Sunday, June 23, 2019


தாய்மொழி அடையாளச் சிதைவுக்கும்


'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியால் விளைந்த தற்கொலைகளுக்கும்,


தொடர்பு இருக்கிறதா?



கீழ்வரும் 'வாட்ஸ் ஆப்' தகவல் எனது கனத்தினை ஈர்த்தது.
" ஹிந்தி எதிர்ப்பிற்காக இந்த முறை வித்தியாசமாக தலைவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் தீக்குளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவாலயம் அறிவிப்பு"

அது தொடர்பாக விசாரித்ததில், அது உண்மையல்ல; கேலி செய்து போடப்பட்ட பதிவு, என்று அறிந்தேன்.

அவ்வாறு கேலிகள் இணையத்தில் வலம் வருவதற்கான சமூக வரலாற்றுப் பின்னணியும், தமிழ்நாட்டின் மீட்சி தொடர்பான ஆய்வில் முக்கிய இடம் பெறும்.

1965 முதல் துவங்கி வளர்ந்த தீக்குளிப்புகள் உள்ளிட்டு, அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக, தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் எண்ணிக்கையற்றவை ஆகும். அவை பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் நடந்த சாவுகளாகும்; பொதுவாழ்வு வியாபாரத்தில் மேல்தட்டு வாழ்க்கையில் பயணிப்பவர்களின் முதலில்லாத மூலதனங்களாக.

அனிதாவின் அண்ணன் எனது மாணவராக இருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்திருந்தால், தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என்றும், ..எஸ், சார்ட்டர்ட் அக்கவுண்ட் போன்ற வாய்ப்புள்ள இலக்குகளுக்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிக்குமாறும் அறிவுறுத்தியிருப்பேன்.

என்னைச் சந்தித்த பின், சில நாட்களில், அந்த பெண் தற்கொலை செய்திருந்தால், அந்த உரையாடலில் நான் எங்கு தவறு செய்திருக்கக் கூடும்? என்று ஆராய்ந்து, அந்த தற்கொலையை தவிர்த்திருக்க வேண்டுமே என்ற கவலையானது, என்னைப் பற்றியிருக்கும்

அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம்,  நான் மனசாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம். (குறிப்பு கீழேநமது உற்றத்திலும் சுற்றத்திலும், 'அந்த' தகுதியுடையவர்களைப் போற்றி, அவர்களுடன் சங்கமானவர்களை, சமூக நோய்க்கிருமிகளாகக் கருதி எவ்வாறு ஒதுக்கி, நாம் தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்குப் பங்களித்து வாழ்வது? என்ற இரகசியத்தையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/02/2.html )

மாணவர்களின் தற்கொலைகளில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது

டி.வி. பார்ப்பதில் அக்காள்-தம்பியுடன் தகராறு: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை (https://www.dailythanthi.com/News/State/2019/05/26010706/The-college-student-committed-suicide-by-hanging.vpf )

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை செய்துள்ளனர்(தினமணி, சென்னை; 7 – 6 – 2019) 

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை முன் நிறுத்தி, 'நீட் தேர்வினை நீக்க வேண்டும்' என்று கோருவது சரியானால்;

தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொண்ட அவமானத்தால், மாணவி தற்கொலை செய்து கொண்டதை முன் நிறுத்தி, 'தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்கக் கூடாது; அனுமதிக்க வேண்டும்' என்று கோருவதும் சரிதானே.

தேர்வில் தோல்வி அடைந்ததை
 (https://newstodaynet.com/index.php/2019/04/20/plus-two-student-commits-suicide-after-failing-in-board-exams/) அல்லது மதிப்பெண்கள் குறைந்ததை அவமானமாகக் கருதி, மாணவி தற்கொலை செய்து கொண்டதை முன் நிறுத்தி, 'தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்கக் கூடாது; அனுமதிக்க வேண்டும்' என்று கோருவதும் சரிதானே.

