Tuesday, September 24, 2019


நிறுவன கட்டமைத்தல் (System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான (Nation Building) சீர்குலைவும் (3);


1967க்கு முன்பு தமிழ்நாட்டில் கட்சியிலும் ஆட்சியிலும், 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்' மீண்டும்  வருமா? ரஜினி மூலமாக நடக்குமா?



Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.


இந்தியாவில் 'கட்சி அரசியல்' என்பதன் அடித்தளமான நிறுவன கட்டமைத்தல்(System Building) என்பதின் பலகீனமான போக்குடன், தேச கட்டுமான (Nation Building) சீர்குலைவும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டில் தமிழக அரசு என்ற நிறுவன கட்டமைத்தல்(System Building) என்பதானது எவ்வாறு வலுவான அடித்தளத்துடன் இருந்தது? பின்னர் 1967 முதல் எவ்வாறு அந்த அடித்தளம் சீர்குலைவிற்குள்ளானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Feroze The Forgotten Gandhi’ (by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துடன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;

இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா? பின் 1967‍இல் ஆட்சி மாற்றம் வெளிப்படுத்திய 'பொதுவாழ்வு வியாபார' போக்கில், முதல்வர் அண்ணா மனமுடைந்து, விரைவில் மரணமடைய விரும்பியதையும், அண்ணாவை அறிமுகம் செய்த .வெ.ரா அவர்களும் மனமுடைந்து, முனிவராக ஒதுங்க விரும்பியதையும், இன்று வரை விவாதத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது சரியா? (http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_17.html)

இந்திய அரசியலில் காங்கிரஸ் என்ற கட்சியானது, விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக வளர்ந்த போக்கில், சுபாஷ் சந்திர போஸ் தேர்தலில் வெற்றி பெற்றும், காங்கிரஸ் தலைவராக செயல்பட முடியாமல், பதவி விலகி, இந்தியாவை விட்டே வெளியேறி, விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை தொடரும் அளவுக்கு, அந்த விதிமுறைகளுக்குட்பட்டு வளர்ந்து வந்தகாங்கிரஸ் கட்டமைப்பில் சீர்குலைவினை காந்தி ஏற்படுத்தி;

பின் அதே செல்வாக்கின் பின்பலத்தில், நேருவின் செல்வாக்கும் வளர்ந்து, இந்திய விடுதலையின் போது, வல்லபாய் பட்டேலை ஓரங்கட்டி, நேரு பிரதமான பின்னணியில் தான்;

காங்கிரசானது நேரு குடும்பவாரிசு அரசியலில் சிக்கியது.

விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக காங்கிரசைப் போல கூட, முளை விட்டு, காந்தி சீர் குலைக்கும் வரை, வளர்ந்த போக்கிற்கு இடமின்றி;

திராவிட கட்சி அரசியலானது அதன் தோற்றத்திலேயே, அந்த அளவுக்கு முளை கூட விடாமல், தலைவர்களின் செல்வாக்கிலேயே 'நின்ற' (வடிவேலு பாணியில், 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் வீக்காகி, இப்போது நோ பேஸ்மெண்ட்'- Building Strong- No Basement) கட்சிகளாக 'வளர்ந்தன'(?).

1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, தம்மை சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்ட .வெ.ரா அவர்கள் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, 'இந்திய விடுதலையை துக்க தினமாக' அறிவித்தார்: தி. பொதுச்செயலாளராக இருந்த அண்ணா அதற்கு எதிராக இந்திய விடுதலையை வரவேற்றார். அதன் மூலமாக .வெ.ராவின் 'சர்வாதிகாரம்' கேலிக்குள்ளாகியது.
(‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

அதாவது ஒரு கட்சிக்கான ஜனநாயகம் இல்லாமலும், கட்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த பொதுச்செயலாளரை நீக்கும் துணிச்சலற்ற சர்வாதிகாரத்துடனும் தி. பயணித்தது. ஆனால் 'அதே' துணிச்சலுடன் பயணித்த அண்ணா, கட்சி பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஓரங்கட்டியே பிரிவினைக் கோரிக்கையை தி.மு. கைவிடுவதாக அறிவித்தார்.
(அந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, புதுக்கோட்டை தமிழாசிரியர் மதிவாணன் தெரிவித்தது; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

'அந்த' பின்னணியில் தான், தி.மு.கவைக் குடும்பக்கட்சியாக கருணாநிதி மாற்றி ஸ்டாலினை வாரிசாக்க முடிந்தது. ஸ்டாலின் தமது மகன் உதயநிதியை தமது வாரிசாக்க முடிந்தது.

