Saturday, October 12, 2019


தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' (5)           

தமிழாயிருந்தாலும், தமிழ்நாட்டுத் தொல்லியலாயிருந்தாலும்


'தீதும் நன்றும் பிறர் தர வாரா'



காலனி ஆட்சியின் 'நன்கொடையாக' இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட (centralized) மத்திய அரசு தான் ஆட்சி செய்கிறது. எனவே மத்தியில் யார் ஆண்டாலும், 'அழுகிற பிள்ளைக்கு (மாநிலத்திற்கு) தான் பால் (பலன்) கிடைக்கும்'.

மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும், பா.. ஆண்டாலும், அது போலவே கர்நாடக மாநிலத்தை காங்கிரஸ் ஆண்டாலும், பா.. ஆண்டாலும்;

காவிரிப்பிரச்சினையில் கர்நாடக மாநில காங்கிரஸ், பா.. உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் அது போல காவிரிப்பிரச்சினையாயிருந்தாலும், கீழடிப் பிரச்சினையாயிருந்தாலும் ஓரணியில் ஏன் குரல் கொடுக்கக் கூடாது?

என்று தமிழக பா.. தலைவர்களில் ஒருவராகிய  கே.டி.ராகவன், (கீழடி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில்) கீழ்வரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழின், தமிழ்நாட்டின் நலனுக்காக கட்சி வேறுபாடுகளை எல்லாம் ஒரங்கட்டி ஓரணியில் திரளும் சூழலும் கனிந்து விட்டது என்பதற்கான 'சிக்னலும்' மேற்குறிப்பிட்டகாணொளியில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு முதல்வர்களாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருந்தது வரையில், அவரவரின் சுயநல அரசியல் லாபங்களுக்காக, மேற்குறிப்பிட்ட ஒற்றுமையானது செயல்வடிவம் பெற சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்தது. அவர்கள் இருவரின் மறைவிற்குப் பின், 'அந்த' ஒற்றுமையைக் கெடுக்கக்கூடிய வலிமையானது, எந்த தலைவருக்கும் இல்லை.

1967க்குப் பின் அரங்கேறிய ஊழல் ஆட்சிகளில் உரிய பராமரிப்பின்றி சீரழிந்த ஏரிகளை எல்லாம் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டி போட்டு தூர் வாறும் வரவேற்கத்தக்கப் போக்குகள் வெளிப்பட்டு வருகின்றன; 'கவர்ச்சிகரமாக' தமிழில் பேசி மக்களை ஏமாற்றப் பயன்பட்ட பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் செல்லாக்காசாகி வருகின்றார்கள். எனவே கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, கீழடி அகழாய்வுக்காகவும், தமிழின் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் வெளிப்படத் தொடங்கியுள்ள மேற்குறிப்பிட்ட ஒற்றுமையை எவர் கெடுக்க முனைந்தாலும், எளிதில் மக்களால் ஓரங்கட்டப் படுவார்க்ள்.

மத்திய அரசானது தமிழுக்கு எத்தனை கோடி பணம் ஒதுக்கினாலும், அதனைப் பயன்படுத்தி தமிழ் வளர வேண்டுமானால்;

தொடர்புள்ள அமைப்பானது திறன்மிக்கதாகவும் Competency, பொறுப்பேற்பும் , (Accountability), வெளிப்படைத்தன்மையும் (Transparency )  (Competency, Accountability and Transparency -CAT) கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்பார்த்த பலன் கிட்டாது.

மலேசியாவில் தற்போது நிதி அமைச்சராக இருக்கும் லிம் குவான் இங்க்,  எவ்வாறு 'CAT’- செயல்பூர்வமாக நிரூபித்தார்? என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

'CAT’ தொடர்பான முறையான விசாரணை மூலமாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்பட வாய்ப்புள்ள வகையில், சென்னையில் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம் காத்திருக்கிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், எனது 'திருக்குறளில் தமிழ் இசையியல்(Tamil Musicology in Thirukkual) ஆய்வினை மேற்கொண்ட போது கிடைத்த கசப்பான அனுபவங்கள் மூலமாக, அது வெளிப்பட்டது.

