Friday, March 27, 2020

கொரோனா மூலமாக அமுலாகும் 'சமூகஒரீஇ';


பொது ஒழுக்கத்தில் வளரும் தமிழ்நாடு



நான் சில காலம் முன்பு சிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது, விமானநிலையத்தில் கொரோனா நோய் அறிகுறிகளுக்கானபரிசோதனைக்கு உள்ளாகி, உரிய படிவங்களை நிரப்பி, பின் வெளிவந்தேன். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தத்தம் வீடுகளில் வெளியே வராமல் தங்கி இருக்குமாறு அரசு அறிவிப்பு வெளிவந்தது. அதனை வெளியூரில் இருந்து எனத்கு நண்பர் தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

"கடந்த சுமார் 10 வருடங்களாக நான் ஏறத்தாழ 'சுய குவாரண்டைன்' வாழ்க்கை தானே வாழ்ந்து வருகிறேன்; காலை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை  விதி விலக்காகக் கருதினால்." என்று நான் சொன்னதும், எனது நண்பர் சிரித்துக்கொண்டே "அது சரிதான்" என்றார். ஆக அரசின் சொரோனாத் தடுப்பு உத்திரவினை எந்த சிரமமுமின்றி நான் பின்பற்றி வருகிறேன்.

என்னைப் பற்றி அறிந்த அவரிடம் மேற்குறிப்பிட்டதகவலை விளையாட்டாக தெரிவித்தேன்.

'கொரோனா' தொற்றை தடுக்க, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு, மார்ச் 24 நள்ளிரவு, 12:00 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தமிழகத்தில், போலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது.அலட்சியமான செயல்களால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, கொரோனா பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தும். ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்காமல், அத்துமீறும் கும்பலால், அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 'சாலைகளில் திரியும் கும்பலை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.;

மேற்குறிப்பிட்டவாறு 'அத்துமீறும் கும்பலாக' தொலைக்காட்சியில் வெளிப்பட்டவர்கள் எல்லாம் பெரும்பாலும் கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணிப்பவர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மளிகைக்கடைகளிலும், பால் கடைகளிலும், தாமாகவே இடைவெளி விட்டு நின்று வரிசையாக பொருட்களை வாங்கும், சுய பொது ஒழுக்கம் அரங்கேறும் காட்சிகள் வளர்ந்து வருகின்றன.

1967க்கு முன், திருச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்த நான் சிலமுறை சென்னைக்கு வரும் வாய்ப்புகள் கிட்டின. அப்போது மாநகரப் பேருந்து நிறுத்தத்தில், பேருந்து வந்து நின்றவுடன், தாமாகவே தள்ளுமுள்ளின்றி வரிசையில் நின்று, ஒவ்வொருவராக பேருந்தில் ஏறுவார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவானவுடன், நடத்துநர் சைகை காட்ட, வரிசையில் நின்ற பயணிகள் பேருந்தில் ஏற மாட்டார்கள். அப்போது அது எனக்கு வியப்பாகப்படவில்லை.

ஊழலில், பொது ஒழுக்கக்கேட்டில் இன்றைய சென்னையைப் போலவே, அந்த காலக்கட்டத்தில் (1960களில்) சிங்கப்பூர் இருந்ததை, சிங்கப்பூரில் புகழ் பெற்ற நடன ஆசிரியர் மறைந்த பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.

இன்றைய சிங்கப்பூர் அன்றைய சென்னையாக வாழ, அன்றைய சிங்கப்பூர் திசையில் இன்றைய சென்னை பயணிக்கிறது. சிங்கப்பூரானது அவ்வாறு சீரடைந்ததற்கு, மறைந்த லீ குவான் யூ முக்கிய காரணமாவார். அதனை அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களே, அவர் மறைந்த பின் நடந்த இறுதி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்; என்றும் கேள்விப்பட்டேன்.; 
(‘ராஜாஜி, .வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்  (3)- 'ஒரீஇ' என்ற வலிமையான சமூக செயல்நுட்பஆயுதம்’;

கொரோனா மூலமாக தமிழ்நாட்டில் 1967க்கு முன் இருந்த சுய பொது ஒழுக்கம் மீண்டும் நடைமுறைக்கு வருவதானது நல்ல சமூக அறிகுறியாகும்.

மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.குறிப்பாக, கிராமப் புறங்களில் கூடுதல் விழிப்புணர்வு காணப்படுகிறது. பல கிராமங்களில், வெளியூர் நபர்கள், ஊருக்குள் வருவதை தடுக்க, எல்லைகளில் தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.’ 
(https://www.dinamalar.com/news_detail.asp?id=2511186)

மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதன் காரணமாக, 'தனிமை' (‘loneliness’) என்ற சிக்கலில் சிக்குவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

தனிமையை வெற்றி கொள்ளும் இரகசியங்கள் யாவை? தமிழ்நாட்டில் சமூக சுமைதாங்கிகள் வற்றி வருவதன் காரணமாக, மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகிறது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

பணத்தைத் தெய்வமாக வணங்கி வாழ்பவர்களை விட்டு விலகி, நல்ல மனிதர்களையும், பறவைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கையையும் நண்பர்களாகக் கொண்டு எவ்வாறு நான் வாழ்ந்து வருகிறேன்? என்பதையும் அதில் விளக்கியுள்ளேன்.

In Tamilnadu, money had replaced God, and those who live with moral order, spirituality and an ethical compass, are treated as fools in their social circle including the family. Those with ill-gotten wealth are respected as VIPs in all social and family functions.

Every morning, to say ‘good morning’ to those robots like human beings, I avoid.
Instead, in my morning walks I say ‘Good Morning’ to the birds & trees, all living beings I come across. Though they may not understand my verbal communication, they understand my emotion and respond. 

மூன்று வார ஊரடங்கு உத்திரவினைக் கடைபிடிப்பதால், காலையிலும் மாலையிலும் வெளியில்  நடைப்பயிற்சிகள் மேற்கொள்வதில்லை. வீட்டிற்குள் நடைப்பயிற்சி மேற்கொண்டு, ஜன்னல் வழியாக தெரியும் பறவைகள் மற்றும் மரங்கள் ஆகிய நண்பர்களுடன் மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவித்தவாறு உறவாடுவது எனக்கு சாத்தியமாகி வருகிறது.

அவ்வாறு சாத்தியமான வாழ்வை வாழ்வதற்கு, நான் கடைபிடித்து வரும் 'ஒரீஇ' செயல்;நுட்பம் பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தொல்காப்பியத்தில் வரும் 'ஒரீஇ' சூத்திரம் தொடர்பாக;

சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதிக்குள்ளாகும் சொல்லில் உள்ள எழுத்துக்களில், எந்த எழுத்தின் ஓசைக்கு இணையான ஓசை உள்ள தமிழ் எழுத்து இல்லையோ, 'அந்த' எழுத்தின் ஓசையை அப்படியேஒலிப்பியல் இறக்குமதி’ (Phonetic Import) செய்ய முடியாது. எனவே ஒலிப்பியல் இறக்குமதிக்கு தகுதியற்ற 'அந்த' எழுத்தின் ஓசைக்குப் பதிலாக, 'அந்த' ஓசைக்கு நெருக்கமான தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தி, வட சொல்லினை, தமிழ் எழுத்துக்கள் மூலமாக இறக்குமதி செய்தலே, 'ஒரீஇ' முறையாகும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான செயல்முறையில், அனுமதிக்கக் கூடியவைகளை மட்டும் அனுமதிக்கும் வடிப்பான் (Filter) போன்றே 'ஒரீஇ' செயல்படுகிறது

இயற்கையோடு இணைந்த திணையியல்' வாழ்வு முறையுடன் தமது வேரை அடையாளம் கண்டு, ஒட்டி பயணிக்க உதவுவது ஒரீஇ சமூக செயல்நுட்பமாகும். வாழ்வதற்கான ஆர்வத்தை இழந்து, பின் மீண்டும் உயிர்ப்புடன் வாழத் தொடங்கிய பின், எனக்கு உற்ற துணையாக இன்று வரை உதவி வருவது 'ஒரீஇ' சமூக செயல்நுட்பமாகும்.

.வெ.ராவின் 'தமிழ் வேர்க்கொல்லி நோயால் திரிந்த' தமிழ்நாட்டில், ‘கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், நேர/ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க, 'நான் அனுமதித்துள்ள மனிதர்களைத் தவிர, என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ எவரும் பேச முடியாது. ஈமெயில் மூலமாக மட்டுமே எவரும் தொடர்பு கொள்ள முடியும்' என்ற வரையறையானது, இயற்கையோடும், சாமான்யரின் சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும் வாய்ப்பினை, எனது போக்கின் இயற்கை மூலமாகவழங்கியுள்ளது.’ 

அரசின் ஊரடங்கு உத்தரவில் மருத்துவ மனைகள், மருந்தகங்கள், மளிகை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் போன்றவற்றிற்கு விதி விலக்குகள் உள்ளன. இவையெல்லாம் 'கொரோனா தடுப்பு' என்னும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான செயல்முறையில், அனுமதிக்கக் கூடியவைகளை மட்டும் அனுமதிக்கும் வடிப்பான் (Filter) போன்றே, 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ளதை உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மனிதரும் தமது இயல்பை ஒட்டிய 'ஒரீஇ' முறையில் தான், தமது நண்பர்களையும், தமது உற்றத்திலும் சுற்றத்திலும் தமக்கு ஏற்றவர்களையும் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்.

பணத்தைத் தெய்வமாக வழிபடும் மனிதர்கள் எல்லாம், அந்த இலட்சியத்திற்கு உதவுபவர்களை மட்டுமே போற்றி, உதவாதவர்களை விலக்கி, எவ்வாறு 'ஒரீஇ' இரகசியம் மூலமாக வெற்றி பெற்றார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தன்மானமிழந்து அதிவேகப்பணக்காரராகி காசுக்குத் துதிபாடும் பரிவாரங்களுடன் முக்கியத்துவப் போதையில் மிதந்தே வாழ்ந்த  மேற்குறிப்பிட்ட வாழ்வியல் புத்திசாலிகள்  எல்லாம், கொரோனா தனிப்படுத்தலில்;

பணத்திற்காக தமக்கு மேல் உள்ளவர்களுக்கு வாலாட்ட முடியாமலும், அந்த தன்மானக்கேட்டினை ஈடு செய்து கொள்ள, தம்மிடம் ஆதாயத்திற்காக பலர் தம்மிடம் வாலாட்ட வைத்து மகிழ முடியாமலும்;


தமக்கு தெரியாமல் வேறு யாரும் தலைமைக்கு வாலாட்டி, கட்சியில் நமக்குள்ள முக்கியத்துவம் கீழிறங்குமா? என்று தெரிந்து கொள்ள முடியாத குழப்பத்திலும்;

கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்திரவினை பின்பற்றுவதில் என்னென்ன சிக்கல்களைச் சந்தித்து, எத்தகைய மனநோய்களுக்குள்ளாகிறார்கள்? என்பதெல்லாம் இனி தான் வெளிப்படும்தம்மைப் பற்றிய அதீத போதையில் வாழும் பலர், பொதுஅரங்கில் சாமான்யர்களைப் போல வாழ்வதானது கேவலம் என்று கருதிஅதற்காகவே அரசியல் கொள்ளையர்களை  எதிர்க்காமல், நெருக்கமாகும் வாய்ப்புக்கு ஏங்கி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகையோர் எல்லாம் வாழ்க்கையைக் காதலிக்க தெரியாத முட்டாள்த் தமிழர்கள் ஆவார்கள்

அந்த சமூக இழிவான‌ புத்திசாலிகளை சமூக ரீதியில் வடிகட்டி ஒதுக்கி, நமது இயல்பினை ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நமது வாழ்க்கையை அனுபவித்து நாம் வாழ்வதற்கான‌ 'ஒரீஇ' செயல்நுட்பத்தினை நான் மேலே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளின் ஊழலுக்காக அரங்கேறியஆங்கிலவழிக்கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட  மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.

முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட அதிக ஊழல் இப்போது இல்லை. அது மட்டுமல்ல, லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளைக் காப்பாற்றி வந்த குடும்பவலைப்பின்னல்கள் எல்லாம் பலகீனமாகி வருகின்றன. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு இருந்த தடைகள் பலகீனமாகி வருகின்றன

எனவே கொரோனா ஊரடங்கு உத்திரவினை மீறும் மேலே குறிப்பிட்ட முரடர்களுக்கு காவல் துறை சரியான பாடம் புகட்டி வருவதும் சாத்தியமாகி வருகிறது. அது சமூகத்திற்கு நல்ல பலனைத் தரும்

எதற்காகவும் வரிசையில் நிற்பதைக் கேவலமாகவும், அந்த பொது ஒழுங்கை மீறி காரியம் சாதிப்பதையே தமது செல்வாக்கின் பலமாகவும் கருதி வாழ்ந்தவர்கள் எல்லாம், இன்று பொது இடங்களில் அந்த போக்கினை வெளிப்படுத்தினால் கேலிக்குள்ளாகும் கண்டனத்திற்குள்ளாகும் நிலைமை வந்துவிட்டது. அது நம்ப முடியாத அதிசயமாகும்;


1967இல் முளைவிட்டு, 1969 முதல் வேகமாகி, பின் 1991 முதல் வீரியம் பெற்று வளர்ந்து உச்சத்தைத் தொட்ட அந்த மூகக் கேடான போக்கானது முடிவுக்கு வருவதன் அறிகுறியாக.

'கொரோனா தடுப்பு' நோக்கத்திற்காக, அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக‌, தமிழ்நாட்டில் 1967க்கு முன் இருந்த சுய பொது ஒழுக்கம் மீண்டும் நடைமுறைக்கு வருவதானது நல்ல சமூக அறிகுறியாகும். 

மேற்குறிப்பிட்ட வாழ்வியல் புத்திசாலிகள் பின்பற்றிய சமூகத்திற்குக் கேடான 'ஒரீஇ' செயல்நுட்பமானது வலுவிழக்கும் விளைவையும், 'கொரோனா தடுப்பு' நோக்கத்திற்காக, அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 'பணமே தெய்வம்' என்று பயணித்தவர்களின் பங்களிப்பால், தமிழ்நாட்டில்  சமூக சுமைதாங்கிகள் வற்றி, மனத்தளர்ச்சி, தற்கொலை, போதை உள்ளிட்ட இன்னும் பலவற்றின் மூலமாக பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

The social consequences of the above battles are the drying of the ‘Social Shock-absorbers’ and increasing ‘loneliness’, leading to depression, suicides, drug addiction, and other such damages, even among the school children in Tamilnadu.

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும். நமது இயல்பைத் தொலைத்து, 'பணமே தெய்வம்' என்றஇலட்சியத்திற்கு உதவுபவர்களை மட்டுமே போற்றி, உதவாதவர்களை விலக்கி வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், வாழும் போது, இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத் தழுவ முடியுமா
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html)


எளிமையான வாழ்க்கைக்கு தேவையான பணம் ஈட்டல் என்ற அளவோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே  இயற்கையில் கிடைக்கும் இன்பங்களை அனுபவித்து வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களிலும் அதிக பணம் ஈட்டுவது எப்படி? இன்னும் அதிக செல்வாக்கு பெறுவது எப்படி? என்று சாகும் வரை முட்டாள்த்தனமான வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய சமூக இழிவான புத்திசாலிகள் எல்லாம், நாம் தவிர்க்க வேண்டிய சமூகக் கொரோனா நோய்க்கிருமிகள் ஆவர்
(‘அந்த'(?) ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்'’; http://tamilsdirection.blogspot.com/2017/12/normal-0-false-false-false-en-us-x-none.html)

மேற்குறிப்பிட்ட கேள்விகளைத் தவிர்த்து, எவ்வாறு இன்பமான நடைப்பயிற்சி மேற்கொள்வது? என்பதைக் கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது.


‘Watching a golden ball dissolving into the horizon is not going to add to our bank accounts or social status.’- For the full life experience, put down all devices and walk (https://aeon.co/ideas/for-the-full-life-experience-put-down-all-devices-and-walk)

அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக அந்த புரிதலானது வளர்ந்து, தமிழ்நாட்டில் சமூக பொது ஒழுக்கமானது மீண்டும் நிலைபெறும் வாய்ப்பு கூடியுள்ளது. அதன் மூலமாக, சமூக சுமைதாங்கிகள் எல்லாம் புத்துயிர் பெற்று, பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை மேற்குறிப்பிட்ட பாதிப்புகளில் இருந்து விடுதலை பெறுவதும் சாத்தியமாகும்.

வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய லாப நட்டக் கணக்கினை, குடும்பத்தில் நட்பில் கடைபிடித்து பலரால் சீரழிக்கப்பட்டதமிழ்நாடானது, இயல்பான அன்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து திருந்தி பயணிக்கும் வாய்ப்பினை அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பமானது வழங்கியுள்ளது.

'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், தலித், பொதுவுடமை, மனித உரிமை, பெண்ணுரிமை' உள்ளிட்டு இன்னும் பலமுகமூடிகளுடன் வாழும் பொதுவாழ்வு வியாபாரிகள் எவரும், மது சமூக வட்டத்தில் நுழைய முடியாத (ஒரீஇ) வடிப்பான்களுடன் வாழ்பவர்கள் எல்லாம், 'பேரினமாக' ஒன்று சேரும்ஒரீஇசமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் உள்மறையாக (Latent) வளர்ந்து வருகிறது.
(http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_21.html)



குறிப்பு::

பாலிவூட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சுய ஊரடங்கில் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்து எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் சல்மான் இந்த சமயத்தில் தனக்கு பிடித்தமான ஓவியங்கள் வரைந்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைப், ரகுல் ப்ரீத் சிங், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தத்தம் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஹாலிவுட் கலைஞர்கள் ஜெசிக்கா அல்பா, ஜுலியா ராமர்ட்ஸ் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டதோடு, தனிமைப்படுத்தப்பட்ட இச்சமயத்தில் மேக்-அப் இல்லாமல் இருக்கும் தங்கள் படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் விளையாட்டு வீரர்களான மெஸ்ஸி, உசேன் போல்ட் உள்ளிட்டோர் டிஸ்யு பேப்பரை கீழே விழாமல் தங்கள் கால்களால் தட்டி விளையாடி வருவது பிரபலமடைந்துள்ளது. இன்னும் பலரும் பல விதமாக இந்த சுய தனிமைப்படுத்துதல் நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும்போது தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவளிப்பது, குழந்தைகளுடன் அறிவியல் சார்ந்த விளையாட்டில் ஈடுபடுவது, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குடும்பத்திற்கு நல்லது என மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.; 

No comments:

Post a Comment