Tuesday, March 24, 2020


     நோவாம் சோம்ஸ்கியும் தொல்காப்பியமும்
 


அமெரிக்காவில் வாழும் நோவாம் சோம்ஸ்கி என்பவர் பெயரை மனித உரிமை தொடர்பான செய்திகளில் படித்திருந்தேன். பின் சுமார் 10 வருடங்களுக்கு முன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தெரிவித்த கீழ்வரும் தகவலானது என்னை ஈர்த்தது.

'உலகின் மூத்த மொழி தமிழ்' என்று உலகப்புகழ் பெற்ற மொழியியல் அறிஞரான நோவாம் சோம்ஸ்கி அறிவித்துள்ளார்; என்பதே அத்தகவலாகும்.

அத்தகவலை உண்மை என்று நம்பி, 2009 செப்டம்படில் கீழ்வரும் மடலை மின் அஞ்சல் மூலம் அனுப்பினேன்.

Dear Prof.Noam Chomsky,

Recently I came to know of your interesting comments on Tamil language.

Hence, I felt I can draw your attention to my discovery (attached)of a grammar governing the relation between the sound of letters and music in Tamil. Interestingly this has the potential of becoming a universal grammar applicable to all languages.

Kindly note I am basically a Physics professor diverted to Physics of Music in ancient Tamil texts. My knowledge in linguistics is limited. Hence kindly pardon me for the mistakes, if any, in the presentation of my discovery.

with regards,
veerapandian

உடனே அவரிடமிருந்து கீழ்வரும் பதில் வந்தது.

(கடந்த சுமார் 10 வருடங்களாக  நான் எழுதிய மடல்களுக்கும், அனுப்பிய கட்டுரைகளுக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் எவரும் பதில் போட்டதில்லை; கட்டுரைகள் கிடைத்தன என்ற 'acknowledgement' வந்ததில்லை. ஒரே ஒரு தமிழ்த்துறைத்தலைவர் மட்டும் 'தமக்கு இசை தெரியாது' என்று சொல்லி, 'திருக்குறளில் இசையியல்' தொடர்பான எனது கட்டுரையைத் திருப்பி அனுப்பி விட்டார்.)

நோவாம் சோம்ஸ்கி பதில்:

Read your letter with interest, but I suspect you may be confusing me with someone else.  I have never written anything on Tamil, and know nothing about the language.  It would be best for you to contact people who do.

 Noam Chomsky   10 Sep, 2009

'நான் தமிழ் தொடர்பாக ஏதும் எழுதியதில்லை. தமிழ் மொழியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது' என்று அவரிடமிருந்து மேற்குறிப்பிட்ட பதில் வந்தது. ஆக தமிழ்ப் பேராசிரியர்களிடமிருந்து வெளிப்படும் தகவல்களில் இது போன்ற தவறான தகவலும்  இருக்கக்கூடும் என்ற பாடம் கற்றேன்.

இந்த பதிவினை எழுதும் முன், கீழ்வரும் தகவல் எனது பார்வையில் பட்டது.

உலக மொழிகளில்  மூத்த முதல் மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டுமென்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky ) அறிவித்துள்ளார்.’; 
(MITHRA-http://tamilanmedia.in/2018/11/24/)

மேற்குறிப்பிட்டது போல, அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் 'பெருமைகள்'(?) மூலமாக‌, தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ் தொடர்பாக நோவாம் சோம்ஸ்கி தெரிவித்ததாக வெளிப்படும் தவறான தகவல்கள் எல்லாம்,  தமிழ் தொடர்பான உண்மையான பெருமைகளையும் கெடுக்க வல்லதாகும்

சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உலக இசை மாநாட்டில், தமிழிசை ஆய்வுகளைத் தாழ்வாகக் கருதிய நெதர்லாந்த் மூதாட்டியிடம் நான் கசப்பான அனுபவம் பெற்றிருக்கிறேன்
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

பின் 2013 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு இதழில், ‘Musical Phonetics in Tolkappiam’ என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்தது. (JOURNAL OF TAMIL STUDIES DEC 2013; 
http://www.ulakaththamizh.in/journal  ; முதல்வர்கள் முக மற்றும் ஜெஜெ மறைவிற்குப்பின் தான், மேற்குறிப்பிட்ட ஆய்வு இதழில் வெளிவந்த கட்டுரைகளை அதன் இணையதளத்தில் படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது)

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள இசை மொழியியலானது (Musical Linguistics),  உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இசைக்கப்படும் பாடல்களுக்கான பொது இலக்கணமாக இருந்தது.

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குமானஉலகப் பொது இலக்கணம்’ (Universal Grammar) என்பதானது சோம்ஸ்கியின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் உலக ஆராய்ச்சியாளர்களிடையே விவாதப் போரானது நடைபெற்று வருகிறது.

Multiple scholars have challenged universal grammar on the grounds of the evolutionary infeasibility of its genetic basis for language, the lack of universal characteristics between languages, and the unproven link between innate/universal structures and the structures of specific languages. ; 

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்'  (Universal Grammar for musically rendered poems) கண்டுபிடிப்பானது, சோம்ஸ்கியின்உலகப் பொது இலக்கணம்தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கம் தர வல்லவையாகும். எனவே மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுக்கட்டுரை தொடர்பாக கீழ்வரும் மடலை நோவாம் சோம்ஸ்கிக்கு அனுப்பினேன்.

Dear Prof.Noam Chomsky,

In view of your great contributions to the modern linguistics, I felt the need to draw your attention to the following development.

Applying ‘Physics of Music' to the grammar for poems called ‘yAppilakkanam’ meaning ‘grammar for creation' in the ancient Tamil grammar treatise ‘Tholkappiam’, I had discovered that the grammar rules were non-semantic and music related, and hence applicable to the musically rendered poems in world languages.

I had published my discovery in the journal from the International Institute of Tamil Studies’, Chennai in 2013.; http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677 ) with the title ‘The Musical Phonetics in Tholkappiam’.

with regards,
S.A.Veerapandian

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

“Fascinating.  I’ll try to find some time to pursue it.”  -Noam Chomsky 7 Sep, 2018

அப்போது எனது கட்டுரையை முழுமையாக வாசிக்கும் வசதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் இல்லை. (இப்போது இருப்பதற்கு .பி.எஸ் ஆட்சிக்கு நன்றி கூற வேண்டும்.) எனவே அக்கட்டுரையை நான் நோவாம் சோம்ஸ்கிக்கு அனுப்பினேன்.

Dear Prof.Noam Chomsky,

Frankly I was overwhelmed by your encouraging prompt response.

Hence, I worked to bring out the salient features in my non-semantic and music related discovery published in the journal from the International Institute of Tamil Studies’, Chennai in 2013.; 
http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677  ) with the title ‘The Musical Phonetics in Tholkappiam’.

I have given below the result of my efforts.

with regards,
S.A.Veerapandian

மேற்குறிப்பிட்ட மடலுடன், சோம்ஸ்கியின்உலகப் பொது இலக்கணம்அணுகுமுறையில், எனது கட்டுரையை மாற்றி எழுதி;
‘Musical Linguistics; applicable to the musically rendered poems in world languages; Non-semantic and music related rules for poems, discovered in ancient Tamil grammar tholkAppiam’ என்ற தலைப்பிலான கட்டுரையினை மேற்குறிப்பிட்ட மடலுடன் அனுப்பினேன்.

அதற்கு கீழ்வருமாறு நோவாம் சோம்ஸ்கி பதில் அளித்தார்.

‘Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical linguistics’
– Noam Chomsky 23 Sep, 2018

உலகில் உள்ள பல்கலைகழகங்களில் 'மொழியியல்' (Linguistics) என்ற துறை ஏற்கனவே உள்ளது.

புதிதாக 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையானது தொல்காப்பியம் மூலமாக உருவாக, நோவாம் சோம்ஸ்கியின் அங்கீகாரமானது மேற்குறிப்பிட்ட அவரின் மடல் மூலமாக கிடைத்துள்ளது.

'மொழியியல்' அடிப்படையில், 'Natural Language Processing -NLP’  மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அது போலவே, தொல்காப்பியத்தின் 'இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to lyrical text; musical grammar check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.


இந்தியாவில் NLP தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் உள்ள பேராசிரியர், எனது ஆய்வுக்கட்டுரையினைப் படித்த பின், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

” Very interesting. And happy to know that you are working on it.''

  - Dr. Rajeev Sangal, FNAE, Professor (Area: Computer Sc & Engg), Language Technologies Research Center, IIIT Hyderabad

உலகில் வேறு எந்த மொழியில் இருந்தும் புதிதாக இது போன்ற கண்டுபிடிப்புக்கு உலகில் புகழ் பெற்ற அறிஞரிடம் இருந்து 2018இல் அங்கீகாரம் கிடைத்திருக்குமானால், உடனேயே அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில், அந்த நாட்டில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றிலாவது, 'இசை மொழியியல்என்ற துறையானது தொடங்கி, அதன் அடிப்படையில, வியாபார ரீதியில் வெற்றி பெறும் மேற்குறிப்பிட்ட  மென்பொருட்கள் வெளிவந்திருக்கும்.

சோம்ஸ்கியின்உலகப் பொது இலக்கணம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள எதிர்வாதங்களுக்கு உரிய விளக்கங்களை எல்லாம், தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள 'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) கண்டுபிடிப்பின் மூலமாகவெளிப்பட்டு, தொல்காப்பியமானது உலகப்பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பும், கடந்த 7 வருடங்களாக (கட்டுரை வெளிவந்ததைக் கணக்கில் கொண்டால்) அல்லது 2 வருடங்களாக (சோம்ஸ்கியின் அங்கீகாரத்தைக் கணக்கில் கொண்டால்) தாமதமாகியுள்ளது.


இரண்டு வருடங்கள் (அல்லது 7 வருடங்கள்) கழிந்து, இன்று வரையில் , தமிழில் ஏன் தாமதமாகிறது?

இடையில் உலகப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க ஆர்வம் காட்டியவர்கள், ஏன் இதில் ஆர்வம் காட்டவில்லை? குறைந்த பட்சம் தமிழ் இருக்கைகள் எல்லாம் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு உதவுகிறதா? கேடாகிறதா? என்பதிலாவது, அத்தகையோர் கவனம் செலுத்தினார்களா?(http://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html
வெளிப்படைத்தன்மையும் (Transparency) மற்றும் பொறுப்பேற்பும் (accountability) இன்றி தொடங்கிய எந்த காரியமும் உருப்பட வழியுண்டா?

முதல்வர்களாக இருந்த மு.கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் காலத்தில் அவர்களை அடிவருட மறுப்பவர்களும், அடிவருடிகளுக்கு நெருக்கமாக மறுப்பவர்களும், எவ்வாறு வாழ நேர்ந்தது? என்பதற்கு, 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய அறிஞர் நக்கீரன் வரலாற்று சாட்சியாகி விட்டார்

முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட, .பி.எஸ் ஆட்சி ஒப்பீட்டளவில் எவ்வாறு சிறந்த ஆட்சி? என்று ஏற்கனவே விளக்கியுள்ளேன்

எம்.ஜி.ஆரைப் போல, தி.மு. தலைவரால் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற பல புலமையாளர்களை தேடி, வரவழைத்து, மதித்து துணையாக கொள்ளாமலும், தன்மானமுள்ள புலமையாளர் எவரும் நெருங்காமல் ஒதுங்கும் வகையிலும், ஜெயலலிதா பயணித்ததாலேயே, எம்.ஜி.ஆரைப் போல தனது பெயரில் உள்ள சொத்துக்களை தருமம் செய்யும் வகையில் உயில் கூட எழுத முடியாத 'மர்மமான' முறையில் மரணமடைய நேர்ந்தது

ஜெயலலிதாவைப் போல இல்லாமல், புலமையாளர்கள் மட்டுமின்றி, மூத்த அதிகாரிகளும் எளிதில் சந்திக்கும் வகையில் பயணிப்பதாலேயே, தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

எனவே தொல்காப்பியத்தில் வெளிப்பட்டு, நோவாம் சோம்ஸ்கியால் அங்கீகரிக்கப்பட்ட 'இசை மொழியியல்' என்ற புதிய துறையானது, உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் தொடங்குவதானது, கடந்து இரண்டு வருடங்களாக தாமதமாவதற்கு .பி.எஸ் ஆட்சியைக் குறை கூற முடியாதுதமிழ் தொடர்பான செல்வாக்குள்ள நபர்களின் பரிந்துரையின்றி, தமிழக முதல்வர் தமிழ் தொடர்பாக எந்த புதிய திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்குவதானது சாத்தியமற்றதாகும்.


