தமிழ்நாட்டில்;
'திராவிடர்/தமிழர் சமூக நீல வேல் மீன் விளையாட்டு'
(Dravidar/Tamizhar Social Blue Whale Game) ?
தமிழ்நாடு உள்ளிட்டு உலக அளவில், பல உயிர்களை காவு வாங்கியுள்ள இணையவழி விளையாட்டு 'நீல வேல் மீன் விளையாட்டு' ஆகும். (Blue
Whale game - https://www.thesun.co.uk/news/3002981/blue-whale-game-suicide-russia-rules-challenge-social-media/ )
எப்படிப்பட்ட உளவியல் முறையில், எப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் எல்லாம், அந்த விளையாட்டுக்கு பலியாகி வருகிறார்கள்? என்பது தொடர்பான ஆய்வுகள் கீழே குறிப்பில் உள்ளன. அந்த ஆய்வுகளில் வெளிப்பட்ட தகவல்களும், தமிழ்நாட்டில் 1965லிருந்து அரங்கேறிவரும் தற்கொலைகளும், எனது கவனத்தை ஈர்த்துள்ளன.
தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச இன்பவலையில் சிக்க வைப்பதானது, அந்த விளையாட்டின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். (விளக்கம் கீழுள்ள குறிப்பில்)
'பெரியார்' ஈ.வெ.ரா தமது அறிவு வரை எல்லைகள்
(intellectual limitations) பற்றிய புரிதலின்றி
பயணித்து,
காலனிய சூழ்ச்சியில் சிக்கி, தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச இன்பவலையில் தமிழ்நாடு சிக்கி, பயணித்து, கிரானைட் மலைகள், ஏரிகள், ஆறுகள், தாது மணல், ஆற்று மணல், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் எல்லாம் ஊழல் சுனாமிக்கு இரையான போக்கில், ஊழல் கல்வி வியாபாரம் மூலம் ஆங்கிலவழிப் பள்ளிகள், தமிழை சீரழித்ததோடு, கீழ்வரும் வகையில், எண்ணற்ற மனித உயிர்களையும் காவு வாங்கியுள்ளது;
கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட சட்டப்படியான பாதுகாப்புகள் எல்லாமும் மலடாக, முதல்வராக இருந்தும், மர்மமான முறையில் போயஸ் கார்டனிலிருந்து, அப்போல்லோவில் சேர்க்கப்பட்டு, மர்மமான முறையில் ஜெயலலிதா மறைந்தது உள்ளிட்ட, 'நீல வேல் மீன் விளையாட்டு' ஏற்படுத்திய பாதிப்புகளை விட, பன்மடங்கு அதிகமாக மரணங்களை விளைவித்து.
கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட சட்டப்படியான பாதுகாப்புகள் எல்லாமும் மலடாக, முதல்வராக இருந்தும், மர்மமான முறையில் போயஸ் கார்டனிலிருந்து, அப்போல்லோவில் சேர்க்கப்பட்டு, மர்மமான முறையில் ஜெயலலிதா மறைந்தது உள்ளிட்ட, 'நீல வேல் மீன் விளையாட்டு' ஏற்படுத்திய பாதிப்புகளை விட, பன்மடங்கு அதிகமாக மரணங்களை விளைவித்து.
அனிதாவின் அண்ணன் எனது மாணவராக இருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும் என்னை சந்தித்திருந்தால், தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என்றும், ஐ.ஏ.எஸ், சார்ட்டர்ட் அக்கவுண்ட் போன்ற வாய்ப்புள்ள இலக்குகளுக்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிக்குமாறும் அறிவுறுத்தியிருப்பேன்.
என்னை சந்தித்த பின், சில நாட்களில், அந்த பெண் தற்கொலை செய்திருந்தால், அந்த உரையாடலில் நான் எங்கு தவறு செய்திருக்கக் கூடும்? என்று ஆராய்ந்து, அந்த தற்கொலையை தவிர்த்திருக்க வேண்டுமே என்ற கவலையானது, என்னைப் பற்றியிருக்கும்.
‘அனிதா தற்கொலைக்கும், தற்கொலைக்கு முன் அவர் சந்தித்த 'முக்கிய புள்ளிகளுடன்' நடந்த உரையாடல்களுக்கும், தொடர்புகள் இருந்ததா? அடித்தட்டு குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம், இப்படிப்பட்ட 'முக்கிய புள்ளிகளை' சந்திப்பது ஆபத்தா?
(https://www.patrikai.com/netrikan-magazine-release-false-information-anitas-brother-explanation/)
என்பது போன்ற கேள்விகளுக்கும், சி.பி.ஐ விசாரணையின் மூலம், விடைகள் கிடைப்பதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கும் துணை புரியும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post.html )
அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக, தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965
முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் எண்ணிக்கையற்றவை ஆகும். அவை பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் நடந்த சாவுகளாகும்; பொதுவாழ்வு வியாபாரத்தில் மேல்தட்டு வாழ்க்கையில் பயணிப்பவர்களின் முதலில்லாத மூலதனங்களாக.
‘தமிழரின் அடையாளக் கூறுகள் பற்றி தெளிவற்ற, உணர்ச்சிபூர்வ போதை உணர்வுக்கு ஆட்பட்டு, 'தீக்குளிக்க, போராட', தயாராக உள்ள இளைஞர்கள், பெரும்பாலும் கிராமப்புறம்/நகர்ப்புற அடித்தட்டு பின்னணியுடையவர்களாக, பெரும்பாலும் தமிழ் மட்டும் படித்தவர்களாக, கடுமையான தாழ்வு மனப்பான்மையை (முன்னர் குறிப்பிட்ட உளவியல் ஆய்வின்படி ஈடுகட்டும் வகையிலான) முரட்டுத்தனமான உயர்வு மனப்பான்மையில் மறைத்து, கோபம், வெறுப்பு, பழிவாங்கல், வன்முறை போன்ற எதிர் உணர்வு தீனிகளிலேயே வளரும், 'வலியவராக' 'செயல்படுகின்றனர்'.
இத்தகைய போக்கானது, மீண்டும் மீண்டும், வெவ்வேறு வகையிலான, 'முள்ளி வாய்க்கால்' அழிவுகளையே, அப்பாவித் தமிழர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்திக்கும் அளவுக்கு, தற்கொலைச் சுற்றாக அமைந்து விடும்.
இத்தகைய உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கியவர்களுக்கு, அறிவுபூர்வமான பார்வை, அதன் விளைவாகவே மங்கிவிடும். தமது தமிழறிவை வளர்ப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பிரச்சினைகளை ஆழமாக விளங்கிக் கொள்வது, அவற்றை அறிவுபூர்வமாக எவ்வாறு களைவது என்பது போன்ற ஆக்கபூர்வமான வழிகளில் தம்மை வளர்த்துக் கொள்வதும், தமிழ், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட குறைகளைக் களைவதிலும் அவர்களால் ஈடுபடுவதற்கான ஆர்வமும், திறமையும், குறையத் தொடங்கும். சாகசம், வன்முறை, பழிவாங்கல் போன்ற எதிர்மறையான உணர்வு தீனிகளுக்காக ஏங்கும் மனநோயாளிகளாக, தம்மை அறியாமலேயே, அவர்கள் மாற்றம் பெறுவார்கள். (பலவருடங்களுக்கு முன் தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தின்போது, காவல்துறை கூட்டத்தைக் கலைக்க சுட்டதில் ஒரு இளைஞர் மரணமடைந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. கலையுமாறு எச்சரித்த காவல்துறையினர் முன் குடிபோதையில் சென்று, தைரியமிருந்தால் தனது ஆண்குறியை நோக்கி சுடுமாறு சவால் விட, அவ்வாறே நடந்து அவர் பலியானதாக நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். அந்த அளவுக்கு உணர்ச்சிபோதைப் பாதையில் தமிழ்நாடு பயணித்தது. )’ (
தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும்
(4); உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள்; http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, தவறான தகவல்கள் அடிப்படையில், அறிவுபூர்வமான விவாதத்தைத் தவிர்த்து பயணிக்கும், பெரியார்/தமிழர் கட்சிகள் எல்லாம்;
'திராவிடர்/தமிழர் சமூக நீல வேல் மீன் விளையாட்டு' (
Dravidar/Tamizhar Social Blue Whale Game) ஊக்குவிப்பாளர்களாக, பயணிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்புவது சரியா? தவறா?
'செ.கார்கி எழுதி வரும் கட்டுரையை (‘சாதிய மேல்நிலையாக்கமும் ஆண்ட பரம்பரையும்’; http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33637-2017-08-09-04-11-46
)
படித்ததால், தனது கட்டுரையை வெளியிடவும் அதற்கு அவரிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறார்.' என்று பொ.முருகானந்தம் 'கீற்று' இதழுக்கு, கீழுள்ள கட்டுரையை அனுப்பினார். ஏற்கனவே பதிவாக வெளிவந்தவற்றை, பிரசுரிக்க, 'கீற்று' விதிமுறையில் இடம் இல்லை என்று பதில் வந்துள்ளது. எழுத்தாளர் செ.கார்கியின் ஈமெயில் எனது தேடலில் கிடைக்கவில்லை. அவர் பார்வைக்கு சென்று, அவரின் மறுப்பு வெளிவரவேண்டும், என்பது எனது எதிர்பார்ப்பாகும். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/01/ )
‘திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, 'நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.
நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை, நான் படித்திருக்கிறேன்.
ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.’ (
‘'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக; 'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் ?’ ; http://tamilsdirection.blogspot.sg/2017/08/blog-post.html )
அது போலவே, 'பொது சிவில் சட்டம்' கோரிக்கையை 'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரித்துள்ள நிலையில், அதனை இன்றுள்ள 'பெரியார்' கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்து வருவது சரியா? 'பெரியார்' ஈ.வெ.ராவின் நிலைப்பாட்டிலிருந்து ஏன் மாறினார்கள்? என்று விளக்கம் தந்தார்களா? இனியாவது தருவார்களா?
'வன்முறை போராட்டங்கள்' வெற்றி பெற வாய்ப்பில்லை என்று, 'பெரியார்' ஈ.வெ.ரா விடுத்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, அறிவுபூர்வ விமர்சனப் பார்வையின்றி, அறிவுக் கண்களை மூடிக் கொண்டு, உணர்ச்சிபூர்வமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த போக்கில், முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பங்களித்தார்களா?
விடுதலைப்புலிகள் போரில் வெற்றி பெற்றிருந்தால், அதற்கு தங்களின் பங்களிப்பும் இருந்தது என்று சொல்லக்கூடியவர்கள், தோல்விகளில் மட்டும் தங்களின் பங்களிப்பை தட்டிக் கழிக்க முடியுமா?
'வன்முறை போராட்டங்கள்' வெற்றி பெறாது என்று தெளிவுபடுத்தி, உலகிற்கே முன்னுதாரணமாக, பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதமின்றி, போராட்டங்கள் நடத்தி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்த, தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட ஈ.வெ.ரா அவர்கள;
பின்னர் 'பெரியார்' சிறையில் சிக்கி, 'கட்சித் தலைவர்களின் பெயர்களை சொல்வதே அவமரியாதை' என்ற சமூக நோயும், காரியம் சாதிக்க காலில் விழும் கலாச்சாரமும், வளர்ந்ததே 'திராவிடர்/தமிழர் சமூக நீல வேல் மீன் விளையாட்டு'களுக்கு இடமளித்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
“The Lemuria theory
disappeared completely from conventional scientific consideration after the
theories of plate tectonics and continental drift were accepted by the larger
scientific community.” http://en.wikipedia.org/wiki/Lemuria_%28continent%29
அதை ஏற்றுக்கொண்டு, செயல்படுவதற்குப் பதிலாக, பாவாணரின் கருத்துக்களை வேதவாக்காகக் கருதி செயல்பட்டால் என்ன விளைவு ஏற்படும்? அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் பார்வையில், தேவநேயப் பாவாணர் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் விளைவையே அது ஏற்படுத்தும்.
அதற்காக கேலி கிண்டல் செய்பவர்கள் மீது கோபப்படுவது என்பது, இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்.
(http://vijvanbakkam.blogspot.in/2012/08/blog-post.html )
அதாவது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல், பயணிக்கும் 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக, உலக அளவில் அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் கருதும் விளைவில் அது முடியும்.’ (‘தேவநேய பாவாணர், 'பெரியார்' ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’; http://tamilsdirection.blogspot.sg/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html )
திராவிடர்/தமிழர் கட்சிகளில்
, தவறான
தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச போக்கில் விட்டில்பூச்சிகளாக பலியாகுபவர்களின் எண்ணிக்கையானது;
குக்கிராமங்கள் வரை பரவி வரும் ஆங்கிலவழிக் கல்வி வளர்ச்சியின் மூலம் குறைந்து வருகிறது.
அந்த போக்கிற்கும், தமிழ்நாட்டில் 'நீல வேல் மீன் விளையாட்டு'போக்கிற்கும் உள்ள தொடர்பினை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/09/spreading-blue-whale-in-tn-corruption.html
)
அதே போக்கில், தமிழ்நாடானது தொடர்ந்து பயணிக்குமானால், ‘'திரிந்த மேற்கத்திய' மோகத்தில், தமிழ் வேரற்ற, நுகர்வெறி
(Consumer thirst) மிருகங்களாக, நமது குழந்தைகள் வளர்ந்து, அவர்களிடம் நாம் பெறப்போகும் 'பரிசுகள்', வெளியில் சொல்லமுடியாத, இழிவான துன்பங்களாக தாக்கப்போகிறது' என்பதற்கான அறிகுறிகள், இப்போதே வெளிப்பட தொடங்கி விட்டன. 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' செய்யப் போகிறோமா? தமிழ் வேரற்ற (பிராமணர் - பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி) தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடாக வேண்டுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html
)
'திராவிடர்/தமிழர் சமூக நீல வேல் மீன் விளையாட்டு' ( Dravidar/Tamizhar Social Blue Whale Game) ஊக்குவிப்பாளர்களாக செயல்பட்டு, 'பணம், செல்வாக்கு'டன் வலம் வருபவர்களின் அடிவருடிகளாக, நமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டத்தில் வலம் வருபவர்கள் எல்லாம், இன்னும் மோசமான 'சமூக நீல வேல் மீன் விளையாட்டு' சமூக கிருமிகள் என்பதும் எனது அனுபவமாகும்.
தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச போக்கில் பயணிப்பதை எதிர்த்து, அறிவுபூர்வமான விவாதங்களின் மூலம், தாய்மொழி தமிழ் உள்ளிட்ட தமிழ் வேர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தி, தமது குடும்பப் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியானது தாய்மொழி தமிழில் இருப்பதை உறுதி செய்பவர்கள் மட்டுமே, பொது அரங்கில் தமிழர்களாக வலம் வர முடியும்;
'திராவிடர்/தமிழர் சமூக நீல வேல் மீன் விளையாட்டு' ( Dravidar/Tamizhar Social Blue Whale Game) ஊக்குவிப்பாளர்களாக செயல்பட்டு, 'பணம், செல்வாக்கு'டன் வலம் வருபவர்களின் அடிவருடிகளாக, நமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டத்தில் வலம் வருபவர்கள் எல்லாம், இன்னும் மோசமான 'சமூக நீல வேல் மீன் விளையாட்டு' சமூக கிருமிகள் என்பதும் எனது அனுபவமாகும்.
தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச போக்கில் பயணிப்பதை எதிர்த்து, அறிவுபூர்வமான விவாதங்களின் மூலம், தாய்மொழி தமிழ் உள்ளிட்ட தமிழ் வேர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தி, தமது குடும்பப் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியானது தாய்மொழி தமிழில் இருப்பதை உறுதி செய்பவர்கள் மட்டுமே, பொது அரங்கில் தமிழர்களாக வலம் வர முடியும்;
என்ற சமூக சூழலை உருவாக்குவதன் மூலமே, மேலே குறிப்பிட்ட இரண்டு வகை 'நீல வேல் மீன் விளையாட்டு'களின் பாதிப்புகளிலிருந்தும், தமிழ்நாடு விடுதலை அடைய முடியும்.
குறிப்பு:
How can someone convince a stranger to commit suicide with this
game? Why they can successfully alter the mindset of an individual with a set
of instructions?
Reason: When you give someone an option to control the
information, they can control your emotion also.
Nowadays the information spreading around us have a powerful
impact on the cognitive process of our brain that generates emotion and
sentiments. We seldom analyse it.,…… It
is the combination of programmed strategy and psychology makes it more
dangerous. In other words the creator systematically used human emotions like a
computer program to convince the victim……..
There is a direct correlation between the information and emotion.
Information, I mean any audio-visual input our brain receives. it triggers an
emotion….. It is really a hard task to convince a neutral brain, it has to be
biased towards an emotion if someone want to convince them. Hence the major
task of the programmer is to build the mindset before he decides to go along
with his command.
Blue whale systematically build that mind set by engaging his
sensory organs skin, eyes, ear and taste into strange experiences. He uses the
possibility of all sensory inputs such as touch, vision, sound and taste to
condition the victim’s mind…. Your brain
convinced to do something your neutral mind don’t want to do for the first
time! That is a real trap. His subconscious mind know two facts at this stage.
First ‘You are part of the game’. Then, there is an excitement in it….. The
attacker suggests the person to get away from his relationships and control the
external communication, from which starts the formation of a zombie mindset out
of the victim. …How to deal with the issue?
Let’s deviate interest to other positive challenging goals
Fake the information you are sharing online when you feel
something wrong in your chat with a stranger. Give everything fake. Simply
don’t do things that hurt you physically instead provide fake photos and stop
everything in that stage itself. https://www.linkedin.com/pulse/understanding-blue-whale-danger-facts-behind-shyju-chathampalli
The thing that is often forgotten with a sticks-and-carrots ethos
is that whether something is a stick or a carrot is determined entirely by the
person to whom the stick or carrot is being applied. A “carrot” is simply
something a person wants and a “stick” is something the person wants to avoid.
What people want can change; when this happens, the landscape
of sticks and carrots changes, too. Food can often be used to get hungry people
to behave in particular ways; if someone is on a hunger strike, however, food will be a useless manipulator. Some
people will do a lot of things for money but not even that works on everyone.
At the end of the day, it’s all relative.
Whenever you’re feeling as though another person seems to be
yanking your chain or controlling you in some way, you might be completely
correct. But instead of asking them to change what they’re doing (which could
also be a useful strategy) it may be helpful to check your own goals: What’s
important to you at the moment? What do you want? What goals are at the front
of your mind? If you can somehow change your own goals you will also change the
dynamics of the relationship with the other person. Changing your own goals is
not always easy but it can be a lot easier than changing another person.
It’s a fact that, because of the way we are designed, other
people can control
our behavior. It’s also a fact, though, that they only control our behavior by
manipulating the extent to which we are able to achieve goals that are
important to us. It’s our own private collection of goals that determines what
will be sticks and carrots for each of us. By getting to know our own
goals better we will have the best chance of developing satisfying relationships
and forging the life we want. https://www.psychologytoday.com/blog/in-control/201508/the-secret-controlling-other-people
No comments:
Post a Comment