Wednesday, July 22, 2020


‘‌கந்த சஷ்டி கவசம்சர்ச்சையில் கைதான‌ 'கருப்பர் கூட்டம்' நாத்திகன் பேட்டி எழுப்பும் கேள்வி;


அறிவு வலிமையற்ற நோஞ்சான்களா 'பெரியார்' கொள்கையாளர்கள்?



‘‌கந்த சஷ்டி கவசம்சர்ச்சையில்  'கருப்பர் கூட்டம்' சார்பாக‌ கைதானவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர். 

அவர் கைதாகும் முன் வெளிவந்த கீழ்வரும் அவரின் பேட்டியானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

ஒரு RSSகாரனின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆபாசப்புராணம் – நாத்திகன்’; 


கடந்த சுமார் 15 வருடங்களாக, ஈவெ.ரா அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக, நான் முன்வைத்த விமர்சனங்களை அறியாமல், மேற்குறிப்பிட்ட காணொளியில் கேள்வி கேட்டவரும் பதில் சொன்ன 'கருப்பர் கூட்டம்' நாத்திகனும்,  அந்த நிழச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

எனது விமர்சனங்களை எல்லாம் தொகுத்து கீழ்வரும் பதிவும் வெளியிட்டுள்ளேன்.

'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே, ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே;

ஈ.வெ.ரா என்ற மதிக்கத்தக்க சமூக கணினியின் செயலாற்றி ' (processor) 'சமூக அருங்காட்சியகத்திற்கு' போவதைத் தடுக்க முடியுமா?

பக்தி தொடர்பான புராணங்களும்,இலக்கியங்களும் அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் புதையல்கள். ('The Religious Literature of India is too vast. It includes the Vedas, the Upanishads, the great epics like the Ramayana and Mahabharata, and the Puranas of the Hindus. These are like mines of information about religious beliefs, social systems, people’s manners and customs, political institutions, and conditions of culture.';

அறிவுபூர்வமான சிக்னல்கள் தேடுபவர்களுக்கு சிக்னலும், 'இரைச்சல் மட்டுமே' தேடுபவர்களுக்கு இரைச்சலும் வழங்கும் அமுதசுரபியாக தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் இருக்கின்றன. 

முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்ற தொனியில்,'கருப்பர் கூட்டம்' நாத்திகன் வெளிப்படுத்திய தகவல்களும் சரியா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சியின் போது மட்டுமே சாதி வேறுபாடு கிடையாது என்றும், மற்றபடி சாதி உயர்வு தாழ்வினை கடைபிடித்த அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் என்று மேற்குறிப்பிட்ட பேட்டியில் 'கருப்பர் கூட்டம்' நாத்திகன் விளக்கியுள்ளார்.

அகில இந்திய அளவில் இந்துக்களிடையே அதிக கலப்புத்திருமணங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

‘Bhagwat also said if there is a census on inter-caste marriages, the maximum cases will be those from the Sangh’; 

ஒவ்வொரு கிராமத்திலும் 'ஒரே கிணறு, ஒரே கோவில், ஒரே சுடுகாடு' என்பது உள்ளிட்ட சாதி சமத்துவ நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்தி வருகிறது.

What is Rashtriya Swayamsevak Sangh's (RSS) take on casteism? How is RSS trying to root out the problem of casteism? ; 

கீழ்வரும் பதிவில், தாய்மொழி தமிழ்வழிக்கல்வியை மீட்க ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு உதவும்? என்பதை விளக்கியுள்ளேன்
.
Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?
Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’ ; 

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது, மேற்கத்திய வழிபாட்டுடன் பிணைந்த, ஆங்கிலவழிக்கல்வி ஆதிக்கத்திலிருந்து, இந்தியாவை மீட்க, 'தாய்மொழிவழிக்கல்வி', 'சாதி, மத அடிப்படைகளில் உள்ள பாரபட்சத்தை' அகற்றுதல்,  போன்றவை மூலம், ஆர்.எஸ்.எஸ் ஆனது, நவீன கால தேவைகளுக்கேற்ற மாற்றங்களுடன், வியக்கும் வகையில் பயணிக்கிறது. 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில், அம்பேத்காரைப் போல, ஈ.வெ.ரா அவர்களின் சமூக சமத்துவ இலக்கு நோக்கிய தொண்டுகளை அங்கீகரிக்கும் போக்கும் துவங்கியுள்ளது. 

அதை எதிர்த்து, இந்துத்வா ஆதரவாளர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைக்கு, ரவிகுமார் போன்றோரின் எழுத்துக்களே முக்கிய சான்றாக அமைந்துள்ளன‌. 

19-05-2018-இல் வெளிவந்த இக்கட்டுரையின் மூலமாகவே, ரவிகுமாரின் மேற்குறிப்பிட்ட கட்டுரையானது, எனது கவனத்தினை ஈர்த்தது. 
(‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; 

‘“ஈ.வெ.ரா அவர்கள் சாகும் வரை பொது சிவில் சட்ட கோரிக்கையை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார்.. அந்த 'பெரியார் தந்த புத்தியை' இழந்து, இன்று தி.க அதை எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது.

ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால்;

குன்றக்குடி அடிகளாரை பாராட்டியது போல, ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை (Bold mine)  பாராட்டி, வரவேற்று;

சமத்துவமின்மையையும் (inequality), பாரபட்சத்தையும் (discrimination), 'செயல்பூர்வமாக' எதிர்க்க, வாய்ப்புள்ளவற்றில், இன்றும்(present)  நாளையும்(future) ஆர்.எஸ்.எஸுடன்   கூட்டாக செயல்பட்டு, அக்கருத்து 'வெறும் பேச்சா? அல்லது செயல்பூர்வமா?' என்று சமூகவியல் சோதனை (sociological experiment)  மூலம் நிரூபிப்பார் என்பது என் கருத்தாகும்.

" Without mentioning the debate on intolerance,  Bhagwat emphasised that truth has no place for inequality and discrimination. “Accept all the diversities and look at others with affection in all circumstances. Consider others in your place. They all our ours. The society gets its power from the social unity. A person behaves when he realises that all are equal,” Bhagwat said.
He referred to Ambedkar to insist that political unity cannot be achieved sans economic and social unity. “The Constitution can’t protect us unless we stand united leaving aside social inequality. Equality will be established only when everyone resolves that he won’t exploit anyone,” Bhagwat said echoing Ambedkar’s opinion.": 

இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’; 

1990‍களில் இசை ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன், நான் 'மார்க்சிய வெனினிய பெரியாரியல்' புலமையாளனாகப் பயணித்தவன். 'விடுதலை', 'உண்மை,'The Modern Rationalist ' ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளவன். நான் எழுதிய கட்டுரைகளும் புத்தகங்களும் இன்றும் 'பெரியார்' கட்சிகளின் பிரச்சாரத்தில் இடம் பெற்றுள்ளன. இன்றும் 'மார்க்சிய லெனினிய' முகாம்களில் இருந்து ஈ.வெ.ரா மீது முன்வைக்கும் விமர்சனங்களை சந்திக்கும் புலமை வலிமை எனக்குள்ள அளவுக்கு வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால், அதை தெரியப்படுத்துபவர்களுக்கு நன்றி தெரிவிப்பேன்.

நானறிந்தது வரையில், தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட ஒரே தலைவர்  ஈ.வெ.ரா என்பதையும் பதிவு செய்துள்ளேன்.

'பெரியார்' ஈ.வெ.ரா வலியுறுத்திய 'பொதுத் தொண்டருக்கான இலக்கணப்படி வாழ்பவர்களில், ஒப்பீட்டளவில், இன்று ஆர்.எஸ்.எஸில் அதிகமாகவும், 'பெரியார்' கட்சிகளில் குறைவாகவும் இருந்தால் வியப்பில்லை. 
(‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கான அளவுகோலின்படி, நமது  'யோக்கியதை எப்படி?’; 

ஈ.வெ.ராவின் பொதுத் தொண்டருக்கான இலக்கணம் மற்றும் போராட்ட வடிவங்களை ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பரீசிலித்து, இந்த காலக்கட்டதிற்கு ஏற்ற வகையில் வளர்த்து எடுத்து;

பிரிவினை சமூக நோயிலிருந்து 'தமிழர்' என்ற அடையாளத்தை மீட்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் ப‌ரிமாற்ற ஆக்கபூர்வ (Mutually beneficial) திசையில் பிணைக்கும்;

போக்கில் பயணித்தால், அது தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும். 

எனவே, எனது விமர்சனங்களைப் புறக்கணித்து, இந்து கடவுள்களை அவமதித்து 'கருப்பர் கூட்டம்' பிரச்சாரம் செய்தது, யூடியூப் சானல்களில் வீடியோக்கள் வெளியிட்டது எல்லாம் அவர்களின் அறியாமையா? அல்லது 'நோஞ்சான் பெரியார் புலமையா'? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

'பெரியார்' கொள்கையாளர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் விவாதம் நடத்த விரும்புபவர்கள் போலவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 'பெரியார்' கொள்கையாளர்களுடன் விவாதம் நடத்த அஞ்சுவது போலவும், மேற்குறிப்பிட்ட காணொளியில் 'கறுப்பர் கூட்டம்' நாத்திகன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு உரிய விளக்கம் தர வேண்டியது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சமூகக்கடமையாகும்.

என்னை 'சங்கி, பார்ப்பன அடிவருடி' என்று என் முதுகுக்குப் பின்னால் பிரச்சாரம் செய்து கொண்டு, எனது ஈ.வெ.ரா தொடர்பான ஆய்வுகளை மறுக்கும் அறிவு வலிமையின்றி பயணித்து வருவது சரியா? வரலாற்றில் எனது விமர்சனங்களைச் சந்திக்கும் 'அறிவு வலிமையற்ற நோஞ்சான்'களான 'பெரியார்' கொள்கையாளர்களாக,  அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

‘‌கந்த சஷ்டி கவசம்சர்ச்சையில் 'கறுப்பர் கூட்டம்' நபர்கள் கைது செய்யப்பட்டு, அந்த யூடியூப் சானல்கள் அகற்றப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகள் முன்னேறி வருகின்றன. சட்டபூர்வமாக அதனை 'கறுப்பர் கூட்டம்' தமது பக்க நியாயங்களை முன்வைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

உணர்ச்சிபூர்வமாக பழி வாங்கும் போக்குகளை, எதிரெதிர் முகாம்களில் ஊக்குவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொது மக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றி போராட்டங்கள் நடத்தியதில், காந்தி தோற்ற இடத்தில் வெற்றி பெற்றவர் ஈ.வெ.ரா. ஈ.வெ.ராவால் 'சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்டங்களை 'பெரியார்' கட்சிகள் நடத்துவதும், ஆதரிப்பதும் முடிவுக்கு வர வேண்டும்.

எதிரேதிர் முகாம்களில் அறிவுபூர்வமான விவாதங்களை ஊக்குவிப்போம். எதிரேதிர் முகாம்களில் உள்ள  'நோஞ்சான்' புலமையாளர்களிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்.

No comments:

Post a Comment