உலகில் தமிழ் இருக்கைகள் தொடங்குவது உள்ளிட்டு தமிழ் தொடர்பாக, முதல்வர் .பி.எஸ்ஸை சந்தித்த வாய்ப்புள்ள தமிழ் ஆர்வலர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

நான் அடிப்படையில் இயற்பியல் பேராசிரியர். 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, தங்களின் (தமிழ் அல்லது இசை) துறையில், என்னை 'அத்து மீறி பிரவேசித்த நபராக’ (trespasser) கருதுபவர்களும் இருக்கிறார்கள். என்னை ஊக்குவித்த புலமையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் செல்வாக்குள்ள புலமையாளர்கள் எவரும் எனது ஆய்வு முடிவுகளைக் கண்டுகொண்டதில்லை.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைய முயற்சித்த எவரும் இதுவரை எனது ஆய்வு முடிவுகளைக்  கண்டுகொள்ளவில்லை. தமிழ் இருக்கைகள் தொடர்பான எனது எச்சரிக்கைகள் எல்லாம், அந்த செல்வாக்குள்ள வலைப்பின்னலில் உள்ளவர்களுக்கு என் மீது வெறுப்பினையும் ஏற்படுத்தியிருக்கலாம்தமிழின் வளர்ச்சிக்காகவே அவை முன்வைக்கப்பட்டன, என்ற புரிதலின்றி.

உலகில் தமிழ் இருக்கைகள் தொடங்குவது உள்ளிட்டு தமிழ் தொடர்பாக, முதல்வர் .பி.எஸ்ஸை சந்தித்த வாய்ப்புள்ள தமிழ் ஆர்வலர்களைப் போன்ற செல்வாக்குள்ள நபர்களே, தொல்காப்பியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பல்கலைகழகங்களில் புதிதாக 'இசை மொழியியல்(Musical Linguistics) என்ற துறையானது, கடந்த இரண்டு வருடங்களாகத் துவங்கதாமதமாவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

எந்த அரசு/தனியார் உதவியின்றி எனது சொந்த பணத்தில் உழைப்பில் வெளிப்பட்டதே தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' தொடர்பான எனது கண்டுபிடிப்பாகும்; அது போன்ற இன்னும் பல கண்டுபிடிப்புகளைப் போலவே. (http://drvee.in/).  எனது கண்டுபிடிப்புகள் மூலமாக நான் பெற்ற இன்பங்களுக்கு விலை கிடையாது.
(‘உள்ளார்ந்த ஈடுபாடு(Passion)  தரும் இன்பம் பற்றி’;  http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html)

அதனால் தமிழ் பெற வேண்டிய வளர்ச்சி தாமதமாவதால், எனக்கு தனிப்பட்ட இழப்பு ஏதும் கிடையாது. ஆனால் வருத்தம் உண்டு


முதல் நாள் மது குடித்தவர்கள் மறுநாள் அவதியுறுவது 'ஹேங்க் ஓவர்' (Hang over) ஆகும். அது போல, அடிமைகள் விடுதலைக்குப் பின்னும் அதே அடிமை மனப்பான்மையில் தொடர்வதானது 'அடிமை ஹேங்க் ஓவர்
(Slavery Hangover; https://medium.com/@calperniacharles/slavery-hangover-1923cd1ac08d) ஆகும். முன்னாள் முதல்வர்கள் முக மற்றும் ஜெஜெ மறைந்த பின்னும், தமிழானது அந்த 'அடிமை ஹேங்க் ஓவர்- இல்' நீடிப்பதாலேயே, தொல்காப்பியத்தின் அடிப்படையில் 'இசை மொழியியல் துறை' தொடங்குவதானது தாமதமாகி வருகிறது.

தி.மு. தலைவர் கருணாநிதியின் சுயநல அரசியலில் தமிழானது எவ்வாறு சிறைபட்டது
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் எவ்வாறு தமிழானது அந்த சிறையில் இருந்து விடுதலை பெற்றது.

அடுத்து முதல்வரான ஜெயலலிதா புலமையாளர்கள் தொடர்பின்றி எம்.ஜி.ஆர் வழியில் இருந்து தடம் புரண்டு பயணித்து கருணாநிதியின் சுயநல அரசியலில் மீண்டும் தமிழானது சிறைபட எவ்வாறு  பங்களித்தார்?

என்பது தொடர்பான விடைகளே, தமிழின் 'அடிமை ஹேங்க் ஓவர்' காலத்தைக் குறைத்து, தமிழானது வளர்ச்சி  திசையில் பயணிப்பது சாத்தியமாக வழி வகுக்கும் 
(‘அண்ணா - எம்.ஜி.ஆர் வழியில் தமிழின், தமிழ் இசையின் மீட்சி’;
http://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_19.html)

அதே நேரத்தில், எனது தலைமுறையைப் போல கவர்ச்சிகர பேச்சில், எழுத்தில் ஏமாறாமல் பயணிக்கும் இளைய தலைமுறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் மூலமாக, தமிழ்நாடு தன்மான மீட்சி பெறும்; என்ற நம்பிக்கையும் இருக்கிறது

No comments:

Post a Comment