Monday, June 22, 2020


எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமான சமூக இசை ? (4)


.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, .வெ.ராவிற்கே எமனாக ?



தமிழ்நாட்டில் 1970-களில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், திருச்சி கிளைவ் மாணவர் விடுதியிலும், பாளையங்கோட்டையில் பேராசிரியர் தாக்கப்பட்டது  போன்ற அராஜகங்கள் தமிழ்நாடெங்கும் அரங்கேறிய காலக்கட்டத்தில் தான்;

தமிழர்களின் சமூக முதுகெலும்பின் வலிமையை பலகீனமாக்கும் திசையில், ரசனையிலும்   வீழ்ச்சியானது ஆளுங்கட்சியால் ஊக்குவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உரிய கடுமையான பயிற்சியின்றி, நடனத்திற்கான‌ பக்தியுடன் கூடிய ஈடுபாடும் (Devotion) இன்றி, 'கவர்ச்சி' உடையுடன், 'ரெக்கார்ட் டான்ஸ்' என்ற பெயரில், ரசனையில் பாலுணர்வு தூண்டுதலை முன்னிலைப் படுத்தி, ரசனையில் திரிதல் போக்கானது, 1969க்குப் பின் அரங்குகளில் அறிமுகமானது.

மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எல்லாம், மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் 'ரசிக்கும்' அளவுக்குபாலுணர்வினை தூண்டும் திரைப்பட பாடல்களுக்கு, அரை நிர்வாணம் முதல், முக்கால்/முழு நிர்வாணமாக, இளம்பெண்கள் நடனமாடும் 'ரெக்கார்ட் டான்ஸ்'  நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டு நகரங்களில் அறிமுகமானது

1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஆளுங்கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட சமூகத்திற்கு கேடான புதிய ரசனையில் மேற்குறிப்பிட்ட மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எல்லாம் மூழ்கத் தொடங்கினார்கள்.

மேற்குறிப்பிட்ட‌ ரசனை வீழ்ச்சியின் ஊடேயே, 1969 முதல் அண்ணா பிறந்த நாட்களை பின்னுக்கு தள்ளிய முதல்வர் கருணாநிதி, தமது பிறந்த நாளுக்கு முன்னுரிமை கொடுத்து, பெரியார், அண்ணா போன்ற தலைவர்களைப் பின்னுக்குத்தள்ளி, தமது பிம்பத்தை ஊதிப்பெருக்க வைத்த முயற்சிகளும் முன்னேறின. 

சமைத்த உணவின் துப்பைப் (உள்ளடக்கத் தன்மையை) போலவே;

சமைத்த (composed & performed) இசையின் 'துப்பாக' - இசையின் உள்ளடக்கத்தன்மையாக-  இசையில் 'நீர்' இருக்கிறது.’ 
(‘'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' மீளும் தமிழ்நாடு?’; 

அது போலவே, சமூகத்தின் யோக்கியதையைக் கண்டுபிடிக்கும் துப்பாக ரசனை இருக்கிறது.

ஒரு மனிதரின் ரசனை என்பதை, அவரின் மனதில் உள்ள தேவைகள் மற்றும் ஈடுபாடுகளே தீர்மானிக்கின்றன. கால ஓட்டத்தில் சமூகத்தில் வெளிப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அந்த சமூகத்தில் வாழும் மனிதர்களின் தேவைகள் மற்றும் ஈடுபாடுகளும் மாற, அதற்க்கேற்றார்ப்போல அவர்களின் ரசனையும் மாறும். இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம் சமூகத்தூண்டலில் கேடான மாற்றங்களின் மூலமாக கேடான ரசனையுடன் பயணிப்பார்கள். சமூக நேர்மையில் அகவலிமையுள்ளவர்களின் ரசனை முலமாக, சமூகத்தின் மீட்சிக்கான வாய்ப்புகளும் காப்பாற்றப்படும்.

காந்த பண்பற்ற இரும்பானது, காந்த புலத்தில்(Magnetic Field)  இருக்கும்போது, 'காந்தத் தூண்டல்'(Magnetic Induction)  என்ற அறிவியல் வினை (Scientific process) மூலம், காந்தப் பண்பு' (Magnetic property)  பெறுவது போல;

மேற்குறிப்பிட்ட இயல்பில் பலகீனமான,  'ரசிகர்கள்' எல்லாம், 'சுயபுத்தியையும், இயல்பையும்' காவு கொடுத்து, சமூகத்தில் 'அதீத' செல்வாக்கில் வலம் வரும் பிம்பங்கள் மூலம், சமூகத் தூண்டல்' (Social Induction)  என்ற சமூகவியல் வினை (Sociological Process)  மூலம், 'பிம்ப ரசிக' பண்பில் தம்மை சிறைபடுத்தி, தாமாகவே தம்மை பலியாக்கி, வாழ்கிறார்கள். 

