Monday, March 16, 2020

மக்களின் எழுச்சி ரஜினியின் பார்வைக்கு எப்போது வரும்?(2)



'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களின் வசமாகும் ...தி.மு.?



தாம் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக சந்தித்துள்ள சிக்கலைக் கீழ்வருமாறு ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.

மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்; இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்பதை, நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம். வாழ்வா, சாவா என்ற நிலை. பணபலம், ஆள்பலம் கட்டமைப்பு என, உள்ளனர். எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளனர். இன்னொரு பக்கம் கையில், ஆட்சியோடும், அந்த குபேரனோடும் கஜானாவையே கையில் வைத்துள்ளனர். நிறைய கட்டமைப்போடு காத்திருக்கின்றனர். இதற்கு நடுவில், ரசிகர்களையும், சினிமா புகழை மட்டும் வைத்து ஜெயிக்க முடியுமா? இந்த கொள்கைகளை சொன்னால், அது எடுபடவில்லை என்றால், உங்களை எல்லாம், நான் பலிகடா ஆக்குவது தானே அர்த்தம்.’ (https://www.dinamalar.com/news_detail.asp?id=2500378)

தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சமூக ஆற்றல்களில் உள்ள பண்பு வேறுபாடுகள் தொடர்பாக, ரஜினிக்கு அவரின் ஆலோசகர்கள் தெளிவுபடுத்தவில்லையா? என்ற கேள்வியை மேற்சொன்ன ரஜினியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு. கட்சிக்காரர்களுக்கும், ...தி.மு. கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாடானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அதற்கான காரணத்தை, சில மாதங்களுக்கு முன் நான் சந்தித்த, தி.மு. தலைவர் 'கலைஞர்' மு.கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் தெளிவு படுத்தினார் ( சற்று கோபத்துடனேயே).

ஆட்சியில் இருக்கும் போது, 'சம்பாதித்த'(?) பணத்தை, தி.மு. காரன் தனக்கே வைத்துக் கொள்கிறான். ஆனால் ...தி.மு. காரனோ கிராமத்தில் மற்றவர்களுக்கும் உதவி, தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை அந்த கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணுகிறான்.' என்ற வகையில், அவர் தெளிவுபடுத்தினார்

அது போலவே, பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) புறத்தில் 'கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு' என்று 'காட்சி' தந்து, அகத்தில் 'கடவுள் பக்தி', சாதி 'வெறி'யுடன் வாழ்பவர்களில், ஒப்பீட்டளவில் தி.மு.கவினர் அதிகமாகவும், ...தி.மு.கவினர் குறைவாகவும் உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது 'திராவிட' அரசியலில், தமிழ்நாட்டில் இன்று உச்சத்தில் உள்ள அரசியல் நீக்கம் (Depoliticize) போக்கில், 'தனிநபர் விசுவாசம்' என்ற சமூக செயல்நுட்பமானது, மேல் மட்டத்திலிருந்து, கிராமம் வரையிலான கீழ் மட்டம் வரை, செயல்படும் போக்கில், வெளிப்பட்டுவரும் சமூக ஆற்றல்களில் (Social Energy)  தி.மு.கவிற்கும், ...தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (‘சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், ...தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? தமிழகத்தைகாவி மயமாக்க’(?) முடியாதா?’; 

ரஜினியின் ஆலோசகர்களாக வெளிப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தமிழருவி மணியனுக்கு அந்த வேறுபாடு தெரியாதா? என்ற கேள்வியை கீழ்வரும் தகவல் எழுப்புகிறது.

'தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய .தி.மு.. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார் தி.மு.., .தி.மு..வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு..,.தி.மு..வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்துவைக்கமாட்டார்.’ - தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் அறிவிப்பினை ஆராய்ந்தால்,   ரஜினியின் கட்சி கானல் நீரா?’;

வைகோதான் முதல்வராக வேண்டுமென்று நினைத்தேன், இதை ரஜினியிடமே கூறியிருக்கிறேன் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.

