Wednesday, April 24, 2019

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையின் தாழ்வானநிலை? மாற்றுவதற்காகத் தொடங்கியுள்ள முயற்சிகள்! (3)   



    நோவாம் சோம்ஸ்கியும், தொல்காப்பியமும்



அண்மையில் சிங்கப்பூரில் The Centre for Singapore Tamil Culture (CSTC) சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 'Origins of Tamil Classical Music’ என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அந்த உரையில், இசை தொடர்பான தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் வெளிவந்த காலம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருப்பதையும், அத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இல்லாத இசை தொடர்பான அனைத்து கல்வெட்டுகளும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதையும் விளக்கினேன்; இடையிடையே வினாக்கள் எழுப்புவதையும் வரவேற்று. தொடர்ந்து எனது உரையில், எவ்வாறு உலக மொழிகளில் உள்ள இசைப்பாடல்களுக்கான இசை மொழியியல் (Musical Linguistics) அடிப்படையில் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது? என்பதையும்

தொல்காப்பியத்தில் வரும்இசைஎன்ற சொல்லினை, தவறுதலாக 'ஒலி' என்று பொருள் கொண்டதால், உரையாசிரியர்களின் விளக்கங்களில் அது இருளில் சிக்கியதையும் விளக்கினேன்
(https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=13s)

"மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவினை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தீர்களா?" என்ற வினா எழுப்பப்பட்டது.

அம்முடிவானது, 'உலகில் வளர்ந்து வரும் 'இசை மொழியியல்' (Musical Linguistics) துறையில் இடம் பெறத்தக்கது' என்று, 'நோவாம் சாம்ஸ்கி' எனக்கு எழுதிய மடலைக் குறிப்பிட்டு சிறு விளக்கம் கொடுத்தேன். கூடுதலான தகவல்களை இந்த பதிவில் வெளிப்படுத்துகிறேன்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு இதழ்கள், The Journal of Sanskrit Academy, Sangeet Natak, கணையாழி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள், ‘Ancient Music Treasures- Exploration for New Music’ (2006) , 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (புத்தகம் ‍ 2009), 

online research journal, http://musicresearchlibrary.net/omeka/  
search: S.A.VEERAPANDIAN

http://www.ulakaththamizh.in/journal


 



http://tamilsdirection.blogspot.sg/  பதிவுகள்;

தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசையியல்(Musicology) தொடர்பான சொற்களில் பெரும்பாலானவைக்கும், யாப்பிலக்கணம் தொடர்பான இசையியல் சொற்களுக்கும், உரையாசிரியர்களின் விளக்கங்களில் இருந்த குறைபாடுகளை எல்லாம், மேலே குறிப்பிட்ட வெளியீடுகளில் உரிய சான்றுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளேன்.

எனது கண்டுபிடிப்புகளை பாராட்டியவர்களில் கீழ்வருபவர்கள் எல்லாம் முக்கிய பொறுப்புகள் வகித்தவர்கள் ஆவர்;

பேரா.வி.ஜெயதேவன் ‘Oxford English-English-Tamil Dictionary’- Consultant editor, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் மறுபதிப்பு குழுவின் தலைவர், தமிழ்த்துறை தலைவர்;
முனைவர்.வீ.அரசு,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை தலைவர்;
முனைவர் பொற்கோ சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;
முனைவர் .இராசேந்திரன், தமிழ்ப்பல்கலைகழக துணை வேந்தர், ஆசிரியர் 'கணையாழி' இதழ்;
முனைவர் ஆர்.தாண்டவன், சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;

தமிழ் தொடர்பான படிப்புகளில் எனது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்திய குறைகளை சரி செய்ய‌, மேலே குறிப்பிட்ட நபர்கள், என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்? என்பதானது அவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம், என்றாலும்;

தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இளங்கலை முதுகலை பயிலும் மாணவர்கள் எல்லாம்;

1996 முதல் நான் வெளியிட்டு வரும் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளை எல்லாம் இன்றுவரை கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்ட பாடப்புத்தகங்களின் துணையுடன் யாப்பிலக்கணம் பயிலும் அவலத்திற்கு, மேலே குறிப்பிட்ட நபர்களை எல்லாம் நான் குறை சொல்ல மாட்டேன்.

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்திய போக்குகள் தொடர்பான எனது அனுபவங்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வடித்த, தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடங்களை உருவாக்கியகணபதி ஸ்தபதி, என் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், என்னை 'மயன் வாரிசாக' பாராட்டியிருந்த பின்னணியில்.

