ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள் (2)
மருத்துவர் ரமேஷ் திட்டமிட்டிருந்த 'நொய்யல் திணையியல் ஆய்வு'
அண்மையில் மனைவியின் பிணத்தோடு நடு சாலையில் அமர்ந்து போராடிய கோவை மருத்துவர் ரமேஷின் டாஸ்மாக் கடை அகற்றும் போராட்டத்தினை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து அழுதவர்கள் அதிகம். அது தொடர்பான கீழ்வரும் பேட்டியே, இந்த பதிவினை எழுத என்னைத் தூண்டியது.
அந்த விபத்தில் உயிர் பிழைத்த அவரது மகளும், அவரும், விபத்துக்குக் காரணமான மோட்டர் சைக்கிளை ஓட்டிய குடிகாரர்கள் மீது தங்களுக்கு எந்த பகை உணர்வும் இல்லை, என்பதை மேற்குறிப்பிட்ட பேட்டியில், அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள். கூடுதலாக மருத்துவர் ரமேஷ் சமூக முக்கியத்துவம் வாய்ந்த கீழ்வரும் கருத்தினையும் வெளிப்படுத்தி உள்ளார்.
"சமூகமானது முற்றிலுமாக சிதைந்து விட்டது. இக்காலத்தில் மக்கள் எல்லாம் தங்களின் வேர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள்.",
“The society is totally
broken. People these days are moving away from their roots.”
ஒரு மனிதர் தான் சந்திக்கும் துயரத்தினை தமது தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே அணுகாமல், அந்தப் பிரச்சினையின் சமூகத் தொடர்பினையும் கணக்கில் கொண்டு, சமூக நோக்கில் செயல்பூர்வமாக அணுக, ஒரு அசாத்திய துணிச்சலும், அறிவு நேர்மையும் வேண்டும். அதனை தன் மனைவியின் மரண சம்பவத்தை எதிர்க்கொண்ட போக்கில், ரமேஷ் முன்னுதாரணமாகியுள்ளார்.
முதலில் சமூகமானது எவ்வாறு முற்றிலுமாக சிதைந்து விட்டது என்பதை விளங்கிக் கொண்டால் தான்;
“இக்காலத்தில் மக்கள் எல்லாம் தங்களின் வேர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள்." என்பது தொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொள்ள முடியும்.
மருத்துவர் ரமேஷ் 1980களில் மருத்துவக் கல்லூரியில் படித்தவர்; 1967க்குப் பின் பள்ளிப்படிப்பைத் தொடங்கியவர். 1967க்கு முன், மது பற்றி தெரியாத மாணவர்கள் படித்த காலத்தில், இந்தியாவிலேயே தனித்துவமான ஊழலற்ற ஆட்சி எவ்வாறு இருந்தது? என்பதில் இருந்து, அந்த ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும்.
அடுத்து, இன்று எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சமூகம் சீர்குலைந்துள்ளது? என்பதை அறிய வேண்டும். அப்போது தான், இடையில் எந்த சமூக செயல்நுட்பத்தில் யார்? யார்? என்னென்ன பங்களித்து, தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீர் குலைத்தார்கள்? என்பதை அறிவுபூர்வமாக விவாதிக்க முடியும்..
‘‘Feroze The Forgotten Gandhi’
(by Bertil Falk) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே, ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.
அவ்வாறு ஊழல் களங்கத்துடன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;
இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.’ (‘ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்’;
1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க வழி வகுத்த சமூக செயல்நுட்பமானது, எவ்வாறு 1944இல் முளை விட்டு வளர்ந்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
இன்று தமிழ்நாட்டில் முற்றிலுமாக சிதைந்துள்ள சமூகத்தில், அரசியல் மற்றும் ஆட்சி அதிகார செல்வாக்குடன் வலம் வரும் தமிழர்களை எல்லாம், கீழ்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.
'ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கேன் வம்பு? என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாலாட்டி, காலை வாறி, முதுகில் குத்தி, எந்த வழியிலாவது 'புத்திசாலித்தனமாக'(?) பிழைத்து, 'பிணமாக' வாழும் தமிழர்கள்;
2.
'சமூக முதுகெலும்பு' முறிந்து, 'பாதுகாப்பான' தமது சமூக வட்டதிற்குள் முணகிக் கொண்டு வாழும் 'யோக்கியத் தமிழர்கள்';
3. மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரை ஊக்குவித்து, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள மேற்குறிப்பிட்ட இரு பிரிவினரிடமும் 'நல்லுறவு' கொண்டு, அவர்களை எல்லாம், தமது கொள்ளைக்கான 'சமூக முதுகெலும்பாக' வளர்த்து, அதிகார பீடங்களில் வலம் வரும் சமூகக் கிருமிகளான தமிழர்கள்
கடந்த சுமார் 30 வருடங்களாக எதிர்ப்பின்றி
தொடர்ந்த மணல் கொள்ளைக்கு எதிராக இன்று ஆங்காங்கே போராடும் துணிச்சலை உள்ளூர் மக்கள்
வெளிப்படுத்தி வருகிறார்கள்; 'திணையியல் மீட்சி' வலிமையின் வெளிப்பாடாக; மேற்குறிப்பிட்ட
சமூகக் கிருமிகளின் ஆட்டங்கள் விரைவில் ஓடுங்கப் போவதன் 'சிக்னலாகவும்'.
மேற்குறிப்பிட்ட பேட்டியில், தாங்கள் வாழும் இடத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள குகைகள், தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளிட்ட ஆய்வுகளிலும், மருத்துவர் ரமேஷ், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். கூடுதலாக, நொய்யல் ஆறானது மலையில் துவங்கி, காவிரியில் கலக்கும் இடம் வரை ஆய்வு செய்யும் திட்டத்தினை, அடுத்து துவங்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். (“We three – my wife, my daughter and I – have visited several caves and other spots to study and document the place, the flora and fauna etc,” he says, adding that before his wife died, they we were working on a project to study the Noyyal river, from its origin in Velliangiri mountains to the point where it joins Cauvery.)
மேற்குறிப்பிட்ட பேட்டியில், தாங்கள் வாழும் இடத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள குகைகள், தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளிட்ட ஆய்வுகளிலும், மருத்துவர் ரமேஷ், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். கூடுதலாக, நொய்யல் ஆறானது மலையில் துவங்கி, காவிரியில் கலக்கும் இடம் வரை ஆய்வு செய்யும் திட்டத்தினை, அடுத்து துவங்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். (“We three – my wife, my daughter and I – have visited several caves and other spots to study and document the place, the flora and fauna etc,” he says, adding that before his wife died, they we were working on a project to study the Noyyal river, from its origin in Velliangiri mountains to the point where it joins Cauvery.)
அதாவது நொய்யல் ஆறு துவங்கும் மலைப்பகுதியில் (குறிஞ்சி) இருந்து தொடங்கி, அதன் காட்டுவழி (முல்லை) பயணத்தையும், பின் அது தளத்தில் வயல்கள்(மருதம்) சூழ ஓடி, காவிரியில் கலப்பது வரையிலான 'நொய்யல் திணை ஆய்வு' திட்டத்தினை, மருத்துவர் ரமேஷின் குடும்பமானது தொடங்க இருந்த தருணத்தில், மேற்குறிப்பிட்ட விபத்தின் மூலமாக அவரின் மனைவி மரணம் அடைந்துள்ளார்.
சங்க இலக்கியங்களில் உள்ள 'திணையியல்' தொடர்பான சான்றுகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஆய்வுத் திட்டத்தினை, காலனிக்கு முன்னும், பின்னும் என்று பிரித்து ஆய்வுகள் மேற்கொண்டால் தான்;
'சமூகமானது முற்றிலுமாக சிதைந்து விட்டது. இக்காலத்தில் மக்கள் எல்லாம் தங்களின் வேர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள்.' என்பதானது, எந்த சமூக செயல்நுட்பத்தில் அரங்கேறியது? என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
'திணையியல்' தொடர்பான ஆய்வு என்பதானது, நொய்யல் ஆறு துவங்கும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம் வரை வாழும் மக்களின் இசை, நடனம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் இன்று என்ன நிலையில் உள்ளன? காலனியத்திற்கு முன் எவ்வாறு இருந்தன? இடையில் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன, இயற்கை அமைப்பு, தாவர விலங்கினங்கள் உள்ளிட்டு அனைத்திலும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் காணும் வகையில் முன்னெடுப்பதாகும்.
அந்த ஆய்வில், ''சமூகமானது முற்றிலுமாக சிதைந்து விட்டது.' என்பதை வெளிப்படுத்தும் வகையில்;
நொய்யல் ஆறு துவங்கும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம் வரை வாழும் மக்களில்;
மேற்குறிப்பிட்ட மூன்று வகை தமிழர்களை அடையாளம் காண வேண்டும். அதாவது, 'பிணமாக' வாழும் தமிழர்கள் யார்? 'சமூக முதுகெலும்பு' முறிந்து வாழும் 'யோக்கியத் தமிழர்கள்' யார்? சமூகக் கிருமிகளான தமிழர்கள் யார்? அந்த மூன்று வகையிலான தமிழர்களின் சமூக வாடையின்றி வாழும் பிற தமிழர்கள் யார்? என்ற ஆய்வினையும் துவங்க வேண்டும். 'அந்த' நான்கு வகையிலான தமிழர்களின் இசை, நடனம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பண்பாட்டு கூறுகளில் உள்ள வேறுபாடுகளையும், 'அந்த' ஆய்வில் அடையாளம் கண்டு வெளிப்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஆய்வில், சங்க இலக்கியங்களில் 'இயல்பு' தொடர்பாக உள்ள சான்றுகள் எல்லாம் மிகவும் முக்கியமானவை ஆகும். ஏனெனில், முதல் மூன்று வகை மனிதர்கள் எல்லாம், நான்காவது வகை மனிதர்களிடம் இருந்து எவ்வாறு 'இயல்பில் திரிதலுக்கு' உள்ளாகியுள்ளனர்? 'அந்த' இயல்பில் திரிதலிலும், அந்த மூன்று வகை மனிதர்களையும் பிரித்து அடையாளம் காட்டும் அளவுக்கு, எவ்வாறு மூன்று வகைகளிலான 'இயல்பில் திரிதல்' உள்ளன? என்ற கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க, மேற்குறிப்பிட்ட 'இயல்பு' தொடர்பான சான்றுகள் உதவும்.
‘மனித ‘இயல்பில் திரிதல்’ என்பது எவ்வளவு கேடான நிகழ்வு என்பதை விளங்கிக் கொள்ள, பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள 'இயல்பு' என்ற சொல் கூடுதல் வெளிச்சத்தைத் தரும்.
(‘'இயல்பு' என்ற முதுகெலும்பு முறிந்த தமிழர்கள்’; https://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_29.html
)
பழந்தமிழ் இலக்கியங்களை உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் அல்லது அவ்விளக்கங்கங்களின் அடிப்படையில், தமிழில் புலமையுள்ளோர் எழுதிய புத்தகங்கள் மூலம் மட்டுமே அணுகுபவர்களாகவே, தமிழார்வளர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.
ஆனால் சொற்களால் விவரிக்க முடியாத இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், தமக்கிருக்கும் தமிழறிவு பற்றிய பயமின்றி, ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன் துணிச்சலாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள வரிகளை
(texts) அணுகலாம். புதையல் தேட தமது பயணத்தைத் தொடங்குபவர்கள், புதையல் வேட்டையின் ஊடேயே, வேட்டைக்கான திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து, இறுதியில் வெற்றியும் பெறுவார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலும் புதையல் தேடி வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலான 'அனுபவபூர்வ' கட்டுரையைக் கீழ்வரும் இணைய தளத்தில் படிக்கலாம்.
பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருளானது, இன்று அதே சொற்களுக்கு உள்ள பொருளுடன் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு, என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சங்க இலக்கியங்களில் 'கழகம்' என்ற சொல்லுக்கு 'சூதாடும் இடம்' (திருக்குறள் 937) என்பதே பொருளாகும். எனவே திறந்த மனதுடன் ஆர்வத்துடன் ஆராய்ந்தால், உரைகள் வெளிப்படுத்தாத பொருளையும், நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்பதையும், மேற்குறிப்பிட்ட கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம்.
அதே போல் இன்றும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு’, மற்றும் (திராவிடக் கட்சிகளின் 'தமிழர்', 'திராவிடர்', 'திராவிட', குழப்பங்களுக்குள்ளாகியுள்ள,) ‘இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள், என்னை மிகவும் ஈர்த்து வரும் பகுதிகளாகும்.
தமிழ்நாட்டில் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேறும் சூழலும் கனிந்து வருகிறது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முகப்புத்தகத்தில் 'உணர்ச்சி போதை' போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட கருத்து, இந்துத்வா தொடர்புள்ள முகப் புத்தகத்தில் பாராட்டுதலுடன் வெளியாகியுள்ளது. சமூகத்திற்கு கெடுதலான வகையில் இயல்பில் திரிந்தவர்கள் தனிமைப்பட்டு பலகீனமாகும் போக்கும் தொடங்கி விட்டது. 'இந்துத்வா' என்ற போர்வையிலும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போர்வையிலும் 'உணர்ச்சிபூர்வ போதைகளை' தூண்டி வாழும் சுயநலவாதிகள் சருகாகி, உதிரச் செய்யும், அறிவுபூர்வ விவாதங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவையை மீட்பதற்கு, அந்த செயல்முறை தமிழ்நாட்டில் அரங்கேறுவது தவிர்க்க முடியாத வரலாறாக நிரூபணமாகப் போகிறது என்பது எனது கணிப்பாகும். தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ விவாதங்களை விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பது அதற்கு மிகவும் துணை புரியும் என்பதும் என் கருத்தாகும்’ (‘'இயல்பில் திரிந்தவர்கள்' ஆதிக்கத்தில் தமிழ்நாடு?’;
எனவே மருத்துவர் ரமேஷ் திட்டமிட்டிருந்த 'நொய்யல் திணையியல் ஆய்வு' என்பதானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய காலத்தின் கட்டாயமான ஆய்வு ஆகும். தமிழ்நாட்டில் ஆங்காங்கே சுயலாப நோக்கற்ற சமூகப்பற்றுடன் வாழும் தமிழர்களில் ஆர்வமும், உழைப்பும் நேர்மையான சுயசம்பாத்தியமும் உள்ளவர்கள் எல்லாம் தத்தம் பகுதிகளில் 'திணையியல் ஆய்வு' மேற்கொள்வதும், ஒருவருக்கொருவர் ஆய்வு முடிவுகளை பரிமாறி, அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக நிறைகுறைகளை அடையாளம் கண்டு முன்னேறுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.
“இக்காலத்தில் மக்கள் எல்லாம் தங்களின் வேர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள்."
என்பதானது, இன்றைய தமிழ்நாட்டில் உள்ள சமூகத்தின் சிக்கலாகும். எனவே அது தொடர்பான ஆய்வினை, நாம் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்.
ஒரு மனிதரின் வேர் என்பது என்ன? என்பதை ஆராய்வோம்.
மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் தமக்கான இடத்தில் நிலை பெறுவதற்கும், தமது வளர்ச்சிக்கான உணவுகளை உண்டு வளரும் உயிரோட்டமுள்ள வாழ்க்கை என்பதானது, அவற்றின் வேர்களைப் பொறுத்ததாகும். வேர்களில் ஏற்படும் நோய்களின் தன்மையைப் பொறுத்து, 'அந்த' உயிரோட்டம் பாதிக்கப்படும்; அல்லது மரணத்தினை விளைவிக்கும்.
வாழ்கின்ற மனிதரின் வேரின் தொடக்கமாக அவரது பிறந்த இடமும், வேரின் முடிவாக அவர் மரணிக்கும் இடமும் இருக்கிறது. அந்தந்த இடத்தில் வாழும் மக்களின் இசை, நடனம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் எல்லாம், அந்தந்த இடத்தில் உள்ள வேருடன் தொடர்பு கொண்டவை ஆகும். எனவே பிறந்த இடம் ஒன்றாகவும், வாழ்ந்து மரணிக்கும் இடம் வேறாகவும் இருக்கும் நிலையில் சிக்கிய மனிதர்கள் எல்லாம், எந்த இடத்தின் வேரோடு ஒட்டி வாழ்வது? என்பது தொடர்பான சிக்கலிலும் வாழ்ந்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் பிறந்தவர்களில், பிறந்த ஊருடன் சாகும் வரை தொடர்பில் உள்ளவர்கள் எல்லாம் பிழைப்பிற்காக வெளியூர் இடம் பெயர வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்களாகவே பெரும்பான்மையாக உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் கடவுளாகக் கருதி, தாவரங்களையும் விலங்குகளையும் வணங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் காலனியத்திற்குப் பின், வழிபாட்டில் நுழைந்த இரைச்சல்களை அடையாளம் கண்டு அகற்றி, 'சிக்னல்களை' உணர்ந்தால், 'இயற்கையோடு இணைந்த திணையியல்' வாழ்வு முறை வெளிப்படலாம்.
வசதி, வாய்ப்பு, படிப்பு போன்ற வலிமையில் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பிழைப்பிற்காக வாழ்பவர்களில், சாகும் வரை தாம் பிறந்த ஊருடன் தொடர்பில் இருப்பவர்கள் பக்தியுடனும், தமது குலதெய்வ வழிபாட்டினை வருடம் ஒரு முறையாவது தரிசித்து வணங்குபவர்களாகவே உள்ளார்கள். அந்த வரிசையில், நான் அறிந்தது வரையில், கிறித்துவர்களும், மேற்கத்திய மோகத்தில் வாழ்பவர்களும், திராவிடர்/திராவிட/ கம்யூனிஸ்ட்/முற்போக்குகளும் அரிதாகவே உள்ளார்கள். முஸ்லீம்களைப் பற்றிய உள்ளீடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் பிற மாநிலங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்டு, அம்மாநிலங்கள் இருந்தால், நான் வியப்படைய மாட்டேன்.
தமிழ்நாட்டில் 'திணையியல்' என்பதில், காலனியத்திற்குப் பின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? என்ற ஆய்வின் மூலமே, நாம் நமது வேர்களைத் தேடி, 'அந்த' தொடர்பினைத் தொடரும் முயற்சியில் முன்னேற முடியும். பிறந்த ஊருடனும், பிறந்த நாட்டுடனும் தொடர்பில் உள்ளவர்கள் எல்லாம், ஆர்வத்துடன் முயன்றால், அந்த முயற்சியில் முன்னேறுவது சாத்தியமாகும் வாய்ப்பும் அதிகமாகும். அது தொடர்பான திறவுகோலாக, நாம் தற்போது வாழ்கின்ற இடத்தில் உள்ள சாமான்யர்களின் சமூகத்தோடும், 'அந்த' இடத்தைச் சுற்றியுள்ள இயற்கையோடும் 'இயைந்து' வாழ்வதானது துணை புரிகிறது; என்பதும் எனது அனுபவமாகும்.
(வளரும்)
Note:
Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'
https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1
Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'
https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1
No comments:
Post a Comment