Thursday, April 16, 2020


தமிழ் தொடர்பான ரசனையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் பூகம்பமானது;


தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறதா?



தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் குடும்பங்களில் அவரவர் தாய்மொழிகளிலேயே 'அம்மா, அப்பா' என்று கூப்பிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களில், கிராமங்களிலும், 'அப்பா, அம்மா' மறைந்து, 'மம்மி டாடி' அதிவேகமாக ஆக்கிரமித்து வருகிறது.

தமிழ்நாட்டில் விளையாட்டுப்பள்ளி முதல் (குக்கிராமங்களிமும்) ஆங்கில வழியில் தொடங்கி, இன்று கல்லூரி மாணவர்களாயிருப்பவர்களில், பெரும்பாலோருக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாது.

விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டு இன்று முன்னணியில் உள்ள நடிகர்களின் ரசிகர்கள் எவரையும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால், அவர்களால் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் முடிகிறதா? என்று சோதித்து, தமிழ்நாட்டில் தமிழின் உண்மையான நிலை பற்றிய தெளிவைப் பெறலாம்.

சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழில் எழுதப் படிக்க தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடும் அந்த வழியில் பயணித்து வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், உலகில் வேறு எந்த நாடும் இல்லையென்றால்;

அது 'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிகளில் விளைந்துள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' ஆகும்.

தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்களின் நாடாக தமிழ்நாடு மாறி வருவதன் வெளிப்பாடே, அந்த 'தனித்துவமான ரசனை இடைவெளி' ஆகும்.

1944இல் முளை விட்டு, 1949இல் உரம் பெற்று வளர்ந்த, உணர்ச்சிபூர்வ வர்ச்சிகரமான பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா மூலமாக ரசனையை 'போதையாக்கி', மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோரின் சமூக முதுகெலும்பை முறித்ததே;

அந்த 'தனித்துவமான ரசனை இடைவெளி'க்கு முக்கிய காரணமாகும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்
(‘தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே 'தனித்துவமான ரசனை இடைவெளி'?’; 

குடி என்றால் என்ன? என்று தெரியாத கல்லூரி மாணவர்கள் இருந்த தமிழ்நாட்டில், 1969க்குப் பின், மது விலக்கு நீக்கப்பட்டு, இன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை, குடிப்பழக்கம் மட்டுமின்றி, பல வகை போதைப்பொருள்கள் பழக்கமும் பற்றி சீரழிந்து வருகிறார்கள்.

அதை போன்று, 'ரசனை'யிலும் ஒரு சமூகக் கேடான போக்கானது, 1969க்குப் பின் 'ரெக்கார்ட் டான்ஸ்' என்ற பெயரில் அறிமுகமானது.

தமிழ்நாட்டில் உரிய கடுமையான பயிற்சியின்றி, பக்தியுடன் கூடிய ஈடுபாடும் (Devotion) இன்றி, 'கவர்ச்சி' உடையுடன், 'ரெக்கார்ட் டான்ஸ்' என்ற பெயரில், ரசனையில் பாலுணர்வு தூண்டுதலை முன்னிலைப் படுத்தி, ரசனையில் திரிதல் போக்கானது, 1969க்குப் பின் அரங்குகளில் அறிமுகமானது.

கட்டணம் வசூலித்து, அரங்குகள் நிறைந்த மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எல்லாம், மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் 'ரசிக்கும்' அளவுக்குபாலுணர்வினை தூண்டும் திரைப்பட பாடல்களுக்கு, அரை நிர்வாணம் முதல், முக்கால்/முழு நிர்வாணமாக, இளம்பெண்கள் நடனமாடும் நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டு நகரங்களில் அறிமுகமானது.

அந்த போக்கில், திரைப்படங்களிலும் அது போன்ற நடனங்களும் அரங்கேறின. அதற்கு முன் திரைப்படங்களில் கடுமையான பயிற்சியும், பக்தியுடன் கூடிய ஈடுபாடும் உள்ளவர்கள் மட்டுமே எந்த வகை நடனமும் ஆடும் போக்கு இருந்தது.

