Sunday, November 25, 2018


தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (5)


ஒருங்குறி சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான எதிர்ப்புகள் தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?


குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் இசைச்சுரங்கள் தொடர்பான எழுத்துக்களும், வாசகங்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. அவற்றை 'தமிழ் இசையியல்'(Tamil Musicology) மற்றும் தொல்காப்பியத்தில் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்' ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்பு படுத்த முடியும்?

என்ற ஆய்வில் நான் ஈடுபட்டுள்ளதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்புள்ளவையா?’; https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html )

மேலே குறிப்பிட்ட ஆய்வு தொடர்பான தேடல்களில், சமஸ்கிருத வெறுப்பு நோயானது,

அதிலும் கணினி யுகத்தில், அது எவ்வளவு பெரிய கேடாக அமைய உள்ளது? என்ற அதிர்ச்சியானது, கீழ்வரும் செய்தியைப் படித்தபோது வெளிப்பட்டது.

தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்த கிரந்த எழுத்துமுறையை ஒருங்குறிக்குள் கொண்டுவந்து மற்றமொழிகளைப்போல அதற்கும் தனி இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிற பரிந்துரை ஒருங்குறி சேர்த்தியத்திடம் வைக்கப்பட்டது.

அப்படி செய்யும்போது கிரந்த எழுத்துக்களுடன், கிரந்த எழுத்துமுறை சாராத தமிழ் எழுத்துக்கள் ஏழையும் அதில் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த ஏழு எழுத்துக்களை சேர்த்தால் தான் தமிழ் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த பெயர்கள் மற்றும் சொற்களை சரியாக எழுதமுடியும், வாசிக்க முடியும் என்கிற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் பழங்கால ஆவணங்களை அவற்றில் உள்ளபடியே கணினி தொழில்நுட்பத்தில் ஆவணப்படுத்தவேண்டுமானால் இந்த எழுத்துக்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும் வாதாடப்பட்டது.

ஆனால், தமிழ் நாட்டிலும், உலக அளவிலான தமிழ் மொழி அறிஞர்கள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கிரந்த எழுத்துமுறையை சாராத ஏழு தமிழ் எழுத்துக்களை அதில் சேர்ப்பது தமிழ் கணினி மற்றும் இணைய பயன்பாட்டில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்து இயங்கிவந்திருக்கும் தமிழ் எழுத்துமுறை, எதிர்காலத்தில் கலப்பு எழுத்துமுறையாக மாறுவதற்கு இது வழிகோலும் என்றும் இவர்கள் வாதிட்டனர்.

தமிழ் மொழி அறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இதுகுறித்து ஆராய உயர்மட்டக்குழுவை நியமித்தது. இந்த குழுவின் பரிந்துரை கிடைக்கும் வரை இதுகுறித்து இறுதி முடிவு எதனையும் ஒருங்குறி சேர்த்தியம் எடுக்கக்கூடாது என்று இந்திய நடுவணரசிடம் கோரியது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற இந்திய நடுவணரசு, ஒருங்குறி சேர்த்தியத்திடம் தனது முடிவை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டது.

ஒருங்குறி சேர்த்தியத்தின் உயர்நுட்பக்குழுவும் அதன்படி தனது முடிவை ஒத்திவைத்தது.’( https://www.bbc.com/tamil/news/story/2011/02/110212_granthaunicode.shtml & http://unicode.org/faq/tamil.html )

மேலே குறிப்பிட்ட எதிர்ப்பானது, தொல்காப்பியத்தில் பிறமொழிச் சொற்களை தமிழில் இறக்குமதி செய்வது தொடர்பான 'ஒரீஇ' சூத்திரத்தினை கிழ்வருமாறு புரிந்து தொண்டதன் அடிப்படையில் வெளிப்பட்டதாக தெரிகிறது.