வைக்கம் போராட்ட வீரர் .வெ.ராவிற்கும், 1944‍இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த .வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் முக்கியமானவையாகும்.

சுமார் 100 வருடங்களுக்கு முன் நடந்த வைக்கம் போராட்டத்தில், வெளிப்பட்ட தமிழ்நாட்டின் நிலையானது, அடுத்த 50 ஆண்டுகளில், 1970களில் தலைகீழானது. அதற்கடுத்த 50 ஆண்டுகளில், இன்று மீண்டும் தலைகீழாகி, இரண்டு தலைகீழ்களுக்குப்பின், தமிழ்நாடு நேராகத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 1920களில், பகுத்தறிவு முற்போக்கு பிரச்சாரங்கள் எல்லாம் முளைவிடாத நிலையில், தமிழ்நாடு ஆத்தீகத்தில் ஆத்தீக ரசனையில் மூழ்கியிருந்த நாடாகவே இருந்தது.

கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த .வெ.ராவும் மற்றும் ராஜாஜி உள்ளிட்ட பல பிராமண மற்றும் பிராமணரல்லாத தலைவர்களும், அனைத்து சாதி மத சாமான்யத் தமிழர்களும் பிரமிக்க வைக்கும் வகையில் எவ்வாறு பங்களித்தார்கள்? என்பதை எல்லாம் உரிய சான்றுகளுடன் 'வைக்கம் போராட்டம்' (பழ.அதியமான்) நூல் விளக்கியுள்ளது. அவ்வாறு 1920களில் இருந்த தமிழ்நாடு, நூறு ஆண்டுகளுக்குப் பின், 1944இல் திராவிடர் கழகம் தோன்றியதன் விளைவாக, இன்று எவ்வாறு உள்ளது?

சாதி, மத, மொழி, வட்டார அடிப்படைகளில் வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி கட்சிகளின் எண்ணிக்கையும், அதன் மூலமாக வளமாகும் தலைவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

கருணாநிதிக்கும் நடராஜனுக்கும் நெருக்கமாகிப் பயணித்த இன்றைய இந்துத்வா கட்சிகளைப் போலின்றி, சமூக நேர்மையுடன் கூடிய சமத்துவத்திற்கு செயல்பூர்வமாக பங்களித்த‌ அன்றைய இந்து மகா சபை பாணியில் தான், .வெ.ரா அவர்கள் தேசிய திசையில் பயணித்தார் என்பதைக் .வெ.ரா அவர்கள் வைக்கம் போராட்டதின் போது, அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் உணர்த்துகின்றன. 

வைக்கம் போராட்ட வீரர் .வெ.ராவின் நிலைப்பாட்டில் இருந்து தடம் புரண்டு, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த .வெ.ரா, தம்மையறியாமலேயே தி.மு. வளரும் சமூக செயல்நுட்பத்திற்கான ரசனை வீழ்ச்சிக்கு எவ்வாறு வித்திட்டார்? என்பதை இங்கு பார்ப்போம்.

1925 இல் 'குடிஅரசு' இதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய .வெ.ரா அவர்கள், தடம் புரண்டு, பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி, முன்னெடுத்த நாத்திகமானது, எவ்வாறு தமிழ்நாட்டை சீரழித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1944இல் தி. தொடங்குவதற்கு முன், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டு .வெ.ரா முக்கியமான பொதுப்பிரச்சினைகளுக்காக போராடிய போதும், பிரச்சாரங்கள் செய்தபோதும், கடவுள் மறுப்பு கொள்கையை முன்னிறுத்தியதில்லை. பிராமணர்களும், கடவுள் நம்பிக்கையுடைய‌வர்களும், அந்த பொதுப்பிரச்சினையில், தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதை, அந்த கடவுள் மறுப்பு கொள்கை மூலம் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பியதில்லை.