சசிகலாவை 'வீரமங்கை வேலு நாச்சியார்' என்று பாராட்டிய வைகோவை, ரஜினி மூலமாக முதல்வராக்கி, மீண்டும் சசிகலா குடும்பத்தில் தமிழ்நாடு சிக்குவதற்காகவே தமிழருவி மணியன் பாடுபடுகிறாரா?  வைகோ பற்றிய அடியில் உள்ளகுறிப்பினைப் படித்தால், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினிக்கு எந்த அளவுக்கு அபாயகரமான ஆலோசகர்கள்? என்பது தெளிவாகும். துக்ளக் சோ மறைந்த பின் தான், இது போன்ற ஆலோசகர்கள் ரஜினிக்கு வாய்த்திருப்பார்கள், என்பது எனது யூகமாகும். வைகோவை விட பன்மடங்கு திறமைசாலியான முதல்வர் .பி.எஸ் என்பது எனது கருத்தாகும்.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், முதல் முறையாக கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் பிடியில் இருந்து விலகிய ஆட்சியானது, தற்போது நடைபெற்று வருகிறது

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், தமிழ்நாட்டில் முதல் முறையாக குடும்பங்களின் பிடியில் இருந்து விலகிய ஆட்சி நடைபெறுகிறது என்பதும்;

தி.மு. மற்றும் ...தி.மு. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சமூக ஆற்றல்களில் உள்ள பண்பு வேறுபாடுகள் இருப்பதும்;

பற்றிய உண்மையான தகவல்கள் எல்லாம் ரஜினியின் பார்வைக்கு சென்றதாகத் தெரியவில்லை. அது போலவே, கீழ்வருவதும் அவரின் பார்வைக்கு சென்றதாகவும் தெரியவில்லை.

முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட அதிக ஊழல் இப்போது இல்லை. துணைவேந்தர்கள் பதவிகளின் ஏலம் ஒழிந்தது மட்டுமின்றி, சர்விஸ் கமிசன் ஊழல் குற்றங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகி, ஏற்கனவே இருந்தஊழல் குறையும் போக்கும் வெளிப்பட்டு வருகிறது. லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளைக் காப்பாற்றி வந்த வலைப்பின்னல்கள் எல்லாம் பலகீனமாகி வருகின்றன. அதிக லாபம் தரும் தொழில் சினிமா அபகரிப்பு ஆபத்தும் இப்போது இல்லை. கொலை அச்சுறுத்தல் மூலமாக தனியார் சொத்து அபகரிப்பும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த தாங்க முடியாத மின்வெட்டு இப்போது இல்லை

கருணாநிதி முதல்வராக இருந்த போது கீழடி தடயம் வெளிப்பட்டும், இந்த ஆட்சியில் தான் அகழாய்வு நடைபெற்று வளர்ந்து வருகிறது. தொல்லியல் துறைக்கு அதிக ஒதுக்கீடு புதிய அருங்காட்சியகங்கள். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்; நேர்மையான அதிகாரிகள் செயல்பட இருந்த தடைகள் குறைந்து வருகின்றன. மக்கள் போராட்டங்கள் மனிதாபிமனத்தோடு அணுகப்படுகின்றன

கோவையில் குடிபோதைக்காரனால் விபத்தில் மனைவியை பறி கொடுத்த மருத்துவர் ரமேஷ் போராட்டம் தொடங்கியவுடனேயே காவல் துறை துணையுடன் பிணத்தை வலுக்கட்டாயமாகமருத்துவ மனைக்கு அனுப்பி. தடியடி மூலம் கூட்டத்தை கலைத்து, ஊடகங்களில் அந்த செய்தி வெளியாவதும் தடுக்கப்பட்டிருக்கும். விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடை அகற்றப்பட்டிருக்காது, முக ஜெஜெ ஆட்சிகளில். மீண்டும் திமுக, சசிகலா பிடியில் தமிழ் நாடு சிக்குவது, அக்கேடுகள் திரும்ப வழி வகுக்கும்.’ 

