Wednesday, April 3, 2019

நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா? (2)



இரு அணிகளிலும் நோட்டாவிடம் தோற்கா விட்டாலும், டெபாசீட் இழக்கப் போவது யார்?



தமிழில் 'தன்மானம்' என்ற சொல் இருப்பது தெரியாமல்,1944 முதல் திராவிடர்/திராவிடக்கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், 'சுயமரியாதை' என்ற சொல்லானது வளர்ந்த வேகத்தில், தமிழ்நாட்டில் 'தன்மானம்' வீழ்ந்தது. காரியம் சாதிக்க தன்மானம் இழந்து, காலில் விழும் பண்பாடும் அதே வேகத்தில் வளர்ந்தது. (‘நமது குழந்தைகளாவது தன்மானமிழந்த போக்கிலிருந்து தப்பிப்பார்களா?’; http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_8.html) எனவே தமிழின் மீட்சியோடு தொடர்புடைய தமிழர்களின் தன்மான மீட்சியானது,தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகளோடு தொடர்புடையதாகும்.

இந்தியா விடுதலை பெற்று 1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெறாத நிலையில், கூவத்தூர் பாணிக்கு பிள்ளையார் சுழி போட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ராஜாஜி முதல்வர் ஆனார். அதன்பின் காமராஜர் முதல்வரானது முதல் 1957 மற்றும் 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று, 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.(http://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html).  

1967இல் நடந்த தேர்தல் முடிவானது, தேசியக் கட்சிகளை எல்லாம் திராவிடக்கட்சிகளின் வால்களாக்கும் விளைவில் முடிந்தது., அது போலவே திராவிடக்கட்சிகளின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போவது, வரும் 2019 பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத் தேர்தல்கள் ஆகும்; 

என்பது எனது கருத்தாகும். அதன் தொடர்விளைவாக தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியானது தாமதாகுமா? அல்லது விரைவாகுமா? என்பதும் தெளிவாகும்.

‘2014 லோக்சபா தேர்தலின்போது, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், 'நோட்டா'வுக்கான பட்டன் பொருத்தப்பட்டது. தமிழகத்தில், 1.44 சதவீதமாக, 5.82 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இந்திய கம்யூ., - 0.54; மார்க்சிஸ்ட் - 0.54; பி.எஸ்.பி., - 0.38; ஆம் ஆத்மி - 0.50; மனித நேய மக்கள் கட்சி - 0.58; புதிய தமிழகம் - 0:65 சதவீத ஓட்டுகளைத்தான் பெற்றன. நோட்டா பெற்ற ஓட்டுகளில், இவர்கள், 40 சதவீதத்தை கூட பெறவில்லை.’  (https://www.dinamalar.com/news_detail.asp?id=2247176 )

இந்திய விடுதலைக்குப் பின் 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் சட்டசபை எதிர்க்கட்சியாகும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பின் இரண்டாக உடைந்தது. இரண்டு கட்சிகளும் வாங்கிய வாக்குகளைக் கூட்டினாலும் கூட, நோட்டாவிடம் தோற்றதானது ஆராய்ச்சிக்கு உதவும் முக்கிய சிக்னலாகும்.

மேலுள்ள செய்தியில், கீழுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

2016 தமிழக சட்டசபை தேர்தலில், 5.61 லட்சம் ஓட்டுகள் நோட்டாவில் பதிவாகின. இத்தேர்தலில், நோட்டாவுக்கு, 1.30 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. அதே சமயம், நாம் தமிழர் - 1.1; .தி.மு.., - 0.9; இந்திய கம்யூ., - 0.8; மார்க்சிஸ்ட் - 0.7; வி.சி., - 0.8; .யு.எம்.எல்., - 0.7; .மா.கா., - 0.5; புதிய தமிழகம் - 0.5 என, நோட்டாவை விட, குறைந்த ஓட்டுகளைத்தான் பெற்றன. ‘

அதைத் தொடர்ந்து நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பா.. நோட்டாவிடம் தோற்றது. ஆளுங்கட்சி பிளவு பட்ட நிலையில், தி.மு. டெபாசீட் இழந்தது.

மேலே குறிப்பிட்ட தோல்விகளில் பாடம் கற்ற கட்சிகள் எல்லாம், வரும் தேர்தலைச் சந்திக்க கீழ்வரும் போக்கில் கூட்டணி வைத்துள்ளதும், அந்த செய்தியில் வெளியாகி உள்ளது.

புதிதாக ஓட்டளிக்க வரும் இளம் தலைமுறையினர் பெரும்பாலும், நோட்டாவை நாடுவது அதிகரித்து வருகிறது. தங்கள் மீது மக்களுக்கு உள்ள கோபத்தை, அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளாத வரை, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவை பார்த்து அச்சப்படுவது தொடரும். இதற்கு பயந்து தான், நோட்டாவை விட குறைந்த ஓட்டுகள் பெற்ற கட்சிகள் எல்லாம், சத்தமின்றி பெரிய கட்சிகளில், முன்பே துண்டு போட்டு, ஐக்கியமாகி விட்டன என்பது தான் உண்மை.’

அவ்வாறு கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகள் வரும் தேர்தலில் நோட்டாவிடம் தோல்வி அடையாமல் தப்பிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் டெபாசீட் வாங்க முடியாத அளவுக்கு தோல்வியைச் சந்திப்பதிலிருந்து தப்ப முடியுமா? என்பது தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். ஒரு சில தொகுதிகளிலாவது டெபாசீட் இழக்க நேரிடலாம்

என்பது எனது கணிப்பாகும். வரும் தேர்தல் முடிவுகளில் என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்? என்பதைக் கணிக்க உதவும் ஆறு காரணிகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘அரசியல் பரமபதத்தில்(3); வரும் தேர்தல் முடிவுகளுக்குப் பின், கரையப் போகும் திராவிடக் கட்சி? https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

மேலே குறிப்பிட்ட வரிசையில் முதலாவதாக இடம் பெற்ற அரசியல் அமாவாசைகளும், கடைசியாக இடம் பெற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு உள்ளவர்களாக வெளிப்படுவார்கள். தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ள படித்த இளைஞர்களில் 'எல்கேஜி' (LKG) திரைப்பட கதாநாயகனைப் போல பலர் இருக்கக்கூடும், என்பது எனது கணிப்பாகும்.

அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்த்து அல்லது தீர்ப்பது போல நாடகம் நடத்தி, 'அம்மா' (ஜெயலலிதா) வாக்கு வங்கிக்கான வலைப்பின்னல் முற்றிலும் சீர் குலைந்து விடவில்லை என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க ஆதரவு வலைப்பின்னலில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் ஒப்பீட்டளவில் அதிக தன்மானத்துடனும், அவர்களின் மேய்ப்பவர்கள் அவர்களை அனுசரிப்பதில் ஆணவக்குறைவுடனும் இருப்பதும்;

தி.மு.க ஆதரவு வலைப்பின்னலானது அதற்கு எதிர்மாறாக இருப்பதும்;


எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. பன்மொழிப்புலவர் க. அப்பாதுரை, கி.ஆ.பெ.விசுவநாதன், டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற புலமையாளர்களை எல்லாம் முதல்வர் கருணாநிதி ஆணவத்துடன் அவமானப்படுத்தியதும்;


அவ்வாறு அவமதிக்கப்பட்டவர்களை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு மிகுந்த மரியாதையுடன் நடத்தினார் என்பதும்;

மேலே குறிப்பிட்ட இரண்டு வலைப்பின்னல்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளுடன் ஒப்பிடக்கூடியதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2017/04/ )
 

கடந்த கட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவையே முட்டாளாக்கும் அளவுக்கு, அ.இ.அ.தி.மு.க 'உள்குத்து' சதிகளில், தி.மு.க சந்தித்தை விட அதிகமாக சந்தித்தது. இந்த முறை அது போன்ற சிக்கலை அ.இ.அ.தி.மு.கவை விட தி.மு.க-வே அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே கடந்த சட்ட மன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஏமாந்த தி.மு.க-வானது, இந்த முறை இன்னும் மோசமாக ஏமாற வாய்ப்பிருக்கிறது.

அடிமட்டத்தில் மக்களுக்கு உதவும் 'நிரூபிக்கப்பட்ட' வலைப்பின்னலின்றி தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன் கட்சி வேட்பாளர்கள் எல்லாம், வரும் தேர்தலில் நோட்டாவிடம் தோற்பார்கள்.

‘அந்த’ அ.இஅ.தி.மு.க-வின் வலைப்பின்னலின் வலிமையானது கிராமத்திலிருந்து நகரம் பெருநகரம் என்ற போக்கில், சிற்சில வேறுபாடுகளுடன், வலிமை குறைந்த வாட்டத்திலேயே (negative Slope) உள்ளது. அவ்வாறு மிகவும் வலிமை குறைந்த பெருநகரமான சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், ...தி.மு. வாக்குகளை விட, தி.மு. வாக்குகளையே எளிதில் விலைக்கு வாங்க முடியும் என்பதை தினகரனின் வெற்றியானது வெளிப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா 'மர்மமான' முறையில் அப்பொல்லோவின் சேர்க்கப்பட்ட மறுதினமே சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவும், மத்தியில் ஆளும் பா..வும் கீழ்வரும் கேள்விகளை ஏன் எழுப்பவில்லை?

தமிழக முதல்வராக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமிராக்கள், ஆம்புலனஸ், மருத்துவ கண்காணிப்புகள் என்னவாயிற்று?

அப்பொல்லோவில் கண்காணிப்பு கேமிராக்கள், முதல்வருக்கான அரசின் மருத்துவ சிகிச்சை கண்காணிப்பு வழி முறைகள் எல்லாம் காற்றில் போக, ஆளுநரும், எதிர்க்கட்சித்தலைவரும், உரிய மருத்துவ பாதுகாப்பு முறையில் .சி.யூவில் இருந்த முதல்வரை கண்ணாடி வழியாக கூட ஏன் பார்க்க அனுமதிக்கவில்லை?

என்பது போன்ற பொதுஅறிவின் (Common Sense) அடிப்படையிலானகேள்விகளை எழுப்பியிருக்க வேண்டிய‌, எதிர்க்கட்சியான தி.மு.கவின், மத்தியில் ஆளும் பா..கவின் மறைமுக ஒத்துழைப்பு இன்றி, ஜெயலலிதா 'மர்மமான' முறையில் மரணமடைந்திருக்க வாய்ப்புண்டா?

என்ற கேள்விகள் எல்லாம் மேலே குறிப்பிட்ட பிரிவினரிடம் எந்த அளவுக்கு ஆழமாக வேர் பிடித்திருக்கிறது? என்பதற்கு விடையாகவே, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவானது, தி.மு.கவிற்கும், பா..கவிற்கும் நம்பமுடியாத தண்டனையானது.

நான் ஆர்.கே.நகர் வாக்காளராக இருந்திருந்தால், முதல்முறை ஒத்திவைக்கப்படாமல் தேர்தல் நடந்திருந்தால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஏற்படுத்தியிருந்த கோப அலையில்,  மதுசூதனனுக்கு வாக்களித்திருப்பேன். அதன்பின் .பி.எஸ் முதல்வராகி, அவர் தலைமையில் அரசும் கட்சியும் தொடர்ந்திருந்தால், அந்த கோப அலையின் தொடர்ச்சியாக, ஒத்தி வைக்கப்பட்டு, பின் நடந்த தேர்தலிலும் அதே போல் வாக்களித்திருப்பேன். போனமுறை தினகரனுக்கு ஆதரவாக வலம் வந்த .பி.எஸ் குழுவினர் இந்த முறை மதுசூதனனுக்கு ஆதரவாக வந்ததால், நான் நோட்டாவிற்கு தான் வாக்களித்திருப்பேன். நான் பணக்கஷ்டத்துடன் வாழும் பிரிவினராயிருந்து, வாக்குக்கு ரூ 10,000 தினகரன் (சசிகலா படத்தைத் தவிர்த்து வாக்கு கேட்ட‌) கொடுத்திருந்தால், குக்கருக்குத் தான் வாக்களித்திருப்பேன்.’ என்பதையும்;

தமிழ்நாட்டில் 'இந்துத்வா' எதிர்ப்பானது, 'திராவிட' அரசியல் கொள்ளை குடும்பங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக

அது தமிழ்நாட்டில் இந்துத்வா வளர உதவி செய்து வந்துள்ளது

அதையும் மீறி, தமிழ்நாட்டில் மோடி மீது 2ஜி தீர்ப்பிற்குப் பிறகு, 'மோடி மீதான வெறுப்பு அலை'யானது, மீடியாவின் செல்வாக்கு வளையத்தில் வராதவர்கள் மத்தியில் 'அதிவேகமாக' வளர்ந்து வரும் அளவிற்கு;

மீடியாவின் செல்வாக்கு  வளையத்தில் உள்ள சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் மத்தியில் வளர்வதாக தெரியவில்லை.’ என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியைக் கலைத்து, தி.க/தி.மு.க தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது. 
(‘தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி?’;http://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html)     

'பண நீக்கம்' மூலம் வந்த துயரங்களை, மோடி ஊழலை ஒழிப்பார் என்று நம்பி பொறுத்துக் கொண்டவர்கள் எல்லாம், மோடி ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான டெலிபோன் கேபிள் இணைப்புகளை துணிச்சலுடன் பூமியில் புதைத்து, நீண்ட காலம் அரசை முட்டாளாக்கியது உள்ளிட்ட‌ மெகா ஊழல் குற்றவாளிகள் எல்லாம் அடுத்து அடுத்து விடுதலை ஆகி வருவதானதும், மீனவர் பிரச்சினையை மோடி தீர்ப்பார் என்ற நம்பிக்கையும் சீர் குலைந்து வருவதும், ஜெயலலிதாவின் மர்ம மரணம் விளைவித்த கோபத்துடன் சேர்ந்து, தமிழக பா.ஜ.கவை உச்சத்தில் (maximum) வெறுப்பவர்கள் ( அவர்களில் பலர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், தேர்தல் முடிந்தும் மோடியின் ஆதரவாளர்களாக பயணித்தவர்கள்) எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 2 இடங்களை தமிழ்நாட்டில் வென்றது; தி.மு.க ஒரு இடத்திலும் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவு வெற்றிக்கு காரணமான மோடி இந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார்? என்பதானது வரும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மூலம் வெளிவரும். அடுத்து மோடி தான் பிரதமர் ஆவார் என்பதும் எனது கணிப்பாகும். எனவே தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் தீர்ப்பிலிருந்து பாடம் கற்று, நெருக்கடி கால இந்திரா காந்தி துணிச்சல் பாணியில், நெருக்கடி காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்திய அளவுக்காவது மோடி கட்டுப்படுத்துவார், என்றும் நம்புகிறேன். 

தமிழ்நாட்டில் ஊழலை மோடி ஒழிக்கவில்லை, என்பது உள்ளிட்ட இன்னும் சில காரணங்களால் மோடிக்கு எதிர்ப்பான வாக்குகள் எல்லாம், காங்கிரஸ் தி.மு. கூட்டணிக்குப் போக வாய்ப்பில்லை. வாக்குக்கு ஆர்.கே.நகர் பாணியில் விற்பதும், நோட்டாவுமே அந்த வாக்குகளை அள்ளுவார்கள், என்பதும் எனது கணிப்பாகும்.

வெற்றிகளின் ஊடே, இரு அணிகளிலும் நோட்டாவிடம் தோற்கா விட்டாலும், சிலராவது டெபாசீட் இழக்க நேரிடும்.

இரு அணிகளிலுமே வேட்பாளர்கள் எல்லாம் இயன்றவரை தேர்தல் கமிசனை முட்டாளாக்கி ஆர்.கே.நகர் பாணியில் வாக்குகளை வாங்க முயற்சிப்பதையும், அவ்வாறு வாக்குகளை விற்க மனமில்லாதவர்கள் நோட்டாவை நாடுவதையும், வீட்டுக்குள் முடங்குவதையும் குறை சொல்ல நமக்கு யோக்கிய்தை உண்டா? என்ற சுய விமர்சனத்திற்கு நம்மை நாம் உட்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமும் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.

ஜெயலலிதா இறந்தது முதல், சிறை செல்லும் வரை, எந்த அரசு பதவியிலும் இல்லாத சசிகலாவை தரிசித்த தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், அறிவுஜீவிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களில் எவராவது, சிறையில் இருக்கும் சசிகலாவை தரிசித்தார்களா? தரிசிக்கவில்லையென்றால், ஏன் தரிசிக்கவில்லை? சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, மீண்டும் அதே செல்வாக்கினை வெளிப்படுத்த முடிந்தால், வெட்கமில்லாமல் மீண்டும் அவர்கள் எல்லாம் சசிகலாவை தரிசிப்பார்களா? 'அடுத்த முதல்வராவார்' என்ற நம்பிக்கையில், 'போட்டி போட்டு' ஸ்டாலினை இன்று தரிசிப்பவர்களில் யார், யார், அடுத்து வரும் பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் பாணியில் தி.மு. தோல்விகளை சந்திக்க நேர்ந்தால், ஸ்டாலினை கைவிட்டு, அடுத்த முதல்வராகும் வாய்ப்புள்ளவருக்கு 'வாலாட்டி' நெருக்கமாக முயல்வார்கள்
(‘நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா?’ (1); http://tamilsdirection.blogspot.com/2018/12/narcissistic-personality-disorder.html)

ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? அந்த அருகதை உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்காமல், ஊழலற்ற ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வாய்ப்புண்டா?

No comments:

Post a Comment