தொல்காப்பியத்தின் இசை மொழியியல் (Musical Linguistics); சிலப்பதிகாரத்தின் 'முக்செல்'(MUXEL)
தமிழ் தொடர்பான இயற்கையின் விந்தை
'பெரியார்' கொள்கை ஆதரவாளனாக, சுயலாப நோக்கின்றி பயணித்து வந்து, பின் 'இசையின் இயற்பியல்'
(Physics of Music) குவியத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி, உலக அளவில் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ள கண்டுபிடிப்புகளுடன் நான் தற்போது பயணித்து வருகிறேன்.
ஈ.வெ.ரா அவர்கள் தமது அறிவுவரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி மேற்கொண்ட பிரமிக்க வைக்கும் முயற்சிகள் எல்லாம் எவ்வாறு தமிழர்களின் ஆணி வேர்களையே நோய்களாகக் கருதி அகற்ற முயன்ற ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமான சமூக வைத்தியம் ஆனது? என்பதை எனது மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மூலமாகவே கண்டுபிடித்தேன்.
அவ்வாறு கண்டுபிடித்த பின், பல வருடங்கள் கழித்து ஆங்கிலத்தில் Other
Half of the Coconut: Women Writing Self-Respect History – 2003 by K. Srilata என்ற புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மூவலூர் ராமாமிர்தம்
(1883–1962;https://en.wikipedia.org/wiki/Moovalur_Ramamirtham)
எழுதி 1936இல் வெளிவந்த 'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' என்ற நாவலின் ஒரு பகுதியை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்த புத்தகம் அது.
அதனைப் படித்து முடித்தபின், எனக்குள் ஒரு வெட்க உணர்ச்சியை உணர்ந்தேன். பெரியார் இயக்கத்தில் பயணித்த காலத்தில் எப்படி அந்த தமிழ் நாவலானது எனது படிப்புகளில் இருந்து தப்பியது? திராவிடர்/திராவிட இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு எவ்வாறு ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பத்தின் சூட்சமத்தை அந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து வியந்தேன். அதன்பின் அந்த தமிழ்நாவலை தேடிய முயற்சியில் கடந்த வருடம் அதை விலைக்கு வாங்க முடிந்தது. தமிழ்நாவலை படித்து முடித்தபின் பிரமித்துப் போனேன். அண்ணா, கருணாநிதி உள்ளிட்டு திராவிடர்/திராவிட எழுத்தாளர்களின் நாவல்களில் நான் படித்தவற்றுள் எதையுமே ஒப்பிட முடியாத அளவுக்கு மிக சிறந்த நாவல் அதுவாகும். நிகழ்கால உலக எழுத்தாளர்களில் நான் வியந்த பவுலோ கொயெல்கோ (https://paulocoelhoblog.com/)
போன்று, கடந்த கால எழுத்தாளர்களில் நான் வியந்த வெகு சிலரில் ஒருவர் மூவலூர் ராமாமிர்தம் ஆவார்.
தமிழில் அந்த நாவலை படித்து முடித்த பின் தான், தமிழ்நாடானது எவ்வாறு கவர்ச்சிகர பேச்சில் எழுத்தில் ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பமானது எனக்கு விளங்கியது. ஈ.வெ.ரா மற்றும் திராவிடர்/திராவிட இயக்கம் தொடர்பான எனது பதிவுகள் எல்லாம், அந்த நாவலில்
வெளிப்பட்ட சமூக செயல்நுட்பங்களை விளக்கிய விளக்க உரையாகவே தாமாகவே வெளிப்பட்டு என்னை வியப்பில் ஆழ்த்தின.
அந்த இரண்டு பிரிவுகளையும் தாண்டி, அந்த நாவலில் தேவதாசிகள் பலகீனமான மனிதர்களை எவ்வாறு வீழ்த்தினார்கள்? என்ற சமூக செயல்நுட்பமே எனது கவனத்தினை அதிகமாக ஈர்த்தது. திராவிடர்/திராவிட இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு எவ்வாறு கவர்ச்சிகர பேச்சில் எழுத்தில் ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பத்தின் சூட்சமமானது, அதன் மூலமாக தெளிவானது.
அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் உள்ளிட்டு கல்லூரியில் படித்த தி.மு.க தலைவர்கள் அனைவருக்கும் புகலிடம் கொடுத்தது சென்னை பச்சையப்பன் கல்லூரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ஆகும்.1967க்கு முன் அவை எப்படி இருந்தன? 1967
முதல் எந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, எம்.ஜி.ஆர் ஆட்சி தவிர்த்து, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சிகளில் கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் ஊழல் பெரும்பசிக்கு இரையாகி எந்த அளவுக்கு சீரழிந்தன?
மேற்குறிப்பிட்ட நாவலில் தேவதாசிகளுக்கு புகலிடம் கொடுத்து சிக்கிய பணக்காரர்களாக அந்த இரு கல்வி நிறுவனங்களையும் கருதினால், மேற்குறிப்பிட்ட அந்த நாவலின் முக்கியத்துவம் தெளிவாகும். அதன் அடுத்த கட்டமாக, அந்த இரு கல்வி நிறுவனங்களுக்குப் பதிலாக, தமிழ்நாட்டை கற்பனை செய்தால், தமிழ்நாடானது சீரழிந்த சமூக செயல்நுட்பமும் புரியும்.
அந்த
நாவலில் வெளிப்படும் சீர்திருத்தக்கருத்துக்கள்
இரு
பிரிவுகளாகப் பிரிக்கக்கூடியவை ஆகும்.
'சாதி'
தொடர்பான காலனிய சூழ்ச்சியில் ஈ.வெ.ரா
அவர்கள் சிக்கி முன்வைத்த கருத்துக்கள் முதல் பிரிவாகும்.( http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html) அந்த முதல்
பிரிவின் தொடர்ச்சியாக சமூகத்தில் அரங்கேறி இன்று ஆர்.எஸ்.எஸ்
உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்த்து வரும்
சமூகக்
கேடுகள் இரண்டாவது பிரிவாகும்..
(http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/
http://www.quora.com/What-is-Rashtriya-Swayamsevak-Sanghs-RSS-take-on-casteism-How-is-RSS-trying-to-root-out-the-problem-of-casteism) (http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/
அந்த இரண்டு பிரிவுகளையும் தாண்டி, அந்த நாவலில் தேவதாசிகள் பலகீனமான மனிதர்களை எவ்வாறு வீழ்த்தினார்கள்? என்ற சமூக செயல்நுட்பமே எனது கவனத்தினை அதிகமாக ஈர்த்தது. திராவிடர்/திராவிட இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு எவ்வாறு கவர்ச்சிகர பேச்சில் எழுத்தில் ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பத்தின் சூட்சமமானது, அதன் மூலமாக தெளிவானது.
தொல்காப்பியத்தின் இசை மொழியியல் (Musical Linguistics) மற்றும் சிலப்பதிகாரத்தின் 'முக்செல்' (MUXEL) போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக, மேற்குறிப்பிட்ட சமூகசெயல்நுட்பத்தின் மரணத்திற்காகக் காத்திருக்கின்றன
சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் நான்
(முழுநேரப் பேராசிரியராக - now adjunct Faculty) பணியாற்றிய காலத்தில். மேற்குறிப்பிட்ட ஆங்கில நாவலை எனக்கு அறிமுகப்படுத்தியவர் கணினிவியல் துறையில் பணியாற்றிய பேரா.சந்திரசேகரன் ஆவார். எனது வாழ்வில் நான் சந்தித்த நபர்களில் பாராட்டு புகழ் போன்ற போதைகளில் சிக்காமல், பிரமிக்க வைக்கும் புலமையாளர்களாக வெளிப்பட்ட வெகு சிலரில் அவரும் ஒருவர் ஆவார்.
அவருக்கும் துக்ளக் சோவிற்கும் ஓர் ஓற்றுமை இருப்பதாக நான் அறிகிறேன். இருவருமே நிகழ்காலத்தில் தமிழ் என்றாலே கேவலமான திசையில் பயணிப்பதாக கருதியவர்கள்;
என்பது எனது கணிப்பாகும். ஆனால் அதில் ஒரு வித்தியாசம். தமிழ் நாவல்களை எல்லாம் மீண்டும் மீண்டும் ரசித்து படித்த நபர் சந்திரசேகர் ஆவார்;
தமிழைக் கேலி செய்ய தமது நாடகங்களில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து கிண்டல் செய்தவர் சோ என்பதும் எனது கருத்தாகும்.
சோவும் சந்திரசேகரும் தமிழ் தொடர்பாக, மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியதற்கு கீழ்வருவதே காரணமாகும்.
நானறிந்த வரையில். பொதுவாழ்வு வியாபாரிகளின் ஏகபோகச் சொத்தாக தமிழ் பயன்பட்டு வந்ததே, அதற்கு காரணமாகும்; என்பது எனது கண்டுபிடிப்பாகும்.
சந்திரசேகர் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் பேசுவார். பிராமணர், பிராமணரல்லாதோர் என்ற வேறுபாடின்றி, நான் உள்ளிட்டு, சக பேராசிரியர்கள் அனைவரிடம் இருந்தும் விலகி தனித்தே எப்போதும் இருப்பார். பணியில் சேர்ந்த புதிதில் நானாகவே அவரின் அறைக்கு சென்று பேச முற்பட்ட போதெல்லாம், மிக மிக சுருக்கமாக பேசி, நானாகவே சீக்கிரம் வெளியேறச் செய்து விடுவார்.
