நோவாம் சோம்ஸ்கி மூலம் வெளிப்பட்ட பாடம்:
‘தெரியாததை தெரியாது' என்று
கூச்சமின்றி தெரிவிக்கும் துணிச்சல்
வேண்டும்.
தமக்கு
தெரியாததை 'தெரியாது' என்று
கூச்சமின்றி தெரிவிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அதிலும் உலக அளவில் புகழ்பெற்ற
புலமையாளராக இருந்தால், அவ்வாறு தெரிவிக்க அதீத துணிச்சல்
வேண்டும். அது போன்ற அனுபவமானது நோவாம் சோம்ஸ்கியிடம் (https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky) இருந்து எனக்குக் கிடைத்தது.
உலகில் உள்ள எல்லா
மொழிகளுக்குமான ‘உலகப் பொது இலக்கணம்’ (Universal Grammar) என்பதானது சோம்ஸ்கியின்
முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் உலக ஆராய்ச்சியாளர்களிடையே
விவாதப்போரானது நடைபெற்று வருகிறது.
Multiple
scholars have challenged universal grammar on the grounds of the evolutionary
infeasibility of its genetic basis for language, the lack of universal
characteristics between languages, and the unproven link between innate/universal
structures and the structures of specific languages. ;
இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத்
தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதையே, நான்
கண்டுபிடித்துள்ளேன். அதனை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழிலும்
வெளியிட்டுள்ளேன்.
The logic
behind the above ‘parallel’ -applicable
to all world languages, was discovered
in Tholkappiam, and published with the title ‘Musical Phonetics in tholkAppiam’
in December 2013, in The journal from the International Institute of Tamil
Studies, (Taramani, Chennai;
தொல்காப்பியத்தில்
வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for
musically rendered poems) கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின் ‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக
முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர வல்லவையாகும். எனவே மேற்குறிப்பிட்ட
எனது ஆய்வுக்கட்டுரை தொடர்பாக கீழ்வரும் மடலை நோவாம் சோம்ஸ்கிக்கு அனுப்பினேன்.
அதற்கு கீழ்வருமாறு
நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.
“Fascinating. I’ll try to find some time to pursue
it.” -Noam Chomsky 7 Sep, 2018
சோம்ஸ்கியின் ‘உலகப்
பொது இலக்கணம்’ அணுகுமுறையில், எனது கட்டுரையை மாற்றி எழுதி;
‘Musical
Linguistics; applicable to the musically rendered poems in world languages;
Non-semantic and music related rules for poems, discovered in ancient Tamil
grammar tholkAppiam’ என்ற தலைப்பிலான கட்டுரையினை அவருக்கு
அனுப்பினேன்.
அதற்கு கீழ்வருமாறு
நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.
‘Very
intriguing. I hope all of this can
become part of an emerging discipline of ‘musical linguistics’
– Noam Chomsky
23 Sep, 2018
உலகில் உள்ள பல்கலைகழகங்களில்
'மொழியியல்' (Linguistics) என்ற துறை ஏற்கனவே உள்ளது.
புதிதாக 'இசை மொழியியல்'
(Musical Linguistics) என்ற துறையானது தொல்காப்பியம் மூலமாக உருவாக, நோவாம் சோம்ஸ்கியின்
அங்கீகாரமானது மேற்குறிப்பிட்ட அவரின் மடல் மூலமாக கிடைத்துள்ளது.
'மொழியியல்' அடிப்படையில்,
'Natural Language Processing -NLP’ மூலமாக
'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள்
உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அது போலவே, தொல்காப்பியத்தின்
' இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to
lyrical text; musical grammat check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.
இந்தியாவில் NLP
தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் உள்ள பேராசிரியர், எனது ஆய்வுக்கட்டுரையினைப் படித்த
பின், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
” Very
interesting. And happy to know that you are working on it.''
- Dr. Rajeev Sangal, FNAE, Professor (Area:
Computer Sc & Engg), Language Technologies Research Center, IIIT Hyderabad
தொல்காப்பியத்தில்
வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல்
இலக்கணம்' (Universal Grammar for
musically rendered poems) கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின்
‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக
முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர முடியும்? என்ற எனது விளக்கத்தினை அவருக்கு அனுப்பினேன். அவரிடமிருந்து கீழ்வரும்
பதில் வந்தது.
“Thanks for
sending. Beyond my competence to express
an opinion.”
– Noam Chomsky 2 Feb, 2019
எனது
விளக்கம் புரிய வேண்டுமானால், 'தமிழிசையின்
இயற்பியல்' (Physics of Tamil Music) பற்றிய அறிவு வேண்டும்.
எனவே என்னால் இயன்றவரை அவருக்கு புரிய வைக்கும் நோக்கில், ஒரு
'PPT' உருவாக்கி அனுப்பினேன்.
அவரிடமிருந்து
கீழ்வரும் பதில் வந்தது.
“Wish I knew
enough to comment seriously.
Unfortunately, I don’t.”
– Noam Chomsky
15 December, 2019,
சோம்ஸ்கியின்
‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக
முன் வைக்கப்பட்டுள்ள ‘எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம்
தொல்காப்பியம் மூலமாக தர முடியும்’ என்பது
நிரூபிக்கப்பட்டால், தொல்காப்பியமானது எந்த அளவுக்கு உலக
அளவில் 'Natural Language Processing -NLP' புலமையாளர்களின்
கவனத்தை ஈர்க்கும், என்பதை நான் அறிவேன். எனது ஆய்வு
முடிவுக்கு வலிவு சேர்க்கும் ஆய்வுக்கட்டுரை ஒன்று எனது தேடலில் கிடைத்தது. எனவே
கீழ்வரும் மடலை அவருக்கு அனுப்பினேன்.
Dear Prof.Noam
Chomsky,
I felt the
following, complimenting my findings, may deserve your attention.
'in music has
two distinct levels. The “surface” level relates to the apparent corporeal
articulation such as the activated psychomotor program of a music performer,
visible gestures in response to music, and rhythmic entrainment. The primary
(though concealed) “deep” level of embodied cognition relates to the main
coding aspects in music: the tonal relationships arranged in time.'; Two-Level
Model of Embodied Cognition in Music, Korsakova-Kreyn, 2018.pdf
With regards,
S.A.Veerapandian
March 13, 2020
அவரிடமிருந்து
கீழ்வரும் பதில் வந்தது.
“Sounds
plausible, but I don’t know enough to have a useful opinion.”
– Noam Chomsky
March 14, 2020
இதில்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கீழ்வருவதாகும்.
1. 'தமக்கு விளங்காததை, விளங்கவில்லை' என்று நோவாம் சோம்ஸ்கி தெரிவித்துள்ளார்.
2. அவரின் ‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக
முன் வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் வெளிப்பட்டாலும், அந்த விளக்கம் தமக்கு விளங்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
3. அதே நேரத்தில், ‘உலகப் பொது இலக்கணம்’ தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம்
தொல்காப்பியம் மூலமாக தர வாய்ப்பிருப்பதையும் 'நம்பத்தகுந்தது-
Sounds plausible ' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
நோவாம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலக அளவில்
புகழ் பெற்ற 'மொழியியல்' புலமையாளர்கள்
எல்லாம், 'நவீன மொழியியல்' என்ற துறையில்
சமஸ்கிருத மொழியின் பங்களிப்பினை அங்கீகரித்து பாராட்டி வருகிறார்கள்.
அது போல, தமிழ் மொழியையயும் நோவாம் சோம்ஸ்கி அங்கீகரித்துள்ளதாக பொய்களையும்
சில தமிழ் ஆர்வலர்கள் பரப்பி வருகிறார்கள்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு
தமிழ்ப்பேராசிரியர் அவ்வாறு தெரிவித்ததை நம்பி, அது தொடர்பாக, நோவாம் சோம்ஸ்கியை நான் தொடர்பு கொண்ட போது, அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.
“Read your
letter with interest, but I suspect you may be confusing me with someone
else. I have never written anything on
Tamil, and know nothing about the language.
It would be best for you to contact people who do.”
– Noam Chomsky 10
Sep, 2009
தமிழைப் பற்றிய இது போன்ற தவறான
தகவல்கள் மற்றும் அரைகுறை சான்றுகளின் அடிப்படையில் வெளிவரும் ஆய்வுகள் எல்லாம், உலக அரங்கில் தமிழின் 'பிராண்ட்' மதிப்பை எந்த அளவுக்கு கீழிறக்கியுள்ளது? என்பதையும் நான் விளக்கியுள்ளேன்.
தமிழில் நான் மேற்கொண்டு வரும்
ஆய்வுகளைப் போல, சமஸ்கிருத மொழியில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளை
எல்லாம், சமஸ்கிருத ஆர்வலர்கள் நன்கு ஊக்குவித்து வருகிறார்கள். (‘World interest to study the ancient Texts in Sanskrit for the
development of Science, Technology, Philosophy, etc are growing in modern
times. (Spanish scholar Oscar Pujol Riembau;
நவீன
மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத
மொழியின் பங்களிப்பானது உரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
The development
of phonetics in the West was also strongly influenced at this period, as were
many of the details of the more philological analysis of the Indo-European
languages, by the discovery of the works of the Indian grammarians who, from
the time of the Sanskrit grammarian Panini, if not before, had arrived at a
much more comprehensive and scientific theory of phonetics, phonology, and
morphology than anything achieved in the West until the modern period.
