Saturday, April 20, 2019

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வானநிலை? மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்! (2) 



அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில் தமிழின், தமிழ் இசையின் மீட்சி



'உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வான‌ நிலை? மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்!' பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அறிவுஜீவிகள் மத்தியில் சுயலாப பொதுவாழ்வு வியாபார நோக்கின்றி, தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள், எனக்குத் தெரிந்து பலர் இருக்கிறார்கள்; எனக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கக்கூடும்.

அத்தகையோர் 'பிறர் பார்வை அறிதல்' (Empathy) மூலமாக, தத்தம் தவறான புரிதல்களை அடையாளம் கண்டு, திருத்திப் பயணிப்பதன் மூலம், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான 'சினர்ஜி' (Synergy) வெளிப்படும்;

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2015/03/12_7.html) அநேகமாக இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அறிவுஜீவிகளுக்கு, அந்த நோக்கில் வெளிவரும் கீழ்வருபவை எல்லாம் நம்பமுடியாத வியப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

1970களின் பிற்பகுதியில் தஞ்சையில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், .வெ.ரா அவர்களைப் பற்றி அதிகம் தெரியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், (பிற்காலத்தில் தி.மு. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான) தஞ்சை இரத்தினகிரியைச் சந்தித்தேன். அவர் தந்த ஆனைமுத்துவின் 3 தொகுதிகளையும் ஆழ்ந்து படித்தேன். .வெ.ராவுக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்புகளும் கிட்டின. 1925 முதல் வெளிவந்த குடிஅரசு இதழ்களையும், கோவை அய்யாமுத்து போன்ற .வெ.ராவுடன் பயணித்து பின் பிரிந்தவர்கள் எழுதிய நூல்களையும் படித்தேன்.

அந்த போக்கில் அண்ணாதுரை மீதும், தி.மு. மீதும் கோபமும், வெறுப்பும் என்னுள் வளர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் நான் பழகிய 'பெரியார்' இயக்க அறிவுஜீவிகள் பலரும் அதே மனநிலையில் இருந்தார்கள். தி. தலைவர் கி.வீரமணி தமது பேச்சுகளில் 'தமிழர் தலைவர் கருணாநிதி' என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் நாங்கள் இருந்தோம். பொறுக்கமுடியாமல் ஒரு முறை நான் கி.வீரமணியிடம், 'உங்களை நான் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், உங்கள் வாயால் கருணாநிதியை 'தமிழினத் தலைவர்' என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தேன். அவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். கி.வீரமணி மீதும், இயக்கத்தின் மீதும் என் பார்வைக்கு வரும் குறைகளை, ஒளிவு மறைவின்றி, அவ்வப்போது மடல்கள் எழுதி, நேரில் கொடுத்து வந்தேன். திரு.கி.வீரமணியிடம் கொடுக்கும் முன். அம்மடல்கள் சிலவற்றை தஞ்சை இரத்தினகிரியிடமும், பிற்காலத்தில் திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்களிடமும் காண்பித்து நெறிப்படுத்தியதுண்டு;  அந்த காலக்கட்டத்தில், உள்நோக்கமின்றி தம்மை விமர்சிப்பதை அனுமதித்தவர் கி.வீரமணி ஆவார்.

அந்த கொள்கையின் மீதும் இயக்கத்தின் மீதும் எனது நம்பிக்கையின்மை வெளிப்பட்டபோதும், அதையும் அவருக்கு மடல் மூலமாக தெரிவித்தே விலகினேன்.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், திரு.கி.வீரமணி என்னை மிகவும் மதித்து பல பொறுப்புகள் வழங்கிய காலத்திலும் கூட, 'அதைப் பயன்படுத்தி' எனக்கான செல்வாக்கு வலைப்பின்னலைக் கட்டி, 'செல்வாக்கான பெரியார் அலங்கார பொம்மையாக' வளர்ந்து விடக் கூடாது;

என்பதில் மிகவும் கவனமாக இருந்தவன்.

உதாரணமாக நான் சென்னை பெரியார் திடலில் நாட்குறிப்பு பணிக்காக தங்கியிருந்த போது, தி.மு. தலைவர் கருணாநிதி இன்னும் சில நேரத்தில் அங்கு வரப் போகிறார் என்று அறிந்தவுடன்;

"ஆசிரியர் தப்பித்தவறி நம்மை அழைத்து, அவரிடம் அறிமுகப்படுத்தி விடுவாரோ?' என்று கருதி, அந்த 'சங்கடத்தில்' இருந்து விடுபட, நான் பெரியார் திடல் வளாகத்தை விட்டு வெளியேறி, அவர் பெரியார் திடலை விட்டு போன பின் தான், உள்ளே நுழைந்தேன்.

.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் சாராம்சத்தை அகவயப்படுத்தி, அண்ணாவையே இழிவான நபராக கருதி பயணித்த 'பெரியார் கொள்கையாளர்களில்' ஒருவராக நான் இருந்தேன். அப்படி பயணித்தவர்களில் பலர், தி.மு. ஆட்சியில் 'தமக்கான பலன்களுக்காக' முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, 'முரசொலி'யில் 'துதிபாடி', 'அறிவாலயத்தில்' செல்வாக்குடன் வலம் வந்ததையும் நான் அறிவேன்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகி' வாழ்ந்த 'அந்த வாழ்வியல் புத்திசாலிகளை'(?), நான் குறை சொல்லவில்லை; இன்றும் அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு அலங்கார பொம்மைகளாக' பவனி வந்தாலும்

அவ்வாறு விலகி இசை ஆய்வுகளுடன் பயணித்த போக்கில், 1967 இல் முதல்வரானதிலிருந்து சாகும் வரை அண்ணா எவ்வாறு வாழ்ந்தார்? என்பது தொடர்பான வியப்பூட்டும் தகவல்கள் எனக்கு கிடைத்தன. ஆட்சியில் சிக்கல்களைச் சந்தித்த போது, காமராஜரின் ஆலோசனைகள் அடிப்படையில் ஆட்சி செய்தது, அண்ணாவால் அதிகபட்ச இழிவுக்குள்ளான கம்பருக்கு சிலை வைத்தது; போன்ற தகவல்கள் கீழ்வருபவையுடன் இணைத்து அணுக வேண்டியவையாகும்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் உருவாக்கும் முயற்சி சந்தித்ததடைகள் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு, 'தேசியம்' மற்றும் 'இந்துத்வா' ஆதரவாளர்களிடம் இருந்து வெளிப்பட்டிருந்த சூழலில்;

1967இல் தமிழக முதல்வராக அண்ணா ஆன பின், அவருக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் நடந்த சந்திப்புகள் எல்லாம், அந்த தடைகளை கடந்து, ஏக்நாத் ரானடே தமது முயற்சியில் வெற்றி பெற எந்த அளவுக்கு உதவியது?  அது தொடர்பாக தி.மு.கவில் அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இடம் பெற்றவர்களில், ஏன் அன்றைய அமைச்சர் கலைஞர் கருணாநிதி இடம் பெறவில்லை? முதல்வரான அண்ணா வாடிகன் சென்று போப்பை சந்தித்த போது; கோவா விடுதலை போராட்டத்தின் போது, போர்ச்சிகீசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரரான மோகன் ரானடேயை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது ஏன்?

உடல்நலக்குறைவில் சிக்காமல் அண்ணா நல்ல ஆரோக்கியத்துடன் முதல்வராக தொடர்ந்திருந்தால்;

அண்ணாவுக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்திருந்த நல்லுறவானது

சுயலாப நோக்கின்றி 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', திராவிட அரசியலை வளர்க்க விரும்பிய போக்கில்;

திராவிட அரசியலுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிக்கும் இடையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன்கள் விளைந்திருக்க கூடிய நல்லுறவாக வளர்ந்திருக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும்.