1925 இல் 'குடிஅரசு' இதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய .வெ.ரா அவர்கள், எந்த காலக்கட்டத்தில், அந்த 'குடிஅரசு' இதழில் கடவுள் மறுப்பு தொடர்பான கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார்? மேற்கத்திய கடவுள் மறுப்பாளர்களாகிய இங்கர்சால் போன்றோர், எந்த அடிப்படையில் கடவுள் மறுப்பு போக்கில் பயணித்தனர்? என்று ஆராய்ந்தால்;

.வெ.ராவின் கடவுள் மறுப்பானது, அவரின் சமூக சீர்திருத்த போக்கில், அவர் சந்தித்த தடைகள் தொடர்பான பிராமண எதிர்ப்பின் வளர்ச்சிக்கட்டத்தில், அந்த சமூக சீர்திருத்ததிற்கு கட்டுப்பட்ட போக்கிலேயே (subordinated), கடவுள் மறுப்பை கையாண்டார்; சாகும் வரை பகிரங்கமாக குன்றைக்குடி அடிகளாருடன் நட்பைத் தொடர்ந்தவாறே

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது 'பார்ப்பன சூழ்ச்சிஎன்பதை விட, காலனி சூழ்ச்சியே முக்கிய காரணம்

என்பது .வெ.ரா அவர்களுக்கு விளங்கியிருந்தால்,

அவர் 1925க்குப் பின் நாத்தீகம் நோக்கி தடம் புரண்டு பயணித்திருக்க மாட்டார்.

புராணங்களை விமர்சிப்பது என்ற பெயரில் ஆபாசமான கருத்துக்களை மேடைகளில் பேசி, தி.மு. வளர்ச்சிக்கு உதவிய ரசனை வீழ்ச்சிக்கு வித்திட்டிருக்க மாட்டார்.  

மனிதரின் சிந்தனை மற்றும் திறமைகள் அடைப்படையில் வெளிப்படும் எழுத்து, ஓவியம், இசைநாட்டியம், சிற்பம் போன்ற அனைத்துமே மனித சமூக வரலாற்றுத் தடயங்களாகும்.

வரலாற்றுத் தடயங்களை ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்கள், அவர்களின் ஆய்வு அணுகுமுறையில் வெளிப்படும்  தகவல்களைத் (signal) தவிர்த்து, மற்றவற்றை தேவையற்றவையாகஇரைச்சலாக (noise)‍ தவிர்ப்பதும் இயல்பே.

பக்தி தொடர்பான புராணங்களும்இலக்கியங்களும் அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் புதையல்கள் ஆகும்.
('The Religious Literature of India is too vast. It includes the Vedas, the Upanishads, the great epics like the Ramayana and Mahabharata, and the Puranas of the Hindus. These are like mines of information about religious beliefs, social systems, people’s manners and customs, political institutions, and conditions of culture.'; 

அறிவுபூர்வமான சிக்னல்கள் தேடுபவர்களுக்கு சிக்னலும், 'இரைச்சல் மட்டுமே' தேடுபவர்களுக்கு இரைச்சலும் வழங்கும் அமுதசுரபியாக அவை இருக்கின்றன 
(‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'’;  

அண்ணாதுரை போன்ற முதுநிலை பட்டம் பெற்றவர்கள் எல்லாம் .வெ.ராவை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக,

தமிழ் தொடர்பாகவும் புராணங்கள் தொடர்பாகவும் மேடைகளில் .வெ.ரா வெளிப்படுத்திய அருவருக்கத்தக்க ஆபாச வெறுப்பு பேச்சுகளுக்கு ஒத்து ஊதத் தொடங்கியதானது, ரசனையின் வீழ்ச்சிக்கு வலிவு சேர்த்தது.

அதிலும் கவர்ச்சிகர எதுகை மோனை பாணி பேச்சுகளில் அண்ணா அந்த ரசனை வீழ்ச்சியை முன்னெடுத்தார்.

புராணங்களை விமர்சிப்பது என்ற பெயரில் ஆபாசமான கருத்துக்களை மேடைகளில் .வெ.ரா பிரச்சாரம் செய்தார்.  அதே ஆபாசமான கருத்துக்களை அண்ணா கவர்ச்சித்தமிழில் பிரச்சாரம் செய்து,

சமூகத்தில் ரசனை வீழ்ச்சியானது எவ்வாறு புலமை வீழ்ச்சிக்கும், நேர்மை வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது'பெரியார், அண்ணா' பாசறைகளில் பயின்று தரகு, அரசு நிதித்திருட்டில் விற்பன்னர்களாக‌ வளர்ந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் எவ்வாறு சிரழிக்க முடிந்தது? என்ற சமூகவியல் ஆராய்ச்சிகுகந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றினார்.