துக்ளக் வாசகரான ரஜினியின் பார்வையில் கீழ்வரும் தகவல் இடம் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

'ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட, அவர் விருப்பப்படும் நாட்களில் மட்டுமே கோட்டைக்கு வருவார்; விருப்பப்படும் நேரத்தில் மட்டுமே கோப்புகள் பார்ப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நாள் தவறாமல் கோட்டைக்கு வருவதுடன், தினசரி கோப்புகள் பார்க்கிறார். முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு ஃபைல் போனால் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் அப்ரூவாகி வந்து விடும்என்று உற்சாகமாக சொல்கிறார் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு ..எஸ். அதிகாரி.

அரசியலில் ஒருபுறம் சிறப்பாக சமாளித்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஒரு முதலமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவே பெரும்பாலான ..எஸ். மற்றும் .பி.எஸ். அதிகாரிகள் கருத்து கூறுகிறார்கள். இந்தக் கருத்து கீழ்மட்ட மக்கள் மத்தியிலும் சென்று சேர்ந்தால், அது .பி.எஸ்.ஸின் சிறப்பான வெற்றியாக அமையும்.' – துக்ளக் 13-3-2020

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் செயல்பூர்வமாக சிங்கப்பூர் அரசு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
கீழ்வரும் செய்தி செயல்வடிவம் பெறும் போது, தமிழக அரசும் அந்த வகையில் சிறப்பான அரசாக வெளிப்படவும் வாய்ப்பிருக்கிறது.
 
"தான் பதவிக்கு வர விரும்பவில்லை" என்று ரஜினி தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு,

"நல்லா தானே சொல்லிருக்காரு. இதை வரவேறுங்க"

என்று வடிவேலு கீழ்வரும் காணொளியில் தெரிவித்துள்ளார்.

தமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, எங்கிருந்தும் நல்லவைகள் வெளிப்பட்டால் வரவேற்பது;

என்பது நல்ல மனநிலையில் வாழ்பவர்களுக்கே எளிதாகும். வெறுப்பு அரசியலில் சிக்கியவர்களுக்கு அது அரிதாகும்

தாம் ஆதரிக்கும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களில்,

மேற்குறிப்பிட்ட நல்ல மனநிலையில் உள்ளவர்கள், ஒப்பீட்டு அளவில், ...தி.மு.கவில் அதிகம் என்பதும், தி. மற்றும் தி.மு. ஆகிய கட்சிகளில் குறைவு என்பதும்;

எனது அனுபவமாகும். அதுவும் கடந்த சில வருடங்களில் மாறத் தொடங்கியுள்ளது. மோடி பிரதமரான பின் வெளிப்பட்ட நல்லவைகளை ஆதரித்து, 'பெரியார்' ஆதரவாளர் ஒருவர் கீழ்வரும் கருத்தினை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பிஜேபியின் பயோமெட்ட்ரிக் அட்டடென்ஸ் சிஸ்டம் டெல்லி அரசு அலுவலர்களை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறது.

என்னுடைய (எனதுநாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்த நேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை.

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!! 

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும்.

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.

தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்திற்கான அலை உருவாக வேண்டுமானால், அதற்கு பங்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறையும் அதுவேயாகும்.

முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து 'மர்மமான' முறையில் அப்போல்லோ சென்று, மர்மமாகவே பல மாதங்கள் சிகிச்சை பெற்று மர்மமாகவே மரணித்தது மட்டுமின்றி;

போயஸ் கார்டனில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள் செயல் இழக்க, முதல்வரின் உடல்நலக் குறைவு தொடர்பான அரசு அமைப்புகள் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது முதல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு வரை, சட்டத்தின் நெறிமுறைகளும் சம்பிரதாயத்தின் நெறிமுறைகளும் ஏன் காற்றில் போனது

என்பது போன்ற கேள்விகளை கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டு தமிழ்நாட்டு முதல்வர் நாற்காலிகளில் அமர ஆசைப்படும் எவரும் இதுவரை எழுப்பவில்லை? இனியும் எழுப்பவில்லை என்றால், அவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் அது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளும், ஆட்சியில் இருப்பவர்களை அடிவருடிப் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர்களும் எழுப்பி ஊடக வெளிச்சத்திற்கு வராத அரசியல் புரட்சியைத் துவக்கி வளர்த்து வருகிறார்கள். அதன் தொடர்விளைவாகவே, கீழ்வரும் திருப்பமும் வெளிப்பட்டது.

1944இல் முளைவிட்ட  சமூகநோயின் உச்சக்கட்ட வெளிப்பாடான சசிகலா நிகழ்வானது (Sasikala Phenomenon), 'ஆரிய - திராவிட' துணையுடன் வெளிப்பட்டுள்ளதும்;

அந்த பொதுவாழ்வு நோயினை குணப்படுத்தும் மருந்தாக, 'ஓபிஎஸ் நிகழ்வானது' (OPS PHENOMENON), அந்த நோயின் உச்சக்கட்டத்தில் வெளிப்பட்டுள்ளதும்;

தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கையூட்டும் அதிசயமாகும்
(‘நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட’; 

.பி.எஸைத் தொடர்ந்து, முதல்வர் .பி.எஸ்ஸும் சசிகலாவின் பிடியில் இருந்து விலகி, அதன் தொடர்விளைவாக ஒன்று சேர்ந்துள்ளார்கள். அந்த ஒற்றுமையுடன் ஜெயலிதாவின் பாணியில் பயணித்தாலேயே விக்கிரவாண்டியிலும் நாங்குநேரியிலும் பிரமிக்கவைக்கும் வெற்றிகளை ஈட்டினார்கள். 

இனி அரசியலில் ...தி.மு. நிலைக்க வேண்டுமானால், எம்.ஜி.ஆர் காட்டிய திசையிலேயே தான் பயணித்தாக வேண்டும். அதற்கான காரணம் வருமாறு:

தி.மு.கவின் குடும்ப அரசியலை ஒழிக்க, தமிழக மக்கள் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசால் முடியாது என்று முடிவு செய்தே, எம்.ஜி.ஆரின் கட்சியை திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி மூலமாக அடையாளம் காட்டினார்கள். அந்த திசையில் பலமையாளர்கள் துணையின்றி தடம் புரண்டு பயணித்ததாலேயே ஜெயலலிதா மர்மமாக மரணித்து, எம்.ஜி.ஆரைப் போல தமது சொத்துக்களை மக்கள் பலன் பெறும் வகையில் செட்டில் செய்ய முடியாமல் மறைந்தார்.

சமூகத்தில் வாழும் மனிதர்களை தோற்றுவாயாகக் கொண்டு வெளிப்படும் சமூக ஆற்றல்கள்(Social Energy) எல்லாம்;

எந்த சமூக இயக்கவியல் தொழில்நுட்பத்தில் (Social Dynamics Mechanism) தொகுவிசைகளாக (Resultant Forces) வெளிப்படும்?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

இன்று கருணாநிதி இல்லாத நிலையில், அவரின் தொகுவிசையின் பின்னணியாக இருந்த கூறுகள் வளர்வதானது, தமிழ்நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? அது போல ஜெயலலிதா என்ற தொகுவிசையின் பின்னணியாக இருந்த கூறுகள் வளர்வதானது, தமிழ்நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என்பது தொடர்பான எனது ஆய்வில்;

முந்தையது தமிழ்நாட்டிற்குக் கெட்டது. ஏனெனில் 1967இல் முதல்வரான (கருணாநிதி அரசியல் வாரிசாகும் வகையில் கட்சி நடத்திய) அண்ணா, தமது கட்சியின் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாமல், விரைவில் மரணமடைய விரும்பியதைப் பதிவு செய்துள்ளார். அதனை தமிழ்நாட்டு புலமையாளர்கள் எவரும் விவாதிக்கக் கூட அனுமதிக்காத திசையிலேயே, கருணாநிதி பயணித்தார்.