அந்த போக்கில் கடுமையான பயிற்சியும், பக்தியும் காற்றில் போக, தமிழ்நாட்டில் இசை, நாட்டிய ரசனையில் சீரழிவும், அரைகுறை பயிற்சியுடன் கர்நாடக இசை, பரத நாட்டியங்கள், எல்லாம் விலை போன மீடியா வெளிச்சத்துடன் அரங்கேற்றும் நோயும், தமிழ்நாட்டில் அரங்கேறியது; சமூகத்தில் மேல் மட்ட குடும்பங்களில் பலர் அந்த போக்கில் பயணிக்க; அவர்களைப் போல 'அந்தஸ்தில்' உயர்ந்ததாக காட்டிக் கொள்ள, நடுத்தர குடும்பங்களும் அந்த நோயில் சிக்கினார்கள்.

புலமை மங்கி, வக்கிர ரசனையானது 'ரெக்கார்ட் டான்ஸ்' மூலமாக 1970களில் வளர்ந்தது

அந்த புலமை வீழ்ச்சியில் புராணங்களும் சிக்கின
(‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; 

1980களில் புதுக்கோட்டை 'வெஸ்ட்' (West Talkies) திரை அரங்கில், 'தேவ லீலைகள்' என்ற தலைப்பில், 'கட்டாயமாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று புதுக்கோட்டை எங்கும் விளம்பரம் செய்து, திருச்சி செல்வேந்திரன் 'நகைச்சுவை' பொங்க, புராண ஆபாசங்கள் பற்றி பேசிய பேச்சிற்கு, கட்டணம் செலுத்தி, அரங்கு நிரம்பி வழிந்த கூட்டத்தில் நானும் இருந்தேன், சிறப்பு அழைப்பாளராக. அரங்கில் இருந்தவர்களில் பெரும்பாலோர் கோவிலுக்கு சென்று வழிபடும் பழக்கமுடைய 'ஆத்தீக' தமிழர்கள் என்பது, அன்றே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வியப்பானது.         (http://tamilsdirection.blogspot.com/2017/10/)

ஓரு மனிதரின் அகவாழ்வானது எந்த அளவுக்கு சுயலாப நோக்கில் சமூகக் கேடான திசையில் பயணிக்கிறதோ, அந்த அளவுக்கு, அவரின் ரசனையும் சமூகக் கேடான போக்குகளை வளர்த்தவாறே பயணிக்கும்.

சமூகக் கேடான ரசனையில் பயணிக்கும் மனிதர்களில் பெரும்பாலோர், அந்த சமூகத்தில் படிப்பிலும், பதவியிலும், வசதியிலும் மேல்த்தட்டினராக இருக்கும் சமூக சூழலில்;

அந்த சமூகமானது வீழ்ச்சி திசையில் பயணிப்பதில் வியப்பில்லை.

இன்று திராவிட அரசியல் கொள்ளை வலைப்பின்னலில் உள்ள ஊடகங்களும் அமைப்புகளும் ஏற்பாடு செய்யும் பட்டி மன்றங்களில் நகைச்சுவை ததும்ப பேசும் (கிரானைட், தாது மணல் கொள்ளை, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம், திராவிட அரசியல் கொள்ளை பற்றி பேசாத‌) பேச்சாளர்களும், அப்பேச்சுக்களை ரசிக்கஅரங்கில் நிரம்பி வழிபவர்களும், மேலே குறிப்பிட்ட நகைச்சுவை 'ரசனை'யில் இருந்து, எந்த அளவுக்கு மாறுபட்டவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வசதியானவர்கள், படித்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக தமது 'சொகுசு மண்டிலத்திற்கு' (Comfort Zone) அடிமையானவர்கள் எல்லாம், சமூக முதுகெலும்பின்றி (Social Spineless) வளர்ந்த போக்கும், மேற்குறிப்பிட்ட 'ரசனை' வளர்ந்த போக்கும், திராவிட அரசியல் கொள்ளைக்கு எந்த அளவுக்கு உதவியது? தமதளவில் நேர்மையான வருமானத்தில் வாழ்ந்து கொண்டு, அத்தகையோரெல்லாம் திராவிட அரசியல் கொள்ளையர்களுடன் சாதி, மத, வட்டார அடிப்படைகளில், 'நேச உறவுடன்' வாழ்வதானது, தத்தம் 'சொகுசு மண்டிலம்' பாதுகாப்புக்காகவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மிழ்நாட்டில் 'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று 'தனிநாடு' கோரிய தி.மு.க‌, 'பிரிவினைத் தடைச் சட்டம்' வந்தவுடன் 'பிரிவினையை கைவிட்டு, 1967இல் தி.மு.க‌  ஆட்சியைப் பிடித்தது. அதன்பின்'அறிவியல் ஊழலை’ அரங்கேற்றி தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்டு இன்னும் பல கனி வளங்களை கொள்ளை அடித்து, பயணித்து வந்த போக்கும்:


இலங்கையில் 'தனிநாடு' கோரிய பிரிவினை போராட்டமானது, வன்முறையற்ற பாதையிலிருந்து விலகி,  'ஆயுத போராட்டமாக' வளர்ந்து வந்த போக்கும்;


1980‍களில் சங்கமமானது. அந்த 'சங்கமமான' ரசனையும் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு, எந்த அளவுக்கு பங்களித்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

கடந்த தி.மு. ஆட்சியில், தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில், மேடைகளில் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து நின்றதையும், பாலுணர்வினைத் தூண்டும் வகையில் ஆபாச ஆடல் பாடல்கள் நிகழ்ந்ததையும்;

தமிழ்நாட்டில் 'ஆபாசத்தை' எதிர்த்து பிரச்சாரங்கள், போராட்டங்கள் மேற்கொண்ட, எந்த பெண்ணுரிமை இயக்க தலைவராவது, குறைந்த பட்சம் பகிரங்கமாக கண்டித்தார்களா, போராடா விட்டாலும்?

அன்றிருந்த இந்து சட்டப்படி, வயதில் குறைந்த/அதிகமான எந்த பெண்னையும் மகளாக்கி வாரிசாக்க முடியாது என்ற நிலையில், கட்சியின் சொத்துக்களை காப்பாற்றும் நோக்கில் நடந்த 'பெரியார் .வெ.ரா - மணியம்மை' திருமணத்தை, வரைமுறையின்றி கொச்சைப்படுத்தலானது, உணர்ச்சிபூர்வ போக்கினை வளர்த்து தமிழ்நாட்டில் அரங்கேறிய பின்;


திராவிட/தமிழ்/கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் 'சிக்கி' மனைவி/துணைவி என்று எந்த உறவும் கொண்டாட முடியாத அளவுக்கு, குழந்தைகளும் பெற்று வாழ்ந்த பெண்கள் பற்றியும்;

வெளியில் தெரிவிக்க முடியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்து, மனித உரிமைகளை செல்லாக்காசாக்கி, அச்சுறுத்தல் இருட்டிலேயே வளர்ந்ததா?
(http://www.dinamalar.com/news_detail.asp?id=1907782
என்பது பற்றியும்;

தமிழ்நாட்டில் எந்த பெண்ணுரிமை 'தலைவர்களாவது' கவலைப்பட்டிருக்கிறர்களா? இனியாவது கவலைப்படுவார்களா?

குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள்,விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் தமிழ்நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி புற்றீசல் போல்  வளர்ந்து வருவது பற்றி, இதுவரை, 'தமிழ், தமிழர் அமைப்புகள் கவலைப்பட்டிருக்கிறர்களா? அல்லது தங்களின் உள்மறை இரகசியத்தடை தொடர்புள்ள சமூக ஆற்றலை, தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய போக்கினால், தமிழர் அமைப்புகளும், தலைவர்களும் அதிகரித்து வருகிறர்களா? எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டில் தமிழர் குடும்பங்களில் 'சமூக எபோலா' நோய் போல, 'அதிவேகமாக'ப் பரவிவரும் குடும்ப சீர்குலைவுகளை, 'தமிழர் அமைப்புகள்' விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, அந்த அமைப்புகளில் 'அதிக அனுபவம்' பெற்ற கவிஞர் தாமரை உருவாக்கியுள்ளார்.

அந்த 'நெருக்கடியை' சந்திக்கும் துணிச்சலற்ற கோழைத்தமிழ் உணர்வாளர்கள் ஊக்குவித்தரசனையும், இனி தமிழ்நாட்டில் எடுபடுமா?

