even added the portrait of the slain LTTE chief and posters depicting the two have appeared in every nook and corner of the city,’; https://www.pressreader.com/ )

காஷ்மீர் பிரச்சினையிலும் கமல்ஹாசன் எடுத்துள்ள நிலைப்பாடும் தீவிரவாத ஆதரவு நிலைப்பாடே ஆகும்.

கமல் " 'காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லீம்களுக்கு பிரியமில்லை என்றால் பிரிந்து போகட்டுமே'  என்று அப்போது எழுதியதைப் பார்த்து, சோ இந்த மாதிரி விஷயங்களில் அவசரப்படாதே என்று எச்சரித்தார்." (பக்கம் 04, தமிழக அரசியல், 26.07.2017)

கருத்துரிமை என்பது எந்த நெருக்கடியுமில்லாத சமூக சூழலில் மட்டுமே, சாத்தியமாகும். ஆயுதப்போராட்டத்தில் சிக்கிய எந்த பகுதியிலும் வாழும் மக்களுக்கு, அந்த சமூக சூழல் கிடையாது.

உதாரணமாக, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமானபேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் 'The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama  & Rajini Rajasingham Thiranagama: Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy- By D.B.S. Jeyaraj; http://dbsjeyaraj.com/dbsj/archives/33112   


இந்தியாவுடன் 1975இல் இணைந்து, சுயநல தேசியக் கட்சி அரசியலில் சிக்காமல், முன்னேறியுள்ள சிக்கிமைப் போல், காஷ்மீரும் இன்னொரு சிக்கிமாக வளர்ந்திருக்கக் கூடும்; பாகிஸ்தான் என்ற நாடு, காலனிய சூழ்ச்சியில் உருவாகாமல் இருந்திருந்தால். (https://en.wikipedia.org/wiki/Sikkim)

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால், பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்திருக்குமா? என்பதும் விவாதத்திற்குரியதாகும்.

வல்லபாய் படேல் இந்திய பிரதமராகி, இருந்தால், காஷ்மீரில் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு போயிருக்குமா? மேலே குறிப்பிட்ட பாதகமான சமூக சூழலில், பிரிவினைக்குழுக்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான மோதலில், காஷ்மீர் மக்கள் சிக்க நேரிட்டிருக்குமா?

வல்லபாய் படேல் அன்று உள்துறை அமைச்சராக இரும்பு மனிதராக செயல்பட்டிருக்காவிட்டால், இன்று இந்தியாவில் சுமார் 50க்கும் அதிகமான காஷ்மீர்கள் உருவாகியிருந்து, ஆப்பிரிக்கா போல, இந்தியா சீரழிந்திருக்குமா, சீரழிவுக்கு காரணமான 'மக்கள் போராட்டங்களின்' தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், 'பாதுகாப்பான' வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டு
(‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’ ; http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

என்பது போன்ற கேள்விகளை, தமது மனசாட்சிக்குட்பட்டு, கமல்ஹாசன் எழுப்பி, விடைகள் காண வேண்டும்.’ (‘அறிவுபூர்வமான விவாதத்திற்கு உட்படுத்தியாக வேண்டும்; காஷ்மீர் பிரிவினை கோரிக்கைக்கு, கமல்ஹாசன் ஆதரவா?’; https://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-madmad-tamilnadu.html )

கமல்ஹாசன் தன்னை 'பெரியார்' ஆதரவாளர் போல காண்பித்து வருவதிலும், அவரின் அறியாமை வெளிப்பட்டு வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோட்சேக்கு முன், நானறிந்தது வரையில் இந்தியாவிலேயே முதன் முதலாக, கோட்சேயை விட இன்னும் மோசமாக‌. காந்தியின் இரட்டை வேடப் போக்குகளையும், அவரது முயற்சிகள் எல்லாம் சமூகத்திற்கு கேடாக முடியும் அபாயத்தையும் எச்சரித்து, .வெ.ரா அவர்கள் நிறையகட்டுரைகளும், 'சித்திர புத்திரன்' என்ற புனைப்பெயரில் கேலி செய்தும் எழுதியிருக்கிறார். 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் ஆரவமுள்ளவர்கள் படித்து வியப்படையலாம்.

எனவே 'காந்தியின் கொள்ளுப் பேரனாக' தம்மை அறிவித்துள்ள கமல்ஹாஸன், மேற்குறிப்பிட்ட .வெ.ரா அவர்களின் காந்திக்கு எதிரானகருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியிலும் தாமாகவே சிக்கிக் கொண்டார்.

