Wednesday, March 18, 2020

ராஜாஜியும், ஈ.வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில்;

  

எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?



தேர்தல் பிரச்சாரத்தில், 'அடுத்த கொள்ளைக்கான முதலீடாக' வாக்குகளை விலைக்கு வாங்க வேட்பாளர்கள் செய்து வரும் முயற்சிகளும், தேர்தல் கமிசன் கெடுபிடிகளை மீறி எப்போது பணம் கைக்கு வரும்? என்று ஏங்கும் வாக்காளர்களும், கடந்த தேர்தல்களில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஊழல் வழிகளில் வெற்றிகரமாக மீட்ட 'செல்வாக்கான'(?) நபர்களும், விடையளித்து வருகிறார்கள். தமிழ்நாடு அவ்வாறு 'வரைவில் மகளிர் நாடாக' மாறி வருவது உண்மையானால், அதற்கு காரணமானமூன்று முக்கிய குற்றவாளிகள் ராஜாஜி, .வெ.ரா, அண்ணா என்பதும்;

'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின்  முக்கூட்டணியினர் எல்லாம் 'பங்காளிக் குற்றவாளிகள்' என்பதும்;

 எனது ஆய்வு முடிவாகும்
(‘ராஜாஜி, .வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்’; 
http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அரங்கேறிய மேற்குறிப்பிட்ட பாணி தேர்தலுக்கு எவ்வாறு ராஜாஜி, .வெ.ரா அண்ணா ஆகிய மூவரும் குற்றவாளிகள் ஆக முடியும்? என்பதை மேற்குறுப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன்.

அவர்கள் மூவரும் தோற்ற இடத்தில், வெற்றி பெற வாய்ப்புள்ள திசையை எம்.ஜி.ஆர் எவ்வாறு அடையாளம் காட்டினார்? அதனை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்பதை இந்த பதிவில் விளக்கியுள்ளேன்

பள்ளி, கல்லூரி நாட்களில் தி.மு. ஆதரவு எம்.ஜி.ஆர் ரசிகராகப் பயணித்தவன் நான்; 1965 முதல் 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன்; 1968 இந்தி எதிர்ப்புப்போராட்டத்தினை, தி.மு. ஆதரவு மாணவர்களும் காவல்துறையும் சேர்ந்து எவ்வாறு ஒடுக்கினார்கள்? என்பதை அனுபவித்தவன் நான்

1969 முதல் அண்ணா பிறந்த நாட்களை பின்னுக்கு தள்ளிய முதல்வர் கருணாநிதி, தமது பிறந்த நாளுக்கு முன்னுரிமை கொடுத்தது, அண்ணாமலைப்பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டி டாக்டர் பட்டம் பெற்ற போது, போலீஸ் தடியடியில் இறந்த மாணவர் உதயகுமாரின் தந்தையை மிரட்டி, நீதி மன்றத்தில் 'இறந்தது தன் மகனல்ல' என்று சொல்ல வைத்தது, திருச்சி கிளைவ் மாணவர் விடுதியில் காவல்துறை அநியாயமாக நுழைந்து தடியடி நடத்தி பல மாணவர்களின் கை கால்களை உடைத்தது போன்ற இன்னும் பல காரணங்களால் கருணாநிதியை வெறுத்து, ஆனாலும் எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்தவன் நான்

எம்.ஜி.ஆர் தனியாக .தி.மு. தொடங்கியபோது நான் கல்லூரி ஆசிரியர். கருணாநிதி வெறுப்பு நோயில் பயணித்த போதும், அவரை அரசியல் தலைவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர் மரணிக்கும் வரையிலும்

அவர் மரணித்த போது, 'பெரியார்' ஆதரவாளராக, ஜானகி அணியை ஆதரித்து, ஜெயலலிதா அணியை எதிர்த்தேன். அப்போது தமது வைப்பட்டி/துணைவி குடும்பத்துடன் இருந்த எனது மாமனார் மூலமாக பல வழக்குகளில் நான் சிக்கியிருந்த காலம். அவர் ஜானகிக்கு நெருக்கமானவர். எனவே நான் முட்டாள்த்தனமாக ஜானகி அணியை ஆதரிப்பதாக, எனது தந்தை என்னைக் கண்டித்தார்

எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்த என்னாலேயே, எவ்வாறு ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், வெற்றி பெற வாய்ப்புள்ள திசையை எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டினார்? என்பதை விளங்கிக்கொள்ள முடியாத;

மார்க்சிய  லெனினிய பெரியாரியல் புலமையாளனாகவே நான் வாழ்ந்து வந்தேன்.

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்' ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, .வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும்.

அத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சமூக வண்ணக் குருட்டு நோயில் (Social Colour Blindness) சிக்கி பலர் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் பயணித்து வருவதைக் கண்டுபிடித்தேன்.

அண்மையில் நான் வெளியிட்ட ‘ 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் புத்தகத்தினை இரு சாராரிலும் 'தீண்டத்தகாத' புத்தகமாகக் கருதி வருவதானது, அந்த நோயின் வலிமையை எனக்கு உணர்த்திய 'சமூக சிக்னல்' ஆனது

அதனைத் தொடர்ந்து, நான் வெளியிட்ட கீழ்வரும் பதிவானது, அறிவு ஜீவிகள் மத்தியில் என்னைக் கேலிப்பொருளாக்கினாலும் வியப்பில்லை.

‘'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களின் வசமாகும் ...தி.மு.?’; 

மைக்ரோ உலகத்தில் உள்ள 'தனிநபர் நம்பிக்கை'யானது (personal trust), எவ்வாறு மேக்ரோ உலகத்தில் 'சமூக நம்பிக்கையாக'(Social Trust) சரியான திசையில் பயணித்து சமூகத்தை வளர்க்கும்? என்பது தொடர்பான ஆய்வுகளையும் ஏற்கனவே விவாதித்துள்ளேன்.

சிலப்பதிகாரம் (அரங்கேற்று காதை) இசையில் 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' என்ற நுட்பத்தினைச் சுட்டிக்காட்டியது. அதனை சமூக இயக்கவியல் (Social Dynamics) தொடர்புள்ள சமூக செயல்நுட்பமாக நான் அடையாளம் கண்டேன்.  

அரைகுறை படிப்பறிவிருந்த பெரும்பாலான எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமிருந்து வித்தியாசமாக முதுநிலை (M.Sc-Physics) பட்டம் பெற்ற எம்.ஜி.ஆர் ரசிகரான தி.மு. ஆதரவாளராகநான் இருந்தேன். அந்த வகையில் எனக்குக் கிடைத்த உள்ளீடுகள் (inputs) எல்லாம், எந்த நூலகத்திலும் கிடைக்க வாய்ப்பில்லாதவை ஆகும். 

ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் மனங்களில் உள்ள தேவைகளும்(needs), அத்தேவைகளின் அடிப்படையில் எழும் ஈடுபாடுகளும்(interests), அவற்றின் அடிப்படையில் வெளிப்படும் செயல்பாடுகளும், அந்த சமூகத்தில் உள்ள மனிதர்களின் ரசனையைத் தீர்மானிக்கும். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_22.html

தாம் வாழ்கின்ற இடத்தில், பணியாற்றுகின்ற இடத்தில் வெளிப்படும் அநீதிகளை எதிர்க்கும் சமூக முதுகெலும்பின்றி பயணிப்பவர்களின் ரசனைக்குத் தீனி போடும் எழுத்தாளர்கள் எல்லாம், ஒருவகை போதை எழுத்து வித்தையில் சிறந்த எழுத்துக்கலைக் கூத்தாடிகளே ஆவார்கள். 

கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் எழுத்து மூலமாக ஆட்சியைப் பிடித்தவர்களின் பொதுவாழ்வு வியாபாரமானது, தற்போதுள்ளமலட்டுத்தனமான ரசனையானது நீடிக்கும் வரையில் தான் நீடிக்கும். இன்று அந்த ரசனையில் மிதப்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 50 வயதைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரிகளிடம் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. 

எம்.ஜி.ஆர் ரசிகர்களை கேலி செய்து எழுதி பாராட்டப் பெற்ற ஜெயகாந்தன் தமது கடைசி காலத்தில் கருணாநிதியின் அடிவருடி ஆனார். அவரை ஏற்கனவே பாராட்டியவர்கள் எல்லாம், அதற்காகஅவரைக் கேலி செய்யவில்லை.

