Monday, April 22, 2019

'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (4)



இலங்கையில் பலியானவர்களுக்கு வருத்தப்பட நமக்கு யோக்கியதை உண்டா?


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்க இருப்பதை, இந்திய உளவுத்துறையானது இலங்கை அரசை எச்சரித்த பின்னும், சுமார் 200க்கும் அதிகமானவர்களைக் கொன்ற, சுமார் 400க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்திய தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன
(Even as India gave specific intelligence inputs to Sri Lanka about a possible attack, Colombo did not take "adequate precautions" to prevent the explosions that killed 218 people and injured at least 450 in the decade's worst terror strike.  ; https://www.news18.com/news/india/despite-indias-warning-sri-lanka-failed-to-take-precautions-pm-ranil-wickremesinghe-admits-colombo-had-intel-on-blasts-2111317.html)

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதியில் சாதிக்கலவரங்கள் நடந்து, பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ‘பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக, உளவு துறை போலீசார், சரியாக செயல்படாமல் இருந்து உள்ளனர். பொன்பரப்பியில், ஏற்கனவே, இரு சமூகத்தினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, தற்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.அதேபோல், சமூக வலைதளங்களில், இரு சமூகத்தினர் இடையில், மோதல் ஏற்படும் வகையில், வாசகங்கள் வெளியிடுவது தொடர்பாக, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டியது, உளவு துறையின் அன்றாட பணி.

தமிழகத்தின், ஏதோ ஒரு மூலையில், பிரச்னைக்கு உரிய, போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தாலும், அதை உளவு துறை கண்டறிந்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து, மோதலை தடுக்க வேண்டும். ஆனால், பொன்பரப்பி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் நடந்த மோதல்களை தடுக்க, உளவு துறை தவறிவிட்டது.

- ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரி 

இலங்கையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, உளவுத்துறையில் 'அந்த' மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்புண்டா? இதுவரை உளவுத்துறையின் குறைபாடுகள் தொடர்பாக எவராவது தண்டிக்கப்பட்டிருக்கிறர்களா? அவ்வாறு தண்டிக்க நேர்மையான உயர் அதிகாரி முயற்சித்தாலும், 'அந்த' குற்றவாளிகளுக்கு 'அரசியல் செல்வாக்கு' இருந்தால், தண்டிக்க முடியுமா? தப்பித்தவறி தண்டிக்க முனைந்தால், 'அந்த' நேர்மையான உயர் அதிகாரி 'பணியிட மாற்றத்திற்கு உள்ளாக நேரிடாதா?

'அந்த' அளவுக்கு ஊழலும், அரசியல் செல்வாக்கும் உள்ள நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களும், சாதி, மத கலவரங்களும், தனியார் சொத்துக்களை அச்சுறுத்தியும், கொலை செய்தும் அபகரிப்பதும் நடக்காமல் இருந்தால் தானே ஆச்சரியமாகும்.

நாமோ, நமக்கு வேண்டியவர்களோ மேற்குறிப்பிட்ட அரசியல் ஊழல் வலைப்பின்னலில் பாதிக்கப்படாத வரை, நாம் அது பற்றி கவலைப்பட்டதுண்டா? நாமோ, நமக்கு வேண்டியவர்களோ, மேற்குறிப்பிட்ட வலைப்பின்னலில் இடம் பெற்றிருந்தால்:

இலங்கையில் பலியானவர்களுக்கு வருத்தப்பட நமக்கு யோக்கியதை உண்டா?

அரசியல் ஊழல் வலைப்பின்னலின் 'புரவலர்களாக' வலம் வரும் கட்சித்தலைவர்களுக்கு 'அந்த' யோக்கியதை உண்டா?

நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டு, சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். யோக்கியதை இல்லாதவர்கள் எல்லாம் அவ்வாறு மீடியா வெளிச்சத்துடன் 'நடிக்க' அனுமதிப்பதானது, அந்த நாட்டிற்கே இன்னும் அதிக கெடுதலை விளைவிக்கும்;’ 
(‘நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ளயோக்கியதை?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

'அந்த' யோக்கியதை நமக்கு இருந்தால் தான், நாம் ஒரு தனி மனித இராணுவம் போல;

பயங்கரவாத நிகழ்வுகளுக்கு பங்களிக்கும் 'ஊழல் அரசியல்' குற்றவாளிகளை ஓரங்கட்டி, சமூகத்தை இனிமேலாவது அது போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்ற, நமக்கான பங்களிப்பை நாம் நிறைவேற்ற முடியும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களாகிய 'பாரபட்ச' ஆட்சியாளர்களையும் அகற்றி, 'அந்த' ஊற்றுக்கண்களை ஒழிக்க முடியும்.

