Sunday, July 19, 2020


கந்த சஷ்டி கவசம்’ - நேர்மறை சிந்தனைகளும், எதிர்மறை சிந்தனைகளும் (2)


கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு 'சமூகத் தளவிளைவுநெருக்கடி?



மனசாட்சியுடனும் தன்மானத்துடனும் 'பெரியார்' ஆதரவாளர்களாக‌ வாழ்பவர்களும், 'பெரியார்' தோளில் 'நோஞ்சான்களாக' வாழ்பவர்களும் கலந்து குழம்பிப் பயணித்த 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம், 'சமூகத் தளவிளைவு' (Social Polarization) மூலமாக தனித்தனியாக பிரிந்து பயணிக்க வேண்டிய நெருக்கடியை கந்த சஷ்டி கவசம்உண்டாக்கியுள்ளது. 
(‘‘கந்த சஷ்டி கவசம்’ - நேர்மறை சிந்தனைகளும், எதிர்மறை சிந்தனைகளும்’(1); 

முருகரை பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்பது, தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு. இவற்றை ஸ்டாலினும் கண்டித்துள்ளார்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கூறினார். 

முருகரை பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்பதானது தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்று அறிவித்துள்ளார்கள். இனி 'பெரியார்' கட்சிகளின் பாடு திண்டாட்டம் தான். ஏனெனில் இந்து மதக்கடவுள்களை எல்லாம் ஈ.வெ.ரா அவர்கள் பழித்து பேசிய புத்தகங்களையும், ஒலிப்பதிவுகளையும், 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினால்,  தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி விட்டார்கள்.

கருப்பர் கூட்டம் சேனலில், ஹிந்து மத கடவுள்களை விமர்சித்து, 20க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தொடர்பாக, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தனித்தனி புகார் அளித்துள்ளார். 

'கருப்பர் கூட்டம்' வெளியிட்ட வீடியோக்களின் உள்ளடக்கம் சட்டப்படி தண்டிக்கத் தக்கதானால், இந்து மதக்கடவுள்களை எல்லாம் ஈ.வெ.ரா அவர்கள் பழித்து பேசிய புத்தகங்களையும், ஒலிப்பதிவுகளையும், 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருவதும் தண்டிக்கத்தக்கதாகி விடும்; தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு.

'அறிவியல் ஊழல்' ஆட்சியில் மக்கள் பட்ட அவதிகளைக் கணக்கில் கொள்ளாமல்,

'எதுக்கு நாம் த‌னித்தமிழ்நாடு கேட்டோம்?' என்ற கேள்வியானது, 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், பயணித்தால் என்ன ஆகும்?’ 
(‘'முள்ளும் மலரும்' ரஜினியிடம் கேட்ட கேள்வி; அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், இன்றும் தமிழ்நாடு நீடிக்கிறதா?’; 

தமிழ்நாட்டின் ஆட்சியானது தி.மு.கவிடம் சிக்கி விட்டால் என்ன ஆகும்? என்பதை ஈ.வெ.ரா அவர்கள், தி.மு.கவினரிடம் தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படைகளில் தீர்க்கதரிசி போல, 1949 முதல் 1967 வரை தமது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் எச்சரித்தார். அதற்கு செவி மடுக்காமல், 1967இல் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு மக்கள் அதற்கான தண்டனைகளை இன்று சாத்தான்குளம் வரை அனுபவித்து வந்துள்ளனர்.

1967இல் ஊழல் முளை விட்டு அண்ணா மனம் நொந்து விரைவில் மரணமடைய விரும்பியதையும், ஈ.வெ.ரா  மனம் வெறுத்து முனிவராக விரும்பியதையும் 'இருட்டில்' தள்ளி பயணித்த 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு கந்த சஷ்டி கவசம்மூலமாக அதிர்ச்சி வைத்தியம் தொடங்கி விட்டது.

1969 முதல் வீரியம் பெற்ற கருணாநிதியின் அறிவியல் ஊழலையும், அண்ணாமலைப்பல்கழகத்தில் அநியாயமாக மாணவர் உதயகுமார் உயிரிழந்ததையும், திருச்சி கிளைவ் மாணவர் விடுதியில் காவல் துறையின் காட்டுமிராண்டி தாக்குதலில் எண்ணற்ற மாண‌வர்களின் கை கால்கள் முறிந்ததையும் கண்டு கொள்ளாத,

பாளையங்கோட்டையில் பேராசிரியரை தாக்கியதையும், அதற்கு நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது காவல் துறை காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தி பல மாணவர்களின் கை கால்கள் முறிய ஒரு மாணவர் உயிரிழந்ததையும், அது போல சாத்தான் குளம் காவலர்கள் பாணி அராஜகங்கள் தமிழ்நாடு முழுவதும் அரங்கேறியதையும் கண்டு கொள்ளாத,

 1991 முதல் கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த ஏரிகள், ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட கனி வளங்கள் எல்லாம் திராவிட‌ அரசியல் கொள்ளையர்களின் ஊழல் பேராசைக்கு இரையாகத் தொடங்கியதையும் கண்டு கொள்ளாத,

சட்டத்தின் மீது பயமின்றி, கங்கை அம‌ரன் தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ் வரை தனியார் சொத்து அபகரிப்பு, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்ததையும் கண்டு கொள்ளாத,

'கருப்பர் கூட்டமும்' அவர்களின் ஆதரவாளர்களும், இந்து கடவுள்களை இழிவு செய்து வந்துள்ளது எந்த அளவுக்கு கண்டிக்கத்தக்கது?

என்பதை மனசாட்சியுடனும் தன்மானத்துடனும் 'பெரியார்' ஆதரவாளர்களாக‌ வாழ்பவர்கள் எல்லாம் விடைகள் கண்டு திருந்த வேண்டும்.

ஊழல் ஆட்சிகளில் மக்கள் படும் அவதிகளை கண்டுகொள்ளாமலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 'நமது குடும்பம் இல்லை' என்ற துணிச்சலிலும், மனசாட்சியை அடகு வைத்து, 'தனித்தமிழ்நாடு' போதையில் பயணித்ததும், 'இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து மகிழ்ந்ததும் தவறு என்பதை இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும்

ஈ.வெ.ரா அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் 60 வயதைத்தாண்டியவர்களே ஆவார்கள். 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா? என்பதையும் நான் ஏற்கனவே எச்சரித்துள்ளேன்.
( https://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post_29.html)


தமிழ்நாட்டில் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கட்சியின் தலைமையை விமர்சிப்பது துரோகமாக மாறியது. அவ்வாறு விமர்சனத்திற்கும் துரோகத்திற்கும் வேறுபாடின்றி திராவிடக் கட்சிகள் பயணித்தன.

தமிழ் இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக ஈ.வெ.ரா அவர்கள் எந்த காலக்கட்டத்தில்  விமர்சிக்கத் தொடங்கினார்? அது விமர்சனம் என்ற நிலையில் இருந்து  உணர்ச்சிபூர்வமாகக் கண்டிக்கும் போக்கில் எந்த காலக்கட்டத்தில் தடம் புரண்டது? அதனை ஆத்தீகத் தமிழர்கள் எந்த காரணங்களால் சகித்துக் கொண்டார்கள்? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது.

கிறித்துவாராகப் பிறந்து நாத்தீகரான இங்கர்சால் கிறித்துவ மத நூலான பைபிளை விமர்சிக்கும் போது, எந்த அணுகுமுறையை மேற்கொண்டார்? என்பதற்கான சான்று வருமாறு:

we must remember that the Bible is a collection of many books written centuries apart, and that it in part represents the growth and tells in part the history of a people./ we must remember that the Old Testament is a natural production, that it was written by savages who were slowly crawling toward the light. We must give them credit for the noble things they said, and we must be charitable enough to excuse their faults and even their crimes.
-Robert G. Ingersoll 
http://en.wikiquote.org/wiki/Robert_G._Ingersoll#What_Would_You_Substitute_for_the_Bible_as_a_Moral_Guide.3F_.281900.29

விமர்சனம் என்பதானது, எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களில் திறந்த மனதுள்ளவர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு, நாகரீகமாகவும், அறிவுபூர்வமாகவும் இருக்க வேண்டும். விமர்சனம் என்ற பெயரில், வெறுப்பு அரசியலில் கேலி கிண்டல் செய்து விட்டு, அதனை விமர்சனம் என்று வாதிடுவதானது சமூக நேர்மையாகுமா?

சம‌ஸ்கிருதத்தில் இருந்த 'நாத்திகம்' (नास्तिक) என்ற சொல்லானது, எவ்வாறு பொருள் திரிபுக்கு (Semantic distortion) உள்ளாகி, ஈ.வெ.ரா அவர்களின் நாத்திகப் பிரச்சாரத்தில் இடம் பெற்றது? தமது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா மேற்கொண்ட அந்தப் பிரச்சாரமானது, எவ்வாறு 'சமூக நேர்மை வழிகாட்டியைச்' சிதைத்து தமிழ்நாட்டின் சீர்குலைவுக்குக் காரணமானது? என்பதை எல்லாம், 2014இல் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

‘The Dravidian Movement & Rescuing Tamilnadu’


இன்று வரை 'பெரியார்' ஆதரவாளர்களிடம் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்.

இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள் எல்லாம் வயதானவர்கள் ஆவார்கள். இன்று பக்தர்களாகப் பயணிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் அவ்வாறு சகித்துக் கொள்வார்களா?

'பெரியார்' தோளில் 'நோஞ்சான்களாக' வாழ்ந்து வருபவர்களுக்கு எல்லாம், தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு சிக்கலாகி விட்டது.

'தம்மிடம் ஏமாந்த அமைப்பில் இருந்து ஆற்றலை உறிஞ்சி அச்சுறுத்தும் அளவுக்கு பூதாகாரமாகக் காட்சி தரும் நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அந்த ஆற்றல் உறிஞ்சும் தொடர்பைத் துண்டித்தவுடனேயே, காற்று போன பலூன் போல, தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கி விடுவார்கள்.

முருகரை பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என்பதானது தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்று அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு 'பெரியார்' தோளில் பயணித்தவர்கள் எல்லாம் தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கும் படலமும் 'கந்த சஷ்டி கவசம்' மூலமாக தொடங்கி விட்டது.

மத நூல்களை எல்லாம், விமர்சனம் செய்வதற்கும், இழிவு செய்வதற்கும் வேறுபாடு தெரியாமல் பயணித்த போக்கும், இனி முடிவுக்கு வரும். 'சாதி', 'இனம்' மற்றும்  'ஆரியர், திராவிடர்தொடர்பான காலனிய சூழ்ச்சிகளில் சிக்கி முன் வைத்த விவாதப்போக்குகளும் இனி முடிவுக்கு வரும். 



குறிப்பு:

படிக்கவும் 

'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே,

ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே;


ஈ.வெ.ரா என்ற மதிக்கத்தக்க சமூக கணினியின் செயலாற்றி ' (processor)

'சமூக அருங்காட்சியகத்திற்கு' போவதைத் தடுக்க முடியுமா
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html

எனது ஆய்வு முடிவுகள் எவ்வாறு தவறானவை? என்று நிரூபிப்பதை நான் வரவேற்பேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் செய்தால் மகிழ்வேன். புலமையின் வளர்ச்சியை வரவேற்க வேண்டும்.

இல்லையென்றால், தமிழ்நாடானது 'நோஞ்சான் புலமை' நாடாகி விடும்.

No comments:

Post a Comment