Sunday, April 5, 2020


   தமிழ்நாட்டில் 'சமூகக்கரோனா' அபாயம்?                      'பெரியார்' .வெ.ராவும் கரோனாவும்



இந்துக்களாயிருந்தாலும் முஸ்லிம்களாயிருந்தாலும் கரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரப்பணியாளர்களிடமும், மருத்துவ மனைகளில் நர்சுகளிடமும் மருத்துவர்களிடமும் ஒழுங்கீனமாக நடந்தவர்களை பாரபட்சம் இன்றி கண்டித்த பின்னர், கீழ்வருவது போன்ற அறிவிப்பு வெளியிடுவதானது சரியாக இருக்கும். முஸ்லிம்கள் தவறு செய்தபோது கண்டிக்காமல், கீழ்வருவது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவதானது, அவர்களின் ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்தும்.

நாம் எல்லோரும் இணைந்து போராட வேண்டிய ஒரு விஷயத்திற்கு அவர்கள் மட்டும் போராடினார்கள் இன்று வந்த நோயின் கொடூரத்தையும் பெருமளவில் அவர்களே தாங்கி நிற்கிறார்கள் இஸ்லாமிய சகோதரர்கள் நலம் பெற வேண்டும்  அவர்களுக்கு ஆறுதலாய் இருப்போம்” - 'பெரியார்' பற்றாளர் வெளியிட்ட கருத்து
(https://m.facebook.com/story.php?story_fbid=2954037317991127&id=100001546642092 
இது ஏன் அபத்தமான கருத்து? குறிப்பு கீழே)

"மாச்சரியங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் இது. 'கரோனா'வில் மதச்சாயத்தைப் பூச வேண்டாம்." ‍ ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

மேற்குறிப்பிட்ட 'பெரியார்' முகாம்களில் இருந்து வெளிப்பட்ட அறிவிப்புகள் எந்த அளவுக்கு சமூக பொறுப்பின்றி உள்ளன? என்பதை தினமணி (5 4 2020) 'மன்னிக்கக்கூடாத குற்றம்!  தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்' தெளிவுபடுத்தியுள்ளது.

அதன் கீழ்வரும் கடைசி வரிகள் மிகவும் கவனிக்கத்தக்கவையாகும்

"ஊரடங்கு வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?" - தினமணிதலையங்கம்

தப்லீக் ஜமாத் அமைப்பிற்கும் 2001 முதல் உலகில் பல இடங்களில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு முயற்சிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், எந்தெந்த நாடுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்களும் வெளிவந்துள்ளன

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், 'தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும்' எந்த அளவுக்கு கடுமையான சொற்களால் கண்டித்து அறிக்கை விட்டிருப்பார்

என்பதை என்னால் யூகிக்க முடியும். என்னைப் போல யூகிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அந்த போராட்டத்தைத் தூண்டிய தலைவர்களின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தையும்' சுட்டிக்காட்டி, .வெ.ரா அவர்கள் விடுத்த எச்சரிக்கைகளை, சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் படிக்கலாம்.

,வெ.ரா-வின் மேற்சொன்ன எழுத்துக்களை இன்று வெளியிட்டு, .வெ.ராவை நியாயப்படுத்தும் சமூக முதுகெலும்பானது, இன்று எந்த‌ 'பெரியார்' கட்சித்தலைவருக்கும் இருக்கிறதா?

சேலம் தி. மாநாட்டு ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ரஜினி வெளிப்படுத்திய கருத்துக்கு, இன்று .வெ.ரா இருந்திருந்தால்;

"ஆமா, ராமர் படத்தை செருப்பால அடிச்சோம். தி.மு. காரங்க பயந்தாங்க. ஆனால் தேர்தல கூடுதலான மெஜாரிட்டி பலத்தில் ஜெயித்தார்கள். இன்னும் அதிக கடவுள்களின் படங்களை செருப்பால் அடித்திருந்தால், இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி கிடைச்சிருக்கும்"

என்ற வகையில் தான் பேசியிருப்பார். அந்த சேலம் மாநாடு முடிந்து, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், திருச்சி டவுன் ஹாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவ்வாறு .வெ.ரா பேசியதை நான் கேட்டேன். அவர் பேச்சின் பொருளை விட‌, பேச்சில் வெளிப்பட்ட துணிச்சலானது, கல்லூரி மாணவராக இருந்த என்னை ஈர்த்தது. பிற்காலத்தில் நானாகவே தேடி சென்று, 'பெரியார்' இயக்கத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டதற்கு, மேற்சொன்னது போன்ற அனுபவங்களே முக்கிய காரணமாகும்.