அந்த திட்டம் தொடர்பாக இடையில் நடந்த நேர்க்காணலில், முன்னாள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தர் .சுந்தரமூர்த்தி எனது ஆய்வுகளை மிகவும் பாராட்டினார்.

ஆனால் ஆய்வுத்திட்ட முடிவில் நடந்த நேர்க்காணலில், சிவில் பொறியியல் பேராசிரியராக இருந்தவர் நேர்க்காணல் தலைவராக(?) இருந்து அபத்தமாக கேள்விகள் கேட்டார்.

உதாரணமாக, ஆய்வு கட்டுரைகளில் ஒன்றில்;

(சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ள, யாழ் தொடர்பான) 'வார்த்தல்' என்ற சொல்லை உரக்கப் படித்து, 'CASTING' பற்றிய 'வார்தல்' என்ற சொல்லிற்குப் பதிலாக, 'வார்த்தல்' என்று பிழையாக போட்டிருக்கிறீர்கள்; என்று சற்று கோபமாக கேட்டார்.  நான் பொறுமையாக, அது யாழ் தொடர்பான சொல் என்று விளக்கினேன்.

தமிழ் இசையில் புதிதாக நான் கண்டுபிடித்தவைகளை படித்தவாறே, சற்று எரிச்சலாக;

"மம்மது போன்ற இசை அறிஞர்கள் உங்களின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டார்களா?" என்று கேட்டார்.

அதற்கு உண்மையான கீழுள்ள விளக்கத்தை தெரிவித்தால், அதனை 'அதிக பிரசங்கித்தனம்' என்று கருதி, இன்னும் கோபப்படுவார், என்பதால் பதில் சொல்லவில்லை.

பல வருடங்களுக்கு முன், நான் கல்லூரி முதல்வராக பணியாற்றிய காலத்தில், ஒரு முறை மம்மது தொலைபேசியில் பேசினார். அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது, 'Ancient Music Treasures- Exploration for New Music' என்ற எனது புத்தகத்தை அன்பளிப்பாக பெற்றதாகவும், 'இசையின் இயற்பியல்'(Physics of Music) பற்றி என்னிடம் நேரில் பாடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அது போலவே, மறைந்த தமிழ் இசை அறிஞர் வீ..கா சுந்தரமும், எனது ' தமிழிசையின் இயற்பியல் (Physics of Tamil Music)' முனைவர் பட்ட ஆய்வேட்டினைப் படித்த பின், 'இசையின் இயற்பியல்' பற்றி என்னிடம் நேரில் பாடம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

திருக்குறள் இசையியல் (Musicology) 'சாவி' (Key) துணையுடன் மேற்கொண்ட‌, தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' (Musical Linguistics) தொடர்பான எனது கண்டுபிடிப்பானது, சமஸ்கிருதத்தில் பாணினியின் இலக்கண நூலுடன் தொடர்புடைய 'சிவ சூத்திரங்களுக்கு' (https://en.wikipedia.org/wiki/Shiva_Sutras) பொருந்தும் வாய்ப்பிருப்பதை கண்டு, வியந்து, அதனை நேர்க்காணலில் துவக்கத்தில் குறிப்பிட்டேன். அவரோ மிகுந்த எரிச்சலுடன் அதை புறக்கணித்தார். உண்மையில் நாகசாமியின் தொல்காப்பியம் குறித்த நிலைப்பாட்டிற்கு எதிரான, தமிழுக்குப் பெருமை தருவது அந்த கண்டுபிடிப்பாகும். தமிழின் சிறப்பை கூட அறிய முடியாத, அறிவுபூர்வ பார்வையற்ற உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு மனநோயில், அவரும் சிக்கியிருக்கிறாரோ என்ற ஐயத்தை, அந்த புறக்கணிப்பானது எழுப்பியது.

