Monday, January 7, 2019


உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது (1);


தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?


'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, கர்நாடக இசை எதிர்ப்பு' போன்ற உணர்ச்சிபூர்வ நோய்களை ஊக்குவிக்காமல், அறிவுபூர்வமாக தமிழிசை தொடர்பான ஆய்வுகளை முன்வைத்தால், அறிவுநேர்மையுள்ள பிராமணர்களும், சமஸ்கிருத மற்றும் கர்நாடக இசை ஆர்வலர்களும் ஏற்றுக் கொள்வார்கள்;

என்பதை கடந்த காலத்தில் ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார். (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_9.html)

சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த இசை ஆய்வரங்கங்களிலும், சர்வதேச இசை மாநாட்டு ஆய்வரங்கிலும், அமெரிக்காவில் நடந்த சர்வதேச இசை மாநாடுகளிலும், நோவாம் சாம்ஸ்கி, ஸ்டீவன் பிரவுன், ரிச்ச்ர்ட் வெட்டஸ், முனைவர் என்.ராமநாதன் போன்ற இன்னும் பல‌ உலக அளவில் புகழ் பெற்ற ஆய்வறிஞர்களுடன் மேற்கொண்டு வரும் கருத்து பரிமாற்றங்கள் மூலமாகவும், ஆபிரகாம் பண்டிதர் வழியில் நான் நிரூபித்து வருகிறேன். 
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

அறிவுபூர்வ சான்றுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அரைகுறை சான்றுகளை மிகைப்படுத்தி, தமிழையும், தமிழ் இசையையும் 'அதீதமாக' உயர்த்தி எழுதி வெளிவரும் நூல்களுக்கும், பேசி இசைக்கும் நிகழ்ச்சிகளுக்கும், எந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் வரவேற்பு வெளிப்படுகிறதோ, 'அந்த' அளவுக்கு புலமையுள்ளவர்கள் பார்வையில் தமிழும், தமிழ் இசையும் தாழ்வாகக் கருதப்படும் அவலமானது வெளிப்படத் தொடங்கியுள்ளது:

என்பதானது உலகப்புகழ் பெற்ற அறிஞர் செல்டன் பொல்லாக் நூலின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர்களிடமிருந்து தமிழ் தொடர்பாக வெளிப்படும் தவறான கருத்துக்களை மறுக்காமலும், தவறான அபத்தமான கருத்துக்களை வெளிப்படுத்தியும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள‌ 'தமிழ் இருக்கைகள்' செயல்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வியை எழுப்பும் தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html )

இசை ஆராய்ச்சிக்கு முன், நான்பெரியார்இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றிருந்த காலத்திலும், கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தவர்களை மதித்தேன். நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் ஆசிரியர் கழகம் சார்பாக முன்னெடுத்த போராட்டங்களில் சக பிராமண பேராசிரியர்களும் உறுதுணையாக இருந்ததையும் பதிவு செய்துள்ளேன்.

அது போலவே மார்க்சிய - லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாத மோதலில் ஈடுபட்ட காலத்திலும், அந்த இயக்கங்களில் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர்களையும் நான் மிகவும் மதித்தேன்; அவர்களும் என்னை மிகவும் மதித்து அன்புடன் பழகினார்கள்.

அந்த போக்கிலேயே, தஞ்சையில் 'மக்கள் கலை இலக்கியக் கழகம்' சார்பில் 'தமிழ் மக்கள் இசை விழா' நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று ஆய்வுரைகள் நிகழ்த்தினேன்.

அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, கீழ்வரும் அனுபவம் எனக்கு மறக்க முடியாததானது.

மதுரை அரசரடி கிறித்துவ அமைப்பிலிருந்து ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) கர்நாடக இசையைக் கேலி செய்து, மிகுந்த கைத்தட்டல்களுடன் உரையாற்றினார். தனது உரையின் நடுவே, ஆரோகண, அவரோகண இசைப் பயிற்சி முறையை;

', ரி, , , , , நி,- -, நி, , , , ரி, ' என்று முடிவில் ', நி, , நி' என்று - 'சா ணி' என்று - மாட்டுச்சாணியை நினைவுகூர்ந்து கிண்டல் செய்தார். பலத்த கைத்தட்டல் கிடைத்ததும், இன்னும் உற்சாகமாக, அதே முட்டாள்த்தனப் போக்கில் பேசினார்.

