Friday, April 12, 2019

நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்' (2) 



புதிய சமூக தள விளைவுக்கான திரை இசை 'சிக்னல்'



ஒரு சமூகத்தில் இயல்பான கோபங்களையும் எதிர்ப்புகளையும், ஆட்சி அதிகாரம் மற்றும் சமூக செல்வாக்குகள் ஆகியவற்றின் துணையுடன் 'தடுப்புச் சுவர்கள்' (insulation) வலிமையாகத் தடுக்கும் போது, திரைப்படம், இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளில், ஆட்சி அதிகார, சமூக அதிகாரஎதிர்ப்புப் (anti-establishment) போக்கில் கருப்பொருள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எந்த அளவுக்கு சமூக அக்கறையுடனும், படைப்பாற்றலுடனும் மக்களின் ரசனையுடன் ஒத்திசைவாக (Resonance), அவை உருவாக்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் வெளிப்படும்.

தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், வளர்ந்து வரும் சமூக விசைகள் (Social Forces) யாவை? தேய்ந்து வரும் சமூக  விசைகள் யாவை? என்ற ஆராய்ச்சிக்கு, இன்று வளர்ந்து வரும், மற்றும் தேய்ந்து வரும் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை ஆராய்வது பலன் தரும். (‘'சூது கவ்வும்' திரைப்படத்தின் அடுத்த கட்ட வெற்றியாக‌ 'LKG'’ ; http://tamilsdirection.blogspot.com/2019/02/normal-0-false-false-false-en-us-x-none_26.html

உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'கொலை வெறி' பாடல் தொடர்பாக; (https://en.wikipedia.org/wiki/Why_This_Kolaveri_Di )

'இசைக்கான இலக்கண நெறிமுறைகளை மீறி, ஆட்சி அதிகார எதிர்ப்பு (anti-establishment) போக்கில் வெளிப்பட்ட பாடல் இதுவாகும். அவ்வாறு வெளிப்படும் இசை உள்ளிட்ட கலைகளில், இசைப்பதர்களின் ஊடே இசை மணிகள் இருப்பதையும் இப்பாடல் வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஆட்சி அதிகார எதிர்ப்பு கலகப் போக்கில், பதர்களின் ஊடே, மணிகளான மனிதர்கள் இருக்கும் வாய்ப்பையும் இதன் மூலம் பெறலாம். பதர்களிலிருந்து மணிகளான மனிதர்கள் பிரியும் சமூக தளவிளைவுப் போக்கே (Social polarization) அடுத்த கட்ட வளர்ச்சி/மீட்சி போக்காக அமையும்.' (‘நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்(1)'’; http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

அதிகார எதிர்ப்புப் போக்கில் துவங்கும் இயக்கத்திலும் பதர்களின் ஊடே மணிகள் இருக்கும். அந்த இயக்கம் சரியான கொள்கைகளுடன் சரியான திசையில் பயணிக்கும் போக்கில், சமூகத் தளவிளைவின் மூலமாக பதர்கள் தனியாகவும், மணிகள் தனியாகவும், பிரியும் போக்கும் வெளிப்படும். அதற்கு மாறாக, திரிந்த கொள்கைகளின் அடிப்படையில், அந்த போக்கினைப் பற்றிய புரிதலின்றி, 'தடம் புரண்டு' பதர்களுடன் மணிகளும் சேர்ந்து பயணிக்கும் போக்கில், கீழ்வரும் விளைவு வெளிப்படும்.

கால ஓட்டத்தில் சமூகத்தில் மணிகளின் மேற்பூச்சில் மக்களை ஏமாற்றி, பதர்களின் கூட்டம் சமூக வலிமை பெறும். அவ்வாறு பதர்களின் சமூக வலிமையானது வளரும் வேகத்தில், மணிகளின் சமூக வலிமையானது குறையும்.

அது சிதைந்த சமூக தள விளைவாக முடியும்.

அதன் முடிவில் பதர்களின் மேற்பூச்சாக செயல்பட்ட மணிகளும் கருகாகி உதிரும் அல்லது வெளியேறி மணிகளின் கூட்டத்தில் ஐக்கியமாகும். அந்த நிலையில் பதர்களின் 'யோக்கியதையானது', முதலில் சாமான்யர்கள் வாழும் மைக்ரோ உலகத்தில் தான் அம்பலமாகத் தொடங்கும். தாம் வாழும் இடம், பணியாற்றும் இடம், ஆகிய மைக்ரோஉலகத்தில், 'பதராக' வாழும் மனிதர்கள் எளிதில் அம்பலமாகி விடுவார்கள். அது தெரிய வாய்ப்பில்லாத அளவுக்கு மீடியாக்கள் 'ஒத்துழைக்கும்'(?) வரையில் தான், மேக்ரோ உலகில், மீடியா வெளிச்சத்துடன் அவர்கள் புகழுடன் இன்று வலம் வர முடியும். ஆனால் டிஜிட்டல் யுகத்தில், 'அந்த' ஒத்துழைப்பும் அம்பலமாகி, 'அந்தந்த' மீடியாக்களின் நம்பகத்தன்மையும் சிதைந்து வருகிறது.

அந்த ஆபத்தை உணர்ந்த மேக்ரோ உலக 'மேய்ப்பர்கள்' எல்லாம், தமது சமூக வலிமையின் மூலமாக, மேக்ரோ உலக தடுப்புச் சுவரை (insulation) இயன்ற வரை வலிமையாக்கி, 'கிடைத்த வரைக்கும் லாபம்; பலிக்கும் வரையில் முயற்சிப்போம்' என்ற திசையில் பயணிப்பார்கள். அந்தப் போக்கானது, சமூகத்தில் மூச்சுத் திணறலை அதிகரிக்கச் செய்யும். (http://tamilsdirection.blogspot.com/2018/10/ ). 

'அந்த' சமூக மூச்சுத் திணறலானது, மேக்ரோ உலகில் தன்மானத்துடன் வாழ்பவர்களை அதிக அளவில் பாதிக்கும். 'அந்த' சமூக மூச்சுத் திணறலானது, ஒப்பீட்டளவில் மைக்ரோஉலகில் குறைவாக இருக்கும்.

மேற்குறிப்பிட்டவாறு பதர்களின் முகமூடியாகக் 'கவர்ச்சித் தமிழ்' 'மயக்கும்'(?) போதையாகப் பயன்பட்ட போக்கில், திரையிசையில் தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எல்லாம் பாடல்களில் ஆங்காங்கே சிதைவுறும் போக்கு அரங்கேறியதா? வைரமுத்துவின் வெற்றிக்கு அதுவே அடித்தளமானதா? பின் பதர்களின் மேற்பூச்சாக செயல்பட்ட மணிகளும் ருகாகி உதிர்ந்து, அந்த நிலையில் பதர்களின் 'யோக்கியதையானது' முதலில் மைக்ரோ உலகத்தில் தான் அம்பலமானதா? அதன் தொடர்ச்சியாக வைரமுத்து போன்ற கவிஞர்களின் வீழ்ச்சி தொடங்கியதா? தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எல்லாம் பாடல்களில் சிதைவுறாமல் எழுதும் கவிஞர்களின் எண்ணிக்கையும் வளர, அதுவே காரணமானதா? என்று விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது. திரையிசையில் தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எல்லாம் பாடல்களில் ஆங்காங்கே சிதைவுறும் போக்கு பற்றிய கவலை இல்லாததற்கும்,

தமிழ்நாட்டில் ஏரிகள், ஆறுகள், கிரானைட் மலைகள், தாது மணல் உள்ளிட்ட இன்னும் பல இயற்கை வளங்கள் எல்லாம் சுயநல குடும்ப அரசியல் மேய்ப்பர்களின் தலைமைகளில் ஊழல் வலைப்பின்னல்கள் மூலம் சீரழிந்தது பற்றிய கவலை இல்லாததற்கும்;


தொடர்பு இருப்பதையே 'நாலடியார்' சுட்டிக்காட்டியது.

(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_14.html) மேற்குறிப்பிட்ட போக்கில் முக்கிய பங்கு வகித்த வைரமுத்துவும், கீழுள்ள போக்கில் முக்கிய பங்கு வகித்த தி.மு.க தலைவர்/முதல்வர் கருணாநிதியும் நெருக்கமான நண்பர்கள் ஆனதும் அந்த வகையில் தான். 'அந்த' சங்கமம் தொடர்பாக பாடம் கற்று (சசிகலா) நடராஜனும், வைரமுத்து பாணியில் 'புத்துசாலிகளாக'(?) 'பிரபல' பேச்சாளர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், 'பொங்கல் விழாவில்'(?) தமிழ்நாட்டு மக்களையே முட்டாளாக்க முனைந்ததும் 'அந்த' வகையில் தான். அவ்வாறு பயணித்தவர்களை எல்லாம், முட்டாளாக்கும் இயற்கையின் போக்கில் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது, என்பதும் எனது கணிப்பாகும்.

கண்ணதாசனுக்குப் பின், திரை இசைப்பாடல்களில் சுருதி சுத்தமான எழுத்துக்கள் அடங்கிய திசையில் சொற்கள் தடம் புரண்டு, புதுக்கவிதை திறமைகளுடன்(?) வைரமுத்து பயணித்த திசையில், மேற்கத்திய மோகத்தில் சிக்கிய ரசனையும், எந்த அளவுக்கு வினையூக்கி (catalyst) ஆனது? என்பதும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய நேரமும் வந்து விட்டது

அந்த போக்கில், பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாக உச்சரிக்கும் போக்கானது, வெற்றி பெற்ற சிறிய பட்ஜெட் படங்களில் செல்வாக்கு பெற்றது. கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் அந்த போக்கானது நுழைந்து வருகிறது. அதில் மிக முக்கிய சமூக சிக்னலை வெளிப்படுத்தும் வகையில், 'பேட்ட' திரைப்படப் பின்னணி இசையில் கீழ்வரும் போக்கு வெளிப்பட்டது.

'பேட்ட' திரைப்படத்தில் பின்னணி இசையாக 'பல' பழைய - சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட‌- திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்திய அளவுக்கு, வேறு எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. திரைப்படத்தில் முக்கியகாட்சிகளில் வெளிப்படும் கருத்து மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்புடன் பின்னணி இசையானது (இசையில் 'அமைதியும்'-rest- இசையாகும்)  ஒன்றி ('சிவணி' – resonance in merging) வெளிப்படும் வீச்சின் வலிமையானது, ரசனையின் உச்சிக்குப் பார்வையாளர்களைக் கொண்டு சேர்க்கும். அந்த முயற்சியில் 'பேட்ட' படத்தில் பின்னணி இசையாகப் பயன்பட்ட பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.  

1970களின் பிற்பகுதியில் ஆங்கிலவழிப் பள்ளிகள் புற்றீசல் போல, அதிகரித்த வேகத்தில், தமிழ்நாட்டு இசை ரசனையில் மேற்கத்திய மோகம் ஆதிக்கம் செலுத்திய சூழலே, வைரமுத்து திரை இசையில் ஆதிக்கம் செலுத்த வழி வகுத்ததா? என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்துவது, திரை இசைத்தமிழுக்கு நல்லதல்ல

இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுகின்றன. அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருகின்றன.

தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் துணையுடன், மேற்கத்திய மோக ஆதிக்கத்தில், விளைந்தரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்தால், அது தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனையில் இருப்பதன் வெளிப்பாடாகும். எனவே திரை இசைத் தமிழை மீட்பதற்கான காலமும் இதுவாகும். (‘திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில்  மீண்டும் பயணிக்குமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/11/3-social-forces.html )

மேற்குறிப்பிட்ட கொலைவெறிப்பாடலில் இடம் பெற்ற ஆங்கில மற்றும் தமிழ்ச் சொற்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் 'வெண்மை' உள்ளிட்ட மேல்தட்டு மேக்ரோ உலகமேற்கத்திய மோகத்தினைக் கிண்டல் செய்து, தமிழ்நாட்டில் மைக்ரோ உலகக் கீழ்த்தட்டில் உள்ள இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளன. கூடுதலாக, வெவ்வேறு வகையிலான ஏக்கங்களுடன் வாழும், மேல்த்தட்டு உள்ளிட்ட‌, அனைத்து மட்ட மக்களும், குறிப்பாக இளைஞர்களும் இருப்பதைப் படம் பிடித்து காட்டியுள்ளன.அது தொடர்பாக, மேலும் ஆய்வு செய்ய வேண்டிய பாடல் இதுவாகும். அது மட்டுமல்ல, அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாடலில் வாய்ப்பாட்டிற்கும், கருவி இசைக்குமான சுர அமைப்புகள் நன்கு பொருந்தியதும், இப்பாடலின் உலக வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ஆங்கிலவழிக்கல்வி செல்வாக்கினை வளர்க்கும் வகையில், மக்களிடமிருந்து அந்நியமாகி பயணிக்கும் 'தனித்தமிழ்' முயற்சிகள் உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ் மொழியானது, தனது தகவல் பரிமாற்ற வலிமையை, தமிழும் ஆங்கிலமும் கலந்த 'தமிங்கிலீசில்', 'அதிவேகமாக' இழந்து வருகிறது.   தகவல் பரிமாற்றம் (communication) கோணத்தில், தமிழின் மரணப்பயணம் குறித்து வெளிப்பட்டுள்ள அபாய அறிவிப்பாக, இப்பாடலின் வெற்றி அமைந்துள்ளது. (‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’; http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html)

2011-இல் வெளிவந்தகொலைவெறிப் பாடல் வெற்றிக்குப் பின் கீழ்வரும் போக்கும் வெளிப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினைகளில் இருந்து திரைக்கதைக்கான களத்தையும், வசனங்களையும் உருவாக்கி வெற்றி பெற்ற 'சிறிய பட்ஜெட்' இயக்குநர்கள் எல்லாம், ரஜினி, அஜீத், விஜய் போன்ற இன்னும் பல பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் கொள்ளையர்களின், ஊழல் அதிகாரிகளின் குடும்பத்தினர் எல்லாம் குற்ற உணர்வின்றி ரசிக்க முடியாத அளவுக்கு, வெற்றி பெறும் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்று வருகின்றன.

சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.


1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.’ என்பதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்

திரைப்படங்களில் 'குழந்தை அமாவாசைகள்' இடம் பெறும் காட்சிகளை உருவாக்கத் துணை புரியும் வகையில்;

வாழ்க்கையில் வெற்றிக்கான(?) இரகசியங்களைக் கடைபிடிக்கும் 'வாழ்வியல் புத்திசாலிகள்' குடும்பப் பிள்ளைகள் எல்லாம், கூடுதலாக தமது பெற்றோர்கள் 'வாலாட்டி' காரியம் சாதிக்கும் 'செல்வாக்குள்ள' மனிதர்களுக்கு, 'அந்த' குழந்தைகளும் வாலாட்டும் 'குட்டி நாய்களாக' பயிற்சி பெறும் கூத்தும் தமிழ்நாட்டில் நடக்கிறது. அதனால் 'ஏற்கனவே திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு' நோயில் வளரும் அக்குழந்தைகளுக்கு, கூடுதலாக 'செல்வாக்குக்கு வாலாட்டும்' பண்பும் வளர வாய்ப்புள்ளது. 'அந்த' குழந்தைகள் எல்லாம் பெரியவர்கள் ஆன பின்பு, உற்றமாயிருந்தாலும், சுற்றமாயிருந்தாலும், பணமிருந்தால் மட்டுமே மதித்து வாலாட்டுவதும், இல்லையென்றால் அவர்களைக் கீழாக ஒதுக்கி வாழ்வதும், 1990களில் இருந்து தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. நானறிந்த வரையில், அவை பெரும்பாலும் தி./தி.மு. சார்பு மற்றும் கிறித்துவ குடும்பங்களில் தான், ஒப்பீட்டளவில் அதிகம் வெளிப்பட்டு வருகின்றன. அத்தகையோர் வாலாட்டும் நபர்களுக்கு, 'அவர்களின் (குழந்தைகளைப் போலவே) சுயலாபத்திற்காக', ஏமாந்தால் நம்மையும் வாலாட்ட வைத்து விடுவார்கள், என்பதும் எனது அனுபவமாகும். அவ்வாறு தமக்கு வாலாட்டுவதை ரசிப்பவர்கள், 'காரியம் சாதிக்க' தமக்கு மேலுள்ளவர்களுக்கு வாலாட்டுவதோடு, எந்த இழிவான சமரசங்களுக்கும் உடன்பட்டு, 'செல்வம், செல்வாக்கில்' வெற்றியாளர்களாக(?) வலம் வந்ததையும் நான் அறிவேன். எனவே அத்தகையோர் 'முகத்தில் முழிப்பதே பாவம்' என்று கருதி, அவர்களை ஒதுக்கியே பயணித்து வருகிறேன்.

அந்த அளவுக்கு பதர்களின் ஆதிக்கத்தில், அதற்கேற்ற ரசனையின் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சிக்கியிருந்தது; அது திருப்புமுனையில் இருப்பதானது, என்னைப் போன்ற பலரின் மூலமாக வெளிப்பட்டு வருகிறது. தமிழ்நாடானது எவ்வாறு ரசனையில் திருப்பு முனையில் உள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் .வெ.ராவும் அண்ணாவும், பொது அரங்கில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் அநாகரீகத்தைத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் பாரதிதாசனும் இன்னும் மோசமாக்கினார்கள். அதன் வளர்ச்சியாக, நகைச்சுவை கலந்த அருவருக்கத்தக்க அரசியல் ஆபாசப் பேச்சாளர்கள் காலம் வந்தது. 'அந்த' ரசனையானது இன்றைய பெரிசுகளுடன் முடியும் போக்கில் உள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் 'சீர்திருத்தம், புரட்சி' என்ற பேரில் அதிகார எதிர்ப்புப் போக்கில் துவங்கிய கட்சிகளில், பதர்களின் ஊடே மணிகளும் இருந்தன. வெறுப்பு அரசியலில் திரிந்த கொள்கைகளின் அடிப்படையில், சமூக இயக்கவியல் இயற்கையின் போக்கில் இருந்து தடம் புரண்டு, அந்த கட்சிகள் பயணித்தன. அந்த போக்கினைப் பற்றிய புரிதலின்றி, பதர்களுடன் சேர்ந்து மணிகளும் பயணித்தன. வெறுப்பு அரசியலோடு பின்னிப் பிணைந்து ஆதாய அரசியல் வளர்ந்த போக்கில், பதர்களின் மேற்பூச்சாக பயன்பட்ட மணிகளும் கருகாகி உதிர்ந்து விட்டன. எஞ்சிய மணிகளாக இருந்த மனிதர்களும் தன்மானத்தைக் காக்க ஒதுங்கி விட்டனர்.

அவ்வாறு ஒதுங்கியவர்களில், முதல்வர் பதவியிலிருந்து தாமாகவே விலகியஒமந்தூர் ரெட்டியாரைப் போல, சாமான்யர்களின் மைக்ரோஉலகத்தில் இன்று வாழ்பவர்கள் எல்லாம் மீட்சிக்கான சமூகப் பொறியியல் வினை ஊக்கிகளாக (Social Engineering Catalyst) எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளர்ந்து வருகிறார்கள்.

'அரசியலும் சமூகமும் அவலப்பட்டு இருக்கையில் தனி மனிதன் நேர்மை பலனளிக்குமா? அதனால் தான் நேர்மை ஒரு முட்டாள்தனம் ஆகிறது' என்ற கருத்தானது;

'அந்த' தனி மனிதர் தன்மானத்துடன் தமிழ்நாட்டில் மேக்ரோ உலகத்தில் வாழும் போது, அந்தகோமாளிவிபத்து நேரிடலாம்.

மேக்ரோஉலகத்தில் பணம் சம்பாதிக்க, எவர் காலிலும் விழவும், விழுந்த காலையே வாறவும், அரசு மற்றும் நீதித்துறைகளில் ஊழல் வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அல்லது அத்தகைய ஊழலுக்கு தரகர்களாகவும், இன்னும் அது போன்ற வழிகளில்;

தமிழ்நாட்டில் 'தன்மானம்' என்ற கோவணம் இழந்து வாழ்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது போன்ற மனிதர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக மாநில அளவில் செல்வாக்குள்ள மேக்ரோ உலகில் வாழ்வதை ஒரு முறையான ஆய்வு வெளிப்படுத்தினால் வியப்பில்லை
(‘தமிழ்நாட்டில் மைக்ரோஉலகம் கோவணம் கட்டியவர்கள் ஊராகவும், மேக்ரோஉலகமானது அம்மணங்களின் ஊராகவும்?’; https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில்இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' - அதே போக்கில் பயணிக்கும் தேசியக் கட்சிகளின் - ஆதரவாளர்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது.’ 

அவ்வாறு வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கு என்பதே, அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக மூச்சுத்திணறலை (Social Suffocation) உணரத் தொடங்கியுள்ளதன் 'சிக்னல்' ஆகும். அத்தகையோர் எல்லாம் நல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூகவெளி (Social Space) நோக்கி எவ்வாறு பயணித்து, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html  )

ஆதாய அரசியல் ஒழியும் வரை, மேக்ரோ உலகமானது அம்மணங்களின் ஊராகவே நீடிக்கும். மக்கள் ஆதரவில் மேக்ரோஉலகில் ஒரு இயக்கம் தோன்ற வழியில்லை

ஆனால் ஆதாயத்திற்கு இடமின்றி சொந்த காசை, சொந்த உழைப்பை செலவு செய்பவர்கள் முயற்சியில், மைக்ரோ உலகில் தோன்றும் இயக்கம் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் காலம் கனிந்து வருகிறது

'வழிபாட்டுப் போதையில்' வளர்ந்த ரசனையில், திரைப்படப்பாடல்களில் ஆங்காங்கே எழுத்தொலிகள் சிதைந்த போக்கானது முடிவுக்கு வந்து விட்டது. 'அந்த' சீரழிந்த போக்கிலிருந்து விடுதலையான பாடல் எழுத்துக்கள் எல்லாம் நிகழ்கால சமூக சூழலுக்கேற்ற புதிய இசை உருவாகும் நெருக்கடியைத் தூண்டி வருகின்றன. இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுவதும், அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருவதும், அதன் முன்னறிவிப்பாகும்.  அந்த' புதிய இசை மலரும் காலமும், ஆதாய அரசியல் மரணித்து, புதிய அரசியல் போக்கு மலரும் காலமும், பின்னிப்பிணைந்து நெருங்கி வருகின்றன.

'அதிவேகப் பணக்காரர்கள்' மைக்ரோ உலகில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. எவரைப் புகழ்ந்தாலும், 'வாலாட்டும் சமூக நாய்களாகவும்'; எவரைக் கண்டித்தாலும், 'வேண்டிய எலும்புத்துண்டு கிடைக்காத கோபத்தில் குலைக்கும் நாய்களாகவும்'; வலம் வருகையில், அத்தகையோரை, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும் நபர்கள் எல்லாம், இயன்றவரை தவிர்த்து வாழ்வது தானே, புத்திசாலித்தனமாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2017/08/under-current-decisive.html) 'பிரபல' பேச்சாளர்களும், கவிஞர்களும் 'அரசியல் பொதுவாழ்வு வியாபாரிகளை' எல்லாம் தலைவர்க‌ளாகப் பாராட்டிய 'வீடியோ'க்கள் எல்லாம், 'அந்த' தலைவர்கள் இடத்தில், மறைந்த ரவுடி வீரமணியின் முகத்தை நிரப்பி, வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை வீடியோக்கள் வலம் வரும் காலமும் நெருங்கி விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html)  

மக்களின் உதவியுடன் தனியார்ப் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் செயல்படும் அரசுப்பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. அர்ப்பணிப்போடு மனித தெய்வங்களாக பணியாற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  சுயலாப நோக்கின்றி வாழ்பவர்களுக்கு மைக்ரோஉலகில் செல்வாக்கானது நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஊழலையும், அரசியல் கொள்ளையர்களையும், அவர்களின் அடிவருடி அறிவுஜீவிகளையும், நிர்மூலமாக்கும் 'சமூக சுனாமி' வரப் போவதை உணர்த்தும் முன் அபாயஅறிகுறிகளாகவே (Warning signals), இவை எல்லாம் வெளிப்பட்டு வருகின்றன;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும். எனவே தமிழ்வழிக்கல்வியின் (எனவே) தமிழின் மீட்சி தடுக்கமுடியாததாகி விடும்

No comments:

Post a Comment