அடுத்து நேர்க்காணல் குழுவில் இருந்த ஒரு ஆங்கிலப் பேராசிரியர்(?), 'சுரம்', 'சுருதி', 'அத்தம்' போன்ற சொற்களுக்கு, லெக்சிகன் விளக்கத்திற்கு மாறாக, தமிழிசையியல் தொடர்பான எனது கண்டுபிடிப்புகளை படித்து, சற்று கோபமாக, நான் சிறுபிள்ளைத்தனமாக பதிவு செய்திருப்பதாகவும், லெக்சிகனின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கமும் தந்தார்; அந்த நேர்க்காணலுக்கு முன்பேயே, காரைக்குடியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பாக நடந்த ஆய்வரங்கில், 'Pitfalls in the study & translation of the ancient Tamil texts' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தவன் நான், என்ற விபரம் கூட தெரியாமல்சுமார் 15 வருடங்களுக்கு முன்னேயே, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறையில், பேராசிரியர்கள் ஜெயதேவன்(லெக்சிகன் முதன்மை பதிப்பாசிரியர்), வீ.அரசு, மற்ற பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் முன்னிலையில், மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் தொடர்பான விளக்க உரையும் (lecture cum demo)  நிகழ்த்தியிருக்கிறேன்; பேரா.ஜெயதேவன் உள்ளிட்ட அனைவரின் பாராட்டுதலையும் பெற்றேன். (‘திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?’; http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html)

நேர்க்காணலில் தொடர்ந்த அபத்தங்களையும், அதன்பின் நான் மேற்கொண்ட முயற்சிகளில் கிடைத்த நம்பமுடியாத அனுபவங்களையும், பின்னர் நேரம் வாய்க்கும்போது பதிவு செய்வேன். அவற்றை மூலமாக(Source) கொண்டு,, வரும் காலத்தில் வாய்ப்பு கிட்டும்போது, திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் எண்ணமும் உள்ளது.

1970-இல் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது 'தமிழ்த்தாய் வாழ்த்து' (https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்தாய்_வாழ்த்து)  அது போல, கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக, மொழி வாழ்த்துப் பாடி அரசு நிகழ்ச்சிகள் தொடங்குவதானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. அது போலவே, அரசின் உயர் ஆய்வு நிறுவனத்தில், தொடர்புள்ளஆய்வுத்துறையின் நிபுணர்கள் இன்றி 'நேர்க்காணல்' நடத்திய வினோதமும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததாகத் தெரியவில்லை.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்விளைவான உணர்ச்சிபூர்வ தமிழ்ப்பற்றை நீட்டிக்கும் வகையில்உலகில் வேறெங்கும் இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து 1970இல் உருவானதா? அத்தகைய தமிழ்ப்பற்றானது அறிவுபூர்வ விமர்சனங்களை எல்லாம் ஓரங்கட்ட துணை போனதா? என்பது போன்ற கேள்விகளை, 1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள் எழுப்புகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2019/09/1965_28.html)


முறையான விசாரணை மூலம், அதன் பரிந்துரையில், உரிய விதிகளின்படிசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படும் நாளை எதிர்பார்க்கிறேன். அதன்பின், சட்டபடியான முறையில், வாங்கிய நிதியைத் திருப்பிக் கொடுத்து, எனது ஆய்வுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, அந்நூலை வெளியிட எண்ணியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

தனிப்பட்ட முறையில் நான் சந்திக்கும் தீதுக்கு நானே பொறுப்பாவேன். திராவிட அரசியலில் தமிழானது சிறையுண்டிருப்பதை அறிந்த நான், செம்மொழி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்வதை விரும்பவில்லை. பிறர் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆய்வு மேற்கொண்டதானது எனது தவறேயாகும். வற்புறுத்தியவர்கள் எல்லாம், எனக்கு நேர்ந்த அவமானத்தை எதிர்க்கும் சமூக முதுகெலும்பற்றவர்களாக வெளிப்பட்டுள்ளார்கள்தமிழ் அறிவுஜீவிகளின் சமூக முதுகெலும்பினை முறித்ததன் மூலமாகவே, தமிழானது திராவிட அரசியலில் சிறைப்பிடிக்கப்பட்டது. எனவே அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கியது என் தவறாகும். அந்த அவமானத்தை மேற்குறிப்பிட்ட வழியில் அகற்றுவதே எனக்குள்ள வழியாகும்எனவே 'தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது எனது வாழ்வில் உண்மையானது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் 'தமிழிசை ஆய்வு மையம்' தொடங்க நான் மேற்கொண்ட முயற்சியானது, 'தமிழ்ப்பற்றாளர்களாக' காட்சி தந்தவர்களின் சுயநல அரசியலில் சீர்குலைவுக்கு உள்ளானது. அதனைக் கண்டித்து, அவர்களில் ஒருவரான அன்றைய துணை வேந்தருக்கு மடல் அனுப்பினேன். என்னை 'பார்ப்பனக் கைக்கூலி' என்று என் முதுகுக்குப் பின்னால் பரப்பி, தமிழ் ஆர்வலர்களை ஏமாற்றி, அத்தகையோர் தப்பித்தனர். வேறுவழியின்றி அம்முயற்சியைக் கைவிட்டேன். பாதிக்கப்பட்டது உயர்க்கல்வியில் தமிழும், தமிழிசையுமே ஆகும்எனவே தமிழுக்கும், தமிழிசைக்கும் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதும் உண்மையானது.

