Sunday, May 12, 2019

'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (6)



தமிழ்நாட்டில் ஏமாறாமல், தன்மானத்துடன் வாழ்வதற்கான இரகசியங்கள்?



நல்ல ஆரோக்கியமான மனித  வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம், பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space) சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த சமூககாற்றோட்டமும்' (Free Social Ventilation)  அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான (social breathing) ‘திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  மது இயல்போடு ஒட்டியஉள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.’ 

அவ்வாறு ஆரோக்கியமான சமூக சுவாசத்திற்கானசமூக வெளியில் (social space) வாழ்வதற்காக, நான் கடைபிடித்து வரும் இரகசியத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

சாமான்யர்கள் என்னை எளிதில் சந்திக்க முடியும் அளவுக்கு, முன்பின் தெரியாத அல்லது நான் ஒதுக்கி வைத்துள்ள‌ 'பிரபலங்கள்' எல்லாம், என்னுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு, 'சமூகக் கிருமி டிப்பான்கள்' உடன் வாழ்ந்து வருகிறேன்; ‘ஈமெயில்தொடர்புகளில் மட்டும் அவர்களையும் அனுமதித்து

பிரபலமானவர்களில் உள்ளார்ந்த ஈடுபாடுடன் (Passions) சாதனையாளர்களாக வாழ்பவர்களாக நான் அடையாளம் கண்டவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், நான் அனுமதிக்கிறேன். சில வருடங்களுக்கு முன், அவ்வாறு  என்னை சந்தித்தவருடன் நீண்ட நேரம் மன மகிழ்ச்சியுடன் உரையாடினேன். கடும் நெருக்கடிகளுக்கிடையில், அவர் எவ்வாறு சாதனை புரிந்தார்? என்பதை அறிந்து வியந்தேன். பின் அவரை வழி அனுப்ப வெளியில்  வந்த போது, அவர் வந்திருந்த காரில் ஒரு கட்சியின் கொடி இருந்தது. நான் கேட்காமலேயே, அது என் நண்பருக்கு  வேண்டிய கட்சிக்காரரின் கார், என்று விளக்கம் கொடுத்தார். 'அந்த' அளவுக்கு, கட்சிக்கொடிகள் கட்டிய கார்கள் எல்லாம், தமிழ்நாட்டில் ஏளனமாகப் பார்க்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்ல, தேர்தல் காலங்களைத் தவிர்த்து, மற்ற காலங்களில் கட்சிக் கொடிகள் கட்டிய கார்கள் எல்லாம் கண்ணில் படுவதும் அரிதாகி வருகிறது.

கீழ்வரும் வகையில் 'வளர்ந்து' அதிவேகப்பணக்காரர்கள் ஆனவர்கள் எல்லாம், பொது இடங்களில் வெளிப்படும்போது, அவர்களின் கடந்த காலம் பற்றி ஆர்வத்துடன் கிசிகிசுப்பதும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதுவே மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணமாக இருந்தால் வியப்பில்லை.

அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக, அல்லது பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளுக்காக, நமக்குள்ள வலைப்பின்னலில் யார் 'செட்' ஆவார்கள்? என்று கண்காணிப்பது;

பின் தம்மிடம் உள்ள வாலாட்டும் அல்லது தரகு/ரவுடி திறமைகளில் எதைப்பயன்படுத்தி, 'அந்த' நபர்களுக்கு நெருக்கமாவது?

என்று மிகுந்த விழிப்புடன் கூடிய 'புத்திசாலித்துடன்' அல்லது 'ஏக்கத்துடன்' வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளனர். அந்த முயற்சியில் இலகுவாக வெற்றி பெற, 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற முகமூடிகளுடன் அலைபவ‌ர்களும் உள்ளனர்.

நமக்கு தெரியாமல், நாம் அவர்களுக்கு பயன்படுவோம் என்ற சுயலாபக் கணக்கில் அவர்கள் நம்மைத் தேடி வந்து உரையாடும் போது, நாம் எச்சரிக்கையாக அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்களுடன் நாம் இயல்பாக உடையாடுவதே நமக்கு ஆபத்தாக முடியவும் வாய்ப்பிருக்கிறது;

என்பது தொடர்பான கசப்பான அனுபவங்கள் பல எனக்குண்டு

அத்தகைய நபர்கள் நமது சமூக வட்டத்தில் மிகுந்து விட்டால், இயல்பாக உரையாட வாய்ப்பின்றி, நமது உரையாடல்கள் எல்லாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழலில் நாம் சிக்கி விடுவோம். அதன்பின், நமது இயல்பைத் தொலைத்து, நமக்காக நாம் வாழும் வாழ்க்கையை, சாகும் வரை தொலைத்தே வாழ வேண்டி நேரிடும். அதன்பின், அவ்வாறு வாழ வேண்டிய நெருக்கடியில் இருந்து தப்புவதும் கடினமே. 'அந்த' அளவுக்கு, 'சமூக மூச்சுத்திணறலில்' (Social Suffocation) சிக்கிய வாழ்க்கையாக, நமது வாழ்க்கையானது அமைந்து விடும்.

குடும்பம், நண்பர்கள், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அனைத்திலும், சற்று ஏமாந்தாலும், 'அந்த' இடைவெளியில் நுழைந்து, நமக்கு தெரியாமலேயே நம்மை ஏமாற்றி பலன் பெறும் 'வெறியுடன்' அலைபவர்களும், தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறார்கள்.

வாழ்க்கையில் இன்பமாக வாழ்வது எப்படி? என்ற கேள்விக்கு, திறவுகோலாக நான் சந்தித்தவற்றில், கீழ்வருவதானது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சில வருடங்களுக்கு முன், தஞ்சை புதுப்பேருந்து நிலையம் அருகேயிருந்த புதுக்கோட்டை சாலையில் காலை சுமார் 6 மணியளவில் நான் நடைப்பயிற்சி(Walking) மேற்கொண்டிருந்தேன். தெரு ஒரமாக சுமார் 15 கிராம கூலித்தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாக உட்கார்ந்து, தங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான முகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அன்று வேலைக்குப் போனால் தான், பணம் கிடைக்கும்? கூப்பிட வரும் லாரியில், அவர்களில் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்? தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த லாரி அன்று வருவதும் தடைபடலாம்?  என்று குழம்பிக்கொண்டு கவலையுடன் அவர்கள் இல்லை: ஸ்டார் ஓட்டல்களில், பெரும் பணக்காரர் கூடும் இடங்களில், அத்தகைய கவலையுடன் கூடிய முகங்களையும், அந்த கவலையை மறைத்து போலியாக சிரித்து உரையாடும் முகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்டது போன்ற மகிழ்ச்சியான முகங்களை, அங்கெல்லாம் பார்ப்பது அரிதாகும்.

அது போலவே விமானங்களிலும், குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளிலும் பலமுறை பயணித்திருக்கிறேன். அங்கும் அதே நிலை தான். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் காலங்களில், விரும்பி அரசுப் பேருந்துகளில் அவ்வப்போது பயணித்து வருகிறேன்; சிங்கப்பூரில் வாழும் எனது மகனின் எச்சரிக்கையைப் புறக்கணித்து. அந்த பயணங்களிலும், மேலே குறிப்பிட்ட மகிழ்ச்சியான முகங்களையும், 'இயல்பான' கோபங்களையும் பார்த்து வருகிறேன். மேலே குறிப்பிட்ட 'புலி வாலைப்' பிடித்து பயணிப்பவர்களில், சொந்தமாக கார் வாங்கும் 'வளர்ச்சி'(?) அடையாத வரையில், அரசுப்பேருந்தில் பயணிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி, சக பயணிகளிடம் தமது 'உயர்வை' வெளிப்படுத்தி பயணிப்பவர்களையும், நான் பார்த்து, அந்த நகைச்சுவையையும் அனுபவித்திருக்கிறேன்.

போலித்தனமான மகிழ்ச்சி, பாராட்டு, கோபம், காலில் விழுதல், பின் அதே காலை வாறுதல் உள்ளிட்ட‌ 'வாழ்வியல் புத்திசாலித்தனம்'(?) எல்லாம், பணத்தில் வசதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு (Threshold) மேல் வாழும் தமிழர்களின் 'ஏகபோக பண்பாகி' வருகிறது.’ 

எனவே வசதியில் 'அந்த' குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வாழ்பவர்களுடன் உரையாட வேண்டிய வாய்ப்புகளை எந்த அளவுக்கு குறைத்து வாழ்கிறோமோ, 'அந்த' அளவுக்கு நமது இயல்பினைத் தொலைத்து வாழும் நெருக்கடிகளும் குறையும்; சமூக மூச்சுத் திணறலில் சிக்குவதற்கான வாய்ப்பும் குறையும்.

தமிழ்நாட்டில் குறுக்கு வழிகளில் அதிவேகப்பணக்காரர்கள் ஆனவர்கள் எல்லாம், பொது இடங்களில் வெளிப்படும்போது, அவர்களின் கடந்த காலம் பற்றி ஆர்வத்துடன் கிசிகிசுப்பதும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது

ஒரு நகரத்தில் மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் ஒருவர், அவரது மிகவும் விலை உயர்ந்த காரினை, நான் தங்கியிருந்த வீட்டின் முன் நிறுத்தி, வீட்டுக்குள் வந்து, எனது MIT (Music Information Technology) இசை ஆராய்ச்சி தொடர்பாக உரையாடி சென்றார். அதன்பின், அதனை அறிந்த, நான் பணியாற்றும் இடத்தில் உள்ள பலரும், 'அந்த' பணக்காரரின் கடந்த காலம் பற்றிய 'கசப்பான' தகவல்களை என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த பாணியில், 'அது போன்ற நபர்களை, என்னைப் போன்றவர்கள் சந்திப்பதானது அவமானமாகும்' என்பது தெளிவாக வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் மைக்ரோஉலகத்தில் வலம் வரும் மதிப்பீடுக‌ளுக்கும் (Values), மேக்ரோஉலகில் வலம் வரும் மதிப்பீடுக‌ளுக்கும், மோதலானது உச்சக்கட்டத்தில் திருப்பு முனையில் உள்ளதாக, நான் கருதுகிறேன்.

அது போன்ற போக்குகளின்  தொடர்விளைவாக, ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம்,

தமது 'ஆதாய தூண்டிலில்' சிக்காத சாமான்யர்களை நெருங்க முடியாத அளவுக்கு, மைக்ரோ உலகில் 'சமூகக் கிருமி வடிப்பான்கள்' வெளிப்பட்டு வருகின்றன; இன்று மேக்ரோஉலகில் 'பெரிதாக' தோன்றும் கட்சிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி

குதிரையின் மீதிருந்து ஆயுதத்துடன் ஒரு மனிதர், கீழே நிற்கும் நம்மை தாக்கும் போது, அவரை வீழ்த்த, மிக எளிய வழி இருக்கும் யுத்தியை இணையத்தில் ஒரு ஒளிப்பதிவில் பார்த்தேன்

மிகுந்த குவியத்துடன் குதிரையின் கால்களை நாம் தாக்கி, குதிரை தடுமாற, குதிரையின் மேலுள்ள மனிதரானவர் ஆயுதத்துடன் கீழே தரையில் விழுந்து அடிபடுவதைத் தவிர்க்க முடியாது.

மிகுந்த 'செல்வம், செல்வாக்கு' ஆயுதங்களுடன், 'ஊழல்' என்ற குதிரையில் மேல் பயணிக்கும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின், கால்களாக இருப்பவர்கள் எல்லாம், உள்ளூரில் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் ஆவார்கள்

தமது 'ஆதாய தூண்டிலில்' சிக்காத சாமான்யர்களை நெருங்க முடியாத அளவுக்கு, மைக்ரோ உலகில் 'சமூகக் கிருமி வடிப்பான்கள்' வெளிப்பட்டு வருவதன் காரணமாகவே;

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் 'ஊழல் குதிரைகளின்' கால்கள் எல்லாம், சாமான்யர்கள் மத்தியில், தமது சமூகவலிமையை இழந்து வருகின்றன. ஆனால் சமூகத்தில் வசதியாக வாழும் 'சமூக முதுகெலும்பற்ற கோழை யோக்கியர்கள்' எல்லாம் தமது 'சொகுசு மண்டிலத்தின் (Comfort Zone) சிறைக்கைதிகளாக', 'அந்த' ஊழல் குதிரைகளுக்கு 'சலாம்' போட்டு வாழ்கின்றனர். அந்த போக்கே, கால்களின் (அரசியல்) வலிமையை இழந்து வலம் வரும் குதிரைகளின் வீழ்ச்சியைத் தாமதப்படுத்தி வருகிறது.