இவை போன்ற காரணங்களுக்காக, மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தண்டிக்க முடியாது என்றும்;

மாணவர்களுக்கு மனநலன் ஆலோசனைகள் மூலமாக தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் மாநில அரசுகள் முயல வேண்டும், என்றும்;

 உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
(Referring to the judgements of the Supreme Court and the high courts, he held that teachers were entitled to correct the students. The students cannot take the extreme step of committing suicide merely on the ground of getting less marks in exams. They can always seek revaluation, he said.
Citing growing incidents of suicides by students, the judge said that the present education system puts a lot of pressure on adolescents aged between 15 and 17 years studying in Class XI and XII.
In this process, as a corollary event, majority acts of discipline by the teachers cause a mental imbalance to the adolescent age hood. Hence, it was time that the state government evaluates and formulates a scheme for the physiological evaluation of students studying in classes XI and XII as well as in the first and second year of college… Psychological counselling will help the students meet the pressure of higher studies, the judge said.’ ; 

தமிழ்நாட்டில் எந்த பொதுப்பிரச்சினைக்காகவும் எவரும் தற்கொலை செய்து கொள்வதானது, 1965க்கு முன் வெளிப்பட்டதில்லை. அது மட்டுமல்ல, படிப்பைக் கெடுத்து மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தாமல்,  தேசியக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிஸ்டாக இருந்தாலும், திராவிடர்/திராவிட கட்சிகளாக இருந்தாலும், பெரியவர்களே போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

‘'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் .வெ.ரா சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக .வெ.ரா நிரூபித்தது, தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன்  .வெ.ரா தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போதுபலம்பெற்றனசமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்குகாந்தி காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.’

படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள், அதன் காரணமாக, தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
 (இந்தி எதிர்ப்புப் போராட்டம்:;                           1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு? http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

தமிழ்நாட்டில் மாணவர்கள் மத்தியில் தற்கொலைப் போக்குகள் பற்றிய ஆய்வுகளுக்கான சரியான புள்ளி விபரங்கள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இன்றும் செல்வாக்குள்ள குடும்பங்களில் நடக்கும் தற்கொலைகள் எல்லாம், காவல்துறையின் பார்வைக்கு செல்லாமல், மரணமாகவே இறுதிச் சடங்குகளுக்கு உள்ளாகின்றனவா? என்ற கேள்வியை ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் எழுப்பியுள்ளன. எனவே எனது அறிவு அனுபவங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு தற்கொலைப் போக்குகள் 1965இல் முளை விட்டு, 1969 முதல் ஊழல் வளர்ந்த வேகத்தில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமும், மேற்கத்திய மோகமும் வளர்ந்த போக்கில் அதிகரித்து இன்று உச்சத்தில் உள்ளது.

வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றங்கள் மூலமாக மனத்தளர்ச்சிக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் போக்கிற்கும், 'அலெக்சிதிமிக்' (alexithymic) என்ற மனநோய்க்கும் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

“It is well known that alexithymic individuals may show significantly higher levels of anxiety, depression, and psychological suffering than non-alexithymics. There is an increasing evidence that alexithymia may be considered a risk factor for suicide, even simply increasing the risk of development of depressive symptoms or per se……. The majority of reviewed studies pointed out a relationship between alexithymia and an increased suicide risk. In several studies, this relationship was mediated by depressive symptoms. In conclusion, the importance of alexithymia screening in everyday clinical practice and the evaluation of clinical correlates of alexithymic traits should be integral parts of all disease management programs and, especially, of suicide prevention plans and interventions. However, limitations of studies are discussed and must be considered.”; Alexithymia and Suicide Risk in Psychiatric Disorders: A Mini-Review- 

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும்.‘ 

1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் போக்கிற்கும், தாய்மொழி அடையாளச் சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். அது போன்ற அடையாளச் சிதைவுக்குள்ளான சமூகத்தில் 'அலெக்சிதிமிக்' மனநோய் எந்த அளவுக்கு அதிகமாகும்? என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டதாக, எனது பார்வையில் படவில்லை. அது சரியெனில், அத்தகைய ஆய்வுக்கு உகந்த தனித்துவமான பரிசோதனைக் களமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறது
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்காக:


‘identity is something that shifts and grows throughout life as people confront new challenges and tackle different experiences.’ (https://www.verywellmind.com/what-is-an-identity-crisis-2795948)

‘Emotional intelligence is generally said to include at least three skills: emotional awareness, or the ability to identify and name one’s own emotions; the ability to harness those emotions and apply them to tasks like thinking and problem solving; and the ability to manage emotions, which includes both regulating one’s own emotions when necessary and helping others to do the same.’ (https://www.psychologytoday.com/us/basics/emotional-intelligence)