அகத்தில் சுயலாப கணக்குகளின்றி, தடைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல், முன்னேறி அரிய சாதனை படைத்த பின்னும், பாராட்டு, புகழ் போன்றவற்றை தவிர்த்து, தன்முனைப்பின்றி நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஏக்நாத் ரானடே ஆவார்.   
(‘கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை; இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்-  கருணாநிதியிடம் ஏமாந்த ஜெயலலிதா(1)’ 
http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

1967 ஆட்சி மாற்றத்தின் போது, கட்சியில் பொதுவாழ்வு வியாபாரப் போக்குகளை ஒழிக்கும் வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், .வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த 'சிக்னலை' உணர்ந்து, அவற்றை பொதுவிவாதத்திற்கு, அந்த காலக்கட்டத்தில் அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளவர்களும் ஈடுபட்டு, மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், திராவிட மனநோயாளிகள் பங்களிப்பின் மூலமாக, இந்தளவுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எல்லாம், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கு உள்ளாகியிருக்குமா? அதற்கு மாறாக, அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளதாக காட்டிக் கொண்டவர்களும், சொந்த வாழ்வில் இழப்புகளுக்கு அஞ்சியோ, அல்லது 'புதிய ஊழல் சூழலில்' 'வளமாக' விரும்பியோ, 'சமூகத்தின் முதுகெலும்பானது', 'ஊழல் அதிகாரத்திற்கு' வளையும் அளவுக்கு பங்களித்து, பயணித்து வந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
(http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

அண்ணாவின் மறைவிற்குப் பின்,  தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு. ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில், காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு, பல போராட்டங்கள் மூலம், தி.மு. எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,  அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும்,  .தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில்,  .தி.மு. முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு. மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு. எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு. எதிர்ப்பு அரசியல்'  என்பது, ...தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது.

அந்த பொதுமக்கள் கருத்துருவாக்க செயல்நுட்பம்(public opinion formation mechanism) பற்றிய புரிதலின்றி, தி.மு.கவுடன் அவ்வப்போது, தேர்தலில் கூட்டணி வைத்து, பயணித்த பெரிய, சிறிய அரசியல் கட்சிகளெல்லாம், தி.மு.க-வை எதிர்த்து நிலைப்பாடுகள் எடுக்கும் போது, மக்களிடம் எடுபடாமல் போகிறார்களா? மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெறுகிறார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பின் தி.மு. ஆட்சியைக் கலைத்த போது, தமிழ்நாட்டில் கீழ்வரும் 'சிக்னல்' வெளிப்பட்டது.

தி.க-வில் உள்ளவர்களின் அழுத்தத்தில், தி.மு. தலைவர் பரிசீலித்த 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு, தமிழ்நாடு மக்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது? அல்லது ஊழலின் கேடயமாக 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையும், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பிற்கு உள்ளானதா? என்ற கேள்விகளை, நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியை கலைத்த பின், வெளிப்பட்ட 'சிக்னல்கள்' எழுப்புகின்றன

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக.

அதற்குப்பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில், 'பெரியார்' .வெ.ராவின் நூற்றாண்டு விழா கொண்டாடிய  காலக்கட்டத்தில் தான், என்னைப் போன்றவர்கள் 'பெரியார்' இயக்கத்தில் நுழையும் போக்கு அரங்கேறியது.’

1969க்குப்பின் கருணாநிதி முதல்வராகி, சர்க்காரிய கமிசன்படி 'அறிவியல் ஊழலில்தமிழ்நாடு பயணித்தது.  நெருக்கடி காலத்திற்குப் பின் நடந்த தேர்தலில், முதல்வராகி, ஊழலற்ற ஆட்சியை எம்.ஜி.ஆர் வழங்கினார். இடையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்திராகாந்தி பிரதமரானார். 'அந்த' துணிச்சலில்'(?) கருணாநிதியின் தூண்டுதலுக்கு இலக்காகி, அவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தார். அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் முதல்வரானார். ஆனால் தி.மு.கவின்  'அந்த' அரசியலை எதிர்கொள்ள, எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் ஊழல் நுழைய நேரிட்டது.

எம்.ஜி.ஆர் இருந்தது வரையில், ஊழலிலும் சரி, கட்சிக்காரர்களிடம் வெளிப்பட்ட பண்புகளிலும் சரி, தி.மு. மற்றும் ...தி.மு. இடையே வெளிப்பட்ட வேறுபாடுகள் எல்லாம் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரியவை ஆகும். தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு, இந்திய தேசிய எதிர்ப்பு' போன்றவற்றுடன் 'அந்நியமாகி' பயணிப்பதில் ...தி.மு.கவினர் முன்னிலையிலும், அவற்றை தமது 'சுயநல அரசியலுக்கு' பயன்படுத்தி, 'நீர்த்துப் போக' செய்ததில் தி.மு.கவினர் முன்னிலையிலும், உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்
(http://tamilsdirection.blogspot.com/2017/04/)

அந்த ஆராய்ச்சிக்கு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் வெளிப்பட்ட கீழ்வரும் சிக்னல்களும் முக்கியமானவையாகும்

1. தி.மு. தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம், கி..பெ.விஸ்வநாதன் போன்ற புலமையாளர்களை மிகவும் மதித்து ஆலோசனைகள் பெற்றது;

2. அடிவருடும் போக்கற்ற தன்மானமுள்ள பேரா.வி..சுப்பிரமணியன் விதித்த நிபந்தனைகளை ஏற்று, ஊழலுக்கும், ஆளுங்கட்சி குறுக்கீடுக்கும் வழியின்றி, இந்தியாவிற்கே முன்னுதாரணமாகும் வகையில், தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிறுவியது.

3.  அது போலவே, மின்வாரியத் தலைவராக பி.விஜயராகவன் செயல்பட்டது

4.  தமிழ்நாட்டை குடும்ப அரசியலில் இருந்து மீட்டது.

5) புலமையாளர்களை மிகவும் மதித்து, தமிழையும், புலமையையும் 'கட்சி அரசியல் சிறை'யிலிருந்து துணிச்சலுடன் விடுவித்தது.

அது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மரணமடைந்த போது, உயில் மூலமாக இன்றும் சமூகத்திற்கு நல்ல வழிகளில் அவர் சேர்த்த பணம் செலவாகி வருகிறது. அது போல, ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பாக, அவர் முடிவு செய்ய முடியாத வகையில், அவரின் 'மர்மமான' மரணம் நிகழ்ந்து விட்டது.

எம்.ஜி.ஆரைப் போல, தி.மு. தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற பல புலமையாளர்களை தேடி, வரவழைத்து, மதித்து துணையாக கொள்ளாமலும், தன்மானமுள்ள புலமையாளர் எவரும் நெருங்காமல் ஒதுங்கும் வகையிலும், பயணித்ததாலேயே, எம்.ஜி.ஆரைப் போல தனது பெயரில் உள்ள சொத்துக்களை தருமம் செய்யும் வகையில் உயில் கூட எழுத முடியாத 'மர்மமான' முறையில் மரணமடையும் அளவுக்கு; அவ்வாறு ஜெயலலிதா சசிகலா குடும்பப் பிடியில் சிக்கினாரா ? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ 

தமிழை சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திய போக்கே, தமிழின் வீட்சிக்கு வித்திட்டு, அந்த போக்கில் தமிழ்நாடு சீரழியும் விளைவில் முடிந்தது. எனவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான முயற்சிகளில், சுயநல அரசியல் சிறையில் இருந்து தமிழை விடுதலை செய்தாக வேண்டும். தமிழால் பிழைக்க வேண்டிய தேவையின்றி, சுயலாப நோக்கின்றி தமிழின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டால், 'அந்த' விடுதலை சீக்கிரம் நடைபெற வாய்ப்புள்ளது.