பேசியவருக்கும், கைத்தட்டியவர்களுக்கும், ', ரி, , , , , நி' தமிழ் இசைக்கே உரியவை என்று 1918லேயே, ஆபிரகாம் பண்டிதர், தமது 'கருணாமிர்த சாகரம்' நூலில் வெளிப்படுத்தியது தெரியாது போலும். (‘எம்.ஜி.ஆர்  ", ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்‘; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) கர்நாடக இசையை கேலி செய்வது என்ற பேரில் உண்மையில் தமிழ் இசை தான் அங்கு அவமதிக்கப்பட்டது.

இருட்டில் இருந்த 'கருணாமிர்த சாகரம்' நூலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ... ஆகும். அந்த அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தான், மேலே குறிப்பிட்ட அவலமும் அரங்கேறியது.

தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, கர்நாடக இசை எதிர்ப்பு' என்ற பெயரில், முட்டாள்த்தனமாக பேசி கைத்தட்டல் வாங்க முடியும்;

என்பதை மேலே குறிப்பிட்ட அனுபவம் எனக்கு உணர்த்தியது.

'தமிழ் மக்கள் இசை விழா' நிகழ்ச்சிகளில் தான் முதன் முதலில், நா.மம்மதுவின் உரையைக் கேட்டேன். அவரது உரையின் இடையே, இன்னொருவர் இனிமையான குரலில் பாடிய பாடல்களையும் ரசித்தேன்.

அந்த உரையில் தான், முதல்முறையாக 'இந்தஸ்தானி இசைக்கும் தமிழ் இசையே மூலமாகும்' என்ற நிலைப்பாடும் எனது கவனத்திற்கு வந்தது.

'கர்நாடக இசை உயர்வானது' என்ற அடிப்படையில், தமிழ் இசையிலிருந்து 'களவாடிய இசையே கர்நாடக இசை' என்ற நிலைப்பாட்டில் எனது இசை ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினேன். எனது ஆய்வுகள் மூலமாகவே, அது எவ்வளவு அபத்தமான நிலைப்பாடு? என்பதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்

மேலே குறிப்பிட்ட விளக்கத்தினை ஏற்றுக்கொள்ளாமலும், அறிவுபூர்வமாக மறுக்காமலும், புறக்கணித்து நா.மம்மது உள்ளிட்ட தமிழிசை ஆர்வலர்கள் தமது தவறான நிலைப்பாட்டினையே பேச்சாகவும், எழுத்தாகவும் வெளிப்படுத்தி வருவதானது சரியா? என்பது அவரவரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.

அது மட்டுமல்ல, ஆபிரகாம், பண்டிதர், விபுலானந்த அடிகள், வீ..கா சுந்தரம், சாம்பமூர்த்தி உள்ளிட்ட இசை றிஞர்களின் ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை எல்லாம் நான் வெளிப்படுத்தியிருப்பதையும்;

செல்வாக்கான வலைப்பின்னல்களுடன் உலகெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி வரும் அத்தகையோர் எல்லாம் புறக்கணிப்பதானது, தமிழிசையின் வளர்ச்சிக்கு வழி வகுக்குமா? வீழ்ச்சிக்கு வழி வகுக்குமா? (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

'இந்துஸ்தானி' இசை தொடர்பாக, கீழ்வரும் விளக்கமானது, நா.மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் உள்ளது.

'தமிழிசை (தென்னிந்திய இசை - கர்நாடக இசை) மற்றும் இந்துஸ்தானி இசை (வட இந்திய இசை) இரண்டும் ஒரே இசை முறையின் இரு பிரிவுகள்."

என்று தெரிவித்து, கீழ்வரும் சான்றினையும் குறிப்பிட்டுள்ளார்.