இன்று 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சேலம் தி. மாநாட்டில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது தொடர்பாகவும், .வெ.ராவிடம் வெளிப்பட்ட துணிச்சல் இன்றி தி. பயணிக்கிறதா?

'வன்முறை போராட்டங்கள் வெற்றி பெறாதுஎன்று தெளிவுபடுத்தி, உலகிற்கே முன்னுதாரணமாக, பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதமின்றி, போராட்டங்கள் நடத்தி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்த, தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட.வெ.ரா அவர்கள் பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)


'எந்த ஒரு மொழியிலும் ஒரு சொல்லின் புறக்காட்சி வடிவமும், அதனுள் உள்ள பொருளும், மனித வாழ்வினைப் போன்றே, பிறப்பு, மாற்றம், இறப்பு உள்ளிட்ட மொழியியல் வாழ்வு (linguistics life) வாழக்கூடியதாகும். மொழியியல் வாழ்வு என்பதானது, அந்த மொழி சம்பந்தப்பட்ட சமூகம் சந்தித்து வரும் மாற்றங்களுடன் தொடர்புடையதாகும். ஏற்கனவே தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' மற்றும் 'சாதி' போன்ற சொற்கள், எந்த காலக்கட்டத்தில், காலனி சூழ்ச்சியில் பொருள் திரிதலுக்கு (Semantic distortion) உள்ளானது? அந்த பொருள் திரிதலுக்கும், அந்த திரிதலில் .வெ.ரா அவர்கள் பயணித்ததால், சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலுக்கும், உள்ள தொடர்பு பற்றி, ஆர்வமும் உழைப்பும் உள்ள எவரும் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள முயன்றால், அவருக்கும் நான், என்னால் இயன்ற உதவிகளை, புரிய இயலும்.' 

1946 இல் .வெ.ரா அவர்கள் 'இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற நூலை வெளியிட்டார். அதில் இஸ்லாம் தொடர்பாக .வெ.ரா மேற்கொண்ட பொருள் திரிபு தொடர்பாக, இதுவரை இஸ்லாம் புலமையாளர்கள் எழுதி ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட ஆய்வில் இவை எல்லாம் இடம் பெற வேண்டும்.

எந்த பொறுப்பிலும் இல்லாத சாமான்யர்களாக உள்ள .வெ.ரா ஆதரவாளர்களிடம் மட்டுமே .வெ.ராவிடம் இருந்த நேர்மையும், கூச்சமின்றி தவறுகளை ஒத்துக்கொண்டு பயணிக்கும் துணிச்சலும், நானறிந்த வரையில், வெளிப்பட்டு வருகிறது.

மற்ற 'பெரியார்' பற்றாளர்கள் எல்லாம் எப்படி பயணிக்கிறார்கள்?

.வெ.ராவின் 'தாய்ப்பால் பைத்தியம்' நூலில் வெளிப்பட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' கருத்துக்களை நியாயப்படுத்தி சில 'பெரியார்' பற்றாளர்கள் 'குருட்டுப் பகுத்தறிவின்' இலக்கணமாக வலம் வருகிறார்கள். அவர்களை மறுக்காமலே, தமிழ் தொடர்பாக .வெ.ரா வெளிப்படுத்திய சிலவற்றை முன் வைத்து, .வெ.ராவை தமிழ் ஆதரவாளராக சித்தரிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும் வலம் வருகிறார்கள்; தி.மு. எம்.பி ரவிக்குமார் பாணியில்.

தத்தம் சார்பு(Subjective) கண்ணோட்ட அடிப்படையில், .வெ.ராவின் எழுத்துக்களை அதன் பின்னணியிலிருந்து பிரித்து, பயன்படுத்தி அவரை பார்ப்பன எதிர்ப்பு/ஆதரவு, தமிழர் எதிர்ப்பு/ஆதரவு, தலித் எதிர்ப்பு/ஆதரவு, முக்குலத்தோர் எதிர்ப்பு/ஆதரவு, அம்பேதர்கார் எதிர்ப்பு/ஆதரவு  காந்தி எதிர்ப்பு/ஆதரவு, ராஜாஜி எதிர்ப்பு/ஆதரவு என்று இன்னும் பல எதிர்ப்பு/ஆதரவு கட்டங்களுக்குள், .வெ.ரா அவர்களை சிக்க வைத்து எவ்வாறு எழுதுவது?

என்று பயிற்சி வகுப்பு எடுக்க உதவும் பாடப்புத்தகத்தினை ரவிக்குமார் உருவாக்கியுள்ளார்
(‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், .வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; http://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

.வெ.ராவை 'தலித் விரோதியாக' சித்தரிக்கும் தி.மு. எம்.பி ரவிக்குமார் பாணிக்கும், .வெ.ராவை 'தமிழ் ஆதரவாளராக' சித்தரிக்கும் தி. பாணிக்கும் வேற்றுமை கிடையாது.

.வெ.ராவை 'தலித் விரோதியாக' சித்தரிக்கும் தி.மு. எம்.பி ரவிக்குமார் போன்றவர்களும், அதற்காக அவரையும் அவரை எம்.பி ஆக்கிய தி.மு.கவையும் கண்டிக்காத 'பெரியார்' பற்றாளர்களும் கீழ்வரும் போக்கில் சங்கமித்துள்ளார்களா?

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுவதில் சங்கமித்துள்ளார்களா?

இன்று 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சேலம் தி. மாநாட்டில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டது தொடர்பாகவும், .வெ.ரா வெளியிட்ட கருத்துக்களை எல்லாம் நியாயப்படுத்தும் துணிச்சல் இன்றி, 'பெரியார்' பிம்ப வழிபாட்டில் பயணிப்பவர்களில், பொதுவாழ்வு வியாபார கூலிக்கு மாரடிப்பவர்கள் இருக்கலாம். அவ்வாறு இல்லாமல் பயணிப்பவர்கள் எல்லாம் சமூக உளவியல் தொடர்புள்ள நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற ஆய்வுக்கான நேரம் வந்து விட்டது.

அந்த சமூக உளவியல் நோயின் அறிகுறிகளாக எனது ஆய்வில் வெளிப்பட்டவை வருமாறு:

உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுமுடிவுகளை மறுக்காமலும், ஏற்றுக்கொள்ளாமலும், தமது நிலைப்பாடுகளை சரியென்று வாதிடும் 'குருட்டுப் பகுத்தறிவு

எதிர்நிலைப்பாட்டில் உள்ளவரிடம் நடத்தும் விவாதத்தில், 'பெரியார்' பிம்ப வழிபாட்டாளரிடம் இருந்து வெளிப்படும் கீழ்வரும் குறைபாடுகள்;

'யார் அதிகம் செல்வம், செல்வாக்குடையவர்? யார் விவாதத்தில் அதிக தகவல்கள் தெரிந்தவர்? யார் அதிபுத்திசாலி?' என்பது போன்ற போக்குகளிலேயே குவியமாக (Focus) இருப்பது;

செல்வத்திலும், செல்வாக்கிலும், அறிவிலும் நம்மை விட எதிர்நிலைப்பாட்டில் உள்ளவர் உயர்ந்தவரா? என்ற‌ 'ஒப்பீடு' நோயில் சிக்கி, விவாதத்தின் ஊடே, 'எதிர்நிலைப்பாட்டில் உள்ளவரை விட தாம் உயர்ந்தவர்' என்று, விவாத வரம்புக்குள் நிற்காமல், விவாத நாகரீகமின்றி 'குத்திக்காட்டுவதில்' குவியமாக இருப்பது;

விவாதத்தில் விவாத வரம்பின் எல்லையை மீறி, வாதத்தில் ஈடுபடுபவர்களையும் விவாதப் பொருளாக‌, விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாத எல்லையை தன்னிச்சையாக, விரிவுபடுத்தி போவது,

மாற்று கருத்துக்களுக்கு இடமளிக்காமல், 'கடவுளால் படைக்கப்பட்ட நீதிபதிகளைப்' போல், 'தமிழ் விரோதி, தமிழின துரோகி' என்று பட்டங்கள் கொடுத்து, அல்லது விவாதிப்பவரின் 'யோக்கியதையை' எடை போட்டு அறிவுலகக் கோமாளியாக வெளிப்படுவது;

விவாதத்தின் மையப்பொருளிலிருந்து விலகி, விவாத ஓரத்தில் உள்ள தகவல் தொடர்புள்ள வேறொரு விவாத மையப்பொருளை நோக்கி, இடம் பெயர்ந்து, குவியம் இழந்த விவாதமாக மாற்றி,  விவாதத்தினை 'ஈகோ (Ego) யுத்தமாக' மாற்றுவது;

மேற்குறிப்பிட்ட சமூக உளவியல் நோயில் சிக்கியவர்களின் பின்பலத்திலேயே தமிழ்நாட்டில் அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் தீவிரவாதிகளின் செல்வாக்கும் எவ்வாறு வளர்ந்தது? என்பதை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கைகள் வெளிவருவதற்கும் அதுவே காரணமாகும்.

மேற்குறிப்பிட்ட சமூக நோயில் சிக்கியவர்கள் எல்லாம், உலகிலேயே தனித்துவமான 'திராவிட மன நோயாளிகள்' ஆவார்கள்

அத்தகைய மனநோயாளிகளால் தமிழுக்கும், தமிழ்நாட்டின் ஏரிகளுக்கும், ஆறுகளுக்கும், மலைகளுக்கும், தாது மணல் உள்ளிட்ட கனிவளங்களுக்கும், கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலமாக தனியார் சொத்துக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் யாவை? இன்று தமிழ்நாட்டில் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிவேகமாக அதிகரித்து வருவது உண்மையா? பொய்யா?

போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையின் கண்மூடி தாக்குதலில் உயிரிழந்த மாணவரின் தந்தையை மிரட்டி, நீதிமன்றத்தில் 'இறந்தது என் மகனல்ல' என்று சொல்ல வைத்த கொடுமையானது உலகில் வேறெங்கும் நடந்துள்ளதா? முக்கியபுள்ளியின் வைப்பாட்டியின் மகளை சில கல்லூரி மாணவர்கள் கேலி செய்ததாக குற்றம் சுமத்தி, கல்லூரி மாணவர் விடுதிக்குள் காவல் துறை காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தி, பல மாணவர்களின் கை கால்கள் முறிந்ததே. மேற்குறிப்பிட்ட தந்தையும், கை கால் முறிந்த மாணவர்களும் தமது குடும்பத்தினராக இருந்து, அந்த தலைவரையும், அந்த கட்சியையும் ஆதரித்திருந்தால் அதில் சமூக நேர்மை இருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் மேற்குறிப்பிட்ட கேடுகளுக்குப் பங்களித்த‌ 'சமூகக்கரோனா' நோய்க்கிருமிகள் ஆக மாட்டார்களாதமிழ்நாட்டு அரசியல் தாதாக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒன்றாக இல்லாமல், அவர்களை ஆதரித்த அனைவருமே கேடுகளுக்குப் பங்களித்த‌ 'சமூகக்கரோனா' நோய்க்கிருமிகள் ஆவார்கள்; நாமாயிருந்தாலும்; நமக்கு வேண்டியவர்களாயிருந்தாலும்.

தெரிந்தோ தெரியாமலோ தவறு புரிந்தவர்கள் எல்லாம், அவற்றால் விளைந்த பாதிப்புகளில் இருந்து தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க, சுயலாப நோக்கின்றி தம்மால் இயன்ற முயற்சிகள் மேற்கொள்வதன் மூலமாகவே, இயற்கையின் மற்றும் சமூகத்தின் சாபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

ஆக தமிழ்நாட்டைப் பாதித்துள்ளது, ஒரு சமூகக்கரோனா நோயே, என்று கருதும் அளவுக்கு, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் நேர்ந்துள்ள பாதிப்புகள் எல்லாம்  வெளிப்பட்டு வருகின்றன.

இன்று உலகை அச்சுறுத்தியுள்ள கரோனா நோய்க்கான மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சிகள் எல்லாம் அதற்கான ஆய்வு முறைகளில் முன்னேறி வருகின்றன. எனது சமூகவியல் ஆய்வில், மேற்குறிப்பிட்ட சமூக கரோனா நோய்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்.

'‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தையே ஆதாரமாகக் கொண்டு, .வெ.ரா மற்றும் அண்ணா புரிந்த தவறுகளை எல்லாம் பொதுவாழ்வு வியாபாரத்திற்கான மூலதனமாக்கி,  M.S.S பாண்டியன் போன்ற அறிவு ஜீவிகளை எல்லாம் 'மயக்கி', தி.மு. குடும்ப அரசியல் நலன்களுக்காக, மு.கருணாநிதி எவ்வாறு தமிழ்நாட்டைக் காவு கொடுத்தார்? (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

என்ற ஆராய்ச்சியின் அவசியத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.

ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.  
(https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

எம்.ஜி.ஆர்  .தி.மு. தொடங்கிய பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு. மூன்றாம் இடத்தைப் பிடிக்க, முதல் இடத்தை பிடிப்பதில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியானது, எம்.ஜி.ஆரின் .தி.மு. விடம் தோற்றது ஏன்?  1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக வெளிப்பட்ட இந்திய அடையாள எதிர்ப்பில் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட தி.மு. எதிர்ப்பினைப் பயன்படுத்தும் சமூக செயல்நுட்பமானது ஸ்தாபன காங்கிரசில் இல்லாததும், எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ரசனையில் தமிழர்களின் அடையாளம் தொடர்புடைய அந்த சமூக செயல்நுட்பமானது ஊடுருவியிருந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.

தமிழ்நாட்டு அரசியலில், சமரசமற்ற தி.மு. எதிர்ப்பு திசையில் பயணித்த எம்.ஜி.ஆரை மூலமாகக் (Source) கொண்டு, எம்.ஜி.ஆரை விட அதிக துணிச்சலை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் அரசியல் நிறை குறைகளைக் கணக்கில் கொண்டு, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டு சமூக கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும்' என்பதானது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.


குறிப்பு: வெளிநாட்டில் இருந்து வந்த அகதிகள் பற்றிய‌ குடியுரிமைத் திருத்தச்சட்டம் தமிழ்நாட்டு முஸ்லீம்களை எப்படி பாதிக்கும்? உலகில் எந்த வளர்ந்த அல்லது வேகமாக வளரும் நாடாவது, குடி மக்கள் பதிவேடு இன்றி, குடிமக்கள் அடையாள சான்று இன்றி இருக்கிறதா? என்பது பற்றிய அறிவின்றி வெளிப்பட்ட இக்கருத்தானது, குருட்டுப் பகுத்தறிவு ஆகாதாகீழ்வரும் அறிவுறுத்தலும் அந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.


கணக்கு எடுக்க வரும் அரசு ஊழியர்களுக்கு 'ஒத்துழைப்பு கொடுங்கள்!' தமிழக தவ்ஹீத் ஜமாத் அறிவுறுத்தல்’; https://www.dinamalar.com/news_detail.asp?id=2515726

‘All India Muslim Personal Law Board member Kamal Farooqui said the Jamaat head Maulana Sa'ad has to apologise and not just to the community but to the nation. “He should take responsibility, come forward and own up to what has happened. This is the time we should have been fighting this together. Not making it difficult for others.”; 
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/dont-shun-science-muslim-leaders-clerics-to-tablighis/articleshow/74998780.cms

No comments:

Post a Comment