Tuesday, October 8, 2019


தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' (3)


கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழ்நாட்டுத் தொல்லியலுக்கு நேர்ந்த பாதிப்புகள் ?


கடந்த பதிவில் விளக்கியவாறு, குடும்ப ஊழல் பாதுகாப்பு கவசமாக, தி.மு. தலைவர் கருணாநிதி உருவாக்கி, பின் ...தி.மு. ஆட்சியில் நடராஜன், விடுதலைப்புலி ஆதரவாளர்களையும் தமது அடிவருடிகளாக்கி வளர்த்தெடுத்த, 'சமுக கீரி பாம்பு சண்டையானது' முடிவுக்கு வந்து விட்டது; ஜெயலலிதாவும், நடராஜனும், கருணாநிதியும் மறைந்த பின்னர்.

மரணவாயிலில் உள்ள 'அந்த' சண்டைக்கு புத்துயிர் கொடுக்க, கீழடி அகழாய்வு பிரச்சினையை தவறாகப் பயன்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. 'அந்த' முயற்சியை ஆராய்வதன் மூலமாக, கருணாநிதி - நாகசாமி கூட்டணியானது, தொல்லியலை எவ்வாறு சீரழித்தது? என்ற கேள்விக்கான விடைகளைப் பெற முடியும்.

கீழடி அகழாய்வு தொடர்பான முதல் தடயம் 1974இல் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்திற்கு கிடைத்திருக்கிறது. அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். அப்போதைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கீழடியில் கிடைத்த பொருட்களைப் பற்றி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதற்கு இன்றளவும் பதிலில்லையாம். பின்னர் 1976இல் முதல்வர் கருணாநிதியின் நெருக்கமான நண்பராக இருந்த, தமிழக அரசின் தொல்லியல் இயக்குநர் நாகசாமியின் பார்வைக்கு, கீழடி அகழாய்வு தொடர்பாக தமக்குக் கிடைத்த தடயங்களை முன்வைத்திருக்கிறார். 'உடனே அப்போது ஆய்வாளராக இருந்த வேதாசலம் என்பவரை  அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு போய் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்தார். அவற்றை வெளி நாடுகளுக்கு ஆய்வுக்கும் அனுப்பினார்.

அதற்குப் பிறகு 1977-இல், சென்னையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு இவரையும் அழைத்திருந்தனர். இவர் கீழடியிலிருந்து எடுத்துக்கொண்டு போன பொருட்களைப் பற்றிய ஆய்வு முடிவுகளை நாகசாமி அவர்கள் விளக்கி சொன்னார்.இறுதியில், கீழடியில் கிடைத்த பொருட்கள் சங்ககாலத்தைச் சேர்ந்தது தான் என்று ஆய்வு முடிவில் அறிவித்தனர். ஆய்வாளர்கள் எல்லோர் முன்னிலையிலும் ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்து மரியாதை செய்தார்.'

2014இல் மோடி பிரதமரானார். 'கீழடியில் உள்ளது போலவே குஜராத் மாநிலத்தில்தோலாவிராஎன்ற இடத்தில் 296-சதுர கிலோ மீட்டார் பரப்பளவில் ஒரு புதை மேடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குத் தேவையான சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளையும், குடியிருக்க வீடுகளையும் நரேந்திர மோடி முதல்வராக இருந்த நேரத்தில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அவர் ஒரு வரலாற்று ஆர்வலர் என்ற தகவல் தெரிந்தது. “கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்என பிரதமருக்கு ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

ஆசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய கடிதம் பிரதமர் மோடி அவர்களின் அலுவலகத்தில் சேர்ந்தது.

ஒரு வாரத்தில் இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அன்றே கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு தான் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு கீழடிக்கு வந்தார்.'

குஜராத் முதல்வராக இருந்த மோடி, குஜராத்தில் கீழடியில் இருந்ததைப் போன்ற அகழாய்வுத்தடயம் கிடைத்தவுடன் அகழாய்வுக்கு என்ன முயற்சிகள் எடுத்தார்?

தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த கருணாநிதியும், அவரது நண்பர் நாகசாமியும் கீழடி அகழாய்வுக்கு என்ன முயற்சிகள் எடுத்தார்கள்? 1974 முதல் சாகும் வரை எத்தனை முறை தமிழ்நாட்டின் முதல்வராக கருணாநிதி இருந்தார்? வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலங்களில் மத்தியில் கருணாநிதியின் மருமகன் மாறன், பேரன் தயாநிதி மாறன், மகன் மு..அழகிரி உள்ளிட்டு யார், யார் அமைச்சர்களாக இருந்தார்கள்?