“.. she has developed two subsystems of music – Karnatic and Hindustani. Both the systems received their nourishment from the same original source.” (‘A Dictionary of South Indian Music and Musicians’ 231/11)

'தமிழிசைப் பேரகராதி' நூலில்சுருக்கம் குறியீட்டு விளக்கம் ' பகுதியில் 'A Dictionary of South Indian Music and Musicians ' என்ற நூலின் ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை. நானறிந்த வரையில் சாம்பமூர்த்தி பெயரில் அந்நூல் வெளிவந்துள்ளது. (https://www.amazon.in/Dictionary-South-Indian-Music-Musicians/dp/B009GJST1I )

சங்க இலக்கியங்களில் இடம் பெற்று, சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் லெக்சிகனில் விளக்கம் இல்லாத சொற்களுக்கும்;

மர்ரே எஸ்.ராஜம் தலைமையில் கூட்டு முயற்சியாக‌ தொகுத்த 'பாட்டும் தொகையும்' நூலில் விளக்கங்கள் இருந்ததும், எனது ஆய்வுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. (http://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html )

நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் இன்றி, 'பிழையில்லாமலும் எளிமையாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களின் வீடுகள்தோறும் சென்றடைய வேண்டும்' என்ற உயரிய நோக்கில், பல அறிஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவானது, அந்த குழுவின் வெளியீடுகள் ஆகும். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.html )

அத்தகைய கூட்டு முயற்சி இன்றி, தனிநபரால் தொகுக்கப்பட்டு வெளிவந்தால், என்னென்ன குறைகள் வெளிப்படும்? என்று எவரேனும் ஆய்வு மேற்கொள்ள விரும்பினால்;

அந்த முயற்சிக்கு, மேலே குறிப்பிட்ட 'தமிழிசைப் பேரகராதி' துணை புரியும். 'தமிழிசைப் பேரகராதி' நூலின் 'அதீத' ஊடக வெளிச்சத்தில், இருளில் சிக்கிய 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' நூலும், அந்த முயற்சிக்கு கூடுதலாக துணை புரியும்.

தமிழ்நாட்டில் 'ஈகோ' சிக்கலின்றி, புலமையாளர்களின் கூட்டு முயற்சியின் மூலமாக, நூல்கள் வெளிவந்த போக்கு மறைந்ததும், தமிழ்நாட்டின் புலமை வீழ்ச்சியால் ஏற்பட்ட விளைவாகும்.

வீ.பா.கா சுந்தரம் போலவே, சாம்பமூர்த்தியும் பெரிய இசை அறிஞர் ஆவார். அவர்களின் ஆய்வுமுடிவுகளில் உள்ள குறைபாடுகள் எவை, எவை. பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளன? என்பது தெரியாமல், நா.மம்மது போன்றவர்கள் நூல்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

உதாரணமாக, வீ.பா.கா சுந்தரம் அவர்கள் தமிழிசையில் 'இணை, கிளை' உறவுகள் பற்றி வெளியிட்டுள்ள முடிவுகள் எவ்வாறு தவறானவை? என்பதை உரிய சான்றுகளுடன் நான் வெளிப்படுத்தியுள்ளேன்

அது போல, 1939-இல் லண்டன் சர்வதேச இசை மாநாட்டில் முடிவு செய்து அறிவித்தஉலகத்தர சுருதி அதிர்வெண் மதிப்பானது (World Pitch Standard), கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வரும் 'Clark's Table' நூலில் இருப்பது தெரியாமல், '240' என்ற அதிர்வெண் மதிப்பினை கற்பனையாக சாம்பமூர்த்தி சுருதிகள் தொடர்பாக, எழுதியுள்ளதும் எவ்வாறு தவறானது? என்பதையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். (Chapter 1: Pitch issues of Indian Music; ‘Ancient Music Treasures – Exploration for New Music’ 2006)

சுமார் 5 வருடங்களுக்கு முன், மம்மது உள்ளிட்டு தமிழ்நாட்டில் சுமார் 25 புலமையாளர்களுக்கு, கொரியரில் 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வேட்டினை அனுப்பியுள்ளேன். இன்றுவரை எவரிடமிருந்தும் எந்த விமர்சனமும் வரவில்லை.இனி வந்தாலும் வரவேற்பேன்.

மம்மது தான் அமெரிக்கா சென்றிருந்த போது, எனது 'Ancient Music Treasures – Exploration For New Music' என்ற ஆங்கிலப்புத்தகத்தை அன்பளிப்பாக பெற்றதாகவும், என்னிடம் வந்து 'இசையின் இயற்பியல்'(Physics of Music) பாடம் கேட்க வேண்டும், என்றும் சுமார் 10 வருடங்களுக்கு முன், தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார். 'திருக்குறளில் தமிழ் இசையியல்' (Tamil Musicology in Thirukkural) என்ற ஆய்வேட்டை அனுப்பியபோது, அந்த ஆய்வுகள் பற்றி இன்று வரை கருத்து தெரிவிக்காமல், 'அதில் நிறைய எழுத்துப்பிழைகள்' இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

'தஞ்சைத்தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மேற்பார்வையில், அது கணினி தட்டச்சு மூலம் உருவானது. எனவே அந்த பிழைகளை உடனே அனுப்பி வைத்தால், அவர்களின் பார்வைக்குக் கொண்டு சென்று திருத்த முடியும்' என்று தெரிவித்தேன். இன்று வரை அனுப்பவில்லை.’ (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_9.html )

பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்டிருந்த ஆய்வுகளின் முடிவுகளை எல்லாம், தமிழறிஞர்கள் மத்தியில் விவாதிக்க புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதாக, IPF (French Institute of Pondicherry)-இல்  பணி புரியும் எம்.கண்ணன் 2015 மார்ச்சில் தெரிவித்தார். என்ன சிக்கலோ? இன்று வரை அது நடக்கவில்லை.

இந்துஸ்தானி இசைக்கும், தமிழிசைக்கும் உள்ள தொடர்பு பற்றி நா.மம்மது பயன்படுத்திய சான்று:

“.. she has developed two subsystems of music – Karnatic and Hindustani. Both the systems received their nourishment from the same original source.” (‘A Dictionary of South Indian Music and Musicians’

மேற்குறிப்பிட்ட சான்றில் 'தமிழிசை' குறிப்பிடப்படவில்லை. ஆங்கிலம் தெரியாமல், நா.மம்மதுவின் நூலைப் படிப்பவர்களுக்கு அது தெரிய வாய்ப்புண்டா?

'கர்நாடக இசையை தமிழிசை என்று சமன் செய்து அணுகுவது எவ்வாறு தவறானது?' என்ற வெளிவந்த எனது ஆய்வினை நா.மம்மது மறுத்துள்ளாரா

சாம்பமூர்த்தியின் ஆங்கில மேற்கோளில் இல்லாத 'தமிழிசை' என்ற சொல்லைத் திணித்து, அந்த சான்றின் அடிப்படையில் தமிழிசையை இந்துஸ்தானி இசையுடன் தொடர்பு படுத்துவதும், இந்துஸ்தானி இசைக்கு மூலம் தமிழிசை என்று உரையாற்றுவதும் அறிவுநேர்மையாகுமா?

இந்துஸ்தானி இசையின் வளர்ச்சியில் பெர்சியன் இசையின் (Persian Music) பங்களிப்பை இருட்டில் தள்ளி, இந்துஸ்தானி இசையை வேத இசையோடு பிணைக்கும் தவறு போன்றதே, நா.மம்மதுவின் தவறும் ஆகும். இந்துஸ்தானி இசை தொடர்பான சான்றுகள் கீழே குறிப்பில் உள்ளன.

'ஆண்டாள்' தொடர்பாகதாம் மேற்கோள் காட்டும் கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவை? என்று ஆராயாமல், பொது அரங்கில் 'அவையும் அறியாமல்', மேற்கோள் காட்டிய தவறினை வைரமுத்து புரிந்தது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

அது போல, இந்துஸ்தானி இசைக்கும் தமிழிசைக்கும் உள்ள உறவு தொடர்பாக, தாம் மேற்கோள் காட்டும் கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவை? என்றநா.மம்மதுவின் ஆய்வுக்கு, கீழே குறிப்பில் உள்ள சான்றுகள் எல்லாம் துணை புரியும்.

அறிவுபூர்வ அணுகுமுறைக்கு முரணாக, தமிழர்கள் மத்தியில்  எந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமாக பேசி, எழுதி வலம் வரும் போக்கு உள்ளது? அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அப்படிப்பட்ட 'முற்போக்கு' நபர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களும், அவர்கள் கைதட்டல் வாங்கிய நிகழ்ச்சிகளில் பல இணையத்திலும், தடயங்களாக உள்ளன

அந்த வரிசையில் நாம்.மம்மதுவின் நூல்களும், ஒளிப்பதிவுகளும் இடம் பெறுமா? இல்லையா? என்பது தெளிவாகும் காலமும் அதிக தொலைவில் இல்லை.

