'மயன் தொழில்நுட்பம்'; 'ஐந்திறம்'; 'ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை';
மயனின் 'ஐந்திறம்' தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் முழுப்பெருமையும், கணபதி ஸ்தபதியையேச் சாரும்
'Architecture is Frozen
Music; கட்டிடக் கலை ஒர் உறைந்த இசை' 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளர் ஜோஹான் வுல்ஃப்காங் வோன் கொயெத்தே
(Johann Wolfgang von Goethe; https://www.goodreads.com/quotes/337462-music-is-liquid-architecture-architecture-is-frozen-music
)
கி.மு முதலாம் நூற்றாண்டிவில் ரோமில் வாழ்ந்த கட்டிடவியல் அறிஞர் விட்ருவியஸ்(Vitruvius) தான் (https://en.wikipedia.org/wiki/Vitruvius
);
முதன் முதலாக மேலே குறிப்பிட்ட, கட்டிடக்கலைக்கும், இசைக்கலைக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவினை வெளிப்படுத்தினார்.
“The best architects,
Vitruvius explains, can discover in music the secrets to forms they both encounter in nature and
create themselves.” (Music and Architecture in Vitruvius' De Architectura - Jamie Griffiths
)
கடந்த சுமார் 2000 வருடங்களாக, கட்டிடக்கலையில்
(Architecture) உறைந்துள்ள இசையை(Frozen
Music) எவ்வாறு பிரித்தெடுப்பது(Decipher)?
என்ற நோக்கில் பலர் முயன்று வந்தனர். நவீன காலத்தில், அவ்வாறு முயற்சித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யானிஸ் செனாக்ஸிஸ் ஆவார். (https://en.wikipedia.org/wiki/Iannis_Xenakis
)
1958இல் பிரஸ்ஸல்ஸ் நகரில் 'பிலிப்ஸ் பெவிலியன்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய கட்டிடமானது (https://en.wikipedia.org/wiki/Philips_Pavilion
);
இசைக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் இடையிலான நெருக்கத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது.
ஆனால் மேலே குறிப்பிட்ட முயற்சியானது, அவரின் உள்ளுணர்வின் உந்துதலில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
(‘The piece was composed intuitively, rather than being guided by mathematical
processes’ ; https://en.wikipedia.org/wiki/Concret_PH
)
எனவே கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசைக்கலையைப் பிரித்தெடுக்கும் 'இரகசியங்கள்' கண்டுபிடிக்கப்படாத நிலையே தொடர்ந்தது.
இதற்கிடையில் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics
of Tamil Music) என்ற தலைப்பில் 1996இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர், நான் கணினி இசையிலும் புலமையாளனாக வளர்ந்தேன். அந்த போக்கில், மேலே குறிப்பிட்ட 'இரகசியங்கள்' எனது ஆய்வில் வெளிப்படத் தொடங்கின.
2005 சூலையில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய காலத்தில், இணையத்தில் கீழ்வரும் தகவல் அறிந்து வியப்பெய்தினேன்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள மாயன் தொல்லியல் இடங்களுக்கு, (சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடங்கள், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல கோவில்கள் உருவாக்கிய) கணபதி ஸ்தபதி சென்று, அங்கிருந்த பிரமீடுகளை எல்லாம் அளந்து, மாயன் கட்டிடக்கலைக்கும், தமிழ்நாட்டிலும், இந்தியாவில் பிற இடங்களிலும் உள்ள 'மயன்' கட்டிடக்கலைக்கும் இடையிலான ஒற்றுமைகளை உலகிற்கு அறிவித்தார்.
‘"Sri V. Ganapati
Sthapati," read Deva Rajan's fax to our Hawaii editorial office from Machu
Picchu high in the rugged Andes Mountains of Peru, South America, "has
just measured with tape, compass and a lay-out story pole, two ancient Incan
structures at Machu Picchu: a temple and a residence. He has confirmed that the
layout of these structures, locations for doors, windows, proportions of width
to length, roof styles, degree of slopes for roofs, column sizes, wall thicknesses,
etc., all conform completely to the principles and guidelines as prescribed in
the Shaastra Vaastu of India. Residential layouts are identical to those found
in Mohenjodaro. The temple layouts are identical to those that he is building
today and that can be found all over India."
These startling discoveries
came during a March, 1995, visit of the master builder to the ancient Incan and
Mayan sites of South and Central America.’ ; http://www.vastu-design.com/ht-article.php
உடனே கணபதி ஸ்தபதியைப் பற்றி இணையத்தில் தேடினேன். அவர் சென்னையில் நீலாங்கரை அருகே வசிப்பதையும், அவரின் 'ஈமெயில்'
(Email) முகவரியையும் அறிந்தேன். உடனே எனது ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றினையும், எனது தொலைபேசி உள்ளிட்ட முகவரியையும் அவருக்கு 'ஈமெயில்' மூலம் அனுப்பினேன்.
மறுநாள் தொலைபேசியில் என்னை அழைத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசினார். எனது ஆராய்ச்சிகளைப் புகழ்ந்து, தான் மிகவும் வயதான படியால், எனது இடத்திற்கு வரமுடியாதென்றும், என்னை வருமாறும் அழைத்தார். மறுநாளே அவரை சென்று பார்த்தேன். தனது ஆய்வுகள் பற்றி என்னிடம் விரிவாக பேசி, கடைசியில் அவர் கண்களில் நீர் மல்க, 'ஐந்திறம்' நூல் தொடர்பான கசப்பான அனுபவங்களை விவரித்து (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html );
அந்நூலினை எனக்குக் கொடுத்தார்.
பின் தொல்காப்பியம் போன்ற சூத்திரங்கள் அடங்கிய அந்த நூலினை ஆழ்ந்து படித்தேன்.
நான் எனது ஆய்வுகளின் மூலமாக கண்டுபிடித்திருந்த;
கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசைக்கலையைப் பிரித்தெடுக்கும் 'இரகசியங்கள்' தொடர்பான, பல சூத்திரங்களை அந்நூலில் கண்டேன்.
மறுமுறை கணபதி ஸ்தபதியைச் சந்தித்த போது, அதனைத் தெரிவித்தேன்.
அதனை செய்முறை மூலம்(Demonstrate)
விளக்க முடியுமா? என்று என்னிடம் அவர் கேட்டார். அதையும் செய்து காட்டினேன். அவர் மிகவும் மகிழ்ந்து, என்னை 'மயன் வாரிசு' என்று பாராட்டினார். பின் 2007 சனவரியில் சென்னை சவேரா ஓட்டலில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த கட்டிடக்கலைஞர்கள் முன்னிலையில், எனது செய்முறை விளக்க்த்தினை அரங்கேற்றினார்.
கணபதி ஸ்தபதியின் தூண்டுதல்கள் மூலமாகவே, நான் கண்டுபிடித்த மேலே குறிப்பிட்ட இரகசியங்களை எவ்வாறு செய்முறை மூலமாக விளக்க முடியும்? என்ற திசையில் எனது ஆய்வு முன்னேறியதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
‘கணபதி ஸ்தபதியின் தூண்டுதலின் பேரில், 'ஐந்திறம்' நூலில் உள்ள சூத்திரங்களையும் பயன்படுத்தி , கட்டிடக் கலையில் உறைந்துள்ள இசையை(Frozen
Music) எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்
(decipher) என்பதற்கான 'லாஜிக்'குகளையும்(Logic),
இசையில் இயக்கமாக(Dynamic) இருக்கும் கட்டிடக்கலையை (
Dynamic Architecture) எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்
(decipher) என்பதற்கான 'லாஜிக்'(Logic)குகளையும் நான் கண்டுபிடித்து, கணபதி ஸ்தபதியின் முன் விளக்கினேன். அதன் காரணமாகவே அவர் என் மீது சொற்களால் விளக்க முடியாத 'அன்பு வெள்ளத்தில்' என்னை மூழ்கடித்தார். அவரின் மரணத்திற்குப் பின், அவர் ஏற்படுத்தியிருந்த 'டிரஸ்டில்'
(Trust) நானும் உறுப்பினர் என்பது எனக்குத் தெரிய வந்தது.’ (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html
)
‘அந்த 'லாஜிக்கை'
(Logic) கண்டுபிடித்து விட்டால், ஒரு கட்டிடத்தின் படத்தை மூலமாகக்(Source)
கொண்டு, அதில் உறைந்துள்ள இசையை பிரித்து எடுத்து இசைக்கச் செய்யலாம். அதன்பின் ஒரு இசையில் 'இயக்கமாக உள்மறைந்துள்ள
(dynamic latent) 'கட்டிடவடிவை பிரித்தெடுத்து, காட்சிப்படுத்தலாம்
(visualize) இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அந்த 'லாஜிக்கை' முழுமையாக எவரும் கண்டுபிடிக்கவில்லை.
‘‘ஐந்திறம்’ நூலின் அறிமுக உரையில், 'ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை' ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு, இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது என்று சொல்லி, இந்த ஐந்து கலைக்குமான நூல் ஐந்திறம் என்று கணபதி ஸ்தபதி விளக்கியுள்ளார்..………….
அந்த லாஜிக்கின் மூலம், கணினி வழி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டமானது
(R&D Project) , NIT-Tஇல், ஒரு மூத்த பேராசிரியரின் கீழ், என்னை திட்ட ஆலோசகராகக்
(Project Consultant) கொண்டு, கட்டிடவியல்(Architecture) துணை பேராசிரியர்,
M.Tech முடித்த ஆராய்ச்சிப்படிப்பு
(Ph.D) உதவியாளர்
(Research Assistant-R.A), D.Arch முடித்த தொழில்நுட்ப உதவியாளர்
(Technical Assistant-T.A) உள்ளிட்ட குழு மூலம், மத்திய அரசின் உதவியில் முன்னேறி வருகிறது.
கடந்த 2015 நவம்பர் முதல் முறையாக அந்த முன்னேற்றம் கீழ்வரும் முறையில் சோதிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட பேராசிரியர், முதலில் T.Aவிடம், ஒரு கட்டிடப்படத்தைக் கொடுத்து, அதில் உறைந்துள்ள இசையை கணினி மூலம் வெளிப்படுத்த பணித்தார். சில மணி நேரங்களில், அந்த கணினி மூலம் வெளிப்பட்ட இசைக் கோப்பை(Music
File) பேராசிரியரிடம் கொடுத்தார். அதன்பின் R.A இடம் அந்த இசைக் கோப்பை கொடுத்து, அதிலிருந்து, கணினி மூலம் கட்டிடம் படத்தை வெளிக்கொண்டுவர பணித்தார். சில மணி நேரங்களில் அந்த பட கோப்பை
(Figure File) பேராசிரியரிடம் கொடுத்தார். முதலில் கொடுத்த படமும், அந்த படத்திலிருந்து வெளிவந்த இசையின் அடிப்படையில் உருவான படமும் ஒரே மாதிரி இருந்ததில் பேராசிரியருக்கு இன்ப அதிர்ச்சி. பின் திருச்சியில் ஒரு மதிப்புமிகு கட்டிடவியல் நிபுணர் (reputed Architect) மேற்பார்வையில், அவரது அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட சோதனை (Validation) வெற்றிகரமாக நடந்தது.
மேலே குறிப்பிட்ட ஆய்வின் முதல்கட்டமானது முடிந்து, அடுத்த கட்டமான, 'அந்த லாஜிக்' அடிப்படையில் கணினி வழி மென்பொருள் உருவாக்கும் முயற்சியும் தொடங்கியுள்ளது.
‘அதன் அடுத்த கட்டமாக; கட்டிடத்தின் படத்தை உள்ளீடாக(Input)
கொடுத்தால், அதில் இருந்து பிரித்தெடுத்து, ஒரு இசைக்கூறு கணினி மென்பொருள் நூலகம்(Library
of music structures) உருவாகும்; இசை அமைப்பாளர்கள் கணினியின் துணையுடன் இசை அமைக்கும் வகையில். அது போலவே ஒரு இசையை உள்ளீடாக கொடுத்தால், அதில் உள்மறைந்துள்ள கட்டிடக்கலைக் கூறுகள் கொண்ட மென்பொருள் நூலகம்
(library of Arch Design Structures) உருவாகும்; கட்டிடக்கலைஞர்கள் கணினியின் துணையுடன் புதிய கட்டிட வரைபடம் உருவாக்கும் வகையில்.’ (https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_15.html)
கணபதி ஸ்தபதி 'மயன் தொழில்நுட்பம்' என்று அறிவித்துள்ள 'ஐந்திறம்' என்பதானது, , 'ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை' ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு, 'இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது' என்றும் விளக்கியுள்ளார். தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' (Musical
Linguistics) என்ற எனது கண்டுபிடிப்பானது, 'இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது' என்பதையும் நிரூபித்துள்ளது.
அது மட்டுமல்ல;' தொல்காப்பியத்தில் உள்ள இசை மொழியியல் இலக்கணமானது, தமிழ் மட்டுமின்றி, மலாய், சீனமொழி உள்ளிட்டு உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கான 'இசை மொழியியல் இலக்கணம்' ஆகும் என்பதையும் விளக்கினேன். அதன் மூலம் உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' என்ற துறையானது உருவாக வேண்டிய கட்டமானது நெருங்கி விட்டதையும் விளக்கினேன்.
அவ்வாறு அரங்கேறும் 'இசை மொழியியல்' துறை மூலமாக, நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கீழ்வரும் NLP பொருட்கள் சந்தைக்கு வரும் என்பதையும் விளக்கினேன்.
Lyric to Music; Music to
Lyric; Music Grammar Check, etc will be future NLP products based on the
Musical Linguistics in Tholkappiam’ (https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html)
கட்டிடக்கலைக்கும், இசைக்கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு தொடர்பான 'லாஜிக்கின்' தொடர்ச்சியாக, ஓவியக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு தொடர்பான 'லாஜிக்கினை', என்னால் வெளிப்படுத்த முடியும். அது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களில் இசைக்கும், நடனத்திற்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு பற்றிய எனது கண்டுபிடிப்புகள் மூலமாக;
நாட்டியக்கலைக்கும், இசைக்கலைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு தொடர்பான 'லாஜிக்கினை, என்னால் வெளிப்படுத்த முடியும்.
பழந்தமிழ் இலக்கியங்களிலும், சமஸ்கிருத இலக்கியங்களிலும் புதைந்துள்ள அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாம் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இருந்து வெளிவரும் கண்டுபிடிப்புகள் போலின்றி, தமிழ் இலக்கியங்களில் நான் கண்டுபிடித்தவை எல்லாம் 'அபத்தமான' தடைகளை சந்தித்து வருவதையும் வெளிப்படுத்தியுள்ளேன்.(
http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html
)
சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களிலும், ராமாயணம் உள்ளிட்ட சமஸ்கிருத இலக்கியங்களிலும், 'மயன் தொழில்நுட்பம்' பற்றிய சான்றுகள் பல உள்ளன.
'இராமர் பாலம்' தொடர்பான 'சர்ச்சையில்', தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வரும் 'மயன் தொழில்நுட்பமும்' சிக்கி கேலிக்குள்ளானது. அது எவ்வளவு பெரிய தவறு? என்பதை, 'இராமர் பாலம்' தொடர்பான கீழ்வரும் சான்றானது வெளிப்படுத்தியது.
‘A prehistoric land bridge
between India and Sri Lanka has been discovered in a series of NASA ariel
photographs……..The bridge usually named either Adam's Bridge or Rama's Bridge,
is today a series of limestone shoals that once formed a complete path between
the two countries and cannot be seen at ground level due to submergence.’ ;
https://www.disclose.tv/nasa-discovered-a-17-million-year-old-ancient-bridge-between-india-and-sri-lanka-315585
பெரிய புராணத்தில், ஆனாயநாயனார் குழல் இசையில் மோகன ராகத்தில் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை இசைத்து, இறைவனோடு ஒன்றி, 'எல்லையில்லா (infinite) மகிழ்ச்சி' என்றால் என்ன? என்பதை, எனக்கு புரிய வைத்தார். ( http://musicresearchlibrary.net/omeka/items/show/2447
)
கணபதி ஸ்தபதி 'மயன் தொழில்நுட்பம்' என்று அறிவித்துள்ள 'ஐந்திறம்' தொழில்நுட்பத்தினை, நான் கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்புகளை முழுமையாக விளங்கி, 'எல்லையில்லா' மகிழ்ச்சி பெற முடியாமல், சில வருடங்களுக்கு முன் கணபதி ஸ்தபதி மறைந்ததானது, எனக்கு விவரிக்க முடியாத வருத்தத்தினை தந்துள்ளது. எனது 'ஐந்திறம்' தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் முழுப்பெருமையும், அதை நோக்கி நான் முயலுமாறு, என்னை ஊக்குவித்த கணபதி ஸ்தபதியையேச் சாரும்.
No comments:
Post a Comment