Tuesday, April 2, 2019

'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (2)



திராவிடர் கழக அரங்கில் இந்துத்வா நிபுணர் உரையாற்றும் வாய்ப்பு?



தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன்.' என்பதையும்;

அந்த துணிச்சலிலேயே 'பெரியார்' .வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்க, என்னால் இயன்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடவுள் கிருஷ்ணரை அவமதித்ததாக குற்றம் சாட்டி கண்டித்துஆர்ப்பாட்டம்’ என்ற செய்தியைப் படித்தேன். அடுத்து அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமான வீடியோவையும் பார்த்தேன். அதில் அவர் புதிதாக அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் நூலில் இருந்து மேற்கோள் காட்டியது தொடர்பாக, ஏதேனும் அறிவுபூர்வமாக மறுப்பு வெளிவந்திருந்தால், அதையும் பார்ப்பதில் ஆர்வமாயுள்ளேன். அந்த வீடியோவில் கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி ஏற்கனவே .வெ.ரா அவர்கள் பேசியதையே, .வெ.ராவை விட சற்று நாகரீகமாகவே கி.வீரமணி பேசியுள்ளார், என்பதும் எனது கருத்தாகும்.

வீரமணியின் மேற்குறிப்பிட்ட உரையைக் கண்டித்து, '.வெ.ரா முதல் பொள்ளாச்சி வரை தொடரும் திராவிட லீலைகள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள வீடியோவும் எனது பார்வைக்கு வந்துள்ளது

அது தொடர்பாக, 'தனிமனித அவமதிப்பு, மரியாதைக் குறைவு அதிகம் உள்ளது' என்று ஒரு 'பெரியார்' ஆதரவாளர் எனக்கு ஒரு கருத்தினை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஈ.வெ.ராவும் அண்ணாவும், பொது அரங்கில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் அநாகரீகத்தைத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் பாரதிதாசனும் இன்னும் மோசமாக்கினார்கள். அதன் வளர்ச்சியாக, நகைச்சுவை கலந்த அருவருக்கத்தக்க அரசியல் ஆபாசப் பேச்சாளர்கள் காலம் வந்தது. 'அந்த' ரசனையானது இன்றைய பெரிசுகளுடன் முடியும் போக்கில் உள்ளது

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் எல்லாம் எவ்வாறு பல பரிமாணங்கள் கொண்டவை? என்பதையும்;

மேற்கத்திய பகுத்தறிவின் வரை எல்லைகள் (limitations) காரணமாக, எவ்வாறு குறைபாடுகள் வெளிப்படுகின்ற? என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
‘it is clear that the ancient texts in ancient Indian languages have multidimensional treasures which will remain hidden in Linear – one dimensional- mechanical rationalist’ western approaches. The same text might offer valuable evidence, after acquiring new knowledge/skill in a new field of study. Hence the ancient Indian texts are multidimensional treasures.’  
(‘The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

அவ்வாறு .வெ.ரா அவர்களிடம் வெளிப்பட்ட குறைபாடுகள் பல, மேற்கத்திய அறிவுஜீவிகள் மத்தியிலும் வெளிப்பட்டு வருகின்றன. அவை தொடர்பாக ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் அறிவுபூர்வமாக வாதங்களை முன் வைத்துள்ளார்கள்.  அவ்வாறு புராணங்கள் தொடர்பாக வெளிப்பட்டு வருபவைகளை இதுவரை 'பெரியார்' கட்சிகள் 'விளங்கி' மறுத்துள்ளார்களா? இனியாவது மறுப்பார்களா?

அதை விடுத்து, பழைய பாணியிலேயே .வெ.ரா அவர்கள் தமிழ் தொடர்பாகவும், இலக்கியங்கள் தொடர்பாகவும் வெளிப்படுத்தியவைகளை, .வெ.ரா பாணி அநாகரீகத்துடன் வெளிப்படுத்துவதை ரசித்த காலம் முடியும் தருவாயில் உள்ளது.