தமிழ் இசையியல் (Tamil Musicology) அறிவின்றி யாப்பிலக்கணம் கற்பிக்கும் தவறுகளை எல்லாம் எனது ஆய்வுகள் மூலமாக 1996 முதல் வெளிப்பட்டுத்தி வந்துள்ளேன். 'தமிழ் இசையியல்' கற்று தமது புலமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமின்றி, ஆளுங்கட்சிகளை வழி நடத்திய தமிழ்ப்பேராசிரியர்களின் 'பங்களிப்பால்'(?), உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் தவறான முறையிலேயே யாப்பிலக்கணம் கற்கும் அவலமும் தொடர்கிறது. தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' தொடர்பான ஆய்வு முடிவின் மூலமாக, உலகப் பல்கலைக்கழகங்களின் கவனத்தை, தொல்காப்பியம் ஈர்ப்பதும் தாமதமாகி வருகிறது.
( http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html)

அது போலவே, 'இசையின் இயற்பியல்' (Physics of Music) அறிவின்றி, 'தமிழ் இசையியலை' (Tamil Musicology) விளங்கிக் கொள்ள முடியாது;

என்பதை 1996 முதல் வெளிப்படுத்தி வருகிறேன். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மறைந்த வெ.கிருட்டிணமூர்த்தி(பிராமணர்), தமது ஆய்வு வட்டம் சார்பாக வெளியிட்ட நூல்களில் ஒன்றில், அது தொடர்பான கட்டுரையினை என்னிடம் வாங்கி வெளியிட்டார். சென்னைப்பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவராக பேரா.என்.ராமநாதன்(பிராமணர்) இருந்தது வரையில், பலமுறை அங்கு என்னை வரவழைத்து ஆய்வுரைகள் நிகழ்த்த செய்தார். அதன் மூலம் அப்போது அங்கு பயின்ற இசை மாணவர்கள் பலன் பெற்றனர். என்னை சென்னைப் பல்கலைக்கழகபாடத்திட்டக்குழு உறுப்பினராக்கி, ஏற்கனவே பிழைகளுடன் வெளிவந்திருந்த 'இசையின் இயற்பியல்' (Physics of Music) தொலைதூரக்கல்வி பாடநூலுக்குப் பதிலாக, புதிதாக நூல் எழுத வைத்தார். அதனையும் பிழைகளுடன் அச்சிட்டே மாணவர்களுக்கு தொலைதூரக்கல்வி அமைப்பு விநியோகித்தது; நான் அந்த குறைகளைச் சுட்டிக்காட்டி மடல் எழுதிய பின்னரும். பின் சுமார் 20 வருடங்களுக்கு முன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் பேரா..அங்கையற்கண்ணியின் முயற்சியில், மத்திய அரசின் UGC நிதி உதவியில்தென்னிந்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய‌ இசைப்பேராசிரியர்களுக்கான 'புத்தோளிப்பயிற்சி’ (Refresher Course) நடந்தது. அதில் நான் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) வகுப்பு எடுத்தேன்.

'கர்நாடக இசை எதிர்ப்பு' என்ற உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோய்களுக்கு 'தீனி' போடாமல், அறிவுபூர்வ அணுகுமுறையில் தமிழ் இசையின் வளர்ச்சிக்கு மேலே குறிப்பிட்ட நபர்கள் முயற்சிகள் மேற்கொண்டதானது, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளின் கவனத்தை ஈர்த்ததாக தெரியவில்லைஅரைகுறை சான்றுகளுடன் உணர்ச்சிகரமாக பேசி, கைத்தட்டல் வாங்க முடியாத, ஆனால் ஆழ்ந்த புலமையுள்ள, அத்தகையோரைப் புறக்கணித்து செயல்படும் தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளின் தொகுவிளைவாக‌ (Resultant);


தமிழும், தமிழ் இசையும் தாழ்வாகக் கருதப்படும் அவலமானது, உலகப்புகழ் பெற்ற அறிஞர் செல்டன் பொல்லாக் மூலமாக‌ வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதை மறுக்கும் அறிவு வலிமையின்றி, 'அந்த' தமிழ் அமைப்புகள் பயணித்தால், அது தமிழுக்கு வீழ்ச்சி ஆகாதா?

