Wednesday, October 9, 2019


தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' (4)


கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள்? மீட்சிக்கான வாய்ப்புகள்?
 


கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழ்நாட்டுத் தொல்லியலுக்கு நேர்ந்த பாதிப்புகள்? பற்றி ஏற்கனவே பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_7.html)

'நான் தமிழுக்கு எதிரானவனா?' என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி எழுதியுள்ள கட்டுரை தினமணி (08.03.2019) இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரையின் முடிவில் "உலக தமிழ் அறிஞர்கள் மத்தியில் அவர் (ஸ்டாலின்) தமிழ் மொழி குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். எனவே, தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தகட்டுரையின்படி நாகசாமியும் தி.மு. தலைவர் கருணாநிதியும் தமிழ் தொடர்பாக ஒரே போக்கில் பயணித்தவர்களா? என்ற கேள்வி எழுகிறது. ஔவை நடராஜன் போன்ற கருணாநிதிக்கு நெருக்கமான தமிழ் அறிஞர்கள் அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அவர்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பாகும்.

இல்லையென்றால் கருணாநிதியை விட்டு விட்டு, நாகசாமியை மட்டும் தமிழுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுவது நேர்மையாகாது.

அது மட்டுமல்ல, கருணாநிதியின் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஆலோசகராக தாம் பங்களித்துள்ளதையும், நாகசாமி நினைவு கூர்ந்துள்ளார்.
(Nagaswamy also recalled his close relationship with the DMK patriarch M Karunanidhi and how the latter recognised him on several occasions for his research works.; https://swarajyamag.com/insta/is-stalin-tamil-illiterate-archaeologist-dr-nagaswamy-rebuts-dmk-chief-for-his-ignorance-on-kurals-vedic-influences)

1963இல் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு சிறப்பு அதிகாரியாக, சென்னை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய நாகசாமி நியமிக்கப்பட்டார். 1966 முதல் 1988 வரை அதன் இயக்கநராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். பக்தவச்சலம், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகிய மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய அவர், கருணாநிதியிடம் மட்டுமே தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக நீடித்தார்.(https://en.wikipedia.org/wiki/R._Nagaswamy#Career) அதனாலேயே கோவை செம்மொழி மாநாட்டிலும் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

எனவே தமிழ் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள தமது ஆய்வு முடிவுகளை எல்லாம், நாகசாமி தமது நெருங்கிய நண்பரான தி.மு. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து விவாதித்தாரா? இல்லையா? அந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு நாகசாமிக்கு இருப்பதாக நான் கருதுகிறேன்

அந்த பொறுப்பினை நாகசாமி தட்டிக்கழித்தால், தமிழ் தொடர்பாக நாகசாமி தம் மனதில் 'உள்ளொன்று வைத்து', அதனைக் கருணாநிதியிடம் மறைத்து, புறத்தில் தமிழ் தொடர்பாக வேறு நிலைப்பாட்டினை நீண்ட காலமாக கருணாநிதியிடம் விவாதித்து வந்தாரா? அல்லது நாகசாமி தமிழ் தொடர்பாக இப்போது வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களிடம் அதை மறைத்தே பயணித்தாரா? யார் யாரை எமாற்றினார்கள்? அல்லது நாகசாமியும் கருணாநிதியும் கூட்டணியாகதமிழ்நாட்டு மக்களை எமாற்றினார்களா?

பல வருடங்களுக்கு முன், 'தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ளதி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மேடையில்  அதை நடித்துக் காட்டிய நிகழ்ச்சிகளும் ஆழ்ந்த ஆய்விற்குரியவையாகும். அதாவது அறிவுபூர்வ போக்கு பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் வளர்ந்த காலக் கட்டத்தில், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்ற தமிழரின் 'ஆணி வேர்கள்' தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரத்தை வலிமையுடன் பெரியார் மேற்கொண்டு வந்தார். 1949இல் தி.மு. தோன்றி, 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று அறிவிப்புக்கு இணங்க, பெரியாரின் நிலைப்பாட்டை ஒட்டி, அந்தப் பிரச்சாரப் போக்கில் தமிழ் தொடர்பாகவும் தி.மு. பயணித்ததா? அதில் அண்ணாவின் நிலைப்பாட்டிற்கும், கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டிற்கும் எப்போது வேறுபாடு முளைவிட்டு, வளர்ந்து, மேலேக் குறிப்பிட்ட விளைவில் இன்று உள்ளது என்பதும் ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும்.

மேலேக் குறிப்பிட்ட போக்குகள் தமிழை வளர்த்ததா? அல்லது வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்தி, வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

தனிமனித செல்வாக்கில் சிறையில் சிக்கிய போக்கிலிருந்து, எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குத் தற்காலிக 'விடுதலை'  கிடைத்த காரணத்தால், தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாகி, வளர்ந்து, பின் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் நிதி நெருக்கடியிலும், மேலேக் குறிப்பிட்டப் போக்குகளிலும் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(‘தமிழ்நாட்டுதிராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தினை அண்ணா உருவாக்கினாரா? என்ற ஆராய்ச்சிக்கும் இடம் இருக்கிறது.

தாய்மொழி தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் தமிழருக்கு கேடென .வெ.ரா அவர்கள் பிரச்சாரம் செய்து வந்த சூழலில், 1967இல் அண்ணா முதல்வராகி, இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தி, திருவள்ளுவர் மட்டுமின்றி, 'தீ பரவட்டும்' என்று அண்ணாவால் கண்டிக்கப்பட்ட 'கம்ப ராமாயணத்தை' எழுதிய கம்பருக்கும், மற்ற பழந்தமிழ் இலக்கிய படைப்பாளர்களுக்கும், சென்னை மெரினாவில் சிலைகள் அமைத்தார். அந்த தோற்றங்கள் எல்லாம், திருவள்ளுவர் தோற்றத்தை போலவே, எந்த சான்றுகளும் இன்றி, கற்பனையில் வடிக்கப்பட்டவையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  அண்ணாவின் 'அந்த' சாதனை தொடர்பாகவும் .வெ.ரா அவர்கள் என்ன கருத்து வெளியிட்டார்? என்பதையும் ஆராய வேண்டும்.

அது போலவே, .வெ.ரா அவர்களின் தமிழ் இலக்கியங்களை கண்டிக்கும் போக்கிற்கு வலிவு சேர்த்து பயணித்த அண்ணா, அந்த நிலைப்பாட்டிருந்து மாறி, தமிழ் இலக்கியங்களையும், அதன் படைப்பாளர்களையும் போற்றி, சிலைகள் எடுக்கும் அளவுக்கு மாறியது தொடர்பாக, அறிவுபூர்வ விளக்கங்களை அண்ணா வெளிப்படுத்தியுள்ளாரா? என்பதையும் ஆராய வேண்டும்

.வெ.ரா அவர்கள் தமது கொள்கையில் சிக்கியவர்களை எல்லாம், தாய்மொழி அடிப்படையிலான‌ 'அடையாள இழப்புக்கு' உட்படுத்தி, அதன் விளைவான உலக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளபலவகை போதைகளுக்கு ஆட்படும் வாய்ப்புகளைக் கூட்டிய போக்கிற்கு;

தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக அண்ணாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும், 'இரண்டும் கெட்டான்' போக்கில், அந்த 'அடையாள இழப்பு' என்பதானது;

'கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், வீரமணி' உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பதே 'அவமரியாதை'யாக கருதப்படும் அளவுக்கும்பேராசிரியர்களும், துணைவேந்தர்களும் 'குறுக்கு வழியில் உயர' பின்பற்றிய அந்த போக்கில் அரங்கேறிய ஆட்சிகளில், 'தரகு, கள்ளச்சாராய விற்பனை, ரவுடி' உள்ளிட்ட பின்னணியில் 'வளர்ந்து அதிவேக பணக்காரரானவர்களுக்கு' அவர்களின் உற்றத்திலும், சுற்றத்திலும், சாதியிலும், கட்சிகளிலும் கிடைக்கும் 'அதீத' மரியாதையானது,' வாழ்வியல்  முன்மாதிரியாகபோற்றப்படும் அளவுக்கும், அவர்களில் 'அதி புத்திசாலிகள் தமிழ்த் தேசிய புரவலர்களாக' உணர்ச்சிக் கவிஞர்களாலும், பேச்சாளர்களாலும், எழுத்தாளர்களாலும், 'இந்துத்வா, பார்ப்பன எதிர்ப்பு' (?) தலைவர்களாலும் புகழப்படும் அளவுக்கும்விளைவுகளை ஏற்படுத்தியதா? என்ற ஆராய்ச்சிக்கும் இடம் இருக்கிறது
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு கேடானதா? தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

மேற்குறிப்பிட்ட விவாதத்தினை முதல்வராக அண்ணா இருந்தபோது, சுயலாப நோக்கற்ற தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் முன்னெடுத்திருந்தால்;

தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தினை அண்ணா உருவாக்கியிருக்க மாட்டார்.

'தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ள  தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்ட நிகழ்ச்சிகளும், வருங்காலத்தில் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும்? என்று கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்த ஒளவை நடராஜன், நாகசாமி போன்ற இன்னும் பலர் திருக்குறள் (448) வழியில் 'இடிப்பாராக' பயணித்திருந்தால்;

'அந்த' அடித்தளத்தின் மேல், காலத்தால் அழிக்க முடியாத, மேற்குறிப்பிட்ட அவமானகரமான கட்டிடத்தை எழுப்பும் துணிச்சலானது, தி.மு. தலைவராகவும். தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கும் வந்திருக்காது; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட விவாதங்கள் பொது அரங்கில் வெளிப்படுவதை, 'சமூக கீரி பாம்பு சண்டை' செல்வாக்குடன் வலம் வந்ததானது,  'பார்ப்பன சூழ்ச்சி, ஆரிய சூழ்ச்சி' என்று எளிதில் அச்சுறுத்தி இருட்டில் தள்ள வலம் வகுத்தது. இனி அது தொடர வாய்ப்பில்லை.

இனி தமிழ்நாட்டில் 'சமூக கீரி - பாம்பு சண்டை' எடுபடாது. ஏனெனில் இது டிஜிட்டல் யுகம். இன்றைய படித்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் கவர்ச்சிகர பேச்சிலும் எழுத்திலும் ஏமாற மாட்டார்கள்; எனது தலைமுறையில் ஏமாந்தது போல

இதுவரை தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று முடிவினை நெருங்கியுள்ள 'சமூக கீரி பாம்பு சண்டைகள்' எல்லாம், இளம் இயக்குநர்களின் வியாபார ரீதியில் வெற்றி பெறும் நகைச்சுவை திரைப்படங்களுக்கான, திரைக்கதை வசனங்களை உருவாக்கத் துணைபுரியும் கட்டம் நெருங்கி விட்டது

தி.மு. தலைவர் கருணாநிதியின் 'தொல்காப்பியப் பூங்காவில்' இருந்த பிழைகளை வெளிப்படுத்திய தமிழ்ப்புலமையாளர் .நக்கீரன் சாகும் வரை தன் நண்பர்களின் பாதுகாப்போடு வாழ வேண்டி நேரிட்டது.
(‘'திராவிடர், திராவிட'  சிறையிலிருந்து,              தமிழை எவ்வாறு மீட்க முடியும்?; http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html)


அந்த 'தொல்காப்பிய பூங்கா' கொடுத்த துணிச்சலின் தொடர்ச்சியாகவே;

'தாம் இசை அமைத்தது சிம்பொனி அல்ல, ஓரடோரியோ இவை வடிவம்' என்று 2005 சூன் முதல் வார 'ஆனந்த விகடனில்' பேட்டியளித்த இளையராஜாவை பாதிரியார் ஜெகத் கஸ்பார் வெளியில் தெரியாத நெருக்கடிக்குள்ளாக்கி, 'திருவாசகம்சிம்பொனி ஆரடோரியோ' என்று மேற்கத்திய இசையில் இல்லாத ஓன்றில் அது வெளிவந்துள்ளதாக அறிவித்து, குடியரசு தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு இந்தியாவையும் முட்டாளாக்கி, உலக இசை அறிஞர்களின் பார்வையில்  இந்தியாவை கேலிக்குள்ளாக்கிய வரலாற்றையும் 'திராவிட அரசியல்' சந்திக்க நேர்ந்தது.
(http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html

இன்று கருணாநிதி - நாகசாமி கூட்டணி    தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பமானது மரண வாயிலை நெருங்கி விட்டது.