ஊழலை ஒழிக்க சிறு இழப்புகளைக் கூட சந்திக்க விரும்பாத, 'அந்த 'சொகுசு மண்டில சமூகக் கிருமிகளின்' வாடையே இல்லாமல், மது இயல்போடு ஒட்டிய நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் போக்கில்;

'அந்த' புத்திசாலி முட்டாள்களை எல்லாம் தலைக்குனிய வைக்கும் படலமானது துவங்கி விட்டது

எனது படிப்பு, பணி, ஆராய்ச்சிகள் மூலமாக உயர வெளிப்படும் வாய்ப்புகளில் 'சமூக மூச்சுத் திணறல்' ஏற்படுத்தும் அபாயங்களை தவிர்த்து, 'பிரபல' சிறையில் சிக்காமல் பயணித்து;

என்னை விட புத்திசாலித்தனத்துடன், சாமான்ய மனிதர்களில் பலர், தமக்கான 'சமூகக் கிருமி வடிப்பான்களுடன்' வாழ்வதைக் கண்டு வியந்து, அவர்களிடம் கற்ற பாடங்களின் மூலமாக வெளிப்பட்ட இரகசியங்களே, இந்த பதிவினை எழுத என்னைத் தூண்டின.

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் அதிசயமாக, சமூக மூச்சுத் திணறலுக்கு (Social Suffocation) எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள் எல்லாம், ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன.

'உணர்ச்சி பூர்வ, ஆதாயபூர்வ' அடிப்படைகளில் செயல்படும் நபர்களையும், கட்சிகளையும் அவர்களை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாத பொது மக்கள் அவர்களை விட்டு விலகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அத்தகைய அமைப்புகள் நடத்தி வந்த இலக்கிய/மற்ற கூட்டங்களின்/அறைக் கூட்டங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெருமளவு குறைந்து விட்டது. தப்பித்தவறி நடக்கும் கூட்டங்களும், திருமணங்கள் போல் 'சமூக சந்திப்பு' வாய்ப்புகளாகவே நடைபெறுகின்றன. யாருடைய வசதி வாய்ப்புகள் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளன என்று தெரிந்து கொள்வது, அதன் மூலம் தமது சுயநல சமூக வலைப்பின்னலை வளர்த்துக் கொள்வது,  தமது வசதி வாய்ப்புகள் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று 'பெருமையுடன்' (ஆணவம், அகந்தை  உள்மறையாக‌) தெரிவிப்பது, போன்றவையே இச்சந்திப்பு உரையாடல்களின் 'பொருளாக' இருக்கிறது. உணர்ச்சி பூர்வ போதையில் பயணிக்கும் தங்களுக்கான சமூக வெளி குறைந்து வரும் போக்கை பற்றிய அறிவும், விவாதமும், ‘இத்தகைய சமூக சந்திப்புகளில் நடைபெறுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டில் 'தமிழுணர்வுகுறைந்து விட்டதாக, பொது மக்களை குறை சொல்வது அதிகரித்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, இவர்களின் 'வாடையே'(மூச்சுத்திணறலே) இல்லாமல், உள்ளர்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்ந்து, சாதனைகள் படைத்து வருபவர்கள் வளர்ந்து வருகிறார்கள். 'விளம்பரமின்றி' உதவுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  லாப நட்ட நோக்கமற்ற உண்மையான அன்புடன் வாழ்பவர்களுக்கு, அவர்களது சமூக வட்டத்தில் 'முட்டாள்'கள் என்று கருதுவது மாறி, வியந்து மதிப்பதும் அதிகரித்து வருகிறது. தடையற்ற கருத்து பரிமாற்ற ஜன்னல்களுக்கான வாய்ப்புகள் இணையத்தில் அதிகரித்து வருகின்றன
(‘தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும் (The end of the social suffocation in Tamilnadu & Free Social Ventilation)’; http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html)

மிகுந்த 'செல்வம், செல்வாக்கு' ஆயுதங்களுடன், 'ஊழல்' என்ற குதிரையில் மேல் பயணிக்கும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின், கால்களாக இருப்பவர்களின் சமூகவலிமை மிகவும் பலகீனமாகி விட்டது. சமூகத்தில் வசதியாக வாழும் 'சமூக முதுகெலும்பற்ற கோழை யோக்கியர்கள்' எல்லாம் தமது 'சொகுசு மண்டிலத்தின் சிறைக்கைதிகளாக', 'அந்த' ஊழல் குதிரைகளுக்கு 'சலாம்' போட்டு, சாமான்யர்களில் கேலிக்கும் வெறுப்புக்கும் உள்ளாகும் போக்கும் துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஏமாறாமல், தன்மானத்துடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையானது வளர்ந்து, விரைவில் மாற்றத்திற்கான மாறுநிலை எல்லையைத் (Threshold Level) தாண்டும் காலமும் நெருங்கி விட்டது. தமிழையும், தமிழர்களையும் அடிமைப்படுத்தியிருந்த 'ஊழல் குதிரையின்' வீழ்ச்சியானது, எவரும் எதிர்பாராத வகையில், எதிர்பாராத நேரத்தில், மலேசியாவில் கடந்த வருடத்தில் நடந்தது போல, விரைவில் தமிழ்நாட்டிலும் நடக்கும்;

என்பதும் எனது கணிப்பாகும்
(‘மலேசியாவில் 2018 மே-யில் நடந்த ஆட்சி மாற்றம் மூலம் உருவானகருதுகோள் (Hypothesis); மெய்ப்பிக்கும் சமூகவியல் பரிசோதனை (Sociological Experiment) தமிழ்நாட்டில் ?’; http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none.html)

மலேசியாவில் நடந்தது வெறும் அரசியல் ஆட்சி  மாற்றமே. எனவே அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சிகள் எல்லாம், சமூக அளவில் மாற்றங்களைக் கொண்டு வருவதில், அங்கு சிக்கல் நீடிக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் நிலையானது, அதிலிருந்து மாறுபட்டது.

தமிழ்நாட்டில் 1967-இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. ஆட்சியின் பண்பிலும், சமூகத்தின் பண்பிலும் ஆழமான மாற்றங்களுக்கான துவக்கமாகவும், 'அந்த' ஆட்சி மாற்றம் இருந்தது. 'கோழை எலிகள்' சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளான' சமூக உயிரியல் மாற்றம் (Social genetic transformation) ', அதன் விளைவாக ஏற்பட்டது.

எனவே தமிழ்நாட்டில் அடுத்து நடக்க இருப்பதானது, மலேசியாவில் நடந்த எதிர்பாராத ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. 1967இல் நடந்த மாற்றத்தின் எதிர்த் திசையில், ஆட்சியின் பண்பிலும், சமூகத்தின் பண்பிலும் ஆழமான மீட்சி நோக்கியமாற்றங்களுக்கான துவக்கமாகவும், அது வெளிப்படும்.

இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள சிறிய, பெரிய கட்சிகள் எல்லாம், தத்தம் கட்சிகளில் உள்ள 'அமாவாசைகளின் உள்குத்து' பாதிப்புகளிலிருந்து, தப்பித்து பயணிக்க முடியுமா? என்ற கேள்வியானது, கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து தொடங்கி விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html) நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களின் முடிவுகளையும், 'அந்த' கேள்வியே தீர்மானிக்கப் போகிறது. அநேகமாக அடுத்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், ஆதாய அரசியல் கட்சிகளின் ஆட்டங்கள் அடங்குவது, தெள்ளத் தெளிவாக வெளிப்படும்.

No comments:

Post a Comment