வருடத்திற்கு பல கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களின் முடிவு தொடர்பான நேர்க்காணலில், ஆய்வு சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள் இன்றி நேர்க்காணல் நடத்துவதானது, எவ்வளவு அபத்தம்? என்பது பற்றி, கீழடி தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்தவர்கள், அப்போது செம்மொழி நிறுவனத் தலைவராக இருந்த முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தார்களா? அவர் மறைந்து விட்டதால், இனி கண்டிப்பதில் பிரயோசனமில்லை

குறைந்தபட்சம் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகளை எல்லாம் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தி, உரிய விதிகளை உருவாக்கி, இனியாவது 'CAT' அடிப்படையில் செயல்பட கோரிக்கை வைப்பார்களா? அந்த கோரிக்கையை தமிழக பா.. முன்வைத்தால், அதனை 'பார்ப்பன சூழ்ச்சி, ஆரிய சூழ்ச்சி' என்று திசைத் திருப்ப பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, கீழடி அகழாய்வுக்காகவும், தமிழின் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் ஒற்றுமை வெளிப்படத் தொடங்கியுள்ள சமூக சூழலில், இனி அந்த கோரிக்கை முன்னெடுக்கப்படலாம். அதன் மூலமாக செம்மொழி நிறுவனத்தின் குறைபாடுகள் நீங்கி, ஆய்வுத்திட்டங்கள் எல்லாம் 'CAT' வடிப்பான் மூலமாக சிறப்பாக உலகின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் வெளிப்படவும் வாய்ப்புள்ளது.

உலக அளவில் தமிழ் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்படாத, விவாதத்தில் உள்ள சான்றுகளை எல்லாம், 'உலக அங்கீகாரம்'(?) பெற்று விட்ட சான்றுகளாக கருதி, அவற்றின் துணையுடன் தமிழ் மற்றும் தமிழிசை தொடர்பான ஆய்வுகள் வெளிவருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html)

அது போலவே, அமெரிக்க பல்கலைக்கழக தமிழ் இருக்கையில் இருந்து அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாகி விட்டதா? அந்த இருக்கை உருவாவதற்கு முன்னரே, அங்கு தமிழ் வகுப்புகள் நடந்து வருகின்றன. அந்த இருக்கையின் தலைவராக யாரை நியமித்து, என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன? என்று  கண்காணிக்க வேண்டாமா

இல்லையென்றல், நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு, 'தமிழ் இருக்கை' என்ற பேரில் நிதி வசூலித்துக் கொடுத்து, உலக அளவில் ஏமாளிகளாக தமிழர்கள் வெளிப்பட மாட்டார்களா? (‘உலகப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்: சட்டிகளை (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள்) காப்பாற்றாமல், அகப்பையில் என்ன வரும்?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html)

இது போன்ற கேள்விகளை கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் எழுப்பும் முன், விழித்துக் கொள்வதானது, தமிழ் இருக்கை கோரிக்கைகளை முன்னெடுத்த பிரபலங்களுக்கும் நல்லது. தமிழுக்கும் நல்லதாகும்

தனி மனிதராயிருந்தாலும், சமூகமாயிருந்தாலும், 'தமக்குள் இருக்கும் தீதிற்கான காரணங்களை' அடையாளம் கண்டு அகற்றாமல் தீதில் இருந்து விடுதலை பெற முடியாது. நன்றையும் ஈர்க்க முடியாது.

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free excerpt: 

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment