Wednesday, July 1, 2020


உண்மையான‌ தமிழ்ப்புலமையாளர்கள் இனியும் இருளில் நீடிக்கலாமா?


   'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை?




திராவிடக்கட்சிகளால் போற்றப்படும் கால்ட்வெல் கி.பி 1856இல் தமிழ் தொடர்பாக கீழ்வரும் ஆய்வு முடிவினை வெளியிட்டார்.

'மிகவும் தொன்மையான, திராவிட மரபுச்சொற்களுடன் , ஐயத்திற்கு இடமின்றி மிக அதிக வளமான தொன்மை வடிவங்களுடன் உள்ள மொழி தமிழாகும்.' (The [Tamil] language being probably the earliest cultivated on the Dravidian idioms, the most copious and that which contains the largest portion and the richest variety of indubitably ancient forms…)

மேற்குறிப்பிட்டது உள்ளிட்ட கால்ட்வெல்லின் தமிழ் ஆய்வுகளை எல்லாம் சமஸ்கிருத எதிர்ப்பு நோக்கில், திராவிடர், திராவிட, தமிழ் தொடர்பான கட்சிகளில் உள்ள தமிழ்ப்புலமையாளர்கள் பாராட்டி வருகின்றனர். (குறிப்பு 2. கீழே)

அதே நேரத்தில், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கீழ்வரும் கருத்தினை இருட்டில் தள்ளிய 'தமிழ்ப்புலமை நோஞ்சான்களாகவும்' அவர்கள் பயணித்தார்களா? என்ற கேள்வியை கீழ்வரும் தொடர்பில் உள்ள பதிவு எழுப்பியுள்ளது.

'தமிழில் இலக்கியங்கள் என்பவை 10 ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததில்லை. ஆனாலும் தமிழ் எழுத்துக்கள் கிறித்துவ ஆண்டு தொடக்கத்திலேயே இருந்திருக்கின்றன.' என்ற ஆய்வு முடிவினையும் கால்ட்வெல் தமது நூலின் (A Comparative Grammar of Dravidian or South-Indian family of Languages) முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

He (Caldwell’s book) further traces the beginnings of Tamil literature to not earlier than the 10th Century CE. Now, this posed an enormous problem for the Dravidian champions of those days because among other factors, this ideology chiefly rests on the antiquity of the Tamil language. 

மேற்குறிப்பிட்ட கால்ட்வெல்லின் கருத்து எவ்வாறு தவறானது? என்பதை உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுக்கும் புலமையில்லாத நோஞ்சான்கள் தான், அதனை இருட்டில் தள்ளுவார்கள்.

மேற்குறிப்பிட்ட கருத்தினைத் தாங்கிய முன்னுரையானது எவ்வாறு இருட்டடிப்புக்கு உள்ளானது? என்பது தொடர்பான சான்றுகளை, சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகவும் பின்னர் முதல்வராகவும் பணியாற்றிய (கர்நாடக மாநில கன்னடர்)  Dr. B G L. சுவாமி எவ்வாறு கண்டுபிடித்தார்? என்பதை கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது.

‘How the Dravidianists Ravaged the Tamil Heritage and Gifted Tamil Nadu to the Global Church’; 

இந்தியாவில் உள்ள இந்துத்வா எதிர்ப்பாளர்களாலும் போற்றப்படும், உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள செல்டன் பொல்லோக் என்ற அறிஞர்,

உலக அளவில் புகழ் பெற்று இன்று வலம் வந்து கொண்டிருக்கிற தமது நூலில்,

'தமிழில் இலக்கியங்கள் என்பவை மணிப்பிரவாள காலத்திற்குப்பின், சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் உருவாகி வெளிவந்தன' என்ற வகையில் வெளியிட்டுள்ளார். அதற்கான சான்றுகளில் மேற்குறிப்பிட்ட  Dr. B G L. சுவாமியின் ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன(குறிப்பு 1)

அது மட்டுமல்ல, 'தமிழ்ப்புலமையாளர்கள் முன்வைத்த சான்றுகள் எல்லாம் அறிவுபூர்வமற்ற மிகைப்படுத்தப்பட்ட சான்றுகளே.' என்ற கருத்தையும் செல்டன் பொல்லோக் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

' ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India’ by Sheldoon Pollock (permanent black - Delhi 2007)' என்ற புத்தகத்தில் ஆய்வுகள்' என்ற பெயரில், தமிழைப் பற்றி இழிவுபடுத்தும் முடிவுகளை எல்லாம் இதுவரை தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அறிஞர் எவரும் மறுத்ததாகத் தெரியவில்லை.

அது உண்மையானால், செல்டன் பொல்லோக் குறிப்பிட்டுள்ளது போலவே, தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம் அறிவுபூர்வ வாதங்களை முன்வைக்க இயலாத 'நோஞ்சான் புலமையாளர்கள்' என்பது உண்மையாகாதா?

செல்வாக்குள்ள வெளிநாட்டு தமிழ் அறிஞர்களில் எவராவது செல்டன் பொல்லோக்கின் தமிழ் தொடர்பான ஆய்வு முடிவுகளை மறுத்திருக்கிறார்களா? என்ற எனது தேடலில் இஸ்ரேலில் வாழும் டேவிட் டீன் சுல்மன் (David Dean Shulman : https://en.wikipedia.org/wiki/David_Dean_Shulman) என்பவரின் கீழ்வரும், செல்டன் பொல்லோக்கின் நூல் தொடர்பான திறனாய்வுக் கட்டுரை கிடைத்தது.


தமிழ் தொடர்பாக செல்டன் பொல்லோக் முன்வைத்த தவறான கருத்துக்கள் எதனையும் மறுக்காமல், மேற்குறிப்பிட்ட கட்டுரை வெளிவந்துள்ளது.

செல்டன் பொல்லோக்கின் நூலில் தமிழ் தொடர்பாக இருந்த தவறான முடிவுகளைச் சுட்டிக்காட்டிய‌, தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் உள்ள சிக்கல்கள் பற்றிய எனது கட்டுரையினை டேவிட் டீன் சுல்மனுக்கு (4 டிசம்பர் 2016) அனுப்பினேன்

ஜார்ஜ் ஹார்ட்(George Hart) , டேவிட் பக்(David Buck), தாமஸ் லெமன் (Thomas Lehmann) உள்ளிட்ட வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் தமிழ் தொடர்பான எனது ஆய்வுகளைப் பாராட்டி எழுதிய மடல்களையும் தொகுத்து அனுப்பியிருந்தேன்.

From: veera pandian <pannpandi@yahoo.co.in>
To: "shulman@prism.as.huji.ac.il" <shulman@prism.as.huji.ac.il>
Sent: Sunday, 4 December, 2016, 8:14:46 pm GMT+8
Subject: article on problems in the study of the ancient Tamil texts

Dr.S.A.Veerapandian wrote:
Dear Prof.David Shulman,
I was introduced to your book ' Tamil - A Biography' in Yahoo groups. I plan to buy to read the book.
Meanwhile have attached my article on the problems in the study of the ancient Tamil texts, and the comments by some foreign experts for your kind attention.
 with regards,
veerapandian

நோவாம் சோம்ஸ்கி (அமெரிக்கா), ரிச்சர்ட் வெட்டஸ் (லண்டன்), ஸ்டீவன் பிரவுன் (கனடா), கர்டிஸ் ரோட் (அமெரிக்கா) உள்ளிட்ட இன்னும் பல உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர்கள் எல்லாம் எனது ஆய்வுகளைப் பாராட்டில் பதில் அனுப்பியதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

இன்று வரை டேவிட் டீன் சுல்மனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

Tamil: a Biography. Harvard University Pressஉள்ளிட்ட தமிழ் மற்றும் தமிழ்நாடு தொடர்பான பல நூல்களை வெளியிட்டு, உலக அளவில் செல்வாக்குடன் வரும் தமிழ் அறிஞரான டேவிட் டீன் சுல்மன்அந்நூல் தொடர்பாக தாம் எழுதிய மேற்குறிப்பிட்ட திறனாய்வில்ஏன் தமிழ் தொடர்பான செல்டன் பொல்லோக்கின் தவறான கருத்துக்களை மறுக்கவில்லை? அவர் மறுத்திருந்தால் உலகின் கவனத்தினை ஈர்த்திருக்கும். மறுக்கும் அளவுக்கு அவருக்கு தமிழ் தொடர்பான புலமை இல்லை என்றால், தமிழ் தொடர்பான 'நோஞ்சான் புலமையாளர்கள்' பட்டியலில் அவர் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி, பிறரின் ஆய்வுகளை விமர்சிப்பதும், தமது ஆய்வுகளையும் அவ்வாறு விமர்சிக்க ஊக்குவிப்பதுமே, புலமையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தமது ஆய்வுகளை அவ்வாறு விமர்சிப்பதை வெறுப்பவர்கள் எல்லாம் நோஞ்சான் புலமையாளர்கள் ஆவார்கள்.

நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் எல்லாம், ஊடக பலத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், எந்த நேரத்திலும் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற காத்திருக்கும் பிம்ப பலூன்களே ஆகும்.

.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகள் எல்லாம் தவறானவையே என்று நான் பதிவு செய்துள்ளேன்

ஆனால் தனிப்பட்ட முறையில் பெரியார் என்ற பிம்பத்தை விடுத்து, .வெ.ராவை எடை போட்டால், பிரமிக்க வைக்கும் அளவுக்கு தனி மனித நேர்மையில் சிறந்த முன்னுதாரணமாக வெளிப்படுவார். எனவே ஒருவரின் ஆய்வுமுடிவுகளை விமர்சிப்பதற்கும், அவரையே தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதற்கும் வேறுபாடு உண்டு

எனது ஆய்வுகளில் உள்ள குறைகளை எனது மாணவர்கள் உள்ளிட்டு எவரும் சுட்டிக்காட்டுவதை வரவேற்று நான் பயணித்து வருகிறேன். அது போலவே, என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், அவர்களிடம் (இளையராஜா, மம்மது உள்ளிட்டு) வெளிப்படும் குறைகளையும் நான் சுட்டிக்காட்ட தயங்கியதில்லை;

என்பதை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்கள் அறிவார்கள். அந்த வரிசையில் ஜார்ஜ் ஹார்ட் தொடர்பாகவும், கீழ்வரும் கருத்தினையும் பதிவு செய்துள்ளேன்.

அமெரிக்காவில் ஏற்கனவே பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைகழகங்களில் உள்ள தமிழ் இருக்கைகளின் பொறுப்பாளர்களில் எவராவது, தமிழைப் பற்றிய செல்டன் பொல்லாக்கின் தவறான கருத்துக்களை எல்லாம், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் மறுத்துள்ளார்களா? இல்லையென்றால், அதே வழியில் தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கையும் பயணிக்குமா

பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் , தமது ஆய்வின்(?) மூலமாக, "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்." என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அந்த‌ முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்று 'புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1]' என்ற தலைப்பில், எழுத்தாளர் மருதமுத்து மறுத்துள்ளார்

புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்’ - இலக்குவனார் திருவள்ளுவன்  



ஜார்ஜ் ஹார்ட்டின் மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் தவறானவை என்பதை வெளிப்படுத்திய எனது பதிவுகள்:

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ;

இசையில் தீண்டாமை' காலனியத்தின் நன்கொடையா’?;

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளை மறுத்து வந்துள்ள சான்றுகளின் அடிப்படையில் ஜார்ஜ் ஹார்ட் தமது தவறா நிலைப்பாட்டினை திருத்திக்கொண்டதாக தெரியவில்லை.

செல்டன் பொல்லோக்காக இருந்தாலும், ஜார்ஜ் ஹார்ட்டாக இருந்தாலும், டேவிட் டீன் சுல்மனாக இருந்தாலும், வேறு உலக அளவில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தாலும், தமிழ் தொடர்பான அவர்களின் தவறான ஆய்வு முடிவுகளுக்கு எதிரான சான்றுகள்,

அவ்வை நடராஜன், வைரமுத்து போன்ற கருணாநிதிக்கு நெருக்கமாகி ஊடகத்தில் செல்வாக்கு பெற்ற அறிஞர்களிடமிருந்து வெளிப்பட்டால் தான், அந்த தவறான ஆய்வு முடிவுகளால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும். அந்த சமூகப் பொறுப்பினை அவர்கள் தட்டிக்கழித்தால், 

அவர்களும் 'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமையாளர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் போன்றவற்றில் ஜார்ஜ் ஹார்ட்டின் மேற்குறிப்பிட்ட தவறான முடிவு குறித்து முறையான மறுப்புகள் வெளிவந்துள்ளனவா? அவ்வாறு வெளிவந்திருந்தால், அது தெரியாமலேயே அன்றைய முதல்வர் கருணாநிதி கோவை செம்மொழி மாநாட்டில் ஜார்ஜ் ஹார்ட்டைப் பாராட்டினாரா? என்பதை எவராவது தெளிவுபடுத்தினால், அதற்கு நன்றி தெரிவித்து, அதனையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

மேற்குறிப்பிட்ட தவறான ஆய்வு முடிவுகளால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்க, 'தின‌மணி' மற்றும் 'தமிழ் இந்து' போன்ற நாளிதழ்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் அறியேன். அறிந்தவர்கள் தெரிவித்தால் நன்றி. இல்லையென்றால், தமிழின் வளர்ச்சிக்கான 'சுற்றுச்சூழல் அமைப்பு' (ecosystem) என்பதில், தமிழ் ஊடகங்களின் முக்கிய பங்கு பற்றிய விவாதத்தில் அதுவும் இடம் பெற வேண்டும்
(தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட தமிழ் இதழ்களின் பங்களிப்பால் தமிழிசை கேலிப்பொருளாகும் அபாயம்?’; 

உலக அளவில் தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகி வரும் அபாயம் பற்றி ஏற்கனவே எச்சரித்துள்ளேன். 

ஒரு சமூகத்தில் உள்ள புலமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், அச்சமூகத்தில் உள்ள கல்விச் சூழலைப் பொறுத்ததாகும். ஆரம்பப்பள்ளி முதல், கல்லூரி -  பல்கலைக் கழகங்கள் வரை கல்வி கற்பிப்பவர்களின் பணி நியமனங்களில், 'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால், புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?

அத்தகைய புலமை வீழ்ச்சி சூழலில், தமிழ்நாட்டில் முனைவர் பட்ட ஆய்வறிக்கைகள் விலைக்கு வாங்கப்பட்டு, லஞ்சம்/பாலியல் சேவை மூலமாக முனைவர் பட்டங்கள் 'வாங்கப்படும்' தகவல்கள் எல்லாம் ஊடகங்களில் வெளிவருவது உண்மையானால், அவ்வழிகளில் 'நோஞ்சான் தமிழ்ப்புலமையாளர்கள்' உற்பத்தியானது வளர்ந்து வருகிறதா
(https://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

அந்த போக்கில், பல்கலைக்கழகத்தில் 'உயர்ந்த' பதவிகளில் இருந்தவர்களில் யார்? யார்? (பணி ஒய்வு பெற்ற புலமையாளர்களுக்கு 'வாலாட்டி' ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வாங்கி) சர்வதேச ஆய்வரங்களில் பங்கேற்று 'புலமை வெளிச்சம்' போட்டு வருகிறார்கள்? ஏற்கனவே ஆண்ட முதல்வர்களின் காலில் விழுந்த, 'செல்வாக்கு சமூக செயல்நுட்ப விற்பன்னர்களாக' இருக்கும் அத்தகையோர் உலக பல்கலைக்கழகங்களில் உருவாகியுள்ள/உருவாகவுள்ள தமிழ் இருக்கைகளுக்கு பொறுப்பேற்றால் என்ன ஆகும்? அத்தகையோரின் செல்வாக்கில் நடக்கும் தமிழ் மாநாடுகளிலும், கருத்தரங்கங்களிலும், தன்மானமுள்ள புலமையாளர்கள் எவரும் கலந்து கொள்வார்களா? உலக அளவில் தமிழ் கேலிக்குள்ளாகாதா? ஏற்கனவே உலக அளவில், தமிழ்ப்புலமையானது, கேலிக்குள்ளாகி விட்டதா?  (‘உலகப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்: சட்டிகளை - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள்-  காப்பாற்றாமல், அகப்பையில் என்ன வரும்?’ ; 

தமிழ்நாட்டில் புலமையாளர்களாக இருப்பவர்கள் கூட, விமர்சனங்களை வரவேற்று, தமது படைப்புகளில் உள்ள குறைகளைத் திருத்தி, தமது புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக பெரும்பாலோர், தமது ஆற்றலையும் நேரத்தையும் தமது 'வளர்ச்சிக்கான சமூக வலைபின்னலை (social network)  உருவாக்கி, தமது படைப்புகளுக்கானப் பாராட்டுகளைப் பெற்று வலுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளார்கள். 

நிதி நெருக்கடியிலும், ஏலத்தில் துணைவேந்தர் பதவிகள் வாங்கப்பட்ட நிலையிலும் இருந்த தமிழ்நாட்டில், இன்று 'செல்வாக்குடன்'(?) வலம் வரும் தமிழ்ப்புலமையாளர்களில் இருந்து, உண்மையிலேயே ஆழ்ந்த தமிழ்ப்புலமையாளர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்? செல்வாக்கு வளையத்திற்கு அப்பால், உணமையில் புலமையுள்ளவர்கள் இருந்தால், அவர்களை எல்லாம் எவ்வாறு அடையாளம் காண்பது? எனவே ஊடக வெளிச்சத்துடன் செல்வாக்காக வலம் வரும் தமிழ்ப்புலமையாளர்களில் நோஞ்சான்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.

தமது அறிவையும் ஆற்றலையும் செல்வாக்கான வலைப்பின்னலில் இடம் பெற செலவழித்து, தமது தகுதிக்கும் மீறிய உயர்பதவிகளில் அமர்ந்த நோஞ்சான்களை அடையாளம் காண்பதும் சிரமமல்ல.

மேற்குறிப்பிட்டவாறு தமது அறிவையும் ஆற்றலையும், தமது 'வளர்ச்சிக்கான சமூக வலைபின்னலை (social network)  உருவாக்குவதில் விரயமாக்காமல், உண்மையிலேயே ஆழ்ந்த தமிழ்ப்புலமையாளர்களாக வளர்ந்து வருபவர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தமிழ் தொடர்பான உயர் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும்.

ஊடக பலத்தில் உயரப் பறக்கும் நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் என்ற பிம்ப பலூன்களை எல்லாம், இளம் ஆய்வாளர்கள் துணிச்சலுடன் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற வைக்கும் போக்கையும் ஊக்குவிக்க வேண்டும். 

அப்போது தான், 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' சிக்கியுள்ள‌ தமிழ்ப்புலமைக்கு விடுதலை கிடைக்கும்.

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி,

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத ஏமாளித்தனமான தாராளம் அடிப்படையில், தமிழ் இருக்கைகள் தொடங்கப்படும் ஏமாளியாக,

தமிழ்நாடு இருப்பதும் முடிவுக்கு வரும். உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு வழி பிறக்கும்.

தமிழ்நாட்டில் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்?  (Why hide deficiencies instead of overcoming them?)”;

என்ற திசையில் பயணிப்பவர்களின் கூட்டு முயற்சியில், அது நிச்சயமாக சாத்தியமாகும். (‘தமிழ், தமிழ் இசை ஆய்வுகளின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது?’; 
https://tamilsdirection.blogspot.com/2020/04/growth-mindset.html)


குறிப்பு:

1. Refuting Sheldon Pollock’s wrong observations on Tamil; Chapter 7, ‘Decoding Ancient Tamil Texts – The Pitfalls in the Study & Translation’ – Dr.Vee ; 
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

2. மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் தொடர்பான கருத்துக்கள் காலனி ஆட்சியில் வெளிப்பட்டவையா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில், 'சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது' என்பது போன்ற கருத்துக்களும், 'சமஸ்கிருத ஆதிக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற கருத்துக்களும் எனது ஆய்வில் வெளிப்படவில்லை.

'சாதி, இனம்' போன்ற தமிழ்ச்சொற்களை எல்லாம் காலனிய ஆட்சியில் 'பொருள் திரிபுக்கு' (Semantic distortion) உட்படுத்தி, இன்றுள்ள சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை ஆகிய சமூக நோய்கள் வெளிப்பட்ட பாணியில் 

'சமஸ்கிருத ஆதிக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற கருத்துக்களும் வெளிப்பட்டனவா? என்று விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது.


3. ‘தமிழ்ப் பகைவர்கள் யார்?’; 
https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_4.html


4. ‘எனது கண்டுபிடிப்புகளின் புகழ் தமிழுக்குக் கிட்டாமல், ‘முழுப்புகழும்' எனக்கே சேர்வதா?’; 

No comments:

Post a Comment