Sunday, April 19, 2020


'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' வெளிப்படுத்திய கண்டுபிடிப்பு 


சமூக வானிலை விற்பன்னர்கள் (Social weather experts) வளர்ந்த சமூக செயல்நுட்பம்



எம்.ஜி.ஆர் ஆட்சியில், 'பெரியார்' .வெ.ராவின் நூற்றாண்டு விழா கொண்டாடிய  காலக்கட்டத்தில் தான், என்னைப் போன்றவர்கள் 'பெரியார்' இயக்கத்தில் நுழையும் போக்கு அரங்கேறியது. (குறிப்பு கீழே)

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்' ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்

இடைப்பட்ட காலத்தில் பெற்ற அரிய அனுபவங்களை எல்லாம், மேற்குறிப்பிட்ட பதிவு உள்ளிட்ட எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். 'பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்ட சமூகப்புழுதிகளான மனிதர்கள்' பற்றிய கண்டுபிடிப்பும் அதில் அடங்கும்.

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வருவதையும் குறிப்பிட்டிருந்தேன்.

மற்ற முகாம்களில் அந்தந்த தலைவர்களை துதி பாடியவர்கள் எல்லாம், கொஞ்சமும் கூச்சமின்றி, பிரபாகரனைத் துதி பாடி பிழைக்கத் தொடங்கினார்கள். அப்போது நெடுமாறனின் துதிபாடியாக பயணித்த அறிவுஜீவிகளில், பிரபாகரனிடம் வைகோவின் செல்வாக்கு உயர்ந்ததை 'நுகர்ந்து', நெடுமாறனை விட வைகோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, நெருங்க முயற்சித்தவர்களும் உண்டு.’

மேற்குறிப்பிட்டவாறு, சமூக வானிலை விற்பன்னர்களாக (Social weather experts), யாருக்கு செல்வம் மற்றும் செல்வாக்கு வளர்கிறது? என்று முன்கூட்டியே நுகர்ந்து, அத்தகையோருக்கு வாலாட்டி நெருக்கமாகும் பண்புடைய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புகளும் எனக்கு கிட்டின. அந்த போக்கில், என்னுடன் பழகிய சிலர், எனக்கு முக்கியத்துவத்தைக் கூட்டியும், பின் குறைத்தும், பின் கூட்டியும், பின் அவமதித்தும், தலைமைக்கு நான் வேண்டாதவன் என்று அறிந்த பின், என்னை தீண்டாமைக்கு உட்படுத்தியும், பின் கூட்டியும், அவர்கள் பார்வையில் எனது ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப என்னை நடத்தியஅரிய, வேறு வழியில் எனக்கு கிடைக்க வாய்ப்பில்லாத‌, அனுபவங்களும் எனக்கு கிடைத்தன.

'எந்த பக்கம் காற்றடிக்கிறது?' என முன்கூட்டியே 'நுகர்ந்து' வாழும் 'முற்போக்கு மற்றும் பிற்போக்கு அமாவசைகளின் புரட்சியில்' சிக்கியுள்ள நாடாக தமிழ்நாடு இன்று இருக்கிறது அமாவாசைகள் படை சூழ வாழும் தலைவர்கள் எல்லாம், அந்த அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்த சொத்து இருந்தாலும்
(‘நாம் வாழும் வாழ்க்கையானது, தன்மானமுள்ள மனித வாழ்க்கையா? 'நர்சிஸ்டிக் ஆளுமை சீர்கேடு' (‘Narcissistic personality disorder’) நோயில் நாம் சிக்கி விட்டோமா?’; 

மேற்குறிப்பிட்ட பின்னணியில், .வெ.ரா அவர்கள் தமது அறிவுவரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி மேற்கொண்ட பிரமிக்க வைக்கும் முயற்சிகள் எல்லாம் எவ்வாறு தமிழர்களின் ஆணி வேர்களையே நோய்களாகக் கருதி அகற்ற முயன்ற ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமான சமூக வைத்தியம் ஆனது? என்பதை கண்டுபிடித்தேன்.

அவ்வாறு கண்டுபிடித்த பின், பல வருடங்கள் கழித்து ஆங்கிலத்தில் Other Half of the Coconut: Women Writing Self-Respect History – 2003 by K. Srilata என்ற புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மூவலூர் ராமாமிர்தம் (1883–1962; https://en.wikipedia.org/wiki/Moovalur_Ramamirtham ) எழுதி 1936இல் வெளிவந்த 'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' என்ற நாவலின் ஒரு பகுதியை மட்டும் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து வெளிவந்த புத்தகம் அது.

அதனைப் படித்து முடித்தபின், எனக்குள் ஒரு வெட்க உணர்ச்சியை உணர்ந்தேன். பெரியார் இயக்கத்தில் பயணித்த காலத்தில் எப்படி அந்த தமிழ் நாவலானது எனது படிப்புகளில் இருந்து தப்பியது? திராவிடர்/திராவிட இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு எவ்வாறு ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பத்தின் சூட்சமத்தை அந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து வியந்தேன். அதன்பின் அந்த தமிழ்நாவலை தேடிய முயற்சியில் கடந்த வருடம் அதை விலைக்கு வாங்க முடிந்தது. தமிழ்நாவலை படித்து முடித்தபின் பிரமித்துப் போனேன்

திராவிடர்/திராவிட இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு எவ்வாறு கவர்ச்சிகர பேச்சில் எழுத்தில் ஏமாந்தது? என்ற சமூக செயல்நுட்பத்தின் சூட்சமமானது, அந்த நாவலின் மூலமாக தெளிவானது.

தமிழ்நாட்டில் 'தேசிய' அடையாளத்திடம் இருந்து அந்நியப்பட்டு, தி.மு.கவினரின் கவர்ச்சிகர பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு, 1950கள் முதல் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்ற மாணவர்களே, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, 1967இல் தி.மு. ஆட்சியைப் பிடிக்க உதவினார்கள். அதற்குப்பின் அந்த மாணவர்களிடையே ஒரு சமூக தளவிளைவு (Social Polarization) பிரிதல் ஏற்பட்டது.

1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்த பின்னும், 1968வரை இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்தன. மேற்குறிப்பிட்ட இரு பிரிவு மாணவர்களில், தி.மு. ஆட்சிக்கு நெருக்கமான ஒரு பிரிவு மாணவர்கள் காவல்துறையோடு கூட்டு சேர்ந்து, தமக்கு அதுவரை நண்பர்களாயிருந்த  மறுபிரிவு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தினை எளிதில் ஒடுக்கினர். தி.மு. ஆதரவு போக்கில் பயணித்தவர்களில் அகநேர்மை இழந்து ஆட்சியின் பலன்களை ருசித்த போக்கில், அகநேர்மையுடன் வாழ்ந்தவர்களை எளிதில் பொது அரங்கில் இருந்து அகற்றும் படலம் தொடங்கியது.

அதன்பின் தான், திருச்சி கிளைவ் மாணவர் விடுதியில் காவல்துறை காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தி, பல மாணவர்களின் கை, கால்கள் முறிந்தன. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதல்வர் கருணாநிதி டாக்டர் பட்டம் பெற, காவல்துறைத் தாக்குதலில் மாணவர் உதயகுமார் மரணமடைந்தார். 'இறந்தது என் மகனல்ல' என்று அவரின் தந்தையை நீதிமன்றத்தில் சொல்ல வைத்த அவலமும் அரங்கேறியது. அரசுக்கு திருக்குறள் (448) வழியில் இடிப்பாராக இருக்க வேண்டிய படித்தவர்களும், சமூகத்தின் பெரியவர்களும், 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கத் தொடங்கினார்கள். சமூக முதுகெலும்பு முறிந்து, 'அறிவியல்' ஊழல் ஆட்சியின் பிடியில் தமிழ்நாடு சிக்கியது.

1967க்குப்பின் மேற்குறிப்பிட்ட சமூகத்தளவிளைவு பிரிதல் தொடங்கிய காலக்கட்டதிலாவது, தமிழ்நாட்டில் இருந்தஅடையாளச்சிக்கலை தேசியக்கட்சிகள் புரிந்து உரிய நிவாரண முயற்சியில் ஈடுபட்டிருந்தால், 1969 முதல் தமிழ்நாடு வேறு திசையில் பயணித்திருக்கும்ஆனால் இன்றுவரை அந்த திசையில் எந்த தேசியக்கட்சியும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;

என்று பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;

தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா..  வேர் பிடிக்க முடியாது
(‘1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணித்ததா?’;
http://tamilsdirection.blogspot.com/2019/02/4-1967-1967.html)


அந்த அடையாளச்சிக்கல் பற்றிய புரிதலின்றி, ராஜிவ் மல்கோத்ரா மற்றும் நாகசாமி போன்றவர்கள் எல்லாம், தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வகையில் பங்களித்து வருவதையும், நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நாகசாமியின் தமிழ் தொடர்பான நிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும்.’;  


‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics -EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?’;  http://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html

தேசியக்கட்சிகளின் மேற்குறிப்பிட்ட தவறுகள் காரணமாக, தமிழ்நாடானது கீழ்வரும் பாதகப் போக்கில் சிக்கியது.

'தமிழ், தமிழ் உணர்வு' ஆதரவாளர்களும் கட்சிகளும், மேற்குறிப்பிட்ட நாவலில் இடம் பெற்ற மைனர்களைப் போல, பொதுவாழ்வு வியாபார அரசியல் விபச்சாரிகளிடம் நெருக்கமானார்கள். அந்த நாவலில், விபச்சாரிகளுக்கு நெருக்கமானவர்கள் சொத்தை இழந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அரங்கேறிய சமூக விபச்சாரத்தில், சமூக விபச்சாரிகளிடம் நெருக்கமானவர்களில் பலர் அதிவேக பணக்காரர்கள் ஆனார்கள்.

அத்தகையோரே சமூக வானிலை விற்பன்னர்களாக (Social weather experts), யாருக்கு செல்வம் மற்றும் செல்வாக்கு வளர்கிறது? என்று முன்கூட்டியே நுகர்ந்து, அத்தகையோருக்கு வாலாட்டி நெருக்கமாகும் பண்புடைய மனிதர்களாக, ஊடக வலிமையுடன் வளர்ந்துள்ளார்கள்.

அதாவது அந்த 'சமூக மைனர்களுக்குஅவர்களை மதித்தவர்களால் கிடைத்த சமூக அங்கீகாரம் மூலமாக, சமூக விபச்சாரிகள் சமூகத்தையே கொள்ளையடித்து, அதற்கு உதவிய சமூக மைனர்களுக்கும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் பலன்கள் கொடுத்து, புதிய பாணி சமூக விபச்சாரமானது, தமிழ்நாட்டில் அரங்கேறியது.

ஆனால் அந்த ஆபத்தான வளர்ச்சியின் விளைவாகவே, தமிழ்நாடானது கடுமையான விலை கொடுத்து சீரழிந்தது.

சங்க காலம் முதல் பிறமொழி மன்னர்களின் ஆட்சிகள் உள்ளிட்டு 1967 வரை, ஏரிகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு இருந்த பாதுகாப்புகள் அகற்றப்பட்டு, ஊழல் சுனாமிக்கு இலக்காக நேர்ந்தது. கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலமாக தனியார்ச்சொத்துக்கள் அபகரிக்கப்படும் அவலமும் அரங்கேறியது. ஊழலும் கல்வி வியாபாரமும் கை கோர்த்து, ஆங்கிலவழிக்கல்வி மூலமாக, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தைத் தூண்டியது.

குடி என்றால் என்ன? என்று தெரியாத கல்லூரி மாணவர்கள் இருந்த தமிழ்நாட்டில், 1969க்குப் பின், மது விலக்கு நீக்கப்பட்டு, இன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை, குடிப்பழக்கம் மட்டுமின்றி, பல வகை போதைப்பொருள்கள் பழக்கமும் பற்றி சீரழிந்து வருகிறார்கள். தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள்.

தமிழ்நாடானது தமிழில் எழுத்துப்படைப்புகளுக்கு இடமில்லாத வகையில், தமிழ் வேரழிந்தவர்களின் நாடாக வெளிப்படுமா

'தமிழ், தமிழ் உணர்வு' ஆதரவாளர்களும் கட்சிகளும், மேற்குறிப்பிட்ட நாவலில் இடம் பெற்ற மைனர்களைப் போல, பொதுவாழ்வு வியாபார அரசியல் விபச்சாரிகளிடம் நெருக்கமாகி, தப்பித்தவறியும் அரசியல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெளிப்படாத திசையில், 'தமிழ், தமிழ் உணர்வு' என்ற போராட்டங்களை அவ்வப்போது தூண்டி வந்தார்கள்.

ஏமாந்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை எல்லாம் காவு கொடுத்து;

தம்மையும் தமது குடும்பத்தையும் நன்கு செட்டில் செய்து, விலை போன ஊடக வலிமையுடன் அம்பலமாகாமல் வலம் வந்தார்கள்.

அவ்வாறு 'தமிழ், தமிழ் உணர்வு' என்ற பேரில், யார் தமது அரசியல் கொள்ளைக்கு அதிக வலிமையுள்ள பாதுகாப்பு கேடயமாக பங்களிக்கிறார்களோ, அவர்களுக்கே அதிக ஆதாயம் வழங்கி, அது போன்ற கட்சிகளிடையே போட்டியையும் பொறாமையையும் பொதுவாழ்வு வியாபார அரசியல் விபச்சாரிகளும், தூண்டி வந்தார்கள். மேற்குறிப்பிட்ட கட்சிகளிடையே போட்டியும் பொறாமையும், அவரவர் பயன்படுத்தி வந்த, வெவ்வேறு வகையிலான வெறுப்பு அரசியல் 'பிராண்ட்கள்' (Brands) முலமாகவும் வெளிப்பட்டு வந்தன.

பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக செயல்நுட்பமானது 'வெறுப்பு அரசியல்' அடிப்படையில் செயல்படுவதாகும். 'கருத்து கறுப்பு வெள்ளை சமூக நோய்' என்பதானது வெறுப்பு அரசியலின் விளைவாகும்.

கருத்து கறுப்பு வெள்ளை நோயில் சிக்கியவர்கள் எல்லாம், பிறரை தமது நிலைப்பாட்டிற்கு ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? என்று இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள். அந்த உரையாடலிலும் தமக்கு வெற்றியா? தோல்வியா? என்ற இரட்டை இலக்க அணுகுமுறையில் அணுகுவார்கள்.‌ 

மேக்ரோஉலகத்தில் வெளிப்பட்ட மேற்குறிப்பிட்ட பொதுவாழ்வு வியாபாரிகளின் நலன்களுக்கான பலி ஆடுகளின் - குப்பன் சுப்பன் வீட்டுப்பிள்ளைகளின் - எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் மைக்ரோஉலகத்தில் வெகு வேகமாக குறைந்து விட்டது.

பணம், குவார்ட்டர், பிரியாணி வரிசையில், தத்தம் கதை, கவிதைகளை வெளியிட குறுக்கு வழி வாய்ப்பு, சினிமாவில் தலையைக் காட்ட வாய்ப்பு போன்றவைகளும் சேர்ந்து விட்டன.

'தமிழ், தமிழ் உணர்வு' கட்சித்தலைவர்கள், மருத்துவர், பொறியாளர், ..எஸ், .பி.எஸ் பதவிகளில் இருந்த 'தமிழ், தமிழ் உணர்வு' ஆதரவாளர்கள் உள்ளிட்ட எவரின் பிள்ளைகளும்;

1965 முதல் இன்றுவரை தீக்குளிக்கவில்லை; படித்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்ததில்லை.

அவ்வாறு தமது பிள்ளைகளை எல்லாம் காவு கொடுத்த ஏமாளிப் பெற்றோர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து விட்டது.

மைக்ரோஉலகத்திற்கும் மேக்ரோஉலகட்திற்கும் இடையில் தமிழ்நாட்டில் சமூகப்பிளவு (Social disjoint) வளர்ந்து வருவதானது, அந்த சமூக விபச்சார முட்டாள்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;

என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்

முதல்வர் ஜெயலலிதா அவரின் போயஸ்கார்டன் வீட்டிலிருந்து 'மயக்கமாக அல்லது பிணமாக' என்ற வதந்திகள் பரவும் அளவுக்கு மர்மமான முறையில் அப்பொல்லோ மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெற்று, மர்மமான முறையில் மரணித்து, சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் கேலிக்குள்ளாகும் வகையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்து;    

ஜெயலலிதாவும் அதை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து:

பின் தனது மரணத்தை தானே வரவழைக்கும் போக்கில், ஜெயலலிதா சசிகலாவை தனது வீட்டுக்குள் அனுமதித்து:

மரணத்திற்குப் பின், ராஜாஜி அரங்கத்தில், அவர் பிணத்தைச் சுற்றிஅந்த குற்றவாளிகள் நின்றதும், 'சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற கவலையின்றி, நாட்டின் தலைவர்கள் எல்லாம் 'அந்த' குற்றவாளிகளை வணங்கி அஞ்சலி செலுத்தியதும், அதன் உச்சக்கட்டமாக பிரதமர் மோடியும் அவர்களை வணங்கியது மட்டுமல்லாமல், தமிழக பா.. தலைவர்களில் ஒருவர் (நேரடி ஒளிபரப்பாவது தெரிந்தும்) வற்புறுத்தி நடராஜனை வணங்க வைத்ததும்;

இந்தியாவையே ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது;

என்பதை உலகுக்கு அறிவித்தது

மேற்குறிப்பிட்ட அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி கிளைவ் மாணவர் விடுதி சம்பவங்களின் போது, எனக்குள் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. அதனை ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் போது மீண்டும் என்னுள் உணர்ந்தேன்.

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

நிகழ்கால வரலாற்றில் என்னைக் காயப்படுத்திய சம்பவங்களில் ஆப்கானிஸ்தானில் 2001 மார்ச்சில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதும் ஒன்றாகும். மீடியாக்களில் அதை செய்தவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் என்று வெளியானது. ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கா தாலிபன் இயக்கத்தை வளர்த்தது எனக்கு நினைவுக்கு வந்தது. தனது பொருளாதார நலன்களுக்காகவே அது போன்று அமெரிக்க செயல்பட்டதும், அமெரிக்காவை சொர்க்கபூமியாகக் கருதி அங்கு குடியேறியுள்ள நமது உறவினர்களும், நண்பர்களும் எனது நினைவுக்கு வந்தார்கள். 'உலகம் எக்கெடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலிகளாகப் பிழைப்போம்' என்று வாழும் நாமும், நமது குடும்பமும், நண்பர்களும் அந்த பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதற்கு மறைமுக குற்றவாளிகள் இல்லையா? என்பது பற்றி நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் என்று தத்தம் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், ஒரு தனி நபரை மட்டுமே, தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமாக முன் வைக்கும் முயற்சியானது, அவர்களுக்கு நெருக்கமாகப் பயணித்து, பங்களித்து, பலன்கள் பெற்று, நம்மிடையே அம்பலமாகாமல் உலவும் சமூகக்குற்றவாளிகள் எல்லாம் தப்பிக்கவே உதவி செய்யும்.

'பிணமாக' வாழும் தமிழர்களின், 'சமூக கிருமியாக' வாழும் தமிழர்களின், 'சமூக முதுகெலும்பு' முறிந்த 'யோக்கிய' தமிழர்களின் -முக்கூட்டணியின்- பங்களிப்பின்றி, எந்த தனி மனிதராலும் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்திருக்க முடியாது

தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலானது தீர்க்கப்படும் வரையில், மேற்குறிப்பிட்ட பாதகமான திசையில் தமிழ்நாடு பயணிப்பதையும் தவிர்க்க முடியாது. இனியும் அது தாமதமானால், தமிழ்நாடானது தமிழில் எழுத்துப்படைப்புகளுக்கு இடமில்லாத வகையில், தமிழ்வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறுவதும் நிச்சயமாகி விடும்.

தமிழ்நாட்டில் மைக்ரோஉலகம் 'தன்மானம்என்றகோவணம் கட்டியவர்கள் ஊராகவும், மேக்ரோஉலகமானது அம்மணங்களின் ஊராகவும் வளர்ந்து வருகின்றன

பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக செயல்நுட்பத்தினையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடக்கி விட்டன. பல நிபுணர்களின் கருத்துப்படி, உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு வருடத்திற்கும் மேலாகலாம். அது இன்னும் அதிகமாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சமூகக் கொரோனா நோய்க்கிருமிகளான பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூகசெயல்நுட்பத்தின் முடக்கம் காரணமாக, அவர்களின் ஆட்டங்கள் அடங்குவதும் நிச்சயமாகி வருகிறது.

தனது அகத்தில், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில், திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சமூக மாற்றதிற்கான போராட்டத்தை, முன்னெடுக்கும் மனிதர், சந்திக்க வேண்டிய ஆபத்துகளை, நன்கு விளக்கி, வழிகாட்டியுள்ள நூல் 'Pedagogy of the oppressed'.

அதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது 'பாதுகாப்பு வளையத்தை' (comfort Zone) மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளவாறு, இழிவான சமரசங்களுடன் உறுதி செய்து, 'புறத்தில்' முற்போக்கு வேடமிட்டவர்கள் முன் நின்றதே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதும் என் கருத்தாகும்.’ 
(‘.வெ.ராவும் , பாவ்லோ பிரையரும்’; 
http://tamilsdirection.blogspot.com/2015/12/)

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் காலூன்ற உதவிய வெகுசிலரில் ஒருவராகிய நான், மனசாட்சியை அடகு வைத்து ஆண்டன் பாலசிங்கத்துடன் எனக்கு இருந்தநெருக்கமான உறவைத் தொடர்ந்திருந்தால், 'சமூக மைனர்களில்' முதல் இடத்தில் இருந்திருக்கலாம்
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html)

தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணமான சமூக குற்றவாளிகளிலும் எனக்கு முதலிடம் கிடைத்திருக்கும். இழப்புகளைப் பற்றிய கவலையின்றி, அதற்கு எதிரான திசையில் பயணித்ததாலேயே, அந்த சீரழிவிற்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அகநேர்மை இழந்து, சமூக வானிலை விற்பன்னர்களாக வளர்ந்து, 'சமூக மைனர்களாக‌' புதிய பாணி சமூக விபச்சாரத்திற்கு பங்களித்து பலன் பெற்று, விலை போன ஊடக வலிமையுடன் வலம் வருபவர்களையும், அவர்களின் அடிவருடிகளையும், அடையாளம் கண்டவுடன் எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றி தீண்டாமைக்கு உட்படுத்தி வருகிறேன்; அதனால் வரும் இழப்புகளை எல்லாம் விரும்பி ஏற்று. என்னைப் போல இழப்புகளுக்கு உள்ளாகும் அவசியமின்றி மைக்ரோஉலகில் வாழும் சாமானியர்கள் எல்லாம், என்னை விட புத்திசாலிகளாக, சமூக மைனர்களையும், சமூக விபச்சாரிகளையும் பலகீனமாக்கி வருகிறார்கள். அந்த அதீத சமூக செயல்நுட்பத்தை ஏற்கனவே எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.
 
தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலை சரியாக அடையாளம் கண்டு தீர்த்து, சமூக விபச்சாரிகளையும், அவர்களுக்கு உதவி வரும் சமூக மைனர்களையும் சமரசமின்றி எதிர்க்கும் கட்சி பொது அரங்கில் வெளிப்பட்டால், நம்பமுடியாத அளவுக்கு எளிதாகவே எதிர்ப்புகள் சமூக மண்ணுக்குள் போக, தமிழும் தமிழ்நாடும் மீட்சி திசையில் பயணிக்கும். தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள் மூலமாகவே அது சாத்தியமாகும், என்பதும் எனது கணிப்பாகும்


குறிப்பு :

முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழகமெங்கும் தமிழக அரசு நடத்திய, பிரமிக்கும் வகையில் மக்களை ஈர்த்த, பெரியார் நூற்றாண்டு விழா 'பெரியார் வாழ்க்கை ஒலி ஒளி மேடை' நிகழ்ச்சிகள் எல்லாம், தி.மு. வெறுப்பிலிருந்து, 'பெரியாரை' மீட்டதன் விளைவாக, 'பெரியார்' கட்சிகள் புத்துயிர் பெற்றன; 'பெரியாரின்' கடைசி கால பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை விட, அதிக அளவில், குறிப்பாக இளைஞர்கள், தி. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றனர். தி.மு. ஆதரவு போக்கில் பயணித்த, தி. மேடைகளில் பங்கேற்ற, என்னைப் போன்ற பேராசிரியர்களை எல்லாம், எம்.ஜி.ஆர் அரசு பழிவாங்கவில்லை; அடுத்து வந்த தி.மு. ஆட்சியில் பேரா.தீரன் போன்றவர்கள் எல்லாம் பணி நீக்கத்திற்கு உள்ளானார்கள்; தி.மு. ஆதரவு போக்கில், தி. பயணித்ததால், நாங்கள் தப்பித்தோம். 1970களில் தி.மு. ஆட்சியில் எழுச்சியுடன் எண்ணற்ற பள்ளி அசிரியர்கள் பங்கேற்ற போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டு, சிறையிலிருந்த ஆசிரியர்கள் மன்னிப்பு மடல் கொடுத்து விடுதலையானார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியில் பலமுறை கல்லூரி ஆசிரியர் போராட்டத்தில், என்னைப் போன்று சிறை சென்ற ஆசிரியர்கள் எல்லாம், ஒவ்வொரு முறையும் போராட்டம் வெற்றி பெற்றே விடுதலை ஆனோம்.  

No comments:

Post a Comment