கருணாநிதி இன்று இல்லை. மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கானவிடைகளை அளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பானது நாகசாமிக்கும், மத்தியில் அமைச்சர்களாக இருந்த தி.மு.கவினருக்கும் இருக்கிறது.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வில், மத்திய தொல்லியல் துறையானது, காங்கிரஸ் தி.மு. ஆட்சியில் பயணித்தது போலவே, பிரதமர் மோடி ஆட்சியிலும் 'எந்திர' ரீதியில் செயல்பட்டு, கீழடி அகழாய்வு ஒரு பிரச்சினையாக வெளிப்பட வழி வகுத்துள்ளது. மோடி ஆட்சியில் தான், சி.பி. குளறுபடி காரணமாக, 2ஜி குற்றவாளிகளும், நூற்றுக்கணக்கான தொலைபேசி கேபிள்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்திய குற்றவாளிகளும், இன்னும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சியில் தான், தமிழக பா.. எதிர்த்த 'மாதொரு பாகன்' ஆங்கில நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதும் கிடைத்துள்ளது

பிரதமர் மாறினாலும், சீர்குலைவில் இருந்து மாற நீண்ட காலம் ஆகும் அளவுக்கு, மத்திய அரசில் எந்தெந்த துறைகள் எந்த அளவுக்கு காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் சீர் குலைந்திருந்தது? என்ற ஆராய்ச்சிக்கும் தேவை எழுந்துள்ளது.

'இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ்' என்று பிரதமர் மோடி உலகிற்கு அறிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையானது, அந்த நிலைப்பாட்டிற்கு எதிரான திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வழக்கறிஞர் கனிமொழி மதி பொதுநல அக்கறையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கீழடி அகழாய்வுக்கு புத்துயிர் கொடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாற்றில் இடம் பெற்று விட்டார். அது மட்டுமல்ல, அறிவுபூர்வமாக எவ்வாறு பேட்டி கொடுப்பது? என்பதற்கும் அவர் சிறந்த முன்னுதாரணமாகி விட்டார்.

கீழடியில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு பிரமிக்க வைக்கும் சங்க கால தடயங்களை வெளிப்படுத்தியவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவர்.கீழ் வரும் காணொளியில், கடந்த சுமார் 70 வருடங்களாக ஆய்வு சான்றுகள் பற்றிய தெளிவு இன்றி உணர்ச்சிபூர்வமாக தமிழ்நாடு பயணித்து வந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.

கவர்ச்சிகர பேச்சிலும் எழுத்திலும் மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்த தி.மு. 1949இல் தோன்றி, 1967இல் ஆட்சியைப் பிடித்தது. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என அறிவித்து, தமிழர்களின் வரலாற்றையே இழிவு செய்து, தமிழர்களில் மத்தியில் வரலாற்று உணர்வானது மழுங்கும் வகையில் .வெ.ரா அவர்கள் பிரச்சாரம் செய்தார். அதன் தொகுவிளைவு பற்றி கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

1938இல் வெளிவந்து, மீண்டும் 2004இல் மறுபதிப்புக்குள்ளான 'A Manual of The Pudukkottai State’ தொகுப்புகளை வாங்கி, அதில் உள்ள  'உலக இசையியல் அதிசயமான' (பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தெரியாத) குடுமியான்மலை இசைக்கல்வெட்டு பற்றி படித்திருக்கிறேன்.

நார்த்தாமலை பகுதியில் இருந்த, பல மில்லியன் டாலர் பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டக் கூடிய, விலைமதிப்பில்லாத பாரம்பரிய செல்வங்களில்;

அந்த பகுதியில், 'திராவிட கிரானைட் ஊழல் சுனாமி'யில் அழிந்து போன செல்வங்கள் யாவை?

என்று அடையாளம் காண்பதற்கு, மேலே குறிப்பிட்டுள்ள நூல் தொகுப்பு பயன்படும்.

அந்த பாரம்பரியச் செல்வங்களை விட, காலத்தால் மிகவும் பிற்ப்பட்ட பாரம்பரியச் சின்னங்களின் மூலம், லண்டன், பாரீஸ், பாங்காக், உள்ளிட்டு உலகில் உள்ள இன்னும் பல பகுதிகள் எல்லாம், எந்த அளவுக்கு வருமானங்கள் ஈட்டி வருகின்றன? என்பதை அறிந்தவர்களுக்கே;

நார்த்தாமலையில் காலத்தால் முந்திய, இன்னும் அதிக பிரமிப்பூட்டும் பாரம்பரியச் செல்வங்களால், தமிழ்நாடு இதுவரை எவ்வளவு வருமானத்தை இழந்துள்ளது? என்பதை ஓரளவு கணிக்க முடியும்.

ஓரு பாரபட்சமற்ற விசாரணக்கு தாமதமின்றி உயர்நீதிமன்றம் மூலம் ஆணையிட்டால், நார்த்தாமலையில் எஞ்சியுள்ள பாரம்பரிய செல்வங்களை பாதுகாத்து, பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டும் வழிகளை உருவாக்க முடியும்
(‘உலகிலேயே முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும் வாழ்பவர்கள் மட்டுமல்ல;'பாரம்பரிய செல்வ வாசனை தெரியாத கழுதைகளா', வரலாற்றுக் குற்றவாளிகளான, தமிழர்கள்?’; 

உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கனிமொழி மதி  வழக்கு தொடுக்கும் முன்பே, தமிழக பா.. விழிப்புடன் செயல்பட்டு, மத்திய தொல்லியல் துறையைச் சரியாக செயல்பட வைத்திருந்தால், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மாற்றல் ரத்தாகி, அவர் கீழடி அகழாய்வில் தொடர்ந்து பங்களித்திருப்பார். இன்று கீழடியில் பா..கவைக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் வாயடைக்க, தமிழக பா.. தமிழ் நாட்டிற்கு சம்பந்தமில்லாத வடநாட்டு கட்சி என்ற பொதுமக்களின் கருத்தும் மறைந்திருக்கும்; தமிழ்நாட்டில் தமிழக பா..  வேர் பிடிக்க அது துணை புரிந்திருக்கும்.

கீழடி அகழாய்வு போல, தபால் துறைத் தேர்வு தமிழில் எழுதுவது தொடர்பான பிரச்சினையிலும் விழிப்புடன் செயல்பட்டு பேர் வாங்காமல் தூங்கி, வாலாகவே தமிழக பா.. வெளிப்பட்டது; தமிழ்நாட்டின் திராவிடக்கட்சிகள் பேர் வாங்கும் வகையில்.
After protests by Rajya Sabha members from Tamil Nadu against the dropping of regional languages, especially Tamil, as a medium of the examination held by the Postal Department for recruitment of postmen, Communications Minister Ravi Shankar Prasad on Tuesday said the test held on Sunday would stand cancelled. A fresh one would be held in all regional languages, he said. (https://www.thehindu.com/news/national/exam-for-postal-department-appointments-to-be-re-conducted-in-local-languages/article28480621.ece)

அது போலவே, மத்திய அரசின் 'புதிய கல்விக்கொள்கையை' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வழக்கு தொடரப்பட்டுள்ளது
(http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jul/19/centres-response-sought-on-plea-for-tamil-draft-of-nep-2006158.html). 'புதிய கல்விக்கொள்கையை' மத்திய அரசானது, தமிழில் வெளியிட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், அதனை தமிழக பா.. வரவேற்றால், அது கேலிக்கிடமாகாதா?

இந்தியாவில் வித்தியாசமான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; பிரிவினைக்கான மென்சக்தியானது இந்திய விடுதலை முதலே வலிமையாக வெளிப்பட்ட‌ அளவுக்கு.
(http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html) அது தெரியாமல், அரசியல் தற்கொலைப்பாதையில் (‘எச் ராஜாவுக்கு முன்னோடியான பிரதமர் நேரு?’;
http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.htmlதமிழ், தமிழ்நாடு நலன்கள் பற்றிய 'சமூகஉணர்நுட்பக் கருவிகளாக' (Social sensors) செயல்பட்டு, மத்திய அரசை செவிசாய்க்க வைக்கக் கிடைத்த அரிய வாய்ப்புகளை எல்லாம் (கீழடி, அஞ்சல் துறை, தமிழில் புதிய கல்விக்கொள்கை) தவற விட்டு, தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பும், பிரிவினைக்கான மென்சக்தி ஆதரவும் வளரும் வகையில் தமிழக பா.. செயல்பட்டு வருகிறது.

தமிழக பா..கவின் இது போன்ற போக்குகள் எல்லாம், 'சமூக கீரி - பாம்பு' விளையாட்டுக்கு 'ஆக்சிஜன்' போல ஆயுளை நீட்டிக்கச் செய்கின்றன.  தமிழ்நாட்டு மக்களிடையே மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடியை (crisis of confidence) ஏற்பட்டுள்ளதை விளக்கி (http://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html);

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், 2018 சனவரி 17 பதிவில் கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

'இதே போக்கு நீடிக்குமானால், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.. மட்டுமல்ல, பா..கவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் 'ஆர்.கே.நகர் பாணி அதிர்ச்சி வைத்தியம்' காத்திருக்கிறது;என்பதும் எனது கணிப்பாகும்.' 

இவை போன்ற அபாய எச்சரிக்கைகளை புறக்கணித்தே, தமிழக பா.. பயணித்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தது. 

மேற்குறிப்பிட்டவாறு 'சமூக கீரி பாம்பு விளையாட்டிற்கு புத்துயிர் கொடுக்கும், மோடி எதிர்ப்பு  சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுக்களை அகற்றி இந்தி கல்வெட்டுக்களை புகுத்துவதாக ஒரு வீடியோ வலம் வந்தது. அது ஒரு பொய்யான தகவல் என்பது தொடர்பான விளக்கங்கள் வெளிவந்த பின்னும் அது சுற்றில் இருக்கிறது. அதன் தொகுவிளைவாக, மோடி எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மையும் பலகீனமாகி வருகிறது.

இன்று கீழடி அகழாய்வினைப் பிரச்சினையாக்கி, அதனை 'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு' என்ற போக்கில், ஊடக வெளிச்சத்துடன் யார், யார் வலம் வருகிறார்கள்? என்று ஆராய்ந்தால்;

அவர்கள் எல்லாம் மரணவாயிலில் உள்ள 'சமூக கீரி பாம்பு சண்டை'க்குப் புத்துயிர் கொடுக்க, கீழடி அகழாய்வு பிரச்சினையை தவறாகப் பயன்படுத்த (Misuse) முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதன் மூலமாக, தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த கருணாநிதியும், அவரது நண்பர் நாகசாமியும் கீழடி அகழாய்வுக்கு என்ன முயற்சிகள் எடுத்தார்கள்? என்ற கேள்வியை இருட்டில் தள்ள, அவர்கள் எல்லாம் முயற்சிக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது போன்ற முயற்சிகள் இனி தமிழ்நாட்டில் செல்லாக்காசாகி விடும் என்பதையும், தமிழின், தமிழ்நாட்டின் நலனுக்காக கட்சி வேறுபாடுகளை எல்லாம் ஒரங்கட்டி ஓரணியில் திரளும் சூழலும் கனிந்து விட்டது என்பதையும் கீழ்வரும் காணொளி தெளிவுபடுத்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=z-XZa9xLPHM&feature=youtu.be

முனைவர் நாகசாமி ‘Mirror of Tamil and Sanskrit’ என்ற புத்தகத்தில் தமிழ் தொடர்பாக வெளிவந்த ஆய்வு முடிவுகள் எனது கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த புத்தகத்தில் தமிழ் தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள தமது ஆய்வு முடிவுகளை எல்லாம், நாகசாமி தமது நெருங்கிய நண்பரான தி.மு. தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்து விவாதித்தாரா? இல்லையா? அந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் கருணாநிதி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு நாகசாமிக்கு இருப்பதாக நான் கருதுகிறேன்

தொல்காப்பியம் பற்றிய நாகசாமியின் கருத்தானது, அவரின் மொழியியல் அறிவைக் கேள்விக்குறியாக்கியுள்ளது

'இயற்பியல்' (Physics) பேராசிரியராகப் பணியாற்றிய எனக்கும் தொல்லியலில் பயன்படுத்தப்படும் 'கார்பன் காலக்கணக்கீடு' பற்றியும் தெரியும். ஹாரப்பா உள்ளிட்ட பிற அகழாய்வுகளின் 'கார்பன் காலக்கணக்கீடுபற்றி சந்தேகம் தெரிவிக்காமல், கீழடி அகழாய்வு தொடர்பாக நாகசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். (https://www.youtube.com/watch?v=iXmSY1KA8T4&feature=youtu.be) தொல்லியலில் பயன்படுத்தப்படும் 'கார்பன் காலக்கணக்கீடு' உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய நாகசாமியின் புரிதலும் கேள்விக்குறியாகியுள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நாகசாமி காலத்தில் தொடங்கிய அகழாய்வுகள் உலக அளவில் (அதே காலக்கட்டங்களில் தொடங்கிய‌ அகழாய்வுகளுடன் ஒப்பிட) இணை சொல்ல முடியாத அளவுக்கு தொல்லியல் கோணத்தில் வெளிப்படையும் பொறுப்பேற்பும் உரிய முன்னேற்றமும் இன்றி, நடைபெற்றதா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது

ஐராவதம் மகாதேவன் அறிவு நேர்மைக்கும் சமூக பொறுப்புணர்விற்கும் முன்னுதாரணமாக, தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் ஒரு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்தவர். அதற்கு எதிரான திசையில் நாகசாமி பயணித்தாரா? அதனால் தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளும், அதன் மூலமாக தொல்லியல் தொடர்பான சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகளும் (தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சிவன் கோவிலில் உள்ள '--சி-வா-' கல்வெட்டுகள், அரச்சலூர் இசைக்கல்வெட்டு, குடுமியான்மலை இசைக்கல்வெட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள இசைக்கல்வெட்டுகள்) பாதிக்கப்பட்டனவா? என்ற கேள்விகளை எழுப்பும் எனது அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

நாகசாமி போன்று உயர் பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எல்லாம்தருமபுரி மாவட்ட கம்பைநல்லூர் சிவன் கோவில் 'நமசிவாய' கல்வெட்டுகள் தொடர்பானகண்டுபிடிப்பை அங்கீகரிப்பதன் மூலமே, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கும் அது போன்ற அட்டவணை மற்றும் சக்கர வடிவ கல்வெட்டுகளும், அது போன்ற பல ஆய்வு முயற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டில் உள்ள தமிழ் எழுத்துக்களில் இசை மொழியியல் நுணுக்கம் (Musical Linguistics Technique) தொடர்பான கண்டுபிடிப்பை நாகசாமி அங்கீகரித்து இருந்தால், அந்த பகுதியானது உலக இசைப்பிரியர்களை எல்லாம் ஈர்க்கும் சுற்றுலாத்தளமாக மாறியிருக்கும். குடுமியான்மலை உலக இசைப்பாரம்பரிய சுற்றுலாத் தளமாக மாறாமல் இருப்பதற்கும் கருணாநிதி நாகசாமி - கூட்டணியின் செல்வாக்கே முக்கிய காரணமாகும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

எனது ஆய்வு முடிவுகளுக்கு எதிரான சான்றுகளைத் தேடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி, தவறுகள் வெளிப்பட்டால், அதனை பகிரங்கமாக எனது ஆய்வு வட்டத்தில் தெரிவித்து, திருத்தி பயணிப்பதும், எனது ஆய்வு வெற்றிக்கான இரகசியங்களில் ஒன்றாகும்.

அதைத் தவிர்த்து, எனக்குள்ள 'செல்வாக்கு என்ற காற்றில் ஊதிப் பெருத்த பலூனாக' எனது ஆய்வுகள் புகழுடன் வலம் வரலாம். ஆனால் எனது காலத்திலோ, அல்லது பிற்காலத்திலோ, 'அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின்' மூலமாக, 'அந்த' பலூன் உடைந்து நொறுங்குவதை, 'எந்த' செல்வாக்கும் தடுக்க முடியாது; டிஜிட்டல் யுகத்தில் அது எளிதாகியுள்ளதாலும். நிகழ்காலத்தில், 'தமிழ் தொடர்பான பெரியார் பலூன்' அவ்வாறு நொறுங்கும் படலமும் துவங்கி விட்டது

நாகசாமி விழிக்கவில்லையென்றால், 'தமிழ் தொடர்பான நாகசாமி பலூனும்' அவ்வாறு உடைந்து நொறுங்குவதைத் தவிர்க்க முடியாது

கருணாநிதி - நாகசாமி கூட்டணியால் தமிழுக்கு நேர்ந்த பாதிப்புகள் தொடர்பாக, அடுத்த பதிவில் பார்ப்போம்.



Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free excerpt: 

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment