Thursday, May 2, 2019

'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (6)



செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் வெளிப்படும் ரசனையின் புதிய திசை?


தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் வசதியான சிலர் சுயவிளம்பரமின்றி பிரமிக்கும் வகையில் உதவிகள் புரிந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் குழந்தை நல மருத்துவர் ராமதாஸ் ஆவார். 'அந்த' உதவிகளில் ஒன்றாக;

புதுக்கோட்டையில் இறுதி சடங்கு நிறைவேற்ற வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை/அனாதை மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன், 'அந்த' சடங்கை இலவசமாக நிறைவேற்றி வருவதை, சுமார் 10 வருடங்களுக்கு முன்பே நான் அறிவேன். சுயலாபக் கள்வர்களான உற்றமும் சுற்றமும் சூழ, சுயலாபக்கணக்குகளில் ஒரு பகுதியாக மிகுந்த ஆடம்பரத்துடன் நிறைவேறும் இறுதிச் சடங்குகளை விட, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு நடந்த இறுதிச் சடங்கை விட, மேற்குறுப்பிட்ட வகையில் 'பலன்' பெறுவதே புண்ணியம், என்பதும் எனது கருத்தாகும்.

புதுக்கோட்டையில் விளம்பரம் உள்ளிட்ட சுயலாப நோக்கின்றி, வசதியற்ற/அனாதை பிணங்களை 'உரிய மரியாதைகளுடன்' எரியூட்டி/அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல தரும காரியங்கள் செய்து வரும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, தெரிவித்த தகவலானது;

திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், ஒரு பகல் பொழுதில், விபத்துக்குள்ளான பேருந்தில், லர் படுகாயம் அடைந்து, சாலையில் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பொருட்படுத்தாமல், அந்த வழியில் பல வாகனங்கள் கடந்து சென்றன. குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், தனது இரு கைகளையும் விரித்து, சாலையில் நடுவில் நின்று, மிரட்டி, வாகனங்களை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவர்களை அந்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைத்தார்.’ என்று அவர் வெளிப்படுத்தியதையும்,,

‘'வீட்டுக்கு அடங்கி'  'ஒழுக்கமாக(?) நன்கு படித்த' பிள்ளைகள், 'சிக்கல்கள்' வரும்போது, எவ்வளவு இழிவான 'சுயநலக்கள்வர்'களாகநடந்து கொள்கிறார்கள்? பெற்றோர்களால் 'ஊதாரி' என்று கண்டிக்கப்படுபவர்கள், எவ்வளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்?' என்பதை, கதாநாயகனை மையமாக வைத்து, வெளிப்படுத்தியதில், 'புதிய போக்கை' முதலில் அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றது; 'திருடா திருடி', 'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட தனுஷ் நடித்த  படங்களா?’ என்பதையும்;

சாலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஏழைகளும், நடுத்தர மக்களும் காட்டும் அக்கறையை, காரில் பயணிக்கும் வசதியானவர்கள் பொதுவாக (விதி விலக்குகள் இருக்கலாம்) காட்டுவதில்லை. ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப்பின், 'அந்த' மனிதாபிமானமானது, வசதியானவர்களிடமும் வெளிப்பட தொடங்கியுள்ளதை ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.’ என்பதையும்,

இனி, சமூகத்தில், உறவினர்/நண்பர் குடும்ப நிகழ்ச்சிகளில், 'அரசியல் கொள்ளையர்கள்'/'அதிவேகப் பணக்காரர்கள்' எல்லாம் கேலி, கிண்டலுக்கு இலக்காகப் (Objects of jokes & hatred) போவதானது, அடுத்து தமிழ்நாட்டில் அரங்கேறினால், வியப்பில்லை. அந்த 'சுயநலக்கள்வர்களின்' குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், சுயமரியாதையும், மனசாட்சியுமுள்ளவர்களை எல்லாம், அந்த கேலி, கிண்டல்கள் 'தட்டி, எழுப்ப', அந்த கள்வர்களின் ஆட்டமும் அடங்குவதும், அதிக தொலைவில் இல்லை.’ என்பதையும்,

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

'இசையில் 'சீர்' எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அது போல ஒரு சமூகத்தில் 'சீரான ' மனிதர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சமூகம் 'சீரழிவு' திசையில் பயணித்தால், அந்த சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்துள்ளார்கள் என்பது காரணமாகும். அந்த நிலையில் மீட்சியின் அறிகுறியாக, சாதாரண மனிதர்களிடையே, அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களிடையே, 'சீரான' மனிதர்கள் வெளிப்படும் போக்கானது துவங்கும்.' 
(‘வெள்ள நிவாரணங்களும், நடிகர் தனுஷின் வெற்றிப்படங்களும் உணர்த்தும் 'சிக்னல்’? (1) : ஏற்கனவே 'கோலோச்சி வந்த' 'குறிப்பாயங்களின்' (paradigm) மரண அறிகுறிகளா?’; http://tamilsdirection.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_76.html)

தமதளவில் நேர்மையான வருமானத்தில் வாழ்ந்து கொண்டு, திராவிட அரசியல் கொள்ளையர்களுடன் சாதி, மத, வட்டார அடிப்படைகளில், 'நேச உறவுடன்' வாழ்வதானது, தத்தம் 'சொகுசு மண்டிலம்' பாதுகாப்புக்காகவா? என்ற கேள்விக்கான விடையின் மூலமாக, தமிழ்நாட்டில் விளைந்துள்ள 'ரசனை வீழ்ச்சி' தொடர்பாக ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/10/ )

சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்து வரும் போக்கும், அத்தகையோரின் திரை இசை ரசனையானது செல்வாக்கிழந்து வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். அது போலவே, சாதாரண மனிதர்களின், அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களின் திரை இசை ரசனையான 'கானா' மற்றும் 'குத்து' பாடல்கள் செல்வாக்கு பெற்று வந்த‌ போக்கும், சீரழிவிலிருந்து தமிழ்நாடு மீண்டு வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். 'அந்த' திரை இசை ரசனையிலும் ஆக்கபூர்வமான திருப்பு முனைக்கட்டத்தில் தமிழ்நாடு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

ஐரோப்பியநாடுகளில் சட்டம் செய்ய முடியாததை செய்யும் வலிமையானது, சமூகத்தில் இன்றும் இருப்பதைப் போலவே, தமிழ்நாடானது மீளும் போக்கும் துவங்கி விட்டது
(‘ 'கோழை எலிகள்' சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளான' சமூக உயிரியல் மாற்றம் (Social genetic transformation)?’; https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

திராவிட அரசியலில், எம்.ஜி.ஆர் ரசிகர்களாக தி.மு.க ஆதரவுப் போக்கில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் ஒப்பீட்டளவில், மற்ற தி.மு.க ஆதரவாளர்களை விட தனிமனித அளவில் நேர்மையாகவே பயணித்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே, எம்.ஜி.ஆர் இருந்த வரையில் தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு வேறுபாடு இருந்தது. அதனை சீர்குலைக்கும் வகையில் சசிகலா மூலமாக கருணாநிதி அபிமானி நடராஜனின் ஊடுருவலை அனுமதித்ததே, ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முடிந்தது. ('சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா?'; http://tamilsdirection.blogspot.com/2017/04/) அதன் தொடர்விளைவாக, 'எம்.ஜி.ஆர் பாணி ரசனை'யானது அடுத்த கட்டத்தில் சாத்தியமுள்ள அநீதி எதிர்ப்பு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், கீழ்வரும் செய்தியானது எனது கவனத்தினை ஈர்த்தது.

‘“எனக்கு திருப்புமுனை படம் என்.ஜி.கே.” - பட விழாவில் சூர்யா பேச்சு’ (https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/01230405/NGK-movie-is-turning-point-movie-at-me-Surya-Talk.vpf )

நடிகர் சிவக்குமாரும், அவரின் பிள்ளைகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்திக்கும் பிரமிக்கும் வகையில் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் உதவிகள் புரிந்து வருவதை நான் அறிவேன். 'அந்த' பின்னணியில் ஏற்பட்ட ஆரவம் காரணமாக, கீழ்வருவதையும் பார்த்தேன்.

 
'ஒழுங்காக'(?) படித்த 'யோக்கியர்கள்' இழிவான 'சுயநலக்கள்வர்'களாகநடந்து கொள்வதையும்,

'ஊதாரியாக' பேர் பெற்றவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும், தனுஷ் கதாநாயகனாக நடித்த படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன். அவர் இயக்கிய மேற்குறிப்பிட்ட 'என்.ஜி.கே' திரைப்படமானது, எம்.ஜி.ஆர் பாணியிலிருந்து எந்த அளவுக்கு விலகி, அநீதியை எதிர்க்கும் தன்னம்பிக்கையை படித்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்? என்ற ஆவலும்;

தமிழில் 'சாபக்கேடான' 'ஹிரோயிச' போக்கிலிருந்து மாறுபட்டு, சாத்தியமான எதிர்ப்பு வழிமுறைகளை அடையாளம் காட்டி, சாமான்யர்களுக்கு போராடும் தன்னம்பிக்கையைக் கூட்டும்? என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது.