தமிழக மக்களைஉணர்ச்சியில்லாதவர்கள்என்று இழிவாக பேசிக் கொண்டு, தாமோ, தமது குடும்பப் பிள்ளைகளோ வீதியில் இறங்கி போராடாமல், 'பாதுகாப்பு மண்டிலத்தில்' தமிழ் இன உணர்வாளர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

திராவிடஅரசியல் கொள்ளையை பாரபட்சமின்றி எதிர்க்கும் அணுகுமுறையின்றி;

தமிழ்நாட்டில் பெரும்பாலான எழுத்தாளர்களும், பேச்சாளார்களும், கவிஞர்களும் தமது படைப்புகளில்/பட்டிமன்ற பேச்சுகளில், தமது 'சுயலாப பாதுகாப்பு லட்சுமண் கோட்டினை' தாண்டாமல், வாழ்வியல் புத்திசாலித்துடன்(?) முன் நிறுத்தும் 'ரசனை'யில், மேல்நடுத்தர, வசதியான குடும்பங்களில் பெரும்பாலோர், அந்த படைப்பாளிகளை போலவே, 'பாதுகாப்பு மண்டிலத்தில்', அதற்கேற்ற 'ரசனையுடன்  பயணிக்கிறார்கள்.

அவர்களின்படைப்புகளின் (அந்த 'ரசனை'யின்) வாடையின்றி பயணிக்கும் நடுத்தர, ஏழை, குறிப்பாக கிராமப்புற மக்களே, தமிழ்நாட்டில் ஆங்காங்கே தினமும் தமக்கு தெரிந்த போராட்ட வடிவங்களில் போராடி வருகிறார்கள்; தமது அறிவுக்கு சரி என பட்ட பிரச்சினைகளில்.

அத்தகைய மக்களும், தமிழில் எழுதப்படிக்க தெரியாமல் எண்ணிக்கையில் அதிகரித்து வரும், ஆங்கில வழியில் கல்வி கற்றதமிழர் குடும்ப மாணவர்களும், இளைஞர்களும்;

எண்ணிக்கையில் குறைந்து வரும் தமிழில் எழுதப் டிக்க தெரிந்த மாணவர்களும்;

தமிழ் இதழ்களையும், நூல்களையும் நாம் படிக்குமாறு காட்டினாலும், 'இலாவகமாக' அவற்றை ஒதுக்கி பயணிக்கும் போக்குகளில் உள்ளார்கள்.

அத்தகையபெரும்பாலோரின் 'ரசனை' காரணமாக:

சூது கவ்வும், ஜிகிர் தண்டா, சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, கோலி சோடா, ஜோக்கர், 'விக்ரம் வேதா' போன்ற இன்னும் பல (ரஜினி, கமல், விஜய், போன்ற பெரிய நடிகர்கள் இல்லாத) திரைப்படங்கள் எல்லாம் வணிக ரீதியில் பெற்று வரும் வெற்றிகளும்;

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே;

நம்ப முடியாத அளவுக்கு 'ரசனை இடைவெளி'யானது அதிகரித்து வருவதை உணர்த்தவில்லையா? (http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html)

தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய ஒருவரின் அனுபவம் பின்வருமாறு;

அவர் முதல்வர் பொறுப்பேற்ற சில நாட்களில், விடுப்பில் இருந்த ஒரு ஆங்கில விரிவுரையாளர் விடுப்பு மடலுடன் பணியில் சேர, முதல்வரைச் சந்தித்தார். ஆங்கிலத்தில் இருந்த அந்த விடுப்பு மடலில் அபத்தமான இலக்கணப் பிழைகள் இருந்தன. விரைவில் தனது ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு,M.A (English), M.Phil (English) (High first class) கல்வித்தகுதிகள் கொண்டிருந்த அந்த ஆங்கில விரிவுரையாளருக்கு முதல்வர் அறிவுறுத்தினார். மறுநாள் அந்த விரிவுரையாளார் பதவி விலகல் மடல் கொடுத்து பதவி விலகினார். அதற்குப் பின் தனது கல்லூரிக்கு ஆங்கில விரிவுரையாளரைப் பணியமர்த்த முயற்சித்தபோது, முன்குறிப்பிட்ட அளவுக்கு ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் அதிக அளவில் M. A (English), M.Phil (English) முடித்தவர்களில் இருக்கிறார்கள் என்பது அந்த முதல்வருக்குத் தெரிந்தது.

தமிழ்நாட்டு கல்லூரிகளில் M.A (English), M.Phil (English) (High first class)   படித்து, கல்லூரியில் பணிபுரியும் ஆங்கில அசிரியர்களில் 30 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோருக்கு, ஆங்கில இலக்கணம் சரியாக தெரியாதா? தாமாக ஆங்கிலத்தில் ஒரு பக்கம் பிழையின்றி எழுதவும் தெரியாதா? என்பது ஆய்விற்குரியதாகும். தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, தமிழில் இருக்கும் அறிவை விட, ஆங்கிலத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருக்கும் அறிவு குறைவானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

கடந்த சுமார் 40 வருட ஆங்கில வழிக் கல்வியில் சிக்கி, சீரழிந்த, தமிழ்நாட்டில், இன்று என்ன நிலைமை தெரியுமா?

கல்லூரிகளில் ஆங்கிலவழி மாணவர்களும் (தமிழ்வழி மாணவர்களைப் போலவே) பல்கலைக் கழக தேர்வுகளை ஆங்கிலமும் தமிழும் கலந்து 'தமிங்கிலிசில்' எழுதி வருகிறார்கள்.ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் பல்கலைக் கழக தேர்வுகள் எழுத வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது. உடனே வை.கோ உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களும் 'தமிழுக்கு அநீதி'(?) என்று கொதித்தெழுந்தார்கள். உடனே அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் இது போல, வேறு எந்த மாநிலத்திலும், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் ஆங்கிலத்தையும், அந்த மாநில மொழியையும், கலந்து எழுதுவதை, அரசும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கும் அளவுக்கு, உயர்க் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html)


இந்தியையும் ஆங்கிலத்தையும் கலந்து வெளிவரும் 'ஹிங்லிஷ்' (Hinglish) மொழி நாவல்கள் வடநாட்டில் விற்பனையில் சாதனைகள் ஏற்படுத்தி வருகின்றன

“Language is no barrier to writing a novel,” author Animesh Verma told the Indian Express newspaper in a 2010 interview, a statement that caused many novelists and book lovers to recoil in disbelief.

“Grammatical errors, spelling mistakes doesn’t matter that much,” he went on to say. “I am not writing a literature.”

Indeed, many of India’s young – and best-selling – authors are no longer aspiring to write Booker-worthy novels. Instead, they’re writing free-flowing narratives on the travails of daily life in second- or third-tier Indian cities that resonate with the millions that live in these oft-forgotten towns.

Many of these barely-edited books, written in a colloquial style and the mishmash of Hindi and English known as Hinglish, are quickly outpacing sales numbers of Booker winners, selling hundreds of thousands of copies in a country where the benchmark for achieving best-seller status, until now, was a meager 5,000 copies.; 


அது போல, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ஆங்கில வழியில் பயின்ற வாசகர்களை ஈர்க்கும் 'தமிங்கிலீஸ்' நாவல்கள் தமிழ்நாட்டில் வெளிவரும் காலமும் அதிக தொலைவில் இல்லை..

பேச்சு, நடை,உடை, பாவனைகளில்  திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய்' இப்போதே கிராமங்களில் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

'ஆங்கிலத்தில் பேசுவதே என் வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோள்'

என்று குக்கிராமத்தில் பள்ளி இறுதி வகுப்பு முடித்து, - சுமார் 10 வருடங்களுக்கு முன், மதுரை அருகே சிவானந்த ஆசிரம சமையல் கூடத்தில் பணியாற்றிய பெண், பேருந்தில் என்னை ஏற்றி விட காத்திருந்த வேளையில்-   தெரிவித்தது, என்னால் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நோயானது, அமெரிக்காவில் தேனீக்கள் அழிவை ஏற்படுத்தி வரும்  கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)] என்பதுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளது.

சாதாரணத் தமிழர்கள் அடிப்படை வசதிகளுக்கு தாமே போராடும் அளவுக்கு, 'தமிழ் உணர்வு' அமைப்புகளுக்கும், சாதாரணத் தமிழர்களுக்கும் இடையே சமூகப் பிளவு (Social Disjoint) இருப்பது உண்மையா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியது. தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியேற்பட வேண்டுமானால், இந்த சமூகப்பிளவு நீக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த சமூகப் பிளவு நீக்கப்படவேண்டுமானால்,  சமூக இழைகளும், சமூக பிணைப்புகளும் லாப நட்டம் பார்க்கும் பண்பிலிருந்து மாற வேண்டாமா? அம்மாற்றத்திற்குத் தடையாக, குடும்பம், நட்பு உள்ளிட்டு, நமது சமூக வட்டத்தில்  இருப்பவர்களை அடையாளம் கண்டு திருத்த வேண்டாமா? திருந்த மறுப்பவர்களை நமது சமூக வட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டாமா? இதையெல்லாம் செய்யாமல், செய்யத் துணிவில்லாமல் நாம் இருந்தால், தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி கவலைப்படக் கூட நமக்கு அருகதை உண்டா? தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு, தமிழ்நாட்டில் வழியுண்டாவதற்கு நாமே தடையாக இருப்பதா?

இது போன்ற கேள்விகளுக்கு செயலில் என்ன வகையான பதில்கள் இனி தமிழ்நாட்டில் வெளிப்படுமோ, அவற்றைப் பொறுத்தே, தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none.html)

பள்ளி கல்லூரிகளில் பாடப்புத்தகங்களாகவும், மாணவர்களின் போட்டிப் பரிசுகளாகவும் விற்கப்படும் புத்தகங்களைக் கணக்கில் கொள்ளாமல்;

'ரசனை' என்ற அடிப்படையில் சுமார் 50 வயதுக்கும் அதிகமானோர் படிப்பதையும் கணக்கில் கொள்ளாமல்;

காசுக்காக ஊடகங்களில் கட்சிகளில் தமிழில் எழுதி பிழைப்பவர்களின் எண்ணிகையையும் கணக்கில் கொள்ளாமல்;

தமிழ்ப் பத்திரிக்கைகளின் அச்சு (Print) மற்றும் இணையவாசகர் எண்ணிக்கையானது என்ன சமூக சிக்னலை வெளிப்படுத்தி வருகிறது?

தமிழ் தொடர்பான ரசனையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் பூகம்பமானது தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறதா?

அதற்கான அறிகுறிகளை  எவ்வாறு கண்டுபிடிப்பது?

அந்த பூகம்பத்தில் சிக்கி சருகாக மடியப் போகிறவர்கள் யார்?

அந்த பூகம்பத்திற்குப் பின், தமிழ்நாடானது தமிழில் எழுத்துப்படைப்புகளுக்கு இடமில்லாத வகையில், தமிழ் வேரழிந்தவர்களின் நாடாக வெளிப்படுமா?

அல்லது கவர்ச்சிகளுக்கு இடமில்லாத ஆழமான பொருள் பொதிந்த ரசனையுடன் கூடிய எழுத்துக்களுடன் தமிழ் ஆணி வேர்கள் புத்துயிர் பெற்ற நாடாக வெளிப்படுமா?

இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுபவர்கள் எல்லாம், இன்று உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களின் ரசனைகள் தொடர்பான தகவல்களை இயன்ற அளவுக்கு சேகரிக்க வேண்டும்.

தன்முனைப்பின்றி, பாராட்டு புகழ் போன்ற ஏக்கமின்றி, கட்சி வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து கூட்டுமுயற்சியில் தாமதமின்றி, ஆரம்பப்பள்ளி வரையிலாவது தமிழ்வழிக்கல்வியில் படிப்பதை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாம் நமது குடும்பங்களில் முன்னுதாரணமாக அதனை அமுல்படுத்த வேண்டும். நமது குடும்பப் பிள்ளைகள் எல்லாம் வரும் காலத்தில் சாதனையாளர்களாக வெளிப்படுவதும் அதன் மூலமாக சாத்தியமாகும். அதில் சந்தேகம் இருந்தால், கீழ்வரும் பதிவில் உள்ள சான்றுகளைப் படித்து ஆராய்ந்து உண்மையை உணரலாம்.


கவர்ச்சிகளுக்கு இடமில்லாத ஆழமான பொருள் பொதிந்த ரசனையுடன் கூடிய எழுத்துக்களுடன், தமிழ் ஆணி வேர்கள் புத்துயிர் பெற்ற நாடாக தமிழ்நாடு மாறுவதற்கு செயல்பூர்வமாக நாம் பங்களிப்போம். வெற்றி பெறுவோம்.                                                             

No comments:

Post a Comment