நானறிந்தவரையில் (1967க்கு முன் தி.மு.கவிலும்) எம்.ஜி.ஆரைக் கேலி செய்தவர்களும் சிவாஜி ரசிகர்களாகப் யணித்தவர்களிலும் பெரும்பாலோர்,  சமூக முதுகெலும்பு முறிந்த சுயநலபுத்திசாலிகளாக’(?) வெளிப்பட்டார்கள். 

தி.மு.கவை கருணாநிதி தமது குடும்பக் கட்சியாக மாற்ற முடிந்ததற்கு அத்தகையோரும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும்; 

அதற்கு எதிரான போக்கானது எம்.ஜி.ஆர் மூலமாக வெளிப்பட்டு, எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அந்த குடும்ப அரசியல் வீழ்ந்து கிடந்ததற்கு, எம்.ஜி.ஆர் ரசிகர்களும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும்னது ஆய்வு முடிவாகும். 

எழுத்தாளர் ஜெயகாந்தன் எந்த அளவுக்கு சமூக முதுகெலும்பு முறிந்த எழுத்தாளராக வாழ்ந்தார்? அதை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

எனவே ...தி.மு.கவில் எண்ணிக்கையில் வளர்ந்து  வரும் எம்.ஜி.ஆர்களை ஆதரிக்கும் துணிச்சல் உள்ள புலமையாளர்கள் எல்லாம் கேலிக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. 

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் பாதையில் இருந்து தடம் புரண்டு, புலமையாளர்களின் வழிகாட்டுதல் இன்றி, சசிகலா குடும்பச் சிறையில் சிக்கியதே ஜெயலலிதாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக முடிந்தது. வெளியில் தெரிந்தும் தெரியாத பரிமாற்ற உறவுடன், சசிகலா - கருணாநிதி குடும்பங்களின் கூட்டு அபாயமானது, அச்சுறுத்தும் வகையில் ('சமூக சோளக்கொல்லை பொம்மை' என்பது நிரூபணமாகும் வரையில்) நீடிக்கிறது. தி.மு. ஆதரவு மேடைகளில் முழங்கிய ஒரு கவிஞர் தமக்கு நெருக்கமான நண்பரிடம் தெரிவித்த தகவலானது, என்னை வியப்பில் ஆழ்த்தியது. தி.மு. தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், அவரால் தமிழ்நாட்டிற்கு விளைந்த கேடுகளை புத்தகமாக வெளியிட தேவைப்படும் தகவல்களை எல்லாம் அவர் தொகுத்து வைத்துள்ளாராம். அநேகமாக அடுத்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு. ஆர்.கே.நகர் பாணித் தோல்விகளைச் சந்தித்தால், அது போன்ற பல புத்தகங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. 

இந்தியாவையும், தமிழ்நாட்டையும் யார் ஆண்டாலும், தமிழ்நாட்டில் 'புலமையாளர்கள்' என்ற முத்திரை பெற வேண்டுமானால், இடதுசாரி முகாம்கள், போன்ற 'முற்போக்கு' முகாம்களின் அங்கீகாரம் வேண்டும். இல்லையென்றால், 'பார்ப்பன அடிவருடி, சங்கி, பிற்போக்கு' என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவார்கள். அது மட்டுமல்ல, அத்தகையோர் 'பெரியார்' ஆதரவு அறிவுஜிவிகளை எல்லாம்,,தம்மை விட தாழ்ந்த அறிவுஜீவிகளாகவே கருதுவார்கள். அந்த தாழ்வு மனப்பான்மையில் விடுதலை இராசேந்திரன் போன்ற அறிவுஜீவிகள் பயணித்ததாலேயே, M.S.S பாண்டியனின் எம்.ஜி.ஆர் ஆய்வு தொடர்பானதொடர்பான எனது விமர்சனத்தில் இருந்து, M.S.S பாண்டியன் தப்பிக்கும் வகையில் வாழ்ந்தார்கள். அதற்கான உதாரணங்களையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.