பின் எப்படியோ எனது இசை ஆராய்ச்சிகள் பற்றி அறிந்து, அவராகவே என்னைத்தேடி வந்து சந்தித்து, எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரானார். அதன்பின் நாங்கள் இருவரும் தமிழிலேயே தான் உரையாடுவோம். அவர் மூலமாக நான் பெற்ற அறிவுப்பலன்களில் கீழ்வருவது முக்கியமாகும்.
நான் அதுவரை அறிந்திராத, என்னை பிரமிக்க வைத்த 'Fractal
Music'
(http://www.brotherstechnology.com/math/fractal-music.html) பற்றி அறிமுகம் செய்து, அந்த துறையிலும் நான் பயணிக்குமாறு என்னை உற்சாகப்படுத்தினார்.
சிலப்பதிகாரத்தில் உள்ள சான்றுகளின் அடிப்படையில் 'Journal
of Mathematics and Music (SCI Journal)' என்ற ஆராய்ச்சி இதழுக்கு நான் அனுப்பிய ஆய்வுக்கட்டுரையினை சந்திரசேகர் துணையுடன் எழுதினேன். 'நுண்ணொலி'
(Microsound; https://en.wikipedia.org/wiki/Microsound)
என்ற புதிய ஆய்வுத்துறையுடன் தொடர்புடைய ஒரு கண்டுபிடிப்பானது அந்த முயற்சியில் வெளிப்பட்டது. அந்த கண்டுபிடிப்பிற்கு என்ன பெயரிடுவது? என்று அவருடன் விவாதித்தேன். அது
'visual graphics'- இல் உள்ள 'PIXEL' என்பது போல, ஒலியுடன் தொடர்புடையது ஆகும். திடீரென்று அவர் அதற்கு தெரிவித்த பெயர் என்னைப் பிரமிக்க வைத்தது. 'MUXEL'
என்பது அவர் வழங்கிய பெயராகும். 'visual
graphics'- இல் உள்ள '
PIXEL' என்பது போல, இசை தொடர்பான 'aural
graphics' இல் அக்கண்டுபிடிப்பானது முக்கிய பங்கு வகிக்க வல்லதாகும்.
அந்த கண்டுபிடிப்புக்கு கீழ்வரும் பாராட்டு கிடைத்தது.
“The
concept of “Muxel” as opposed to “Pixel” has undoubtly a creative potential,
which is worth to be further developed.”- Comment from Robert Peck, Editor in Chief, Journal of Mathematics and
Music, SCI Journal.
மேற்குறிப்பிட்ட மடலானது 7 நவம்பர் 2012இல் எனக்கு வந்தது.
[சிங்கப்பூரில் எனது நூல்களை வெளியிடுவதற்காக எனது மகன் தொடங்கியுள்ள நிறுவனத்தின் பெயர் 'MUXEL’
(http://muxel.sg/)]
உலகில் வேறு எந்த மொழியில் இருந்தும் புதிதாக, 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' போன்ற கண்டுபிடிப்புக்கு உலகில் புகழ் பெற்ற அறிஞரிடம் இருந்து 2018இல் அங்கீகாரம் கிடைத்திருக்குமானால், உடனேயே அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில், அந்த நாட்டில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றிலாவது, 'இசை மொழியியல்'
(Musical Linguistics) என்ற துறையானது தொடங்கி, அதன் அடிப்படையில, வியாபார ரீதியில் வெற்றி பெறும் மேற்குறிப்பிட்ட மென்பொருட்கள் வெளிவந்திருக்கும்.
(‘நோவாம் சோம்ஸ்கியும் தொல்காப்பியமும்’;
அது போலவே, சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய 'MUXEL'
கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரமானது, 2012இலேயே வேறு எந்த மொழியில் கிடைத்திருந்தால், இன்று உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் அது இடம் பெற வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கும்.
தமிழ்ப் பொது வியாபாரிகளின் வாடையின்றி பயணித்தாலேயே இது போன்ற கண்டுபிடிப்புகள் என் மூலமாக வெளிப்பட்டு வருகின்றன. அந்த வியாபாரிகளின் செல்வாக்கு ஒழியும் வரை, மேற்குறிப்பிட்ட தாமதப் போக்குகளையும் தவிர்க்க முடியாது;
என்பதும் தமிழ் தொடர்பான இயற்கையின் விந்தையாகும்.
No comments:
Post a Comment