‘The results obtained in this research showed that there is significant negative correlation between (EI) on the one hand, and alexithymia, interpersonal problems and four aspects of interpersonal problems including assertiveness, sociability, intimacy and responsibility………….Associations between variables indicate that as the scores of (EI) increases, the degree of alexithymia and interpersonal problems among the students decrease’ (Associations between variables indicate that as the scores of (EI) increases, the degree of alexithymia and interpersonal problems among the students decrease; ‘WCPCG-2011- Emotional intelligence, alexithymia, and interpersonal problems’; Bibinaz Ghiabia, Mohammad Ali Besharat (https://pdf.sciencedirectassets.com/

குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளில் எண்ணிறந்தோர் 'அலெக்சிதிமிக்' மனநோய்க்கு உள்ளாகி சீரழியும் போக்கும்;


பணம் அல்லது புகழ் சம்பாதிக்கும் நோக்கில், தமிழைத் தமது சுயநலனுக்கு அடிமைப் படுத்தி 'சொகுசு மண்டிலத்தில்(Comfort Zone) வாழும் போக்கும்;

ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? என்பதும், மேகுறிப்பிட்ட ஆய்வில் இடம் பெற தக்கதாகும்.



குறிப்பு:

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த அறிவு, அனுபவத்தில், கீழ்வரும் முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தை படித்து, காணொளியையும் பார்த்தபின்;

இந்த செல்போன் ஒளிப்பதிவைப் பார்த்துக் கேட்ட போது... மனசுக்குள் அழுதேன்!

சிறு குழந்தையின் அப்பாவித்தனம்..

யாரோ சொல்லிக்கொடுத்து.. அதை திருப்பிச் சொல்லும் போது... அது சரியாக வராததால், வெட்கப்பட்டு தனக்குத்தானே சிரித்து... வாயை மூடியும் மூடாமலுமாய்... ஏதோ ஒரு பாவனையை இந்தச் சிறுமி வெளிக்காட்டுகிறாள்...

இந்தப் பதிவின் பின்னுள்ள முகம் எது?

என்ன சொல்லிக் கொடுத்தது?

உனக்கு நிதி உதவி செய்கிறேன்.. இப்படிச் சொல் என்று கூறி, ஆங்கிலத்தில் ஒரு கிராமத்துச் சிறுமியை வலுக்கட்டாயமாகச் சொல்லச் சொல்வது ஏன்?

எனக்கு உதவுங்கள் நண்பர்களே என்று தமிழில் சொல்லியிருக்கலாமே! ஆனால்... இது சர்வதேச அளவில் வெளிநாட்டு நிதி மோசடிக்கு யாரோ திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது!”  

அனிதா என்ற கிராமப்புற மாணவி உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின்;
ஒரு வகை அழுத்தம் நிறைந்தஅச்சுறுத்தலில் சிக்கி, பயணித்திருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன்.
எனவே  அனிதா மரணத்தில், சி.பி. விசாரணை கோரும் கிருஷ்ணசாமியின் கீழ்வரும் காணொளி கோரிக்கையை சரியென, நான் கருதுகிறேன்.

மடியில் கனம் இல்லையென்றால், அச்சம் தேவையில்லை. கிருஷ்ணசாமியின் கோரிக்கைக்கு வெளிப்படும் கண்மூடித்தனமான எதிர்ப்புகள் எல்லாம், அனிதாவின் மரணம் பற்றிய அதிக சந்தேகங்களை கிளப்பியுள்ளன. அனிதா தற்கொலைக்கும், தற்கொலைக்கு முன் அவர் சந்தித்த 'முக்கிய புள்ளிகளுடன்' நடந்த உரையாடல்களுக்கும், தொடர்புகள் இருந்ததா? அடித்தட்டு குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம், இப்படிப்பட்ட 'முக்கிய புள்ளிகளை' சந்திப்பது ஆபத்தா?
 (https://www.patrikai.com/netrikan-magazine-release-false-information-anitas-brother-explanation/) என்பது போன்ற கேள்விகளுக்கும், சி.பி. விசாரணையின் மூலம், விடைகள் கிடைப்பதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கும் துணை புரியும்.’; 

No comments:

Post a Comment