நல்லவேளையாக, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி உள்ளிட்டு கருணாநிதி குடும்பத்தினரே, கருணாநிதி என்ற தொகுவிசையின் கூறுகளை அதிவேகமாக அழித்து விடுவார்கள்.

பிந்தையது தமிழ்நாட்டின் மீட்சிக்கு உதவக் கூடியது. ஏனெனில் ஜெயலலிதா அரசியல் வாரிசாகும் வகையில் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியானது எவ்வாறு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்ல திசையைக் காட்டியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html) 

கருணாநிதி எதிர்ப்பு அலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். இன்று ரஜினி எதிர்பார்க்கும் அலை யாரை எதிர்த்து? தி.மு.க ஸ்டாலினை எதிர்த்தா? சசிகலாவை எதிர்த்தா? இருவரையும் செல்லாக்காசாக்கி ஆட்சி செய்யும் ஈபிஎஸ்‍ -ஓபிஎஸ்ஸை எதிர்த்தா? எம்.ஜி.ஆர் முன்னெடுத்த கருணாநிதி எதிர்ப்பு அலையின் பணி முடியாமல், அடுத்த அலைக்கு சாத்தியம் உண்டா? 

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலா குடும்ப அரசியல் செல்வாக்கில், அனைத்து கட்சிகளும், ஊடகங்களும் கோழைகளான நிலையில், ...தி.மு.வில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளே 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களாக வளர்ந்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் தொடர்பான கீழ்வரும் செய்தியும் கவனிக்கத் தக்கதாகும். 
 
2011இல் முதல்வர் ஜெயலலிதா சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து துரத்தி, அவரையும், நடராஜனையும், மற்ற அவரது 12 உறவினர்களையும் ...தி.மு. கட்சியில் இருந்தும் துரத்தினார். கட்சித் தொண்டர்கள் அதனைப் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்

ஜெயலலிதாவின்மர்ம‌’ மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும்; தமிழ்நாட்டின்  சமூக அதிர்ச்சி வைத்தியமா?
என்ற பதிவில் கீழ்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின், பா.. ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பலதலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்தகட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு. அமாவாசைகளின் கட்சியாகி விட்டதை உணர்ந்து ஸ்டாலின் பயணிக்கத் தொடங்கி விட்டாரா? என்ற கேள்வியைக் கீழ்வரும் செய்தி எழுப்பியுள்ளது.

'அரசியல் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட, பிரசாந்த் கிஷோர் கைக்கு, தி.மு..,வின் முழு அதிகாரமும் மாறி வருகிறதோ என்ற சந்தேகம், அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.' 

அதற்கு நேர் எதிராக, ...தி.மு.-வானது, 'எங்க வீட்டுப்பிள்ளை' எம்.ஜி.ஆர்கள் எண்ணிக்கையில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக மாறி வருகிறது. இன்றும் கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்கள் எல்லாம் செல்வாக்குடன் வலம் வருகின்றன.

வெற்றி பெற்ற திரைப்படங்களின் ரசனைகள் தொடர்பான ஆராய்ச்சியில் அரிய சமூக சிக்னல்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

சமூகத்தின் 'சீராக' இருக்க வேண்டியவர்களில், பெரும்பாலோர் சீரழிந்து வரும் போக்கும், அத்தகையோரின் திரை இசை ரசனையானது செல்வாக்கிழந்து வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். அது போலவே, சாதாரண மனிதர்களின், அல்லது முன்பு 'சீரழிந்தவர்களாக' கருதப்பட்டவர்களின் திரை இசை ரசனையான 'கானா' மற்றும் 'குத்து' பாடல்கள் செல்வாக்கு பெற்று வந்தபோக்கும், சீரழிவிலிருந்து தமிழ்நாடு மீண்டு வரும் போக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். 'அந்த' திரை இசை ரசனையிலும் ஆக்கபூர்வமான திருப்பு முனைக்கட்டத்தில் தமிழ்நாடு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்

