Saturday, April 4, 2020


தமிழ்நாட்டில் ஒருவரையொருவர் வளர்க்கும்;
 

முஸ்லீம் தீவிரவாதிகளும் இந்து தீவிரவாதிகளும்



தமிழக பா.. தலைவராக முருகன் நியமிக்கப்பட்ட பின் வெளிவந்த நல்ல சமூக சிக்னலை ஏற்கனவே கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்.

பா..க-வின் புதிய தலைவரான எல்.முருகன் பதவி ஏற்றவுடனேயே தி.மு.கவின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது

இது ஒரு நல்ல அறிகுறியாகும்.

ஏனெனில் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அவரின் சமரசமற்ற தி.மு. எதிர்ப்பே, தி.மு.கவை மீண்டும் ஆட்சி அமைப்பதைத் தடுத்து வந்தது. ...தி.மு.கவைத் தவிர, பா.. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தி.மு. அணியில் இடம் பெற்றும், சில பா.. தலைவர்கள் அன்றும் இன்றும் தி.மு. தலைவர்களுக்கு நெருக்கமாக வெளிப்பட்டும், தி.மு. எதிர்ப்பு வாக்கு வங்கியின் நம்பிக்கை இழப்புக்கு உள்ளானார்கள்.  தமிழக பா..கவின் புதிய தலைவரை தி.மு. எதிர்ப்பதன் மூலமாக, அந்த இழப்பில் இருந்து தமிழக பா.. மீள்வதற்கு உதவியுள்ளது.’ 

தமிழ்நாட்டில் முஸ்லீம் தீவிரவாதிகளை வளர்த்து வந்த சமூக செயல்நுட்பமும் இனி பலகீனமாகவும் வாய்ப்புள்ளது.

முதலில் தினமலரில் 'வாசகர் கருத்து' பகுதியில் வெளிவந்த எனது கீழ்வரும் பதிவினைப் பார்ப்போம்.

"பிரச்னையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன்." என்று தமிழக பா..தலைவர் முருகன் விடுத்துள்ள வேண்டுகோள் நிச்சயம் நல்ல பலனைத்தரும்

தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லீம்கள் வன்முறையையும் தீவிரவாதத்தையும் வெறுத்து மதநல்லினக்கத்தினைக் கடைபிடிப்பவர்கள். நானறிந்த ஒரு ஊர்த்திருவிழாவில் பாரம்பரியமாக ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் இந்து பாணியில் பல மாதங்கள் விரதம் இருந்து, கோவில் திருவிழாவில் தலைமைப் பூசாரியாக அந்த முஸ்லீம் குடும்ப ஆண் செயல்படுவது பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது

1967க்குப் பின் தான் தமிழ்நாட்டு முஸ்லீம்களில் சிலர் தீவிரவாத நோய்க்கு உள்ளாகி, அந்த சமூகத்திற்கு தீங்கிழைத்து வருகின்றனர். ஊழல் மூலமாகசேர்த்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்க அரசியல்வாதிகளுக்கு உதவியும், பலகீனமான ஊடகங்களை சேவகர்களாக மாற்றியும் ஒரு பெரிய சக்தி போல போலியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். தமிழக பா.. தலைவரின் அணுகுமுறையானது, முஸ்லீகளுக்குள் அந்த தீய சக்திகளைத் தனிமைப்படுத்தி, முன்பிருந்த மத நல்லிணக்கணமானது மீண்டும் மலர வழி வகுக்கும். கீழாக பிற முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தமிழ் முஸ்லீம்கள் வலிமை பெறவும் வழி வகுக்கும்.”

"பிரச்னையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன்." என்று தமிழக பாஜ., தலைவர் முருகன் விடுத்துள்ள வேண்டுகோளை எதிர்த்து இந்துத்வா ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களும் எனது கவனத்தினை ஈர்த்தன.

அவற்றில் வெகு சில வருமாறு

"இவன் பி ஜெ பியின் தலைவனா? அல்லது உலக இஸ்லாமிய பழமைவாதிகளின், தீவிரவாத கும்பலின் பிரச்சார பீரங்கியா? “

"எதிரிகள் ஒருபோதும் ஒத்துவருவது அவ்வளவு சுலபமல்ல. மனிதாபமானம் இருந்தால் இந்த நெருக்கடி நிலையில் அவர்கள் அவ்வாறு செயல் பட்டிருப்பார்களா?"

"தன் சொந்த கட்சியினருக்கு எதிராக இவர் கருத்து சொல்வது ஏற்கக்கூடியது அல்ல "

"கால்நூற்றாண்டு பொன்னர் தமிழக பாஜகவை ஜோலி முடிச்சார் இப்போது அவர் ஆதரவு பெற்ற தலைவரின் செயல்பாடு விரைவில் தமிழக பாஜகவை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் போலிருக்கு"

"கலவரத்தை உண்டு பண்ணுவது அவர்களின் மத தொழில். அதற்கு சிலப்பிறவிகள் உடந்தை, எதனையும் முறியடிப்போம் ஜெய்ஹிந்த்"

"தமிழினவாதம் காக்க, இந்த பிரச்சினையால் நிலையிழந்து கிடக்கும் மற்ற மதவாத நாடுகளிடம் தமிழர் தம் பெருமை சேர்க்க, நாட்டை மாற்றமதவாதிகளிடம் சரணடைய வைப்பது இவனைப்போன்ற தமிழினவாதிகளுக்கு கைவந்த கலை. இதுதான் இவர்களின் வேலை. இனவாதிகளின் ஓட்டுக்களுக்காக இவர்கள் பின்னால் செல்ல வேண்டிய நிலை ஒரு தேசிய கட்சிக்கு. இதைவிட ஒரு அவமானம் நாட்டுக்கு வேறு ஒன்றும் இல்லை . அதை தமிழினவாதிகள் முன்னின்று நடத்துவது புதிதல்ல ."

நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதி, மத, மொழி, நாடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இருப்பார்கள். நல்லவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதிலும், தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களின் குற்றங்களை எல்லாம் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வைப்பதிலும், தமது சமூக ஆற்றலை செலவழிப்பவர்கள் எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிப்பவர்கள் ஆவார்கள். அதற்கு மாறாக, சுய விருப்பு வெறுப்பு அடிப்படையில் தமக்கு பிடிக்காத சாதி, மத, மொழி, நாடு உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள அனைவரையுமே எதிரிகளாகக் கருதி வாழ்பவர்கள் எல்லாம், அறியாமையின் காரணமாகவோ அல்லது வாங்கிய கூலிக்கு மாரடிக்கவோ சமூகத்திற்குக் கேடாகவே வாழ்பவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டிற்கு இலங்கையிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளைத் தாக்கிய நபர்கள்  எல்லாம் அந்த தவறான போக்கில் பயணித்தவர்களே ஆவார்கள். தமிழ்நாட்டு மீனவர்களும், இலங்கையில் உள்ள தமிழர்களும் கூடுதல் அவதிக்கு உள்ளாவதற்கும் அவர்களே காரணமாவார்கள்.

அது போலவே தமிழ்நாட்டில் சாமானிய முஸ்லிம்களும் அவதிக்கு உள்ளாவதற்கு, முஸ்லீம் தீவிரவாதிகளே காரணமாவார்கள்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை ஆதரிக்கும் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகளை மீறும் முஸ்லீகளைக் கண்டிக்கும் முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு ஊக்குவிப்பது சமூகத்திற்கு நலன் தரும். அதற்கு மாறாக, முஸ்லீம்கள் அனைவரையும் விரோதிகளாகக் கருதுவதானது, முஸ்லீம் தீவிரவாதிகளின் கரங்களை வலுப்படுத்தும். ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய திசையில் பயணிக்கும் மோடியின் ஆட்சிக்கு தடைகளைக் கூட்டும். இந்துத்வா கூடாரங்களில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கும் அது பலன் தரும். அதன் தொகு விளைவாக, இந்து தீவிரவாதிகளும் முஸ்லீம் தீவிரவாதிகளும் வலிமை பெறுவார்கள். பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் கேடான போராட்டங்கள் அடிக்கடி தமிழ்நாட்டில் நடந்து, தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து, வேலையில்லாதவர்களின் எண்ணிகையானது தொடர்ந்து அதிகரிக்கும் திசையில் தமிழ்நாடானது பயணிக்கும்.

தமிழ்நாட்டில் மேலே குறிப்பிட்ட எனது பதிவில் உள்ள தகவலைப் போல, பல இடங்களில் முஸ்லீம்களும் இந்துக்களும் ஒருவருக்கொருவர் உதவி வரும் சான்றுகள் பல இருக்கின்றன. இந்திய விடுதலை முதல் வடநாட்டில் நடந்த இந்து முஸ்லீம் கலவரங்கள் தமிழ்நாட்டில் தொடரவில்லை. 1967க்கு முன், தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்களுக்கும், பிற முஸ்லீம்களுக்கும் இடையில் உயர்வு தாழ்வு மோதல் பிரச்சினைகள் வெடித்திருக்கின்றன. ஆனால் 1967க்குப் பின், குறிப்பாக கடந்த பல வருடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் பண பலத்துடனும், ஊடக பலத்துடனும் வளர்ந்த வேகத்தில், அந்த முரண்பாடுகள் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன.

பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், இந்துத்வா கட்சிகளாக இருந்தாலும், உண்மையாகவும், நேர்மையாகவும், சுயலாப கணக்கின்றி வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் திக்கத்தக்கவர்களே ஆவர்

அவ்வாறு மதிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள முரண்பாடுகளை சரியாகக் கணித்து, பொது அரங்கில் வெளிப்படும் பிரச்சினைகளில் சரியான நிலைப்பாடுகள் எடுத்தால் தான்;

அவர்களின் தனிப்பட்ட முறையில் மதிக்கத்தகும் வாழ்க்கையும் சமூகத்திற்கு நலன் பயப்பதாக அமையும். இல்லையென்றால் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வாழ்க்கையானது பொதுவாழ்வு வியாபாரிகளின் நலன்களுக்கு உதவி, சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாக அமையும்.

நாம் வாழ்கின்ற இடத்தில் பணியாற்றுகின்ற இடத்தில் நல்லவர்களை அடையாளம் கண்டு ஆதரிப்பதும், தீயவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவதும் எளிதாகும். தீயவர்கள் இந்துத்வா ஆதரவாளர்களாக இருந்தாலும், எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், நமக்குள்ள கொள்கை சார்பு அடிப்படையில் தீயவர்களை நாம் ஆதரிப்பதில்லை. அவ்வாறின்றி நமது நேர்மை வழிகாட்டியைத் (Ethical Compass) திருத்திக்கொண்டு, 'நம்மாளு' என்று தீயவர்களை நாம் ஆதரித்தால், நமது வாழ்க்கையானது சமூகத்திற்குக் கேடாகவே முடியும்.

அவ்வாறு மைக்ரோஉலகத்தில் நேர்மையாக வாழ்பவர்கள் இந்துத்வா ஆதரவாளர்களாக இருந்தாலும், எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், தமது அறிவு அனுபவ அடிப்படைகளில் மேக்ரோஉலகத்தில் வெளிப்படும் சிக்னல்களை எல்லாம் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் தமது வாழ்வை தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே வாழ்வதும் சாத்தியமே ஆகும்.

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' என்ற திசையில் பயணித்தவன் நான்.

"அப்போது (நான் 'பெரியார்' கொள்கையாளராக இருந்த காலத்தில்) அவர் 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா? அந்த நோய்க்கான மருந்தை எப்போது கண்டு பிடித்தார்? அவரோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு ஏன் மருந்தைக் கொடுக்காமல் தான் மட்டும் மருந்தை உட்கொண்டு சரியானார்?" என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கீழ்வரும் பதிவில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
‘'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' ; எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?’; 

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள வெறுப்பு அரசியலானது, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதை, கீழ்வரும் எனது நூல் தொடர்பாக இரண்டு முகாம்களிலும் வெளிப்பட்டு வரும் வெறுப்பானது, எனது தமிழ்நாட்டு சமூகவியல் ஆய்வுக்கு அரிய சமூக சிக்னலாக உதவி வருகிறது.

'காலனிய' மனநோயாளிகளும்,'திராவிட' மன நோயாளிகளும்

தமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, எங்கிருந்தும் நல்லவைகள் வெளிப்பட்டால் வரவேற்பது;

என்பது நல்ல மனநிலையில் வாழ்பவர்களுக்கே எளிதாகும். வெறுப்பு அரசியலில் சிக்கியவர்களுக்கு அது அரிதாகும்.

தாம் ஆதரிக்கும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களில்,

மேற்குறிப்பிட்ட நல்ல மனநிலையில் உள்ளவர்கள், ஒப்பீட்டு அளவில், ...தி.மு.கவில் அதிகம் என்பதும், தி. மற்றும் தி.மு. ஆகிய கட்சிகளில் குறைவு என்பதும்;

எனது அனுபவமாகும். அதுவும் கடந்த சில வருடங்களில் மாறத் தொடங்கியுள்ளது. மோடி பிரதமரான பின் வெளிப்பட்ட நல்லவைகளை ஆதரித்து, 'பெரியார்' ஆதரவாளர் ஒருவர் கீழ்வரும் கருத்தினை முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பிஜேபியின் பயோமெட்ட்ரிக் அட்டடென்ஸ் சிஸ்டம் டெல்லி அரசு அலுவலர்களை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறது.

என்னுடைய (எனதுநாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்த நேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை.

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!!

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும்.

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.

தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்திற்கான அலை உருவாக வேண்டுமானால், அதற்கு பங்களிக்க விரும்பும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறையும் அதுவேயாகும்.; 

தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றியசுப்பிரமணியசுவாமியின் கருத்தினை கண்டிக்காத‌, அவருக்கு நெருக்கமான;

தி.மு. தலைவர் ஸ்டாலினை 'பார்ப்பனப் பரம்பரைப் பகையை எதிர்கொள்ள' துணை புரியும் 'புரவலராக' கருதியும், 'பெரியார் தந்த புத்தியில்' அதே நோக்கில் 'சசிகலா தினகரன்' கட்சியையும், ஆதரிக்கும் 'இந்துத்வா எதிர்ப்பு வீரர்கள்'(?) தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்;  

'இந்துத்வா எதிர்ப்பு' மற்றும் அதனை 'பேரமாக்கி' பா.. ஆட்சியில் 'பங்கு', என்ற இரண்டு சிறகுகளின் துணையுடன்,  திராவிட அரசியலானது பயணித்து வருவது தெரிந்தும்.

பேரத்திற்கான தேசிய/இந்துத்வா எதிர்ப்பு, பேரம் முடிந்த தேசிய/இந்துத்வா (காங்கிரஸ், பா.. ஆட்சிகளில் இடம் பெற்று 'பலன்கள்' அனுபவித்த‌) ஆதரவு இறக்கைகளில் பயணித்த, 'திராவிட அரசியல் ஊழல் எஞ்சினின்' 'மூல செயல்பாடு' நின்று போனாலும்;

சிறையில் உள்ள லல்லு பொறாமைப்படும் அளவுக்கு, 'திராவிட லல்லுக்கள்' அடுத்து அடுத்த வழக்குகளில் விடுதலையாகி, இந்தியாவின் 'சட்டத்தின் ஆட்சியையே' (Rule of Law) சவாலுக்குள்ளாக்கி வரும் சூழலில்;

'காற்றுள்ள போதே' தூற்றிக்கொள்ளும் 'அரசியல் அமாவாசைகளின்' ஆட்டங்கள் எல்லாம், கையிருப்பில் உள்ள 'ஊழல் பலன்கள்' தீரும் வரை தொடர்வதையும் தவிர்க்க முடியாது.

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்,; அதுவரை தமிழ்நாட்டில் கூட்டணிக்கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைக் கெடுக்கும் நோட்டாக் கட்சியாகவே தமிழக பா.. நீடிக்கும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்

தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய'  அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;

என்று பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;

தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா..  ஏன் வேர் பிடிக்க முடியாது;

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1967க்கு பின் வளர்ந்த சமூக செயல்நுட்பத்தில் அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் நல்லவர்களின் செல்வாக்கு குறைந்து, அரசியல் கொள்ளையர்களுக்கு நெருக்கமான 'குறுக்கு வழி வல்லவர்களின்' செல்வாக்கு வளர்ந்தது

அதன் தொடர்ச்சியாகவே அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் தீவிரவாதிகளின் செல்வாக்கும் வளர்ந்தது. இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் தீவிரவாதிகளின் நேசர்களாகப் பயணித்தவர்கள் எல்லாம் சங்கமமான அளவுக்கு, திராவிட அரசியல் கொள்ளையர்கள் தமிழ்நாட்டை சிறை பிடித்தார்கள்இந்துத்வா ஆதரவு தலைவர்கள் சிலர், தாம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில், கூச்சமில்லாமல் அத்தகையோரின் ஆதரவினை கோரினார்கள்.

ஆனால் கடந்த பல வருடங்களில் பல இந்து தலைவர்களையும், முஸ்லீம் நாத்தீகரையும் மட்டுமே காவு வாங்கும் அளவுக்கு (http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_21.html) ;

முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவும் வகையிலேயே, அந்த சங்கமம் செயல்பட்டு, மோடி ஆட்சியில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இன்று தமிழ்நாடானது திருப்பு முனையில் உள்ளது.

எனவே அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் உள்ள நல்லவர்கள் எல்லாம் விழித்தெழ வேண்டிய நேரம் இதுவாகும். அவர்களிடம் ஓற்றுமை வளரும் வேகத்திற்கு ஏற்ப;

தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர் பெற்று, வேலையில்லாதவர்களின் எண்ணிகையானது தொடர்ந்து குறைந்து, மீளும் திசையில் தமிழ்நாடானது பயணிக்கும்.

No comments:

Post a Comment