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டு, அத்துடன் நிற்காமல், வேற்று மொழிச் சொற்களை தமிழில் அனுமதிப்பதை எதிர்க்கும் நியாயமும் அதில் இருப்பதாக புரிந்து கொண்டது. (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/11906-2010-12-11-14-44-47 )

தொல்காப்பியத்தில் 'ஒரீஇ' தொடர்பான சூத்திரம் என்பதானது;

பிறமொழிச் சொற்களில் உள்ள எழுத்துக்களில், தமிழ் எழுத்தொலிகள் போல் இல்லாத‌, அந்த பிறமொழி எழுத்துக்களை ஒலிச்சிதைவுடன் (acoustic-phonetic- distortion of the letters of the non-Tamil words,) எவ்வாறு அச்சொற்களை தமிழில் இறக்குமது செய்வது? அவ்வாறு தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு எல்லாம், தமிழ்ச்சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிகள் ஏன் பொருந்தாது? ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய உருவாக்கப்பட்ட 'கடகானா' (katakana  syllabary) முறையானது, எவ்வாறு தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில் அமைந்துள்ளது? தொல்காப்பிய  'ஒரீஇ' முறையானது, எவ்வாறு உலக மொழிகளுக்கான பிறமொழிச்சொற்கள் இறக்குமதிக்கான இலக்கணம் ஆகும்? (To import the technical words from the foreign languages, the 'orIi' process of tholkAppiam may prove to be an objective, language independent linguistic process, that could be adopted in all world languages.) என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘‘orIi' - 'ஒரீஇ' – A Misunderstanding that derailed the Tamil development’; http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

உலகில் உள்ள மொழிகளில் ஒரு மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' வகைப்படுத்தப்பட்டிருப்பது தொல்காப்பியத்தில் மட்டுமே. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.

'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது.
( http://musicresearchlibrary.net/omeka/items/show/2451 )


பிறமொழிச் சொற்களை, பொருள் சிதைவின்றி (No semantic distortion) ஓலிச்சிதைவுடன் இறக்குமதி செய்யும் 'ஃபோனடிக்' (Phonetic) வழிமுறையே ஒரீஇ சூத்திரமாகும். பொருள் சிதைவின்றி 'செமாண்டிக்'(Semantic) முறையில் இறக்குமதி செய்ய வேண்டுமானால், தமிழில் வழக்கில் உள்ள சொல்லானது, அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உதாரணமாக;

ஆங்கிலத்தில் 'F' என்ற எழுத்தின் ஒலியினை, தமிழில் 'ஃப்' என எழுதுவது வரவேற்கத்தக்கதாகும். அறிவியலில் 'Faraday’s Law' என்ற ஆங்கிலச் சொல்லினை, தமிழில் 'ஃபாரடே விதி' என்று எழுதுவதால், தொல்காப்பிய ஒரீஇ சூத்திரப்படியான 'ஃபோனடிக்' (Phonetic) இறக்குமதியில், ஒலிச்சிதைவானது குறைக்கப்படுகிறது. 'Law' என்ற சொல்லானது, தமிழில் 'விதி' என எழுதுவதானது, பொருள் சிதைவற்ற 'செமாண்டிக்'(Semantic) இறக்குமதியானதுஅது போல, டிஜிட்டல்(Digital) அறிவியலில், 'AND GATE' என்ற சொல்லினை, 'அண்ட் வாயில்' என்று தமிழில் இறக்குமதி செய்ததும் சரியே ஆகும்.

அறிவியல் சொற்கள் தொடர்பானஃபோனடிக் ஒரீஇ’ இறக்குமதியில், கிரந்த எழுத்துக்கள் ஒலிச்சிதைவினைக் குறைக்கப் பயன்படும்: 'Oxygen' என்ற ஆங்கிலச்சொல்லுக்கு, தமிழில் 'ஆக்சிசன்' என்ற சொல்லை விட, 'ஆக்சிஜன்' சொல்லில், ஒலிச்சிதைவு குறைவே ஆகும்; உயர்க்கல்வியை ஆங்கிலவழியில் படிப்பவர்களின் சிரமத்தினை, அது குறைக்கும். தனித்தமிழ்ப்பற்றில் அச்சொல்லினை 'தீயகம்' என்று 'செமாண்டிக்' இறக்குமதி செய்வதானது பொருள் சிதைவுடன் அந்த சிரமத்தினை மிகவும் கூட்டி, அறிவியல் தமிழ்க்கல்விக்கு கேடாகவே முடியும்.