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் தி.மு. தலைவர் மு.கருணாநிதியின் மரணம் ஆகியவற்றிற்குப் பின் தமிழுக்கு கேடான அந்த போக்குகள் எல்லாம் முடிவை நெருங்குகின்றன, என்பதும் எனது கணிப்பாகும்.. எனவே எம்.ஜி.ஆர் கேட்ட கேள்விக்கான விடையாக, ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்தி இருளில் நீடித்த, ', ரி, , , , , நி  தமிழே' என்ற கண்டுபிடிப்பும், அதன் தொடர்ச்சியான இருளில் நீடித்த‌, அரச்சலூர், குடுமியான் மலை இசைக்கல்வெட்டுகள் தொடர்புடைய எனது கண்டுபிடிப்புகளும், வெளிச்சத்திற்கு வருவதானது தொடங்கி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/07/)

அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில், சிலப்பதிகாரம் (அரங்கேற்று காதை) இசை தொடர்பாக முன் நிறுத்திய 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' செயல்நுட்பம் மூலமாக, இது போன்ற ஆய்வுகள் இனி வளர வாய்ப்புகள் இருப்பதையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான எனது ஆய்வானது ‘Musical Phonetics in tholkAppiam’ என்ற தலைப்பில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில்வெளிவந்துள்ளது. (2013 December- The Journal of the International Institute of Tamil Studies, Chennai; 
http://www.ulakaththamizh.in/journal)

இன்று நவீன மொழியியல் ஆராய்ச்சித் துறையில் (Modern Linguistics), உலகப்புகழ் பெற்றவராக நோவாம் சோம்ஸ்கி (https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky ) உள்ளார். எனவே அவரின் பார்வைக்கு கீழ்வரும் மடலை அனுப்பினேன்.

Dear Prof.Noam Chomsky,
In view of your great contributions to the modern linguistics, I felt the need to draw your attention to the following development.

Applying ‘Physics of Music' to the grammar for poems called ‘yAppilakkanam’ meaning ‘grammar for creation' in the ancient Tamil grammar treatise ‘Tholkappiam’, I had discovered that the grammar rules were non-semantic and music related, and hence applicable to the musically rendered poems in world languages.

I had published my discovery in the journal from the International Institute of Tamil Studies’, Chennai in 2013.; http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677 ) with the title ‘The Musical Phonetics in Tholkappiam’.

with regards,
S.A.Veerapandian

நிகழ்காலத்தில் 90 வயதைக் கடந்த அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

“Fascinating.  I’ll try to find some time to pursue it.” 

மேற்குறிப்பிட்ட சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இணைய தளத்தில் ஆய்வுக்கட்டுரைகளை தரவிறக்கம் (Download) செய்யும் வசதி இல்லை. எனவே நோவாம் சோம்ஸ்கி முயன்றாலும், அது எளிதில் அவர் பார்வைக்கு செல்ல வாய்ப்பில்லை. எனவே எனது கட்டுரை அடிப்படையில், தொல்காப்பியத்தில் வரும் யாப்பிலக்கணம் எவ்வாறு உலக மொழிகளில் உள்ள இசைப்பாடல்களுக்கான உலக இலக்கணம் ஆகும்? என்ற ஆங்கில கட்டுரையினை நோவாம் சோம்ஸ்கிக்கு அனுப்பி வைத்தேன். அக்கட்டுரைப் படித்த பின், கீழ்வரும் மடல் நோவாம் சாம்ஸ்கியிடமிருந்து வந்தது.

“Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’“

' Very intriguing' என்றால் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டி வியப்படையச் செய்தல்' என்பதாகும். (‘arouse the curiosity or interest of; fascinate.’)

உலகில் உள்ளமொழிகளுக்கான 'உலக மொழி இலக்கணம்' (Universal Grammar: https://en.wikipedia.org/wiki/Universal_grammar) தொடர்பாக நோவாம் சோம்ஸ்கி முன்வைத்த கருத்தினை ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன

நோவாம் சோம்ஸ்கியின் கருத்துக்கு எதிராக, 'பொருள் சார்பற்ற (non-semantic) அமைப்புகளின்(structures) அடிப்படையில், எவ்வாறு ஒரு உலக இலக்கணம் இருக்க முடியும்?' என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் மேற்குறிப்பிட்ட உரையில்;

'எவ்வாறு எழுத்து அசைத்து இசைக் கோடலின் மூலம் உருவான அசைகள், உரைநடைக்கும், பேச்சுக்கும் சொல்லை உருவாக்குவது போல பயணிக்காமல், பாடல் இசையின் முக்கியத்துவம் பெற்ற கூறாகிய (significant music sub-structure) 'சீரை' உருவாக்கி, அடுத்தடுத்த பெரிய இசை தொடர்பான பிரிவுகளின் மூலமாக பாடலை முழுமையாக்குகிறது?' என்பதை விளக்கினேன்

அதாவது, 'பொருள் சார்பற்ற (non-semantic) இசை அமைப்புகளின் (musical structures) அடிப்படையில், எவ்வாறு உலக மொழிகளுக்கான இசைப்பாடல் இலக்கணம் இருக்க முடியும்?' என்பதை, தொல்காப்பியத்தின் அடிப்படையில், எனது உரையில் விளக்கினேன்.

சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் 'அஷ்டதாயி' துணையுடன், தொல்காப்பியத்தில் நான் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்' (Musical Linguistics) எவ்வாறு நோவாம் சோம்ஸ்கியின் 'உலக இலக்கணம்' தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

மேலும், அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல்(musicology) பரிமாணம் தெரியாமல், தமிழ்ப் பாடல்களையும் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள கர்நாடக இசைப்பாடல்களைப் போல பாடுவதில் உள்ள தவறுகளையும், எனது உரையில் சுட்டிக்காட்டினேன்.
 

சிங்கப்பூரில் நடந்த மேற்குறிப்பிட்ட எனது உரையில்:

சமஸ்கிருத மொழியில் உள்ள 'நாட்டிய சாஸ்திரம்' என்ற நூலில் இசை தொடர்பான பகுதிகள் கி.பி.4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக தொல்லியல் அறிஞர் பண்டார்க்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி, இசையியல் தொடர்பான தொன்மையான சான்றுகள் இந்திய மொழிகளில் தமிழில் இருப்பதை விளக்கினேன். பார்வையாளராக பங்கேற்ற சிம்பொனி இசை அமைப்பாளர் ஜான் சார்ப்லி குறுக்கிட்டு, அதை விட தொன்மையான சான்றுகள் கிரேக்க இசை தொடர்பாக வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். தொல்பழங்காலத்தில் சிரேக்க நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் இருந்த வாணிகம் தொடர்பான சான்றுகள் இருப்பதைக் குறிப்பிட்டு, இசை தொடர்பான சான்றுகள் இதுவரை வெளிவரவில்லை, என்பதையும் விளக்கினேன். முறையான தொல் ஆய்வுகள் மூலமாக அவை வெளிப்பட வாய்ப்பிருக்கிறது, என்பதே எனது கருத்தாகும். தமிழ் அறிஞர்கள் சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளதையும், சமஸ்கிருத புலமையுள்ளவர்கள் தமிழில் நூல்கள் எழுதியுள்ளதையும் சுட்டிக்காட்டி, உயர்வு தாழ்வு ஒப்பீட்டிற்கு இடமின்றி, அறிவு என்பது எந்த மொழியில் இருந்தாலும், உலகத்திற்கு பொதுவானது என்பதையும் எனது உரையில் விளக்கினேன்.

அடுத்து ஒரு சீனப்பெண்மணி எனது ஆய்வுத் திட்டங்கள் பற்றி கேட்டார். கீழ்வரும் இணையதளத்தில் அது தொடர்பான தகவல்கள் இருப்பதை விளக்கினேன்.

Projects & Discoveries: http://drvee.in/?page_id=21
 
எனது ஆய்வுத்திட்டங்களின் நிதி உதவி பற்றி கேட்டார். ஆய்வு ஆலோசகராக (Project Consultant) நான் பங்களித்து ஒரு குழு மூலம் மேற்கொண்ட, 'காப்புரிமை'யுடன் (Patent) முதல் கட்டம் (First Phase) முடிந்துள்ள NIT-T R & D on ‘Defreezing Music from Building Architecture’ தவிர, மேற்குறிப்பிட்டவை எல்லாம் எனது சொந்த பணத்தில் கடந்த சுமார் 30 வருடங்களாக நான் மேற்கொண்டு வருவதை விளக்கியவுடன், அவர் வியப்பின் உச்சத்திற்கு சென்றார்.

"மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவினை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தீர்களா?" என்ற வினாவிற்கு மேற்குறிப்பிட்ட விளக்கமே போதுமானது, என்று கருதுகிறேன்.

Note: My book ‘Ancient Music Treasures – Exploring for New Music Composing’ in Amazon (both KDP & Paperback; 
https://www.amazon.com/ANCIENT-MUSIC-TREASURES-EXPLORING-COMPOSING/dp/9811411336)


குறிப்பு:

'தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளும்'; http://tamilsdirection.blogspot.com/2018/ 


‘தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்’; https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html

(வளரும்)

No comments:

Post a Comment