ஆதாய அரசியலும் அரசியல் நீக்கமும் நீடிப்பதன் காரணமாக
தமிழ்நாட்டில்
இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து முகாம்களிலும் 50 வயதைத்
தாண்டி, பொதுப்பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலோர், 'விடையை முடிவு செய்துவிட்டு,
கணக்கினைச் சரி செய்யும் நோக்கில், தங்களின் நிலைப்பாட்டிற்கு உதவும் சான்றுகளையும்,
திரித்த சான்றுகளையும், பொய்களையும் முன்னிறுத்தி உணர்ச்சிப்பூர்வமாக வெறுப்பு அரசியலில்
பயணிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் விவாத நாகரீகம் இன்றி, எதிர்நிலைப்பாட்டில்
உள்ளவர் மீது வசை பாடும் போக்கில் உள்ளார்கள். எனது பதிவுகளால் எந்த உருப்படியான விளைவும்
நடந்ததாகத் தெரியவில்லை.
ஆனாலும் தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சி மற்றும் மீட்சி பற்றிய, எனது அறிவு மற்றும் அனுபவம்
அடிப்படையிலான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன்; வருங்காலத்தில் அது பலன் தரலாம்.
கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் (நேரடி மறைமுக
பலன்களுக்காக கட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும்
இருப்பவர்கள் தவிர) எனது பதிவுகளால், இது போன்ற எவரின் பதிவுகளாலும் கூட, தீண்டப்படாத
நிலையில் தொடர்கிறார்கள். ஆதாய அரசியலும், அரசியல் நீக்கமும் ஒழியும் வரை இது நீடிக்கும்.
எனவே நான் இனி பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கப் போவதில்லை.
எனது R & D projects ஆய்வுகளுக்கிடையில்
கிடைக்கும் நேரங்களில், காலனியத்திற்கு முன் இருந்த சமூக நிலை பற்றிய ஆய்வுகளுக்கு
நேரம் செலவிட உள்ளேன்.
ஆதாய அரசியலும் அரசியல் நீக்கமும், எதிர்பாராத வகையில்
விரைவில் முடிவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது; என்பதும் எனது கணிப்பாகும்.
No comments:
Post a Comment