ஈ.வெ.ரா-வின் அவர்களின் 'வன்முறை வழி எதிர்ப்பு' அணுகுமுறையில் இருந்து தடம் புரண்டு, அவரால் கண்டிக்கப்பட்ட காந்தி பாணி போராட்டங்களில் கலந்து கொண்டு, ஆனால் அவரின் 'தனித்தமிழ்நாடு கோரிக்கையை' மட்டுமே போதையாக்கி, பயணிக்கத் தொடங்கிய பின்னர்; 

தமிழ் தொடர்பாகவும், இலக்கியங்கள் தொடர்பாகவும் ஈ.வெ.ராவின் பழைய பாணியிலேயே பயணிப்பதானது கேலிக்கூத்தாகாதா?

 

தனித்தமிழ்நாடு போதையில், வன்முறை வழிபாட்டில் அறிவு வலிமையைப் புறக்கணித்து 'பெரியார்'(?) முக்கிய நபர்கள் பயணித்ததை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

‘‘அந்த காலக்கட்டத்தில்   EPRLF குழுவின் புரவலராக இருந்த கும்பகோணம் ஸ்டாலினை நான் சந்தித்தபோது, "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை. 'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்று ஆணவத்துடன் பேசினார். மேலே குறிப்பிட்ட பொம்மலாட்டத்தில், EPRLF-ம், அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்களிப்பும், சுவடின்றி மறைந்த போனது ஏன்? என்பது பற்றி, ஸ்டாலினோ, அவரது ஆதரவு 'பெரியார்' கொள்கையாளர்களோ ஆய்வு செய்தார்களா? அல்லது அந்த ஆய்வின் அவசியம் தெரியாமல், 'தனித் தமிழ்நாடு' போதையில், அவர்களில் யார், யார், EPRLF-ஐ அழித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறினார்கள்? என்று 'பெரியார்' கொள்கையாளர்களில் எவராவது அறிவுபூர்வமாக ஆராய்ந்தார்களா? இனியாவது ஆராய்வார்களா? அது போன்ற ஆராய்ச்சியின்றி, கடந்த கால தவறுகளை அடையாளம் காண முடியுமா? திருந்தி பயணிக்க முடியுமா?’
(http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_26.html )
 

அறிவு வலிமையானது 'பெரியார்' கட்சிகளில் எந்த அளவுக்கு பலகீனமாகி வருகிறது? என்பதற்கு ஓர் உதாரணம்.

ஆதாரங்களைத் திரட்டி அபத்தமாக வாதிடுவதை (மார்க்சிய முற்போக்குகளால் புகழப்பட்ட) கோ.கேசவன் நூலில் பார்த்திருக்கிறேன். அந்த அபத்தமான திசையில், .வெ.ராவின் தாய்மொழிவழிக்கல்வி எதிர்ப்புப் போக்கினை ஆதரித்து ஒரு கட்டுரையானது, 'காட்டாறு' என்ற 'பெரியார்' ஆதரவு இதழில் வெளிவந்துள்ளது.

“Mother-tongue-based bilingual education significantly enhances the learning outcomes of students from minority language communities. Moreover, when mother-tongue bilingual education programmes are developed in a manner that involves community members in some significant way and explicitly addresses community concerns, these programmes also promote the identification of the minority community with the formal education process.”

என்ற ஆங்கில சான்றினை வெளியிட்டு, அதன் அடிப்படையில் "தாய்மொழிவழிக்கல்வியைப் பரிந்துரைக்கவில்லை. இருமொழிக் கொள்கையைத் தான் மிகத்தெளிவாக வலியுறுத்துகிறது" என்று எழுதியுள்ளார்கள். அது மட்டுமல்ல, தாய்மொழிவழிக்கல்வியை ஆதரிப்பவர்கள் கூடுதலான மொழிகளைப் பயில்வதை எதிர்ப்பது போல கற்பனை செய்து எழுதியுள்ளதும், அபத்தத்திற்கு இலக்கணமாகும்.

Mother-tongue-based bilingual education’ என்பதை, ‘மிகத்தெளிவாக’(?) தாய்மொழிவழிக் கல்வியை மறுக்கும் இருமொழிக்கொள்கையாகத் தவறாக புரிந்து கொள்ளும் அளவுக்கு;

அறிவு வலிமையில் பலகீனமானவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆதரவு கட்டுரையாளர்களாக வலம் வருகிறார்கள்.