'ஒரீஇ' என்ற சொல்லைத் தவறாகப் புரிந்து கொள்ளல் என்பதானது, புரிதலில் ஏற்பட்ட திரிதலாகும். அந்த திரிதலின் அடிப்படையில், உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்போடு தனித்தமிழ்/திராவிடர்/திராவிட‌ இயக்கங்களில் பயணித்தவர்களில்;

'சாதி' அடையாளத்தை விடுத்து, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாக, தமது குடும்பங்களில் திருமணங்கள் நடத்தாதவர்களும், ஏரிகள், ஆறுகள், மலைகள், தாது மணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து கனிவளங்களையும் ஊழல் பேராசையில் சூறையாடியதை எதிர்க்காதவர்களும், தமிழர்களின் சொத்துக்களை அச்சுறுத்தியும், கொலை செய்தும் அபகரித்தவர்களை எதிர்க்காதவர்களும்;

இயல்பில் திரிந்த இரட்டை வேடத் தமிழர்கள் ஆக மாட்டார்களா? (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல் சூழலானது, 'ஒரீஇ' புரிதலில் ஏற்பட்ட திரிதலுக்கு, எந்த அளவுக்கு வினையூக்கி(catalyst) ஆனது? அதன் தொடர்ச்சியாகவே, தமிழர்களில் இயல்பில் திரிந்தவர்கள் எண்ணிக்கையானது, எந்த அளவுக்கு வளர்ந்து, தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) தமிழ்நாட்டையும் சீரழித்த ஊழலுக்கு பாதுகாப்பு அரண் ஆனது? என்ற ஆய்வுக்கும் நேரம் வந்து விட்டது.

அது மட்டுமல்ல, மேலே குறிப்பிட்ட, தமிழில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்வதை எதிர்ப்பவர்கள் எல்லாம், கீழுள்ள பதிவில் விளக்கியுள்ளபடி, சமஸ்கிருத எழுத்துக்களுக்கும், தமிழ் எழுத்துக்களுக்கும் இடையிலானை எழுத்தொலி (Phonetic) வேறுபாடுகள் பற்றியும், அதன் அடிப்படையில் இசைத்தமிழில் சமஸ்கிருத எழுத்தொலிகள் பெற்றுள்ள முக்கியத்துவம் பற்றியும் அறிந்து, அவற்றையும் கணக்கில் கொண்டு, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை.

குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil Musicology) தொடர்புள்ளவையா?’; https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html

மேலே குறிப்பிட்டுள்ள பதிவில், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளேன்.

தமிழ் இசையியல் தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு (Complimentary role) வகித்துள்ளன. அதற்கான காரணம் வருமாறு.

சமஸ்கிருதத்தில் எழுத்தின் ஒலிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன (phonetically defined). அது சமஸ்கிருத மொழியின் தனித்துவ சிறப்பாகும். தமிழில் உயிரெழுத்துக்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மெய்யெழுத்துக்களின் எழுத்தொலிகள், அந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து அமையும் (phonetically with one or more options). உதாரணமாக '' என்ற சொல்லானது, 'சக்கரம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும், ‘சங்கம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும் வேறுபாடு உண்டு.

தமிழ் இசையியலில், ', ரி, , , , , நி' ஆகிய ஏழும் மேலே குறிப்பிட்டவாறு, அந்தந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து ஒலிப்பவை ஆகும். எனவே தமிழ் இசையில் மாணவர்களின் பயிற்சியில் சுருதி சுத்தமாக ஒலிக்க, ஏழு சமஸ்கிருத எழுத்து ஒலிகளைப் பயன்படுத்தும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.  இன்றும் தமிழில் வாய்ப்பாட்டு கற்பவர்கள் எல்லாம், ', ரி, , , , , நி' என்ற ஏழு சுர எழுத்துக்களை, சமஸ்கிருதத்தில் அந்தந்த எழுத்துக்களுக்கான இசைப்பு ஒலியிலேயே பயில்கிறார்கள். அந்த இசைப்பு ஒலியானது, தமிழ் இசையியலில் உள்ளதற்கான சான்றினையும் மேலேயுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

குடுமியான் மலை இசைக்கல்வெட்டில் ஏழு இசைச்சுரங்களும் சமஸ்கிருத எழுத்துக்களில் உள்ளதை ஆராயும் போது, மேலே குறிப்பிட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

சமஸ்கிருதத்தில் shadja (षड्ज) என்பது சுரப்பெயராகும். ஆனால் '' என்ற சுரமானது,’ साஎன்ற சமஸ்கிருத எழுத்தில் குறிக்கப்படுகிறது; சமஸ்கிருத சுரப்பெயரில் உள்ள முதல் எழுத்திலிருந்து வேறுபட்டு.