அதாவது .வெ.ராவின் கொள்ளுப் பேரனான கமல்ஹாசனை, காந்தியின் கொள்ளுப்பேரனான கமல்ஹாசன் சந்தித்து பேசுவது போல, ஒரு கற்பனையான நகைச்சுவை உரையாடலை, 'துக்ளக்' சத்யா எழுதினால்அது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையாக இருக்கும்.

'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்: கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’ என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவு கீழ்வருமாறு:


‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்தும் வகையில்;

தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் பொது அரங்கில் வெளிப்படுபவைகள் எல்லாம், ''it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை உருவாக்கும் வகையில் வெளிப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாகும் திரைப்படத்தில், மேற்குறிப்பிட்ட நகைச்சுவை உரையாடலானது, சிறப்பிடம் பெறும் வகையில் அமையக்கூடும், என்பதும் எனது கணிப்பாகும்.

கடந்த தேர்தல் முடிவுகளின்படி, கமல்ஹாசன் நிச்சயமாக, 'நடுவில் காணாமல் போகும் காமெடியன்' என்ற வாய்ப்பினை இழந்து விட்டார். 1967இல் முளை விட்டு, 1969 முதல் உரம் பெற்று, 1991 முதல் வீரியம் பெற்ற ஊழல் சுனாமியின் மரணப்போக்கானது துவங்கி விட்டது. 'அந்த' மரணம் நடைபெறப் போகும்போது அரங்கேறும் சம்பவங்கள் தான், ' 'it’s a Mad Mad Mad Tamilnadu' ' திரைப்படத்திற்கான உச்சக்கட்ட காட்சியாக (Climax) அமையும். அதுவரை அரசியலில் நீடித்தாக வேண்டிய நெருக்கடியில் கமல்ஹாசன் சிக்கி விட்டார். அதில் அவர் காமெடியனாக வெளிப்பட்டாலும், 'அந்த' பாத்திரமும் மிகவும் போற்றத்தக்க பாத்திரமாகவே அமையும். அதற்கான காரணத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

சமஸ்கிருதத்தில் 'காமெடியன்' ('விதூசகன்') என்பவர் மிகுந்த புத்திகூர்மையுடன் சிரிக்க வைப்பவர் அவார். விதூசகன் என்பவர் பிராமணர் ஆவார், (Vidūṣaka (विदूषक) is the name of a Brāhman who helped the king Ādityasena when he was in need of shelter, according to the Kathāsaritsāgara, chapter 18.)

Vidūṣaka : the humorous companion and confidential friend of the hero in a play, who excites mirth by his quaint dress, speeches, gestures, appearances &c., and by allowing himself to be made the butt fo ridicule by almost everybody; https://www.wisdomlib.org/definition/vidushaka

'‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF

ஹாலிவுட் திரைப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் தான், கொள்ளையைடித்த பணம், காற்றில் பறக்க‌, பணத்தை விரட்டி கண்டவர்களின் கைகளுக்கு போகும்; (http://tamilsdirection.blogspot.com/2017/08/its-mad-mad-mad-tamilnadu.html


'it’s a Mad Mad Mad Tamilnadu' திரைப்படத்திற்கான தொடக்கக் காட்சியாக, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் 'மர்மமான மரணமும், அதைத் தொடர்ந்து ஊழலில் கொள்ளையடித்த பணத்தைத் தண்ணீராக செலவழிப்பதும் வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆரின் ஆட்சி காலம் தவிர்த்து, 1969 முதல் தி.மு.க ஆட்சியில் கருணாநிதியின் குடும்ப செல்வாக்கிலும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சசிகலா குடும்ப செல்வாக்கிலும், தமிழ்நாடு சிக்கியிருந்தது. ஜெயலலிதாவின் மரணம் காரணமாக, அந்த போக்கில் இருந்து விடுபட்டு, 'அந்த' இரண்டு குடும்பங்களின் நேரடி செல்வாக்கில் சிக்காத ஆட்சியானது இப்போது நடைபெறுகிறது. அந்த ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் தமது குடும்ப செல்வாக்கில் கொண்டு வரும் நோக்கில், ஆர்.கே.நகர் தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் வரை, அடுத்த கொள்ளைக்கான முதலீடாகக் கருதி, ஏற்கனவே கொள்ளையடித்த பணமானது 'பல வழிகளில்' தண்ணீராக செலவழிக்கப்பட்டு வருகிறது; மீண்டும் மோடி பிரதமராக மாட்டார், என்ற நம்பிக்கையில். 

முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டில் 'அமாவாசைகளின் புரட்சியைத் தூண்டி விட்டுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.htmlகடந்த தேர்தலில், 'அமாவாசைகளின் காட்டில்' பெரும் 'பணமழை' பெய்துள்ளது. தமிழ்நாடு ஊழலில் இருந்து விடுபடும் வரையில், 'அந்த' மழையும் தொடரும். 'அமாவாசைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டிய நெருக்கடியில்', கட்சித் தலைவர்களும் சிக்கிப் பயணிக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன

'தமிழக முதல்வருக்கு எதிர்ப்புகள் எதிர்ப்பாக இல்லை; பிரச்னைகள் பிரச்னைகளாக இல்லை; போட்டிகள் போட்டிகளாக இல்லை; காரணம், .தி.மு. எம்.எல்.ஏக்கள் யாரும் நான்கு ஆண்டுப் பதவியை இழக்கத் தயாராக இல்லை. அதனால் மன்னார்குடியினரும், மு..ஸ்டாலினும் கூட என்ன செய்வது என்று திணறுகிறார்கள்.' ( துக்ளக் கேள்வி - பதில் 9.8.2017)‌

தமிழ்நாட்டில்  யார் ஆட்சி செய்தாலும் 'அமாவாசை எம்.எல்.ஏக்களுக்கு' பயந்தே ஆட்சியில் நீடிக்க முடியும்; கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், கனிவளங்கள் இழப்பு, ஊழல் சுனாமி எல்லாம் தொடரும்; தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடு நொறுங்கும் வரையில்.

கடந்த முறை தமது அரசில் ஊழல் திமிங்கிலங்களைக் காப்பாற்றிய 'களைகளை' அகற்றி, ஊழல் ஒழிப்பில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் பிரதமர் மோடிக்கு கூடியுள்ளது.அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் பிரமீட்டினை ஒழிக்காமல்;

தமிழ்நாட்டில் பா.. 'நோட்டா'விடம் தோற்கும் போக்கில் இருந்து விடுபட முடியாது. தமிழ்நாட்டில் ' வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே; அதற்கான சமூக சூழல் கனியும் கட்டத்தில். (http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_12.html )

எனவே அடுத்த கொள்ளைக்கான முதலீடாகக் கருதி செலவழித்த பணம் விரயமாகி, 'எஞ்சிய' பணத்தை எப்படி காப்பாற்றுவது? என்பது தொடர்பான காட்சிகள் உச்சக்கட்டத்தினை (climax) நோக்கி நெருங்கி வருகின்றன; ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மத்தின் முடிச்சுகளும் அவிழும் வகையில்.

'கோட்சே' மற்றும் 'காஷ்மீர்' பிரச்சினைகளை, பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து மீட்கும் முயற்சிக்கு, கமல்ஹாசன் 'பிள்ளையார் சுழி' போட்டு விட்டார்; விதூசகனைப் போலவே கேலிக்கு உள்ளாகி.


தமிழ்த் திரைப்படத்தில் 'விதூசகன்' பாத்திரத்திற்கு இலக்கணமானவர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார். தமிழ்நாட்டு அரசியலில், ஊழல் ஒழிப்பில் கமல்ஹாசன் அவ்வாறு நீடித்தால், அவருக்கு வரலாற்றில் நிச்சயமாக சிறப்பிடம் இருக்கும்.

குறிப்பு:

'இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா எதிர்த்த, 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணித்த 'வாழ்வியல் புத்திசாலியாக வாழ்ந்த' சிவத்தம்பி, பின் விடுதலைப் புலி பிரபாகரன் கை ஓங்கிய காலத்தில், திருச்சி கே.கே.நகரில் வாழ்ந்த பிரபாகரனின் பெற்றோர்களை தரிசித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக 'ஞானஸ்நானம்' பெற்றார்.' என்பதை, அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை இனியும் தாமதப்படுத்த முடியுமா? (https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_13.htmlசிவத்தம்பியிடம் வெளிப்பட்ட 'இரட்டைவேடப் புத்திசாலித்தனமானது', யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவிடமும் வெளிப்பட்டிருந்தால், அவர் மரணமடைந்திருப்பாரா?

No comments:

Post a Comment