Sunday, July 21, 2019


ராஜாஜி, .வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்  (3)


'ஒரீஇ' என்ற வலிமையான சமூக செயல்நுட்பஆயுதம்



1967க்கு முன், திருச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்த நான் சிலமுறை சென்னைக்கு வரும் வாய்ப்புகள் கிட்டின. அப்போது மாநகரப் பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வந்து நின்றவுடன், தாமாகவே தள்ளுமுள்ளின்றி வரிசையில் நின்று, ஒவ்வொருவராக பேருந்தில் ஏறுவார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவானவுடன், நடத்துநர் சைகை காட்ட, வரிசையில் நின்ற பயணிகள் பேருந்தில் ஏற மாட்டார்கள். அப்போது அது எனக்கு வியப்பாகப்படவில்லை. 

ஊழலில், பொது ஒழுக்கக்கேட்டில் இன்றைய சென்னையைப் போலவேஅந்த காலக்கட்டத்தில் (1960களில்) சிங்கப்பூர் இருந்ததை சிங்கப்பூரில் புகழ் பெற்ற நடன ஆசிரியர் மறைந்த பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.

இன்றைய சிங்கப்பூர் அன்றைய சென்னையாக வாழ, அன்றைய சிங்கப்பூர் திசையில் இன்றைய சென்னை பயணிக்கிறது. சிங்கப்பூரானது அவ்வாறு சீரடைந்ததற்கு, மறைந்த லீ குவான் யூ முக்கிய காரணமாவார். அதனை அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களே, அவர் மறைந்த பின் நடந்த இறுதி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்; என்றும் கேள்விப்பட்டேன்.

இந்திய விடுதலை தொடங்கி இன்று வரையில், தமிழ்நாடு இந்தியாவில் வித்தியாசமான மாநிலமாகவே பயணித்து வருகிறது. ;

1967க்குப்பின், இந்திராகாந்தியின் நெருக்கடி கால ஆட்சியிலும், இந்தியாவிலிருந்து வித்தியாசமாக, இன்றைய சிங்கப்பூர் திசையில் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க பயந்தார்கள்; தாமதமின்றி ரயில்கள் ஓடின.

இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தியின் செல்வாக்கில் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) சீர் குலையாமல், சர்க்காரிய கமிசன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால், அதே பயணத்தில், தமிழ்நாடானது, 'இந்தியாவின் சிங்கப்பூர்' என்ற நிலையில் இன்று பயணித்திருக்கும்;

நிலத்தடி நீர் குறைந்திருக்காது; கிரானைட் மலைகள், தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள், தமிழ்நாட்டு கோவில்களில் இருந்த சிலைகள், கோவில் கோபுரங்களில் இருந்த 'இரிடியம்' உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.

ஆனால் இன்று தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது?

ஒரு சமுகத்தில் புறத்தில் எதை இழந்தாலும், மீண்டு எழுவது சாத்தியமாகும்; 'அந்த' சமூகத்தின் 'அகம்' வலிமையுடன் நீடிக்கும் பட்சத்தில். ஆனால் 'அந்த சமூகத்தின் 'அகம்' சீரழிவினைச் சந்தித்தால், மீள்வது சிக்கலாகி விடும். 'அந்த' சிக்கல் நீடிக்கும் வரையிலும், தரகர்களும், திருடர்களும் வலிமை பெறும் போக்கிற்கு ஏற்ப, 'அந்த' சமூகத்தின் புறத்தில் வெளிப்படும் வளர்ச்சிகள் எல்லாம், குடியேறிய பிற சமூகத்திற்கு ஒதுங்குவதைத் தவிர்க்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html) அதை விட மோசமாக, 'அந்த' சமூகமானது, உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதற்கான தகுதியை இழந்த சமூகமாக 'திரிந்து' விடும்
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html

வசதியிருந்தும், எளிமையாக வாழ்ந்து கொண்டு, சக மனிதர்களுக்கு பிரமிக்கும் வகையில், வெளியில் தெரிவித்து பெருமைபடாமல், நம்ப முடியாத அளவுக்கு உதவிகள் புரிந்து, எளிமையாகவாழ்ந்து வரும் எனக்கு மிகவும் நெருக்கமான, சுமார் 80 வயதுடையநண்பர், எங்களின் உரையாடலின் போது, தெரிவித்த தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு உதவுவது வீணான வேலை. உதவ வேண்டும் என்று விரும்பினால், பறவைகள், விலங்குகள் போன்ற பிற உயிரினங்களுக்கு உதவலாம்'

அவரிடம் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தேன்.

'இன்று தமிழ்நாட்டில் ஏழை மாணவர்கள் பொறியியல், மருத்துவ படிப்புகளில் சேர உதவிகள் கேட்பது, நாளிதழ்களில் வெளிவருகின்றனவே. அதன் மூலம் உதவிகளும் கிடைக்கின்றனவே'

மேற்குறிப்பிட்ட எனது கருத்துக்கு, அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.

அவரிடம் அது போன்ற உதவிகள் பெற்றவர்கள், பின்னர் சமூகத்திற்கு கேடான, பணத்துக்கு வாக்கை விற்றவர்களாக, அரசியல் கொள்ளையர்களின் அடிவருடியாக, அது போன்ற திசைகளில் பயணித்தது, அவர் அனுபவங்களாக இருந்திருக்கலாம்; என்பது எனது யூகம்.

அதை விட மோசமான அனுபவங்களும் எனக்கு உண்டுவாழ்வதற்கான நியாயத்தை தமிழ்நாடு இழந்து விட்டதாக, நான் கருத.

ஆனால் அவர் வெளிப்படுத்திய அவநம்பிக்கையில் இருந்து தமிழ்நாட்டை மீட்க, எனது வரை எல்லைகள் (limitations) புரிந்து, நான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்; அவரிடம் தெரிவிக்கமல்; 'ஒரீஇ' என்ற வலிமையான சமூக செயல்நுட்பஆயுதத்தின் துணையுடன்.

அதன் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம். 

தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில், நீதி மன்றங்களின் 'யோக்கியதை' பற்றி நான் அனுபவங்கள் பெறும் வகையில்;   
        
ஜானகி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான (வைப்பாட்டி/துணைவியுடன் வாழ்ந்த) எனது மாமனாரை எதிர்த்து, அவரின் சட்டபூர்வ மனைவி மற்றும் மகளுக்காக' நீதிமன்ற வழக்குகளில் போராடி, கடனாளியாக ஆனபடியால், எனக்கு பண உதவி செய்தவர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதை மட்டுமே, வாழ்வதற்கான 'பிடியாக' கருதி,, வாழ்க்கையைத் தொடர்ந்தேன்; தன்மானக்கேடான வழிகளில் அவற்றை திருப்பிக் கொடுத்து, பெரும் பணக்காரராக வாழ பல வழிகள் இருந்தும்

மார்க்சிய வரலாற்றாசிரியர் கோசாம்பியின் தந்தை தர்மானந்த தாமோதர் கோசாம்பி ஆவார். இந்தியாவில் வழக்கொழிந்திருந்த பாலி மொழியை உயிர்ப்பித்தது உள்ளிட்ட, இன்னும் பல பிரமிப்பூட்டும் சாதனைகள் புரிந்தவர் அவர். இனிமேல் வாழ வேண்டியதில்லை, என்று முடிவெடுத்து, அவர் ஏற்றுக்கொண்டிருந்த ஜைன மதத்தின் 'சந்நியாச மரணம்' (sanyasana-marana) முறையில்,படிப்படியாக உணவைக் குறைத்து, பின் உட்கொள்ளும் திரவத்தைக் குறைத்து உயிர்விடும் முறையில், அவர் மறைந்தார்.

அவரின் வாழ்க்கை வரலாறு படித்து வியந்தேன். ஆனால் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதற்கான தகுதியை இழந்த தமிழ்நாட்டில், அந்த வழியில் மரணமடைவதை விட, காட்டுக்குள் சுற்றிப்பார்க்க தனியாக செல்லும் போது, மயக்கமடைந்து மரணித்து, அங்கு வாழும் உயினங்களுக்கு நான் தீனியாக வேண்டும்; வாய்ப்பு எனக்கு கிட்ட வேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. 'அந்த' காலக்கட்டத்தில் நான் விமானத்தில், பேருந்தில் பயணித்தபோது, மரணிக்கச் செய்யும் விபத்துகள் நேர்ந்திருந்தால், அதன் மூலமாக மகிழ்ச்சியுடன் மரணத்தைச் சந்தித்த நபராக நான் இருந்திருப்பேன்.

புதுக்கோட்டையில் இறுதி சடங்கு நிறைவேற்ற வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை/அனாதை மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன், 'அந்த' சடங்கை இலவசமாக நிறைவேற்றி வருவதை, சுமார் 10 வருடங்களுக்கு முன்பே நான் அறிவேன். சுயலாபக் கள்வர்களான உற்றமும் சுற்றமும் சூழ, சுயலாபக்கணக்குகளில் ஒரு பகுதியாக மிகுந்த ஆடம்பரத்துடன் நிறைவேறும் இறுதிச் சடங்குகளை விட, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு நடந்த இறுதிச் சடங்கை விட, மேற்குறுப்பிட்ட வகையில் 'பலன்' பெறுவதே புண்ணியம், என்பதும் எனது கருத்தாகும்

எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளின் (Passion) அடிப்படையில், எந்த எதிர்பார்ப்பும் கனவும் இன்றி, நான் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் எல்லாம், அதுவரை சோகமின்றி சுறுசுறுப்புடன் வாழ உதவின; இயற்கையின் போக்கில் மரணமானது என்னைத் தழுவும் வரையில்,

ஆனால் அதே போக்கில் பயணிக்க, இயற்கை என்னை அனுமதிக்கவில்லை.

'தாம் இசை அமைத்தது சிம்பொனி அல்ல, ஓரடோரியோ இவை வடிவம்' என்று 2005 சூன் முதல் வார 'ஆனந்த விகடனில்' பேட்டியளித்த இளையராஜாவை, பாதிரியார் ஜெகத் கஸ்பார் வெளியில் தெரியாத நெருக்கடிக்குள்ளாக்கி, 'திருவாசகம்சிம்பொனி ஆரடோரியோ' என்று மேற்கத்திய இசையில் இல்லாத ஓன்றில் அது வெளிவந்துள்ளதாக அறிவித்து, குடியரசு தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு இந்தியாவையே முட்டாளாக்கி, உலக இசை அறிஞர்களின் பார்வையில்  இந்தியாவை கேலிக்குள்ளாக்கியதை;

பொறுத்துக் கொள்வதானது, எனது இசை ஆராய்ச்சிக்கு நான் செய்த துரோகமாகும். எனவே நான் வாழ்வதற்கான பிடிப்பை, அதை எதிர்ப்பதானது எனக்கு வழங்கியது. (‘In the meantime, one Dr. Vee has disputed Fr. Gaspar Raj false Symphony claims’; http://www.asiantribune.com/node/4959)

அது தொடர்பாக‌, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு (Press Council) புகார் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு அனுப்பிய விளக்கத்திற்கு, நான் அனுப்பிய (Aug 15, 2006) மடலின் பகுதி: 

‘India is not a country deficient of music experts who could refute false claims in music and the Norms 16 of Norms of Journalistic Conduct (Edition 2005) cannot be cited to justify the above shortcoming on the part of the English print media. My locus in this matter is that I am a music expert [Credentials given below] and I am interested in restoring the music reputation of India and to alert the media to practise fair and just reporting with respect to music news. 

I humbly suggest that the council, citing the case of ‘India’s First Symphony’ in my complaint, can issue a circular to the English print media to report any claim in music only after proper verification in order to practice fair and just in their news reporting. [Attached: Rev. Fr. Jegat Gaspar Raj’s False Symphony Claims –FAQ]’ 

'திருவாகம் சிம்போனி ஆரடோரியா' தோல்விக்கு, திருவாசக தமிழ் வரிகளே காரணமாகும்' என்ற வகையில், பின்னர் கஸ்பார் பேட்டியில் தெரிவித்துள்ளார். ([Indo-Asian News Service, Chennai, March 20, 2006, 18 March 2006 News Update Service, The Hindu and Deccan Chronicle 19 March 2006]. நேர்மையற்ற ஒரு கிறித்துவ பாதிரியார் இந்து மத புனித நூலான திருவாசகத்தை 'சிம்பொனி ஆரடோரியோ' என்ற உலகில் இல்லாத இசை வடிவத்தில் வெளியிட்டதையும், பின் அதன் தோல்விக்கும் திருவாசகத்தின் தமிழைக் குறை சொல்லியதையும், எந்த 'இந்துத்வா' ஆதரவாளரும், தமிழ் ஆதரவாளரும் கண்டித்திருக்கவில்லை என்றால்;

தமிழ்நாட்டில் தமிழர்களின் 'அகம்' சீரழிந்துள்ளதற்கு, அது வலிமையான சான்று ஆகாதா?

மேற்குறிப்பிட்ட இணைப்புகளில் உள்ளபடி, விடுதலைப்புலி பிரபாகரனால் 'பணமும், செல்வாக்கும்' பெற்ற பாதிரியார் ஜெகத் கஸ்பார், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களின் பிரபலங்களுக்கும் நெருக்கமானவர்; பிரபாகரனைப் போலவே. அவர்களில் மனசாட்சியுள்ளவர்கள் எவராவது மெளனம் கலைத்து, ஏமாந்தது அவர்களா? கஸ்பாரா? என்று தெளிவுபடுத்துவார்களா?

தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' சமூக சோளக்கொல்லை பொம்மையாகியுள்ள நிலைக்கு, கிறித்துவ பாதிரியார் ஜெகத் கஸ்பாரும், அவருக்கு நெருக்கமானவர்களும் எந்த அளவுக்கு பங்களித்துள்ளார்கள்? என்ற ஆராய்ச்சியும் இன்றைய அவசியமாகும்
(http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html)


மேற்குறிப்பிட்ட எதிர்ப்பின் போது தான், பண நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு அநியாயத்தை எதிர்ப்பதில் உள்ள படுகுழிகள் பற்றிய அனுபவமும் கிடைத்தது. நண்பர்கள் உதவியுடனும், மீண்டும் (கல்லூரி முதல்வர்) பணியில் சேர்ந்தும், 'அந்த' பண நெருக்கடியில் இருந்து மீண்ட பின்பு, சுதந்திர பறவையானேன்; அதிக மாத சம்பளத்தில் என்னைத் தேடி வந்த பதவிகளை ஏற்றுக் கொள்ளாமல். தமிழ்நாட்டில் எனது இயல்பினை ஒட்டி, வாழ்வதற்கான அருகதையில்லாததை, எனது அனுபவங்கள் உணர்த்தின

அவ்வாறு வாழ்ந்த காலக்கட்டத்தில், 'திருச்சி பெரியார் மையம்' மூலமாக, என்னை ஏமாற்றி ஏணியாக்கி வளர்ந்த 'பெரியார் மூகக் கிருமிகளினால்' நான் சந்தித்த சீர்குலைவானது, தமிழ்நாட்டின் சீரழிவிற்கான மூல காரணத்தைத் தேடும் ஆய்வில் ஈடுபட‌, என்னைத் தூண்டியது.
(http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_5.htmlஎனது பொதுவாழ்வின் காரணமாக எனது வீட்டிற்குள் நான் அனுமதித்தவர்களில், சமூகக் கிருமிகளாக நான் அடையாளம் கண்டு ஒதுக்கியவர்களின் 'அதிவேக பணம் ஈட்டல்' திறமையில் மயங்கி, எனது உற்றமும், சுற்றமும் சீரழிந்திருப்பதும், 'அந்த' ஆய்வின் மூலமாகவே வெளிப்பட்டது.(‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடாசமூகசெயல்நெறி மதகுகள் (1); (Social Functional Checks)’;
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

அவ்வாறு நான் வாழ்வதற்கான புது பிடிப்புகள் வெளிப்பட்டு, நான் துடிப்போடு மீண்டும் வாழத்தொடங்கிய பின்பு, எனது இசை ஆய்வுகளும் நானே எதிர்பார்க்காத அளவுக்கு முன்னேறியதும் இயற்கையின் அதிசயமாகும். ( http://drvee.in/)

அதன் தொடர்ச்சியாக, அண்மையில் மருத்துவர் ரமேஷும், அவரது நண்பர்கள் துரைப்பாண்டியும், மோகன்ராஜும் என்னுடன் நீண்ட நேரம் உரையாடியதும் எதிர்பாராத இன்ப அனுபவமாகும்; கடந்த சுமார் 10 வருடங்களில் முதல் முறையாக.

மனிதரின் வேர் பற்றியும், தமிழரின் திணையியல் வாழ்க்கை முறை பற்றியும் எனது ஆய்வில் இடம் பெறுவதானது, அதன் தொடர்ச்சியே ஆகும். (‘மருத்துவர் ரமேஷ் திட்டமிட்டிருந்த 'நொய்யல் திணையியல் ஆய்வு' ‘; 

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான செயல்முறையில், அனுமதிக்கக் கூடியவைகளை மட்டும் நிபந்தனைக்குட்பட்டு தேர்ந்தெடுத்து அனுமதிக்கும் வடிப்பான் (Conditional Filter) போன்றே 'ஒரீஇ' செயல்படுகிறது.' (‘தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் இலக்கியசான்றுகள் அடிப்படையில்; காலனிய மனநோயில் 'ஒரீஇய' பெண்ணுரிமை’; 

ஒவ்வொரு மனிதரும் தமது இயல்பை ஒட்டிய 'ஒரீஇ' முறையில் தான், தமது நண்பர்களையும், தமது உற்றத்திலும் சுற்றத்திலும் தமக்கு ஏற்றவர்களையும் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்.

அவ்வாறு 'ஒரீஇ' முறையில் தேர்ந்தெடுத்து வாழ்வதில், பிறந்த மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் முக்கிய பங்கு வகிப்பதை எல்லாம்;

சிங்கப்பூர், அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை கிடைத்து அங்கு பணியாற்றுபவர்கள் நிரூபித்து வருகிறர்கள். தாம் குடியேறிய நாட்டில் அவர்கள் புதிதாக தமது சமூக வட்டத்தில் அனுமதித்துள்ள தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை தேர்ந்தெடுக்கும் சமூக செயல்நுட்பத்திலும், அவர்கள் பின்பற்றி வரும் பண்பாடும், பாரம்பரியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேற்குறிப்பிட்டவாறு, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு புதிதாக அவர்கள் தமக்கான சமூக வட்டத்தினை உருவாக்கி வாழும் 'ஒரீஇ' முறையிலும், கீழ்வரும் வேறுபாடு, எனது வரை எல்லைகளுக்கு உட்பட்டு, நான் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

வசதி, வாய்ப்பு, படிப்பு போன்ற வலிமையில் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பிழைப்பிற்காக வாழ்பவர்களில், சாகும் வரை தாம் பிறந்த ஊருடன் தொடர்பில் இருப்பவர்கள் பக்தியுடனும், தமது குலதெய்வ வழிபாட்டினை வருடம் ஒரு முறையாவது தரிசித்து வணங்குபவர்களாகவே உள்ளார்கள். அந்த வரிசையில், நான் அறிந்தது வரையில், கிறித்துவர்களும், மேற்கத்திய மோகத்தில் வாழ்பவர்களும், திராவிடர்/திராவிட/ கம்யூனிஸ்ட்/முற்போக்குகளும் அரிதாகவே உள்ளார்கள். முஸ்லீம்களைப் பற்றிய உள்ளீடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் பிற மாநிலங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்டு, அம்மாநிலங்கள் இருந்தால், நான் வியப்படைய மாட்டேன்.

அதாவது, வெளிநாட்டில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் 'ஒரீஇ' முறையில்,அவர்கள் தொடர்பில் உள்ள 'வேரின்' அடிப்படையிலேயே, மேற்குறிப்பிட்ட வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. அதாவது தமிழ் வேரழிந்து சமூகத்திற்கு கேடாக வாழ்பவர்களின் 'ஒரீஇ' சமூக செயல்நுட்பமும், 'வேர்' பற்றிய முக்கியத்துவம் அறிந்து சமூகத்திற்கு நலமாக வாழ்பவர்களின் 'ஒரீஇ' சமூக செயல்நுட்பமும், எதிரெதிர் திசையில் பயணிப்பவை ஆகும். இன்றைய தமிழ்நாட்டில் முன்னது மரண வாயில் உள்ளதானது வெட்ட வெளிச்சமாகி வருகிறது; ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவிற்குப் பின்.

ஒரு மனிதரின் வேர் என்பது என்ன? என்பதை ஆராய்வோம்.

மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் தமக்கான இடத்தில் நிலை பெறுவதற்கும், தமது வளர்ச்சிக்கான உணவுகளை உண்டு வளரும் உயிரோட்டமுள்ள வாழ்க்கை என்பதானது, அவற்றின் வேர்களைப் பொறுத்ததாகும். வேர்களில் ஏற்படும் நோய்களின் தன்மையைப் பொறுத்து, 'அந்த' உயிரோட்டம் பாதிக்கப்படும்; அல்லது மரணத்தினை விளைவிக்கும்.

வாழ்கின்ற மனிதரின் வேரின் தொடக்கமாக அவரது பிறந்த இடமும், வேரின் முடிவாக அவர் மரணிக்கும் இடமும் இருக்கிறது. அந்தந்த இடத்தில் வாழும் மக்களின் இசை, நடனம், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் எல்லாம், அந்தந்தஇடத்தில் உள்ள வேருடன் தொடர்பு கொண்டவை ஆகும். எனவே பிறந்த இடம் ஒன்றாகவும், வாழ்ந்து மரணிக்கும் இடம் வேறாகவும் இருக்கும் நிலையில் சிக்கிய மனிதர்கள் எல்லாம், எந்த இடத்தின் வேரோடு ஒட்டி வாழ்வது? என்பது தொடர்பான சிக்கலிலும் வாழ்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் பிறந்தவர்களில், பிறந்த ஊருடன் சாகும் வரை தொடர்பில் உள்ளவர்கள் எல்லாம் பிழைப்பிற்காக வெளியூர் இடம் பெயர வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்களாகவே பெரும்பான்மையாக உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் கடவுளாகக் கருதி, தாவரங்களையும் விலங்குகளையும் வணங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் காலனியத்திற்குப் பின், வழிபாட்டில் நுழைந்த இரைச்சல்களை அடையாளம் கண்டு அகற்றி, 'சிக்னல்களை' உணர்ந்தால், 'இயற்கையோடு இணைந்த திணையியல்' வாழ்வு முறை வெளிப்படலாம்.’ ('மருத்துவர் ரமேஷ் திட்டமிட்டிருந்த 'நொய்யல் திணையியல் ஆய்வு';

இயற்கையோடு இணைந்த திணையியல்' வாழ்வு முறையுடன் தமது வேரை அடையாளம் கண்டு, ஒட்டி பயணிக்க உதவுவது ஒரீஇ சமூக செயல்நுட்பமாகும். வாழ்வதற்கான ஆர்வத்தை இழந்து, பின் மீண்டும் உயிர்ப்புடன் வாழத் தொடங்கிய பின், எனக்கு உற்ற துணையாக இன்று வரை உதவி வருவது 'ஒரீஇ' சமூக செயல்நுட்பமாகும்.

.வெ.ராவின் 'தமிழ் வேர்க்கொல்லி நோயால் திரிந்த' தமிழ்நாட்டில், ‘கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நேர/ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க, 'நான் அனுமதித்துள்ள மனிதர்களைத் தவிர, என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ எவரும் பேச முடியாது. ஈமெயில் மூலமாக மட்டுமே எவரும் தொடர்பு கொள்ள முடியும்' என்ற வரையறையானது, இயற்கையோடும், சாமான்யரின் சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும் வாய்ப்பினை, எனது போக்கின் இயற்கை மூலமாகவழங்கியுள்ளது.
(‘வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்’; 

இயற்கையோடு இணைந்த திணையியல்' வாழ்வு முறையுடன் தமது வேரை அடையாளம் கண்டு, ஒட்டி பயணிக்கும் போது தான், நமக்கு நாமே எஜமானனாகி, வாழ்க்கையைக் காதலித்து வாழ முடியும்; என்பதும் எனது அனுபவமாகும். ‘"வாழக்கையை நாம் காதலித்தால், வாழ்க்கை நம்மை காதலிக்கும்."- American classical pianist, Arthur  Rubinstein (‘6 Ways to Love Your Life More’; https://www.huffpost.com/entry/6-ways-to-love-your-life-more_b_8295318 ) வாழ்க்கை நம்மை காதலிப்பதை எவ்வாறு நாம் உணர முடியும்?’ என்பது பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்

வாழ்க்கையைக் காதலிக்க தெரிந்த புத்திசாலித் தமிழர்கள் பின்பற்ற வேண்டியது:

சீரின மதித்துச் சிற்றின மொரீஇப்
பேரினத் தவரொடு பெருங்கிளை பிரியாத்
தலைக்கோன் மகளிர்
பெருங்கதை 5. நரவாண காண்டம் 131 – 134

வாழ்க்கையைக் காதலிக்கத் தெரியாமல், 'சுயநலபுத்திசாலி(?) முட்டாளாக வாழும்  தமிழர்களின் 'ஒரீஇ' சமுக செயல்நுட்பமானது, பின் வரும் முறையில் செயல்படும்.

சிற்றின மதித்து சீரின மொரீஇப்
தீயினத் தவரொடு பெருங்கிளை பிரியாக்
கீழறி வினத்தோர்' - 'புதிய பெருங்கதைபாடல்

'அந்த' கீழறிவினத்தோர் தமிழ்நாட்டில் வளர்ந்த சமூக செயல்நுட்பமும் ஆய்விற்குரியதாகும். தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களில், தமது அறிவுக்கு தெரிந்த நோய்களை குணமாக்குவதற்கு பதிலாக, அந்த ஆணிவேர்களையே 'நஞ்சாக' கருதிய .வெ.ராவின் அணுகுமுறையானது, 'பெரியார்' மூலம் சிற்றினம் மேற்குறிப்பிட்ட 'கிண்டல்'கள் திறமைகளை வளர்த்து, தீ இனமாகஊழல் வழிகளில் ஆதிக்கம் பெற்று, 'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்றவற்றை சிதைத்து, 'தமிழ்வேரற்ற' தமிங்கிலீசர்கள் தமிழ்நாட்டில் வளர காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், தலித், பொதுவுடமை, மனித உரிமை, பெண்ணுரிமை' உள்ளிட்டு இன்னும் பலமுகமூடிகளுடன் வாழும் பொதுவாழ்வு வியாபாரிகள் எவரும், மது சமூக வட்டத்தில் நுழைய முடியாத (ஒரீஇ) வடிப்பான்களுடன் வாழ்பவர்கள் எல்லாம், 'பேரினமாக' ஒன்று சேரும்ஒரீஇசமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் உள்மறையாக (Latent) வளர்ந்து வருகிறது.

பேரினத்தவரொடு பெருங்கிளை பிரியாதவர்கள் எல்லாம், தீயினத்தவரொடு பெருங்கிளை பிரியாதவர்களிடமிருந்து விலகும்ஒரீஇசமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதானது, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல அறிகுறியாகும். அதன் வெளிப்பாடாக‌, ஆதாயத்திற்காக தம்மை புகழ்வது தெரிந்தும், அதில் கள்ளுண்ட வண்டு போல மயங்கி வாழும் தலைவர்கள் எல்லாம், சாமான்யர்களின் உரையாடல்களில் கோமாளிகளாக வலம் வருகிறார்கள். நேர்மையுடன் வாழ்பவர்களை மட்டுமே, தமிழ்நாட்டில் வியந்து மதிக்கும் படலம் தொடங்கி விட்டது
(https://tamilsdirection.blogspot.com/2019/07/2.html )

(வளரும்)

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/dp/B07T8QV6RT/ref=sr_1_1?keywords=DECODING+ANCIENT+TAMIL+TEXTS+%E2%80%93+THE+PITFALLS+IN+THE+STUDY+%26+TRANSLATION&qid=1561275540&s=digital-text&sr=1-1

No comments:

Post a Comment