கவர்ச்சிகர எதுகை மோனை பாணி பேச்சுகளில் இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உண‌ர்ச்சியைத் தூண்டும் வகையில் அண்ணாவின் பேச்சுக்களும் எழுத்துக்களும் தமிழ்நாட்டில் புதிய சீரழிவு ரசனையை அறிமுகப்படுத்தின. அதுவே தி.மு. பாணி ரசனையாக உருவெடுத்தது. 'தொல்காப்பிய பூங்கா' உள்ளிட்டு சாகும் வரை அது போன்ற ரசனையை ஊக்குவித்தே கருணாநிதி வாழ்ந்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் மேடைகளில் மட்டுமே அரை நிர்வாண , முக்கால் நிர்வாண உடைகளில் பெண்கள் பங்கேற்ற‌ வக்கிர ரசனை வெளிப்பட்டது.

“‘The History of the Decline and Fall of the Roman Empire’ 
என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை மட்டும்,  'ரோமாபுரி ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை  இளைஞர்களின் பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உண‌ர்ச்சியைத் தூண்டும் வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள் கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும் - என்ற கருத்தை அவர் ஏன் நூலாக வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின் அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது, 'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்? அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப் பூட்டிய கதை' நினைவுக்கு வருவது தவறா?” 
(‘தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்கு கேடானதா? தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?’; 
https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

நீதிக்கட்சியின் சாதனைகளாலும் மற்றும் 1952க்குப்பின் முதல்வர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளாலும்  படிக்கத் தொடங்கியிருந்த மாணவர்களும் இளைஞர்களும் .வெ.ராவைப் பின் தள்ளி அண்ணாவை முன் நிறுத்தினார்கள். அதன் விளைவாக, கீழ்வரும் அவலம் தி.கவில் அரங்கேறியது.

1944இல் தொடங்கி பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த தலைவர் .வெ.ரா, 1947 இந்திய விடுதலையை துக்க தினமாக அறிவித்தார். ஆனால் தி. பொதுச்செயலாளராக இருந்த அண்ணா அந்நாளை இன்ப நாளாக வரவேற்றார்.

அண்ணாவை கட்சியில் இருந்த நீக்க .வெ.ராவிற்கு துணிவில்லையா? தலைவரிடம் இருந்து மாறுபட்ட பின்னர், அக்கட்சியில் பொதுச்செயலாளராக நீடிப்பது நேர்மைக்குறைவு என்று அண்ணாவிற்குப் புலப்படவில்லையா? ரசனை வீழ்ச்சி என்பதும் நேர்மைக்குறைவு என்பதும் பின்னிப் பிணைந்தது, என்பதற்கு அது வரலாற்றுச் சான்றானதா?

அதன்பின் 1948இல் தூத்துக்குடி தி.க‌ மாநாட்டினை அண்ணா புறக்கணித்தார். அம்மாநாட்டில் .வெ.ரா பேச்சு அண்ணாவை சீண்டுவதாக இருந்தது. அண்ணாவின் ரசனையில் ஈர்க்கப்பட்டிருந்த இளைஞர்களின் வலிமை .வெ.ராவை அச்சுறுத்தியது. அதன்பின் நடந்த கட்சி ஊர்வலத்தில் அண்ணா சாரட்டில் உட்கார்ந்திருக்க, .வெ.ரா ஊர்வலத்தில் நடந்து சென்றார். தி. என்ற கட்சியானது, பின்னால் 1949இல் தி.மு.கவை தோற்றுவித்த அண்ணா குழுவினரால் வீழ்த்தப்படுவதற்கான சமூக சிக்னலாகவே அந்நிகழ்ச்சி நடந்தது.

.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, .வெ.ராவிற்கே எமனாக மாறத் தொடங்கியது.

அதன்பின் தான், தமிழ்நாட்டில் .வெ.ராவும் அண்ணாவும், பொது அரங்கில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் அநாகரீகத்தைத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கருணாநிதியும் பாரதிதாசனும் அந்த அநாகரீகத்தை இன்னும் மோசமாக்கினார்கள்

அதன் வளர்ச்சியாக, நகைச்சுவை கலந்த அருவருக்கத்தக்க அரசியல் ஆபாசப் பேச்சாளர்கள் காலம் வந்தது.

1920களில் பக்தியில் இந்து, முஸ்லீம், கிறித்துவ மதங்களைச் சார்ந்த தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் ரசனையானது, வைக்கம் போராட்டத்தில் சாதி மத பேதங்களைக் கடந்து வைக்கம் போராட்டத்தில் பாரதியின் பாடல்களைப் பாடியதன் மூலமாக வெளிப்பட்டது.

