Friday, April 3, 2020


இந்தியாவில் மே மாத மத்தியில் 10 முதல் 13 லட்சம் பேர் கொரொனா தொற்று அபாயம்?


                    கொரோனாவும் ஏர்கண்டிசனும்



உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையானது 50,000 ஆகவும் 2020 ஏபரல் துவக்கத்தில் இருந்தது
(Coronavirus highlights: Global death toll tops 50,000; total tally nears 10 lakh;

அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2069 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையானது54 ஆகவும் இருந்தது.

ஆனாலும் மே மாத மத்தியில் 10 முதல் 13 லட்சம் பேர் இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Harvard public health professor Kasisomayajula Viswanath: "Right now they are able to control it, and monitor it, and treat it effectively. But if it is spreading along with other contagious diseases that are already here, then it becomes a matter of considerable concern."- 

அது போன்ற கணிப்புகள் தொடர்பான ஆய்வின் வரை எல்லைகளும் (limitations) வெளிப்பட்டுள்ளன.

‘India could face between 100,000 to 13 lakh confirmed cases of the novel coronavirus by mid-May if the current trend in the growing number of COVID-19 cases continues, according to a report by an international team of scientists.

The scientists, however, said their estimates came with limitations, including the uncertainty arising from model assumptions of population size, accuracy of the diagnostic tests for COVID-19, and heterogeneity in the implementation of government-initiated interventions.’;

மேற்குறிப்பிட்ட ஆய்வு மட்டுமின்றி, இந்தியாவை அச்சுறுத்தி மேற்கத்திய உலகத்தில் இருந்து வரும் கணிப்புகளில் ஒரு முக்கிய குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. அதனை நான் எவ்வாறு கண்டுபிடித்தேன்? என்று சுருக்கமாக இங்கு விளக்குகிறேன்.

கொரோனா தொற்று தொடங்கியது முதல் மார்ச் 3 ஆம் வாரம் வரை சிங்கப்பூரில் இருந்த எனக்கு கீழ்வருவதானது முக்கியமாக தெரிந்தது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் எல்லாம் விமானம் மூலம் வந்தவர்கள், தொற்றுள்ள நபர்கள் இருந்த கருத்தரங்குகளில், கடைகளில், சர்ச்சுகளில், மசூதிகளில் அது போன்ற மக்கள் கூடும் இடங்களில் கலந்து கொண்டவர்களாக இருந்தார்கள். அவ்வாறு தொற்று நடைபெற்ற இடங்கள் எல்லாம் ஏர்கண்டிசன் செய்யப்பட்டிருந்த இடங்கள் ஆகும்.

ஏர்கண்டிசன் அறைகளிலும் அரங்குகளிலும் நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன

அடுத்து கொரோனா வைரஸிற்கும் வெப்பநிலைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுகளைத் தேடினேன்.

அதிக வெப்ப நிலையிலும் அதிக ஈரப்பதனிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் சாத்தியம் மிகக் குறைவே என்ற ஆய்வு முடிவுகள் எனக்கு கிட்டின. அவற்றில் ஒன்று வருமாறு;

The dried virus on smooth surfaces retained its viability for over 5 days at temperatures of 22–25°C and relative humidity of 40–50%, that is, typical air-conditioned environments. However, virus viability was rapidly lost (>3 log10) at higher temperatures and higher relative humidity (e.g., 38°C, and relative humidity of >95%). The better stability of SARS coronavirus at low temperature and low humidity environment may facilitate its transmission in community in subtropical area (such as Hong Kong) during the spring and in air-conditioned environments. It may also explain why some Asian countries in tropical area (such as Malaysia, Indonesia or Thailand) with high temperature and high relative humidity environment did not have major community outbreaks of SARS.; 

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் சரி என்றால், இந்தியாவில் மே மாத மத்தியில் 10 முதல் 13 லட்சம் பேர் இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்த ஆய்வுகளில் என்ன குறைபாடுகள் உள்ளன? என்ற கேள்வியானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

வெப்ப மண்டில இடங்களில் (tropical locations) ஒன்றான சிங்கப்பூரில் கொரோனா பரவியதை அடிப்படையாகக் கொண்டே, இந்தியாவை அச்சுறுத்தும் கணிப்புகளைப் போன்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

‘They conclude that the rapid growth of cases in cold and dry provinces of China, such as Jilin and Heilongjiang, alongside the rate of transmission in tropical locations, such as Guangxi and Singapore, suggest increases in temperature and humidity in the spring and summer will not lead to a decline in cases.’ ; 

ஆனால் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவிய இடங்கள் எல்லாம் ஏர்கண்டிசன் செய்யப்பட்ட இடங்களாக இருந்ததை எல்லாம், மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் கணக்கில் கொள்ளவில்லை.

இந்தியாவிலும் இதுவரை ஏர்கண்டிசன் உள்ள விமானங்கள் மூலமாக வந்தவர்கள் மூலமாகவே கொரோனா தொற்று இந்தியாவிற்குள் நுழைந்தது. அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பயணிக்கும் டூரிஸ்ட் கார்களும் பேருந்துகளும் பெரும்பாலும் ஏர்கண்டிசன் செய்யப்பட்டவையே ஆகும். எனவே இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்றுக்குள்ளனவர்களில் ஏர்கண்டிசன் வாழ்க்கையில் வாழாமல், சாமான்யர்களாக இருந்தாலும், அவர்கள் நோய்த்தொற்று இருந்தவர்களுடன் கூட இருந்த இடங்கள் எல்லாம் ஏர்கண்டிசன் செய்யப்பட்ட கார்களா, பேருந்துகளா, அரங்குகளா? அது போன்ற இடங்களா? என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டால்;

ஏர்கண்டிசன் வாடையின்றி வாழ்ந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு மிகக்குறைவே என்ற ஆய்வு முடிவு வெளிப்பட்டால், நான் வியப்படைய மாட்டேன்.

இந்தியாவின் பரப்பையும் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டால், கொரோனா தடுப்பில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன; குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது.

அதில் சந்தேகமுள்ளவர்கள், அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு வெளிவந்துள்ள கீழ்வரும் கட்டுரையினைப் படிக்கலாம்.

‘Covid-19 hasn’t yet hit India in a widespread way. But I saw more warnings there than I did in the U.S.’ ; 

ஊரடங்கு உத்திரவின்றி, சர்ச்சுகள், மசூதிகள், அரங்குகள், வீடுகள் உள்ளிட்டு கொரோனா தொற்று மையங்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு,  கிருமி நீக்கம் செய்து பல வாரங்கள் மூடி,  பொது அலுவலகங்கள் மற்ற இடங்களில் உள்ளே நுழையும் ஒவ்வொருவரையும் தொற்று அறிகுறி சோதனைக்கு உட்படுத்துவது, கொரோனா தொற்று அறிகுறியுள்ளவர்களை உடனே தனிமைப்படுத்தி கொரோனா சோதனைக்கு உட்படுத்தி,  தொற்று இருந்தால் உடனே சிகிச்சைக்கு உட்படுத்துவது, திரையரங்குகள், கூட்டங்கள் உள்ளிட்டு மக்கள் கூடும் இடங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக;

மக்களுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாத்தியமுள்ள வகையில் குறைந்த பாதிப்புகளையே அனுமதித்து, உலகுக்கே முன்னுதாரணமாக சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.

பொதுவாக இந்தியாவைப் பற்றி தாழ்வாக கருதியிருந்த சிங்கப்பூரர்கள் மத்தியில், இந்தியாவில் நடந்து வரும் கொரோனா தடுப்பு முயற்சிகள் எல்லாம் வியப்பை ஏற்படுத்தி வருவதையும் நான் அறிந்து வருகிறேன்.

ஊரடங்கு உத்திரவின்றி சிங்கப்பூரைப் போல பலவகைப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பயணித்திருந்தால், இந்தியாவில் ஏப்ரல் துவக்கத்தில் வெளிப்பட்ட நோய்த்தொற்று எண்ணிக்கை 2069 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையானது 54 ஆகவும் இருந்திருக்காது என்பதைக் கீழ்வரும் செய்தியானது உணர்த்துகிறது.

Covid-19 in India: Nearly 65% of 544 new all-India cases linked to Tablighi Jamaat’s event in city ;

கடந்த ஜனவரி முதலே மேற்குறிப்பிட்டது போன்ற கூட்டங்கள் சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டன. சிங்கப்பூரைப் போல தடை செய்யாமல், மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் முஸ்லீம் கூட்டங்கள் நடந்ததன் விளைவாகவே, அந்த இரண்டு நாடுகளும் எதிர்பாராத கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி தத்தளித்து வருகின்றன. அதற்குப் பின்னும் இந்தியாவில் இது போன்ற மாநாட்டை நடத்தியது எவ்வளவு பெரிய தவறு? இது போன்ற தவறுகளே இந்தியாவை கொரோனாவில் மூழ்கச் செய்யும்.

இது போன்ற தவறுகளை எல்லாம் முளையிலேயே கிள்ளியிருந்தால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், கொரோன தொற்று நபர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்து நிலைமையானது, உலகுக்கே முன்னுதாரணமாக முழுக்கட்டுப்பாட்டில் வந்திருக்கும்.

மேற்குறிப்பிட்ட மாநாடு அதிர்ச்சி வைத்தியமாக மாறி;

சோதனை மையங்களையும், மருத்துவ உபகரணங்களின் எண்ணிகையும், மருத்துவ வசதி இடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பலவிதமான தேவையான கட்டுப்பாடுகளுடனும் ஆக்கபூர்வமான‌ திசையில் இந்தியா பயணிப்பதால், மே மாத மத்தியில் அவ்வாறு முழுக்கட்டுப்பாட்டு நிலை வந்து விடும் என்பதும் எனது கணிப்பாகும்.


குறிப்பு: எனது தேடலில், சுத்தமின்மை காரணமாகவும் அல்லது நோய்த்தொற்றுள்ள நபர்கள் எவரேனும் இருந்தால், அதன் காரணமாகவும் ஏசி அறைகளிலும் அரங்குகளிலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது. அது மட்டுமல்ல, அங்கு ஆக்சிஜன் குறைவு காரணமாகவும் அந்த அபாயம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது தொடர்பான சான்றுகள் கீழே:

‘the risk is not evenly distributed, with people over 50, current or past smokers, and those with weakened immune systems or chronic disease at greater risk.’ ; 

‘Being in open spaces, research has proved, strengthens your immunity since white blood cells that fight bacteria need oxygen to function effectively. A free supply of oxygen means your blood pressure and heart rate is in check since the body isn’t overworking itself to acquire it.

Blood oxygen levels are also linked to serotonin, the ‘happiness hormone’, which is why you are more likely to slip into a refreshed, relaxed state when in green outdoors.

The hitch, of course, is that most urban residents end up spending close to nine hours a day in air-conditioned offices, often following it up with a whole night’s sleep in closed, cool bedrooms.
Your lungs are the first hit, which is why respiratory infections including common cold, frequent headaches, itchy throat and symptoms of flu, are most common among young, urban professionals. Fresh air that helps the lung’s airways to dilate, releasing airborne toxins from your system, is scant in swanky AC offices.’ ; 

எனவே கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாவதைத் தடுக்க, இயற்கையான காற்றோட்டத்தில் வாழ்வது உதவும்அவ்வாறு வாழ்பவர்களுக்கு வியர்வையின் மூலமாக கழிவுகள் வெளியேறும் வாய்ப்புகளும் அதிகமாகும்.
(https://www.healthline.com/health/sweating-benefits) 

அது நோயின்றி வாழ உதவும்.


No comments:

Post a Comment