Friday, September 20, 2019


1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்;


.வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா? தவறா? (1)


1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக, .வெ.ரா அவர்களின் நிலைப்பாடு குறித்து, 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் விவாதங்கள் தொடங்கியிருப்பதானது நல்ல அறிகுறியாகும். அது தொடர்பான கீழ்வரும் கருத்து எனது கவனத்தினை ஈர்த்தது.

“1965இல் பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்க வில்லைமாறாக எதிர்ப்பு தெரிவித்தார்.இதை இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளலாம்

1 பெரியார் காமராஜர் மீது கொண்ட அதீத நம்பிக்கை.காமராஜர் ..கா. தலைவராக இருக்கும் போது இந்தி நுழைய அனுமதிக்க மாட்டார்.

2 குறிப்பாக எந்த தலைமையும் இல்லாமல் நடக்கும் இந்த போராட்டத்தில் ராஜாஜி போன்றவர்கள் இந்தி எதிர்ப்பு நிலை யை எடுத்தது.

3  கண்ணீர்த்துளிகள் என்று வன்மத்துடன் அவர் அழைத்த தி மு விற்கு அதன் பலன் போய் சேர்வது

இப்படி பல காரணங்கள் அவர் தவறான முடிவு எடுக்க தூண்டியிருக்க வேண்டும்.காரணம் யாது என்றாலும் அது பெரியார் செய்த தவறு என்பதில் ஐயமில்லை.

இதை சொல்ல நாம் அஞ்ச வேண்டியதுமில்லை.”

துரை.இளமுருகு.
முகநூல் பின்னூட்டம்.

1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்த பின்னர், 1968 வரை ஏன் இந்தி எதிர்ப்புப் போராட்டமானது தொடர்ந்தது? எவ்வாறு ஒடுக்கப்பட்டது? என்பது தொடர்பான விடைகளே, 1965 .வெ.ராவின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள துணை புரியும்.

'அந்த'(?) பாணியில்காங்கிரஸ் அரசானது முயன்றிருந்தால், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமானது மிகப்பெரிய அளவில் பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் கேடான போராட்டமாக வளர்ந்திருக்குமா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டி விட்டு, வன்முறைகள் வெடித்த போது'தங்களுக்கும் அந்த போராட்டத்திற்கும் தொடர்பில்லை' என்று அறிவித்து, பின்னர் அந்த போராட்டத்தையே முதலில்லாத பொது வாழ்வு வியாபாரமாக்கி பலன்கள் அனுபவித்த, அந்த போராட்டத்தை ஆதரித்த தலைவர்கள், தமிழ் ஆதரவாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் எவரும் இன்று வரை தீக்குளிக்கவில்லை; குண்டடி பட்டு சாகவும் இல்லை; 1965 முதல் அண்மையில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வரையிலும்.

அனிதாவின் அண்ணன் எனது மாணவராக இருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்திருந்தால், தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என்றும், ..எஸ், சார்ட்டர்ட் அக்கவுண்ட் போன்ற வாய்ப்புள்ள இலக்குகளுக்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிக்குமாறும் அறிவுறுத்தியிருப்பேன்.
என்னைச் சந்தித்த பின், சில நாட்களில், அந்த பெண் தற்கொலை செய்திருந்தால், அந்த உரையாடலில் நான் எங்கு தவறு செய்திருக்கக் கூடும்? என்று ஆராய்ந்து, அந்த தற்கொலையை தவிர்த்திருக்க வேண்டுமே என்ற கவலையானது, என்னைப் பற்றியிருக்கும்.

அனிதா, செங்கொடி போன்றோரின் தற்கொலைகளை எல்லாம், நான் மனசாட்சியுடன் ஆதரித்தால், அடுத்து தமிழ்நாட்டில் அது போல அரங்கேறும் தற்கொலைகள், எனது குடும்பத்தில் அரங்கேறுவதை நான் ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளைக் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலியாக'(?) வாழும் சமூகக்கிருமிகளின் வரிசையில் நானும், எனது குடும்பமும் இடம் பெற தகுதி உடையவர்கள் ஆவோம். (http://tamilsdirection.blogspot.com/2019/06/alexithymic.html?m=1)

முதுகளத்தூர் கலவரம் நீடித்தபோது, .வெ.ரா அவர்கள் "காமராஜர் கோழையாக இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியதாகவும், அதைத் தொடர்ந்தே துப்பாக்கி சூடு மூலமாக அந்த கலவரம் அடங்கியது என்றும், மறைந்த என் தந்தை என்னிடம் ஒருமுறை தெரிவித்தார். ஆர்வமுள்ளவர்கள் அந்த காலக்கட்ட இதழ்களை ஆராய்ந்து, .வெ.ரா என்ன நிலைப்பாடு எடுத்தார்? என்று அறியலாம். அதே போக்கில் தான், நீடிக்கும் வன்முறைகள் ஒடுங்கி, தமிழ்நாட்டில் பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட வன்முறைகளை ஒடுக்கும் வகையில் .வெ.ரா கருத்து தெரிவித்தார்.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், 1980-களில் ஒரு முறை மதுரைக்கு 'பெரியாரியல்'  தொடர்பாக உரையாற்ற சென்றிருந்தேன். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஒரு 'பெரியார்' ஆதரவாளர் என்னை சந்தித்து, உரையாடலில் கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

அவர் தேவர் சாதியில் பிறந்து, 'பெரியார்'  ஆதரவாளராக வாழ்ந்து வருவதன் காரணமாக, அவரது உற்றத்திலும், சுற்றத்திலும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருவதாக கூறினார். ஏன்? என்று நான் கேட்டதற்கு, கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

முதுகளத்தூர் கலவரம் நடந்த போது, .வெ.ரா அவர்கள் காமராஜரை தீவிரமாக ஆதரித்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.  அதன் விளைவாக, முத்துராமலிங்க தேவர் செல்வாக்கில் இருந்த பகுதிகளில் திராவிடர் கழக எதிர்ப்பு உச்சமாக இருந்தது. அதனால் தமிழ்நாட்டிலேயே அந்த பகுதிகளில் தி. வேர் பிடிக்க முடியாமல் பலகீனமானது.  அந்த முக்குலத்தோர் சமூக கோபத்தின் தொடர்ச்சியாகவே, அவரது உற்றத்திலும், சுற்றத்திலும் (1980கள் வரை) 'பெரியார்' ஆதரவாளராக வாழ்ந்த அவருக்கு கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது
(‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், .வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக காவல்துறையின் மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்தி, காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கியது, மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை உயிரோடு எரித்தது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய பின்பு தான், வடநாட்டிலிருந்து காவலர்கள் வருவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்தனவா? என்பதையும் அந்த காலக்கட்ட இதழ்களை ஆராய்ந்து அறியலாம்.


திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, 'நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே .வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், .வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். (‘பெரியார்' .வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக;'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் ?’; http://tamilsdirection.blogspot.com/2017/08/blog-post.html)

பெரியார் 1965 போராட்டத்தில் எடுத்த நிலை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனவே எனது நினைவுக் குறிப்புகளில் இருந்து, .வெ.ராவின் நிலையை, நான் கீழ்வருமாறு வெளியிடுகிறேன்; உரிய சான்றுகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக மறுப்பதை வரவேற்று.

1.   நேருவின் வாக்குறுதி மோசடி என்பதால், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும்

2.    ஆயுதப் போராட்டம் இன்றி, வன்முறை இன்றி, பிரிவினைக் கோரிக்கை நிறைவேறும் வரையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் 'சமூக நீதி' நோக்கில் ஆட்சி செய்யும் வகையில் அழுத்தம் தர வேண்டும். காலனி ஆட்சியில் ஆங்கிலம் படித்தது எப்படி புத்திசாலித்தனமோ, அது போலவே இந்தியாவில் இந்தியைப் படிப்பதும் தவிர்க்க முடியாதது ஆகும். பிரிவினைக் கோரிக்கையில் இருந்து துண்டித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதும், நடத்துவதும் முட்டாள்த்தனமாகும்.