1944 முதல் பகுத்தறிவு மற்றும் தமிழ் மொழியையும், இலக்கியங்களையும், புராணங்களையும் இழிவு செய்யும் பிரச்சாரம் தொடங்கி, 1949இல் தி.மு. தொடங்கி, .வெ.ராவையும், காமராஜரையும் இழிவு செய்த பிரச்சாரமும் சேர்ந்து வளர்ந்தது. அண்ணாவைத் தவிர்த்து, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் .வெ.ராவையும், காமராஜரையும் இழிவு செய்வதில் போட்டி போட்டார்கள்

இன்று .வெ.ராவை இழிவு படுத்தும் சில இந்துத்வா ஆதரவாளர்களுக்கு, 1967 வரை வெளிவந்த முரசொலி இதழ்கள் 'இழிவுச்சுரங்கமாக' உதவி வருகின்றன.

1967இல் தி.மு.க‌ ஆட்சியைப் பிடித்த காலக்கட்டத்தில் தான், தமிழ்நாடெங்கும் ஆபாசப் பேச்சுகளை வரவேற்கும் ரசனை வீழ்ச்சியும் வேகமெடுத்தது.

தமிழ்நாட்டில் 1920களில், பகுத்தறிவு முற்போக்கு பிரச்சாரங்கள் எல்லாம் முளைவிடாத நிலையில், தமிழ்நாடு ஆத்தீகத்தில் ஆத்தீக ரசனையில், பல பிராமண மற்றும் பிராமணரல்லாத தலைவர்களும், அனைத்து சாதி மத சாமான்யத் தமிழர்களும் பிரமிக்க வைக்கும் வகையில் சாதி பாகுபாட்டினை ஒழிக்க பங்களித்ததை, 1920களில் நடந்த வைக்கம் போராட்டமும், தமிழின் உரிமை மீட்சிக்குப் பங்களித்ததை 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் வெளிப்படுத்தின..

வைக்கம் போராட்ட வீரர் .வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த .வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து .வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

அந்த வீழ்ச்சிப்போக்கில் சிக்கியவர்கள் பெரும்பாலும் அரைகுறை படிப்பாளிகளில், தம்மை 'அறிவாளியாக' கருதிக் கொண்டு வாழ்ந்தவர்களாகவும், கவர்ச்சித்தமிழால் ஈர்க்கப்பட்ட மாணவர்களாகவும் இருந்தார்கள். 1949 முதல் வருடங்கள் ஓட, அவர்களில் பலர் வாக்காளர்களாக, 1957 தேர்தலில் முதல் முதலாகப் போட்டியிட்ட தி.மு. 15 தொகுதிகளில் வென்றது; 1962 தேர்தலில் அந்த எண்ணிக்கையானது 50 ஆக உயர்ந்தது. பின் ராஜாஜியின் முயற்சியால் கொள்கைகளைக் காவு கொடுத்த ஆதாயக் கூட்டணி பலத்தில் 1967இல் தி.மு. ஆட்சியைப் பிடித்தது.

ஆதாய அரசியலில் கட்சிகள் பயணிக்கத் தொடங்கியதானது, சமூகத்தில் ஆதாயத்திற்காக நேர்மை, உண்மை போன்ற நற்பண்புகளை இழப்பதை ஊக்குவிப்பதானது. அதாவது 1967 ஆட்சி மாற்றமானது, ஆளுங்கட்சியின் ஆதரவுடன் ரசனை வீழ்ச்சியை ஊக்குவிக்கும் மாற்றமாகவும் வெளிப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில், பிராமணரல்லாத இயக்கத்தில் இருந்த நேர்மையாளர்களில் பெரும்பாலோர் .வெ.ரா முகாமிலேயே நீடித்தனர்.

தி.மு.கவால் ஈர்க்கப்பட்ட மற்றும் ஈர்க்கப்படாத படிப்பறிவற்றவர்களும் அரைகுறை படிப்பாளிகளும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகப் பயணித்தார்கள். வெறும் படிப்பில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தாமல், ஓரளவு ஓழுங்காகப் படித்துக் கொண்டே, சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான போக்குகளை ஆதரித்து, தி.மு. சார்பாக பயணித்த என்னைப் போன்ற மாணவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகப் பயணித்தார்கள்.

