Thursday, April 4, 2019

நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா? (3)  

 

ராஜாஜி, .வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்




'ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கேன் வம்பு? என்று  ஊழல் அரசியல்வாதிகளுக்கு வாலாட்டி, காலை வாறி, முதுகில் குத்தி, எந்த வழியிலாவது 'புத்திசாலித்தனமாக'(?) பிழைத்து;

'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியின்- பங்களிப்பின்றி,  எந்த தனி மனிதராலும் கீழே குறிப்பிட்டுள்ள அளவுக்கு

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில், அதிக மதிப்புள்ள சொத்துக்களும், தொழில் வியாபார வாய்ப்புகளும் பிறமாநில/வெளிநாட்டினர் வசம் சிக்கி வரும் போக்கில், அந்த போக்கின் 'ஆணிவேராக', தமிழர்களில் 'எல்லா வகை' தரகர்களும், திருடர்களும். 'ஊழல் அரசியல்' போக்கில் வளர்ந்து, 1970களின் பிற்பகுதிகள் முதல், 'மம்மி, டாடி' நோயில்  தாய்மொழி தமிழின் ஆணிவேரை இழந்து, தமிழில் எழுதவும், படிக்கவும், பெரியவர்களை மதிக்கவும் தெரியாத, மாணவர்களை உருவாக்கி, 1990 முதல் அம்மாணவர்களில், வளரும் எண்ணிக்கையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற நோய்களில் சீரழியும் அளவுக்கும், அதை பயமின்றி செய்யும் அளவுக்கும், காவல்துறை நீதிமன்றங்களில் கறுப்பு ஆடுகளின் வளர்ச்சியும், சமூக மூச்சுத் திணறலை உச்சமாக்கும் அளவுக்கு; (http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html );

தமிழ்நாட்டை சீரழித்திருக்க முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, அந்த சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது, 'அந்த பங்களிப்பு' வழங்கிய 'முக்கூட்டணி சமூக குற்றவாளிகள்' எல்லாம், சமூக கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே துணை புரியும்; தமிழ்நாட்டின் மீட்சியையும் தாமதப்படுத்தி. (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

.வெ.ரா அவர்களிடமிருந்து சம்பத்தைப் பிரித்து, அந்த துணிச்சலில் அண்ணா 1949இல் தி.மு.கவை தொடங்கினார். சம்பதைப் பிரிக்கும் முயற்சியில் அண்ணா தோற்றிருந்தால், தி.மு. என்ற கட்சியை ஆரம்பிக்கும் துணிச்சல் அண்ணாவுக்கு வந்திருக்காது. முதல்வராக அண்ணா பயணித்த போது, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஏக்நாத் ரானடேயுடன் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் தொடர்பாக பலமுறை உரையாடியிருக்கிறார். நெடுஞ்செழியன் போன்றோர் கலந்து கொண்ட அந்த உரையாடல்களில் கலந்து கொள்ளாத அளவுக்கு அண்ணாவின் அளவுகோலில் கீழிருந்த கருணாநிதி, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, 'கூவத்தூர் பாணியில்' முதல்வரானார். பின் தி.மு.கவை தன் குடும்பச் சொத்தாக மாற்றியதற்கு வெளிப்பட்ட எதிர்ப்பில், எம்.ஜி.ஆர் வெளியேறி அண்ணா தி.மு.கவைத் துவக்கினார். ஊழலற்று ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்து, பின் தேர்தலை திடீரென சந்திக்க வைத்து, எம்.ஜி.ஆர் ஆட்சியும் ஊழலில் பயணிக்க கருணாநிதி காரணமானார். அந்த போக்கில் ஜெயலலிதா கட்சியில் சேர, எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், கூவத்தூர் பாணி மோதலில் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியும், ஜெயலலிதாவும் ஈடுபட்டு, இறுதியில் ஜெயலலிதா வென்று முதல்வரானார். அந்த போக்கில் ஜெயலலிதாவுடன் ஒட்டி சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளர் ஆனார்.

1991க்கு முன் வரை கருணாநிதியின் ஊழல் ஆட்சியிலும் ஏரிகள், ஆறுகள், கிரனைட் மலைகள்,தாதுமணல் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருந்தன. ஜெயலலிதாவை முன்னிறுத்தி சசிகலா குடும்ப ஊழல் தலையெடுத்த பின்னரே, அவைகள் எல்லாம் ஊழல் பெரும்பசிக்கு இரையாகி, அத்துடன் அடங்காமல், கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், ஆர் ரகுமான், நிகழ்காலத்தில் சத்யம் தியேட்டர்ஸ் வரை இன்னும் பலரை அச்சுறுத்தியும், கொலைசெய்தும், தனியார் சொத்துக்களை அபகரிக்கும் போக்கும் அரங்கேறியது

சம்பதைப் பிரிக்கும் முயற்சியில் அண்ணா தோற்றிருந்தால்,1949இல் தி.மு. தோன்றியிருக்காது. இவ்வளவு பாதிப்புகளுக்கும் தமிழ்நாடு உள்ளாகியிருக்காது.

‘1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்தபின் தமது கட்சியானது பொதுவாழ்வு வியாபார கருவியானதை உணர்ந்து, மனம் வெறுத்து, முதல்வர் அண்ணா கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியிடம் விரைவில் மரணம் அடைய விரும்புவதாக தெரிவித்ததற்கு பதிலாக;

1948இல் .வெ.ராவின் தூத்துக்குடி மாநாட்டு உரையை ஆராய்ந்து, தமது தவறான பயண திசையை உணர்ந்து, .வெ.ராவுடன் அண்ணா சேர்ந்து பயணித்திருந்தாலும்;

1949இல் தி.மு. தோன்றியிருக்காது;

ஜெயலலிதா முதல்வராகியிருக்க முடியாது; சசிகலா குடும்ப பிடியில் தமிழ்நாடும் சிக்கியிருக்காது; மத்திய, மாநில அரசுகளை எல்லாம் முட்டாளாக்கி, 'பணத்துவா' மூலம் தினகரன் வெற்றி பெற்ற, இழிவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது.’ 
(‘இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் 'தனித்துவம்' (Unique)?’; https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

நேரு குடும்ப சுயநல அரசியல் ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத் தொடங்கியுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

‘Feroze The Forgotten Gandhi’ ( by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துடன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;


இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா? பின் 1967‍இல் ஆட்சி மாற்றம் வெளிப்படுத்திய 'பொதுவாழ்வு வியாபார' போக்கில், முதல்வர் அண்ணா மனமுடைந்து, விரைவில் மரணமடைய விரும்பியதையும், அண்ணாவை அறிமுகம் செய்த .வெ.ரா அவர்களும் மனமுடைந்து, முனிவராக ஒதுங்க விரும்பியதையும், இன்று வரை விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது சரியா?’ 

ஏன் இருவராலும் ஒன்று சேர்ந்து, பொதுவாழ்வு வியாபாரப் போக்கிலிருந்து திராவிட இயக்கதைக் காப்பாற்ற முடியாமல் போனது? வயதின் காரணமாக தமது இயலாமையை உணர்ந்து .வெ.ரா அவர்கள் முனிவராக விரும்பினாரா? நோயின் காரணமாக தமது இயலாமையை உணர்ந்து, அண்ணா விரைவில் மரணமடைய விரும்பினாரா? அந்த நிலையில் இருவரும் சேர்ந்து, காமராஜரை ஆதரித்திருந்தால், தமிழ்நாடு தப்பித்திருக்காதா? ஆட்சியின் பலன்களை ருசிப்பதில் அறிவுஜீவிகள் எல்லாம் ஆவலுடன் இருந்ததால், அந்த திசையில் விவாதமே நடைபெறவில்லையா?

தனிப்பட்ட முறையில் .வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பின் மூலமாகவே, ராஜாஜியின் தூண்டுதலால் காங்கிரசில் சேர்ந்தார். அந்த முயற்சியில் ராஜாஜி தோற்றிருந்தாலும், .வெ.ரா காங்கிரசில் சேர்ந்திருக்க மாட்டார். தி. தோன்றியிருக்காது.

இந்திய விடுதலைக்கு முன் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை பகிரங்கமாக ஆதரித்தது, இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றது; அந்த பதவி போன பின், நேருவால் இலாக்கா இல்லாத மந்திரி பதவியை ஏற்றது; அந்த பதவி போன பின், 1952 பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூவத்தூர் பாணிக்கு விதை போட்டு, முதல்வர் ஆனது; அந்த பதவி போன பின் தி.மு.கவை ஆதரித்து, 1967 தேர்தலில் கொள்கைகளைக் காவு கொடுக்கும் கூட்டணியின் சாணக்கியராகி, தி.மு. ஆட்சியைப் பிடிக்க உதவியது; பின் அண்ணா மரணமடைந்த பின், 1969இல் கருணாநிதி முதல்வராக உதவியது

என்று தொடர்ந்து (சசிகலாவை முதல்வராக்க முயற்சித்த) 'சுப்பிரமணியசாமி பாணியில்' ராஜாஜி பயணித்தன் முடிவாக, ராஜாஜி உயிராக நேசித்த மதுவிலக்கு தமிழ்நாட்டில் மரணித்தது. 'அந்த' சுப்பிரமணிய சுவாமியின் முயற்சியில், 'பெரியார் தந்த புத்தியில்' வாலாகப் பயணித்து, பின் 'விடுதலை'யும், 'மவுண்ட் ரோடு மகா விஷ்ணு'வும், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் சங்கமமானது, காலத்தின் நகைச்சுவையாகும்.

.வெ.ராவைப் போலவே, அண்ணாவைப் போலவே, தமது கடைசி காலத்தில் ராஜாஜி மனமுடைந்து மரணமடைந்தார்.

ராஜாஜியையும், .வெ.ராவையும், அண்ணாவையும் தமது குடும்பத்திற்கு பணம் சேர்க்க ஊழலில் ஈடுபட்டார்கள்;

என்று அவர்களின் கொள்கை எதிரிகளும் குற்றம் சாட்ட மாட்டார்கள்.    

தனிப்பட்ட முறையில் .வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பின் மூலமாகவே, ராஜாஜியின் தூண்டுதலால் காங்கிரசில் சேர்ந்தார் .வெ.ரா. .வெ.ரா அவர்கள் பணக்கார வாழ்வு நிலையிலிருந்து நம்ப முடியாத அளவுக்கு 'சாமான்ய' வாழ்வு நிலைக்கு இறங்கி, தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தோடு ஒட்டிப் பயணித்து அபரீதமான சமூக ஆற்றலை வளர்த்து வந்த போக்கில், அதை சரியாக கணித்து .வெ.ராவுடன் ஒட்டி மைக்ரோ உலகத்தில் பயணிக்காமல், மேக்ரோ உலகத்தில் இருந்தபடியே நினைத்ததை சாதிக்க முடியும் என்ற தவறான அணுகுமுறையில், இந்திய விடுதலைக்குப் பின், .வெ.ராவிற்கு எதிரான திசையில் தி.மு. மீதும், கலைஞர் கருணாநிதி மீதும் செல்வாக்கு செலுத்தி பயணித்தார் ராஜாஜி.

.வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட நட்பானது சாகும் வரை நீடித்ததைப் போலவே, பொதுவாழ்விலும் நீடித்திருந்தால், பரிமாற்ற முறையில் இருவரிடமும் வெளிப்பட்டிருந்த குறைபாடுகள் நீங்கி, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாடு சிக்கியிருக்காது; தமிழ்வழிக்கல்வியானது மரணப்பயணத்தில் சிக்கும் அவலமும் நிகழ்ந்திருக்காது; இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்

1971இல் இந்திராகாந்தியை எதிர்க்க காமராஜருடன் கூட்டு சேர்ந்தார் ராஜாஜி. 1967க்கு முன் காமராஜருடன் ராஜாஜி கூட்டு சேர்ந்திருந்தால், தி.மு. 1967இல் ஆட்சியைப் பிடித்து, பின் 1969இல் கருணாநிதி முதல்வராகி, ராஜாஜியின் உயிர்க்கொள்கையான மதுவிலக்கு மரணத்தைத் தழுவியிருக்காது. 1967இல் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜாஜியின் உயிர் நண்பரான .வெ.ராவுடனும் அண்ணாவுடனும் சேர்ந்து, காமராஜருடன் கூட்டு சேர்ந்திருந்தாலும், தமிழ்நாடு ஊழல் ஆட்சியில் சிக்கியிருக்காது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும், தனியார் சொத்துக்களும் ஊழலுக்கு இரையாகும் போக்கும் வந்திருக்காது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் உதயகுமார் அநியாயமாக உயிரிழந்து, அவரது தந்தை அச்சுறுத்தலுக்கு இலக்காகி, "இறந்தது என் மகனல்ல" என்று விசாரணையில் தெரிவித்த அவலம் முதல் மாணவிகள் குடித்து தெருவோரம் கிடப்பது, பொள்ளாச்சி சம்பவம் வரை எண்ணற்ற அவலங்களை தமிழ்நாடு சந்தித்திருக்காது. இன்றும் அந்த அவலங்களுக்கு காரணமானவர்களுடன் ஒட்டி பலன் அனுபவிப்பவர்கள் எல்லாம், முதலில் குறிப்பிட்ட 'பிணமாக' வாழும் தமிழர்கள் ஆவார்கள்.

நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? அந்த அருகதை உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்காமல், ஊழலற்ற ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வாய்ப்புண்டா

‘இந்தியாவிலேயே , ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில் 'ஆங்கில வழி' சூதுக்கு இரையாகி, பிற மாநிலங்களுக்கு 'தவறான முன்னுதாரணமாக' விளங்கி வருவது, தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை 'அதிவேகமாக‌' இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.

அதன் விளைவாக, அறிவு நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஓரங்கட்டி, யாரை ஏணியாகப் பயன்படுத்தி அதிக செல்வம், செல்வாக்கு பெறுவது என்ற ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு செயல்நுட்ப’ ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆக உடலுழைப்பு, அறிவு உழைப்பு போன்றவற்றில் தமிழரல்லாதாரை நம்பி இயங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு வந்து விட்டது. திருக்குறளில் (பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல) 'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் விளக்கும் செயல் நுடபமே இது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html )


தமிழ்நாடு எந்த அளவுக்கு, 'வரைவில் மகளிர் நாடாக' மாறி வருகிறது? என்பதற்கு சான்றாக;


தற்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில், 'அடுத்த கொள்ளைக்கான முதலீடாக' வாக்குகளை விலைக்கு வாங்க வேட்பாளர்கள் செய்து வரும் முயற்சிகளும், தேர்தல் கமிசன் கெடுபிடிகளை மீறி எப்போது பணம் கைக்கு வரும்? என்று ஏங்கும் வாக்காளர்களும், கடந்த தேர்தல்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஊழல் வழிகளில் வெற்றிகரமாக மீட்ட 'செல்வாக்கான'(?) நபர்களும், விடையளித்து வருகிறார்கள். தமிழ்நாடு அவ்வாறு 'வரைவில் மகளிர் நாடாக' மாறி வருவது உண்மையானால், அதற்கு காரணமான‌ மூன்று முக்கிய குற்றவாளிகள் ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா என்பதும்;


'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின்  முக்கூட்டணியினர் எல்லாம் 'பங்காளிக் குற்றவாளிகள்' என்பதும்;

 
எனது ஆய்வு முடிவாகும். அது தொடர்பான கீழ்வரும் தகவலானது தமிழ்நாட்டின் அரசியலானது, எந்த அளவுக்கு தரங்கெட்ட திசையில் பயணிக்கிறது? என்பதற்கு சான்றானது.


‘எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்கு... அவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்க... பயப்பட வேண்டியிருக்கு உங்களுக்கு... நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க.. தறி நெசவா இருக்கும்... உழுவதா இருக்கும்...உழவு செய்யறதா இருக்கும்...பிசினஸ் பண்றதா இருக்கும்...வேற ஒரு தொழில்... உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்... அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.... அந்த தொழிலை செய்யலாம் இவங்க ... கலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்.... நா...நான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க... அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்... அதனால சொன்னேன்...ஒன்னும் இழிவா சொல்லலை... உலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை.... இவ்வாறு வைகோ கூறியிருந்தார். இதனால் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதிய ரீதியாக வைகோ விமர்சனம் செய்ததாக சர்ச்சை வெடித்தது. திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வைகோவின் கொடும்பாவியை எரித்தனர். இதைத் தொடர்ந்து வைகோ தாய் மீது சத்தியமாக உள்நோக்கத்துடன் பேசவில்லை; என் வரலாற்றில் தான் செய்த மிகப் பெரிய குற்றம்; ஆகையால் 'அண்ணன் கலைஞரிடம்' மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கைவிட இந்த பஞ்சாயத்து ஓய ஆரம்பித்துள்ளது.’ (https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-castiest-remark-on-karunanidhi-250668.html )


'
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே'

என்ற புறநானூற்று வரிகளை, அக நோக்கில் தம்மைக் குவியமாக்கியஅணுகுமுறையில் தம்மைத் தாமே கண்காணித்து வாழ்பவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரட்டை வேடப் போக்குகளில் பயணிக்க மாட்டார்கள்.

கிடைக்கும் தூரத்தில் இருக்கும் 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) அடைக்கலமாக வாய்ப்புகள் இருந்தாலும்; மது சொகுசு தேவைகளுக்கும் (Needs), ஈடுபாடுகளுக்கும் (Interests) தாம் அடிமையாகி, மது 'சுதந்திரத்தினை' பலகீனமாக்கும் நோயில் சிக்கியும் அவர்கள் வாழ மாட்டார்கள்.

சாவு எப்போது வந்தாலும் வரவேற்கும் மனநிலையிலேயே, ஒரு தனி மனித இராணுவம் போலவே சாகும் வரை வாழ்வார்கள்.

ஊடக வெளிச்சத்தில் வந்தும் வராமலும் அது போல வாழ்பவர்களின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மைக்ரோ உலகமானது கோவணங்களின் ஊராகி வருவதால்;

மேக்ரோஉலக அம்மணங்களின் ஊரில் செல்வாக்குடன் வலம் வருபவர்கள் எல்லாம், அடுத்து வர உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மைக்ரோஉலகமான கிராமங்களுக்கும், நகரங்களில் (பெருமளவில் வாக்களிக்கும்) சாமான்யர் வாழும் பகுதிகளிலுக்கும், வாக்கு 'வாங்க'(?) வரும் சமயங்களில் எந்த அளவுக்கு கோமாளிகளாக வெளிப்படுகிறார்கள்? என்று 'ரசிக்கும்' ஆர்வமுள்ளவர்கள் சிரமத்தைப் பார்க்காமல் அந்த முயற்சிகளில் ஈடுபடலாம்.’ 

ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தி.மு. உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகள் எல்லாம், அடித்தளம் செல்லரித்த கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது போல, புதைபடும் காலமும் நெருங்கி வருகிறது. .வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்;

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, லேசியாவில் நடப்பது போல‌, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும்
(‘.வெ.ராவும், ராஜாஜியும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறுவோம்’;
 http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html)


குறிப்பு: ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு:

1.   'தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள் (Hyphothesis) (2);

தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' (Nation Building)  சிதைவுக்குள்ளாகியுள்ளதா? அதற்கு 'அதிக' பங்களித்தது, ஈ.வெ.ராவா? ராஜாஜியா?' ; 
http://tamilsdirection.blogspot.com/2016/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html

2.  'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌', பிரிவினை போக்கும்; இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக', 'பாதை மாறிய', பிரிவினைப் போக்கும்; சங்கமமானதன் விளைவே, 'சசிகலா பினாமி' ஆட்சியா?'; 
http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html

No comments:

Post a Comment