தாம் சார்ந்துள்ள சாதி, மொழி, மதம், நாடு 'தாழ்வாக' இருப்பதாக முன்வைக்கப்படும் வாதத்தினை அறிவுபூர்வமாக எதிர்க்க விரும்புபவர்கள், அதற்கான சான்றுகளை தேடி, உழைக்க வேண்டும். 'பள்ளர்' சாதியில் பிறந்து, அவ்வாறு சான்றுகளை தமிழ்நாடு முழுவதும் தேடி சேகரித்து,  காலனி ஆட்சிக்கு முன் மன்னர்களாகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களாகவும் இருந்த சான்றுகளை எல்லாம் பிரமிப்பூட்டும் வகையில் நூலாக வெளியிட்டவர் மறைந்ததேவ ஆசீர்வாதம் ஆவார். அவருடைய நண்பரான இரயிவே அதிகாரி மறைந்த விபீஷ்ணன் ('பெரியார்' ஆதரவாளர்) அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்; நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்தில். அவர் நூல் பற்றிய‌, எனது திறனாய்வு கட்டுரை 'விடுதலை'யில்  வெளிவந்தது. அவரது நூலில் வெளிப்படுத்திய சான்றுகளை அபத்தமாக மறுத்து, பேரா.கேசவன் 'பள்ளு இலக்கியம்' பற்றி ஒரு நூல் வெளியிட்டார். கேசவனின் வாதத்தில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, நான் எழுதிய கட்டுரையும், 'விடுதலை'யில் வெளிவந்தது.

புலமை வீழ்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்ததால், தேவ ஆசீர்வாதத்தின் ஆய்வு நூல்கள் எல்லாம், தமிழ்நாட்டுப்பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்த்து, அறிவுபூர்வ விவாதங்களுக்கு உட்படுத்தப்படவில்லை.’ (http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

மேற்கத்திய ஆய்வு பாணியில் 'மிரட்டும்'   Reference-களுடன், தமிழில் புத்தகங்கள் எழுதி, முற்போக்கு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவர் மறைந்த அரசு கல்லூரி பேரா. கோ. கேசவன் ஆவார். சுயமரியாதை இயக்கம் பற்றி அவர் எழுதி 'புகழ்' பெற்ற புத்தகத்தினை, நான் ஆர்வமுடன் படித்து, அதில் சுமார் 25 பிழைகள் கண்டுபிடித்து, விடுதலை ராசேந்திரனிடம் கொடுத்தேன். அது பற்றி அவர் 'விடுதலையில்' எழுதாததோடு, நான் கொடுத்த (என்னிடம் வேறு நகலில்லாத) பேப்பரையும் தொலைத்து விட்டார். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html

அதற்கு பரிகாரமாக, தமது அளவில் அவர் இது வரை அந்நூலுக்கு மறுப்பு வெளியிட்டாரா? இனியாவது வெளியிடுவாரா?

இன்றும் கோ.கேசவன், M.S.S பாண்டியன் போன்றவர்களின் வாதங்கள் இந்துத்வா எதிர்ப்பாளர்களின் பாராட்டுக்கும், அந்த வாதங்களில் உள்ள குறைபாடுகளும், அதை வெளிப்படுத்தியவர்களும் இருளில் நீடிப்பதும், உண்மையா, இல்லையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம். 'பெரியார்' ஆதரவாளர்களும், 'மார்க்சிய' ஆதரவாளர்களும் அவ்வாறு பயணித்து, இன்று இந்துத்வா எதிர்ப்பானது ' சோளக்கொல்லை பொம்மை' ஆகி வருவதையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

'பெரியார்' கட்சிகளில் அறிவுவலிமையானது பலகீனமாகி வரும் சூழலில், தமிழ்நாட்டில் இந்துத்வா கட்சிகளில் அது வலிமை பெற்று வருகிறது. கருணாநிதி பாரதிதாசனை விட, நாகரீகமாகவே, ஆதாரங்களுடன், அவர்களின் 'பெரியார்'  எதிர்ப்பு வீடியோக்கள் வெளிவருகின்றன. அது போன்ற வீடியோக்களை மறுப்பவர்களும், அவர்கள் பாணியில் உரிய ஆதாரங்களுடன் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அப்போது தான், இரு சாராரிலும், தமது நிலைப்பாடுகளுக்கு பாதகமான சான்றுகளை தெரிந்தும் புறக்கணித்து, அறிவுநேர்மையற்ற போக்கில், இரு சாராரிலும் யார் யார் பயணிக்கிறார்கள்? என்பது தெளிவாகும். அதன் தொடர்ச்சியாக, தத்தம் நம்பகத்தன்மையைக் கூட்டும் நோக்கில், அறிவுநேர்மையுடன் வாதத்தினை முன் வைக்கும் வீடியோக்களும் வெளிவரும்.

அருவருக்கத்தக்க அரசியல் ஆபாசப் பேச்சாளர்கள் காலம் முடிந்து விட்டது. அது போல, கருணாநிதியும் பாரதிதாசனும் பொது அரங்கில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியஅநாகரீகத்தினை, அவர்களின் ஆதரவாளர்களே மறக்க விரும்புகிறார்கள். அந்த மீட்சிப் போக்கிலேயே, .வெ.ராவும் அண்ணாவும் தொடங்கி வைத்த அநாகரீகம் முடிய வேண்டிய காலம் இதுவாகும். டிஜிட்டல் யுகமானதால், அது சீக்கிரம் முடிந்து விடும், என்பதும் எனது கணிப்பாகும்.

'பெரியார் வழிபாட்டுப் போதையில்' பயணிக்காத, விமர்சனங்களின் ஊடே, தனிப்பட்ட முறையில் .வெ.ராவை மிகவும் மதிக்கும், .டி (Information Technology) துறையில் பணியாற்றும் ஒரு இளைஞர் கீழ்வரும் கருத்தினை தெரிவித்தார்.

பெரியாரின் நிர்வாண புகைப்படமானது கல்லூரி மாணவர்களின் பார்வைக்கு வரும்போது, அதுவரை அவரை தெரியாதவர்களுக்கு எல்லாம், 'அவர் யார்?' என்ற ஆர்வம் மிகுந்து, அவரைப் பற்றிய சரியான தகவல்களை எல்லாம், தேட தொடங்குவார்கள்.”

சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எல்லாம் பெரும்பாலும் தமக்குப் பிடித்த தலைவர்களின் 'வழிபாட்டுப் போதையில்' பயணிக்க, இன்றைய மாணவர்களில், அதிகம் படித்த இளைஞர்களில் பெரும்பாலோர் அத்தகைய போதையில் சிக்காமல், புதிய சான்றுகளின் அடிப்படையில் திறந்த மனதுடன் தங்களின் பழைய கருத்துக்களை எளிதில் மாற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். எனவே இந்துத்வா ஆதரவு 'அறிவுஜீவிகளின்' பங்களிப்பால், 'புத்துயிர்' பெற்றுள்ள 'பெரியார் யார்?' என்ற தேடலானது அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் விளைவாக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால், 'பெரியார்' சிறையிலிருந்து .வெ.ரா எவ்வாறு மீள்வார்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

.வெ.ரா அவர்கள் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். (http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html )

அது போல் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பெரியாரியல் நிபுணரும் பெரியார் இயக்கக் கூட்டத்தில் இந்துத்வா நிபுணரும் உரையாற்றும் வகையில் கருத்து வேறுபாட்டை மதித்துக் கூட்டம் நடத்தும் ஆரோக்கியமான சூழல் வர வேண்டும்'; 

என்ற எனது கோரிக்கையை 2006இல் முன் வைத்தேன். அது நிறைவேறும் காலமும் நெருங்கி வருகிறது. எனவே தமிழின், தமிழ்நாட்டின் மீட்சியானது நிச்சயமாகி வருகிறது.

No comments:

Post a Comment