காங்கிரசில் இன்றும் கூட கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால், அதை அவமதிப்பதாக கருதும் போக்கானது, தேசிய அளவில் இல்லை, என்பதற்கும்;

திராவிடக் கட்சிகளில் தலைவர்களின் பெயர்களைச் சொல்வதை அவமதிப்பாக கருதும் போக்கிற்கும்;

மேற்குறிப்பிட்ட வேறுபாடே முக்கிய காரணமாகும்.                                                             

தமிழ்நாட்டில் 'பில்டிங் ஸ்ட்ராங்க், நோ பேஸ்மெண்ட்' என்ற போக்கில் தான் திராவிடக்கட்சிகளும், அக்கட்சிகளின் வால்களாக தேசிய கட்சிகளும் புதிய கட்சிகளும் பயணிக்கின்றன. கட்சித் தலைவர்களின் பிம்பங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு நீடிக்கும் வரையில் தான், 'பில்டிங் ஸ்ட்ராங்க், நோ பேஸ்மெண்ட்' கட்சிகள் எல்லாம் சுயபலத்தில் நீடிக்க முடியும். நேரு குடும்ப அரசியலின் 4 ஆம் தலைமுறை வரை, 'அந்த' பலத்தில் பயணித்த காங்கிரஸ் கட்சியானது, இன்று இந்திய அளவில் மரணவாயிலை எட்டி விட்டது.

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. அதில் பாடம் கற்காமல், இந்திரா காந்தி பின்னர் தி.மு.-வுடன் கூட்டு சேர்ந்ததன் பலனாக, காங்கிரஸ் செல்வாக்கை இழந்து, கடந்த சட்ட மன்ற தேர்தலில், சசிகலா குடும்ப அரசியல் எதிர்ப்பு அலையில், தி.மு. ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பினை கெடுத்த அளவுக்கு, 'தீண்டத்தகாத' கட்சியாகி வருகிறது.

அதன்பின் ஊழல் பிரமிடு சிலந்தி வலை இன்னும் மோசமாகி, உலக அளவில் முதல் முறையாக, ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் முட்டாளாக்கி, ஒரு மாநில முதல்வரையே மாதக்கணக்கில் 'மர்மமான முறையில்' மருத்துவமும், மரணமும் நிகழ காரணமானதா? இன்று வரை தமிழ்நாட்டு அரசியலானது அந்த போக்கிலேயே தொடர்கிறதா? என்ற விவாதத்தை இனியும் இருட்டில் வைக்க முடியாது.

மத்திய அரசானது தமிழ்நாட்டில் அடுத்து அடுத்து ஊழல் கொள்ளைக்கு எதிரான வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு சோத்னைகளை நடத்தி, அதன் உச்சக்கட்டமாக சசிகலா குடும்ப வலைப்பின்னல் மீது நடத்தி வரும் சோதனைகள்;

உண்மையில் தமிழ்நாட்டு மக்களிடையே மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடியை (crisis of confidence) ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோதனை வலையிலிருந்து ஊழல் திமிங்கிலங்கள் தப்பிக்குமா? தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளில் உள்ள ஊழல் திமிங்கிலங்களை நெருங்குமா? மோடி அரசு ஊழல் குற்றவாளிகளை தப்ப விடாமல், தண்டித்தால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மோடியால் ஈட்ட முடியும். அது வரை வெளிநாட்டு உதவியில் செயல்படும் என்.ஜி. அமைப்புகளால் எளிதில் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்புப் போக்கினை நீட்டிக்க முடியும்; கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைக் கெடுக்கும் நோட்டாக்கட்சியாகவே தமிழக பா..கவும் நீடிக்கும்.          ( http://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html)