எளிதில் சட்டத்தின் பிடியில் சிக்க முடியாத அளவுக்கு, 1969 முதல் 'சர்க்காரியா கமிசன்' குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வளர்ந்து, இன்று மோடி ஆட்சியில் ஊழல் குற்றவாளிகள் எல்லாம் தண்டனையில் இருந்தும், 'கைது' நடவடிக்கைகளில் இருந்தும் தப்பும் அளவுக்கு, 'டிஜிட்டல் ஊழலாக' வளர்ந்து விட்டது

‘தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசினால், அது 'வடிவேல் பாணி' காமெடியாகி விடும்; 'தமிழ்நாட்டு லல்லுக்கள்' பிடியில் தமிழ்நாடு தொடர்வதால்.’ என்பதையும்;

‘தமிழ்நாட்டு அரசியலில் 'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதையும், ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
 

புத்திசாலித்தனமாக(?) குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதில், சட்டத்தின் 'இயலாமையைக்' கீழ்வரும் செய்தி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த 'அதிபர்' தேர்தலில் ரஷ்ய அரசின் தலையீடு தொடர்பான தடயங்கள் கிடைத்தாலும், சட்டத்தின் மூலமாக தண்டிக்க முடியாத 'இயலாமையை' கீழ்வரும் செய்தி வெளிப்படுத்தியுள்ளது.

(Bold Mine) “Although the investigation established that the Russian government perceived it would benefit from the a Trump presidency and worked to secure that outcome, and that the Campaign expected it would benefit electorally from information stolen and released through Russian efforts, the investigation did not establish that members of the Trump campaign conspired or coordinated with the Russian government in its election interference activities.”; https://www.theguardian.com/us-news/2019/apr/19/mueller-report-unable-to-clear-trump-of-obstruction-of-justice
 
இறக்குமதி செய்யப்பட்ட சட்டங்களின் ஆட்சியில், இந்தியாவில் 'அந்த' இயலாமையானது, பயங்கரவாதிகளின் 'மனித உரிமை பாதுகாவலர்களுக்கு' எவ்வாறு 'ஆயுதமாகி' வருகிறது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2016/03/normal-0-false-false-false-en-in-x-none_27.html)

ஆனால் ஐரோப்பிய‌ நாடுகளில் சட்டம் செய்ய முடியாததை செய்யும் வலிமையானது, சமூகத்தில் இன்றும் இருப்பதால்;

பொதுஒழுக்கக்கேடு குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள் பதவி விலகி வருகின்றனர். கட்சித் தலைவர்கள் அரசியல் பொதுவாழ்விலிருந்து விலகி வருகின்றனர். அரசியலில் குட்டிக்கரணம் ஒருமுறை அடித்தாலே, வெளியில் தலையைக் காட்ட வெட்கப்படும் சமூக சூழலே அந்நாடுகளில் உள்ளன.

மேற்குறிப்பிட்டவாறு தனி மனித இராணுவம் போல செயல்ப‌டுபவர்களின் எண்ணிக்கையானது வளரும் போக்கில், தமிழ்நாட்டிலும் அது போன்ற சமூக சூழலை நாம் உருவாக்க முடியும். சொந்த ஊரில், வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், 'சுயலாப கள்வராக' வாழ்ந்து கொண்டு, நல்ல பேர் எடுக்க முடியாது; அதுவே மைக்ரோ உலகத்தின் தனித்தன்மையாகும்; இன்றும் கூட தமிழ்நாட்டில்.

அவ்வாறு தனி மனித இராணுவம் போல வழங்கப்படும் நமது 'அந்த' பங்களிப்பானது, நமது சமூக ஆற்றலின் வலிமையைப் (Social Energy Strength) பொறுத்தே கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கும். 'அந்த' சமூக ஆற்றல் தொடர்பாக, ஏற்கனவே கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

‘1. குடும்பம், நட்பு, உள்ளிட்டு பலவகை அமைப்புகளில்(structures) அங்கம் (membership) வகிக்கும் மனிதர்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகியவை சமூக இழைகளாகும்(social fibers).

2. அங்கம் வகிக்கும் மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும்ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன.

3. தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc) சம்பந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).’ 

அதாவது நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட மனிதர்களுடன் நமக்குள்ளஉறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகிய சமூக இழைகள் எந்த அளவுக்கு 'பொது சமூகஒழுக்க மதிப்பீடுகளை' காப்பாற்றும் அளவுக்கு இருக்கிறதோ, நமது பங்களிப்பானது, அந்த அளவுக்கு அதற்கு உதவும். நாம் 'யோக்கியராக' (?) இருந்தாலும், 'அந்த' சமூக இழைகள் சீரழிவாக இருந்தால், நமது பங்களிப்பும் 'அந்த' சீரழிவிற்கே உதவும். தமிழ்நாட்டில் அரசியல் கொள்ளையர்களில் 'பல புத்திசாலி தமிழ்ப்புரவலர்கள்'(?) நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற 'யோக்கிய'(?) தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம், அதற்கான உதாரணங்கள் ஆனார்கள். எனவே தான் 'செல்வாக்கான' தலைவர், அமைச்சர், அதிகாரி உள்ளிட்டு 'ஊழல் அரசியல் வலைப்பின்னலில்' இடம் பெற்றவர்கள் வசதியிலும் செல்வாக்கிலும் 'உயர்ந்து'(?), என் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர்களாயிருந்தாலும், அவர்களை ஒதுக்கியே வாழ்கிறேன். அதன் மூலம் நான் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் மீட்சிக்கான 'சமூக பொறியியல் வினை ஊக்கியாக' (Social Engineering Catalyst), நான் திட்டமிடாமலேயே எனது வாழ்க்கைப் பயணிக்கிறது. முன்பின் தெரியாமல், எனது பதிவுகளைப் படிப்பவர்கள் மத்தியிலும், 'அந்த' தாக்கம் இருக்கிறது. அண்மையில் சிங்கப்பூரில் 'Origins of Tamil Classical Music’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய‌ உரையைக் கேடக வந்தவர்கள் மூலமாக அதனை உணர்ந்தேன்.

அது போன்று வாழும்போது, நான் திட்டமிடாமலேயே, என் வசமுள்ளமூளை உழைப்பு + உடலுழைப்பு + பொருள் போன்றவை வலிமையாகி வருகின்றன. அதன் மூலமாக, எனது 'தனி மனித இராணுவ வலிமையும்' அதிகரித்து வருகிறது. அதைவிட நம்பமுடியாத வகையில், எனது வாழ்க்கை என்னும் பரமபத விளையாட்டில் நான் சந்தித்த 'நம்ப முடியாத' இறக்கங்களே, பின்னர் 'நம்ப முடியாத' ஏற்றங்களுக்கு காரணமாகியுள்ளன.  அது போல, இன்னும் பல நம்ப முடியாத அதிசயங்களையும் நான் சந்தித்து வருவதை, வாய்ப்பும் நேரமும் கூடும்போது விளக்குவேன்.

வாழ்க்கை பரமபதத்தில் ஒரு மனிதரின் வாழ்வில் முக்கிய கட்டங்களில் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் தென்படும். அதில் அவர் தேர்ந்தெடுக்கும் வழியில் பயணித்து, அதனால் வரும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்தாக வேண்டும். அந்த ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் சரியான வழியை தேர்தெடுக்க மேற்கத்தியப் பகுத்தறிவானது, அதன் 'வரைஎல்லைகள்' (limitations) காரணமாகதுணை புரியாது.’ 
(‘'வாழ்க்கை பரமபத விளையாட்டில்'  முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' (2); http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_5.html) இயற்கையின் துணையுடன் சரியான திசையில் சரியான வழியில் எவ்வாறு பயணிப்பது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://veepandi.blogspot.com/2013/02/normal-0-false-false-false.html & https://veepandi.blogspot.com/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

சமூகத்திற்குக் கேடான வழிகளில் ஈட்டிய செல்வம், செல்வாக்கு போன்றவற்றில் உள்மறைந்துள்ள சமூக சாபம் மூலமாக வெளிப்படும் தண்டனைகள் எல்லாம், திருக்குறள்(573) வழியில் பார்ப்பவர்களுக்கே புலப்படும்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 'கூலி'க்காக சேர்ந்த‌ கூட்டத்தினர் மத்தியில், வேனில் இருந்தபடி, 'யோக்கியர்' போல பேசிய தலைவர்கள் எல்லாம் 'கோமாளிகளாகவே' தொலைக்காட்சிகளில் வெளிப்பட்டார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு, 'அந்த' ரசனையானது, வெளியில் சொல்ல முடியாத தண்டனையும் ஆனது.(https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html) தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளை எல்லாம் மக்கள் கேவலமாகப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள், என்பதை ஒரு அமைச்சரே துணிச்சலுடன் வெளிப்படுத்தியுள்ளார். அநேகமாக வரும் தேர்தல் முடிவுகளில், அது தொடர்பான 'சிக்னலும்' வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.
(‘இரு அணிகளிலும் நோட்டாவிடம் தோற்கா விட்டாலும், டெபாசீட் இழக்கப் போவது யார்?’; http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_2.html)

உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே ஊழல் வலைப்பின்னலானது வழிபாட்டுப் போக்குடன் பின்னிப்பிணைந்து தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) மற்றும் புலமையையும் மரணப்பயணத்திற்குள்ளாக்கியது. எனவே பயங்கரவாதத்தின் முதுகெலும்பாகிய ஊழல்வலைப்பின்னலுக்கு எதிராக வெளிப்பட்டு வரும் எதிர்ப்பானது, தமிழின் மீட்சியுடனும் தொடர்புடையதாகும்.

மேற்குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, தமிழின்
, தமிழ்நாட்டின் மீட்சி விரைவில் சாத்தியமாகும் என்பதும் எனது கணிப்பாகும். தாமதமாகி, நமது காலத்திற்குப் பின்னர் நடந்தாலும், தமது வாழ்நாளில் 'தனி மனித இராணுவம்' போல வாழ்ந்தவர்களின், வாழ்பவர்களின் கூட்டு முயற்சியின் சாதனையாகவே அது நிகழும்


அது நிகழும்போது, இலங்கையில் ப‌யங்கரவாதத்திற்குப் பலியானவர்களுக்கு வருத்தப்படும் யோக்கியதை மட்டுமின்றி, உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக, சமூக அளவில் ஆக்கபூர்வமா பங்களிக்கும் யோக்கியதையும், தமிழ்நாட்டிலிருந்து வெளிப்படும்.

No comments:

Post a Comment