'இந்தி தினம்'- உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒரு நீதி?
அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வேறு நீதியா?
இந்தி எதிர்ப்பு - சில கசப்பான கேள்விகள்
உள்துறை அமைச்சர் அமித்ஷா 'இந்தி தினம்' தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை மையமாகக் கொண்டு, தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் உள்ள கே.டி.ராகவன் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுபவீ ஆகியோர் இடையே, நடந்த கீழ்வரும் காணொளி விவாதமானது, எனது கவனத்தினை ஈர்த்தது.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த காலத்தில், 'இந்தி தினம்' தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்தினை தி.மு.க எதிர்த்து போராட்டம் நடத்தியதற்கு சான்றுகள் உண்டா? அப்போது மெளனமாக இருந்து விட்டு, இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா 'இந்தி தினம்' தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை தி.மு.க எதிர்த்து அறிக்கை விட்டதும், போராட்டம் நடத்துவதாக தொடர்பாக கட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதும் சரியா? என்ற கேள்விக்கு சுபவீ விளக்கம் தரவில்லை. இனியாவது அவரின் விளக்கம் ஊடகத்தில் வெளிவருமா?
தி.மு.க குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை, இந்தியை எதிர்ப்பவர்கள் எதிர்க்க வேண்டாமா? என்று ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். அது தனியார் பிரச்சினை என்றும், விவாத வரம்பிற்குள் வராது என்றும் சுபவீ விளக்கமளித்துள்ளார். பின்னர் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வர விடாமல் தடுத்தது சரியா? என்ற கேள்வியை ராகவன் எழுப்பியுள்ளார். நேர நெருக்கடி காரணமாக, சுபவீ அதற்கு விளக்கம் தராமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. இனியாவது அவரின் விளக்கம் ஊடகத்தில் வெளிவரலாம், என்ற எதிர்பார்ப்பில், அது தொடர்பான கீழ்வரும் தகவல்களை முன்வைக்கிறேன்.
தி.மு.க குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் இந்தி பயில்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வசதியான குடும்பங்களின் பிள்ளைகள் ஆவார்கள்.
மத்திய அரசு 1985-
86 இல் நவோதயா பள்ளிகளை இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் தொடங்கியது. விடுதி வசதியுடன் கூடிய உயர்தரக் கல்வியை, கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அத்திட்டம் தொடங்கப்பட்டது.( https://www.toppr.com/bytes/navodaya-vidyalaya/)
அப்பள்ளிகளில் இந்தியும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதைக் காரணம் காட்டி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. துவக்கத்தில் மாவட்டதிற்கு இரண்டு நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டு, பின்னர் ஒரு மாவட்டத்திற்கு கூடுதலாக 10 பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள்? ஒரு மாவட்டத்திற்கு 12 நவோதயா பள்ளிகள் என்றால், தமிழ்நாட்டில் கடந்த சுமார் 30 வருடங்கள் எத்தனை பள்ளிகள் செயல்பட்டு, எத்தனை லட்சம் கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்திருக்கும்?
இந்தியை ஒரு பாடமாக பயில்வதை காரணம் காட்டி, இன்று வரை, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காதது சமூக அநீதியாகாதா? அதே தமிழ்நாட்டில்,தி.மு.க குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளில், பெரும்பாலும் வசதியான குடும்பப் பிள்ளைகள் மட்டும் இந்தி பயில்வது தான் சமூக நீதியா?
ஒன்று தமிழ்நாட்டில், தி.மு.க குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தனியார்கள் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளை மூட வேண்டும்; அல்லது தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும்; என்ற கோரிக்கையை சுபவீ போன்றவர்கள் முன்வைப்பார்களா? அல்லது 'இந்தி எதிர்ப்பு' என்ற பேரில், கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் மட்டும் தரமான கல்வியில் இருந்தும், இந்தி பயில்வதில் இருந்தும் ஒதுக்கப்படுவதானது, தொடர வேண்டுமா?
கீழ்வரும் சான்றின் அடிப்படையில், ஈ.வெ.ரா அவர்கள் நவோதயா பள்ளிகளை வரவேற்றிருப்பார்; என்ற கருத்தினையும் நான் முன் வைக்கிறேன்.
மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி,
4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது.
“இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...”
“எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சி மொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”
“ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”
“நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒரு வேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப் போறவன் நான் தானே?”
“மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத் துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...
“படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க, ‘சர்வே’ படிப்பு படிக்கிற தில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துல அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?”
தமிழ்நாட்டில் சுமார் 30 வருடங்களில்,விடுதி வசதியுடன் கூடிய உயர்தரக் கல்வியை, கிராமப்புற ஏழை மற்றும் தலித் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பலன் பெறாமல், 'இந்தி எதிர்ப்பு' என்ற பெயரில் தடுத்ததை எல்லாம்;
இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்து அறிய நேருமானால்;
"அடப்பாவிகளா! வசதியான குடும்பப்பிள்ளைகள் பெற்ற தரமான கல்வியை, கிராமப்புற பெரும்பாலும் சூத்திர ஆதி திராவிடக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பெறுவதை கெடுத்து விட்டீர்களே"
என்று ஈ.வெ.ரா அவர்கள் சபித்திருக்க மாட்டாரா?
இந்தி தொடர்பாகவும், பிரிவினைக் கோரிக்கை தொடர்பாகவும், ஈ.வெ.ரா அவர்கள் கடைசி வரையில் வெளியிட்ட, 'அரை இருட்டில்’ உள்ள தகவல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து, அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். (‘'இந்தி எதிர்ப்பு, பிரிவினை, ஈ.வெ.ரா, அண்ணா';'அரை இருட்டில்' உள்ள தகவல்கள் வெளிச்சத்திற்கு வருமா?’; https://tamilsdirection.blogspot.com/2019/06/2.html)
Also visit: ‘Why RSS, the only option, to rescue
the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics'
& embrace genuine pro-Tamil politics’;
http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
குறிப்பு: 'இந்தி' தொடர்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக:
In December 1957, the second
sarsanghchalak of the RSS MS Golwalkar in an interview to the Organiser spelt
out his stand on the question of a national language.
“I consider all our languages
as national languages. They are equally our national heritage. Hindi is one
among them which, by virtue of its countrywide usage, has been adopted as the
State Language. It will be wrong to describe Hindi alone as the national
language and others as provincial languages. That would not be seeing things in
the right perspective,” (https://m.hindustantimes.com/india-news/what-rss-said-about-hindi-as-a-national-language-50-years-ago/story-7fAeWI0QSuFa26GbR0Z5PN_amp.html)
No comments:
Post a Comment