1938 இந்தி எதிர்ப்புப் பொராட்டத்தின் போது, .வெ.ரா முதன் முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்தார். 'அந்த' முழக்கத்தைத் துண்டித்தே தி.மு.கவானது, 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியது; இன்று வரை நடத்துகிறது. அதனைக் கணக்கில் கொண்டால், மாணவர்களைத் தூண்டி பொதுச்சொத்துக்களுக்கும் பொது மக்களுக்கும் ஊறு விளைவித்த வகையில் நடந்த 1965 போராட்டத்தினை, .வெ.ரா கண்டித்தது எப்படி தவறாகும்.வெ.ராவின் மறைவிற்குப் பின், அவரால் கண்டிக்கப்பட்ட அத்தகைய போராட்டங்களை ஆதரித்தும், பங்கேற்றும் 'பெரியார்' கட்சிகள் பயணித்து வருவது சரியா? 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் .வெ.ரா வெளிப்படுத்திய துணிச்சலான திசையில், இனியாவது 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிப்பார்களா?

'வன்முறை போராட்டங்கள்' வெற்றி பெறாது என்று தெளிவுபடுத்தி, உலகிற்கே முன்னுதாரணமாக, பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதமின்றி, போராட்டங்கள் நடத்தி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்ததனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட.வெ.ரா அவர்கள;

பின்னர் 'பெரியார்' சிறையில் சிக்கி, 'கட்சித் தலைவர்களின் பெயர்களை சொல்வதே அவமரியாதை' என்ற சமூக நோயும், காரியம் சாதிக்க காலில் விழும் கலாச்சாரமும், வளர்ந்ததே 'திராவிடர்/தமிழர் சமூகநீல வேல் மீன் விளையாட்டு'களுக்கு இடமளித்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html)

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, திராவிடர் கழகத்தை தடை செய்வது பற்றி பரீசீலித்ததாகவும், 'அந்த' நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, .வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளிதழில் ஓர் அறிக்கை வெளியிட்டதாகவும், 'அந்த' அறிக்கையில் பிரிவினை கோரிக்கை தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, அந்த பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், 'பிரிவினை தேவையில்லை' என்று கருத்து வெளியிட்டதாகவும், தஞ்சை இரத்தினகிரி என்னிடம் தெரிவித்தார். அந்த அறிக்கையை நான் படிக்கவில்லை. அதில் இந்திப் பிரச்சினை இடம் பெற்றதா என்பதும் எனக்கு தெரியாது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்குச் சென்று அதனைப் படிக்கலாம்.

எனவே, இந்தி தொடர்பாகவும், பிரிவினைக் கோரிக்கை தொடர்பாகவும், .வெ.ரா அவர்கள் கடைசி வரையில் வெளியிட்ட, 'அரை இருட்டில்உள்ள தகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

அது போல, 1967 முதல் அண்ணா தொடர்பாக 'அரை இருட்டில்' உள்ளதகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.’ (https://tamilsdirection.blogspot.com/2019/06/2.html)

மேற்குறிப்பிட்ட அரை இருளில் இருந்து .வெ.ராவையும், அண்ணாவையும் மீட்டால் தான், பொதுவாழ்வு வியாபாரத்திற்கு முதலில்லாத மூலதனங்களாகப் பயன்படும் பிம்பங்களில் இருந்து, அவர்கள் இருவரையும் மீட்க முடியும்.

ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது, தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போதுபலம்பெற்றனசமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு, காந்தி காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.(‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்:                           1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?’;

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கும், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கும் இடையில் இருந்த பண்பு வேறுபாடுகளை எல்லாம், ஆராய்ந்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது; தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக. (‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

(வளரும்)


குறிப்பு:

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்இதழில் வெளி வந்துள்ளது.

அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?”

காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், “அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கு இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?”

இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...”

எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சி மொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”

ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”

நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒரு வேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப் போறவன் நான் தானே?”

மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத் துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...

படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க, ‘சர்வேபடிப்பு படிக்கிற தில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துல அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?”

No comments:

Post a Comment