செல்வாக்கான வலைப்பின்னல்களுடன் உலகெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி வரும், நூல்கள் எழுதி வரும் நா.மம்மது போன்றவர்களும், மேற்குறிப்பிட்ட முயற்சிகளில் ('தமிழிசையின் இயற்பியல்' - Physics of Tamil Music) பலன் பெற வேண்டிய தேவையில்லாமலேயே;

'கர்நாடக இசை எதிர்ப்பு' என்ற உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோய்களுக்கு 'தீனி' போட்டு, மிகுந்த வரவேற்புடன் செல்வாக்காக வலம் வருவதானது, தமிழ் இசையின் வீழ்ச்சிக்கே வழி வகுக்காதா?

தமிழ்நாட்டிலும், உலகிலும், செல்வாக்குள்ள தமிழ்/தமிழ் இசை அமைப்புகளும், ஆர்வலர்களும், மேலே குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயில் சிக்கி பயணித்ததாலேயேதமிழ்/தமிழ் இசை அமைப்புகளின் எதிர்ப்பின்றி, கீழ்வரும் அவலமும் தமிழ்நாட்டில் அரங்கேறியதா? என்ற அறிவுபூர்வ விவாதத்திற்கும் நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்
( http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html)

பல்கலைக்கழகம் புதிதாக துவங்கி, முதல் 3 வருடங்களில்;

தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம்  உலக அளவில் புலமையாளர்களை ஈர்த்து, எந்த அளவுக்கு  வளர்ந்தது?

'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது?

என்ற விசாரணையை மேற்கொண்டால்;

பல்கலைக்கழக மான்யக் குழுவானது, புதிதாக தொடங்கும் பல்கலைகழகம் தவிர்க்க வேண்டிய குறைபாடுகளின் தொகுப்பான, மிக மோசமான முன்னுதாரணமாக, 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' வெளிப்பட்டால் வியப்பில்லை. ஒரு பல்கலைக்கழகம் என்றால் என்ன? அதன் நிர்வாகம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள, குறைந்த பட்சம் 10 வருடங்களாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்திராத, துணைவேந்தராக இருந்த காய்த்ரியை குறை சொல்வதிலும் அர்த்தமில்லை;

எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி, பயணித்து, அதன் காரணமாகவே 'மர்மமான' முறையில் மரணமடைந்த‌ முதல்வர் ஜெயலலிதாவே அதற்கு முழுமுதற் காரணமாவார். (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

இது டிஜிட்டல் யுகம். தமிழையும், தமிழ் இசையையும் 'உயர்த்துவது' என்ற போர்வையில், அறிவுக்கு தொடர்பில்லாத உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயினை வளர்த்து வெளிப்படும் நூல்களும், ஒளிப்பதிவுகளும், மேலே குறிப்பிட்ட ஆய்வுகளுக்கான தடயங்களாகி அவமானப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது. மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நூல்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகள் மூலமாகவும் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் இருந்தால், அதனை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை வரவேற்க வேண்டும். உரிய சான்றுகளின் அடிப்படையில் தவறுகள் வெளிப்பட்டால், நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, திருந்தி பயணிக்க வேண்டும். 

குறிப்பு:

‘Originally, a Persian form of vocal music, Ghazal is an important part of Hindustani Classical music.’; 

In medieval times, the melodic systems were fused with ideas from Persian music, particularly through the influence of Sufi composers like Amir Khusro, and later in the Mughal courts. Noted composers such as Tansen flourished, along with religious groups like the Vaishnavites.

After the 16th century, the singing styles diversified into different gharanas patronized in different princely courts. Around 1900, Vishnu Narayan Bhatkhande consolidated the musical structures of Hindustani classical music, called ragas, into a number of thaats. This is a very flawed system but is somewhat useful as a heuristic.

Distinguished Hindu musicians may be addressed as pandit and Muslims as ustad. An aspect of Hindustani music going back to Sufi times is the tradition of religious neutrality: Muslim ustads may sing compositions in praise of Hindu deities and vice versa.; https://en.wikipedia.org/wiki/Hindustani_classical_music

Hindustani Classical Music is a North Indian classical music tradition that has been evolving since the twelfth century C.E., in what is now northern India and Pakistan, and also Bangladesh, Nepal and Afghanistan. The tradition was born from a cultural synthesis of several musical streams: the vedic chant tradition dating back to approximately one millennia B.C.E., the equally ancient Persian tradition of Musiqi-e assil, and also folk traditions prevalent in the region. The terms North Indian Classical Music or Shāstriya Sangeet are also occasionally used.; http://www.newworldencyclopedia.org/entry/Hindustani_classical_music

No comments:

Post a Comment