அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் 'பெருமைகள்'(1)
தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம்
'உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது; தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?' என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html)
'பெரியார் வலைக்காட்சி'யில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
22.04.2017 அன்று சென்னை பெரியார் திடலில் 'தமிழர் இசை' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொளி;
உலக அளவில் தமிழ் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்படாத, விவாதத்தில் உள்ள சான்றுகளை எல்லாம், 'உலக அங்கீகாரம்'(?) பெற்று விட்ட சான்றுகளாக கருதி, அவற்றின் துணையுடன் தமிழின் பெருமைகளை எல்லாம் மஞ்சை வசந்தன் விளக்கியுள்ளார். அதில் "உலகில் உள்ள அத்தனை மொழிகளுக்கும் மூலம் தமிழ்"
என்பதை உலகில் உள்ள மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும்,
"ஜப்பானிய மொழி தமிழில் இருந்து வந்தது"
என்றும், குறிப்பிட்டுள்ளார்.
கீழ் உள்ள சான்றின் படி, ஜப்பானில் தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையிலான தொடர்பு. ஏற்றுக்கொள்ளப்படாமல், விவாதத்தில் உள்ளது;
Ohno made his claim for the
predominant influence of Tamil on the Japanese vocabulary nearly 30 years ago.
(He was not the first to do this, but soon became the theory’s pre-eminent
advocate.) As you can imagine, it was roundly attacked by both traditional
Japanese linguists and at least one famous Tamil scholar.
Muneo Tokunaga, the latter,
denounced Ohno’s ignorance of Tamil in 1981 and wrote, “I find absolutely no
scholarly value in the Ohno theory.”
‘Was the Japanese language
influenced by Tamil? The war goes on’; https://www.japantimes.co.jp/opinion/2008/07/06/commentary/was-the-japanese-language-influenced-by-tamil-the-war-goes-on/#.XX8oLC4zbIV
"ஜப்பானிய மொழி தமிழில் இருந்து வந்தது"
என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றாக கருதி, மஞ்சை வசந்தன் தனது வாதத்தினை முன்வைத்துள்ளார். மஞ்சை வசந்தன் உரையைக் கேட்டவர்களில் எவராவது அதனை இணையத்தில் தேடி கண்டுபிடித்தார்களா? அல்லது தமிழில் இருந்து தான் ஜப்பான் மொழி உருவானது என்ற, ஜப்பானில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றை உண்மை என்று நம்பி, இன்னும் பலரிடம் 'பெருமையுடன்' பரப்பினார்களா? இது போன்ற போக்கு, உலகில் தமிழர்களை கேலிப்பொருள் ஆக்கி விடாதா?
“தாய்ப் பால் பைத்தியம்’ என்ற நூலில் ஈ.வெ.ரா அவர்கள் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
"நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்…………….
தமிழ் தோன்றிய 3000
– 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்…"
தமிழ் தொடர்பான ஈ.வெ.ராவின் கருத்துக்கு மறுப்பாகவே, மஞ்சை வசந்தன் மேற்குறிப்பிட்ட காணொளியில் தமிழின் சிறப்புகளை எல்லாம் விளக்கியுள்ளார்.
அதையும் சென்னை பெரியார் திடலில் 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கியிருக்கிறார். மஞ்சை வசந்தன் வெளிப்படுத்திய விளக்கத்தினை அவர்கள் ஏற்றுக் கொண்டு, ஈ.வெ.ரா அவர்களின் தமிழ் தொடர்பான கருத்துக்கள் எவ்வாறு தவறானவை? என்று தெளிவு பெற்றார்களா? அல்லது மஞ்சை வசந்தன் விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டு, ஈ.வெ.ராவின் கருத்துக்களையும் 'பிடித்துக் கொண்டு' இரண்டும் கெட்டானாக பயணிக்கிறர்களா? என்பதை 'எவரும் தமிழ்நாட்டில் கண்காணிக்கவில்லை'; என்ற 'அசாத்திய' துணிச்சலில் தொடர்கிறார்களா? (குறிப்பு கீழே)
உலகின் தொன்மையான எழுத்து மொழிகளில் தமிழ் 7ஆவது இடத்தில் உள்ளது. (http://www.oldest.org/culture/written-languages/)
அந்த வரிசையில் முதல் இடத்தில் உள்ள சுமேரியன் மொழியானது 'தொல் தமிழ்' என்று மறைந்த மலேசிய தமிழ் அறிஞர் லோகநாதன் ஆராய்ச்சி செய்துள்ளார். (https://www.academia.edu/33637869/SUMERIAN_AND_TAMIL_-_A_COMPARISON_AND_STUDY_WITH_REFERENCE_TO_A_TRANSLITERATED_TEXT_AND_STANDARD_TRANSLATIONS)
அந்த ஆராய்ச்சியில் தமிழ் இசை தொடர்பாக சிறிய அளவில் நானும் பங்களித்துள்ளேன்.(‘ சுமேரு மொழியில் தொல் தமிழ் இசையியல் (Ancient Tamil Musicology) கூறுகள்’; https://tamilsdirection.blogspot.com/2015/01/v-behaviorurldefaultvmlo.html)
அது தொடர்பாக, லோகநாதனின் ஆய்வு முடிவுகளை மறுத்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.(http://ulagank.tripod.com/sastry-loga.htm)
'சுமேரு மொழி தொல் தமிழ்' என்று உலக அறிஞர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த திசையில் மலேசிய பேரா.சிவக்குமார் மற்றும் அரி மாரப்பன் குழுவினர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.( https://www.facebook.com/groups/705670666168065/)
“I must mention that my
studies in Process Grammar and the development of Process Calculus are now
being pursued further by Dr Sivakumar, a lecturer in the Universiti Sains
Malaysia and who has been a long time student of my studies in almost all
fields. I hope in the near future he
will begin to write to our groups on how he is developing further the
essentials of Process Grammar that I developed in the seventies and eighties.” –
Dr.Loganathan (https://sites.google.com/site/sumeriantamil/clyde-sum-is-tamil/review)
அந்த ஆராய்ச்சிகள் எல்லாம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனமாகும்.
உலகத்தில் தொன்மையான பேசப்படும் மொழிகளில் தமிழ் 3 ஆவது இடத்தில் தான் உள்ளது. (https://lingualconsultancy.com/oldest-languages-still-spoken-in-world-today)
உலகத்தில் தொன்மையான பேசப்படும் மொழிகளில் தமிழ் 3 ஆவது இடத்தில் தான் உள்ளது. (https://lingualconsultancy.com/oldest-languages-still-spoken-in-world-today)
மொழியியல் ஆராய்ச்சியில் மொழியின் தோற்றம் என்பதானது இன்னும் கண்டுபிடிக்கப்படாத தெளிவற்ற நிலையில் தான் உள்ளது. (The
origins of human language will perhaps remain for ever obscure.; http://www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?ParagraphID=axx)
எனவே
"உலகில் உள்ள அத்தனை மொழிகளுக்கும் மூலம் தமிழ்" என்று மஞ்சை வசந்தன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்வதானது, தமிழர்களை கேலிப்பொருளாக்கி விடும்; 'அந்த' பிரச்சாரம் எந்த அளவுக்கு செல்வாக்கு பெறுகிறதோ, அந்த அளவுக்கு.
மயன் உள்ளிட்டு தனது உரையில், தமிழ் தொடர்பாக, மஞ்சை வசந்தன் பயன்படுத்தியுள்ள சான்றுகள் எல்லாம் இது போன்றவையே.
“மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள மாயன் தொல்லியல் இடங்களுக்கு, (சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடங்கள், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல கோவில்கள் உருவாக்கிய) கணபதி ஸ்தபதி சென்று, அங்கிருந்த பிரமீடுகளை எல்லாம் அளந்து, மாயன் கட்டிடக்கலைக்கும், தமிழ்நாட்டிலும், இந்தியாவில் பிற இடங்களிலும் உள்ள 'மயன்' கட்டிடக்கலைக்கும் இடையிலான ஒற்றுமைகளை உலகிற்கு அறிவித்தார்.”
என்ற தகவலையும், அது தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வுகளையும் ஏற்கனவே நான் வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html)
அமெரிக்காவில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் 'Maya
Research Program (MRP)'
(http://www.mayaresearchprogram.org/styled/About%20MRP.html)
என்ற அமைப்புடன் நான் தொடர்பு கொண்டு, கணபதி ஸ்தபதியின் மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் பற்றி தெரிவித்தேன். அவர்கள் இன்று வரை அதில் ஆர்வம் காட்டவில்லை. எந்த அரசு அல்லது உலக அளவில் செல்வாக்குள்ள தமிழ் அமைப்பின் பின்பலம் இன்றி, தனி ஆளாக நான் தொடர்பு கொண்டதும், அதற்கு காரணமாக இருக்கலாம். அத்தகைய 'பின்பலம்' உள்ளவர்கள் எனது முயற்சியினை தொடர்வதை நான் வரவேற்கிறேன்.
மயன் தொடர்பான சான்றுகள் தமிழில் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளன. அது போலவே, சமஸ்கிருத இலக்கியங்களிலும் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி அமைப்புடன் தொடர்பு கொண்டு, கூட்டாக ஆய்வுகள் மேற்கொண்டால், பல அதிசயிக்கும் தகவல்கள் வெளிப்படலாம்.
மயனை தமிழுக்குள் சுருக்கி, 'தமிழில் இருந்து தான், அமெரிக்காவில் உள்ள மாயன் தொழில்நுட்பங்கள் வெளிப்பட்டன' என்று தமிழ்நாட்டில் பிரச்சாரங்கள் மேற்கொள்வதானது, உலக அளவில் தமிழர்களை கேலிப்பொருள் ஆக்காதா?
தமிழக அரசின் விருதுகள், அமெரிக்காவில் 'ஃபெட்னா' போன்ற செல்வாக்கான தமிழ் அமைப்புகளின் பாராட்டு, என்று இணையில்லாத அளவுக்கு நிகழ்காலத்தில் ஊடகங்கள் பாராட்டும் புகழுடன் வலம் வரும், மம்மது;
'இந்தஸ்தானி இசைக்கும் தமிழ் இசையே மூலமாகும்' என்ற கருத்தினை பிரச்சாரம் செய்து வருவதானது, எவ்வளவு அபத்தமானது? என்று ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் 'பண்' என்ற சொல் தொடர்பான சான்றுகளில் உள்ள பொருள் என்ன? சமஸ்கிருத இலக்கியங்களின் 'ராகம்' என்ற சொல் தொடர்பான சான்றுகளில் உள்ள பொருள் என்ன? கர்நாடக இசைக்கல்வியில் 'ராகம்' என்ற பொருளில் என்ன கற்பிக்கப்படுகின்றன? என்று ஆராய்ந்தால், தமிழ் இசைக்கல்வி தொடர்பான நூல்களில், 'ராகம்' என்ற பொருளில், 'பண்' என்ற சொல்லினைப் பயன்படுத்துவதானது, எவ்வாறு தவறாகும்? என்பது விளங்கும். (‘நம்ப முடியாத அளவுக்கு இரண்டும் கெட்டானாக சீரழிந்துள்ள தமிழ் இசைக்கல்வி’; https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_28.html)
இது டிஜிட்டல் யுகம். தமிழையும், தமிழ் இசையையும் 'உயர்த்துவது' என்ற போர்வையில், அறிவுக்கு தொடர்பில்லாத உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயினை வளர்த்து வெளிப்படும் நூல்களும், ஒளிப்பதிவுகளும், மேலே குறிப்பிட்ட ஆய்வுகளுக்கான தடயங்களாகி அவமானப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது. மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நூல்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகள் மூலமாகவும் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் இருந்தால், அதனை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை வரவேற்க வேண்டும். உரிய சான்றுகளின் அடிப்படையில் தவறுகள் வெளிப்பட்டால், நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, திருந்தி பயணிக்க வேண்டும்.(‘உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது;தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html)
கர்நாடக இசை உயர்வானது' என்ற தாழ்வு மனப்பான்மையில்;
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2446)
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2446)
அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற 'தமிழ் இசையியல்'(Tamil
Musicology) கூறுகள் பற்றிய புரிதலின்றி;
தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் கர்நாடக இசைப்பாடல்களைப் பாடும் முறையில், தமிழ்ப்பாடல்களை 'தமிழ் இசை' என்று பாடும் (ஒலிப்பதிவுகளில் இருந்து, கணினி மூலம் வெளிப்படுத்தக்கூடிய) தவறுகள் எவ்வாறு அரங்கேறின?
இவை எல்லாம் ஆர்வமும், உழைப்பும் உள்ள ஆய்வாளர்களின் கவனத்திற்கு உரியவை ஆகும்.
(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html)
(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html)
இது டிஜிட்டல் யுகம். தமிழையும், தமிழ் இசையையும் 'உயர்த்துவது' என்ற போர்வையில், அறிவுக்கு தொடர்பில்லாத உணர்ச்சிபூர்வ வெறுப்பு நோயினை வளர்த்து வெளிப்படும் நூல்களும், ஒளிப்பதிவுகளும், மேலே குறிப்பிட்ட ஆய்வுகளுக்கான தடயங்களாகி அவமானப்படுவதிலிருந்து தப்பிக்க முடியாது. மம்மதுவாக இருந்தாலும், நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நூல்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகள் மூலமாகவும் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் இருந்தால், அதனை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்துவதை வரவேற்க வேண்டும். உரிய சான்றுகளின் அடிப்படையில் தவறுகள் வெளிப்பட்டால், நன்றியுடன் ஏற்றுக்கொண்டு, திருந்தி பயணிக்க வேண்டும்.(‘உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது;தமிழ் இசைக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html)
.'இந்தஸ்தானி இசைக்கும் தமிழ் இசையே மூலமாகும்' என்ற நிரூபிக்கப்படாத முடிவினை வெளியிடும் இதழ்கள் எல்லாம் கேலிப்பொருள் ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது; அந்த இதழ்களின் வாசகர்கள் எல்லாம், "வடக்கே பாடப்படும் இந்துஸ்தானி இசை என்பது தமிழிசை என்று" நம்பி, அதனை தமது வட்டத்தில் 'வடிவேல் பாணியில்' பரப்பும் வகையில்
மேற்குறிப்பிட்டவாறு அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் ‘பெருமைகள்''(?) காரணமாக, தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் உண்டா? இல்லையா? என்று தமிழின் மீதும் தமிழிசையின் மீதும் சுயலாப நோக்கற்ற அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
குறிப்பு:
பல சான்றுகளை முன் வைத்து, "மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்."
என்ற முடிவினை, ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ என்ற நூலில் வாலாசா வல்லவன் வெளிப்படுத்தியுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2019/09/3_11.html)
வாலாசா வல்லவன் முன்வைத்த சான்றுகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், கீழ்வரும் காணொளியில், 'பெரியார்' ஆதரவாளர் பேரா.கருணானந்தம் பாரதியை 'பார்ப்பனீய எதிர்ப்பாளராக' அடையாளம் காட்டியுள்ளார்.
பாரதி தொடர்பாக ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் எவ்வாறு தவறானவை? என்பதை 'பெரியார்' ஆதரவாளர்கள் முன்பு பேரா.கருணானந்தம் விளக்கியுள்ளார். ஈ.வெ.ரா அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல், 'அந்த' கருத்துக்களை அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பு:
திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?
http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html
குறிப்பு:
திராவிட அரசியலில், சுயமரியாதைக்கு கேடான வகையில், சிறையுண்ட தமிழ் ?
http://tamilsdirection.blogspot.com/2017/12/tamil-chair-2.html
No comments:
Post a Comment