Friday, April 26, 2019

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வானநிலை? மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்! (4)  

 



முன்னாள், இன்னாள் துணை வேந்தர்களும், துறைத்தலைவர்களும் இனியும் விழிக்கவில்லை என்றால்?



தமிழை சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திய போக்கே, தமிழின் வீட்சிக்கு வித்திட்டு, அந்த போக்கில் தமிழ்நாடு சீரழியும் விளைவில் முடிந்தது. எனவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான முயற்சிகளில், சுயநல அரசியல் சிறையில் இருந்து தமிழை விடுதலை செய்தாக வேண்டும். தமிழால் பிழைக்க வேண்டிய தேவையின்றி, சுயலாப நோக்கின்றி தமிழின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டால், 'அந்த' விடுதலை சீக்கிரம் நடைபெற வாய்ப்புள்ளது
(‘அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில் தமிழின், தமிழ் இசையின் மீட்சி’; https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை, எவ்வாறு 'பெரியார்'  .வெ.ரா பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டு பயணித்தார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.  

தமிழ்நாட்டின் மீட்சிக்கான முயற்சிகளில் சுயலாப நோக்கின்றி ஈடுபட விரும்புபவர்கள் எல்லாம், முதலில் தமது மனசாட்சிக்குட்ப்பட்டு தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். துணை வேந்தர், துறைத்தலைவர் போன்ற இன்னும் பல உயர் பதவிகளில் இருந்தவர்கள் தமது சுய விமர்சனம் மூலமாக வெளிப்பட்ட தமது குறைகளைப் பகிரங்கமாக அறிவித்து மன்னிப்பு கோரல் வேண்டும். இன்று பெரியவர்களிடமிருந்து விலகி பயணிக்கும் இளைஞர்களின் மனதில் ஒரு நல்ல விளைவினை ஏற்படுத்தும் சமூகப் பொறியியல் வினையூக்கியாக (Social Engineering Catalyst) அச்செயல் அமையும்
(‘சமூக சீரழிவு போக்கில், பெரிய தலைமுறை படைப்பாளிகளின் 'லக்ஷ்மண் கோடு'ம்; சமூக மீட்சிப் போக்கில், இளையதலைமுறையின் 'எதிர் லக்ஷ்மண் கோடு'ம்; இயக்குநர் மணிரத்னம் வெளிப்படுத்திய திறவுகோல்’; http://tamilsdirection.blogspot.com/2017/04/blog-post.html)

அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய இயலாத முன்னாள் துணைவேந்தர்களில் சிலர் மேடைகளில் கட்சித்தலைவர்களின் பெயர்களை கட்சித் தொண்டர்கள் போல பட்டங்களின் மூலம் (வீரமணியை ஆசிரியர்; கருணாநிதியை தலைவர்; ஸ்டாலினை தளபதி, etc) என்று அழைப்பதையாவது தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாமல், சுயலாபக் கணக்குகளுக்காக அவ்வாறு அழைப்பவர்கள் இனிமேல் மேடையேறுவதையாவது தவிர்க்க வேண்டும்; வலைதளங்களில் மாணவர்களின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்க வேண்டுமானால்.

நான் என்றுமே எனது சுயலாப நோக்கில், பொது நிலைப்பாடுகள் மேற்கொண்டதில்லை. 1989இல் எம்.ஜி.ஆர் மறைந்த போது, 'பெரியார்' ஆதரவாளராகப் பயணித்த நான் ஜெயலலிதாவை எதிர்த்து, ஜானகி ஆதரவு நிலைப்பாட்டில், 'திருச்சி பெரியார் மையம்' சார்பாக பங்களித்தேன். எனது மாமனார் ஜானகி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக, தமது வைப்பாட்டி/இரண்டாவது மனைவி குடும்ப செல்வாக்கில், தமது சட்டபூர்வ மனைவியையும், தமது ஒரே மகளுமான எனது மனைவியையும், நீதி மன்ற வழக்குகள் மூலமாக‌, பல வழிகளில் துன்புறுத்திக் கொண்டிருந்த காலம் அது. 'நான் முட்டாள்த்தனமாக ஜானகி எம்.ஜி.ஆரை ஆதரிப்பதாக' எனது தந்தை என் மீது கோபப்பட்ட போதும், நான் அந்த நிலைப்பாட்டில் மாறவில்லை. 'அந்த' அளவுக்கு 'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்பு' நிலைப்பாட்டில், அந்த சமயத்தில் பயணித்தேன். 

'அந்த' நிலைப்பாடு எவ்வாறு தவறானது? என்பதை எனது ஆய்வுகள் மூலம் பின்னர் கண்டுபிடித்தேன்.(http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html) பொதுநிலை என்று வரும்போது, சொந்த லாபநட்ட கணக்குகளின்றி, தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை அடிப்படையில், ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ செயல்படுவதே சரி, என்பது எனது கருத்தாகும்.

அது மட்டுமல்ல, தமிழ், தமிழ் இசை, ஆராய்ச்சி, சமூக நீதி போன்ற பொது நிலைகளில், முன்பின் தெரியாதவர்களாயிருந்தாலும், எனக்குப் பிடிக்காதவர்களாக இருந்தாலும், நல்லதாக வெளிப்படுபவைகளை பாராட்டியும், வேண்டியவர்களாயிருந்தாலும் தவறாக வெளிப்படுபவைகளைக் கண்டித்துமே பயணித்து வருகிறேன். எனவே நான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதன் காரணமாகவே, எனது சமூக வலிமையானது, நானே அதிசயிக்கும் வகையில் வெளிப்பட்ட அனுபவங்களும் எனக்குண்டு

ஆனால் தமிழ், தமிழிசை உள்ளிட்ட அறிவுப்புலத்துறைகளில் சுயலாப நோக்குடன் பாராட்டுபவர்களும், கண்டிப்பவர்களும் மிகுந்துள்ளார்கள் என்பது எனது அனுபவமாகும். அத்துடன் புலமையுள்ளவர்களே பலவகை வெறுப்பு நோய்களுக்கு உள்ளாகி, அறிவில் தடம் புரண்டும் பயணிப்பதையும் நான் அறிவேன்.

தமிழ்நாட்டில் எனது ஆய்வுகளை அறிந்து பாராட்டிய தமிழ் அறிஞர்கள் எல்லாம், சென்னை மாநிலக்கல்லூரியில் நான் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் ஆவார்கள். உலக அளவில் புகழ் பெற்ற நோவாம் சாம்ஸ்கி, முன்பின் தெரியாத நான் அனுப்பிய தொல்காப்பியம் தொடர்பான எனது ஆய்வினை எந்த அளவுக்கு பாராட்டி ஊக்குவித்தார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த இசை ஆய்வரங்கங்களிலும், சர்வதேச இசை மாநாட்டு ஆய்வரங்கிலும், அமெரிக்காவில் நடந்த சர்வதேச இசை மாநாடுகளிலும், எனக்கு முன்பின் தெரியாத நோவாம் சாம்ஸ்கி, ஸ்டீவன் பிரவுன், ரிச்ச்ர்ட் வெட்டஸ், டெரடா யோசிடகா (ஜப்பான்), முனைவர் என்.ராமநாதன் போன்ற இன்னும் பலஉலக அளவில் புகழ் பெற்ற ஆய்வறிஞர்களுடன் மேற்கொண்டு வரும் கருத்து பரிமாற்றங்கள் பற்றியும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஆனால் எனக்கு முன்பின் தெரியாத தமிழ் அறிஞர்களும், தமிழ்ப்பேராசிரியர்களும் வழங்கிய கீழ்வரும் அனுபவங்களானது, மாணவர்களாகவும், இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளவர்களின் நிலைமையானது எவ்வளவு மோசமாக இருக்கும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும்  தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும்இசைஎன்ற சொல்லை 'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?

திருக்குறள்(423) வழியில், தமிழ் தொடர்பாக தமக்கு வரும் மடல்களை மதித்து, பரிசீலித்து மெய்ப்பொருள் கண்டு, தமிழின் வளர்ச்சிக்கு பங்களிப்பதை விடுத்து;

'எப்பொருள் எவர்வாய் பலன்தரும் நமக்கு அப்பொருள்
புகழ்வதும் இகழ்வதும் சரியே'

என்ற 'புதுக்குறள்(423) வழியில், தமிழ்த் துறைத்தலைவர்கள் எல்லாம் பயணிக்கும் வரை, தமிழுக்கு கேடான 'அந்த விதி' முடிவுக்கு வர வழியில்லை.


எனது மாணவர்களிடமிருந்தும், முன்பின் தெரியாதவர்களிடமிருந்தும் எனது பார்வைக்கு வருபவைகளில், எனக்கு புதிதாக வரும் தகவலையும், புதிய ஆய்வு முடிவுகளையும் பகிரங்கமாக நான் பாராட்டி வருவதை, ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம். அவற்றைத் 'திருடி', தம்முடையதாக 'அறிவித்து', செல்வாக்கு பெறும் நோக்கில், நான் என்றும் பயணித்ததில்லை. அவ்வாறு 'சிலர்' பயணித்து, அது தொடர்பான எதிர்ப்புகளை, தமது 'செல்வாக்கு' மூலமாக இருளில் தள்ளிய தகவல்கள் எனக்கும் தெரியும். சில ஊடகங்களிலும் 'கசிந்திருக்கின்றன'.

உலக அளவில் தமிழ் அமைப்புகளின் பாராட்டுதலுக்குள்ளான ஒரு தமிழ் அறிஞரிடம் நான் பெற்ற கீழ்வரும் அனுபவம் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சி முயற்சிகள் சந்தித்து வரும் ஆபத்தினை வெளிப்படுத்தும் 'சிக்னல்' ஆனது.

சுமார் 20 வருடங்களுக்கு முன், தனது பார்வைக்கு வந்த திருக்குறள் தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையை, 'அற்பமாக' கருதி, அதை மேலோட்டமாகப் பார்த்து, தான் படிக்கத் தகுதியற்றதாகக் கருதி, அக்கட்டுரையை கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் உலக அளவில் மதிப்பு மிக்க தமிழ்ப்புலமையாளர் ஒருவர். பின் கடந்த சில வருடங்களுக்கு முன்,'செல்வாக்குள்ள' வெளிநாட்டு தமிழ்ப் பற்றாளர்களிடம் எனது திருக்குறள் ஆய்வைப் பற்றி அறிந்திருக்கிறார். அந்த வெளிநாட்டு நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, அதே திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகளை 'கொரியரில்' அவருக்கு அனுப்பினேன். அதைப் படித்து விட்டு, என்னைப் புகழ்ந்து எனக்கு அவர் மடல் அனுப்பினார். அவர் சுமார் 20 வருடங்களுக்கு முன் 'அற்பமாக'க் கருதி ஒதுக்கிய கட்டுரை தான் அது என்பதை அவருக்கு தெரிவித்து நான் அவரைப் புண்படுத்தவில்லை.’ 

பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்டிருந்த ஆய்வுகளின் முடிவுகளை எல்லாம், தமிழறிஞர்கள் மத்தியில் விவாதிக்க புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதாக, IPF (French Institute of Pondicherry)-இல்  பணி புரியும் எம்.கண்ணன் 2015 மார்ச்சில் தெரிவித்தார். என்ன சிக்கலோ? இன்று வரை அது நடக்கவில்லை. அதற்கான காரணத்தையும் எனக்கு தெரிவிக்கவில்லை. முன்பின் தெரியாத எம்.கண்ணனை எனக்கு அறிமுகம் செய்தவர்கள், அவரைத் தொடர்ந்து வற்புறுத்தினார்களா? அல்லது தத்தம் சுயலாப நோக்கில், 'நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கினார்களா? என்று அறிவதில் நான் ஆர்வம் காட்டவில்லை.. இயல்பாக நடக்க வேண்டியதை வற்புறுத்தி செய்யும் அணுகுமுறையானது எனக்கு உடன்பாடற்றதாகும். எனது சமூக வட்டத்தில் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்களை எல்லாம், அவ்வாறு அறிவு நாகரீகமற்ற திசையில் பயணிக்க நான் அனுமதிக்க மாட்டேன்; திருத்துவேன்; திருந்தமறுப்பவர்களை எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றுவேன்; என்பதை என்னிடம் பழகியவர்களும், பழகுபவர்களும் அறிவார்கள்

தமிழ்நாட்டில் தமிழ்ண்ணல் போன்ற பெரிய தமிழ் அறிஞர்களே 'பார்ப்பன/சமஸ்கிருத வெறுப்பு நோயில்' சிக்கி அறிவில் தடம் புரண்டு பயணிக்கிறார்களா? தமிழ் ஆய்வானது பாரபட்ச அணுகுமுறையில் அவ்வாறு தடம் புரள்வதானது கேடாகாதா? என்ற கேள்வியை எழுப்பும் தகவல்களை அடுத்து பார்ப்போம்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு..குழந்தை வேலன் அவர்கள் எழுதிய 'தமிழிய வாழ்வில் கல்லும் சொல்லும்'( 2000; பைந்தமிழ்ப் பாசறை,எண்ணூர், சென்னை‍ 600057)  புத்தகத்தை, அண்மையில் மீண்டும் ஒரு முறை படித்தேன். அணிந்துரையில் முனைவர்.தமிழண்ணல் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

"நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை இருட்டில் வைத்துள்ளோம். அவர்களுக்கு தமிழைப் பற்றித் தெரியாது; தமிழினப் பண்பாடு பற்றியோ,எதுவுமே தெரியாது. 'சங்க காலம்' முதல் நாம் செய்து வரும் தவறு இது."

'சங்க காலம்' முதல் நாம் செய்து வரும் தவறு இது." என்று எந்த சான்றுகளின் அடிப்படைகளில் தமிழண்ணல் எழுதினார்?  என்பது எனக்கு விளங்கவில்லை. அவரது தமிழ்ப் புலமையின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எழுதியுள்ள நூல்களை முழுவதும் படிக்காமல், அது தொடர்பான விளக்கம் பெற முடியாது.

இன்று வரை நானறிந்த சான்றுகளின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட கருத்து தவறாகும்.

தமிழ்நாட்டில் தமிழரல்லாத மன்னராட்சியானது கி.பி 1335இல் மதுரை சூல்தானின் ஆட்சியிலிருந்து தொடங்கியது
அதன்பின் விஜயநகர மன்னர் ஆட்சி அரங்கேறியது
கி.பி 1675க்குப் பின் தஞ்சையானது மராத்திய மன்னரின் ஆட்சிக்குட்ப்பட்டது.

அதன்பின் காலனி ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழ்நாடானது, 1947 ஆகஸ்டு 15இல் இந்திய விடுதலை முதல் அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டது. 1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருந்து வந்துள்ளது; தமிழ்க்குடிமகன் உள்ளிட்டு தனித்தமிழ் கட்சிகளில் இருந்தவர்களும் சங்கமமாகி.

"நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை இருட்டில் வைத்துள்ளோம். அவர்களுக்கு தமிழைப் பற்றித் தெரியாது; தமிழினப் பண்பாடு பற்றியோ,எதுவுமே தெரியாது. 'சங்க காலம்'முதல் நாம் செய்து வரும் தவறு இது." என்று தமிழண்ணல் கூறியதானது;

காலனி ஆட்சிக்கு முன் இருந்த தமிழ்நாட்டிற்கு பொருந்துமா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாக இருந்தாலும்;

இன்றைய தமிழ்நாட்டிற்குப் பொருந்தும்;

குக்கிராமங்கள் வரை, ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் புற்றீசல் போல வளர்ந்து வரும் சூழலில்.

கி.பி 1335இல் தொடங்கி, 1967 வரை இருந்த நிலையை விட, மிகவும் மோசமான நிலையில், தமிழின் நிலையானது, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத கல்லூரி மாணவர்கள் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில், தமிழர்களிடம் சீரழிந்துள்ளதா? அது உண்மையென்றால், அந்த சீரழிவு போக்கானது 1944இல் விதை கொண்டு, வளர்ந்ததா? என்ற கேள்விகளை அறிவுபூர்வமாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது; உணர்ச்சிபூர்வ போக்குகளை ஒதுக்கி வைத்து

'தீதும் நன்றும், பிறர் தர வாரா' (புறநானூறு; 192:  2) என்பதை மறந்து, 1944இல் தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, மேற்கத்திய 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரிந்து, அரங்கேறிய 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' போக்கில், தமிழ்நாடு பயணித்ததே, மேலே குறிப்பிட்ட விளைவுக்கு காரணமாகும்
(‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?; http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில் தமிழண்ணலும் சிக்கியிருந்தாரா? என்ற கேள்வியை எழுப்பும் கீழ்வரும் தகவலும் மேலே குறிப்பிட்ட, அணிந்துரையில் இடம் பெற்றுள்ளது.

" 'வடமொழிப் பெயர்ப்படுத்தல்' என்பது தனி வரலாறு. எந்த ஒரு தமிழ்ப் பெயரையும் வடமொழியாக மாற்றினர்; பொருள் தெரியாமலே () மாற்றினர்;"

மேலே குறிப்பிட்ட அணிந்துரை இடம் பெற்றுள்ள நூலின் ஆசிரியர் . குழந்தைவேலன் அவர்கள், கீழ்வரும் தனது ஆய்வுமுடிவை, உரிய சான்றுகளுடன் என்னிடம் ஒரு முறை விளக்கினார்

'திருவையாறு' தொடர்பான எனது இசை ஆய்வு முடிவினை, அவருடன் விவாதித்த போது. தமது ஆய்வு முடிவினை கட்டுரைகளாகவும், நூலாகவும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அவர் வெளியிட்டுள்ளார்; என்பது வெளிப்பட்டது.


'தமிழ்நாட்டில் தமிழில் இருந்த ஊரின் பெயர்களை பொருள் சிதைவின்றி, வடமொழிப் பெயர்களாக மாற்றியுள்ளனர். ஆனால் அந்த வடமொழிப் பெயர்களை, தமிழ்ப் பற்றாளர்கள் தமிழில் மீட்க மேற்கோண்ட முயற்சியில், 'பொருள் தெரியாமலே'யே, ஒலி மாற்றம் செய்து, சிதைத்து விட்டனர்' என்பதே அந்த ஆய்வு முடிவாகும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவினை, திரு. குழந்தை வேலன் தமிழண்ணலிடம் விளக்கினாரா?

தமது ஆய்வு முடிவுக்கு எதிரான கருத்தினை, தமது நூலின் அணிந்துரையில் தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளதை அவர் கவனிக்கவில்லையா? என்ற கேள்விகளுக்கான விளக்கத்தை, குழந்தைவேலன் மட்டுமே தர முடியும்.

சம்பந்தர் தேவாரம் திருவையாறு பதிகத்தில் கீழ்வரும் பாடல் உள்ளது.

" பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறுடை ஐயனே"

ஐந்து வகை இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து;

வணங்குதற்குரிய  திரு - ஐந்து இசையும், ஆறாவதாக ஆடலும் அமைந்து, திரு +  + ஆறு என்பது திருவையாறு ஆனது.

திருவையாறு கோவில் கல்வெட்டில் சமஸ்கிருதத்தில் 'பஞ்ச நாதேஸ்வரர்' என்று உள்ளது. சமஸ்கிருதத்தில், 'நாதம்' என்பது இசையைக் குறிக்கும். அந்த பொருள் புரியாமல், 'நாதம்' என்பதை, 'நதி' என ஒலி மாற்றம் செய்து, பொருளை திரித்து, ஐந்து நதிகள் ஓடுவதால், திருவையாறு என்ற தவறான புரிதலானது, தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது

திருவையாறு பெயரின் காரணமாக சொல்லப்படும், (பக்கம் 39, தேவார திருப்பதிகங்கள், 2ஆம் திருமுறை, தருமபுரம் ஆதீனம்,1954) காவிரி, வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகளில், திருவையாறை ஒட்டி ஓடும் ஒரே ஆறாகியகாவிரி தவிர்த்து, மற்ற ஆறுகளில் எவை, எவை பிற்காலத்தில் உருவானவை? என்பது ஆய்விற்குரியதாகும்.’
(‘பொருள் தெரியாமலே மாற்றியது யார்? தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதமயமான போக்கிலா? சமஸ்கிருதமயத்திலிருந்து தமிழ்ச் சொற்களை மீட்ட போக்கிலா?’; http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_9.html)

‘'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, கர்நாடக இசை எதிர்ப்பு' போன்ற உணர்ச்சிபூர்வ நோய்களை ஊக்குவிக்காமல், அறிவுபூர்வமாக தமிழிசை தொடர்பான ஆய்வுகளை முன்வைத்தால், அறிவுநேர்மையுள்ள பிராமணர்களும், சமஸ்கிருத மற்றும் கர்நாடக இசை ஆர்வலர்களும் ஏற்றுக் கொள்வார்கள்;

என்பதை கடந்த காலத்தில் ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்

சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த இசை ஆய்வரங்கங்களிலும், சர்வதேச இசை மாநாட்டு ஆய்வரங்கிலும், அமெரிக்காவில் நடந்த சர்வதேச இசை மாநாடுகளிலும், நோவாம் சாம்ஸ்கி, ஸ்டீவன் பிரவுன், ரிச்ச்ர்ட் வெட்டஸ், முனைவர் என்.ராமநாதன் போன்ற இன்னும் பலஉலக அளவில் புகழ் பெற்ற ஆய்வறிஞர்களுடன் மேற்கொண்டு வரும் கருத்து பரிமாற்றங்கள் மூலமாகவும், ஆபிரகாம் பண்டிதர் வழியில் நான் நிரூபித்து வருகிறேன்

பிராமணர்களிலும், சமஸ்கிருத மற்றும் கர்நாடக இசை ஆர்வலர்களிலும் அறிவுநேர்மையுள்ளவர்கள் இருப்பதை மறுப்பவர்களும், 'பிராமண, சலஸ்கிருத, கர்நாடக இசை எதிர்ப்புப் போக்குகளில் பயணிப்பவர்களிலும் அறிவுநேர்மையுள்ளவர்கள் இருப்பதை மறுப்பவர்களும், 'சமூக வண்ணப் பார்வைக் கோளாறு' (Social Colour Blind) நோயில் ஒன்றுபட்டவர்கள் ஆவார்கள். (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html  )

அறிவுபூர்வ சான்றுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அரைகுறை சான்றுகளை மிகைப்படுத்தி, தமிழையும், தமிழ் இசையையும் 'அதீதமாக' உயர்த்தி எழுதி வெளிவரும் நூல்களுக்கும், பேசி இசைக்கும் நிகழ்ச்சிகளுக்கும், எந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் வரவேற்பு வெளிப்படுகிறதோ, 'அந்த' அளவுக்கு புலமையுள்ளவர்கள் பார்வையில் தமிழும், தமிழ் இசையும் தாழ்வாகக் கருதப்படும் அவலமானது வெளிப்படத் தொடங்கியுள்ளது:

என்பதானது உலகப்புகழ் பெற்ற அறிஞர் செல்டன் பொல்லாக் நூலின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர்களிடமிருந்து தமிழ் தொடர்பாக வெளிப்படும் தவறான கருத்துக்களை மறுக்காமலும், தவறான அபத்தமான கருத்துக்களை வெளிப்படுத்தியும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள‌ 'தமிழ் இருக்கைகள்' செயல்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வியை எழுப்பும் தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளேன்.’

மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு நாடுகள் வரை தமிழ் மன்னர்கள் படையெடுத்து உருவான பண்பாட்டு தொடர்புகளின் விளைவாக அங்கு உருவான கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்களை விட சமஸ்கிருத எழுத்துக்களே ஏன் அதிகமாக உள்ளன? தமிழின் மீது வெறுப்பு அதற்கு காரணமாக இருக்க முடியுமா? அல்லது சமூக மொழியியல் அடிப்படையில் அதற்கான காரணங்களைத் தேடுவது சரியாக இருக்குமா? (https://en.wikipedia.org/wiki/Sociolinguistics) தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் தமக்கு வசதியாக ஊரின் பெயர்களை (சென்னை - மெட்ராஸ்) மாற்றியதை எல்லாம், தமிழின் மீது கொண்ட வெறுப்பாகக் கொள்ள முடியாது. அது போல, ஊரின் பெயர்களை தமிழில் இருந்து சமஸ்கிருதத்தில் மாற்றிய சமூக சூழலும் ஆய்விற்குரியதாகும். ஆனால் அந்த முயற்சியில் பொருள் திரிபு நடக்கவில்லை என்பதும், மீண்டும் அப்பெயர்களை எல்லாம் தமிழில் மாற்றும் போது, அறிவில் தடம் புரண்டு, பொருள் திரிபு நடந்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், எந்த வகையிலான வெறுப்பு நோயில் சிக்கினாலும், நமது புலமையானது அறிவில் தடம் புரண்டு பயணிக்கும் அபாயத்தில் சிக்கி விடும் ஆபத்து இருக்கிறது. அவ்வாறு சிக்காமல் பயணித்தவர் ஐராவதம் மகாதேவன் என்பதும், சிக்கி பயணித்தவர் நாகசாமி என்பதும், எனது கருத்தாகும்.

'சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எவரும் எளிதில் 'இயல்பாக' அவர்களுடன் உரையாடல் உள்ளிட்ட எந்த தொடர்புக்கு முயற்சித்தாலும், 'புத்திசாலித்தனம் மிகுந்த இலாகவத்துடன்' தவிர்க்கும், 'வலிமை மிகுந்த 'லக்ஷ்மண் கோடு' பாதுகாப்புடன், தமிழ்நாட்டில் இளைஞர்களும், மாணவர்களும் பயணித்து வருகிறார்கள்' என்பதையும்:

'எனது தலைமுறை 'பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து', என்னை பாதுகாத்துக் கொள்ள, இளைஞர்களை முன்னுதாரணமாக கொண்டு, அவர்கள் கையாண்டு வரும் 'லக்ஷ்மண் கோடு' பாதுகாப்புடன், நானும் வாழ முயன்று' வருவதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் முன்பின் தெரியாதவர்கள் எனது ஆய்வுகள் தொடர்பாக எழுதும் மடல்களுக்கு நான் பதில் போட தவறுவதில்லை. ஆராய்ச்சியில், எனக்கு சரி என்ற திசையில் பயணிப்பவர்களை ஊக்கப்படுத்தியும், என்னால் இயன்ற உதவிகள் புரிந்தும் வருகிறேன். எனது ஆய்வில் உள்ள தவறுகளை, முன்பின் தெரியாதவர்களும் உரிய சான்றுகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக சுட்டிக்காட்டுவதையும் வரவேற்கிறேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் ஆய்வுகள் தொடர்பான நேர்க்காணலில் நடந்தஅபத்தங்களையும், வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி சீரழிவு திசையில் பயணிப்பதையும், கடந்த சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகசுட்டிக்காட்டி நான் எதிர்த்து வருகிறேன். அது தொடர்பான விவாதங்கள் கூட, தமிழ்ப் புலமையாளர்கள், தமிழ் அமைப்புகள் மத்தியில் வெளிப்பட்டதாக தெரியவில்லை

'தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகள் மற்றும்தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகள்' தொடர்பான கீழ்வரும் ஆய்வுகள் எல்லாம், தமிழ் தொடர்பான எந்த உயர்க்கல்வி நிறுவனத்திலும் இதுவரை பரிசீலனைக்கு உள்ளாகவில்லை என்றால்;


 
தமிழ்நாட்டில் தமிழ் அறிவுப்புலமானது எந்த நிலையில் இருக்கிறது? என்பது நிகழ்கால வரலாற்றில் பதிவாகி வருவதை அறியாத 'வரலாற்றுக் குருடர்களே', அதைப்பற்றி கவலைப்படாமல், தமது சுயநலப் போக்கில் பயணிக்க முடியும். இளம் தலைமுறையில் வெளிப்பட்டு வரும் எழுச்சியானது, அந்த சீரழிவுப் பயணத்தை முடிக்கும் காலமும் நெருங்கி வருகிறது. சுயவிமர்சனம் மூலம் இனியும் விழிக்காமல் பயணிக்கும் முன்னாள், இன்னாள் துணை வேந்தர்களும், துறைத்தலைவர்களும் 'அவமான சுனாமியை' சந்திக்கும் காலம் நெருங்கி வருகிறது.

முன்னாள் இன்னாள் துணைவேந்தர்களில் 'ஏலம்'/‘அரசியல் செல்வாக்கு’(?) மூலமாக, தகுதி மிகுந்தவர்களை எல்லாம் பின் தள்ளி, பதவி பெற்றவர்கள் யார்? என்ற விவாதமானது அரங்கேறி வரும் சூழலில்.

அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, தமது நிலைப்பாடுகளில் வெளிப்படும் குறைகளையும், தவறுகளையும் ஒப்புக்கொண்டு, திருத்தி பயணிப்பதே, ஒரு சமூகத்தில் புலமையின் வளர்ச்சிக்கு துணை புரியும். மாறாக 'தொல்காப்பிய பூங்கா'வின் குறைகளை வெளிப்படுத்திய தமிழறிஞர் நக்கீரன் சாகும் வரை சந்தித்தது போல, விமர்சித்தவர்களை தமக்குள்ள செல்வாக்கின் மூலம் இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் பயணித்த‌ 'பிரபலங்களின்' காலம் முடிந்து விட்டது. இது டிஜிட்டல் யுகம். அறிவுபூர்வ விவாதங்ளுக்கான தடைகள் நீங்கி, தமிழ் இனி வளர்ச்சி திசையில் பயணிக்கும் காலமும் தொடங்கி விட்டது
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html

'விருப்பு வெறுப்பு நோயில்' சிக்காமல், ஐராவதம் மகாதேவன், நொபுரு கராசிமா (https://en.wikipedia.org/wiki/Noboru_Karashima ) போன்றோர் வழியில், தமிழின் அடுத்த கட்ட புலமையானது பயணிக்க வேண்டிய காலக்கட்டம் இதுவாகும் (http://tamilsdirection.blogspot.com/2017/06/next-phase-3.html )

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback)

No comments:

Post a Comment