Tuesday, April 7, 2020


தமிழ்நாட்டு அரசியலில் கமல்ஹாசன்?


விதூசகனாக கூடஇல்லாத வெறும் கோமாளியா?



‘it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்: கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’

என்ற தலைப்பில் (20 ஜூலை 2017) வெளியிட்ட பதிவில் உள்ள கீழ்வரும் பகுதியானது இன்று கவனிக்கத்தக்கதாகும்.

மேற்குறிப்பிட்ட தலைப்பிலான திரைப்படத்தில்கமலஹாசனின் கீழ்வரும் கவிதையும் இடம் பெற வாய்ப்புண்டு.


மேலே குறிப்பிட்ட கவிதை தொடர்பாக;

எச்.ராஜாவின் கீழ்வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாகும்.

செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, முதல்வராக கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றார்.

ஆனால் கமல் முதல்வராக தகுதி உள்ளதா? ஏனெனில் விஸ்வரூபம் படம் வெளியிடும்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு பயந்து நடுங்கி அழுதார், நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார்.

இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல்வரானால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அதை சமாளிக்க முடியாமல் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன? கமல் ஒரு முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.’ 

கமலஹாசனுக்கு ஆதரவு என்ற பெயரில், எச்.ராஜாவை உணர்ச்சிபூர்வமாக கண்டித்தவர்களில், எவராவது, மேலே குறிப்பிட்ட கருத்தினை, அறிவுபூர்வமாக மறுத்திருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும். 'எச். ராசாக்களுக்கு வயிற்றுப் போக்கை', கமலஹாசன் ஏற்படுத்தியுள்ளதாக 'கண்டுபிடித்து', சசிகலா அரசியல் கும்பலுடன் சேர்ந்து பயணித்த நபர்களை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களுடன் 'கூடி பேசி, கூட்டாக இயங்க முயற்சிக்கலாம்' என்று சுப. உதயகுமாரன் என்பவர் ஆலோசனை கூறும் நகைச்சுவை காட்சியும் அரங்கேறி வருகிறது.

தமிழக அரசின் ஊழல் தொடர்பானஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று கமலஹாசன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தபின்;

யார்? யார்? என்னென்ன ஆதாரங்களை, எந்த வழிகளில் சேகரித்து அனுப்பினார்கள்? அவை தொடர்பாக, அடுத்து என்ன மேல் நடவடிக்கைகளுக்கு கமலஹாசன் திட்டமிட்டுள்ளார்? அவற்றை தொகுத்து எம்.ஜி.ஆரை போல, ஆளுநரை சந்தித்து புகார் பட்டியலை ஆதாரங்களுடன் கொடுத்து, சர்க்காரியா கமிசன் அமைக்கும் நெருக்கடியை எம்.ஜி.ஆர் உருவாக்கியது போல, தொடர்ந்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறாரா? அல்லது சிவாஜியைப் போல தேர்தலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு, அசிங்கப்படப் போகிறாரா?

என்பதை, அடுத்து அரங்கேற உள்ள காட்சிகள் தெளிவு படுத்தும்.

இன்று கமலஹாசன் பேசும் வசனங்களை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, ஏன் பேசவில்லை? என்று கமலஹாசன் மீது, நான் குற்றம் சுமத்தப் போவதில்லை.’ 

மேற்குறிப்பிட்ட பதிவிற்குப் பின், 'காஷ்மீர் பிரிவினை கோரிக்கைக்கு, கமல்ஹாசன் ஆதரவா?' என்ற தலைப்பில் (31 ஜூலை 2017) வெளிவந்த கீழ்வரும் பகுதியும் கவனிக்கத்தக்கதாகும்.

கமல் "'காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லீம்களுக்கு பிரியமில்லை என்றால் பிரிந்து போகட்டுமேஎன்று அப்போது எழுதியதைப் பார்த்து, சோ இந்த மாதிரி விஷயங்களில் அவசரப்படாதே என்று எச்சரித்தார்." (பக்கம் 04, தமிழக அரசியல், 26.07.2017)

கருத்துரிமை என்பது எந்த நெருக்கடியுமில்லாத சமூக சூழலில் மட்டுமே, சாத்தியமாகும். ஆயுதப்போராட்டத்தில் சிக்கிய எந்த பகுதியிலும் வாழும் மக்களுக்கு, அந்த சமூக சூழல் கிடையாது.

பாகிஸ்தான் என்ற நாடு, காலனிய சூழ்ச்சியில் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுடன் 1975இல் இணைந்து, சுயநல தேசியக் கட்சி அரசியலில் சிக்காமல், முன்னேறியுள்ள சிக்கிமைப் போல், காஷ்மீரும் இன்னொரு சிக்கிமாக வளர்ந்திருக்கக் கூடும்.

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால், பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்திருக்குமா? என்பதும் விவாதத்திற்குரியதாகும்.

வல்லபாய் படேல் இந்திய பிரதமராகி, இருந்தால், காஷ்மீரில் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு போயிருக்குமா? மேலே குறிப்பிட்ட பாதகமான சமூக சூழலில், பிரிவினைக்குழுக்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான மோதலில், காஷ்மீர் மக்கள் சிக்க நேரிட்டிருக்குமா

வல்லபாய் படேல் அன்று உள்துறை அமைச்சராக இரும்பு மனிதராக செயல்பட்டிருக்காவிட்டால், இன்று இந்தியாவில் சுமார் 50க்கும் அதிகமான காஷ்மீர்கள் உருவாகியிருந்துஆப்பிரிக்கா போல, இந்தியா சீரழிந்திருக்குமா, சீரழிவுக்கு காரணமான 'மக்கள் போராட்டங்களின்' தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், 'பாதுகாப்பான' வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டு
(‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை

என்பது போன்ற கேள்விகளை, தமது மனசாட்சிக்குட்பட்டு, கமல்ஹாசன் எழுப்பி, விடைகள் காண வேண்டும்.” 

அடுத்து 'தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பில் கமல்ஹாசன் விதூசகனா?' என்ற தலைப்பில் வெளிவந்த (28 மே 2019) கீழ்வரும் பகுதியும் கவனிக்கத்தக்கதாகும்.

கமல்ஹாசன் தன்னை 'பெரியார்' ஆதரவாளர் போல காண்பித்து வருவதிலும், அவரின் அறியாமை வெளிப்பட்டு வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோட்சேக்கு முன், நானறிந்தது வரையில் இந்தியாவிலேயே முதன் முதலாக, கோட்சேயை விட இன்னும் மோசமாக‌. காந்தியின் இரட்டை வேடப் போக்குகளையும், அவரது முயற்சிகள் எல்லாம் சமூகத்திற்கு கேடாக முடியும் அபாயத்தையும் எச்சரித்து, .வெ.ரா அவர்கள் நிறையகட்டுரைகளும், 'சித்திர புத்திரன்' என்ற புனைப்பெயரில் கேலி செய்தும் எழுதியிருக்கிறார். 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களில் ஆரவமுள்ளவர்கள் படித்து வியப்படையலாம்.

எனவே 'காந்தியின் கொள்ளுப் பேரனாக' தம்மை அறிவித்துள்ள கமல்ஹாஸன், மேற்குறிப்பிட்ட .வெ.ரா அவர்களின் காந்திக்கு எதிரானகருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியிலும் தாமாகவே சிக்கிக் கொண்டார்.

அதாவது .வெ.ராவின் கொள்ளுப் பேரனான கமல்ஹாசனை, காந்தியின் கொள்ளுப்பேரனான கமல்ஹாசன் சந்தித்து பேசுவது போல, ஒரு கற்பனையான நகைச்சுவை உரையாடலை, 'துக்ளக்' சத்யா எழுதினால், அது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையாக இருக்கும்.’ 

மேற்குறிப்பிட்ட பதிவு வெளிவந்த பின், கடந்த 12 மார்ச் 2020 இல், 'தமிழ்நாடு குடும்பங்களின் ஆட்சியில் இருந்து விடுதலை ஆவது எப்போதுமக்களின் எழுச்சி ரஜினியின் பார்வைக்கு எப்போது வரும்?' என்ற பதிவில் வெளிவந்த கீழ்வரும் பகுதியும் கவனிக்கத்தக்கதாகும்.

என்னுடைய குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள்என்று திமுக பொருளாளர் மு..ஸ்டாலின் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன் உறுதிபட அறிவித்துள்ள நிலையில் 

ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் வெளிச்சத்தில் உதயநிதியை முன்னிறுத்தி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை தி.மு. சந்திக்க இருக்கிறது;

தமிழக வாக்காளர்களின் மறதியில் நம்பிக்கை வைத்து. எனவே வரும் தேர்தல்களில் தி.மு.கவிற்கு ஆர்.கே.நகர்ப்பாணி அதிர்ச்சி காத்திருக்கிறது.

'தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திடஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்”;

என்று தி.மு. தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் அரசியலில் காமெடியனாகி விட்டார்.

தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் 'அமாவாசை எம்.எல்.ஏக்களுக்கு' பயந்தே ஆட்சியில் நீடிக்க முடியும்; கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், கனிவளங்கள் இழப்பு, ஊழல் சுனாமி எல்லாம் தொடரும்; தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடு நொறுங்கும் வரையில்.

கடந்த முறை தமது அரசில் ஊழல் திமிங்கிலங்களைக் காப்பாற்றிய 'களைகளை' அகற்றி, ஊழல் ஒழிப்பில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் பிரதமர் மோடிக்கு கூடியுள்ளது.அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் பிரமீட்டினை ஒழிக்காமல்;

தமிழ்நாட்டில் பா.. 'நோட்டா'விடம் தோற்கும் போக்கில் இருந்து விடுபட முடியாது. தமிழ்நாட்டில் ' வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே; அதற்கான சமூக சூழல் கனியும் கட்டத்தில்

எனவே அடுத்த கொள்ளைக்கான முதலீடாகக் கருதி செலவழித்த பணம் விரயமாகி, 'எஞ்சிய' பணத்தை எப்படி காப்பாற்றுவது? என்பது தொடர்பான காட்சிகள் உச்சக்கட்டத்தினை (climax) நோக்கி நெருங்கி வருகின்றன; ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மத்தின் முடிச்சுகளும் அவிழும் வகையில்.

'கோட்சே' மற்றும் 'காஷ்மீர்' பிரச்சினைகளை, பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து மீட்கும் முயற்சிக்கு, கமல்ஹாசன் 'பிள்ளையார் சுழி' போட்டு விட்டார்; விதூசகனைப் போலவே கேலிக்கு உள்ளாகி.

தமிழ்த் திரைப்படத்தில் 'விதூசகன்' பாத்திரத்திற்கு இலக்கணமானவர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார். தமிழ்நாட்டு அரசியலில், ஊழல் ஒழிப்பில் கமல்ஹாசன் அவ்வாறு நீடித்தால், அவருக்கு வரலாற்றில் நிச்சயமாக சிறப்பிடம் இருக்கும்.’ 

'தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திடஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்”;

என்று தி.மு. தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததானது, விதூசகன் பாணி காமெடியா? என்ற குழப்பம் எழுந்தது.

அதற்கும் வாய்ப்பில்லாத சாதாரண காமெடியனாக கோமாளியாக அரசியலில் கமல்ஹாசன் பயணிப்பது நிச்சயமாகி விட்டதா?

என்பதை கீழ்வரும் செய்தியும், அது தொடர்பாக வெளிவந்த கருத்தும் எழுப்பியுள்ளது.

'பால்கனி' அரசாக இருக்காதீர்கள்! பிரதமருக்கு கமல் கடிதம்    https://www.dinamalar.com/news_detail.asp?id=2516314#5143461

மேற்குறிப்பிட்ட செய்தியின் கீழ் வெளிவந்துள்ள வாசகர் கருத்து:

'உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, 2019 டிசம்பர், 8ல், முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை, சீனா கண்டறிந்துள்ளது. இதை, எந்த நாடும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தாண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், உலக நாடுகள் விழித்துக் கொண்டன.பொய்த்து விட்டது. இந்தியாவில், முதல் கொரோனா பாதிப்பு, ஜன., 30ல் கண்டறியப்பட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதை, கண் முன்னே பார்த்துக் கொண்டிருந்த போதும், அதைப் பார்த்து, நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை." 

இவ்வாறு தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியதை அவர் பத்திரிக்கைகளில் படிக்கவில்லையா? அவரின் ஆலோசகர்களும் படிக்கவில்லையா

இந்தியாவின் பரப்பளவையும் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் மற்றும் இறந்தவர்கள் புள்ளி விபரங்களோடு, இந்தியாவின் புள்ளி விபரத்தை ஒப்பிட்டால், உலகிற்கே முன்னுதாரணமாக இந்தியா இருப்பது தெளிவாகும். 'மோடி எதிர்ப்பு காமாலை' நோயில் சிக்கி, இது போன்று கருத்து வெளியிட்டு அரசியல் கோமாளியாவது என்று கமல்ஹாசன் முடிவு செய்து விட்டாரா?'


மேற்குறிப்பிட்டது போன்ற ஊடகத்தில் வெளிப்படும் கருத்துக்கள் எல்லாம், தமது பார்வைக்கு வராத வகையில், கமல்ஹாசன் பயணிக்கிறாரா? இல்லையென்றால், கீழ்வருவது சரியா? தவறா? என்று அவர் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.


முன்னாள் முதல்வர்கள் முக ஜெஜெ ஆட்சியை விட அதிக ஊழல் இப்போது இல்லை. துணைவேந்தர்கள் பதவிகளின் ஏலம் ஒழிந்தது மட்டுமின்றி, சர்விஸ் கமிசன் ஊழல் குற்றங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகி, ஏற்கனவே இருந்தஊழல் குறையும் போக்கும் வெளிப்பட்டு வருகிறது. லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளைக் காப்பாற்றி வந்த வலைப்பின்னல்கள் எல்லாம் பலகீனமாகி வருகின்றன. அதிக லாபம் தரும் தொழில் சினிமா அபகரிப்பு ஆபத்தும் இப்போது இல்லை. கொலை அச்சுறுத்தல் மூலமாக தனியார் சொத்து அபகரிப்பும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த தாங்க முடியாத மின்வெட்டு இப்போது இல்லை.

கருணாநிதி முதல்வராக இருந்த போது கீழடி தடயம் வெளிப்பட்டும், இந்த ஆட்சியில் தான் அகழாய்வு நடைபெற்று வளர்ந்து வருகிறது. தொல்லியல் துறைக்கு அதிக ஒதுக்கீடு புதிய அருங்காட்சியகங்கள். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்; நேர்மையான அதிகாரிகள் செயல்பட இருந்த தடைகள் குறைந்து வருகின்றன. மக்கள் போராட்டங்கள் மனிதாபிமனத்தோடு அணுகப்படுகின்றன.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட, அவர் விருப்பப்படும் நாட்களில் மட்டுமே கோட்டைக்கு வருவார்; விருப்பப்படும் நேரத்தில் மட்டுமே கோப்புகள் பார்ப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நாள் தவறாமல் கோட்டைக்கு வருவதுடன், தினசரி கோப்புகள் பார்க்கிறார். முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு ஃபைல் போனால் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் அப்ரூவாகி வந்து விடும்என்று உற்சாகமாக சொல்கிறார் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு ..எஸ். அதிகாரி.

அரசியலில் ஒருபுறம் சிறப்பாக சமாளித்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஒரு முதலமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவே பெரும்பாலான ..எஸ். மற்றும் .பி.எஸ். அதிகாரிகள் கருத்து கூறுகிறார்கள். இந்தக் கருத்து கீழ்மட்ட மக்கள் மத்தியிலும் சென்று சேர்ந்தால், அது .பி.எஸ்.ஸின் சிறப்பான வெற்றியாக அமையும்.' – துக்ளக் 13-3-2020

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் செயல்பூர்வமாக சிங்கப்பூர் அரசு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. அது போலவே, உலகச் சுகாதார அமைப்பே புகழும் வகையில் இந்தியா செயல்படுகிறது. (https://www.livemint.com/news/india/who-praises-india-s-impressive-commitment-to-combat-coronavirus-11584456975670.html).

கல்வியிலும், சுகாதாரத்திலும் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாடானது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் முன்னணி மாநிலமாகி வருகிறது.

.பி.எஸ் ஆட்சியில் தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் பெற்று வரும் முன்னேற்றங்களும், மாணவர் சேர்க்கைகளில் அதிகரிப்பும், காமராஜர் ஆட்சியுடன் போட்டி போடும் சாதனைகளாகி வருகின்றன
(‘ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில்; எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?’; 
https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

டுத்து, தி.மு. அல்லது சசிகலா ஆட்சியில் தமிழ்நாடு சிக்குவதாக கற்பனை செய்தால், இன்றுள்ள ஆட்சியில் துணிச்சலாக பேசி வரும் கமல்ஹாசன், அந்த ஆட்சியில் வாய்மூடி தொந்திரவு இல்லாமல் இருப்பதற்காகவே, அவர்களின் ஊழல்களைப் பற்றி இன்றும் பேச பயப்படுகிறாரா?

No comments:

Post a Comment