1969 முதல் அண்ணா பிறந்த நாட்களை பின்னுக்கு தள்ளிய முதல்வர் கருணாநிதி, தமது பிறந்த நாளுக்கு முன்னுரிமை கொடுத்தது, அண்ணாமலைப்பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டி டாக்டர் பட்டம் பெற்ற போது, போலீஸ் தடியடியில் இறந்த மாணவர் உதயகுமாரின் தந்தையை மிரட்டி, நீதி மன்றத்தில் 'இறந்தது தன் மகனல்ல' என்று சொல்ல வைத்தது, திருச்சி கிளைவ் மாணவர் விடுதியில் காவல்துறை அநியாயமாக நுழைந்து தடியடி நடத்தி பல மாணவர்களின் கை கால்களை உடைத்தது போன்ற இன்னும் பல காரணங்களால் கருணாநிதியை வெறுத்து, ஆனாலும் எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்தவன் நான். 

தி.மு. ஆதரவு போக்கில் பயணித்திருந்த‌ என்னைப் போன்றவர்களிடமிருந்த‌ கருணாநிதி வெறுப்பானது, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் பக்கம் எங்களைத் தள்ளவில்லை. நீறு பூத்த நெறுப்பாக இருந்த அந்த வெறுப்பின் வலிமை காரணமாகவே, எம்.ஜி.ஆர் தொடங்கிய .தி.மு.க, அடுத்து வந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஸ்தாபன காங்கிரசை இரண்டாம் இடத்திற்கு தள்ளி வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர் தனியாக .தி.மு. தொடங்கியபோது நான் கல்லூரி ஆசிரியர். கருணாநிதி வெறுப்பு நோயில் பயணித்த போதும், எம்.ஜி.ஆரை அரசியல் தலைவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர் மரணிக்கும் வரையிலும்.

எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்த என்னாலேயே, எவ்வாறு ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், வெற்றி பெற வாய்ப்புள்ள திசையை எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டினார்? என்பதை விளங்கிக்கொள்ள முடியாத;

மார்க்சிய  லெனினிய பெரியாரியல் புலமையாளனாகவே நான் வாழ்ந்து வந்தேன். அதன்பின் ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பத்தினை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்பதைக் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.


அதன் அடிப்படையிலேயே கீழ்வரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளேன்.

'ஏம்பதி' போக்கில் இருந்த எம்.ஜி.ஆர் ரசனையில் இருந்து வேறுபட்டு, 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற பேரில் .வெ.ராவின் 'காட்டுமிராண்டித் தமிழைக் கவர்ச்சித்தமிழாக' மாற்றிய திசையில், 'பராசக்தி' ரசனைப் பயணித்ததா? 'காட்டுமிராண்டித் தமிழையும்' ஏற்றுக்கொண்டு, தமிழ்ப்புலவர்களின் பெயர்களை தமது குடும்பப் பிள்ளைகளுக்கு இட்டுப் பயணிக்கும் இரட்டை வேடப் போக்கிற்கும் அது வழி வகுத்ததா? அத்தகைய 'யோக்கியத் தமிழர்களின்' ஆதரவில், ஊழல் வளர்ந்த வேகத்தில், ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தமிழின் மரணப்பயணமும், 'அதிவேகப் பணக்காரர்களும்' வளர்ந்தனவா? அதன் தொடர்விளைவாகவே தமிழர்களில் பெரும்பாலோரின் 'நேர்மை வழிகாட்டி' (Ethical Compass) தடம் புரண்டதா? அதுவே தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_14.html)

என்பது தொடர்பான விவாதங்கள் மூலமாக, தமிழ்நாட்டில் ரசனை மீட்சியை ஊக்குவிக்க முடியும். தமிழ்நாட்டில் ரசனை வீழ்ச்சியே தன்மான வீழ்ச்சிக்கு காரணமானது. எனவே ரசனை மீட்சியின் மூலமாக தமிழ்நாடு தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது.

அருவருக்கத்தக்க அரசியல் ஆபாசப் பேச்சாளர்கள் காலம் முடிந்து விட்டது. அது போல, கருணாநிதியும் பாரதிதாசனும் பொது அரங்கில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திய‌ அநாகரீகத்தினை, அவர்களின் ஆதரவாளர்களே மறக்க விரும்புகிறார்கள். அந்த மீட்சிப் போக்கிலேயே, .வெ.ராவும் அண்ணாவும் தொடங்கி வைத்த அநாகரீகம் முடிய வேண்டிய காலம் இதுவாகும். டிஜிட்டல் யுகமானதால், அது சீக்கிரம் முடிந்து விடும், என்பதும் எனது கணிப்பாகும். 

No comments:

Post a Comment