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், 2018 சனவரி 17 பதிவில் கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

'இதே போக்கு நீடிக்குமானால், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.. மட்டுமல்ல, பா..கவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் 'ஆர்.கே.நகர் பாணி அதிர்ச்சி வைத்தியம்' காத்திருக்கிறது;என்பதும் எனது கணிப்பாகும்.'
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் தி.மு. வெற்றி பெற்ற விநோதத்திற்கு, மேற்குறிப்பிட்ட மோடி எதிர்ப்பு சமூக செயல்நுட்பமே காரணமாகும்.

'ஜெயலலிதா ஆட்சியில் 1995இல் 'மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தூரம் தள்ளி தொழிற்சாலை அமைய, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவாக, சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான மதிப்பீடு செய்தே ஆக வேண்டும் என்று .தி.மு.. அரசு உத்தரவிட்டது. 14.10.1996 - ல் தி.மு.. அரசுதான், .தி.மு.. அரசு - மே 1995-ல் விதித்த விதிகளை ஒதுக்கி, மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தூரத்துக்குள் தொழிற்சாலை அமைய TNPCB மூலம் அனுமதி அளித்தது.' முதல் கோணல் இங்கு தான் தொடங்கியது.' (http://tamilsdirection.blogspot.com/2018/05/)

ஆனால் தமிழக மக்களின் நாடித்துடிப்பு பற்றிய புரிதலின்றி, தற்கொலைப்பாதையிலேயே தமிழக பா.. தொடர்கிறதா? என்ற கேள்வியை கீழ்வரும் செய்திகள் எழுப்புகின்றன.

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே” - விசாரணையில் நிரூபணம்; http://www.puthiyathalaimurai.com/news/india/57400-probe-confirms-sasikala-got-special-treatment.html

மேற்குறிப்பிட்டுள்ளவிசாரணையின் அடிப்படையில் சசிகலாவிற்கு என்ன தண்டனை கிடைக்க  வாய்ப்புள்ளது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் கீழ்வரும் செய்தி, அதனை 'நன்னடைத்தையாக' கருதும் அரசு ஆட்சியில் இருக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வயது, நன்னடத்தை, பாலினம் (பெண்) போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி சசிகலா ஓராண்டு முன்னரே விடுதலை செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. “https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190922-34054.html

கர்நாடகத்திலும் மத்தியிலும் பா.. ஆட்சி நடந்து வரும் சூழலில், இது போன்ற செய்தி வெளியாகியுள்ளது. 'இந்தியாவையே ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது' என்பதற்கு அது கூடுதல் சான்றாகி விடும். (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html

மேற்குறிப்பிட்டவாறு சசிகலா 'நன்னடத்தை'(?) காரணமாக முன்கூட்டியே விடுதலையானால்,  தமிழக பா..க கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைக் கெடுக்கும் நோட்டா கட்சியாகவே தொடரும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் மூலமாக, தமிழ்நாட்டில் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், 'தமிழர்' அடையாளத்திற்கு உள்ள செல்வாக்கானது பிரமிக்கும் வகையில் வெளிப்பட்டது. அந்த பின்னணியில் கீழடி அகழ்வாராய்ச்சி பிரச்சினை மற்றும் மேற்குறிப்பிட்ட NGO-க்களின் மோடி எதிர்ப்பு செயல்நுட்பம் வெற்றி ஆகிய காரணங்களால், அவர்கள் மத்தியில் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாகவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலோர் மோடி எதிர்ப்பு கட்சிகளுக்கே வாக்களித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் மூலமாக தினகரனிடம் பாடம் கற்று பயணித்த ஸ்டாலினுக்கு, அது கூடுதல் போனசாக தேர்தல் வெற்றியில் வெளிப்பட்டது; சிறிய அளவில் சீமானுக்கும், கமலுக்கும் அதில் பலன் கிட்டியது 

தமிழ்நாட்டில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்குப் பின்னர், ஆதாய அரசியல் சூறைக்காற்றில் தமிழ்நாடு சிக்கியுள்ளதானது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

நேரு குடும்ப அரசியலின் 4 ஆம் தலைமுறை வரை நீடித்தது போல் இன்றி, கருணாநிதி மறைவிற்குப்பின், 2 ஆம் தலைமுறையானஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வானது, 'ஆதாய அரசியல் சூறைக்காற்றில்' சிக்கி தத்தளிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சி பிளவுபட்டு போட்டியிட்ட நிலையிலும், அர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு. டெபாசீட் இழந்து மூன்றாவது இடத்திற்கு ஒதுக்கப்பட்டது. அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா, கருணாநிதி காலங்களில் கூட வெளிப்படாத பிரமிக்க வைக்கும் வெற்றிக்கு உயர்ந்தது.

‘'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், இது போன்ற எதிர்பாராதபிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்;

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், தி.மு.கவை டெபாசீட் இழந்த கட்சியாகவும், பா.‌.கவை நோட்டா கட்சியாகவும் வெளிப்படுத்தி, அடுத்து வந்த பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் ஆர்.கே நகர் வெற்றியை தி.மு.கவிற்கு தானம் கொடுத்து, தி.மு.கவின் டெபாசீட் இழந்த கட்சி என்ற இடத்தை அபகரித்தது தினகரன் கட்சி. அதைப் போலவே. மேற்குறிப்பிட்ட.பிரமாண்ட வெற்றியை ஈட்டிய தி.மு. வானது, அடுத்து வந்த வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில், நோட்டா வாக்குகளை விட குறைவான வேறுபாட்டில் வெற்றி பெறும் அளவுக்கு, தினகரன் திசையில் தி.மு. பயணிக்கத் தொடங்கியுள்ளது.

தி.மு..வின் சீனியர் பிரமுகர் ஒருவர், போகிற போக்கைப் பார்த்தால் தளபதியைச் சுற்றி (மு..ஸ்டாலினை) பழைய .தி.மு.. பிரபலங்கள்தான் ஃபோட்டோக்களில் வருவார்கள் போலிருக்கிறது" என்று கிண்டல் கலந்த ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். (துக்ளக் 03-07-2019)

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தாலும் மோடி பிரதமராக இருந்தாலும்தமிழ்நாட்டில் அரசியலில் சம்பாதிக்க கோடு காட்டினால், 'ரோடு' போட்டு ஒழுங்காகக் கப்பம் கட்டும் திறமைசாலிகளான புரோக்கர்களுக்கு சென்ற கட்சியெல்லாம் சிறப்பு. ஆனால் 'அந்த' புரோக்கர் மாவட்டத்தில், 'அந்த' கட்சியில் நெடுங்காலம் குப்பைக் கொட்டியவர்களுக்கு தான் இழப்பு.

கட்சியின் தலைமையானது, 'அந்த' சமூக செயல்நுட்பத்தில், 'எந்த' அளவுக்கு பலன் பெறுகிறதோ, நெடுங்காலமாக பயணித்தவர்களின் அதிருப்தி மூலமாக, அதை விட பன்மடங்கில், 'அந்த' கட்சியின்  வேரழுகி, கடைசியில் 'புரோக்கர் கட்சியாகும் திசையில், அந்த கட்சியானது பயணிப்பதைத் தவிர்க்க முடியாது.

புரோக்கர் கட்சியாக வளர்ந்த கட்சிகள் எல்லாம், எவ்வளவு உயரத்தில் பயணித்தாலும் புதிதாக கிளம்பும் அரசியல் காற்றில், புழுதியாக மரணிப்பதும் நிச்சயமாகி விடும். (https://tamilsdirection.blogspot.com/2019/07/4-3-20-2019.html)

1969 முதல் நேரு குடும்ப வாரிசு அரசியலில் தி.மு. பயணித்தது. அதன் தொடர் விளைவாகவே, எம்.ஜி.அர் மறைவிற்குப் பின் சசிகலா குடும்பத்தின் வலிமையான மறைமுக கட்டுப்பாட்டில் ...தி.மு. கட்சியும் சிக்கியது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து, தமிழக அரசு அமைப்பையும் 'பில்டிங் ஸ்ட்ராங்க், நோ பேஸ்மெண்ட்' என்றவாறு மாற்றுவதில் வெற்றி பெற்றனர்.

சுபஸ்ரி மரணத்திற்கு காரணமான பேனர் தொடர்பான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மூலமாக தண்டித்தால் மட்டுமே, அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக விளையும் மரணங்கள் முடிவுக்கு வரும்.

ஆறுமுகசாமி கமிசன் விசாரணையானது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கான விடைகளைக் கண்டுபிடிக்கலாம்.

போயஸ் கார்டனில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள் செயல் இழக்க, முதல்வரின் உடல்நலக் குறைவு தொடர்பான அரசு அமைப்புகள் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது முதல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு வரை, சட்டத்தின் நெறிமுறைகளும் சம்பிரதாயத்தின் நெறிமுறைகளும் ஏன் காற்றில் போனது? அதற்கு காரணமான அதிகாரிகளும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடங்களில் இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டாமா? என்ற கேள்விகளுக்கு விடைகள் காணும் வரையில்;

தமிழக அரசு அமைப்பானது, 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் வீக்' என்ற போக்கிலேயே நீடிக்கும்; சுபஸ்ரியின் மரணம் போன்றவை தொடர்கதையாகும்; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவையெல்லாம் முளையிலேயே கிள்ளாமல் துப்பாக்கிச் சூடு மூலமாக பொதுமக்களின் சகஜ வாழ்க்கை திரும்பும் அளவுக்கு தொடர்கதையாகும்.

சிறையில் இருந்து வந்த கசிகலாவை தரிசிக்கும் அளவுக்கு, சசிகலாவிற்கு நெருக்கமான சீமான், முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கடியைத் தாக்குப் பிடிக்கும் துணிச்சலின்றி தமிழ்நாட்டை விட்டு ஓட நினைத்த கமல்;

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை காணும் விசாரணை கோரிக்கையை முன்வைத்து நிறைவேறும் வரை போராட மாட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடராஜனுடன் சங்கமமான கட்சிகளும், அதில் ஒதுக்கினாலும் ஒட்டிக்கொண்டு பயணித்த கட்சிகளும், அதே போக்கில் தான் இருப்பார்கள்.

தமிழக அரசு என்ற நிறுவன கட்டமைத்தல் (System Building) என்பதானது எவ்வாறு வலுவான அடித்தளத்தை இழந்தது? அதனை எவ்வாறு சரி செய்து, 1967க்கு முன்பு இருந்ததைப் போல, எவ்வாறு 'பில்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்' என்ற நிலையை அடைவது? என்பது தொடர்பான ரஜினியின் கீழ்வரும் கருத்தானது, எனது கவனை ஈர்த்துள்ளது.

"தமிழ்நாட்டில் தான் சிஸ்டம் சரியில்லை. நான் சொல்வது தமிழ்நாட்டுக்கு மட்டும் தான். முதலில் இதை சரி செய்ய வேண்டும்." என்று முதன் முதலில் துணிச்சலுடன் கூறியவர் ரஜினி அவார்

அது போலவே, மாணவர்கள் அரசியலில் பங்கேற்கக்கூடாது என்ற .வெ.ராவின் கருத்தினை 'பெரியார்' கட்சிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் காலம் இதுவாகும். ஆனால் ரஜினி துணிச்சலுடன் கீழ்வரும் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், கல்லுாரி விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 'மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்; அரசியலை பற்றி அறிந்திருந்தால் போதும். என்னால், எம்.ஜி.ஆர்., ஆக முடியாது; ஆனால், அவரது ஆட்சியை, என்னால் கொடுக்க முடியும்' என, மாணவர்கள் மத்தியில் பேசினார்

1996இல் ஜெயலலிதாவுக்கு அஞ்சி, தமிழ்நாட்டை விட்டு வெளியேற எண்ணிய கமல், முதல்வராகும் தமது ஆசையை அறிவித்து, கீழ்வரும் அபாயகரமான கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல உங்களைப் போன்ற மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். உங்களைப் போன்றவர்களைத் தான் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்க்கிறது." என்று கமல் தெரிவித்துள்ளார்.

கீழ்வரும் விளக்கத்தின் அடிப்படையில், .வெ.ரா அவர்கள் இன்று உயிருடன் இருந்தால், ரஜினியின் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை எல்லாம் மிகவும் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பார்; என்பதும் எனது கணிப்பாகும்.

“1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போதுபலம்பெற்றன? சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு, காந்தி காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.”; 

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள 'அரசியல் வெற்றிடமானது', 1967க்குப்பின் ஆட்சி அதிகாரமானது அரசியலை பொதுவாழ்வு வியாபாரமாக்கிய போக்கில் உருவான, ஆதாய அரசியலை ஊக்குவித்த, 'அரசியல் நீக்கத்தின்' (depoliticize) விளைவாகும். (‘'இந்துத்வா எதிர்ப்பு' தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதா? 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' சாத்தியமா?’;
http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

கடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு முன், கீழ்வரும் கருத்தினை நான் வெளியிட்டுள்ளேன்.

'..,தி.மு. ஆட்சியை இழப்பதற்கு வாய்ப்பில்லை.

"தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய .தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார்" என்று தமிழருவி மணியன் அறிவித்திருப்பதானது;

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது.'

அரசியல் நீக்கம் நீடிக்கும் வரையிலும், தமிழ், தமிழர், தமிழ்நாடு குறித்த சமூக, அரசியல் பார்வை உள்ள நேர்மையானவர்கள் அரசியல் வானில் வெளிப்படுவது அரிது. தி.மு, ஆட்சியில் கருணாநிதியின் குடும்ப அரசியல் ஊழலை எதிர்க்க, காமராஜரை ஓரங்கட்டி, எம்.ஜி.அரைத் தேர்ந்தெடுத்த நிலையில் தான், இன்றும் தமிழ்நாடு நீடிக்கிறது. அதற்கு திராவிட உணர்ச்சிபூர்வ அரசியலானது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சத்தைத் தொட்டு, அரசியல் நீக்கத்திற்கும், அதன் தொடர்ச்சியான ஊழல் அரசியலுக்கும் துவக்கமாக அமைந்ததே காரணமாகும். எனவே 'அடுத்த' எம்.ஜி.ஆர் வெளிப்படுவதற்கே வாய்ப்புள்ளது. அதன் மூலமாக அரசியல் நீக்கம் முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இன்றைய இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், எனது தலைமுறையைப் போல, பேச்சிலும் எழுத்திலும் ஏமாற மாட்டார்கள்.

அரசியல் வானில் நம்பத்தகுந்த வேறு யாரும் இல்லை என்பதை மேலே விளக்கியுள்ளேன். இன்று அரசியல் வானில் புதிதாக நுழைந்துள்ளவர்கள் எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சி பயணித்தவர்கள் ஆவார்கள். ஆனால் ரஜினி 1996 தேர்தலின் போது, ஜெயலலிதாவை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்தவர் ஆவார். எனவே மேற்குறிப்பிட்ட - மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது, சிஸ்டம் சரியாக வேண்டும் - தமது நிலைப்பாடுகளில் இருந்து ரஜினி தடம் புரள மாட்டார், என்ற நம்பிக்கையில், அவரின் அரசியல் பிரவேசம் நடைபெறுவதன் மூலமாக, அல்லது எதிர்பாராத வேறு வழியில், தமிழ்நாட்டில் கட்சியிலும் ஆட்சியிலும் 1967க்கு முன்பு இருந்ததைப் போல;

'பில்டிங் ஸ்ட்ராங்க்,பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்' என்ற நிலையை மீண்டும் தமிழ்நாடு அடைய வேண்டும், என்பதே எனது விருப்பமாகும்.

No comments:

Post a Comment