1994-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் பணியாற்றிய தொடக்க காலத்தில்.  திருவான்மியூரிலிருந்த 'விடுதலை' ராசேந்திரன் இல்லத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது ஒரு முறை அவர்   M.S.S  பாண்டியனை தமக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லி அறிமுகப்படுத்தி, அவரின் '‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பின் அதைப் படித்த போது, அதில் கீழ்வரும் தவறுகள் என் கண்களில் பட்டன.

1. எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் தவறான புரிதல்கள்

2. நீதிக்கட்சி, தி., தி.மு.கவில் அண்ணா காலம், கருணாநிதி காலம், எம்.ஜி.ஆரின் . .தி.மு. ஆட்சிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பற்றிய தவறான புரிதல்.

உதாரணமாக , எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆசிரியர்கள் உள்ளிட்டு பல தரப்பினரும் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக M.S.S பாண்டியன் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். (“Snuffed out even the mildest form of dissent from the working people, whether they were workers, poor peasants,or professionals, such as school teachers, and government employees”(page 12, The Image Trap)

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்று 3 முறைகளுக்கு மேல் நான் சிறை சென்றுள்ளேன். எம்.ஜி.ஆருக்கு முன் கலைஞர் ஆட்சியில் பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவில் போராடி, சிறை சென்றனர். M.S.S பாண்டியன் தெரிவித்துள்ள கருத்தானது, அந்த கலைஞர் ஆட்சியில் நடந்த  பள்ளி ஆசிரியர்கள்  போராட்டத்திற்கே பொருந்தும், என்பதும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராட்டங்கள் அந்த கலைஞர் பாணியில் ஒடுக்கப்படவில்லை என்பதோடு, நாங்கள் பங்கேற்ற போராட்டங்களும், இட ஒதுக்கீட்டில் 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து, தி. உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெற்ற வெற்றிகளை , கலைஞர் ஆட்சியில் பெற்றிருக்க முடியாது. எளிதில் அப்போராட்டங்கள் கலைஞர் ஆட்சியில்  ஒடுக்கப்பட்டிருக்கும்.

மேலேக் குறிப்பிட்டுள்ளது போல், பல தவறுகள் அப்புத்தகத்தில் நான் கண்டுள்ளதாக‌, விடுதலை ராசேந்திரனிடமும், M S S பாண்டியனிடமும் தெரிவித்து, அவை பற்றி நான் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்தேன்.  M S S பாண்டியன் அதில் ஆர்வம் காட்டாததோடு, அதன்பின் என்னுடன் பேசுவதையும் தவிர்த்தது , அப்போது ( அவருக்கு வயது என்னை விட குறைவு) அதை ஒரு  immature act ஆகக் கருதி விட்டு விட்டேன். ஆனால் அவரின் மறைவிற்குப்பின், அவரைப் பற்றி இதழ்களில் வெளிவந்துள்ள புகழுரைகளில், அந்த ‘The Image Trap’ ' என்ற புத்தகமே, அவரின் புலமைக்கு பெரும் சான்றாக போற்றப்பட்டுள்ளது

ஆக கடந்த 20 வருடங்களாக அந்தப் புத்தகத்தில் உள்ள அபத்தமான தவறுகளை, என்னைத் தவிர, வேறு யாரும் சுட்டிக் காட்டவில்லை. அப்படி நான் சுட்டிக் காட்டினாலும் தமிழ்நாட்டில் அதை யாரும் கண்டு கொள்ள வாய்ப்பில்லை, என்பதும் எனது அனுபவமாகும். அந்த அளவுக்கு இடதுசாரி முகாம்கள், போன்ற 'முற்போக்கு' முகாம்களின் ஆதிக்கத்தில் புலமைத் தற்குறிப் போக்கில் தமிழ்நாடு பயணித்து வந்துள்ளது.(‘'அறிவுபூர்வ விவாத வறட்சியில்', 'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்’;http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html)

'‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தையே ஆதாரமாகக் கொண்டு, .வெ.ரா மற்றும் அண்ணா புரிந்த தவறுகளை எல்லாம் பொதுவாழ்வு வியாபாரத்திற்கான மூலதனமாக்கி,  M.S.S பாண்டியன் போன்ற அறிவு ஜீவிகளை எல்லாம் 'மயக்கி', தி.மு. குடும்ப அரசியல் நலன்களுக்காக, மு.கருணாநிதி எவ்வாறு தமிழ்நாட்டைக் காவு கொடுத்தார்? என்பதை விளக்கி

ஒரு புத்தகம்' எழுத முடியும். ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் (pannpadini@gmail.com), நான் அதற்கு உதவ முடியும்

பள்ளியில் கல்லூரியில் படித்த காலத்திலும், பணியாற்றிய பணியாற்றும் இடங்களிலும் எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல், புத்தகங்களையும் புள்ளி விபரங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திராவிடர், திராவிடக்கட்சிகளை 'மார்க்சிய'(?) அணுகுமுறையில் ஆராய்ச்சி செய்து வெளிவந்துள்ள அபத்தங்களை எல்லாம்;

திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், கடும் உழைப்புடனும் இளம் ஆராய்ச்சியாளர்கள் முயன்று மேற்குறிப்பிட்ட நூல் வெளிவருமானால்;

...தி.மு.கவில் எண்ணிக்கையில் வளர்ந்து  வரும் எம்.ஜி.ஆர்-களை ஆதரிக்கும் துணிச்சல் உள்ள புலமையாளர்கள் எல்லாம் கேலிக்குள்ளாகும் அபாயத்திற்கு இடம் இருக்காது.

அது மட்டுமல்ல, அந்த 'ஆதரவானது' எவ்வாறு ...தி.மு.கவில் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆரின் கூறுகளை யார், யார், எந்தெந்த அளவில் வெளிப்படுத்தி வருகிறார்கள்? அந்தந்த அளவில் அவர்களை எவ்வாறு ஆதரிப்பது? அதன் மூலம் உருவாகும் சமூக ஆற்றல்களைக் கொண்டு, சாதி மத பாரபட்சமின்றி, ஊழலுக்கு இடமின்றி வளர்ச்சி நோக்கிய திசையில் தமிழ்நாடு பயணிப்பதற்காக, நமது பங்களிப்பினை எவ்வாறு அதிகரிப்பது?

என்பது போன்ற கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும்.

அறிவியலின் அடுத்த கட்டம் தொடர்பாக வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்களைப் போல, உயிரணு ஆராய்ச்சிகள் மூலமாக‌, .வெ.ரா அவர்கள் இன்று உயிருடன் வந்து, 'பெரியார் புழுதிகளைக்' கண்டு கோபமுற்று ஒழிக்க முற்படும்போது, என்னென்ன சவால்களை சந்திப்பார்? அதன் உச்சக்கட்டத்தில் ராஜாஜியின் துணையுடன் அதனை எவ்வாறு வெற்றி கொள்வார்? என்ற நகைச்சுவை மிகுந்த திரைக்கதை உருவாக்கும் எண்ணம் எனக்கிருப்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/03/2.html)


குறிப்பு:


தி.மு.கவின் குடுமி பிரசாந்த் கிஷோரின் கையில். சசிகலாவின் குடுமி சுப்பிரமணிய சுவாமியின் கையில். 

...தி.மு.கவின் குடுமி மோடியின் கையில் என்பது உண்மையானால், கீழ்வரும் நல்லாட்சிக்கும் மோடியே காரணமாவார்.

முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட அதிக ஊழல் இப்போது இல்லை. துணைவேந்தர்கள் பதவிகளின் ஏலம் ஒழிந்தது மட்டுமின்றி, சர்விஸ் கமிசன் ஊழல் குற்றங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகி, ஏற்கனவே இருந்தஊழல் குறையும் போக்கும் வெளிப்பட்டு வருகிறது. லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளைக் காப்பாற்றி வந்த வலைப்பின்னல்கள் எல்லாம் பலகீனமாகி வருகின்றன. அதிக லாபம் தரும் தொழில் சினிமா அபகரிப்பு ஆபத்தும் இப்போது இல்லை. கொலை அச்சுறுத்தல் மூலமாக தனியார் சொத்து அபகரிப்பும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த தாங்க முடியாத மின்வெட்டு இப்போது இல்லை.

கருணாநிதி முதல்வராக இருந்த போது கீழடி தடயம் வெளிப்பட்டும், இந்த ஆட்சியில் தான் அகழாய்வு நடைபெற்று வளர்ந்து வருகிறது. தொல்லியல் துறைக்கு அதிக ஒதுக்கீடு புதிய அருங்காட்சியகங்கள். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்; நேர்மையான அதிகாரிகள் செயல்பட இருந்த தடைகள் குறைந்து வருகின்றன. மக்கள் போராட்டங்கள் மனிதாபிமனத்தோடு அணுகப்படுகின்றன.

கோவையில் குடிபோதைக்காரனால் விபத்தில் மனைவியை பறி கொடுத்த மருத்துவர் ரமேஷ் போராட்டம் தொடங்கியவுடனேயே காவல் துறை துணையுடன் பிணத்தை வலுக்கட்டாயமாகமருத்துவ மனைக்கு அனுப்பி. தடியடி மூலம் கூட்டத்தை கலைத்து, ஊடகங்களில் அந்த செய்தி வெளியாவதும் தடுக்கப்பட்டிருக்கும். விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடை அகற்றப்பட்டிருக்காது, முக ஜெஜெ ஆட்சிகளில். மீண்டும் திமுக, சசிகலா பிடியில் தமிழ் நாடு சிக்குவது, அக்கேடுகள் திரும்ப வழி வகுக்கும்.’
(http://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_12.html)

துக்ளக் வாசகரான ரஜினியின் பார்வையில் கீழ்வரும் தகவல் இடம் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

'ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட, அவர் விருப்பப்படும் நாட்களில் மட்டுமே கோட்டைக்கு வருவார்; விருப்பப்படும் நேரத்தில் மட்டுமே கோப்புகள் பார்ப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நாள் தவறாமல் கோட்டைக்கு வருவதுடன், தினசரி கோப்புகள் பார்க்கிறார். முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு ஃபைல் போனால் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் அப்ரூவாகி வந்து விடும் என்று உற்சாகமாக சொல்கிறார் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு ..எஸ். அதிகாரி. 

அரசியலில் ஒருபுறம் சிறப்பாக சமாளித்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஒரு முதலமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவே பெரும்பாலான ..எஸ். மற்றும் .பி.எஸ். அதிகாரிகள் கருத்து கூறுகிறார்கள். இந்தக் கருத்து கீழ்மட்ட மக்கள் மத்தியிலும் சென்று சேர்ந்தால், அது .பி.எஸ்.ஸின் சிறப்பான வெற்றியாக அமையும்.' – துக்ளக் 13-3-2020 

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் செயல்பூர்வமாக சிங்கப்பூர் அரசு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. அது போலவே, உலகச் சுகாதார அமைப்பே புகழும் வகையில் இந்தியா செயல்படுகிறது.

(https://www.livemint.com/news/india/who-praises-india-s-impressive-commitment-to-combat-coronavirus-11584456975670.html). 

கல்வியிலும், சுகாதாரத்திலும் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாடானது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் முன்னணி மாநிலமாகி வருகிறது


.பி.எஸ் ஆட்சியில் தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் பெற்று வரும் முன்னேற்றங்களும், மாணவர் சேர்க்கைகளில் அதிகரிப்பும், காமராஜர் ஆட்சியுடன் போட்டி போடும் சாதனைகளாகி வருகின்றன.



சசிகலா குடும்பப்பிடியிலும், கருணாநிதி குடும்பப்பிடியிலும் தமிழ்நாடு சிக்காத வகையில், கணிக்க முடியாத தேர்தல் சூறைக்காற்றினைக் கிளப்பி, ஆர்.கே.நகர் தேர்தல் முதல் இன்று வரையில், அரசியல் அமாவாசைகளின் புரட்சியில் சிக்கிய‌ கட்சிகளைக் கையாண்டு வரும் சாமான்யர்களும், எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டிய திசையில் தமிழ்நாடு பயணிக்க வழி செய்து வரும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களுமே, மோடியை விட, .பி.எஸ்‍-ஸை விட, மேற்குறிப்பிட்ட சாதனைகளுக்கான கதாநாயகர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment