Saturday, July 18, 2020


கந்த சஷ்டி கவசம்’ - நேர்மறை சிந்தனைகளும், எதிர்மறை சிந்தனைகளும் (1)



'நல்ல வாழ்க்கைக்கு நேர்மறை சிந்தனைகள் (Positive thinking) அவசியம். விரும்பிய இசையைக் கேட்பதானது, நேர்மறை சிந்தனைகள் வளர்க்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்' என்று உளவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Positive thinking is a mental and emotional attitude that focuses on the bright side of life and expects positive results.

Listen to your favorite music—it’s that easy! Music has a fairly unique ability to put you in a positive state of mind, so take advantage of that fact. 
(https://positivepsychology.com/positive-mindset/)

எனவே 'கந்த சஷ்டி கவசம்இசையை பக்தியுடன் விரும்பி கேட்பதும், 'நல்ல வாழ்க்கைக்கான‌ நேர்மறை சிந்தனைகளை வளர்க்க உதவும். உதாரணமாக, பக்தியுடன் மோகனராகத்தில் குழல் இசை மூலம் மொழியால் விவரிக்க முடியாத‌ இன்பத்தினை ஆனாயநாயனார் அனுபவித்தது தொடர்பான, எனது ஆய்வினையும் நான் பதிவு செய்துள்ளேன். 

கொரொனாவிலிருந்து தப்பிக்கும் வகையில், நம்மிடம் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை (immunity)  அதிகரிக்கச் செய்ய நல்ல மனத்தொகுப்புடன் (Good Mindset) வாழ்வதும் மிக முக்கிய வழிமுறையாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
(‘சமூகக் கொரோனா நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிப்பதன் மூலமாக, எவ்வாறு நமது நோய் எதிர்ப்புத் திறனை (immunity) வளர்க்க முடியும்?’; 

'சனாதனம்' மற்றும் 'வர்ணாஸ்ரமம்' போன்றவற்றை தவறாக புரிந்து கொண்டு, 'பார்ப்பனியம் சமூகச் சுரண்டல் செய்கிறது' என்ற வாதத்தினை முன் வைப்பவர்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அதே தவறான அணுகுமுறையில் 'கறுப்பர் கூட்டம்' என்ற பெயரில் செயல்பட்டவர்கள் மூலமாக‌, 'கந்த சஷ்டி கவசம்' அவமதிக்கப்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது.

நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன்எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இந்தப் பாடலின் வரிகளின் தொடர்ச்சியாக தலையின் முடி தொடங்கி கால் பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காக்க என்று வேண்டுவதாக பாடல் இருக்கும். இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலிசெய்தும், விமர்சனம் செய்தும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளிவந்த காணொளி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த காணொளிக்கு உருவாகியுள்ள எதிர்ப்புகளால் அக்காணொளியை வலையொளியின் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் இந்த வலையொளி நிர்வாகிகள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

உடலை வளர்த்தேன், உயிர்வளர்த்தேன் என்பதே திருமூலர் வாக்கு. அதனால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருந்தால்தான், உடல் வளமுடன் இருக்கும். அதுபோலவே கந்த சஷ்டி கவசத்தில் ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கப்படுகிறது, இதில் என்ன ஆபாசம் இருக்கிறது. நமக்கு சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என்றால் இன்ன பாதிப்பு என்று ஒவ்வொரு உறுப்புக்கும் தானே சிகிச்சை எடுக்கிறோம்.

அதுபோல உடல் உறுப்பு பாதிப்புடன் கோவிலுக்கு சென்றால் எனக்கு கைவலியை போக்க வேண்டும், கால்வலியை நீங்கவேண்டும், கண்வலி குணமாகவேண்டும் என்றுதானே வேண்டுகிறோம். இதிலெல்லாம் என்ன ஆபாசம் இருக்கிறது. ஆண்குறி, பெண்குறி உள்ளிட்ட அனைத்துமே உடலின் உறுப்புகள்தானே அதிலென்ன ஆபாசம் இருக்கிறது என்று இவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். இவர்களின் சிந்தனையில் குறைபாடு இருக்கிறது, அதனால்தான் பார்க்கும் அனைத்தும் ஆபாசமாக தெரிகிறது. இந்துத்துவாவை எதிர்ப்பதாக சொல்லி தமிழர் சமயத்தை அழிப்பதே இவர்களின் வேலையாக உள்ளது, இது மறைமுகமாக இந்துத்துவா சக்திகளுக்கே உதவி புரியும்.’-  ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமயவன் 

'இந்து கடவுள்களை இழிவு செய்பவர்களின் சிந்தனையில் குறைபாடு இருக்கிறது.' என்று தமிழர் சமயத்தைக் காக்கும் தமிழர்கள் எச்சரிக்கத் துவங்கி விட்டார்கள்.

மனித உறுப்புகளில் 'அசிங்கம்' என்ற அணுகுமுறை  இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களை, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி அணுகி;

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு அடிமையாகி, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழர்க்கு கேடேன்று தவறாக கருதி, 'திராவிட' இயக்கங்கள்  பயணித்தன் விளைவுகளா, சிம்புவின் 'பீப்' பாடலும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும்? என்பது ஆய்விற்குரியதாகும். 
(‘சங்க இலக்கியங்கள்-சமூகவியல் வெளிச்சத்தில், சிம்புவின்  'பீப்'  பாடல்’; 

காலனிய சூழ்ச்சியில், இந்தியாவிற்குள் -தமிழ்நாட்டினுள்- அறிமுகமான‌ செவ்வியல்-classical/நாட்டுப்புறம்-folk வரிசையில், மேற்குறிப்பிட்ட பெண்ணின் பாலியல் உறுப்புகள் பற்றிய  'அசிங்க' பார்வையும், மேற்கத்திய இறக்குமதியாக இருக்கலாம்.

அதன் விளைவாகவே, மேற்கத்திய ஆய்வாளர்களும், அவர்கள் வழியில் 'பகுத்தறிவாளர்களும்', பண்டை இலக்கியங்களிலும், புராணங்களிலும் குறைகள் காணும் போக்கும், அரங்கேறியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தில்(Communication Technology)  பயனுள்ள தகவல்கள் 'சிக்னல்'களாகவும் (signal), மற்றவை இரைச்சலாகவும் (noise) பிரித்து உணரப்படும்.

ஒரு தேவைக்கு சிக்னலாக இருப்பது வேறொரு தேவைக்கு இரைச்சலாக இருப்பதும் உண்டு.

எனவே எது சிக்னல், எது இரைச்சல் என்பது தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பொறுத்தது.

மனிதரின் சிந்தனை மற்றும் திறமைகள் அடைப்படையில் வெளிப்படும் எழுத்து, ஓவியம், இசை,நாட்டியம், சிற்பம் போன்ற அனைத்துமே மனித சமூக வரலாற்றுத் தடயங்களாகும்.

வரலாற்றுத் தடயங்களை ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்கள், அவர்களின் ஆய்வு அணுகுமுறையில் வெளிப்படும்  தகவல்களைத் (signal) தவிர்த்து, மற்றவற்றை தேவையற்றவையாக ‍ இரைச்சலாக (noise)‍ தவிர்ப்பதும் இயல்பே.

பக்தி தொடர்பான புராணங்களும்,இலக்கியங்களும் அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் புதையல்கள். ('The Religious Literature of India is too vast. It includes the Vedas, the Upanishads, the great epics like the Ramayana and Mahabharata, and the Puranas of the Hindus. These are like mines of information about religious beliefs, social systems, people’s manners and customs, political institutions, and conditions of culture.'; 

அறிவுபூர்வமான சிக்னல்கள் தேடுபவர்களுக்கு சிக்னலும், 'இரைச்சல் மட்டுமே' தேடுபவர்களுக்கு இரைச்சலும் வழங்கும் அமுதசுரபியாக தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் இருக்கின்றன. 
(‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'’; 

தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் இரைச்சலைத் தேடுபவர்கள் எல்லாம் எதிர்மறை சிந்தனையில் (Negative thinking) சிக்கியவர்கள் ஆவார்கள்.

Negative thinking is a thought process where people tend to find the worst in everything, or reduce their expectations by considering the worst possible scenarios. 

எதிர்மறை சிந்தனையால் விளையும் கேடுகளில் இருந்து விடுபட கீழ்வரும் வழிமுறையை உளவியல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தாம் தவறு செய்துவிட்டதை மனமாற உணர்ந்து திருந்துவதே, எதிர்மறை சிந்தனையில் இருந்து விடுதலை பெற்று நேர்மறை சிந்தனையை நோக்கிப் பயணிப்பதன் தொடக்கமாகும்.

“Wow, I’m really caught”; “I’m really doing this to myself right now”; or whatever words fit. Stop for a moment, and with kindness, be with yourself exactly where you are, acknowledge the truth of feeling powerless or stuck inside your pain story.

எனவே, 'கறுப்பர் கூட்டம்' அமைப்பில் உள்ளவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும், எந்த மதக்கடவுள்களையும் இழிவு செய்யாமல் பயணிப்பதே நேர்மறை சிந்தனையில் பயணிப்பதற்கான வழியாகும்.

வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து ஈ.வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

ஈ.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, எவ்வாறு ஈ.வெ.ராவிற்கே எமனாக மாறியது? என்பதையும் விளக்கியுள்ளேன்.
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_21.html)

'பிரிவினை' பற்றி ஈ.வெ.ராவைப் போல துணிச்சலாக 'நியாயப்படுத்தி' இன்று பேச முடியுமா? இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா

(https://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post_29.html)

எனவே வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும்.

No comments:

Post a Comment