சுயலாபக் கள்வர்களான உற்றமும் சுற்றமும் சூழ, சுயலாபக்கணக்குகளில் ஒரு பகுதியாக மிகுந்த ஆடம்பரத்துடன் நிறைவேறும் இறுதிச் சடங்குகளை விட, புதுக்கோட்டையில் மேற்குறுப்பிட்ட வகையில் 'பலன்' பெறுவதே புண்ணியம்.’, என்ற நிலையிலிருந்து தமிழ்நாடு மீள வேண்டுமானால்,

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடைகள் அளிக்கும் திரைப்படங்கள் வெளிவர வேண்டும்

அது போன்ற திரைப்படங்கள் எல்லாம் வியாபார ரீதியிலும் வெற்றி பெறும் அளவுக்கு, தமிழ்நாட்டில் திரைப்பட ரசனையானது கனிந்து வருகிறது;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே;

நம்ப முடியாத அளவுக்கு 'ரசனை இடைவெளி'யானது அதிகரித்து வருவதையும்;

சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழில் எழுதப் படிக்க தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடும் அந்த வழியில் பயணித்து வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், உலகில் வேறு எந்த நாடும் இல்லையென்றால்;

அது 'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிகளில் விளைந்துள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' ஆகும்.’ என்பதையும்;

‘1944இல் முளை விட்டு, 1949இல் உரம் பெற்று வளர்ந்த, உணர்ச்சிபூர்வ வர்ச்சிகரமான பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா மூலமாக ரசனையை 'போதையாக்கி', மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோரின் சமூக முதுகெலும்பை முறித்ததே;

அந்த 'தனித்துவமான ரசனை இடைவெளி'க்கு முக்கிய காரணமாகும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.’ என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html)

திராவிட இயக்க வள‌ர்ச்சிப் போக்கில், எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும், பாலியல் வக்கிரம் கலந்த ரசனை செல்வாக்கு பெற்றது. அவை வியாபார ரீதியில் வளர்ந்த தின, வார, மாத இதழ்களிலும் வெளிப்பட்டது. 'அந்த' ரசனைக்கு 'அறிவு விபச்சாரிகள்' தீனி போட்டு, அவர்களும் வளர்ந்தார்கள். அந்த போக்கில் உருவான‌ சமூக முதுகெலும்பு முறிந்த 'படைப்பாளிகள்' மூலமாக தமிழ்நாடு எவ்வாறு சீரழிந்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html) அதன் தொகுவிளைவாக, தமிழ்நாட்டில் சமூக செயல்நெறி மதகுகளான‌ (Social Functional Checks), தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவை எல்லாம் மலடாகும் திசையில் பயணித்தன. (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_77.html) அத்தகைய சமூக சூழலே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை எளிதாக்கியது.

சட்டங்களும் சம்பிரதாயங்களும் தமிழ்நாட்டில் கேலிக்கூத்தாகி விட்டதை பறை சாற்றும் வகையில்;

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்திய காட்சிகளையும்,

பின் ஊர்வலமாக வந்து, நிறைவேற்றிய இறுதி சடங்கு (?) காட்சிகளையும்;

தொடக்க காட்சியாக கொண்டு, அன்று முதல் இன்று வரை, தமிழ்நாட்டில் பொது அரங்கில் நடந்து வரும் கூத்துகளை ஆராய்ந்து, காட்சிகளை அமைத்து; 

'மெர்சல் 2' திரைப்படத்தினை 'மெர்சல்' குழுவோ, அல்லது அதைப் போன்ற திறமையுள்ள வேறு குழுவோ உருவாக்கினால்;

அது உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'it’s a Mad Mad Mad World’ சாதனையை முறியடித்து; 

சீனா, ஜப்பான் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, வியாபார ரீதியில் உலக சாதனையை நிகழ்த்திய நகைச்சுவைத் திரைப்படமாக அமையும், என்பதும் எனது கணிப்பாகும்.       
(http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_20.html )

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback) 
https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336

No comments:

Post a Comment