Wednesday, July 12, 2017

மடியில் கனமிருந்தால், டிஜிட்டல் யுகத்தில்;


அந்தரங்கம் எல்லாம் தொந்திர(வு)ங்கமே


திருச்சி என்.ஐ.டி, சாஸ்திரா பல்கலைக்கழகம் மூலம் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் (Ph.D research scholars) தொடர்பில் உள்ள எனக்கு (http://tamilsdirection.blogspot.sg/2017/06/next-phase-3.html );

அண்மையில் ஏற்பட்ட ஒரு அனுபவமானது, இங்கு பகிரத்த‌க்கதாகும்.

ஒரு ஆய்வு மாணவர், தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை (Patent) பெறுவது தொடர்பாக, என்னிடம் ஆலோசனை கேட்டார். அந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே வேறு எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை, என்பதையும், தனது இணைய தேடலில் உறுதிப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். பின் அதற்கான எனது இணைய தேடலில், அந்த கண்டுபிடிப்பானது, வியாபாரத்திற்கு வந்து விட்டது உறுதியானது. (http://www.quividi.com/products-services/ ) எனவே காப்புரிமைக்கு விண்ணப்பிக்காமல், சில மாற்றங்களுடன் ஆய்வு இதழுக்கு கட்டுரையாக அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.

பொது இடங்களில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகையை கடந்து செல்பவர்கள் பற்றி, நம்ப முடியாத அளவுக்கு, அவர்களைப் பற்றிய தகவல்கள், மேலே குறிப்பிட்ட தொழில்நுட்ப முறையில் சேகரிக்கப்படுகின்றன.

இது போன்று சேகரிக்கப்படும் தகவல்கள், சமூக வலைதளங்களிலும், ஈ.மெயில் மூலமாகவும் நாம் வெளிப்படுத்தும் தகவல்கள், நமது ஸ்மார்ட் ஃபோன் ஆடியோ/வீடியோ உரையாடல்கள், Global Positional Systems (GPS), கைரேகை உள்ளிட்ட (பாஸ்போர்ட் விண்ணப்ப) அங்க அடையாளங்கள், உள்ளிட்ட இன்னும் பல வழிகளில் நம்மை பற்றிய தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகின்றன? மீறப்படுகின்றன? என்பவையெல்லாம், உலக அரங்கில் விவாதத்தில் உள்ளன? எனவே 'ஆதார் அட்டை' மூலம் மட்டுமே, நமது அந்தரங்கம் (Privacy) வெளியாகும் என்று பயப்படுவது அறியாமை ஆகும்.

கறுப்புப் பணத்தையும், கள்ளச் சந்தையையும் ஒழிக்க, மோடி அரசால் கொண்டுவரப்பட்ட 'பண நீக்கம்' (Demonetization) செயல்பாட்டை, ஊழலில் 'மூழ்கிய' வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்,  எந்த அளவுக்கு சீர் குலைத்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் எல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு," சிறப்பு சமையல் அறை வசதி; அவர் விரும்பும் உணவு செய்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக", சிறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.(https://in.news.yahoo.com/sasikala-gets-vip-care-bengaluru-192844268.html  & http://tamil.oneindia.com/news/india/sasikala-changed-the-prison-into-poes-garden/articlecontent-pf251870-289361.html)

எனவே ஆதார் அட்டை உள்ளிட்ட நம்மைப் பற்றிய, மேலே குறிப்பிட்ட வழிகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் எல்லாம், 'பயிரை மேயும் வேலிகள்' மூலம், 'இரையாக' வாய்ப்பிருப்பது பற்றியும், ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மோடி அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சிகள் வெற்றி பெற்றால் தான், 'பயிரை மேயும் வேலிகள்' துணையுடன், கறுப்புப் பணம், கள்ளச் சந்தை, பயங்கரவாதம் வலம் வருவது முடிவுக்கு வரும்.

சாதி, மத பாரபட்சமற்ற வளர்ச்சிப் பாதையில், இந்தியா பயணிக்க முடியும்.

மோடி அரசில், சுதேசி நலன்களுக்கு எதிரான போக்குகளை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது, வெற்றிகள் பெற்று வருவது, நம்பிக்கையுட்டும் போக்காகும். (The Modi governments reform agenda continues to face opposition from the RSS. http://www.businesstoday.in/magazine/features/the-modi-governments-reform-agenda-continues-to-face-opposition-from-the-rss/story/244680.html  )

ஆதார் அட்டை உள்ளிட்ட பொதுப்பிரச்சினைகளில்,விமர்சனப் பார்வையின்றி, 'வெறுப்பு அரசியலில்', மோடி அரசை எதிர்ப்பதானது, மேலே குறிப்பிட்ட 'பயிரை மேயும் வேலிகள்' நலன்களுக்கு உதவும் ஆபத்தாகும் வாய்ப்பும் இருக்கிறது.  

மோடி அரசில் ஊழல் ஒழிப்பில் தமிழ்நாடு எந்த அளவுக்கு பலன் பெற்றுள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மத்திய அரசு, மாநில முதல்வர்களின் கட்டுப்பாட்டை மீறி, எந்த அளவுக்கு தமிழகமானது, சட்டத்திற்கு அப்பாற்ப்பட்ட ஊழல் பிரமீடு வலைப்பின்னலில் சிக்கியுள்ளது? என்பதற்கு  சசிகலா குடும்ப அரசியல் 'கூவத்தூர்' நிகழ்ச்சியானது, வரலாற்று சாட்சியாகி விட்டது.

‘தமிழ்நாட்டில் தரகர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், நேர்மையற்ற வழக்காடிகள் (unscrupulous litigants) அடங்கிய 'நன்கு மசகிடப்பட்ட (ஊழல்) எந்திரம்' (well-oiled machine), 'பெரிய அளவில்' (mega racket), செயல்பட்டு வருவதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, அம்பலப்படுத்தியுள்ளது. (http://timesofindia.indiatimes.com/city/chennai/magistrates-cannot-direct-issue-of-birth/death-certificates-high-court/articleshow/58188926.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section)

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', அது போன்ற ஊழல் எந்திரங்கள் செயல்பட்டு, ஆட்சியில் தலைமையில் இருப்பவர்களுக்கு 'அதிக லாபங்களுடனும்', அடுத்தடுத்த கீழ் மட்டங்களுக்கு 'அந்தந்த தகுதிக்கான' லாபங்களுடனும், உலகிலேயே 'தனித்துவமான ஊழல் பிரமீடு' தமிழ்நாட்டில் செயல்படுகிறதா? என்பது தொடர்பாக, ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், 'தரமுள்ள' பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டால், என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும். ஜனநாயகத்தின் தூண்களின் கண்களில் மண்ணைத் தூவி, அந்த 'ஊழல் பிரமீடின்' துணையுடன், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் நிகழ்ந்ததா? என்ற கேள்விக்கு, பாரபட்சமற்ற விசாரணை மூலமே விடை கிடைக்கும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

மேலே குறிப்பிட்டவாறு, டிஜிட்டல் யுகத்தில் எவரின் அந்தரங்கம் தொடர்பான தகவல்களும் 'எந்த'(?) வழியிலும், எந்த நேரத்திலும் வெளிப்படலாம்;

என்பதற்கான ஒரு சான்றாக கனிமொழி எம்.பியின் கீழ்வரும் உரையாடலானது, ஊடகங்களில் வெளிவந்துள்ளது. (https://www.youtube.com/watch?v=udNHT8dAK9g ) அந்த உரையாடலில் வெளிப்பட்டவை தொடர்பாக, முறையான விசாரணை நடந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? என்பதற்கு, வருங்காலத்தில் விடை கிடைக்கலாம்.

எனவே தமிழ்நாட்டில் ' வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே; அதற்கான சமூக சூழல் கனியும் கட்டத்தில்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்காமல், மத்திய அரசு தமிழ்நாட்டில் அந்த 'ஊழல் பிரமீடை' ஒழிக்க முடியாது; 'மடியில் கனம் உள்ளவர்கள்' எல்லாம், டிஜிட்டல் தொழில்நுட்ப வலையில் சிக்கியிருந்தாலும்.   

'மடியில் கனம் உள்ளவர்கள்' எல்லாம், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தாலும்,  சாகும் வரை, அச்சத்துடனேயே வாழ வேண்டிய நெருக்கடியானது;

டிஜிட்டல் யுகத்தில், 'தந்திரம்' மிக்க‌ மாணவர்கள், இளைஞர்கள் மட்டத்தில், 'சமூக அழுத்தம்' மூலம், வளர்ந்து வருகிறது. (‘இவன் தந்திரன்’ - சூது கவ்வும்' படத்தை விட, அதிக பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். ஆனால்; திரை விமர்சனம்; http://tamil.thehindu.com/cinema/cinema-others/ )

எனவே 'பயிரை மேயும் வேலிகளும்', அந்த தொடர்புகள் மூலம் உருவான 'திடீர்' பணக்காரர்களும், சாகும் வரை அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டு, தமது குடும்பத்திலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் கிடைக்கும் 'திடீர்' மரியாதைகளை, 'அனுபவிக்க வேண்டிய ஜோக்கர்களாக' வலம் வரும் காலமும் நெருங்கி விட்டது.

சாதாரண மனிதர்களும் கூட பணத்தாசையில், நிலை தடுமாறும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படம் ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF )

நிகழ்கால தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள் எல்லாம், அவரின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும், மரணத்திற்கும் உரிய விசாரணை கோராமல், மரணத்திற்குப் பின் சசிகலாவின் காலில் போட்டி போட்டு விழுந்ததும்;

பல கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சசிகலாவை 'தரிசித்து' ஆதரவு தெரிவித்ததும், 'இந்தியா டுடே' உள்ளிட்ட ஊடகங்கள் கொடுத்த 'திடீர்' முக்கியத்துவமும்;

பின் சசிகலா சிறை சென்றதும், அவரை ஒதுக்கி ஆட்சியில் 'பலன்' பெற முயற்சிப்பதும்;

மேற்குறிப்பிட்ட 'திடீர்' முக்கியத்துவத்தின், 'திடீர்' மறைவும்; 

அவரவருக்கு கிடைக்கும் ஆதாய அடிப்படையில், சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்தும், ஆதாயத்தை கூட்ட எதிர்த்தும், பின் அதிகரித்த ஆதாயத்தில் ஆதரித்தும், ஊடக எழுத்தாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் போடும்  'குட்டிக்கரணங்கள்';  

மேலே குறிப்பிட்ட பின்புலத்தில், தமிழ்நாட்டில் 'திடீர்' பணக்காரர்களுக்கு, அவர்களின் குடும்பத்திலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் கிடைக்கும் 'திடீர்' மரியாதை, 'திடீர்' பணக்காரர்களின் முதுகுக்குப் பின்னால், 'அதே' சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் 'கிசு கிசுக்கப்படும்' கிண்டல்கள், சசிகலா நாம் பணியாற்றும் சிறைக்கு வர மாட்டாரா? என்று சிறை அதிகாரிகள் ஏங்கும் காட்சிகள்(http://tamil.oneindia.com/news/india/there-are-5-rooms-prison-sasikala-prison-289858.html) 

ஊழலை ஒழிப்பதாக பிரதமர் மோடி பேசிய பின்னணியுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் மு.க அழகரியைச் சந்தித்து ஆதரவு கேட்டது போன்ற‌ இன்னும் பல சம்பவங்களை எல்லாம்;

நகைச்சுவை மிக்க மாலையாக கோர்த்து; 

இடையிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் ஊழல்களையும், குறுக்கு வழியில் மதிப்பெண்கள் பெற்று மருத்துவர்கள் ஆவதையும், மருத்துவரின் கவனக்குறைவால்/மருத்துவ அறிவுக் குறைவால், நோயாளிகள் மரணமடைவதையும், மருத்துவமனைகளில் உள்ள பெயர்ப் பலகைகளில், மருத்தவரின் கல்வித்தகுதிக்கு அருகில், மருத்துவர் படித்த கல்லூரியின் பெயரையும் அச்சிட்டால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பு முடித்த மருத்துவர்களை நோக்கி, நோயாளிகள் குவிவதையும், கற்பனையாக நகைச்சுவை காட்சிகளாக்கி,

'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன: 

‘அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 'கருணாநிதி பட்டுக் கூட்டுறவு சங்கம்' எனக் கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, 'எப்படி கருணாநிதி பெயரை உச்சரிக்கலாம்' என, எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஓ.எஸ்.மணியன், 'அவர் எங்கள் ஊர்க்காரர்' என, ஊர் பாசம் காட்ட, தி.மு.க.,வினர் திகைத்தனர்.


அமைச்சர்கள் பதிலுரையின் போது, கருணாநிதியை விமர்சிப்பதையும், தி.மு.க., அரசு மீது, கடுமையான குற்றங்கள் சுமத்துவதையும் தவிர்த்தனர். சட்டசபையில் ஒரு நாள், துரைமுருகன் எழுந்து, அமைச்சர் உதயகுமாரை, 'லாபி'க்கு வரும்படி கூற, அமைச்சர் ஓடிச் சென்றதை காண முடிந்தது.’ (http://www.dinamalar.com/news_detail.asp?id=1812831 ); 

முக்கிய கதாபாத்திரங்களின் அரந்தரங்கங்கள்  எல்லாம், வயிறு குலுங்க வைக்கும், கிளைமாக்ஸ் – Climax-இல் நகைச்சுவை மிக்க டிஜிட்டல் வழிகளில், தொந்திர(வு)ங்களாக வெளிப்பட்டு. 

குறிப்பு:
பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி;

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொண்ட பின் (உண்மையில் நடந்தது‍ -  http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post.html );

மேலே குறிப்பிட்ட திரைப்படத்தில், (கற்பனையாக) அரசியலில் நுழைந்து அமைச்சராகி, 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வரும் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றாலும், வியப்பில்லை. 

மேற்குறிப்பிட்ட திரைக்கதைக்கு முகநூலில் இருந்து கிடைத்தது:


“இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ராடார் ஜீவராசி சசிகலாதான்.
#அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை செய்யவில்லை.
#ஜெ அப்பல்லோ வந்தபின்பு அப்பல்லோ சிசிடிவி வேலை செய்யவில்லை.
#மர்மக் கொலையும், கொள்ளையும் நடக்கும்போது கொடநாட்டு சிசிடிவி வேலை செய்யவில்லை.
#பரப்பன அக்ரஹாரம் ஜெயிலை சொகுசு காட்டேஜாக மாற்றியபின் ஜெயிலின் சிசிடிவி வேலை செய்யவில்லை.
World's most powerful CCTV jammer is Sasikala.”


'(தமிழக முதல்வருக்கு) எதிர்ப்புகள் எதிர்ப்பாக இல்லை; பிரச்னைகள் பிரச்னைகளாக இல்லை; போட்டிகள் போட்டிகளாக இல்லை; காரணம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாரும் நான்கு ஆண்டுப் பதவியை இழக்கத் தயாராக இல்லை. அதனால் மன்னார்குடியினரும், மு.க.ஸ்டாலினும் கூட என்ன செய்வது என்று திணறுகிறார்கள்.' ( துக்ளக் கேள்வி - பதில் 9.8.2017)‌

No comments:

Post a Comment