Sunday, July 12, 2020


ஈ.வெ.ரா மற்றும் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாவதே,


ஈழத்தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனமான ஒரே வழியாகும்



இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார்.’ 

சீமான் சசிகலாவுக்கு நெருக்கமானவ‌ர். சசிகலா சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வராக முயன்றவர். இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளிஎன சசிகலா அறிவிப்பாரா? என்று சீமான் தெளிவுபடுத்துவாரா?

சசிகலாவோ, டெசோவோ அவ்வாறு அறிவித்தால், அது வடிவேல் பாணி காமெடி ஆகும் வாய்ப்பும் இருக்கிறது.

,நா மனித உரிமை அமைப்பு கேலிக்கூத்தாகி (mockery of human rights) விட்டது, என்று அறிவித்து, அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டது. ஏற்கனவே போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்கள் புரிந்த நாடுகளின் பிரதிநிதிகள் அந்த அமைப்பில் புதிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

The US quit the council in June, saying it made a mockery of human rights. Countries that have been widely criticised for severe human rights abuses are among 18 newly elected members of the UN Human Rights Council. 

உலகப்போர்கள் உள்ளிட்டு இது வரை நடந்த போர்களில் வெற்றி பெற்ற நாடுகள் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, எந்த நாடும் தண்டிக்கப்பட்டதில்லை. தோற்ற நாடுகளின், தமது நலனுக்கு ஒத்துவராத நாடுகளின் போர்க்குற்றங்களை,  வெற்றி பெற்ற நாடுகள் தண்டித்திருக்கின்றன. சர்வதேச அரசியலில் பொது நியாயத்திற்கு இடம் கிடையாது. 

அது மட்டுமல்ல, கூடுதல் தோல்வியையும், கூடுதல் சேதங்களையும் தவிர்க்க, ராஜபட்சேவை விட மோசமான‌ சர்வாதிகாரி இட்லருடன் வேறு வழியின்றி அவமானகரமான ஒப்பந்தம் செய்து ரஷ்யாவைக் காப்பாற்றினார் லெனின்;

என்பதைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

The Treaty of Brest-Litovsk (also known as the Treaty of Brest in Russia) was a peace treaty signed on March 3, 1918, between the new Bolshevik government of Russia and the Central Powers (German Empire, Austria-Hungary, Bulgaria, and the Ottoman Empire), that ended Russia's participation in World War I.

Lenin told the Central Committee that "you must sign this shameful peace in order to save the world revolution". If they did not agree he would resign. 

மார்க்சிஸ்ட் பேரா.அருணன் எழுதிய 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' நூலுக்கு, நான் எழுதிய மறுப்பானது, 'உண்மை' (15-11-1983 to 01-06-1984)  மற்றும் 'விடுதலை’ (26-02-1984 to 06-03-1984)  இதழ்களில் தொடர்க்கட்டுரைகளாக‌ வெளிவந்து, பின்னர் 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் 'பெரியாரியலா? மார்க்சியமா?' (1991) நூலாகவும் வெளிவந்தது.

1934இல் பொதுவுடமைப் பிரச்சாரத்தை ஈ.வெ.ரா கை விட்டது தொடர்பாக, அருணன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில்,

லெனின் இட்லருடன் செய்துகொண்ட அவமானகரமான ஒப்பந்தம் பற்றிய எனது விளக்கமானது, மேற்குறிப்பிட்ட நூலில் 10 ஆவது அத்தியாயத்தில் வெளிவந்துள்ளது.

அதனைப் படித்து பாடம் கற்பதன் மூலமாக‌, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போர் அழிவிற்குப் பின்னர், 'போர்க்குற்ற விசாரணையை' முன்னிறுத்தி பயணித்ததானது, எத்தகைய முட்டாள்த்தனமான தற்கொலைப்பாதையானது? என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பிறப்பில், வளர்ப்பில், வாழ்வில், புரிதலில் குற்றம் இருந்தால், பிறந்த மண்ணுக்கும் தாய்மொழிக்கும் முதல் முக்கியத்துவம் கொடுக்கும் இயல்பில் திரிதல் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

இயல்பாகவே தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் தான் முக்கியமாகும். அதற்கடுத்து தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி, அந்தமான் தீவுகள் போன்ற இடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் (இலங்கை மலையகத்தமிழர் உள்ளிட்ட) தமிழர்களின் பிரச்சினை இடம் பெறும். அதன்பின் , இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெறும்.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஈழ விடுதலைக் குழுக்கள் எல்லாம், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரச்சினைகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி, இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்களின் பிரச்சினைகளையும் பின்னுக்குத்தள்ளி, ஈழ விடுதலையை முன்னிறுத்தி தூண்டியதன் விளைவாக,  நான் உள்ளிட்ட தமிழ்நாட்டுத்தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக பயணிக்கத் தொடங்கிய பின் தான்,

கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த ஏரிகள், ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட கனி வளங்கள் எல்லாம், ஈழ விடுதலைப்புரவலர்களாக செயல்பட்ட அரசியல் கொள்ளையர்களின் ஊழல் பேராசைக்கு இரையாகத் தொடங்கின. சட்டத்தின் மீது பயமின்றி, கங்கை அமரன் தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ் வரை தனியார் சொத்து அபகரிப்பு, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்தன.

‘'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும், 1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.  TELO, PLOTE, EPRLF ஆகிய குழுக்களின் தலைவர்களையும், போராளிகளையும், ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளை கண்டிக்காமல், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக பயணித்த‌, அந்த குழுக்களின், தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜெயலலிதாவை காலில் விழுந்து வணங்கி, பின் ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களுக்கும், வேறுபாடு உண்டா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், தமிழ்நாட்டிற்கு மீட்சி உண்டா?’ 
(‘'முள்ளும் மலரும்' ரஜினியிடம் கேட்ட கேள்வி; அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், இன்றும் தமிழ்நாடு நீடிக்கிறதா?’; 

மேற்குறிப்பிட்ட முட்டாள்த்தனமான உணர்ச்சிபூர்வ சமூக செயல்நுட்பத்திலிருந்து எவ்வாறு தமிழ்நாடானது, விடுதலை பெறத் தொடங்கியுள்ளது? என்பதை மேலுள்ள பதிவில் விளக்கியுள்ளேன்.

சர்வதேச அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய புரிதல் இன்றி, நான் உள்ளிட்டு பலர் 'தனித்தமிழ்நாடு போதையில்' பிரபாகரனிடம் ஏமாந்தது போலவே, எம்.ஜி.ஆரும் பிரபாகரனிடம் ஏமாந்தார்.

எம்.ஜி.ஆர் போலவே பிரபாகரனிடம் ஏமாந்த நான், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ்நாட்டின் மீட்சிக்கான வழிகளை பதிவு செய்துள்ளேன். 
('ஈ.வெ.ரா அண்ணாவிடம்; அண்ணா கருணாநிதியிடம்; கருணாநிதி எம்.ஜி.ஆரிடம்; எம்.ஜி.ஆர் பிரபாகரனிடம்; பிரபாகரன் சீமானிடம் எவ்வாறு ஏமாந்தார்கள்? பிம்ப வழிபாட்டில் இருந்து தமிழ்நாடு விடுபடுமா?'; 
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_2.html)

இலங்கையில் 2005 தேர்தலில் ராஜபட்சே அதிபராக வெற்றி பெற்றதற்கு, பிரபாகரன் எந்த அளவுக்கு உதவினார்? என்ற கேள்வியைப் பின்வரும் சான்று எழுப்பியுள்ளது.

Rajapakse, who was elected as president in November 2005, had fought the election against his rival and former prime minister Ranil Wickremesinghe on the plank of wiping out terrorism from the island nation and the military defeat of the LTTE. Ironically, the Tigers helped Rajapakse's ascent to the most powerful position in Sri Lanka by its diktat to the Tamils, who traditionally supported Wickremesinghe's party, to boycott the election. Despite this generous help from the LTTE, Rajapakse won the election only by a margin of 150,000 votes. (https://news.rediff.com/slide-show/2009/may/20/slide-show-1-how-war-against-ltte-was-won.htm)

'போர்க்குற்ற விசாரணையை' முன்னிறுத்தி பயணிப்பதானது, எத்தகைய முட்டாள்த்தனமான தற்கொலைப்பாதையாகும்? என்பதை, இலங்கையில் முள்ளிவாய்க்கால் அழிவைச் சந்தித்துள்ள தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட லெனின் வழியில், ராஜபட்சேயுடன் சமரசமாகி தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் திசையில் பயணிப்பதே புத்திசாலித்தனமாகும்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

On 10 June 2020, Election Commissioner Mahinda Deshapriya confirmed that the postponed parliamentary elections will be held on 5 August 2020 with strict health measures and guidelines. 

அந்த தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாகும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாம் வரும் தேர்தலில் ராஜபட்சேயை ஆதரிப்பதே அவர்களுக்கு நல்லது என்றும், அவ்வாறு ஆதரிப்பதாக முடிவு எடுத்தால், அவர்கள் உரிய பலன்கள் பெற தாம் துணை புரியலாம் என்றும் சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

சீமானுக்கு நெருக்கமான சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடியதற்காக, சசிகலாவை சீமான் கண்டிக்கவில்லை. அது போல, முள்ளி வாய்க்கால் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடுவதை, சீமான் உள்ளிட்ட தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்க வாய்ப்பில்லை.

'கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்று பயணிப்பதானது, தோல்வியில் உரிய பாடம் கற்க மறுத்துப் பயணிக்கும் முட்டாள்த்தனமாகும்.

ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது,அந்த தலைவர்களை உணர்வுபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள்.அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_8.html)

தமது பலகீன நிலையைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, கிடைக்கும் சமரச வாய்ப்பினைப் பயன்படுத்தி, எவ்வாறு பயணித்து வலிமை பெறுவது? என்பதை ஈ.வெ.ரா அவர்களும் லெனினும் செயல்பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். 

அந்த வழியில் பயணிப்பது தான், இலங்கைத் தமிழர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டு பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை பெற்று வரும் போக்கும் வேகமாகும். எனவே தமிழ்நாட்டிற்கும் அது நல்லதாகும்.

No comments:

Post a Comment