சமஸ்கிருத சுரப்பெயர்களிலிருந்து, சமஸ்கிருத இலக்கணப்படி, ஏழு சுர எழுத்துக்களைப் பெறமுடியாது, என்பதற்கு திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, ஆபிரகாம் பண்டிதர், வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html   )

குடுமியான்மலை இசைக்கல்வெட்டானது  நரம்பிசைக்கருவியில் இசை பயில்வது தொடர்பான கல்வெட்டாகும். எனவே அதில் ஏழு சுர எழுத்துக்களும் சமஸ்கிருத எழுத்துகளாக உள்ளன.’

தமிழ்நாட்டில் சமஸ்கிருத வெறுப்பு நோயின் காரணமாக, தமிழுக்கு விளைந்துள்ள பாதிப்புகள் காரணமாகவே, தமிழ்ப்புலமையாளர்களில் செல்வாக்குள்ளவர்கள் எல்லாம், எனது தமிழ்/தமிழ் இசை தொடர்பான ஆய்வுகளை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தாமல், வைரமுத்துவைப் போலவே 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html), இருளில் நீட்டிக்க பங்களித்துள்ளார்களா?

தமிழ் தொடர்பாக, தமது உணர்ச்சிபூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராக அறிவுபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்தினை, அறிவுபூர்வமாக மறுக்க வேண்டியதானது, தமிழ்ப்புலமையாளர்களின் கடமையாகும். அந்த சமூக பொறுப்பினைத் தட்டிக் கழித்து, அதனைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தாமல், இருளில் சிக்க வைப்பது சரியா? அது தமிழுக்குக் கேடாகாதா?

சுமார் 15 வருடங்களுக்கு முன்னேயே, வைரமுத்துவால் திரை இசைக்கு நேர்ந்துள்ள பாதிப்புகள் தொடர்பான எனது அபாய எச்சரிக்கையை இருட்டில் தள்ளாமல், வெளிச்சத்தில் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்பட்டிருந்தால், திரை இசை ரசனையும் சுருதி சுத்தமான திசையில், தடைகளின்றி பயணித்திருக்கும். வைரமுத்து தனது குறைபாடுகளை அடையாளம் கண்டு திருந்தி இருப்பார்; அல்லது திரை உலகத்தினை விட்டு ஒதுங்கியிருப்பார். (‘இருளில் இருந்து விடுதலையாகும் திரை இசைத்தமிழ்?’; https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2018-11-20T23:43:00-08:00&max-results=7 )

தமிழ்நாட்டில் உள்ள புலமையாளர்களுக்கு எனது ஆய்வுகளை ஈமெயில் மூலம் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும், கிடைத்தது என்று தெரிவித்தவர்கள் அரிது. ஒரு பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் மட்டும் தமக்கு 'இசையியல் தெரியாது' என்று தெரிவித்து, திருக்குறள் தொடர்பான எனது ஆய்வினை வேண்டாம் என, கொரியரில் எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களும் தமக்கு இசையியல் அறிவு இல்லாததால், எனது திருக்குறள் தொடர்பான ஆய்வு தமக்கு விளங்கவில்லை என்று ஈமெயில் மூலம் பதில் அனுப்பினார்.

'தமிழை உயர்த்தி பேசினால் போதும்' என்று மகிழ்ந்து, எனது ஆய்வுகளின் மூலமாக வெளிப்பட்ட தமிழிசை தொடர்பான பிரமிக்க வைக்கும் முடிவுகளை எல்லாம் விளங்கிக் கொள்ளும் அறிவின்றி, உணர்ச்சிபூர்வமாக பாராட்டுபவர்களின் வாடையின்றியே, நான் எனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். உணர்ச்சிபூர்வமாக பாராட்டுபவர்களின் வலைப்பின்னலை 'வளர்த்து', உலக அளவில் புகழுடன் வலம் வரும் தமிழ்/தமிழிசைப் புலமையாளர்கள் எல்லாம், எனது ஆய்வுகளை இருளில் தள்ளி வருவதையும் நான் அறிவேன். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html