'ஊதாரியாக' பேர் பெற்றவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும், தனுஷ் கதாநாயகனாக நடித்த படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன். அவர் இயக்கிய மேற்குறிப்பிட்ட 'என்.ஜி.கே' திரைப்படமானது, எம்.ஜி.ஆர் பாணியிலிருந்து எந்த அளவுக்கு விலகி, அநீதியை எதிர்க்கும் தன்னம்பிக்கையை படித்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்? என்ற ஆவலும்;

தமிழில் 'சாபக்கேடான' 'ஹிரோயிச' போக்கிலிருந்து மாறுபட்டு, சாத்தியமான எதிர்ப்பு வழிமுறைகளை அடையாளம் காட்டி, சாமான்யர்களுக்கு போராடும் தன்னம்பிக்கையைக் கூட்டும்? என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது. அது போன்ற திரைப்படங்கள் எல்லாம் வியாபார ரீதியிலும் வெற்றி பெறும் அளவுக்கு, தமிழ்நாட்டில் திரைப்பட ரசனையானது கனிந்து வருகிறது;

மேற்குறிப்பிட செல்வராகவனின் படமானது, 'சாபக்கேடான' 'ஹிரோயிச' போக்கில் சிக்கியதால் தோல்வி பெற்றதா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது. மக்களின் போராட்டத்திற்கும் உரிய முக்கியத்துவம் இடம் பெற்ற 'கத்தி' திரைப்படம் வெற்றி பெற்றதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும். 

தமிழ்நாடு இன்று 'ஹீரோயிச' எம்.ஜி.ஆர் பாணியில் இருந்து விலகி, சுயலாப உள்மறைத் திட்டமின்றி உண்மையான சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆராக வெளிப்பட்டுவரும் காலம் இதுவாகும். 

...தி.மு.கவில் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிகளில் இல்லாத, அடிமட்ட தொண்டர்கள் தான், ஜெயலலிதாவின் மீதுள்ள உண்மையான விசுவாசம் உந்த, தமிழ்நாட்டை மீட்கும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களாக பங்களித்து வருகிறார்கள். நானறிந்தவரையில் அதனை அடையாளம் கண்டு பாராட்டியது துக்ளக் இதழ் (துக்ளக் 23.8.2017 தலையங்கம்) மட்டுமே ஆகும். 
http://tamilsdirection.blogspot.com/2017/08/ )

தொல்காப்பிய பூங்காவில் களைகள்' கண்டுபிடித்த, மறைந்த நக்கீரன் போன்று விதிவிலக்காக செயல்பட்டவர்களையும், பகிரங்கமாக ஆதரிக்கும் 'சமூக முதுகெலும்பு' இல்லாதவர்கள் நிறைந்திருந்ததே;

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கான சமூக செயல்நுட்பத்திற்கு வழி வகுத்தது. அந்த சமூக செயல்நுட்பத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, மீட்சிக்கு வழி வகுக்கும், சமூகத் தூண்டலானது (Social Induction) தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது.

உண்மையாகவும், நேர்மையாகவும், நல்ல சமூக ஒழுக்க நெறிகளுடனும் வாழும் பணக்காரர்களில் பெரும்பாலோர், தமக்கு தொந்திரவு வேண்டாம் என்று அஞ்சி, 'ஊழல்' பெருச்சாளிகளுடன் ' நல்லுறவில்' (?) வாழ்ந்து வருகிறார்கள். அந்த 'நல்லுறவு' என்பதும் சமூக குற்றமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து, திருந்தும் விளைவினை ஏற்படுத்தும் சமூகத் தூண்டலானது (Social Induction);

தமிழ்நாட்டில் கிராமங்களில் அடிமட்டத்தில் முளை விட்டு, மேல் நோக்கி, வலிமையுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டை மீட்கும் அந்த சமூகத் தூண்டலுக்கு, நம்மைப் போன்றவர்கள் எல்லாம், சமூக வினை ஊக்கியாக' (Social Catalyst) வாழ்வதன் மூலம், அந்த மீட்சிக்கு நாம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும். 
(‘தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிர தொடங்கி விட்டது; ஜெயலலிதாவின் மரணம் விளைவித்த 'மெளனப் புரட்சி'; 
http://tamilsdirection.blogspot.com/2017/08/under-current-decisive.html )

இன்று முதல்வர் .பி.எஸ் நினைத்தாலும் தமது கட்சியில் உள்ளூர் செல்வாக்குள்ள ஊழல் பேர்வழிகளை அகற்ற முடியாது; தி.மு. இருக்கும் வரையில். எனவே தமிழ்நாட்டில் தி.மு. இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. தி.மு. இல்லாத தமிழ்நாட்டில் ஊழலைக் காப்பாற்றும் சமூக செயல்நுட்பம் இருக்காது. அதனை நெருக்கடி கால தமிழ்நாடு நிரூபித்திருக்கிறது

முதல்வராக இருந்த கருணாநிதியால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம், கி..பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட பல புமையாளர்களைத் தேடிச் சென்று ஆலோசனைகள் பெற்று, குடும்ப ஊழல் ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை எம்.ஜி.ஆர் விடுவித்தார். அதில் தடம் புரண்டு, தன்மானம் உள்ள புலமையாளர்கள் நெருங்க முடியாதவாறு, ஜெயலலிதா சசிகலாவின் குடும்பச் சிறையில் சிக்கியதே, தமிழ்நாட்டின் ஊழல் சுனாமிக்கும், ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கும் காரணங்கள் ஆகின.

எனவே ...தி.மு.கவில் எண்ணிக்கையில் வளர்ந்து  வரும் எம்.ஜி.ஆர்களை, சுயலாப நோக்கற்ற புலமையாளர்கள் எல்லாம் தாமாகவே முன்வந்து ஆதரிக்க வேண்டும். அதன் வலிமையில் ...தி.மு.கவில் மாற மறுக்கும் அமாவாசைகள் எல்லாம் சமூகக்  குப்பைகளாக ஒதுங்க வேண்டும்.

சசிகலாமற்றும் கருணாநிதி குடும்பங்களின் ஆதிக்கத்தில் 1969 முதல், எம்.ஜி.ஆர் காலம் தவிர்த்து, ஜெயலலிதாவின் மரணம் வரை நிகழ்ந்த அவலங்கள் எல்லாம் தேர்தல் குவியத்தில் வரும். அப்போது ரஜினி எதிர்பார்க்கும் அலையானது நிச்சயம் உருவாகும்.

இமாலய வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரின்  'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துடன் ஒப்பிடும் நிலையில் தமிழ்நாடு இன்று பயணிக்கிறது. அந்தத் திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம்.ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக

'எங்க வீட்டுப் பிள்ளை'யில் கோழையான எம்.ஜி.ஆருக்கு வீரமூட்டியது கிராமப்புறச் சூழலே ஆகும். இன்றும் கிராமப்புற எம்.ஜி.ஆர்கள் மூலமாகவே, நகர்ப்புற கோழை எம்.ஜி.ஆர்களும் வீரர்களாக மாறும் சமூகத் தூண்டல் (Social Induction) அதிசயமும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. முதல்வர் .பி.எஸ் தம்மால் யன்ற அளவுக்கு தமது கிராமப்புற வேர்களுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார். சுயலாப நோக்கின்றி, தன்மானத்துடன் வாழ்வதற்காக இழப்புகளை விரும்பி ஏற்று பயணிக்கும் புலமையாளர்களின் பங்களிப்பானது, அந்த அதிசயத்திற்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst) அமையும். 

No comments:

Post a Comment