இளம் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இனி அச்சமின்றி தமிழ் தொடர்பான தமது ஆய்வுகளை முன்னெடுக்கலாம்.

கருணாநிதி - நாகசாமி கூட்டணி    தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பத்தில் இசைத்தமிழும் சிக்கி சீரழிந்துள்ளதையும், ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

புதுக்கவிதை எழுதி கிடைத்த விளம்பரத்தில், பின் தி.மு. தலைவர் கருணாநிக்கு நெருக்கமாகி, திரை இசையில் ஆதிக்கம் செலுத்தினார் வைரமுத்து, அந்த பின்னணியில் திரை இசையில் நுழைந்த வைரமுத்து எழுதிய பாடல்கள் மூலமாக தான், சுருதி சுத்தமற்ற(Defective Pitch) எழுத்துக்கள் அடங்கிய சொற்கள் எல்லாம் திரை இசையைக் கெடுத்து வருகின்றனவா? என்ற கேள்வியை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

கருணாநிதி - நாகசாமி கூட்டணி    தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பமானது மரண வாயிலை நெருங்கியுள்ளதன் அறிகுறிகள், இசைத்தமிழிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

தமிழில்சுருதி சுத்தமான‌' புதிய இசை மலரும் காலமும், ஆதாய அரசியல் மரணித்து, புதிய அரசியல் போக்கு மலரும் காலமும், பின்னிப்பிணைந்து நெருங்கி வருவதன் அறிகுறியாகவே, 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக 'பீறிட்டு' வெளிப்பட்ட பாடல்கள் எல்லாம் நல்ல அறிகுறியாகவே எனக்கு பட்டது; பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உச்சரிக்கும் போக்கில். (‘'கொலைவெறி', 'பேட்ட' பின்னணி இசையானபாடல்கள், 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'’; 

வைரமுத்துவின் திரைப்பாடல்களில் சுருதி சுத்தமற்ற எழுத்துக்களை கணினி மூலமாக ஆய்வு செய்து வெளிப்படுத்த முடியும். அந்த ஆய்வு முடிவுகளின் பின்னணியில்மேற்குறிப்பிட்ட பாடல்களின் ஒலிப்பதிவுகளையும் ஆய்வு செய்து, இசை அழகியலுக்கும் சுருதி சுத்தமுள்ள எழுத்துக்களுக்கும் மீண்டும் 'திருமணம்' செய்வதற்கான நுட்பத்தையும் வெளிப்படுத்த முடியும். ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்களும், உரிய நிதி உதவியும் கூடிய திட்டத்திற்கு (Project) நான் உதவ முடியும்.

தமிழைச் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திய போக்கே, தமிழின் வீட்சிக்கு வித்திட்டு, அந்த போக்கில் தமிழ்நாடு சீரழியும் விளைவில் முடிந்தது. எனவே தமிழ்நாட்டின் மீட்சிக்கான முயற்சிகளில், சுயநல அரசியல் சிறையில் இருந்து தமிழை விடுதலை செய்தாக வேண்டும். தமிழால் பிழைக்க வேண்டிய தேவையின்றி, சுயலாப நோக்கின்றி தமிழின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டால், 'அந்த' விடுதலை சீக்கிரம் நடைபெற வாய்ப்புள்ளது.

அதற்கு முன்முயற்சி செய்பவர்கள் சமூக முதுகெலும்புள்ள புலமையாளர்களாகவும், தமிழால் பிழைப்பவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிபூர்வ இரைச்சலை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

புலமையாளர்களை எவ்வாறு மதிப்பது? தமிழை வளர்க்க, முன்னுதாரணமான முறையில் எவ்வாறு முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நிறுவினார்? தமது ஆட்சியைக் குறை சொன்ன தமிழ்  இசை அறிஞர் வீ.பா,கா சுந்தரத்தை மேடையில் சென்று, அணைத்து, 'தமிழ் இசைக்கு என்ன செய்ய வேண்டும்? என்று முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரை உலகத்தமிழ் மாநாட்டு மேடையில் கேட்டதற்கு சாட்சிகளாக, பொன்னையன், புலமைப்பித்தன் போன்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
( ‘எம்.ஜி.ஆர்  ", ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்(1)’; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பின், முதல் முறையாக கருணாநிதி மற்றும் சசிகலா குடும்ப ஆட்சிகளில் சிக்காமல், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் இருந்து, எந்த அளவுக்கு ஆளுங்கட்சி தப்பிக்கிறது? என்பதைப் பொறுத்தே, தமிழ்நாடு சீரழிவில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு ஆளுங்கட்சி தப்பிப் பயணித்தாலும், அல்லது 'அந்த' சூழ்ச்சியில் சிக்கி மடிந்து, வேறு ஊழல் குடும்ப அரசியலில் சிக்காத புதிய ஆளுங்கட்சி வெளிப்பட்டாலும்;

எம்.ஜி.ஆர் பாதையில், தமிழக அரசு எவ்வாறு பயணிப்பது? என்ற கேள்விக்கான விடையும் அடுத்து வருகிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் வெளிப்பட்ட கீழ்வரும் சிக்னல்களும் முக்கியமானவையாகும்.

1. தி.மு. தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம், கி..பெ.விஸ்வநாதன் போன்ற புலமையாளர்களை மிகவும் மதித்து ஆலோசனைகள் பெற்றது;

2. அடிவருடும் போக்கற்ற தன்மானமுள்ள பேரா.வி..சுப்பிரமணியன் விதித்த நிபந்தனைகளை ஏற்று, ஊழலுக்கும், ஆளுங்கட்சி குறுக்கீடுக்கும் வழியின்றி, இந்தியாவிற்கே முன்னுதாரணமாகும் வகையில், தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிறுவியது.
3.  அது போலவே, மின்வாரியத் தலைவராக பி.விஜயராகவன் செயல்பட்டது

4.  தமிழ்நாட்டை குடும்ப அரசியலில் இருந்து மீட்டது.

5) புலமையாளர்களை மிகவும் மதித்து, தமிழையும், புலமையையும் 'கட்சி அரசியல் சிறை'யிலிருந்து துணிச்சலுடன் விடுவித்தது.

அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில், சிலப்பதிகாரம் (அரங்கேற்று காதை) இசை தொடர்பாக முன் நிறுத்திய 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' செயல்நுட்பம் கீழ்வருமாறு பயணித்தல் சாத்தியமாகும்.

மேற்குறிப்பிட்டவாறு, 1967 முதல் சாகும் வரை, அண்ணா பயணித்த வழியிலும், பின் அந்த வழியில் சாதனைகள் புரிந்த எம்.ஜி.ஆர் வழியிலும்;

'வந்ததை', டிஜிட்டல் யுகத்தில் தமிழின், தமிழ் இசையின் அடுத்தக்கட்ட புலமை திசையில் வளர்த்து, 'இசை இழை' (Musical Thread), 'இசை மொழியியல்'(Musical Linguistics), 'உலக இசைக்கான தாள இலக்கணம்' (Universal Percussion Grammar), 'இயற்கைநட்பு தோல் பதனிடும் தோல் தொழில்நுட்பம்' (Bio-friendly Leather Technology) போன்ற வரிசையில் இன்னும் அதிகமாகவெளிப்பட்டு வரும் கண்டுபிடிப்புகள் மூலமாக 'வருவது ஒற்றி' பயணிப்பதே மீட்சிக்கான வெற்றி பெறும் வழியாகும்

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அறிவுஜீவிகள் மத்தியில், தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் 'பிறர் பார்வை அறிதல்' (Empathy) மூலமாக, தத்தம் தவறான புரிதல்களை அடையாளம் கண்டு, திருத்திப் பயணிப்பவர்கள் எல்லாம், அந்த முயற்சிக்கு ஒத்துழைக்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கணிப்பாகும்.
(‘அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில் தமிழின், தமிழ் இசையின் மீட்சி’; http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_19.html)



Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free excerpt: 

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264


No comments:

Post a Comment