இந்தியாவில் முன்னுதாரணமாக;
தமிழ்நாட்டின் மீட்சிக்கான, 'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து விட்டது
‘தமிழ்வழி வீழ்ச்சி
என்பது தமிழின் வீழ்ச்சியோடும், தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சியோடும் பின்னிப்
பிணைந்ததாகும்’ என்ற அடிப்படையில்,
'உண்மையாகவும், நேர்மையாகவும், திறந்த மனதுடனும்,
சுயநல பொதுவாழ்வு நோக்கின்றியும்' வாழ்பவர்களாக நானறிந்தவர்களை, சாதி,மத,கொள்கை வேறுபாடுகளை
ஒதுக்கி வைத்து, ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் 'மீட்சிக்கான' திசையில் முயலும் 'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து
விட்டது.
இரண்டிற்கும் மேற்பட்ட
கொள்கைகள், அமைப்புகளில் உள்ளவர்கள் பொது இலக்கு நோக்கி, கூடுதல் ஆற்றலுடன், தமக்கிடையே
உள்ள வேறுபாடுகளை அந்த செயல்பாட்டில் ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு முயற்சிப்பதே 'சினர்ஜி'
ஆகும்.
(the interaction
or cooperation of two or more organizations, substances, or other agents to
produce a combined effect greater than the sum of their separate effects )
பொருள் மொழி பெயர்ப்பு(semantic)
செய்யாமல், 'சினர்ஜி' என்ற சொல்லை, அதே எழுத்தோசையில்
(Phonetic adoption), நான் பயன்படுத்தியுள்ளேன்.
'எழுத்தோசை' அடிப்படையில் பிறமொழிச் சொற்களை 'இறக்குமதி'
செய்யாமல், தொல்காப்பிய 'ஒரீஇ'
சூத்திரத்தைத் தவறாகப் புரிந்து, 'திரிந்த பொருள் மொழிபெயர்ப்பின்' ஆதிக்கத்தில், 'தனித் தமிழ்' பற்றாளர்கள்
மேற்கொண்ட முயற்சிகள், தமிழின், அதன் வழியாக
தமிழர்களின் சீரழிவிற்கு வழி வகுத்தது பற்றி, ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2013-10-17T00:29:00-07:00&max-results=32&start=13&by-date=false)
(http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2013-10-17T00:29:00-07:00&max-results=32&start=13&by-date=false)
அம்முயற்சியில் 'தமிழ்த்
தேசிய' வழியில் ஈடுபட்டவர்களில், 'தனிமனித அளவில் சீரழிந்தவர்கள்' பற்றிய கட்டுரையைப்
படிக்க:
"பழம் பெருமை பேசுவதின்
மூலம்தான் தமிழ்த் தேசியத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தியத் தேசியத்திற்குள் எந்த
மாநில மக்களும் நலமாக இல்லை என்பதை சொல்வதற்கு பதில், அல்லது இந்திய தேசியத்தை விமர்சிப்பதை
விட, மற்ற மாநில மக்களை எதிரிகளாக சித்தரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
சரியான செயல் திட்டத்தோடு, கொள்கை விளக்கங்களை தருவதில்லை. தனிநாடுக்கான சமீபத்திய
தேவை, அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விளக்குவதில்லை.
‘தமிழன் கடாரம் கொண்டான்.
கொடாரம் கொண்டான்… ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவன் இன்று நாடெற்று
தவிக்கிறான்…’ என்பது போன்ற சென்டிமென்ட்டான, உணர்ச்சிகரமான வசனங்கள்தான் அதிகம் இடம்
பெறுகிறன……..தமிழன் என்ற பொது அடையாளத்தில் சுற்றி வந்தாலும் – தமிழ், தமிழன், தனிநாடு
என்று பேசுபவர்களில் எனக்கு தெரிந்த பல பேர் ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். அல்லது
ஜாதி வெறி நடவடிக்கைகளை, தாழ்த்தப்பட்டமக்கள் மீது நடக்கிற வன்கொடுமைகளை கண்டிக்க மறுக்கிறார்கள்.”
தமிழ்நாட்டில் பொதுவாழ்வில்
மேலேக்குறிப்பிட்டது போன்ற, 'இரட்டை வேடப் போக்குகள்' 'திராவிட, தேசிய, இந்துத்வா'
உள்ளிட்ட கட்சிகளில் இருப்பவர்களில் சிலரிடமும் வெளிப்படுவதையும் ஏற்கனவே பார்த்தோம்.
“பெரியார்,ராஜாஜி,
காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன்
கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார்
சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம்
விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை'
களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு
தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார்.
'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே.
அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம்
செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக
'உணர்வுபூர்வமாக', சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில்
வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா
போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு'
நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே
பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும்
அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும்
இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது'
வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
இதில் முக்கியமாக கவனிக்க
வேண்டியது என்னவென்றால், தமது சுயநலத்துக்காக, 'இழிவான' சமரசத்தில் ஒன்றுபடும் போக்கு
தமிழ்நாட்டு பொது அரங்கில் அவ்வப்போது வெளிப்படுகிறது. அந்த 'சுயநல'வாதிகளை வெறுத்து
ஒதுக்காமல், 'நமது கட்சி, நமது கொள்கை' என்று அந்தந்த கட்சிகளில் உள்ள உண்மையானவர்கள்,
நேர்மையானவர்கள் உழைப்பெல்லாம், அந்த சுயநலவாதிகளின் வளர்ச்சிக்கே பயன்பட்டு வருவதை,
வெளிப்படுத்தி, தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.'கொள்கை, கட்சி' என்ற 'ஆடு தோல்'
போர்த்திய ஓநாய்களிடம், அந்தந்த கட்சிகளில் ஆடுகளாக ஏமாறுவது முடிவுக்கு வர வேண்டிய
நேரம் வந்துவிட்டது.
தமது குடும்பப் பிள்ளைகளை
ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, அதை வெளிப்படுத்தி வருத்தம் தெரிவிக்காமல்,
தமிழ்வழிக் கல்வியை ஆதரித்து நாடகமாடுபவர்கள் எந்த கட்சியில், எந்த கொள்கையில் இருந்தாலும்,
அவர்களை வெறுத்து, ஒதுக்கினால் தான், தமிழ்வழி மீட்சிக்கு வழி கிடைக்கும்.
'உண்மையாகவும், நேர்மையாகவும்,
திறந்த மனதுடனும், சுயநல பொதுவாழ்வு நோக்கின்றியும்' வாழ்பவர்களாக நானறிந்தவர்களை,
சாதி,மத,கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் 'மீட்சிக்கான'
திசையில் முயலும் 'சினர்ஜி’ (Synergy) சமூக
செயலுக்கான, முதல் படியாக நான் கருதி, அந்த திசையில் என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி
வருகிறேன். இது சரியென்று கருதுபவர்கள், தாமாக தம்மால் இயன்ற அளவுக்கு பங்களிப்பு வழங்குவது,
அந்த சினர்ஜி கூட்டு முயற்சி திசையில், சாதி.மத,கொள்கை வேறுபாடுகளைத் தள்ளிவைத்து, ஒன்றுபட்டு
செயல்படுவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.இந்திய அளவில் இது
போன்ற 'சினர்ஜி’ (Synergy) சமூக செயல்பாட்டில்,
தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்கினால் வியப்பில்லை.
1857 விடுதலைப் போரில்
'ஆங்கிலேயர்' எதிர்ப்பில் இந்துக்களும், முஸ்லீம்களும் எவ்வாறு ஒன்றுபட்டு போராடினார்கள்
என்ற தகவல்களையும், 'துரோகிகளான' இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றிய தகவல்களையும்,பாராபட்சமற்ற(without
discrimination) , சார்பற்ற(Objective) நோக்கில்
வெளிப்படுத்தி, என்னை வியக்க வைத்த நூல் வீர சவர்க்காரின் 'எரிமலை' ஆகும்.( ஆங்கிலத்தில்
The Indian War of Independence)
ஆனால் 1857க்கு முன்,
அதற்கு முன்னோடியாக, வேலூரில் நடந்த விடுதலைப் போர் பற்றிய தகவல்கள், அது போல இதுவரை
பதிவுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.( Some South Indian historians have also
opposed the use of the term, and have unsuccessfully taken the issue to the
court. These historians insist that several other anti-British uprisings in
South India (such as the Vellore Mutiny) had preceded the 1857 revolt, and
should be called the First War of Indian independence;
1857 போரில் வெளிப்பட்டது
போலவே, பிரமிக்க வைக்கும் அளவுக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமையுடன், ஆங்கில இராணுவத்தை
எதிர்த்து நடந்த அந்த தகவல்களைச் சுருக்கமாக தெரிந்து கொள்ள; http://en.wikipedia.org/wiki/Vellore_Mutiny
தமிழ்நாட்டின் 'மீட்சிக்கான'
திசையில் முயலும் 'சினர்ஜி’ (Synergy) சமூக
செயலுக்கான, முதல் படியான இம்முயற்சி, இந்தியாவை உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகளிடமிருந்து
மீட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து சாதி,மத, மொழியினரும் தமக்கான சகல உரிமைகளையும்,
வசதிகளையும் பெற்று முன்னேறும் முயற்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்பதும் என் கருத்தாகும்.
"சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள், ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுத்தி வந்த 'சமுக நோய்த் துகள்களும்' , அவற்றைப் பாதுகாத்து வரும் அமைப்புகளும் காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை." ( http://tamilsdirection.blogspot.in/2014/09/v-behaviorurldefaultvmlo.html )
"சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள், ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுத்தி வந்த 'சமுக நோய்த் துகள்களும்' , அவற்றைப் பாதுகாத்து வரும் அமைப்புகளும் காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை." ( http://tamilsdirection.blogspot.in/2014/09/v-behaviorurldefaultvmlo.html )
குறிப்பு:
அதிக வாசகர்களைக் கொண்ட
தினத்தந்தி, தினமலர், ( தினமணி வாசகர்களில்
பெரும்பாலோரை ஈர்த்து வளரும்) தி இந்து,விகடன்,
குமுதம் குழும இதழ்கள் உள்ளிட்டவற்றை, 'காசு
கொடுத்து' வாங்குபவர்களும், படிப்பவர்களும் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களே.
கல்லூரி மாணவர்கள் படித்து, இது வரை, நான் பார்த்ததில்லை.மலையிலிருந்து வீழும் வாகனத்தைப்
போல, தமிழ் ஊடக வாசகர்கள் எண்ணிக்கை பாதாளத்தில் விழுவது அடுத்த 10 வருடங்களுக்குள் நிகழ்ந்தால் வியப்பில்லை.தமிழ்வழி
மரணத்திற்கு முன் அறிவிப்பான சங்கொலியாக, அது அமையும். அதைத் தவிர்க்க, ஒதுங்கி, தமிழ்வழி
மீட்சிக்கு வழிவிடுவார்களா,மேற்குறிப்பிட்ட 'தமிழ், தமிழ் உணர்வு' தலைவர்கள்?
தத்தம்
வசதி வாய்ப்புக்கேற்றவாறு, தமிழ்வழி அரசு பள்ளிகளை 'தத்து' எடுத்து, அடிப்படை வசதிகளை
உயர்த்தி, நன்கு பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிப்பதன் மூலமே, மேற்குறிப்பிட்ட பத்திரிக்கைகள்
தமது வாசகர்கள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
தமிழ்ப் பற்றாளர் என்ற போர்வையில் வருவோர் தங்கள் கருத்தை ஆதரிக்காதவர் தமிழரல்லர் என்னும் இன்னும் கொச்சையாகவும் பேசி இழிவு படுத்துவதும் ஒரு வேதனை. தமிழன் தன்னை எப்படி தமிழனாகக் காட்டிக் கொள்வது? எந்த மதமானாலும், தமிழனுக்கு ஒரு பொது மறை உள்ளது. திருக்குறள் அறத்துப்பால் தமிழனின் பண்பாட்டு அடையாளம். மறை என்றால் தினமும் ஓதப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தனக்கென ஒரு திருக்குறள் புத்தகம் வைத்துக் கொள்ள வேண்டும். அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், தினம் ஒரு அதிகாரம் வீதம் திரும்ப திரும்பப படுக்க வேண்டும். முதல் மூன்றுக்கள் ஓதியபின் திருக்குறள் சிந்தனைகள் உங்களை ஆட்கொள்ளும். இனிமேல்தான் நீங்கள் தமிழர் என்று மார் தட்டலாம். பூணூல் போட்டவன்தான் பார்ப்பான். மூன்று சுற்று ஓதியவரே தமிழர். இதை ஏற்பவர்கள் ஆரம்பித்து விடுங்கள். உங்கள் குடும்பத்துடன் கூட்டுக் 'குறள் வழிபாடு' சிறந்தது. நல்ல பலன் கிடைக்கும்.
ReplyDeleteஇம்மைக்கு என்றால் இன்னைக்கு எனத் திருத்திப் பொருள் கொள்ளுங்கள்.
மறுமை என்றால் வரும் நாட்கள், மறு நாட்கள், எதிர்காலம் என்று பொருள் கொள்ளுங்கள்.
"தமிழ்ப் பற்றாளர் என்ற போர்வையில் வருவோர் தங்கள் கருத்தை ஆதரிக்காதவர் தமிழரல்லர்." இவ்வாறு இந்த பதிவில் எங்கு உள்ளது?
Deleteநீங்கள் காட்டும் என் பதிவு வாக்கியம் இந்தக் கட்டுரையில் உள்ளதாகச் சொல்லவில்லை."தங்கள் கருத்தை ஆதரிக்காதவர்" என்ற பகுதி இக்கட்டுரை ஆசிரியரை (உங்களை) குறிப்பிடுவதாகப் பட்டால் என்னுடைய வாக்கியக் அமைப்பில் உள்ள குறைபாடே. நான் என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.
ReplyDeleteI am really referring to the many self styled Tamil leaders who proclaim that they are genuine Tamils and whoever contraxicts them cannot be Tamils.
'தமது கருத்தை/நிலைப்பாட்டை ஆதரிக்காதவர் தமிழர் இல்லை' என்று கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளைப் போல், தமது வரை எல்லை(limitation) பற்றிய புரிதலின்றி, உணர்வுபூர்வமாக பேசுபவர்களை/எழுதுபவர்களை ஏற்கனவே எனது பதிவில் கண்டித்திருக்கிறேன். 'யார் தமிழர்?' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இக்கட்டுரை, தமிழ்நாட்டில் பலரின் பார்வைக்கு சென்றால், அந்த உணர்வுபூர்வ போக்கு உதிரும் என்பதும் என் கருத்து.
ReplyDelete"யார் தமிழர்?"
வேம்பையன் தொல்காப்பியன்
http://siragu.com/?p=3527