மேற்குறிப்பிட்ட
பின்னணியில் சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான 'இசை மொழியியல்' (Musical
Linguistics) என்ற புதிய துறையானது,
தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும் கீழ்வருமாறு
சுட்டிக்காட்டியுள்ளேன்.
(‘Why anti-Sanskrit is harmful to the Tamil
development?’;
உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள்
எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதும், உலகில் உள்ள
பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதும், இன்னும் எத்தனை வருடங்கள் தாமதமாவது?
நிகழ்காலத்தில், உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான
கண்டுபிடிப்புகளுக்கும், இது போன்ற
அவலம் நேர்ந்துள்ளதா?
'தெரியாததை
தெரியாது' என்று துணிச்சலுடன் அறிவித்து நோவாம் சோம்ஸ்கி போல பயணிக்கும்
புலமையாளர்களே புலமையில் வளர முடியும்.
அதைத் தவிர்த்தால், வளர்ச்சி முடங்கி நோஞ்சான் புலமையாளராவதைத் தவிர்க்க முடியாது.
தமக்கு லாபமா? நட்டமா? என்ற சுயலாபக்
கணக்கில் சிக்காமல், மலரும்
ஆராய்ச்சிகளை எல்லாம் நோவாம் சோம்ஸ்கி போல ஊக்குவிப்பதன் மூலமே, புலமையின் வளர்ச்சிக்கான சூழல் அமைப்பினை (Ecosystem) ஊக்குவிக்க முடியும்.
அதைத் தவிர்த்தால், நோஞ்சான் சூழல் அமைப்பு உருவாவதையும் தவிர்க்க முடியாது.
ஒரு மொழியில் இருந்து வெளிப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி உலகம் பலன் பெறும் வகையில், சமஸ்கிருதம் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது? தமிழ் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு மோசமாக செயல்படுகிறது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை அறியலாம்.
நோஞ்சான் சூழல் அமைப்பில், நோஞ்சான் புலமையாளர்களிடம் தமிழானது சிறையுண்டிருக்கிறது.
(‘கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள்? மீட்சிக்கான வாய்ப்புகள்?’;
https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_8.html)
ஒரு மொழியில் இருந்து வெளிப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி உலகம் பலன் பெறும் வகையில், சமஸ்கிருதம் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது? தமிழ் தொடர்பான சூழல் அமைப்பு எவ்வளவு மோசமாக செயல்படுகிறது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை அறியலாம்.
நோஞ்சான் சூழல் அமைப்பில், நோஞ்சான் புலமையாளர்களிடம் தமிழானது சிறையுண்டிருக்கிறது.
(‘கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள்? மீட்சிக்கான வாய்ப்புகள்?’;
https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_8.html)
எனவே, நிகழ்காலத்தில் உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும் நேராத இது போன்ற அவலமானது, தமிழுக்கு நேர்ந்துள்ளது.
(‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய
தமிழ்ப்புலமை?’;
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html)
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html)
கொரொனாவின் மூலமாக, பிணங்களாக வாழ்பவர்களின் சமூக வெளியில் இருந்து, பிண வாடையற்ற சமூகவெளி பிரியும் 'சமூக தளவிளவு' (Social Polarization) என்பதானது, அதிசயமான
முறையில் அரங்கேறி வருகிறது.
இது 'டிஜிட்டல் உலகம்'. எனது தலைமுறை போலின்றி, இன்றைய மாணவர்களும், படித்தவர்களும் உணர்ச்சிபூர்வ
பேச்சுக்களில், எழுத்துக்களில் ஏமாற மாட்டார்கள்.
உள்மறை வேலைத்திட்டங்களுடன் (Hidden Agenda) 'தமிழ்/தமிழ்
இசை' வளர்ச்சி என்று ஏமாற்றி, உண்மையான
தமிழ் வளர்ச்சிக்கு தடைகளாக பயணிப்பதும் கடினமாகும்.
அவர்களின் வேலை
வாய்ப்புகள், தொழில், வியாபார
வாய்ப்புகள் தொடர்புள்ள தமிழ் ஆய்வுகளுக்கு தடைகளாக பயணிப்பவர்கள் எல்லாம்,
அவர்களின் கண்காணிப்பில்(scrutiny) சிக்கும்
காலமும் நெருங்கி வருகிறது.
குறிப்பு:
இசையில்
கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால்
விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம் (Guide) தாளம்
பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது
ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள்
ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக
ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க
ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய
கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது.
No comments:
Post a Comment