அதற்கு முன்முயற்சி செய்பவர்கள் சமூக முதுகெலும்புள்ள புலமையாளர்களாகவும், தமிழால் பிழைப்பவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிபூர்வ இரைச்சலை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்

புலமையாளர்களை எவ்வாறு மதிப்பது? தமிழை வளர்க்க, முன்னுதாரணமான முறையில் எவ்வாறு முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நிறுவினார்? தமது ஆட்சியைக் குறை சொன்ன தமிழ்  இசை அறிஞர் வீ.பா,கா சுந்தரத்தை மேடையில் சென்று, அணைத்து, 'தமிழ் இசைக்கு என்ன செய்ய வேண்டும்? என்று முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரை உலகத்தமிழ் மாநாட்டு மேடையில் கேட்டதற்கு சாட்சிகளாக, பொன்னையன், புலமைப்பித்தன் போன்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள்
(‘எம்.ஜி.ஆர்  ", ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்(1)’; 
http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

தமக்கு சரி என்று பட்ட நிலைப்பாட்டில், அண்ணாவை விட, எம்.ஜி.ஆரை விட துணிச்சலாக செயல்பட்டவர் ஜெயலலிதா. தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடத்திய பின், சென்னை அரசு இசைக்கல்லூரி முதல்வர் திருப்பாம்புரம் சண்முக சுந்தரத்தை அழைத்து, 'தமிழ் இசைக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான திட்டங்களைத் தாருங்கள். நிதி நெருக்கடியின்றி உடனே ஆணையிடுகிறேன்' என்று ஜெயலலிதா சொல்லியதையும் நானறிவேன். அதன்பின் நான் அது தொடர்பாக, ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சித்ததை, (முன்னாள் சென்னைப் பல்கலைகழகத் துணை வேந்தர்) பேரா.தாண்டவன், தற்போது அமைச்சராக இருக்கும் .எஸ். மணியன் அறிவார்கள். அது ஏன் முடியவில்லை? என்பதையும் அவர்கள் தான் விளக்க வேண்டும். எம்.ஜி.ஆர் பாதையிலிருந்து தடம் புரண்டு, தம்மைத் தாமே சிறைக்குட்படுத்தி ஜெயலலிதா வாழ்ந்ததே அதற்குக் காரணம், என்பது எனது கருத்தாகும்.

அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில், சிலப்பதிகாரம் (அரங்கேற்று காதை) இசை தொடர்பாக முன் நிறுத்திய 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' செயல்நுட்பம் கீழ்வருமாறு பயணித்தல் சாத்தியமாகும்.

மேற்குறிப்பிட்டவாறு, 1967 முதல் சாகும் வரை, அண்ணா பயணித்த வழியிலும், பின் அந்த வழியில் சாதனைகள் புரிந்த எம்.ஜி.ஆர் வழியிலும்;

'வந்ததை', டிஜிட்டல் யுகத்தில் தமிழின், தமிழ் இசையின் அடுத்தக்கட்ட புலமை திசையில் வளர்த்து, 'இசை இழை' (Musical Thread), 'இசை மொழியியல்'(Musical Linguistics), 'உலக இசைக்கான தாள இலக்கணம்' (Universal Percussion Grammar), 'இயற்கைநட்பு தோல் பதனிடும் தோல் தொழில்நுட்பம்' (Bio-friendly Leather Technology) போன்ற வரிசையில் இன்னும் அதிகமாகவெளிப்பட்டுவரும் கண்டுபிடிப்புகள் மூலமாக 'வருவது ஒற்றி' பயணிப்பதே மீட்சிக்கான வெற்றி பெறும் வழியாகும்
(https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அறிவுஜீவிகள் மத்தியில் தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் 'பிறர் பார்வை அறிதல்' (Empathy) மூலமாக, தத்தம் தவறான புரிதல்களை அடையாளம் கண்டு, திருத்திப் பயணிப்பவர்கள் எல்லாம், அந்த முயற்சிக்கு ஒத்துழைக்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கணிப்பாகும்.

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336)

(வளரும்)

No comments:

Post a Comment