எனது ஆய்வுகளில் அறிவுபூர்வ குறைபாடுகள் இருந்தால், அதைச் சுட்டிக்காட்டும் புலமையுள்ளவர்களிடம் (Noam Chomsky, George Hart, Richard Widdess, Steven Brown, Dr.N.Ramanathan, etc) எனது ஆய்வு முடிவுகளை முன்வைத்து முன்னேறுகிறேன். அவர்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகள் தொடர்பான‌, உரிய சான்றுகளைத் தேடி எடுத்து, உரிய‌ விளக்கமளித்து, அவர்களின் ஒப்புதலோடு தான், நான் முன்னேறுகிறேன். அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளில் ஏதாவது எனது ஆய்வில் சரி என்று வெளிப்பட்டால், அவர்களுக்கு நன்றி தெரிவித்துத் திருத்திக் கொள்வதிலும் தயக்கம் காட்டியதில்லை.

நானறிந்தவரையில், தமிழிசை தொடர்பான ஆய்வு முடிவுகளை பிராமணர் மற்றும் பிராமணரல்லாத புலமையாளர்களுடன் விவாதித்து நிறுவி, அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டவர் ஆபிரகாம் பண்டிதர் மட்டுமே. ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை இன்று நான் வெளிப்படுத்தியுள்ளேன். .வெ.ராவுக்கு நெருக்கமாக இருந்த தமிழ்ப்புலமையாளர்கள் உள்ளிட்டு, அவர் வாழ்ந்த காலத்தில் எவரும் அவருக்கு, தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாகப்' பார்த்த, அவரின்  அக்குறைகளைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று ஆபிரகாம் பண்டிதரும், .வெ.ரா அவர்களும் உயிரோடு இருந்தால், நான் சுட்டிக்காட்டிய குறைகளை ஏற்றுக்கொண்டு என்னைப் பாராட்டியிருப்பார்கள். (குறிப்பு கீழே)

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?

அதைப் பற்றிய புரிதலின்றி, இலக்கண விதிகளை 'பீடத்தில்' வைத்து, மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல்,  தமிழ் உயர் பீட  (Ivory Tower) புலமையாளர்கள்,  சாதாரண தமிழர்களை அந்த விதிகளில் சிக்க வைத்த முயற்சிகளும், அவர்களை இலக்கண விதிகளிலிருந்து தப்பி ஓடத் தூண்டியதா? அந்த 'உயர் பீட' புலமையாளர்களில் பலர்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, வெளியில் தமிழ்வழி ஆதரவாளர்களாக 'காட்சி' கொடுத்தால், அவர்களை யார் மதிப்பார்கள்? (‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’; http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )

தி.மு. தலைவர், பல முஸ்லீம் தலைவர்கள், உள்ளிட்ட பலரின் பெயர்கள் எல்லாம் நிகழ்காலத்தில் கிரந்த எழுத்துக்கள் கொண்ட பெயர்களாக இருக்கின்றன.

ஒருங்குறி சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கிரந்த எழுத்துக்கள் தொடர்பான, தமிழ் மொழி அறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக, தமிழக அரசு, அது குறித்து ஆராய நியமித்த உயர்மட்டக்குழுவில் உள்ளவர்கள் எல்லாம்;

தமிழின், குறிப்பாக இசைத்தமிழின், நலன் கருதி மேலே குறிப்பிட்டவற்றை தமது ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்களின் ஈமெயில் முகவரியானது, எனது தேடலில் கிடைத்தால், நானும் அனுப்புவேன். இதனைப் படிக்கும் வாசகர்களில் வாய்ப்புள்ளவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று நம்புகிறேன்.


குறிப்பு:


தமது புலமையின் வரைஎல்லை (limitation)  பற்றிய புரிதலின்றி, புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, 'பகுத்தறிவு' என்ற போர்வையில், சாதாரண பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி, அறிவுக் களஞ்சியமான பழந்தமிழ் இலக்கியங்களை, 'மூட நம்பிக்கை, குப்பை' என்று வெறுத்து, ஒதுக்கும் போக்கானது, ஒரு சமூக 'பகுத்தறிவு' இயக்கமாக, உலக வரலாற்றில், எந்த காலக்கட்டத்திலும், எந்த நாட்டிலும் நடந்திருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருத இலக்கியங்களை 'மூடநம்பிக்கை, குப்பை' என்று வடநாட்டில் எந்த பகுத்தறிவு/மார்க்சிய புலமையாளராவது கண்டித்திருக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

No comments:

Post a Comment